Wednesday, March 31, 2010

முட்டாள்கள் தினம்-ஒரு கழுகுப்பார்வை

வருஷம் முழுவதும் ஏதாவது ஒரு கருப்பொருளை பிடித்துக்கொண்டு அதுக்கு ஒரு நினைவு நாளை அனுசரிக்கின்றோம். அம்மாவை மதிக்காத எத்த்னையோ பேர்கள் இருந்தாலும் அன்னையர் தினம் , அதுப்போல ஆசிரியர் தினம் , செவிலியர் தினம் , இப்படி பல பெயரில் தினம் தினம் கொண்டாடி வரும் போது ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று. யாரும் வெளிப்படையாக நோட்டிஸ் ஒட்டா விட்டாலும் முட்டாள்கள் தினமாகவே நாமெல்லாம் கொண்டாடி வருகின்றோம்.


காதலர் தினம் என்றாலும் சரி , அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும். சூர்பனகை மாதிரி இருந்தாலும் நீ சீதை மாதிரி கொள்ளை அழகுன்னு யாருகூட வாவது சும்மா பிட்ட போட்டு கிட்டுவாவது இருக்கலாம் இந்த முட்டாள்கள் தினத்தில் அப்படி என்ன இருக்கு.. ரூம் போட்டு யோசித்தாலும் ஒன்னும் புரியல. சரி அரசாங்கமாவது ஒரு நாள் லீவு விட்டாலும் புண்ணியமா போகும் அதுவும் இல்ல


காலையில் முழித்த மூஞ்சில அதிர்ச்சி ஆரம்பிக்கும் .டீ கப்பில வெறும் சுடுத்தண்ணீர் நல்லா ஏமாந்தீங்களா , இட்லி தட்டு காலியா மூடி இருக்கும் அப்புறம் சில S M S நீங்க பிச்சைக் ச்சே.. பணக்காரனாயிட்டீங்கன்னு . பஸ்ல , ஆபீஸுல , தலை ச்சுற்றி இரவு வீடு வரும வரைக்கும் நாள் முழுவதும் இந்த தொந்தரவு .இதில் மனைவி முதல் கொண்டு அனைத்து மனித மனங்களும் கிண்டல் கேலி செய்யும். அப்படி என்னதான் ஆசையோ


உண்மையில நாம எல்லாருமே தினமும் ஏதாவது ஒரு வகையில எங்கையாவது ஏமாந்துகிட்டுதான் இருக்கோம். இரண்டு ரூபாய் காய்கறியை பத்து ரூபாய் கொடுத்து கிட்டு , பஸ்சில ஐந்து ரூபாய் தந்துட்டு மீதி ஒன்னு அம்பது சில்லரை வாங்காம (கிடைக்காம் ) ஒரு ரூபாய்க்கு லாயக்கு இல்லாத டீவீடீய பத்து ரூபாய் குடுத்து வாங்கி மூனு மணி நேரம் நேரத்தை வீனாக்கி , மாமியார் தரும் காது குடுத்து கேக்க முடியாத திட்டு , சாபம் மற்றும் மருமகளின் கண்ணீர் விடும் சீரியல் இப்படி


பத்திரிக்கையை பிரித்தால் ஒவ்வொரு காலத்திலும் (பத்தியிலும்) யாராவது வீட்டை விட்டு ஓட்டம் , தலையில கல்லை தூக்கிபோட்டு விட்டு கள்ள..>>> ஓட்டம் , இப்படி அடுத்தவர்களை ஏமாற்றும் செய்தி தினமும் வருகிறது.


இதில் இன்று மட்டும் (ஏப்ரல்-1 ) விஷேஷமாக ஏமாற்றுவது என்பது. நாம் நம்மையே ஏமாத்துவது போலத்தான். ஆசையை காட்டி ஓட்டு வாங்கியது அந்தகாலம் . பணத்தையும் , குவாட்டர் , பிரியாணியை காட்டி ஓட்டு வாங்குவது இந்த காலம் .எட்டு மணிநேரம் வேலை பாத்துட்டு வீட்டுக்கு (அரசு ஊழியர் ) வந்தது அந்த காலம் . மூனு மணிநேரம் , கையூட்டுடன் வேலை பார்பது இந்த காலம் .அடுத்தவரை ஏமாற்றி எத்தனை காலம் வாழ முடியும் . அதில் உண்ணும் உணவு !!!!. இப்படி எத்தனையோ>>>>>>>


அதனால் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் . இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம்.


டிஸ்கி::: இது யாரையும் குறிப்பிட்டு போட்ட பதிவு அல்ல .ஆண் , பெண் அனைவருக்கும் சேர்த்து பொதுவாக போட்டது.


73 என்ன சொல்றாங்ன்னா ...:

மசக்கவுண்டன் said...

நானு உங்கள் கட்சியில சேந்துக்கறனுங்க. சேத்தீக்குவீங்களா?

Priya said...

//உண்மையில நாம எல்லாருமே தினமும் ஏதாவது ஒரு வகையில எங்கையாவது ஏமாந்துகிட்டுதான் இருக்கோம்.//.... ஆமாங்க உண்மைதான்.
அதுக்காகதான் இப்படி ஒரு நாளோ என்னவோ?!

//இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம்.//....கிரேட்!

Chitra said...

அதனால் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் . இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்சிப்போம்.

.....http://en.wikipedia.org/wiki/April_Fools%27_Day
Enjoy......!!! :-)
திட்டாதீங்க. முறைக்காதீங்க. சும்மாதான்.......!

ஹாய் அரும்பாவூர் said...

தேவை இல்லை நாம் சொல்லி மாறவா போவுது
கொண்டாடுவோம்

kavisiva said...

ஏமாற்றாதே! ஏமாறாதே!(முடியுமா?!)

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!!!
நீங்கள் கூறிய அனைத்தும் மறுக்க
முடியாத உண்மைகள்.

திவ்யாஹரி said...

//இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம்//

கண்டிப்பா செய்றோம் ஜெய்லானி. நல்ல பதிவு.

திவ்யாஹரி said...

//அதனால் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம்.//

சித்ரா என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்க.. என்ன கொடுமை சித்ரா இது?

சைவகொத்துப்பரோட்டா h said...

அடேங்கப்பா!!!
நீங்கள் கூறிய அனைத்தும் மறுக்க
முடியாத உண்மைகள்.

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன் --கவுண்டரே ! அரசியலுக்கும் எனக்கும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பிரியா-வாங்க! வாங்க !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra-//திட்டாதீங்க. முறைக்காதீங்க. சும்மாதான்.......!//

மேல்நாட்டில் எது செஞ்சாலும் அதை நாமும் செய்யனுமா என்ன ?. எனக்கு யாரையும் ஏமாத்த புடிக்காது அது விளையாட்டா இருந்தாலும் கூட. இதுக்கெல்லாம் உங்களை திட்ட மாட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹாய் அரும்பாவூர்--//தேவை இல்லை நாம் சொல்லி மாறவா போவுது கொண்டாடுவோம் //

நாம ஒரு ஒரு ஆளா சொன்னா , செஞ்சா தானாக மாறுமே !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@kavisiva --ஏமாற்றாதே! ஏமாறாதே!(முடியுமா?!)//

நீங்க ஏமாற்றாதீங்க!!
அவங்க ஏமாற மாட்டாங்க !!!

அவங்க ஏமாற மாட்டாங்க !!
நீங்க ஏமாற்றாதீங்க!!!

முடியும் நீங்க மனசு வைத்தால்.

(நீங்க என்பது கவிசிவா இல்லை)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@திவ்யாஹரி -//கண்டிப்பா செய்றோம் ஜெய்லானி//

மிகவும் நன்றி

//சித்ரா என்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்க.. என்ன கொடுமை சித்ரா இது?//

அவங்க இள வயது மனோரமா மாதிரி நல்ல தமாசு. நான் அவங்க ப்ளாக்கை படிக்கும் போது எனக்கு அப்படிதான் தோனும்.ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

//இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம்//

நீங்கள் சொல்வது சரிதான், சரியான ஆதங்க பகிர்வு

//சிலர் பிறந்த மாதத்தை கேட்டா ஏமார்ந்தவங்க பிற்ந்த மாதத்தில் என்று சொல்வாஙக்.. //இன்னும் போன முட்டாள்கள் மாதம் என்றே ஆக்கிடுவாங்க போல‌

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--வாங்க சார் வாங்க !!(ஒரு வேளை வைரஸ் வருதா) உங்க கமெண்ட்டை பப்லிஷ் பன்னவே முடியல.(மெயிலிருந்து காப்பி பேஸ்ட் இது).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela---//சிலர் பிறந்த மாதத்தை கேட்டா ஏமார்ந்தவங்க பிற்ந்த மாதத்தில் என்று சொல்வாஙக்.. இன்னும் போன முட்டாள்கள் மாதம் என்றே ஆக்கிடுவாங்க போல‌//

நம்ம ‘தாத்தா’வுக்கு பாராட்டு விழா எடுத்து அதை மாத்த் சொல்லி ‘கடிதம் ’ எழுதுவோம். ஹி...ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

malar said...

உங்கள் பதிவு நல்ல இருக்கு ....

ஆனால் அதிலும் உங்கள் ஆண் ஆதிக்கம் தெரிகிறது..

தலை ச்சுற்றி இரவு வீடு வரும வரைக்கும் நாள் முழுவதும் இந்த தொந்தரவு .இதில்’’’’’ மனைவி ’’’முதல் கொண்டு அனைத்து மனித மனங்களும் கிண்டல் கேலி செய்யும். அப்படி என்னதான் ஆசையோ

'''மாமியார் தரும் காது குடுத்து கேக்க முடியாத திட்டு , சாபம் மற்றும் மருமகளின் கண்ணீர்'''

ஜெய்லானி said...

@@@malar--//ஆனால் அதிலும் உங்கள் ஆண் ஆதிக்கம் தெரிகிறது..//

அதிகமான பெண்கள் வேலைக்கு போகவில்லை , வீட்டில் குடும்பத்தை பார்த்து கொள்கிறாங்க.அதனால் மனைவி என்றேன். 100 சதவீதம் வீட்டு குடும்பத்தை நிர்வகிக்க பெண்களால் மட்டுமே முடியும் . எப்போதுமே பெண்னுக்கு எதிரி அல்ல நான்.

டீவீ சீரியல பாத்துட்டு ஒரு கருத்து சொல்லுங்க.(( நான் இங்கு இருக்குமிடம் டிஷ் , டீவியே வைக்க முடியாது. அதுவரை தப்பிச்சேன். ஊருக்கு போனால் கவலைதான் பாக்க வேண்டி வருமே))

//'''மாமியார் தரும் காது குடுத்து கேக்க முடியாத திட்டு , சாபம் மற்றும் மருமகளின் கண்ணீர்'''//

இது இல்லாத சீரியல் பாக்க ஏன் பெண்களுக்கே புடிக்காதே!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

// சூர்பனகை மாதிரி இருந்தாலும் நீ சீதை மாதிரி கொள்ளை அழகுன்னு யாருகூட வாவது சும்மா பிட்ட போட்டு கிட்டுவாவது இருக்கலாம் //ஜெய்லானி..வேணாம்..எப்பொழுதும் பெண்ணியத்தை மட்டமாக மதிப்பிடும் உங்கள் ஆணாதீக்கத்தை கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ..:‍)

//அதனால் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் . இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம்.//
கடைசி பிட்டு சூப்பரு

அன்புடன் மலிக்கா said...

நம்மை நாமே ஏமாறிக்கொள்வதில் நிறையபேருக்கு சந்தோஷம் முட்டாளுப்புள்ளைங்க.

எல்லாத்துக்கும் ஒரு தினமிருக்கு இனி
லொள்ளு தினமுன்னு[காமெடி காமெடிதினமுன்னு] வருமா ஜெய்லானி.

இடுகை செம நச்.புரிகிறவங்களுக்கு புரிங்சா சரி..

ஏப்ரல் [ஃ]பூஊஊஊஊஊஊஊஊ[ல்]

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//அதனால் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் . இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம். //

ஏண்..சாரிங்க.. கொஞ்சம் அழுத்தி கேட்டுட்டேன்..

ஏன்?..ஒரு நாள் மட்டும்.. எப்போதும் யாரையும் ஏமாற்ற வேண்டாம்..

athira said...

வாழ்த்துக்கள் ஜெய்..லானி!!!
பாருங்க.... எனக்கும், இந்த முட்டாள் தினத்திலேதான் உங்களை வாழ்த்த காலம் கிடைத்திருக்கிறது:). அதுக்காக நீங்களெல்லாம் முட்டாளா என்ன?:).. இதுக்கெல்லாம் கோபிக்கமாட்டீங்க எனத் தெரிஞ்சுதான் வாழ்த்துறேன்.

அதுசரி ஏன் கழுகுப் பார்வை பார்க்கிறீங்க?:) பூனைப்பார்வை பார்த்தால் வித்தியாசமாகத் தெரியுது... அதாவது, வருஷம் முழுக்க “உம்” என இருக்கும் பலபேர் இந்த முட்டாள்கள் தினத்தில்தான் கொஞ்சம் சிரிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ரூம் போட்டு யோசிச்சு, நல்லாவே எழுதியிருக்கிறீங்க அதுக்கும் வாழ்த்துக்கள்.

athira said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!/// கடவுளே... இப்படிச் சாபம் போடலாமோ? ரொம்ப கொடுமையாக இருக்கு.... ஆமா யாரோட கண்ணு??:)

Jaleela Kamal said...

உங்களுக்கு அவார்டு கொடுத்து இருக்கேன் வந்து வாங்கி கொள்ளுங்களேன்.

http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_31.html

அதிரா உங்கள் பூஸின் மூளை நல்ல வே வேலை செய்யுது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம்.//

பாய்! இவ்வளவு நல்லவரா இருக்கீங்களே!
நச்சுனுகீது!

ஜெய்லானி said...

@@@ஸாதிகா-//ஜெய்லானி..வேணாம்..எப்பொழுதும் பெண்ணியத்தை மட்டமாக மதிப்பிடும் உங்கள் ஆணாதீக்கத்தை கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ..:‍)//

என்னுடய ஒரு கருத்து மத்தவங்களுக்கு வேற மாதிரி கருத்தா நினைக்க வைக்குது என்பதை தெரிய படுத்தியதுக்கு நன்றி. இனி தெளிவா எழுத முயற்சி செய்கிறேன். தவறை சுட்டிகாட்டுங்க தைரியமா!!இந்த தப்பு இனி வராது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மலர்--//தலை ச்சுற்றி இரவு வீடு வரும வரைக்கும் நாள் முழுவதும் இந்த தொந்தரவு .இதில்’’’’’ மனைவி ’’’முதல் கொண்டு அனைத்து மனித மனங்களும் கிண்டல் கேலி செய்யும்.//

இது ஏப்ரல் 1க்கு மட்டும் சொன்னது. வருஷம் முழுக்க இல்லை.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா -//எல்லாத்துக்கும் ஒரு தினமிருக்கு இனி
லொள்ளு தினமுன்னு[காமெடி காமெடிதினமுன்னு] வருமா ஜெய்லானி//

இந்த அவசர உலகத்தில தேவைன்னுதான் தோனுது.

//ஏப்ரல் [ஃ]பூஊஊஊஊஊஊஊஊ[ல்]//

எனக்கு மட்டும் தானே. அப்ப சரி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி.. --//ஏண்..சாரிங்க.. கொஞ்சம் அழுத்தி கேட்டுட்டேன்..ஏன்?..ஒரு நாள் மட்டும்.. எப்போதும் யாரையும் ஏமாற்ற வேண்டாம்.//

முயற்சி பண்ணி பாக்க வேனாமா அதுக்குதான்.

ஜெய்லானி said...

@@@அதிரா--//எனக்கும், இந்த முட்டாள் தினத்திலேதான் உங்களை வாழ்த்த காலம் கிடைத்திருக்கிறது://

சில பேர் வாயையே திறக்க மாட்டாங்க . நீங்க வாழ்த்தியே இருக்கீங்க. அதுக்கு எந்த நாளா இருந்தா என்ன. என்ன திட்டினாலும் நான் கோவபட மாட்டேன் பயப்படாதீங்க.

//அதுசரி ஏன் கழுகுப் பார்வை பார்க்கிறீங்க?:) பூனைப்பார்வை பார்த்தால் வித்தியாசமாகத் தெரியுது//

கழுகுக்கு உயர பறக்கும் போது ஆறு சதுர கிமீக்கு உள்ள பொருள்கள் தெளிவா தெரியும். அதுமாதிரி தூர நின்னு பாக்கதான் அப்படி பேர் வச்சது. நல்ல வேளை காக்கா மாதிரி பர்வைன்னு சொல்லாம விட்டீங்களே அது போதும்.


அப்ப தூங்கு போது உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுதா . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela --//உங்களுக்கு அவார்டு கொடுத்து இருக்கேன் வந்து வாங்கி கொள்ளுங்களேன்.//

16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க !!. ஜார்ஜாவில இன்னொரு மழை இருக்கு.

// அதிரா உங்கள் பூஸின் மூளை நல்ல வே வேலை செய்யுது.//

நிறைய வெண்டைகாய் சாப்பிடறாங்களா ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN --//பாய்! இவ்வளவு நல்லவரா இருக்கீங்களே!//

பாத்தீங்களா, இப்படி ஏமாத்துறீங்களே!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

athira said...

Jaleela said...
உங்களுக்கு அவார்டு கொடுத்து இருக்கேன் வந்து வாங்கி கொள்ளுங்களேன்./// ஜலீலாக்கா, அவார்ட்டுக் கொடுத்ததும் இல்லாமல், சொகுசுக் காரும் அனுப்பிக் கூப்பிடுறீங்களோ? இது ரொம்ம்ம்ம்ம்ம்ப ஓவரக்கா:). ஒரு ஒற்றை மாட்டு வண்டில் போதுமே.... ஏதோ பூனை மூளைக்கெட்டிய ஒரு சிறிய யோசனை:).

பி.கு:
என்பக்கமென்றாலும் பறவாயில்லை:).

மசக்கவுண்டன் said...

இன்னைக்கு முச்சூடும் என்ற மனச்சாச்சிக்கு விரோதமா நடக்க மாட்டனுங்க அப்படீங்கற உறுதிய உங்களுக்கு கொடுக்கறனுங்க

ஸாதிகா said...

தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.

http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html

பித்தனின் வாக்கு said...

என்ன ஜெய்லானி, நாளுக்கு நாள் முதிர்ச்சி தெரியுது. நல்ல கட்டுரை. நல்லா எழுதியிருக்கின்றாய், இப்படியே நிறைய எதிர்பார்க்கின்றேன். எனிவே உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதுதான் முட்டாள்கள் தினமாமே. ஹா ஹா நன்றி. நம்ம வெளியூரு இன்னிக்கு பார்ட்டி தருவாரு. என்ன கொஞ்சம் உளறல் அதிகாமா இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.

ஜெய்லானி said...

@@@athira- மாட்டு வண்டிக்கு ஆர்டர் குடுத்து இருக்கு இன்னும் வரல மாடு. நாந்தான் வரனும்.

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன் -இந்த ஒரு சந்தோஷம் போதும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.//


ஹை. இன்னைக்கு ஏப்ரல் 1தானே.

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு --விருதா தராங்க. அது வேற பயமா இருக்கு. கடைசியில மொத்தமா பலி குடுக்க என்னமா தெரியல. கடல்ல குதிச்சிட்டுட்டேன் நீந்த முயற்சி பண்றேன். அப்புறம் உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்( நாமல்லாம் ஓரே இனம் இல்லையா) வெளியூரு வாயை திறந்தா.ம்..ம் மட்டும் சொல்லுங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

என்ன ஜெயிலானி இன்னுமா உங்களுக்கு புரியலை.

இன்னிக்கு ஏமாத்துற தினம் இல்லை. நம்மளை மாதிரி வருடம் பூரா ஏமாறுபவங்க கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட தினம். வாங்க ஏமாறலாம் :)

சிநேகிதன் அக்பர் said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

இப்படி சொன்னதுக்கப்புறமும் போவாங்க?

(கொஸ்டின் மார்க்கை விட்டுட்டேன்)

(ஆன்ஸ‌ர்லேயே மார்க்கை விடுற நமக்கு இது பெரிய விசயமா என்று கேட்டு வரும் பின்னூட்டங்கள் வரவேற்ப்படுகின்றன)

அப்துல்மாலிக் said...

லூசுலே விடுங்க தல

முன்னேயெல்லாம் நாளிதழிலேயே அதிர்ச்சி செய்திப்போட்டு ஏமாற்றிய காலமெல்லாம் உண்டு

சிநேகிதன் அக்பர் said...

ஜெயிலானி என் பின்னூட்டங்கள் எங்கே.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப ரொம்ப சூப்பருங்க..

எனக்கும் ரொம்ப நாளாவே இந்த டவுட்டு இருந்தது..
நீங்க சொன்ன விதம் ரொம்ப அருமை..

சின்ன வயசுல.. பள்ளியில நம்ம சட்டையில மை அடிக்கறது, சாக்கலட் பேப்பர் ல கல்லு வைக்கறது...ஒன்னும் புரியாது.. எதுக்கு பண்றாங்கன்னு..

ரசித்து படித்தேன்.. வாழ்த்துக்கள்.. :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

// ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

சொல்ல மறந்திட்டேன்.. இது சூப்பரோ சூப்பரு. இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்.. :) :)

ஜெய்லானி said...

@@@அக்பர் --//இன்னிக்கு ஏமாத்துற தினம் இல்லை. நம்மளை மாதிரி வருடம் பூரா ஏமாறுபவங்க கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட தினம். வாங்க ஏமாறலாம் :)//

இப்படி வேற சந்தோஷமா, தாங்குமா பூமி

//இப்படி சொன்னதுக்கப்புறமும் போவாங்க?//

பாத்தீங்களா எப்டி திரும்ப வர வச்சேன்ன்னு அதான் ஜெய்லானி.

//(ஆன்ஸ‌ர்லேயே மார்க்கை விடுற நமக்கு இது பெரிய விசயமா என்று கேட்டு வரும் பின்னூட்டங்கள் வரவேற்ப்படுகின்றன)//

அடடா அதானே பாத்தேன் நாமெல்லாம் ஒரே இனம்தானே.

//ஜெயிலானி என் பின்னூட்டங்கள் எங்கே//

எங்கேயும் போகல இங்கதான் இருக்கு. எனக்கு மட்டும் 1லிருந்து 7 வரை டியூட்டி .நான் மட்டும்தான் வெளியே போனேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அபுஅஃப்ஸர்-//லூசுலே விடுங்க தலமுன்னேயெல்லாம் நாளிதழிலேயே அதிர்ச்சி செய்திப்போட்டு ஏமாற்றிய காலமெல்லாம் உண்டு//

பாத்தீங்களா சந்தடி சாக்குல என்னை லூசுன்னு சொல்லிட்டீங்களே !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi - வாங்க!! வாங்க!! என் ஏரியாவுகுள்ள வந்துட்டிங்கதானே புத்திசாலியான உங்களை அதிபுத்திசாலியா மாத்திடுவோம்.

//சொல்ல மறந்திட்டேன்.. இது சூப்பரோ சூப்பரு. இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்.. :) :)//

சிரிச்சாதான் மனசுக்கு + உடலுக்கு நல்லது. உங்கள் முதல் வருகைக்கும் + கருத்துக்கும் + ஃபாலோயராக இனைந்த்துக்கும் = நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நீங்க கணக்குல புலி தான் போல இருக்கு.. நன்றி.. :)

Asiya Omar said...

இவ்வளவு அருமையாக விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது,வராமல் ஏமாற்றலாம்னு பார்த்தேன்.என்னமா எழுதறீங்க.

ஜெய்லானி said...

@@@Ananthi --.நீங்க கணக்குல புலி தான் போல இருக்கு.. நன்றி.. :)//

பதுங்குறதிலா பாயிறதிலா ,பாத்தீங்களா இதில உள்குத்து எதுவுமில்லையே!!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar-- நீங்க அவார்டெல்லாம் குடுத்தபின்ன இது மாதிரி எழுதாட்டி பின்ன புடுங்கிகிடமாட்டீங்களா!! அந்த பயம்தாங் காரணம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

//நாம எல்லாருமே தினமும் ஏதாவது ஒரு வகையில எங்கையாவது ஏமாந்துகிட்டுதான் இருக்கோம்//
அருமையான வரிகள்.தெரிந்தோ. தெரியாமலோ

ஜெய்லானி said...

@@@மின்னல்- ஆமாங்க ஆமாம் .(வடிவேலு மாதிரி படிங்க) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Kiruthigan said...

நல்லாUக்கு

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

google.com said...

யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம்.
இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம் nice
thanku ஜெய்லானி
Roja

ஜெய்லானி said...

@@@Cool Boy -வாங்க !வாங்க !! .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@thalaivan --முயற்சி செய்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@google.com- வாங்க !வாங்க !! .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கிரீடம் பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள், ஜெய்லானி!

தாராபுரத்தான் said...

கழுகுப் பார்வை தானுங்கோ..

அப்பாவி said...

Jailany , you posted comments on
http://mayavarathaan.blogspot.com
for the title "பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா"
It is totally copied from
http://tamil.darkbb.com/-f2/--t823.htm
this article was posted on that blog on in title of
"புடுங்குற தலைவனுக்கு புடலங்காய் விழா !"

Post by aarul on Sun Feb 28, 2010 7:49 am

Please Dont en garage Copy and paste stupids.

Ahamed irshad said...

தேவையான பார்வைதான்....

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN --வாங்க, சந்தோஷம், அதுபோல உங்களுக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@தாராபுரத்தான் --//கழுகுப் பார்வை தானுங்கோ..//

பெரியவங்க நீங்க சொன்னா சரிதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி -- தெரிவித்ததுக்கு நன்றி. அடிக்கடி வாங்க....

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத் --.//தேவையான பார்வைதான்...//

ஆமாங்க. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//வாங்க!! வாங்க!! என் ஏரியாவுகுள்ள வந்துட்டிங்கதானே புத்திசாலியான உங்களை அதிபுத்திசாலியா மாத்திடுவோம்.//

ரொம்ப நன்றி.. நீங்க ஃபாலோயராக இணைந்த்ததுக்கும் நன்றி.

//பதுங்குறதிலா பாயிறதிலா ,பாத்தீங்களா இதில உள்குத்து எதுவுமில்லையே!!! //

ச.. ச.. உள்குத்து எல்லாம் ஒன்னும் இல்லைங்க.. நீங்க கூட்டல் போட்டு போட்டு நன்றி சொன்ன விதம் பிடித்தது.. அதான் சொன்னேன்....! :D

ஜெய்லானி said...

@@@Ananthi ---எனக்கு வித்தியாசமா பேச்சு , எழுத்து , இதெல்லாம் பிடிக்கும் உடனே ஃபாலோயரா ஒட்டிப்பேன். அடிக்கடி வந்து கருத்துகளை சொல்லுங்க!!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))