Monday, March 22, 2010

வடை மற்றும் கதை

முதலில் சமையல் குறிப்பு .வேண்டாதவர்கள் நான்கு பாரா தள்ளி போய் படியுங்கள்.
வாழைப்பூ வடை

அவசியமான பொருட்கள்

கடலைப் பருப்பு --- 150 கிராம்
துவரம் பருப்பு ---150 கிராம்
வெங்காயம் ---1 பெரியது
தேங்காய் -- 1மூடி துருவியது
காய்ந்த மிளகாய் -- 6
மஞ்சள் தூள் --1/2 ஸ்பூன் சின்னது
எண்னெய் -- தேவையான அளவு
உப்பு -- தேவையான அளவு
சோம்பு , சீரகம் -- 1 ஸ்பூன்
வாழைப்பூ -- 1

செய்யும் முறை:

பருப்பு வகைகளை சுமார் மூன்று மணிநேரத்திற்கு முன்னே ஊறவைப்பது நல்லது

வாழைப்பூவை பொறுமையாக சுத்தம் செய்து (கையில் சிறிது எண்ணெய் தேய்ப்பது நலம்) அதை சிறியதாக வெட்டிக்கொள்ளவும்

வெங்காயத்தையும் பொடியாக அரிந்துக்கொள்ளவும்

கிரைண்டர் அல்லது அம்மி (நகரத்தில் தேடவேண்டிவரும்) அல்லது மிக்ஸியில் ஊறிய பருப்புடன் காய்ந்தமிளகாய் , சோம்பு , சீரகம் மற்றும் உப்பு போட்டு கொஞ்ஜம் பிசிறு தட்டுவது போன்று நற ..நற வென்று ஆகும் வரை அரைத்து கடைசியில் வாழைப்பூவை போட்டு ஒரு சுற்றுசுற்றி விட்டு வெளியே எடுக்கவும்

அதில் நறுக்கிய வெங்காயம் , துருவிய தேங்காய் பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வடையாக தட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

இதோ இப்போது நீங்கள் செய்த அருமையான வாழைப்பூ வடையை குறைந்தது வாரம் இருமுறை உங்களுக்கு பிடித்த நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நீங்கள் ஒரு லட்சாதிபதி .என்ன வியப்பா இருக்கா. ஆமாம் உங்கள் கிட்னியின் விலை.

தண்ணீர் தேவையாண அளவு குடிக்காத காரணத்தால் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி ( வரும் நேரத்தில் வரவிடாமல் அடக்கும் சிறுநீரின் காரணத்தாலும் ) நமது சிறுநீரகங்கள் உப்பு நீரை வடிகட்ட முடியாமல் தட்டுத்தடுமாறி திணருகிறது. கடைசியில் கல்லாக மாறி நமது தலையில் கல்லை (மன்னை ) கொட்டுகிறது.

கல் அதன் அளவைக்கொண்டு சில நேரம் சிறுநீர் பாதை வழியே வெளியே வந்து விடும். சிறிது பெரியதாகி போனால் நடுவில் அடைத்துக் கொண்டு வரும் கஷ்டம் இருக்கிறதே . அந்த நேரத்தில் 100 கோடி அல்லது ஆயிரம் கோடி ரூபாயை தந்தாலும் வேண்டாண்டா சாமி இந்த மைக்ரோ மில்லிமீட்டர் கல்லை மட்டும் எடுத்துவிடு எண்பீர்கள். அவ்வளவு வேதனை. அவ்வளவு சோதனை.

இந்த கல்லை சிதைக்கும் ஆற்றல் அல்லது வரவிடாமல் தடுக்கும் வலிமை இரண்டுக்கு மட்டுமே உண்டு ,ஒன்று வாழைப்பூ மற்றது தண்ணீர் அதாவது

நீர்

சேவ் வாட்டர் SAVE THE WATER
எல்லோரும் தனித்தனியா பி எச் டி வாங்கும் அளவுக்கு நீரின் பாதுகாப்பு பயனை போட்டுவிட்டதால் அடியேனும் ஒரு எறும்பாக...... இந்த பதிவு.......

40 என்ன சொல்றாங்ன்னா ...:

ஹாய் அரும்பாவூர் said...

"சேவ் த வாட்டர் SAVE THE WATER"

சமைக்குற அளவிற்கு பொறுமை இல்லை இடமும் இல்லை
வளர்க வாழ்க

மசக்கவுண்டன் said...

ஆமா, வாளப்பூ வடைக்கு வாளப்பூ வேண்டாமா? லிஸ்ட்ல இல்லயே!

வேசகாலத்துல எல்லாரும் தண்ணி நெறயாக் குடிக்கோணும்.

மசக்கவுண்டன் said...

கடசியா வாளப்பூ இருக்குதுங்க, கவனிக்கல, மாப்பு கேட்டுக்கிறனுங்க.

Chitra said...

நான் இருக்கும் ஊரில் வாழைப்பூ கிடைப்பதில்லை. :-(
I will just save the water. :-)

kavisiva said...

வாழைப்பூ வடையோட வாழைத்தண்டு ஜூசும் குடிச்சா சிறுநீரக வியாதிகளைத் தடுக்கலாம். உடல் எடையும் குறையும்.

ஜெய்லானி said...

@@@ஹாய் அரும்பாவூர் --ஆமாம் நிறைய பேருக்கு இந்த கஷ்டம் இருக்கு, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@மசக்கவுண்டன்--வியாதி வருமுன் காக்கவேணுமுங்க, தண்ணி நிறைய குடிங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Chitra -- ஒரு நாள் அங்குள்ளவர்களுக்கு கிளாஸ் எடுங்க ஒரு மாசத்திலேயே எல்லா கடையிலயும் கிடைக்கும். கிடைக்காதது வருத்தமான விஷயம்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@kavisiva --கரெக்டா சொன்னீங்க ,வடை கதைக்கு ஜுஸு வேனாமேன்னு விட்டுட்டேன். (வாழைத்தண்டு பொதுவா வெளிநாட்டில் கிடைப்பதில்லை )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

வாழைப்பூ வடை ம்ம் அருமை வயிற்றில் உள்ள பூச்சி அழியும், வழைதண்டு ஜூஸ் குடித்தால் கல் சரியாகும் ஆனால் அடிக்கடி குடிக்ககூடாது நரம்பு தளர்சி ஏற்படும்.

பதிவுக்கு ஒரு ஐடியா கொடுத்து இருக்கீங்க மிக்க நன்றி

Asiya Omar said...

ஜெய்லானி வேறு சமையல் குறிப்பு கொடுத்து அசத்துகிறாரே என்று வாழைப்பூ வடை ப்ரெசன்டேஷனை தேடினால் பெரிய மேட்டரோடு பதிவு.பாராட்டுக்கள்.இது புது யுக்தியாக இருக்கே.

ஜெய்லானி said...

@@@Jaleela --இந்த டிப்ஸ் முதலில் உங்க ப்ளாக்கில் இருக்கான்னு தேடி பார்த்துவிட்டுதான் போட்டேன். வாழைத்தண்டும் , வாழைப்பூவும் ஏறக்குறைய ஒரே பலன் தான். பூவில் நார் சத்து அதிகம் குடலுக்கு பலம் சேர்க்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar --//இது புது யுக்தியாக இருக்கே.///

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுப்பார்த்தேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

prabhadamu said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!


நான் இதுக்கு பயந்தாவது சொல்லிட்டு போரேன்ப்பா. ஆமா.

எனக்கு வாழப்பூ வடை பார்சல் அனுபனும். ஓக்கேயா? சிங்கப்பூர்க்கு.

ஜெய்லானி said...

@@@prabhadamu --உங்களுக்காக ரெடியாயிட்டிருக்கு பார்சல்.பயப்படாம சாப்பிடுங்க....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்துல்மாலிக் said...

ரைட் டூ சமயல் டூ பொதுநலம்‍‍>>>

அன்புடன் மலிக்கா said...

வாழைப்பூ வடை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் சுட்டதுதானே! ஜெய்லானி.

வடையும் அதன் விளக்கமும். அப்பால உள்ள தண்ணீர்குறிப்பும் சூப்பர் இப்படித்தான் வித்தியாசமாக இடுகைபோடனும் சபாஷ்..

Geetha6 said...

super brother..
very good and useful post.
thanks!

SUFFIX said...

வாழைப்பூ வடை பிரமாதம், அடுத்த சமையற் குறிப்புகள் படத்தோட போடுங்க, அப்போ தான் கொஞ்சம் புரொஃபஷனலா இருக்கும், ஜனங்களுக்கும் நம்பிக்கை வரும் -:)

Rettaival's Blog said...

ஜெய்லானி..அறிவியல் ஆயிரமய்யா நீ!

Menaga Sathia said...

வடை குறிப்பு சூப்பர்ர்!! இனிமேலாவது மக்கள் தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தனும்...

ஜெய்லானி said...

@@@அபுஅஃப்ஸர் --//ரைட் டூ சமயல் டூ பொதுநலம்‍‍>>>//

ஒன்னுதான் போடவந்தது ..ஓகே... முயற்சி செய்வோம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//வாழைப்பூ வடை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் சுட்டதுதானே! ஜெய்லானி.//

அச்சச்சோ...நீங்க சொன்னதும்தான் நினைப்பே வருது. அந்த படம் ரிலீஸ், துபாயில பார்த்தது , பத்து வருஷம் முன்ன.மாஷா அல்லாஹ் நல்ல நினைவு உங்களுக்கு

//வடையும் அதன் விளக்கமும். அப்பால உள்ள தண்ணீர்குறிப்பும் சூப்பர் இப்படித்தான் வித்தியாசமாக இடுகைபோடனும் சபாஷ்..//

எல்லாம் பெரியவங்க உங்க ஆசிர்வாதம்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha6 -//super brother..
very good and useful post.
thanks!//

Thanks for your first visit in my blog. pls come again

ஜெய்லானி said...

@@@SUFFIX --//அடுத்த சமையற் குறிப்புகள் படத்தோட போடுங்க, அப்போ தான் கொஞ்சம் புரொஃபஷனலா இருக்கும், ஜனங்களுக்கும் நம்பிக்கை வரும் -:)//

அப்ப இந்த பச்ச புள்ளய பலி குடுக்க முடிவு பண்ணிட்டீங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரெட்டைவால் ' ஸ்--//ஜெய்லானி..அறிவியல் ஆயிரமய்யா நீ!//

மன்னரே!! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கக்கூடாது, சம்பளத்த ஏத்திகுடுங்க!( இல்லாட்டி ராணுவ புரட்சி வரும் )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia --// இனிமேலாவது மக்கள் தண்ணீரை சிக்கனமா பயன்படுத்தனும்..//

ஆமாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வேலன். said...

அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்....ஒரே கல்லி்ல் இரண்டு மாங்காய்..? வாழ்க வளமுடன்,வேலன்.

பித்தனின் வாக்கு said...

// தண்ணீர் தேவையாண அளவு குடிக்காத காரணத்தால் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி ( வரும் நேரத்தில் வரவிடாமல் அடக்கும் சிறுநீரின் காரணத்தாலும் ) நமது சிறுநீரகங்கள் உப்பு நீரை வடிகட்ட முடியாமல் தட்டுத்தடுமாறி திணருகிறது. கடைசியில் கல்லாக மாறி நமது தலையில் கல்லை (மன்னை ) கொட்டுகிறது. //

நல்ல பதிவு, ஜெய்லானி, உண்மையில் ஒரு சமையல் பதிவும்,சமுக விழிப்புனர்வு பதிவும் சேர்த்துப் போட்டுள்ளீர்கள்.
நான் நீங்க சொன்ன மாதிரித்தான் கடைப் பிடிக்கின்றேன். இதுக்குத்தான் ஒவ்வெரு வார இறுதியிலும் நல்லா தண்ணியடிக்கின்றேன். ஹா ஹா.
வாழைப்பூ வடையில் வாழைப்பூ இல்லை, பரவாயில்லை, அட்ஜெஸ்ட் பண்ணிகிறேம். அப்புறம் ஒரு சின்ன விஷயம். வாழைப்பூவை நறுக்கும் போது, தண்ணீரில் கொஞ்சம் மோர் கலந்து அதில் போடவும். இல்லை என்றால் நறுக்கிய வாழைப்பூ கறுத்து விடும். வடையும் கறுப்பாக இருக்கும். சரிங்களா?

ஒரு நிமிஷம் நீங்க என்ன சொன்னீங்க, தண்ணீர் குடிப்பதா? சரி சரி முயற்சி பண்றேம்.

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு--//நான் நீங்க சொன்ன மாதிரித்தான் கடைப் பிடிக்கின்றேன். இதுக்குத்தான் ஒவ்வெரு வார இறுதியிலும் நல்லா தண்ணியடிக்கின்றேன். ஹா ஹா.//

பாத்துங்க!!தண்ணி உங்களை அடிக்காம பாத்துகோங்க.

//வாழைப்பூ வடையில் வாழைப்பூ இல்லை, பரவாயில்லை, அட்ஜெஸ்ட் பண்ணிகிறேம்//

மெயின் ஐட்டத்தை முதலில் போடக்க்கூடாது என்பதற்காகத்தான் கடைசியில் போட்டேன். நீங்க மப்புல தான் படிச்சீங்க என்பது தெளிவாயிடுச்சு. சுதாகர் சார். நல்லா பாருங்க வாழை பூ இருக்கு.

//இல்லை என்றால் நறுக்கிய வாழைப்பூ கறுத்து விடும். வடையும் கறுப்பாக இருக்கும். சரிங்களா?//

உடனே செய்தால் பிரச்சனை இல்லை. லேட் ஆனால் நீங்க சொல்வதுதான் சரி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்....ஒரே கல்லி்ல் இரண்டு மாங்காய்..?.//

உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

ஸாதிகா said...

அட..சமையலும் தெரியுமா?புதுமையாகத்தான் இருக்கு.நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய சமையல் குறிப்பு.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா -//அட..சமையலும் தெரியுமா?புதுமையாகத்தான் இருக்கு.நல்ல சமூக சிந்தனையுடன் கூடிய சமையல் குறிப்பு.//

பயப்படாதீங்க உங்களுக்கு போட்டியா எல்லாம் வரமாட்டேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் என்ன சொல்வதென தெரியவில்லை..
அதனால் அட்டடென்ஸ் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி..//நான் என்ன சொல்வதென தெரியவில்லை..அதனால் அட்டடென்ஸ் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்//

ப மு க தலைவர் வந்ததே பெரிய விஷய்ந்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஜெய்லானி said...
ப மு க தலைவர் வந்ததே பெரிய விஷய்ந்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//

ஏம்பா.. குடிக்கிற H2O சொல்றிங்களா?..
அதை முதல்லேயே சொல்லலாமில்ல.. நானும் ஏதொ சரக்கடிக்கிற சமாச்சாரமுனு ஓடிப்போயிட்டேன்..

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி..//ஏம்பா.. குடிக்கிற H2O சொல்றிங்களா?..அதை முதல்லேயே சொல்லலாமில்ல.//

இனி டேக் டைவைர்ஷன் போர்ட் போட்டுடுவோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தாராபுரத்தான் said...

உபயோகமா இருக்கும்.

Veliyoorkaran said...

Raaamaaa...!!

ஜெய்லானி said...

@@@தாராபுரத்தான் --//உபயோகமா இருக்கும்.//அப்படி இருந்தால் சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Veliyoorkaran --// Raaamaaa...!!//

வெளியூரு ஏதோ திட்றது மட்டும் தெரியுது. ஆனா , என்னான்னு மட்டும் புரியல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

தண்ணீர்வடை கதை நல்லா இருக்கு.

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா --//தண்ணீர்வடை கதை நல்லா இருக்கு.//

சந்தோஷம்.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))