Wednesday, April 6, 2011

என்னா போசூஊஊ:)))

41 என்ன சொல்றாங்ன்னா ...
எதுக்கு இதெல்லாம் இப்போ?:))
திடீரென என்ன ஆச்சூஊஊ?:) ரொம்பத் தேவைதான்....
இது எங்க?:)எனக்கு ஒண்ணுமே புரியல்ல.... உங்களுக்கு?:)) ஊசிக்குறிப்பு: முதல் பின்னூட்டம் போடுபவருக்கு இந்தக் கார் இலவசம்.... :)


 கார் பெறுபவருக்கு காருடன் இருக்கும் “.....” இலவசம்... (BUY ONE GET ONE FREE...)

Friday, April 1, 2011

சந்தேகம்-7 பாம்பூஊஊஊ

61 என்ன சொல்றாங்ன்னா ...
    
         நம்ம மக்களில் ஒரு சிலரை தவிர பலப்பேருக்கு பேரை கேட்டாலே  சும்மா அதிரும் .  திடீர்ன்னு சொன்னாப் போதும்.  கைக்கால்  ஆட்டோமேடிக்கா உதறல் எடுக்கும்  . இன்னும் சிலருக்கு படத்தை  பார்த்தாலே  பிளாகோ , வெப்ஸைட்டோ  , இல்ல வீடியோவோ  எதுவா இருந்தாலும் பார்க்காமலோ  ஓடி விடக்கூடிய  வியாதியும்  இருக்கு .அதுக்கு ஏதோ ஒரு போபியான்னு சொல்லுவாங்க (ஏதாவது சொல்லிட்டு போவட்டும்  நமக்கென்ன )  . அந்த பேருக்கு சொந்தக்காரர்  திருவாளர் பாம்பு அவர்கள்தான் .
அடிக்கடி  நாம ரெண்டு பேரும் இப்படி ஓடி ஒளியரதா இருக்கே  என்ன செய்யுறது ..!! அவ்வ்
       
      இதுல அதிக விஷம் உள்ளது .ஒரே  கடியில்  ஒரு யானையையே  சாகடித்து விடும் பவர் .சக பாம்பு இனத்தையே சாப்பிடும் குணம் , தைரியமா நிமிர்ந்து அது 6 அடியா இருந்தாலும்  எந்த வித கிராபிக்ஸும் இல்லாம ஸ்டைலா படம் எடுத்து நிக்கிறது நல்ல பாம்புதான் .  இவ்வளவு  டெரரா இருந்தாலும் அதுக்கு நம்ம மனுஷ இனம் குடுத்த பேர் நல்ல பாம்பு “ 
       அது மட்டும் நல்லதா இருந்தா , ஒன்னும் வேலைக்கு ஆகாத  ((அட கடிச்சாலும் தான் ))  தண்ணீப் பாம்புக்குதானே நல்ல பேரை குடுத்து இருக்கனும்.. இதை எழுதும் போதுதான் அந்த பாட்டும் நினைவுக்கு வருது “”  நாதர் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பே  உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே  “”  .அந்த நாவுக்கரசர்  ( சிவாஜி ) கேட்டப்போ  கூட புஸ்ஸு..புஸ்ஸுன்னு சவுண்டுதான் குடுத்துச்சி .  ((ஒரு வேளை குஷ்பு..குஷ்புன்னு சொல்லிச்சோ  என்னவோ  யாரு கண்டது )) ஆனா ஆள் யாருன்னு கடைசி வரை அதுவும் சொல்லலை ..உங்கள்ள யாருக்காவது  தெரிஞ்சா சொல்லுங்க .பின்னால வரும் சந்ததிகளாவது தெரிஞ்சிக்கட்டும்
     இதுல அடுத்த சந்தேகம் என்னன்னா..பாம்புக்கு காது இருக்கா..???  இது வரை என்னை தவிர எல்லாமே குழப்பவாதியாதான் இருப்பாங்க போலிருக்கு ..ஹி..ஹி... உதா:-  மகுடி  ஊதினா  அது ஆடுவது பார்ப்பது எல்லாமே காது கேட்பதால இல்ல , ஏன்னா அதுக்கு காது இல்ல , அதுக்கு முன்னால அதை ஆட்டுவதால அது இடவலமா பார்ப்பதா  சொல்றாங்க ....அதே சயண்டிஸ்டு  பயபுள்ள சொல்லுது .கீழ் உடல்ல இருக்கும் செதில்களால அது பூமி அதிர்வுகளை வச்சி கண்டுப்பிடிக்குது .  இதுல எது நிஜம், எது பொய்ன்னு   கொஞ்சம் சொன்னா தேவலாம் . சத்தமுன்னு சொன்னா  அது அதிர்வு தானேங்க அது காத்தில போனா என்ன(ரேடார்) கடல் தண்ணீயில போனாதான் என்ன  (சோனார் ) பூமி அதிர்வை தானே சீஸ்மோ கிராஃப் படம் படமா  ((ஹைய்யா.. பாயிண்டுக்கு வந்துட்டேனே ))  காட்டுறாங்க ... அப்போ  அதிர்வு இல்லாம  இருக்கும் இடமே இல்லையே...  (( வெற்றீடத்தில வச்சா  காத்து இல்லாம பாம்பே  செத்துப்போயிடுமே )) இதனால சொல்ல வருவது பாம்புக்கு  காது கேட்குமா  ??? கேட்காதா????

கால்ல ஆணிங்கிறாங்களே  அப்படின்னா  என்னது??????

     மூனாவது  சந்தேகம் (( மூனும் தனி தனி பதிவா போட்டு  அப்புரம் நீங்க ஒரு பாம்போட என்னை தேடி வந்துட்டா )) இந்த பாம்பாட்டிகளும்  இன்னபிற ஆட்களும் ஏன் நல்ல பாம்பை மட்டும் பிடிச்சிகிட்டு வந்து  மகுடி ஊதுறாங்க ....மத்த பாம்பை  பிடிச்சுகிட்டு வந்து  ஊத வேண்டியதுதானே... ஊதிகிட்டே  இருக்க வேண்டியது தானே....  அதுப்போல கீரிப்பிள்ள கூட  சண்டை போட கூட இவங்களுக்கு ஒரு நல்ல பாம்புதானா கேட்குது . மத்த பாம்புகளுக்கு ஒரு தவளை கூட கிடைக்காத பட்சத்துல  இதுக்கு மட்டும் முட்டையும் பாலும் குடுத்து ஏன் அழகுபாக்குறாங்க (வருமானம் வருதுங்கிறதுக்கா)
     பாம்புகள் பொதுவா மரம் ஏறி மற்ற பறவை இனங்கள் கட்டி இருக்கிற கூட்டில உள்ள முட்டைகளை  சாப்பிடுவதா ஒரு அபிப்பிராயம் இருக்கு. அதுவே ஏகப்பட்ட முட்டை போடுதே...!! அப்போ அந்த முட்டைகளை மட்டும் ஏன் அது சாப்பிடுவதில்லை...அந்த நேரம் எதுவும் விரதமா..??  இல்லை நாள் நட்சத்திரம் சரியில்லையா..?
   
எனக்கு தயாரிக்கிறத மனுஷ பயலே நீங்க ஏண்டா குடிக்கிறீங்க...????  :-))

    அமெரிக்கால மட்டும் வருஷத்துக்கு  8 ஆயிரம் பேர் பாம்புக்கடியால  சாகிறாங்க ..மொத்த  உலகத்துல  சுமார்  ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் சாகிறாங்க ..ஒரு புள்ளி விவரம் சொல்றாங்க ..ஆனா சீனாக்காரங்க  எத்தனை பாம்பை வருஷத்துக்கு  சாப்பிட்டு தீர்க்கிறாங்கன்னு  எந்த புள்ளி விவரமும் இல்ல ..நான் வளார்கிறேனே  ம்ம்மி......அப்படித்தான் போய்கிட்டு இருக்கு .. எப்பவாவது  பாம்பை  பார்த்தா  சைனான்னு  சொல்லிப்பாருங்க ...வந்த வேகத்தை விட 12 மடங்கு வேகத்துல  எஸ்கேப்பாயிடும்  J)