Monday, May 31, 2010

இந்த நிலை வரும் முன்னே

113 என்ன சொல்றாங்ன்னா ...

         முன்னல்லாம் நான் நிறைய பிளாக் படிக்கிரது வழக்கம். இப்பவும் அந்த பழக்கம் அதிகமாவே இருக்கு. ஆனா கொஞ்சநாளா நான் ஃபேவரைட் எடுத்து வச்ச  பக்கத்தை திறந்தா அந்த பக்கம் கண்டறியப்படவில்லைன்னு ஒரே எர்ரர் மெசேஜா வருது..
        அதுல சில பேரோட மெயில அட்ரஸ் என்னிடம்  இருந்ததால அவங்களை கேக்கும் போது என்னன்னு தெரியல திறக்க மாட்டேங்குதுன்னு பதில வருது .
       ஒரு வேளை எதுவும் ஆட்வேர் பிராப்ளமான்னு கூகிள் கிட்டயும் கேட்டு பாத்ததுக்கு சரியான பதில இல்லை . அப்ப இத்தனை நாள் மாங்கு மாங்குன்னு எழுதியதுக்கு என்ன அர்த்தம். நானாவது சும்மா மொக்கையா எழுதி வரேன் . ஏதோ என்னால முடிஞ்சது
       ஆனா நிறை பேர் தன்னோட > கதை ,  கவிதை ,  சமையல் , போட்டோக்கள் இப்படி திரும்பி கிடைக்காத பல நல்ல விசயங்கள் எழுதி வருபவங்களின் கதி என்ன ஆவது . ஒரு சில தவறான பிண்ணூட்டத்தால் மூக்கால் அழும் ஆட்களும் இருக்கும் போது மொத்த பிளாக்கும் கானாமல் போனால் என்ன செய்வாங்களோ தெரியல.
      இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் ஐயா , அம்மா ,அக்கா, தங்கச்சி , தம்பி , அண்ணாக்களே !! உடனே உங்க பிளாக்கு , மற்றும் டெம்லேட்டுகளை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . அது தவிர ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் அல்லது முடிவிலும் பேக்கப் எடுப்பதை மறக்க வேண்டாம் . புதியது எடுத்ததும் பழையதை டெலிட் செய்துடுங்க. அப்படி தேவை பட்டால் இரண்டு எடுத்து வையுங்க

  டெம்லேட்டில் புதியதாக எதுவும் சேர்தால் மட்டும் அதை மீண்டும் பேக்கப் எடுக்கவும் . அப்படி இல்லாவிட்டால் ஒன்னு மட்டும் போதுமானது. எடுக்க தெரிந்தவர்க்கு ஓக்கே தெரியாதவர்க்கு மேலே படிங்க

உங்களுடைய டேஷ்போர்டில செட்டிங்க்ஸ் கிளிக் பண்ணினா வரும் முதல் பக்கத்தில் முதல் வரியில் இம்போர்ட் பிளாக் --எக்ஸ்போர்ட் பிளாக் டெலிட் பிளாக் இப்படி மூனு ஆப்ஷன் இருக்கும் . இதில் நமக்கு வேண்டியது இரண்டாவதா இருக்கும் எக்ஸ்போர்ட் பிளாக் மட்டுமே.
  அதை கிளிக் பண்ணினா வரும் பக்கத்தில் டவுன்லோட் பிளாக் என்கிற பட்டனை கிளிக்கி எங்கே சேவ் பண்ணுமோ அங்கே பத்திரமா சேவ் பண்ணி வையுங்க. ஒரு வேளை உங்க பிளாக்  கானாம போனால் மீண்டும் அதே டேஷ் போர்ட் > செட்டிங்ஸ் > இப்ப இம்போர்ட் பிளாக் கிளிக் பண்ணீனா வரும் பக்கத்தில நீங்க உங்க ஃபைல எங்க பத்திரமா வச்சிங்களோ அந்த இடத்தை பிரவுஸ் பண்ணி அதன் கிழே உள்ள வார்த்தயை டைப்பி  இம்போர்ட் பட்டனை கிளிக்கினால் உங்க பழைய பதிவு அப்படியே கிடைக்கும்.

அப்புறம் டெம்லேட்டுக்கு  டேஷ்போர்ட் > லேஅவுட் > எடிட் ஹெச் டி எம் எல் கிளிக் அதில் . Expand Widget Templates ல் உள்ள பெட்டியை டிக் பண்ணி கீழே உள்ள பெட்டியில உள்ள எல்லாத்தையும் செலக்ட் செய்து ரைட் கிளிக் காப்பி பண்ணி ஒரு நோட் பேடில் பேஸ்ட் செய்யுங்க. இதுக்கு ஒரு பேர் குடுத்து பத்திரமா வையுங்க.

எப்பவாவது உங்க பிளாக் டெலிட் ஆனா புதுசா ஒரு பிளாக் தொடங்கி அதில மீண்டும் இது போல டேஷ்போர்ட் > லேஅவுட் > எடிட் ஹெச் டி எம் எல் கிளிக் அதில் . Expand Widget Templates ல் உள்ள பெட்டியை டிக் பண்ணி கீழே உள்ள பெட்டியில உள்ள எல்லாத்தையும் செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து டெலிட் பண்ணுங்க , உங்க நோட் பேடில உள்ளதை காப்பி பண்ணி இங்க பேஸ்ட் பண்ணி பிளாக சேவ் பண்ணிணால் பழைய டெம்ப்லேட் மற்றும் அனைத்து பழைய சங்கதிகளும் மின்னும்.

நான் ஆரம்பத்தில சொன்னவங்ககிட்ட கேட்டேன் இது மாதிரி எதுவும் இருக்கான்னு இல்லைன்னு பதில் வந்துச்சி. என்னத்த சொல்ல .நாளை உங்களுக்கும் இது போல ஆகும் முன்னால் >>>>  
கண்ணதாசா என்ன மன்னிச்சிடுப்பா!!


பிளாக்கே மாயம் இந்த பிளாக்கே மாயம்
வெப்பின் மீது காணும் யாவும், கூகிளில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
கூகிலேடு யார் போட்டி போடுவது ? அப்படி நாம் போடும் போது,
யாரோடு யார் நாம் கேட்பது?
(பிளாக்கே)


யாரார்க்கு என்ன தலைப்போ ? இங்கே
யாரார்க்கு எந்த டெம்ப்லேட்டோ?
பிளாக் இருக்கும் வரைக் கூட்டம் வரும்,
பிளாக் நின்றால் ஓட்டம் விடும்!
நெட்டால வந்தது வைரஸால வெந்தது!
நெட்டால வந்தது வைரஸால வெந்தது!
இது பிஸி என்று கம்ப்யூட்டரை யார் சொன்னது?
(பிளாக்கே)


மொக்கை போட்டாலும் ஓட்டு போடுவார் ,  இங்கே
அப்படி இல்லாட்டாலும்  கருத்து  போடுவார்
பிளாக் உண்டாவது உண்ணாலதான்!
பேர் கெட்டு போவதும்  உண்ணாலதான்!
லிங்க் கோடு வந்தது, பிளிங்காகி  போனது!
லிங்க் கோடு வந்தது, பிளிங்காகி  போனது!
இது பிஸி என்று கம்ப்யூட்டரை யார் சொன்னது?
(பிளாக்கே)


டிஸ்கி::: இந்த பதிவு பிளாக் ஆரம்பிக்காமல் வெறும் பிண்ணூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு இது பொருந்தாது.  

Tuesday, May 25, 2010

வீட்டிலேயே பழரசம் செய்வது எப்படி !!

112 என்ன சொல்றாங்ன்னா ...

         ஜெய்லானி டீவியில் இன்று வீட்டிலேயே பழ ரசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம். நாம இந்த கோடை காலத்துல வெயிலால  ரொம்பவே எரிச்சல் படறோம். அதுக்கு அக்காமாலா , கப்ஸின்னு அதிகம் செலவு பண்ணி கடைகடையா ஏறி இறங்கி குடிச்சி உடம்பை கெடுத்துக்காம அருமையா வீட்டிலேயே எழுமிச்சை பழரசம் செய்வது எப்படின்னு இன்னைக்கி பாக்க போரோம்.

        இந்த பழரசத்தில இரண்டு வகை இருக்கு. ஒன்னு சாதாரன தண்ணிலயும் மற்றும் பச்சை தண்ணிலயும் ( ஐஸ் வாட்டருங்கோ ) செய்யறது .

முதல்ல உங்களுக்கு தேவையானது :

எழுமிச்சை அல்லது லெமன்     தேவையான அளவு
சர்க்கரை (எ) சீனி அல்லது சுகர்- தேவையான அளவு
உப்பு  அல்லது சால்ட்  - உங்க குடிக்கிற திறமைய பொருத்து
ஏலக்காய் விதைகள்--- 40 சரியா எண்ணிப் பாருங்க
பன்ணீர் (ரோஸ் வாட்டர் )--10 சொட்டுக்கள் எண்ணி ஊத்துங்க
முக்கியமா வெட்ட கத்தி வேணும்.
கண்டிப்பா கலக்க தண்ணி வேணும் மறந்துராதீங்க
பாதுகாப்புக்கு கையுரை -1 செட் ,
டிஞ்சர் அயோடின் சின்ன பாட்டில் போதும்
ரெடிமேட் பிளாஸ்திரி உங்க வெட்டும் திறமைய பொருத்து

செயல் முறை விளக்கம்:

       இதை செய்ய நீங்க கிச்சனுக்குள்ள போக அவசியமில்லை. ஆனா பாருங்க கத்தியோ இல்ல மத்த சாமானை எடுக்க கிச்சனுக்குள்ள போய்தான் தீரணும். அதனால உஷாரா எல்லாத்தையும்  முதல்ல ரெடியாக்கி வையுங்க .எழுமிச்சை பழத்த வெட்ட தனிதிறமை வேணும் . வழுக்காம அடுத்த வங்க மேல தெரிச்சு கண் கலங்காம வெட்டுறத்துக்கு

          கத்தி நல்ல கூர்மையா இருக்கனும் தேவைப்பட்டா இஷ்ட தெய்வத்தை வேண்டிகிட்டு நல்லா கூர்தீட்டிக்குங்க. அந்த கேப்புல அடுப்புல கொஞ்சம் சுடுதண்ணி  வையுங்க .அது வைக்க தெரியாதவங்க இங்கு பாருங்க புரியும். இப்ப அந்த சுடுதண்ணியில பழத்தை 2 நிமிஷம் போட்டு எடுத்தா பழம் அறுக்கும் போது அழாது , ஓடாது , வழுக்காது. பின்ன அதுல நிறைய சாறும் வரும் . பழத்தை இடது கை கட்டைவிரல் மற்றும் ஆள் காட்டி விரலால் மெதுவா பிடிச்சிகிட்டு இப்ப வலது கையில் கத்தியால் மெதுவா அறுக்கவும் வரும் சாறை மட்டும் பாத்திரத்தில் ஊத்துங்க ( மக்கள் கேட்டுக்கொண்டால் மீதி வரும் சக்கையில  எலுமிச்சை ஊருகாய் செய்வது எப்படின்னு அடுத்த பதிவில் போடப்படும் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொல்கிறோம் ) தேவைக்கு தகுந்தளவு தண்ணிய சேருங்க.( டாஸ்மாக் தண்ணியான்னு கேக்கப்பிடாது.)

        இதில குடிக்கப்போறவங்க வெளியிலிருந்து வெய்யிலால கஷ்டப்பட்டு வந்தா அவங்களுக்கு அதில உப்பை போட்டு சாதா தண்ணியில குடுங்க. நீங்க வீட்டுக்குள்ளவே இருந்தா அதில சீனிப்போட்டு ஜில்தண்ணியில குடிங்க. வாசனை தேவை படறவங்க . அதுல ஏலகாய் விதைய போட்டும் இல்லாட்டி பண்ணீர் ஊத்தியும் குடிக்கலாம்.

        இதில சைட் எஃபக்ட் எதுவும் இல்லை ஏன்னா நாம ஆயுர்வேதிக் முறையில இதை வெற்றிகரமா செஞ்சிருக்கோம் இல்லயா ?. இதை குடிச்சி பாத்துட்டு ஜெய்லானி டீவிக்கு எப்படின்னு தகவல் தரலாம். இதுவரை ஜெய்லானி டீவியுடன் இனைந்திருத்ததுக்கு மிகவும் நன்றி வணக்கம்.

டிஸ்கி : நமது கதை அரசி வாணி அவர்கள் என் வீரத்தை உசுப்பேத்தி விட்டதால் ( நமக்கு ஏதுங்க வீரம் ) வந்தது. இது ஒரு உடனடிப்பதிவு .நாம யாரு. அந்த நரிக்கே ஊளையிட கத்துக்குடுக்கிற ஆளாச்சே!!

Sunday, May 23, 2010

வா , அழகே வா

124 என்ன சொல்றாங்ன்னா ...

        என் இனிய தமிழ் மக்களே , இத்தனை நாளும் பல்வேறு விதமான தலைப்புக்களில் வித வித மான மொக்கை போட்டும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல நல்லா இல்லாட்டியும் ஆஹா..ஓஹோ.. என்று பாராட்டி கருத்திட்ட போதும்  நடு நடுவே விருதும் கொடுத்து பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு கோடி நன்றி .

     இந்த வரிசையில் இப்போது நமது சைவ கொத்துப் பரோட்டா அவர்கள் இந்த அழகு தேவதை (ஏஞ்சல் ) விருதை  போகிற போக்கில (ஊருக்கு போகிற அவசரத்தில ) கொடுத்து இருக்கிறார் .அவருக்கு என் நன்றி இதை நான் மட்டும் வைத்து அழகு பார்பது சரியில்லை. அதனால் கீழே உள்ளவர்கள் எடுத்து அவர்கள் வீட்டு வாசலில் வைத்து அழகு பார்க்கவும்.

       சிலருடைய பிளாக் திறக்க வில்லை, என்னை ஃபாலே செய்வர்களின் முகவரியும் சரியாக கிடைக்க வில்லை .அதனால் இதில் விடுப்பட்டாவர்கள் பொருத்துக் கொள்ளவும் . ஒரு சிலர் பிளாக் தலைப்பை மாற்றியதாலும் சிறு குழப்பம்.

   இந்த தடவை வைர விருது கிடைக்காதவர்க்கு முண்ணுரிமை .இது வரை வைர விருது  கிடைத்தும் பார்காதவர்கள் இங்கு பார்க்கவும்

ரெடி.......ஸ்டார்ட்.................மியூசிக் .


எனது எண்ணங்களின் உருவம்" , "குப்பைத்தொட்டி" , "விழியும் செவியும்" , எழுத்தோசை , cute-paruppu.blogspot.com , Manathodu mattum Mubeen Sadhika , Riyas's - , Scribblings , Vanathy's ,Vacant & Pensive அநன்யாவின் எண்ண அலைகள் , அவிய்ங்க - , இதயத்திலிருந்து , இதயம் பேசுகிறது , இது இமாவின் உலகம் , எங்கே செல்லும் இந்த பாதை ..... , எனது இரண்டு சதங்கள் , என் இனிய தமிழ் மக்களே... , என் எண்ணங்கள் , என் கனவில் தென்பட்டதுஎன் சமையல் அறையில் - , என் டயரி , என் பக்கம் , கண்ணா , கிறுக்கல்கள் - , குடந்தையூர் , கொத்து பரோட்டா , கோகுலத்தில் சூரியன் , சமையலும் கைப்பழக்கம் , சி@பாலாசி , சும்மா , சூர்யா ௧ண்ணன் , சொர்ணம் ...  , ச்சின்னப் பையன் பார்வையில் , ஜில்தண்ணி , தனியாவர்த்தனம் , பலா பட்டறை - , பலாச்சுளை , பாகீரதி , பாடினியார் , பிரபாகரனின் தத்துபித்துவங்கள்... , பிரிவையும் நேசிப்பவள்..பிற மொழிப்படங்கள்... தமிழில்... , பொன் மாலை பொழுது , ப்ரியா கதிரவன் , மயில் , மழை , முத்துச்சிதறல் , யாவரும் நலம் , யூர்கன் க்ருகியர் , வி..ம..ர்..ச..ன..ம்....... , ஹர்ஷினிக்காக (HARSHINI) , அம்முவின் சமையல் , Warrior , ப்ரியமுடன்......வசந்த் , வெட்டி வேலை , eniniyaillam , இரவல் இதயம்.(வாடகை வலி ) ,  சிகப்பு வானம்

            நண்பர்கள் குற்றம் குறை இருந்தால் தயங்காமல் தெரிவித்தால் என்னை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும் ( அதுக்காக உங்களை ஒரு வழி பண்ணாம நெட்டை விட்டு ஓடிட மாட்டேன் )

Saturday, May 22, 2010

ஏன்...இந்த தண்டனை..

9 என்ன சொல்றாங்ன்னா ...

           அதிகாலையில் நெட்-ஐ திறந்த்தும் இடிபோல செய்தி துபாயிலிருந்து  மங்களூர் போன விமானம் தரை இறங்கிய நேரத்தில் வானிலை காரனமாக ஏழு கிலோ மீட்டர் வரை இழுத்துப் போய் மலையில் மோதியது , அதில் பயணம் செய்த 158 பேர் பலி.

           வாழ்க்கையில் மனிதன் தன் சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு பிரிந்து ,  வாழ்கையில் கிடைக்கும் ஓரிரு மாத விடுமுறையில் போகிறான் .பிரிவின் வலி பிரிந்தவருக்கே புரியும் . விடுமுறைக்கு அப்ளை பண்னிய நாளிலிருந்து சந்தோஷம் கொடிக்கட்டி பறக்கும் . விரும்பியவருக்கு  விரும்பியதை வாங்கிதர  அலையும் அலைச்சலும் சுகமாய் இருக்கும்
          வரும் நம்மை விட ஊரில் உள்ள பெற்றவர்களும் மனைவியும் குழந்தைகளும் நாம் ஊர் வரும் நாட்களை எண்ணிக்கொண்டு  நேரம் போகாதா என நாள் காட்டியையும் மணியையும் பார்த்து உறக்கம் வராத நாடகள் எத்தனை.

        மொபைல் போன் கலாச்சாரமாக மாறியதால்  ஏர் போர்ட் போவதிலிருந்து  விமானம் கிளம்பும் நேரம் வரை பேசிய பேச்சுக்கள எத்தனை எத்தனை..... தனிமையில் வருடங்கள் சில போனாலும் சில மனிநேர பயணம் தவிப்பாய் அல்லவா போகிறது.
         
        இதோ அன்பான செய்தி இன்னும் சில மணித்துளியில் நாம தரை இறங்கப்போகிறோம் .இதயம் கட்டுக்கடங்காமல் துடிக்கிறது . நம் உறவுகள் யார் வெளியே காத்திருப்பார்கள் , அன்பான துனைவியா , நம் குழந்தைகளா ,  ஊட்டி வளர்த்த தாய் தந்தையா , நட்பு வட்டமா..

        ஏன் எதற்கு என்ற விடை தெரியும் முன் மரணம். வெளியே ஆசையோடு காத்திருந்தவர்களுக்கு இடிச்செய்தி வருடம் முழுதும் காத்திருந்தவர்களுக்கு

            இனி வாழ்க்கை முழுதும் காத்திருப்பா ?? யாரை குறை சொல்வது. நினைக்கவே மனம் வலிக்கிறது . கண்ணீர் பெருகுகிறது . ஏதோ ஒரு இடத்தில் இந்த செய்தி இருந்தும் நம் மனம் ஏன் விம்முகிறது. மனிதம் இன்னும் சாகவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு இதய அஞ்சலி

“இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் “ (இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே திரும்ப வருபவர்களாக இருக்கிறோம் ) 



Wednesday, May 19, 2010

வாழ்க்கை படிப்பு மற்றும் ஏட்டு கல்வி

86 என்ன சொல்றாங்ன்னா ...

          பொதுவா படிக்கிற காலத்தில நீ பெரியாளா ஆனா என்ன ஆவ ? கலெக்டர் , டாக்டர் , எஞ்ஜினியர் ஆவேன் . இப்படி சொல்லியே பிள்ளைகளை வளர்ப்பது . இல்லாட்டி என் அப்பா வக்கீலா ஆக வேண்டியவரு ஏதோ போதாத காலம் அவரால ஆக முடியல . என்னை படிக்க வைக்க காசு பத்தல .அதனால நீ ஒரு வக்கிலாதான் வரனும். இப்படி மாணவனுக்கு ரெண்டே சாய்ஸ் மட்டுமே கிடைக்கிறது . அவனுடைய எண்ணம் என்னதுன்னு யாருமே கேக்குறது இல்ல

           இதுக்கு என்ன காரணம்ன்னு பாத்தா என் கஷ்டம் என்னோடு போகட்டும் நீயாவது நல்லா படிச்சு முன்னுக்கு வா!!. இது எல்லா தாய் தந்தைகளும் நினைக்கிறது . அப்படி நெனைக்கிறது தப்பு இல்ல இதுக்காக எப்ப ஒரு மனுஷன் வீட்டை வித்து , சொத்தை வித்து பணம் புரட்ட ஆரம்பிச்சானோ அன்னைக்கே எல் கே ஜி ஃபீஸ் டொனேசன் அஞ்சாயிரம் ஆச்சி. யூ கே ஜி ஃபீஸ் எட்டாயிரம் ஆச்சி. இப்படியே போய் இப்ப ஒரு காலேஜிக்கு லட்சத்துல போய்க்கிட்டிருக்கு.. 

      சரி படிச்சு முடிச்சு பிறகாவது வேலை கிடைக்குதான்னு பாத்தா பெரிய பட்டைதான் கிடைக்குது. வேலை ஒரு சிலருக்குதான் கிடைக்குது , எம்ப்பிளாய் மெண்ட் ஆபிஸ் போனா உங்க வாழ்க்கையே வெறுக்கும் அங்க இருக்கிற பியூன் உங்களை எட்டுகால் பூச்சியை பாக்குற மாதிரி பாப்பான் . அவன் அனுபவத்துக்கு எத்தனை பேரை பாத்திருப்பான்.

      போன வருஷம் மும்பையில  ரயில்ல மூட்டை தூக்குற ( லக்கேஜ் கவுரவமான பேரு ) போர்டர் வேலைக்கு ஆயிரத்தி ஐந்நூரு பேருக்கு எட்டாயிரம் பேர் விண்னப்பித்திருந்தார்கள். இதுல எண்பத்தி ஐந்து சதவீதம் எல்லாருமே டிகிரி ஹோல்டர் . இதை படிக்கும் போதே மனசு வலித்தது . இதுக்கு முக்கிய காரணம் வேலை வாய்ப்பு குறைவு கிடைத்ததை பார்க்கலாம் அதுவரை ஒரு வேலை வேனுங்கிற தேவை . வீட்ல அடுப்பு எரிக்கனுமே.

        பொதுவா ஒசியில கிடைக்கிற மாங்காய்க்கு ருசி அதிகம் , அது மாதிரியே கொஞ்சம் வேலை நிறைய சம்பளம் . எல்லாருக்குமே ஒயிட் காலர் ஜாப் கிடைக்கிறது இல்ல . இருந்தும் அதுக்கு பின்ன நாலு கால் பாய்ச்சல் ஏன் இப்படி . கிடைத்தவர்க்கு ஆயிரத்தெட்டு வியாதி காலையில ஓட்டம் , வாக்கிங் , மாத்திரை மருந்து . முடி முதல் நகம் வரை நாலாயிரம் கவுன்ஸ்லிங் , ஸ்பெஷலிஸ்ட் . ஒரு தும்மல் போட்டா முப்பது டெஸ்ட் , இருமினா , தனி அறையில் இரண்டு நாள் தங்கனும் .

       பையனுக்கோ இல்லை பொண்ணுக்கோ படிக்கிற வயசில அவங்கள நாம கேக்கனும் . உனக்கு எதுல ஆர்வம் இருக்கு அதை எடுத்து படி . பாலிடெக்னிக்ல அக்ரிகல்ச்சர் எடுத்தா உங்களுக்கு மத்த டிப்பாட்மெண்ட் மாணவர்களின் நட்பே கிடைக்காது அப்படி ஒரு கேவலம் நடக்கும் . ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி தலைய குனிஞ்ஜிகிட்டே போவாங்க.. படிக்கும் போதே படிப்புக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் ஒரு கைத்தொழிலை கத்து வச்சிக்கிட்டா ரொம்பவும் நல்லது.

      படித்தும் வேலைகிடைக்காட்டி அந்த கைத்தொழில் ஒன்னே போதும் உங்களை வாழ வைக்க. எப்ப உடல் உழைப்ப நம்ப , செய்ய ஆரம்பிக்கிறீங்களோ அப்பவே உடலுக்கும் , மனசுக்கும் ஆரோக்கியம் தானாகவே வந்து விடுகிறது . அதிகாலை கிளம்பும் உழைப்பாளிக்கு படுத்தால் தூக்கம் உடனே வருகிறது. பத்தாயிரம் குடுத்து கர்ல்-ஆன் பெட்டில வராத தூக்கம் கட்டாந்தரையில் அருமையாக வருகிறது .

        கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு . பரிட்சையில் அதிக மார்க் வாங்குவது பெரிய விசயமில்லை வாழ்க்கையில பாஸ் ஆவது பெரிய விசயம் . பெற்றோர்களே!! மாணவ மாணவிகளே!! யோசியுங்கள் திருந்துங்கள்.எதிர்கால வாழ்க்கை உங்க கையில 





Friday, May 14, 2010

இலவசமா ஒரு சினிமா

86 என்ன சொல்றாங்ன்னா ...

          இனையத்தில் ஏராளமான சாஃப்ட்வேர்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் நமக்கு சில ரொம்பவும் பிடிக்கும். ஸைசும் குறைவாகவே இருக்கும். ஆனா அது காசு கொடுத்து வாங்குவதாக இருக்கும். ஃப்ரீவேராக இருக்காது. மனசுக்கு பிடித்ததை வாங்கலாம் தப்பில்லை. எப்படி வாங்குவது ,  க்ரெடிட் கார்டை உபயோகித்தால் ஒரு வேளை அது ஃபேகாக இருந்தால் ஐந்து டாலருக்கு பதில் ஐம்பது டாலராக அழவேண்டி வரலாம்.
சில நேரம் கார்டில் உள்ள மொத்த பணமும் காலி ஆகிவிடும்
        
       பொதுவா ஒரு சாஃப்ட் வேர் நமது கம்ப்யூட்டரில் பதியும் போது அனைத்தும் ஒரு இடத்தில் பதிவதில்லை. ஸ்டார்ட் மெனு, ப்ரோகிராம் ஃபைல் போல்டர், சிஸ்டம் 32ஃபோல்டர், ரெஜிஸ்டிரி ,ஃபான்ஸ் போல்டர் இப்படி பல இடத்தில் பதிகிறது. அதன் சேவை காலம் வரை இருக்கும் .சேவை முடியும் போது. பாஸ்வேர்ட் கேக்கும் , அல்லது சீரியல் கேக்கும்.

       இதை அன் இன்ஸ்டால் செய்தால் ரெஜிஸ்டிரியை தவிர அனைத்தும் டெலிட் ஆகும். மீண்டும் அதே சாஃப்ட் வேரை எத்தனை தடவை இன்ஸ்டால் செய்தாலும் மீண்டும் சீரியல் நெம்பர் கேக்கும். .வாங்க இப்ப ஓசியில மங்களம் பாடுவதை பாக்கலாம்.

        முதலில் CCleaner  என்ற சின்ன ஸைஸ்  சாஃப்ட் வேரை இங்கு டவுன் லேட் செய்யுங்கள். இது நமது கணிணியில் தேவையில்லாத , விடுபட்ட , குப்பை தொட்டியில் உள்ள , ரெஜிஸ்டிரியில் சரியில்லாத , டெம்ப்ரவரி ஃபைல்களை நீக்குகிறது.  முதலிலேயே இதை உபயோகித்து வருபவர்களுக்கு இது தெரியும்.

      பிரச்சனையுள்ள சாஃப்ட்வேரை முறைபடி அன் இன்ஸ்டால் செய்ததும். ஸ்டார்ட் மெனு போய் செர்ச் பாக்ஸில் அந்த சாஃப்ட்வேர் பெயரை கொடுத்து தேடிபாருங்கள். . தொடர்புடைய பெயர் ,ஃபோலடர் கண்ணில் பட்டால் அத்தனையையும் டெலிட் பண்ணுங்க. பிறகு சிகிளினர் ஐ டபுள் கிளிக்கி அதில்  கிளினரில் ரன் கிளினர் பட்டனை தட்டுங்கள். இரண்டு மூன்று முறை தட்டி மேலே பாக்ளில் காலியாகிற வரை பாருங்கள். பிறகு ரெஜிஸ்டிரி பட்டனை கிளிக்கி ஸ்கேன் இஷ்யூ .அதில் வேண்டாத பைல்கள் வரும் அப்படி  வந்ததும் ஃபிக்ஸ் செலக்டட் இஷ்யூ பட்டனை கிளிக்கி எல்லாத்தையும் டெலிட் பண்ணுங்க. இதையும் பாக்ஸ் காலியாகும் வரை பண்ணுங்க.


        பொதுவா எந்த புரோகிராமும் ஓடாத நேரத்துல சிகிளினரை யூஸ் பண்ணீணா உடனே பலன் அதிகம் கிடைக்கும். இல்லாட்டி அந்த சாஃப்ட்வேர் உபயோகத்தில் உள்ளதுன்னு எர்ரர் மெசேஜ் வரும். கம்ப்பூட்டரை ஒரு தடவை ரீஸ்டார்ட் பண்ணிட்டு பிறகு ஒரு தடவை சிகிளினரை யூஸ் பண்ணா அந்த பிரசனை சாஃப்ட் வேர் முற்றிலும் உங்க கம்யூட்டரில் இருக்காது.

       திரும்ப புதுசா அந்த சாஃப்ட் வேரை ரீஇன்ஸ்டால் பண்ணி யுஸ் பண்ணுங்க. எப்ப சீரியல் கேக்குதோ அப்ப திரும்பவும் மேலே உள்ள மாதிரி செய்யுங்க.  இது ஒரு  ஈஸியான முறை

        ”திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது

    இதுக்கும் அந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


Monday, May 10, 2010

அம்மாக்கள் !! தினம் !!! யார் கண்டு பிடிச்சது ?

67 என்ன சொல்றாங்ன்னா ...

         நேற்று அன்னையர் தினம் .எல்லா பதிவுலகிலும், ரேடியோ டிவி மற்றும் பொது ஊடகங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

          கவிதை வாயிலாகவும் , கட்டுரை மற்றும் பாடல்கள் மூலம் நினைவு கொள்ளப்பட்டது.சந்தோஷமான விஷயம்தான் ஆனாலும் உலகில்  தாயாக முடியாத எத்தனையோ வாழ்ந்தும் , வாழ்ந்துக் கொண்டிருக்கும் நல்ல  உள்ளங்களுக்காக இந்த தினம் இந்தப் பதிவு.


இது யார் மனசசையும் புண்படுத்த இல்லை. அவங்களுக்காக ஒரு தினம் 365 நாட்களில் ஏன் இல்லை


Friday, May 7, 2010

நீலத்திரை பிரச்சனைகள்

65 என்ன சொல்றாங்ன்னா ...

           நமது மக்களுக்காக கணிணி சம்பந்தமா இன்னொரு பதிவு. இது தெரிஞ்சி வச்சுகிறதுக்கும் ,  சில நேரங்களில் உபயோகப்படும் . சில புதிய ஹார்ட் வேர் அல்லது சாப்ட் வேர் இன்ஸ்டால் பண்ணிய பிறகு நீல நிறப்பின்னனி  வந்து நின்று விடும்.
            இது கம்ப்யூட்டர் சில சமயம் ஒன்னுக்கு மேலேயே இன்னொன்னை எழுதி விடுவதும் ஒரு காரணம் மற்றும் பேட் செக்டாரும் ஒரு காரணம். என்னதான் நாம தலைகீழா நின்னாலும் நீலத்திரையை காட்டி அடம் பிடிக்கும். அதுல அதிகம் வரது  

Windows XP could not start because the following file is missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM

Windows XP could not start because the following file is missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

          இந்த ஃபைலை கான வில்லை, ரிப்பேர் தேடிக்கண்டு பிடி .என்று. ஏதோ நாமதான் வேனுமின்னே தொலச்ச மாதிரி. ஒக்கே.... இப்ப தீர்வை பாக்கலாம்

         உங்ககிட்ட இதுக்கு ஒ எஸ் அதாவது ஆப்பரேடிங் சிஸ்டம் விண்டோஸ் சீ டி  இருக்கனும். அப்படி இல்லாட்டி யாருகிட்டயாவது ஆட்டைய போட்டு காப்பி பண்ணி வையுங்க. கேட்டா ஜெய்லானிதான் இப்படி ஆட்டைய போட சொன்னாருன்னு சொல்லிடாதிங்க ( பைரஸின்னு புது பூதம் கிளம்பி இருக்கு )
        அந்த சிடியை சிடிடிரைவில் போட்டு சிஸ்டத்தை ஆன் பண்ணுங்க. சிடியை படிக்கவான்னு கேக்கும் .ஒய்-ன்னுபட்டனை தட்டினா சில பைல்கள் காப்பிஆகி புதுசா விண்டோஸ் வேனுமா இல்லை ரிப்பேரான்னு கேக்கும் அப்ப ஆர்-ன்னு தட்டினா ரிப்பேர் கன்சோல் வரும்.. அதில்  CLS-ன்னு தட்டினா திரை பளிசின்னு ஒரு வரியில வந்து நிக்கும் அப்ப கீழே உள்ளது மாதிரி தட்டி ஒவ்வொரு வரிக்கும் ENTER தட்டுங்க.

·  md tmp
copy c:\windows\system32\config\system c:\windows\tmp\system.bak
copy c:\windows\system32\config\software c:\windows\tmp\software.bak
copy c:\windows\system32\config\sam c:\windows\tmp\sam.bak
copy c:\windows\system32\config\security c:\windows\tmp\security.bak
copy c:\windows\system32\config\default c:\windows\tmp\default.bak

delete c:\windows\system32\config\system
delete c:\windows\system32\config\software
delete c:\windows\system32\config\sam
delete c:\windows\system32\config\security
delete c:\windows\system32\config\default

copy c:\windows\repair\system c:\windows\system32\config\system
copy c:\windows\repair\software c:\windows\system32\config\software
copy c:\windows\repair\sam c:\windows\system32\config\sam
copy c:\windows\repair\security c:\windows\system32\config\security
copy c:\windows\repair\default c:\windows\system32\config\default

          இது நாம புதுசா ஒரு டெம்ப்ரவரியா ஒரு போல்டர் உருவாக்கி அதுல சீடியில இருந்து நாலு ஃபைல காப்பி பண்ணிட்டு பழைய கெட்டு போன நம்ம ஃபைல டெலிட் பண்ணுவது இது. கடைசியா exit-ன்னு தட்டினா . இப்ப நம்ம கம்ப்யூட்டர் தானே ரீஸ்ஸ்டார்ட் ஆகி கம்பீரமா வேலை செய்யும் .

         இதுல C ங்கிறது .உங்க டிஃபால்டா இருக்கிற டிரைவ். வேற டிரைவில உங்க ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் இருந்தா அப்ப அந்த டிரைவ் எழுத்தை அதுல போடனும். இந்த மாதிரி பிரச்சனை வந்த பொட்டிய கடையில குடுக்கிரத்துக்கு முன்ன ஒரு முறை நாமே செய்வது நல்லது . எதுக்கு அடுத்தவங்களை கஷ்டப்படுத்தனும். ஹி....ஹி.....





Saturday, May 1, 2010

யூ எஸ பி ரீட் ரைட் ஆகாவிட்டால்

74 என்ன சொல்றாங்ன்னா ...

        இந்த வாரமாவது கும்பகர்ண்ணை மாதிரி தூங்கி ரெண்டு லீவு நாளையும் அழகா அனுபவிக்கலாம்ன்னு பாத்தால்  காலைல அதுவும் விடிகாலை  ஒம்போதரை மணிக்கு போன் அடிக்குது ,

         நம்ம அமீர் பய  மாப்பு எங்கடா இருக்கேன்னு கேட்டான். நா சொன்னேன் அபிதாபின்னு, அவனும் அப்ப அபிதாபியா ? எப்படா வருவ ஜார்ஜாவுக்கு ஏன் ?. நா வர ரெண்டு நாளாவும். அப்ப... சரி உன் ரூமில் தங்கிட்டு.... உன்னை பாக்காம நா போவ் மாட்டேன்னான்.

      இதென்னடா கொடா கண்டனா இருக்கானேன்னு. யோசிட்டு ரூமை விட்டு .வெளியே வந்தேன். அவனை உடனே இடத்தை காலி பண்ண வச்சா முப்பது திர்ஹமோட போகும் .தங்கிட்டா தக்காளி ரெண்டு நாள் என் அக்கவுண்ட் முன்னூறு திர்ஹம் காலி பண்ணாம சனி விடாது . முப்பது பெரிசா முன்னூரு பெரிசா

      விசயம் இதுதான் மாப்பி ஒரு யூஎஸ்பி 64 gbக்கு வாங்கி வந்திருக்கான். புதுசு ஆனா அது ரீட் ரைட் ஆகல . ஃபார் மேட்டும் ஆகல. நீதான் நல்லா ஆணி புடுங்குவியே  கொஞ்சம் பாருன்னான்  நல்லா தான் புரிஞ்சி வச்சிருக்காய்ங்க நம்மல )
 
       அதை என் சிஸ்டமில் போட்டதும் ஜோரா வேலை செஞ்சது. அப்பதான் எனக்கு சந்தேகம் வந்துச்சி  ஒரு வேளை இரண்டு நாளைக்கு தங்க ஐடியாவா ?. ஏண்டா ஏன் நல்லா தானே வேலை செய்யுது. அப்புறம் ஏன் ?

        அவனுடைய லேப்டாப்பை தந்தான் இப்ப இதுல போட்டு பாரு !!. அட ஆமா.ரீட்ரை பட்டனை ரிலீஸ் பண்ணுன்னு மெசேஜ் வந்துச்சி .  கம்ப்யூட்டரை செக் பண்ணியதுல வைரஸ் இல்லை. ஒரு வேளை வந்துட்டு போயிருக்கலாம் . ஒரு சின்ன வேலை செஞ்சதுல . சூப்பரா யூஎஸ்பி ஓடுச்சி .அவனையும் அப்பவே ஓட வச்சேன்.

       விஷயம் இதுதான் மக்களே உஷாரா பாருங்க!! ரெஜிஸ்டிரில ஒரு சின்ன மாற்றம் நாம இப்ப செய்ய போறது. முதல்ல அதை ஒரு பேக்கப் எடுத்து வைப்பது நல்லது. ஏன்னா இது நரம்பு மண்டலம் மாதிரி. ஏதாவது தப்பு நடந்தா மொத்த கம்ப்யூட்டரையும் பாதிக்கும்

       முதல்ல   Start >  Run >  பாக்ஸ்ல regedit ன்னு எழுதி Enter தட்டுங்க . உங்களுக்கு வரும் பார்மில் மேலே File இதில் கிளிக்கி Export  பட்டனை தட்டி பைலுக்கு புது பேர் குடுத்து டெஸ்க் டாப்பில் சேவ் பண்ணுங்க். ஏதாவது எசகு பிசகா மாட்டிகிட்டா இதை டபுள் கிளிக்கி ரீஸ்டோர் பண்ணலாம்.  இதுக்கு ரிஜிஸ்டரி பேக்கப்புன்னு பேரு. இப்ப அசல் மேட்டருக்கு வருவோம்.

     இதில்  My Computer \HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies ன்னு தொடர்ந்து கிளிக்கிகிட்டே வாங்க . இதில எதிர் புறம் இரண்டு வரி இருக்கும் ஒன்னு டிபால்ட் , இது நமக்கு வானாம்  அதுக்கு கீழே ரைட் புரொடக்ட்ன்னு இருக்கும் .இதை இரட்டை கிளிக் பண்ணி அதன் வேல்யூவை 0ன்னு வையிங்க. இப்ப ஓக்கே குடுத்துட்டு வெளியே வந்து  பழைய படி

      இதில My Computer \HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Control\StorageDevice Policies ன்னு தொடர்ந்து கிளிக்கிகிட்டே வாங்க . இதில எதிர் புறம் இரண்டு வரி இருக்கும் ஒன்னு டிபால்ட் , இது நமக்கு வானாம்  அதுக்கு கீழே ரைட் புரொடக்ட்ன்னு இருக்கும் .இதை இரட்டை கிளிக் பண்ணி அதன் வேல்யூவையும் 0ன்னு வையிங்க. இப்ப ஓக்கே குடுத்துட்டு வெளியே வந்து  ரெஜிஸ்டிரி எடிட்டரை மூடுங்க.

        கடைசியா யூஎஸ்பியை  வெளியே எடுத்துட்டு திரும்ப மாட்டுங்க இப்ப ஜோரா வேலை செய்யும். இது செய்ய தெரியாட்டி கம்ப்யூட்டரை ஃபார்மேட் செய்வதை தவிர வேற வழியில்லை. அதனால கவனமா செய்யுங்க.


      நண்பர்கள் யாரும் இதுக்கு முன்னே செய்திருந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கலாம் .

உழைக்கும் வர்கத்தின் தினம்

31 என்ன சொல்றாங்ன்னா ...
                    தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!

                  இன்றைய தினத்தில் அத்தகைய அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்