Wednesday, May 19, 2010

வாழ்க்கை படிப்பு மற்றும் ஏட்டு கல்வி


          பொதுவா படிக்கிற காலத்தில நீ பெரியாளா ஆனா என்ன ஆவ ? கலெக்டர் , டாக்டர் , எஞ்ஜினியர் ஆவேன் . இப்படி சொல்லியே பிள்ளைகளை வளர்ப்பது . இல்லாட்டி என் அப்பா வக்கீலா ஆக வேண்டியவரு ஏதோ போதாத காலம் அவரால ஆக முடியல . என்னை படிக்க வைக்க காசு பத்தல .அதனால நீ ஒரு வக்கிலாதான் வரனும். இப்படி மாணவனுக்கு ரெண்டே சாய்ஸ் மட்டுமே கிடைக்கிறது . அவனுடைய எண்ணம் என்னதுன்னு யாருமே கேக்குறது இல்ல

           இதுக்கு என்ன காரணம்ன்னு பாத்தா என் கஷ்டம் என்னோடு போகட்டும் நீயாவது நல்லா படிச்சு முன்னுக்கு வா!!. இது எல்லா தாய் தந்தைகளும் நினைக்கிறது . அப்படி நெனைக்கிறது தப்பு இல்ல இதுக்காக எப்ப ஒரு மனுஷன் வீட்டை வித்து , சொத்தை வித்து பணம் புரட்ட ஆரம்பிச்சானோ அன்னைக்கே எல் கே ஜி ஃபீஸ் டொனேசன் அஞ்சாயிரம் ஆச்சி. யூ கே ஜி ஃபீஸ் எட்டாயிரம் ஆச்சி. இப்படியே போய் இப்ப ஒரு காலேஜிக்கு லட்சத்துல போய்க்கிட்டிருக்கு.. 

      சரி படிச்சு முடிச்சு பிறகாவது வேலை கிடைக்குதான்னு பாத்தா பெரிய பட்டைதான் கிடைக்குது. வேலை ஒரு சிலருக்குதான் கிடைக்குது , எம்ப்பிளாய் மெண்ட் ஆபிஸ் போனா உங்க வாழ்க்கையே வெறுக்கும் அங்க இருக்கிற பியூன் உங்களை எட்டுகால் பூச்சியை பாக்குற மாதிரி பாப்பான் . அவன் அனுபவத்துக்கு எத்தனை பேரை பாத்திருப்பான்.

      போன வருஷம் மும்பையில  ரயில்ல மூட்டை தூக்குற ( லக்கேஜ் கவுரவமான பேரு ) போர்டர் வேலைக்கு ஆயிரத்தி ஐந்நூரு பேருக்கு எட்டாயிரம் பேர் விண்னப்பித்திருந்தார்கள். இதுல எண்பத்தி ஐந்து சதவீதம் எல்லாருமே டிகிரி ஹோல்டர் . இதை படிக்கும் போதே மனசு வலித்தது . இதுக்கு முக்கிய காரணம் வேலை வாய்ப்பு குறைவு கிடைத்ததை பார்க்கலாம் அதுவரை ஒரு வேலை வேனுங்கிற தேவை . வீட்ல அடுப்பு எரிக்கனுமே.

        பொதுவா ஒசியில கிடைக்கிற மாங்காய்க்கு ருசி அதிகம் , அது மாதிரியே கொஞ்சம் வேலை நிறைய சம்பளம் . எல்லாருக்குமே ஒயிட் காலர் ஜாப் கிடைக்கிறது இல்ல . இருந்தும் அதுக்கு பின்ன நாலு கால் பாய்ச்சல் ஏன் இப்படி . கிடைத்தவர்க்கு ஆயிரத்தெட்டு வியாதி காலையில ஓட்டம் , வாக்கிங் , மாத்திரை மருந்து . முடி முதல் நகம் வரை நாலாயிரம் கவுன்ஸ்லிங் , ஸ்பெஷலிஸ்ட் . ஒரு தும்மல் போட்டா முப்பது டெஸ்ட் , இருமினா , தனி அறையில் இரண்டு நாள் தங்கனும் .

       பையனுக்கோ இல்லை பொண்ணுக்கோ படிக்கிற வயசில அவங்கள நாம கேக்கனும் . உனக்கு எதுல ஆர்வம் இருக்கு அதை எடுத்து படி . பாலிடெக்னிக்ல அக்ரிகல்ச்சர் எடுத்தா உங்களுக்கு மத்த டிப்பாட்மெண்ட் மாணவர்களின் நட்பே கிடைக்காது அப்படி ஒரு கேவலம் நடக்கும் . ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி தலைய குனிஞ்ஜிகிட்டே போவாங்க.. படிக்கும் போதே படிப்புக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் ஒரு கைத்தொழிலை கத்து வச்சிக்கிட்டா ரொம்பவும் நல்லது.

      படித்தும் வேலைகிடைக்காட்டி அந்த கைத்தொழில் ஒன்னே போதும் உங்களை வாழ வைக்க. எப்ப உடல் உழைப்ப நம்ப , செய்ய ஆரம்பிக்கிறீங்களோ அப்பவே உடலுக்கும் , மனசுக்கும் ஆரோக்கியம் தானாகவே வந்து விடுகிறது . அதிகாலை கிளம்பும் உழைப்பாளிக்கு படுத்தால் தூக்கம் உடனே வருகிறது. பத்தாயிரம் குடுத்து கர்ல்-ஆன் பெட்டில வராத தூக்கம் கட்டாந்தரையில் அருமையாக வருகிறது .

        கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு . பரிட்சையில் அதிக மார்க் வாங்குவது பெரிய விசயமில்லை வாழ்க்கையில பாஸ் ஆவது பெரிய விசயம் . பெற்றோர்களே!! மாணவ மாணவிகளே!! யோசியுங்கள் திருந்துங்கள்.எதிர்கால வாழ்க்கை உங்க கையில 

87 என்ன சொல்றாங்ன்னா ...:

மசக்கவுண்டன் said...

இன்றைய இளைஞர்கள் உடல் உழைப்பை விரும்புவதில்லை. அதனால் வருவதுதான் வேலையில்லாத் திண்டாட்டம்.

கோயமுத்தூரில் யாரைக்கேட்டாலும் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற பாட்டுத்தான்.

நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒரு கைத்தொழில் பழகியிருந்தால் எக்காலத்திலும் வேலை இருக்கிறது. எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பென்டர், ஆட்டோ மெக்கானிக், கார் டிரைவர் போன்றோருக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கிறது.

வேலன். said...

கால நேரத்திற்கு ஏற்ற தரமான கட்டுரை....ஒவவொருவரின் திருப்புமுனையும் +2 ரிசல்ட்டுக்கு அப்புறம் நிர்ணயிக்கப்படுகின்றது.கைதொழில் ஒன்றை கற்றுக்கொள்..கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள் என்று சும்மாவா சொன்னார்கள்...வாழ்க வளமுடன்,வேலன்.

Vijiskitchencreations said...

நல்ல பதிவு ஜெய். கரெக்டா சொன்னிங்க. இன்னும் நம் மக்கள் மாறின மாதிரி தெரியவும் இல்லை, மாற்ற முயற்சிக்கிறவங்களையும் உற்சாகபடுத்தாவது செய்யல்லாம் நம்ம சமூகம்.
ம்.. எப்ப மாறுவாங்களோ அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். ஏன் சொல்றேன்னா இங்கு சின்ன வயதிலேயே அந்த குழந்தையில் டேஸ்டை புரிந்து பள்ளியிலும், வீட்டிலும் சரி நல்ல புரிந்து அந்த பாதையில் வழிகாட்டி விடுகிறார்கள்.

ஹேமா said...

வாழ்வில் முன்னேற நல்ல அறிவுரைபோல அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் ஜெய்.இன்றைய வாழ்வுக்கு நிச்சயம் தேவையான விஷயங்கள்.

vanathy said...

ஜெய்லானி, நல்ல பதிவு. என்ன சொன்னாலும் அழுக்குப் படாமல் ஏ.ஸி இல் இருந்து வேலை பார்ப்பதை தான் பெருமையாக நினைகிறார்கள். அமெரிக்காவில் எந்த துறையில் குழந்தை சிறப்பாக செய்கிறதோ அத் துறையில் மேலும் முன்னேற உற்சாகப்படுத்துவார்கள். எங்கள் நாட்டில் யாரும் உற்சாகப்படுத்துவது இல்லை.

அன்புடன் நான் said...

மனம் ஏற்கும் ”தெளிவு”ரை.

நன்றிங்க.

Chitra said...

கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு . பரிட்சையில் அதிக மார்க் வாங்குவது பெரிய விசயமில்லை வாழ்க்கையில பாஸ் ஆவது பெரிய விசயம் .

..... applause! :-)

GEETHA ACHAL said...

// படித்தும் வேலைகிடைக்காட்டி அந்த கைத்தொழில் ஒன்னே போதும் உங்களை வாழ வைக்க. எப்ப உடல் உழைப்ப நம்ப , செய்ய ஆரம்பிக்கிறீங்களோ அப்பவே உடலுக்கும் , மனசுக்கும் ஆரோக்கியம் தானாகவே வந்து விடுகிறது .//உன்மை தான்...கைத்தொழில் ஒன்று கற்று கொள்...கவலை நமக்கு இல்லை என்று ஒத்து கொள் என்று சும்மாவா சொல்லி இருக்காங்க....நல்ல பதிவு...

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை!! நல்ல இடுகை!!

உங்களுக்கு "நன்றி விருது" கொடுத்து உள்ளேன், வந்து பெற்று கொள்ளுங்கள்!!

ஸாதிகா said...

தெளிவுறை,அறிவுரை,நல்லுரை..அழகாக கூறி இருக்கின்றீர்கள் ஜெய்லானி.சிந்திப்போம்!

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌த்தை தெளிவா சொல்லியிருக்கீங்க‌ ஜெய்லானி..

நாஸியா said...

ஹ்ம்ம்ம்.. 100% உண்மை. நல்லா படிச்சும் வேலை கிடைக்காம இருக்குறவங்களைப் பார்த்தா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.

எல் கே said...

@ஜெய்
நல்ல பதிவு. பொறியியல் மருத்துவம்தான் உசத்திங்கற மனப்பான்மை மாறனும்.

பருப்பு (a) Phantom Mohan said...

நெத்தியடி!!! எத்தன பேர் கதறுனாலும் திருந்தமாட்டானுங்க சார்

ஹரீகா said...

professor சார் உங்க இலவச அட்வைஸ் அசத்தல். ஆனா நிறைய பேருக்கு அட்வைஸ் என்றாலே... அதுவும் படிப்பு விஷயத்தில்....

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//இன்றைய இளைஞர்கள் உடல் உழைப்பை விரும்புவதில்லை. அதனால் வருவதுதான் வேலையில்லாத் திண்டாட்டம்.

கோயமுத்தூரில் யாரைக்கேட்டாலும் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற பாட்டுத்தான்.

நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒரு கைத்தொழில் பழகியிருந்தால் எக்காலத்திலும் வேலை இருக்கிறது. எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பென்டர், ஆட்டோ மெக்கானிக், கார் டிரைவர் போன்றோருக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கிறது//

தாத்தாவ் நீங்களே சரியான பதிலை சொல்லிட்டீங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்--//கால நேரத்திற்கு ஏற்ற தரமான கட்டுரை....ஒவவொருவரின் திருப்புமுனையும் +2 ரிசல்ட்டுக்கு அப்புறம் நிர்ணயிக்கப்படுகின்றது. கைதொழில் ஒன்றை கற்றுக்கொள்..கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள் என்று சும்மாவா சொன்னார்கள்...வாழ்க வளமுடன்,வேலன்//

ஆமாங்க படிப்பு ஒரு அளவுக்கோல இல்லை. ஆளை அளக்க ஆனால் வாழ அதுவும் சிறிது வேனும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Vijiskitchen--//நல்ல பதிவு ஜெய். கரெக்டா சொன்னிங்க. இன்னும் நம் மக்கள் மாறின மாதிரி தெரியவும் இல்லை, மாற்ற முயற்சிக்கிற வங்களையும் உற்சாகபடுத்தாவது செய்யல்லாம் நம்ம சமூகம். ம்.. எப்ப மாறுவாங்களோ அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். ஏன் சொல்றேன்னா இங்கு சின்ன வயதிலேயே அந்த குழந்தையில் டேஸ்டை புரிந்து பள்ளியிலும், வீட்டிலும் சரி நல்ல புரிந்து அந்த பாதையில் வழிகாட்டி விடுகிறார்கள்//

வேலை வாய்ப்பு எல்லாருக்கும் கவர்ண்மெண்ட் குடுக்க முடியாது . அதுக்காக வரும் வரை சும்மா இருக்காமல் ஒரு கைத்தொழில் செய்வது நல்லதுதானே.இந்த விசயத்துல இந்தியா ரொம்ப பின்னாடி இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

rajasurian said...

நல்ல பதிவு. நேர்த்தியான எழுத்து

ஜெய்லானி said...

@@@ஹேமா--//வாழ்வில் முன்னேற நல்ல அறிவுரைபோல அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் ஜெய். இன்றைய வாழ்வுக்கு நிச்சயம் தேவையான விஷயங்கள்.//

யாரையும் எதுக்கும் எதிர் பாக்காமல் இருக்க தன் கையே தனக்குதவி இல்லையா குழந்தை நிலா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய்லானி, நல்ல பதிவு. என்ன சொன்னாலும் அழுக்குப் படாமல் ஏ.ஸி இல் இருந்து வேலை பார்ப்பதை தான் பெருமையாக நினைகிறார்கள்.//

இது எல்லாருக்கும் கிடைப்பதில்லையே அதுதானே பிரச்சனை


//அமெரிக்காவில் எந்த துறையில் குழந்தை சிறப்பாக செய்கிறதோ அத் துறையில் மேலும் முன்னேற உற்சாகப்படுத்துவார்கள். எங்கள் நாட்டில் யாரும் உற்சாகப்படுத்துவது இல்லை.//

அதை கேவலமா வேற பாப்பாங்க அதாங்க வேதனை!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சி. கருணாகரசு--//மனம் ஏற்கும் ”தெளிவு”ரை.//

வாங்க சார் ,சந்தோஷம். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

malar said...

நல்ல பதிவு...

ஜெய்லானி said...

@@@Chitra--//
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு . பரிட்சையில் அதிக மார்க் வாங்குவது பெரிய விசயமில்லை வாழ்க்கையில பாஸ் ஆவது பெரிய விசயம் .

..... applause! :-) //

வாங்க டீச்சர் , சந்தோஷம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெயந்தி said...

// பரிட்சையில் அதிக மார்க் வாங்குவது பெரிய விசயமில்லை வாழ்க்கையில பாஸ் ஆவது பெரிய விசயம் . //
:)

ஜெய் said...

ஜெய்லானி, அருமையான பதிவு.. கைத்தொழில் பத்தி நீங்க சொல்லறதை பாராட்டறேன்.. பொறியியல் மருத்துவம்தான் பெரிய படிப்புன்னு நிறைய பேர் நினைக்கறது தப்புதான்..

ஆனா அதே சமயம், // பரிட்சையில் அதிக மார்க் வாங்குவது பெரிய விசயமில்லை// இப்படி நீங்க சொல்லவேணாமே நண்பரே.. படிப்பும் முக்கியம்.. கைத்தொழிலும் முக்கியம்.. எல்லா படிப்புகளும் சமம்..

athira said...

ஆ.. ஜெய்..லானி... அருமையான பதிவு. ஆனால் இன்றைய காலத்துப்பெற்றோரும் ஓரளவுக்கு பிள்ளையின் விருப்பப்படிதான் படிப்பை தொடர விடவேணும்(துறையை) என அதிகம் எண்ணத்தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

எனக்குத் தெரிந்த ஒருவர் கணிதத்தில் புலி, ஆனால் விஞ்ஞானத்திலும் கெட்டிக்காரர்தான் இருப்பினும் மருத்துவத்தில் ஆர்வம் இல்லை. இரத்தம், வெட்டுவது தைப்பதென்றால் பயம், அப்போ அவர் எப்படி வைத்தியத்துறையை விரும்புவார்? ஆனால் பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு விஞ்ஞானப்பிரிவில் சேர்ந்து இரண்டு பிரிவையும் கோட்டை விட்டதாக பின்னாளில் பெற்றோரே சொல்லிக் கவலைப்பட்டதைக் கண்டிருக்கிறேன்.(படிக்கும்போதே சொன்னாராம் தனக்கு மெடிஷின் கிடைத்தாலும் நான் போகமாட்டேன் என).

//கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு // இதனாலேதானே நான் இப்போ கைத்தொழில் கற்று வருகிறேன்... இமாவை வாணியைப் பார்த்து....

பின்குறிப்பு:
நிலவு என்னமாதிரி??? ஓக்கை முறைக்கவாணாம்...

MUTHU said...

நிதர்சனமான உண்மை

SUFFIX said...

கைத்தொழிலி தெரிந்து கொள்வதும் நல்லது தான். நல்ல கருத்து.

Menaga Sathia said...

நல்ல பதிவு!!

Jaleela Kamal said...

//படிக்கும் போதே படிப்புக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் ஒரு கைத்தொழிலை கத்து வச்சிக்கிட்டா ரொம்பவும் நல்லது//

சூப்பரான பதிவு.

எங்க மம்மி அடிக்கடி சொல்வாஙக்.படிப்போடு
கைதொழில் ஏதாவது கத்துக்கனும், யார் கையையும் எதிர் பார்க்கக்கூடாது என்று.
அப்படி பள்ளி விடுமுறைகளில் கற்று கொண்டது தான் , தையல்,டைப்பிங்,ஹிந்தி எல்லாம்/

/போன வருஷம் மும்பையில ரயில்ல மூட்டை தூக்குற ( லக்கேஜ் கவுரவமான பேரு ) போர்டர் வேலைக்கு ஆயிரத்தி ஐந்நூரு பேருக்கு எட்டாயிரம் பேர் விண்னப்பித்திருந்தார்கள். இதுல எண்பத்தி ஐந்து சதவீதம் எல்லாருமே டிகிரி ஹோல்டர் . இதை படிக்கும் போதே மனசு வலித்தது //

மும்பைய சொல்றீங்க துபாயில் யார் படிப்புக்கு ஏற்ற வேலை செய்யுறாங்க,
10 வகுப்பு, மேனேஜர், எம்.பி.ஏ படித்தவர் டாயிலட் கழுவுறாங்க. (கொடுமை) ஏரோடேட்டிக்கல் இஞ்சினியர் வேல கிடைக்காததால் எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை செய்யுரேன் என்கிறாராம். ஊருக்கு திரும்பி போக முடியாது

சுசி said...

நல்ல பதிவு ஜெய்லானி.

Riyas said...

தற்கால உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்..நல்ல பதிவு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கைத்தொழிலும் உடல் உழைப்பும் அவசியத் தேவை.
அருமையான கருத்து.

Anisha Yunus said...

உண்மை பாய். நீங்தான் கைவசம் ஒரு TVயே வெச்சிருக்கீங்ளே..இப்படியெல்லாம் யோசிச்சுதான் அந்த தொழில்ல எறங்குனீங்ளாங் பாய்?

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//உன்மை தான்...கைத்தொழில் ஒன்று கற்று கொள்...கவலை நமக்கு இல்லை என்று ஒத்து கொள் என்று சும்மாவா சொல்லி இருக்காங்க....நல்ல பதிவு...//

ஆனா யாரும் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்வதில்லயே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//அருமை!! நல்ல இடுகை!! உங்களுக்கு "நன்றி விருது" கொடுத்து உள்ளேன், வந்து பெற்று கொள்ளுங்கள்!!//

வாங்க சை கொ ப ,சந்தோஷம் . விருதுக்கு மிக்க நன்றி . இந்த சந்தோஷத்தை சீக்கிரமே பகிர்ந்திடலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//தெளிவுறை,அறிவுரை,நல்லுரை..அழகாக கூறி இருக்கின்றீர்கள் ஜெய்லானி.சிந்திப்போம்!//

வாங்க!! மேடைப் பேச்சாவே சொல்லிட்டீங்க.!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ந‌ல்ல‌ விச‌ய‌த்தை தெளிவா சொல்லியிருக்கீங்க‌ ஜெய்லானி..//

வாங்க ஸ்டீபன் ஸார் ,சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாஸியா--//ஹ்ம்ம்ம்.. 100% உண்மை. நல்லா படிச்சும் வேலை கிடைக்காம இருக்குறவங்களைப் பார்த்தா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.//

வாங்க!! வாங்க!! இதை தலை விதின்னு நினைக்ககூடாது . நாமே தலைக்கு மேல போட்டுகிட்டதாதான் நினைக்கனும் . இதை நினைச்சே இந்த இடுக்கை . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//@ஜெய் நல்ல பதிவு. பொறியியல் மருத்துவம்தான் உசத்திங்கற மனப்பான்மை மாறனும்.//

உண்மைதாங்க !! படிப்புன்னு வரும்போது எல்லாமே ஒன்னுங்கிற மனப்பான்மை வளரனும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பருப்பு The Great--//நெத்தியடி!!! எத்தன பேர் கதறுனாலும் திருந்தமாட்டானுங்க சார்//

அவஸ்தை படறது யாரு ? இல்ல அவஸ்தை படப் போறது யாரு ? ஒரு வேளை உணவிடுவதை விட அவனுக்கு மீன் பிடிக்க கத்துக்குடுன்னு யாரோ ஒரு பெரியவர் சொல்லிட்டு போய் இருக்கிறாரே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹரீகா--//professor சார் உங்க இலவச அட்வைஸ் அசத்தல்.//

வாங்க ஸ்டூடண்ட் !! என்னது இலவச அட்வைஸா. வேனுமின்னா ஒரு ஐந்து டாலர் அனுப்புங்களே .

/ஆனா நிறைய பேருக்கு அட்வைஸ் என்றாலே... அதுவும் படிப்பு விஷயத்தில்....//

மேல பருப்பு க்கு சொன்ன பதில ஒரு தடவை படியுங்க ஸ்டூடண்ட் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@rajasurian--//நல்ல பதிவு. நேர்த்தியான எழுத்து //

வாங்க ராஜசூரியன் சந்தோஷம்!! உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@malar--// நல்ல பதிவு...//

வாங்க மேடம்!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--// பரிட்சையில் அதிக மார்க் வாங்குவது பெரிய விசயமில்லை வாழ்க்கையில பாஸ் ஆவது பெரிய விசயம் .:) //

வாங்க மேடம்!! உங்கள் வருகைக்கும் புன்னகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெய்--//ஜெய்லானி, அருமையான பதிவு.. கைத்தொழில் பத்தி நீங்க சொல்லறதை பாராட்டறேன்.. பொறியியல் மருத்துவம்தான் பெரிய படிப்புன்னு நிறைய பேர் நினைக்கறது தப்புதான்..//

ஓக்கே!!

//ஆனா அதே சமயம், // பரிட்சையில் அதிக மார்க் வாங்குவது பெரிய விசயமில்லை// இப்படி நீங்க சொல்லவேணாமே நண்பரே.. படிப்பும் முக்கியம்.. கைத்தொழிலும் முக்கியம்.. எல்லா படிப்புகளும் சமம்..//

நான் நினைத்த அல்லது எழுதிய அர்த்தம் ஒருவேளை தப்போ!!. நானும் இரண்டுமே வேனும்ன்னுதாங்க சொல்றேன் பொதுவா உள்ளூர் விசயத்தை மட்டுமே பதிவுல எழுதியிருக்கிறேன் . வளைக்குடா நாடுகளில் நம் ஆடகளின் நிலையை எழுதினால் குறைந்தது பத்து பதிவு வேனும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஆ.. ஜெய்..லானி... அருமையான பதிவு. ஆனால் இன்றைய காலத்துப்பெற்றோரும் ஓரளவுக்கு பிள்ளையின் விருப்பப்படிதான் படிப்பை தொடர விடவேணும்(துறையை) என அதிகம் எண்ணத்தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.//

அப்படி ஒரு நிலை வந்தால் வேலைவாய்ப்புக்கு அலையாமல் நாமே நாலு பேருக்கு நாமே நல்ல வேலை தரலாம்.
நீங்க சொன்ன மாதிரி ஆக்கள் நிறைய இருக்கினம். கடைசியில கழுதை கெட்டா குட்டி சுவர் மாதிரி ஆகாம இருந்தால் சரி

//இதனாலேதானே நான் இப்போ கைத்தொழில் கற்று வருகிறேன்... இமாவை வாணியைப் பார்த்து....//

வாழ்த்துக்கள்!! முயற்ச்சி உடையோர் இகழ்ச்சி அடையார் !!

//பின்குறிப்பு:
நிலவு என்னமாதிரி??? ஓக்கை முறைக்கவாணாம்..//

வரூம்ம்ம்ம்ம். முழு நிலவாக கண்டிப்பாக . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@MUTHU--//நிதர்சனமான உண்மை //

வாங்க முத்து!!.சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@SUFFIX--//கைத்தொழிலி தெரிந்து கொள்வதும் நல்லது தான். நல்ல கருத்து.//

வாங்க ஷாஃபி. சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--// நல்ல பதிவு!! //

வாங்க!! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela--//எங்க மம்மி அடிக்கடி சொல்வாஙக். படிப்போடு கைதொழில் ஏதாவது கத்துக்கனும், யார் கையையும் எதிர் பார்க்கக்கூடாது என்று. அப்படி பள்ளி விடுமுறைகளில் கற்று கொண்டது தான் , தையல், டைப்பிங், ஹிந்தி எல்லாம்//

உங்க பிளாக்க பாக்கும் போதே புரியுது. மாஷா அல்லாஹ் , குடுத்து வச்ச ஆள் நீங்க

//மும்பைய சொல்றீங்க துபாயில் யார் படிப்புக்கு ஏற்ற வேலை செய்யுறாங்க,
10 வகுப்பு, மேனேஜர், எம்.பி.ஏ படித்தவர் டாயிலட் கழுவுறாங்க. (கொடுமை) ஏரோடேட்டிக்கல் இஞ்சினியர் வேல கிடைக்காததால் எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை செய்யுரேன் என்கிறாராம். ஊருக்கு திரும்பி போக முடியாது //

உள்ளூர் மட்டும் போதுமின்னு போட்டது இது . வளைக்குடா வை பத்திப்போட்டா மினிமம் பத்து பதிவு வேனும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சுசி--//நல்ல பதிவு ஜெய்லானி.//

வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Riyas--//தற்கால உண்மையை சொல்லியி ருக்கிறீர்கள்.. நல்ல பதிவு //

வாங்க ரியாஸ் !!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//கைத்தொழிலும் உடல் உழைப்பும் அவசியத் தேவை. அருமையான கருத்து. //

வாங்க நிஜாம்!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்னு==//உண்மை பாய். நீங்தான் கைவசம் ஒரு TVயே வெச்சிருக்கீங்ளே..இப்படியெல்லாம் யோசிச்சுதான் அந்த தொழில்ல எறங்குனீங்ளாங் பாய்? //

அட , எப்படிங்க ? புத்திசாலி தான் நீங்க டக்குன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சசிகுமார் said...

சிறந்த கட்டுரை நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காஞ்சி முரளி said...

நல்ல பதிவு...

கற்பது என்பது அறிவை மேம்படுத்த, தன் திறமையை வளர்த்துக்கொள்ள...

ஆனால் தற்போது இங்கு கல்வியே வியாபாரமாகிவிட்டதன் விளைவுதான்.. டாக்டர்... இஞ்சினியர்.. கற்க மூலதனமாய் சில லட்சங்கள் செலவு செய்ததால், அந்த மூலதனத்தை எடுக்க முயல்வதின் விளைவுதான்...

கல்விக்கும்... சம்பாதிப்பதற்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்..

any have...
தங்கள் இப்பதிவு காலத்திற்கேற்ற பதிவு...

வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி...

கவிதா said...

வணக்கம் திரு ஜெய்லானி அவர்களே,தங்களின் பதிவு மிக அருமையாகவும்,சிந்தனைக்குரியதாகவும் உள்ளது.

எம் அப்துல் காதர் said...

ஜெய்லானி இந்த பதிவுக்கும், கீழே எழுதி இருக்கும் மேட்டருக்கும் சம்பந்தமே இல்லாதது. நான் இதை இங்கே குறிப்பிடுவது சரியா தப்பா என்றும் எனக்கு
தெரியலை.
-------------------------------------------
asiya omar said...

என்னால் கமெண்ட்ஸ் மாடரேட் பண்ண முடியலை,bX-6t5Z2i இந்த எரர் வருது, gmail லில் எல்.கே,மகி உங்க கருத்து பார்த்தேன், நன்றி. அங்கிருந்தும் பப்லிஷ் பண்ண முடியலை.எப்ப சரியாகும் என்று தெரியலை.
-------------------------------------------
உதவி என்பதால்-- நான் தப்பா எழுதி இருந்தால் உடன் டெலிட் செய்து விடவும்

Geetha6 said...

கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு!! absolutely correct.

ஹுஸைனம்மா said...

பசங்களுக்கு வீட்டில சின்னச் சின்ன வேலைகளைச் செய்யச் சொல்வதும் அவசியம். தன் உடைகளைத் தானே அயர்ன் செய்வது, பட்டன் தைப்பது, சின்ன ரிப்பேர் வேலைகள் செய்வது என்று செய்தாலே ஒரு ஆர்வம் வரும். சிலர் பிள்ளை படிக்கிறான்/ள் என்று ஒண்ணையும் செய்ய விடாமல் வைத்திருப்பார்கள்.

வேறு கோணத்தில அலசியிருக்கீங்க. பாராட்டுகள்.

Priya said...

//கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு//..... Good one!

நசரேயன் said...

ம்ம்ம்

கவி அழகன் said...

வாழ்த்துகள்!அருமை...அருமை...

பித்தனின் வாக்கு said...

Hai jailani, how are you? i am fine and joined duty. due to settling things it take time. i will start blog works very soon.

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//சிறந்த கட்டுரை நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வாங்க!! சசி. சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//நல்ல பதிவு...கற்பது என்பது அறிவை மேம்படுத்த, தன் திறமையை வளர்த்துக் கொள்ள...ஆனால் தற்போது இங்கு கல்வியே வியாபாரமாகிவிட்டதன் விளைவுதான்.. டாக்டர்... இஞ்சினியர்.. கற்க மூலதனமாய் சில லட்சங்கள் செலவு செய்ததால், அந்த மூலதனத்தை எடுக்க முயல்வதின் விளைவுதான்...//
வரதட்சனை என்கிறப் பிசாசு இப்படி லட்சங்களில் செலவு செய்ததை அறுவடை செய்யத்தானே உருவாகுது .

// கல்விக்கும்... சம்பாதிப்பதற்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்..//

இந்த பதிவே அதுக்காகவே போட்டது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கவிதா--//வணக்கம் திரு ஜெய்லானி அவர்களே,தங்களின் பதிவு மிக அருமையாகவும், சிந்தனைக்குரியதாகவும் உள்ளது.//

வாங்க!!வாங்க!! சந்தோஷம் சீக்கிரம் ஒரு பிளாக் திறங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்

இது கூகிள் சர்வரில் வரும் கூடுதல் டிராபிக் , இல்லை அப்கிரேடினால் டெம்ப்ரவரி உறைநிலை . கொஞ்ச நேரத்தில தானா சரியாகி விடும் . இதை நீங்களோ , நானே ஒன்னும் பண்ணமுடியாது.

உம்ரா நல்ல படியா முடிச்சு வாங்க.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha6--//கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு!!// absolutely correct.//

வாஙக! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//பசங்களுக்கு வீட்டில சின்னச் சின்ன வேலைகளைச் செய்யச் சொல்வதும் அவசியம். தன் உடைகளைத் தானே அயர்ன் செய்வது, பட்டன் தைப்பது, சின்ன ரிப்பேர் வேலைகள் செய்வது என்று செய்தாலே ஒரு ஆர்வம் வரும். சிலர் பிள்ளை படிக்கிறான்/ள் என்று ஒண்ணையும் செய்ய விடாமல் வைத்திருப்பார்கள்.//

அதன் பலன் வேலைக்கு அலையும் போது தெரிகிறதே. அப்ப யாரையும் குறை சொல்லி என்ன பயன் .

//வேறு கோணத்தில அலசியிருக்கீங்க. பாராட்டுகள்.//

படித்த வேலை கிடைக்குற வரைக்கும் தானே ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கவே இப்படி ஒரு பதிவு போட்டது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Priya--//கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு//..... Good one! //

வாஙக! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நசரேயன்--// ம்ம்ம் //

வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@யாதவன்--//வாழ்த்துகள்!அருமை...அருமை...//

வாங்க!! வாங்க !!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு--//Hai jailani, how are you? i am fine and joined duty. due to settling things it take time. i will start blog works very soon //

வாங்க அண்ணாத்தே!! பத்து நாள்ன்னு சொல்லிட்டு மாச கணக்கா ஆச்சே, ஊரில எதுவும் விஷேஷம் உண்டா. திரும்ப வந்ததில் மகிழ்ச்சி.

ILLUMINATI said...

You are right Mr.Jailani...
A very good post indeed...Keep up the good work...

r.v.saravanan said...

நல்ல பதிவு ஜெய்லானி.

கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு

சரியான வார்த்தை

Kousalya Raj said...

good one.

ஜெய்லானி said...

@@@ILLUMINATI--//You are right Mr.Jailani...
A very good post indeed...Keep up the good work...//

வாங்க இலுமு!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//நல்ல பதிவு ஜெய்லானி.
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு . ஆனா கைத்தொழில் தெரிந்தவர்க்கு எங்கும் அலையாமலேயே அங்கேயே சிறப்பு சரியான வார்த்தை //

வாங்க!! சரவணண்.சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

அருமையாக மனதில் பதியும் வண்ணம் கூறியுள்ளிர்கள் வாழ்த்துகள் .

அன்புடன்
இளம் தூயவன்
http://ilamthooyavan.blogspot.com

MUTHU said...

ஜெய்லானி பிளேடு போடுறது ,பிக்பாகெட் எல்லாம் கை தொழிலில் வருமா?பின்ன என்னா போர் அடிக்குது புது பதிவை போடு

அன்புடன் மலிக்கா said...

நல்ல செய்தியாகதான் சொல்லியிருக்கீங்க.
ஆனாலும் சிலர் தான் பிடிச்ச முயலுக்கு காலே இல்லையின்னு நிப்பாங்களே!

நல்லதை சொல்வோம் நிச்சயம் சிலருக்காவது உதவும்..

தொடர்ந்து இதுபோல் நல்ல விசயமா சொல்லுங்க.

ஜெய்லானி said...

@@@Kousalya--//good one.//

வாங்க!!.சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//அருமையாக மனதில் பதியும் வண்ணம் கூறியுள்ளிர்கள் வாழ்த்துகள் .
அன்புடன்
இளம் தூயவன் http://ilamthooyavan.blogspot.com//

வாங்க!!.சந்தோஷம் . உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//நல்ல செய்தியாகதான் சொல்லியிருக்கீங்க.ஆனாலும் சிலர் தான் பிடிச்ச முயலுக்கு காலே இல்லையின்னு நிப்பாங்களே!
நல்லதை சொல்வோம் நிச்சயம் சிலருக்காவது உதவும்..தொடர்ந்து இதுபோல் நல்ல விசயமா சொல்லுங்க.//

முயலுக்கு கால் இருக்கா இல்லையாங்கிறதுதான் வேலைத்தேடி அலையும் போது தெரிந்து விடுமே. ஒரு சிலருக்கு கிடைத்து விடுகிறது மற்றவர்களுக்கு ? .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))