Saturday, February 25, 2012

காய் கறி ...??

130 என்ன சொல்றாங்ன்னா ...

    வாழ்க்கையில  எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற  ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே  இது குறைவு . நமக்கு எது தேவையோ  அது மட்டும் போதும் நினைக்கிற ஆட்களும் இருக்காங்க. இப்போ எதுக்கு இந்த  புலம்பல்ன்னு கேட்குறீங்களா  கீழே  இருப்பதை படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.
ஒன் கப் காஃபி பிளீஸ் 
    ஆரோக்கிய வாழ்வுக்கு  சமைத்த உணவா ..?  சமைக்காத உணவான்னு பட்டி மன்றம் போட்டா கடைசியில தீர்ப்பு என்னவோ  பட்டினி கிடப்பதுதான்னு வரும்..அவ்வ்வ்வ்  
    கேரட்   :  இதுல பீட்டா கரோட்டின்  இதயத்துக்கு நல்லது ..புற்று நோய் வராது ..இப்பிடியே  நிறைய விஷயம் இருக்கு. பச்சையா சாப்பிட்டா பலன் அதிகமுன்னு ஒரு டாக்டர் சொல்றார்
           இதை பச்சையா சாப்பிட்டா இதோட தடித்த தோலில் இருக்கிற பீட்டா கரோட்டினை  நம்ம உடல் கால்வாசி மட்டுமே எடுக்கும் ..இதே சமைச்சு சாப்பிட்டா பாதி பலனும் கிடைக்குமுன்னு இன்னொரு டாக்டர் சொல்றார் ...
டேஞ்சர் என்னன்னு சொன்னா செடி வளர்வதுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்து இந்த பகுதிகள்ளதான் தேங்கும்.அதனால கேரட் சாப்பிட்டாதீங்கோ  ((இதை நான் மட்டுமே  சொல்ரேன் ஹி..ஹி.. ))
      காலி ஃபிளவர் :  நிறைய வெளி இடங்கள்ள ( பீச் ) பகோடா , பஜ்ஜி  இப்போ இதுலதான் செய்யுறாங்க . விலை குறைவு , வித்தியாசமான சுவை . இதை பச்சையா சாப்பிட முடியாது ஆனா சரியா கிளீனிங்க் செய்யலேன்னா என்ன ஆகும் ..? பாருங்க... இதோட பூ இடைவெளியில இருக்கிற நுண்ணிய  புழுக்கள்  நாம கழுவுற சுடு தண்ணியில கூட சாகிறதில்லையாம் .நிறைய வீட்டில பச்சைதண்ணீரிலதான் கழுவுறாங்கப்போலிருக்கு  அதுக்காக உப்பு கலந்த சுடுதண்ணீர் சில சமயம் பலன் தரும். ஆனா போகிற இடங்கள்ள இதே மாதிரி யாரும் செய்யுறாங்காளா..???  ஹோட்டலில் சாதாரண தண்ணீரில்தான் அலசுறாங்க .இதுல  10 சதம் கூட புழுக்கள் , அதோட பிசுபிசுப்பான திரவம் வெளியேறாது . இந்த உருண்டை பூச்சிச்சியை சாப்பிட்டா டாக்டர்களுக்கு நல்லது ..நமக்கு சில ஆயிரம் நஷ்டம் ஃபீஸுங்கிர பேரில   ஹா..ஹா..  :-)
 
     முட்டை :  பச்சையா சாப்பிட்டா   நல்லதுன்னு சில  டாக்டர் சொல்றாங்க .ஆனால் இன்னும் சிலரோ  அதிலுள்ள  ஒரு ஐட்டம் செரிக்காது ஆஃப் பாயிலா அடிங்கன்னு  சொல்றாங்க..  இதை படிச்சு  வயிறு எரிஞ்சா பச்சையாவே  சாப்பிடுங்க வயித்துல போயி ஆஃப் பாயிலாகிடும்  ஹி...ஹி... 
       ((வாழை பழத்தை கூட அப்படியே ((தோலை உரித்துதாங்க )) சாப்பிடாமல்  ஒரு சுடு தண்ணீரில்  வைத்து (கொதிக்க வைக்க கூடாது ) 2 நிமிடம் கழித்து சாப்பிட்டால் சளிப்பிடிக்காது .சின்ன குழநதைக்கு கூட தரலாம் ))       
       இப்போது உள்ள சூழ்நிலையில  பச்சை காய்கறிகளை கூட சலாட் செய்து சாப்பிடுவது  டேஞ்சர் ....காரணம் எல்லாமே  பூச்சி மருந்து கலவையினால் செஇ ,கிடி பழத்தை  பாதுகாக்கிறோம் என்ற போர்வையினால்  வளரும் போதும் , பேக்கிங்கிலும்  அடித்து வருவதால் என்னதான்  வாஷிங் பவுடர் ( இது மட்டும் கெமிக்கல்  இல்லையா )  போட்டு கழுவினாலும் 10 சதம் டேஞ்சர் ரசாயனம் நம்ம உடலுக்கு போவதை தடுக்க முடியாது .
யாரோ  இங்கே கேட்டங்களே  ஃபிரஷ் ஐட்டமா வருதுன்னு   அவ்வ்வ்  :-))
     நாளொன்னுக்கு  வரும் வித விதமான கேன்சர்  , வயிற்று வலி , தலைவலி , காய்ச்சல் ..எல்லாமே  இந்த கெமிகலால் வருவதுதான் . இதை தடுக்க ஒரே வழி . முடிந்த வரை  வீட்டிலேயே  , மாடியிலேயே  ஏதாவது சின்னதா ஒரு தோட்டம் போட்டு வளர்க்க வேண்டியதுதான் .
        ஒரு  தடவை  இதில்  ஆர்வம் வந்து விட்டால் விடவே மாட்டீங்க .இருக்கிற அண்டா , குண்டானில் எல்லாம் செடி வளார்க்க ஆரம்பிச்சிடுவீங்க .  

ஆ....இனி ஸ்வீட்டிலேயே  காலத்தை தள்ளவேண்டியதுதான்  போல  :-)

       இதை எல்லாம் படிச்சு போட்டு ஒரு வாரத்துல 2 கிலோ  எடை குறைந்ததுதான் மிச்சம் எனக்கு . எதை சாப்பிடுவது எதை சாப்பிடகூடாதுங்கிற டென்ஷனில் எதை பார்த்தாலும் (கனவில கூட மூட்டை பூச்சி  யானை சைஸில வருது  ) சந்தேகமாவே  வருது . ஒரு டாக்டர் சாப்பிடலாமுன்னு சொல்றார் .இன்னொரு டாக்டரோ  இப்ப்டி எல்லாம் சாபிட்டா ஆரோக்கியமில்லைங்கிறார் 
பூஸ் ......இன்று போல் என்றும் வாழ்க  :-)

       ஆனா என ஃபிரெண்ட் 4 கிலோ  எடை ஏத்திட்டான் .ஏண்டா ஏன்ன்ன்..இப்பிடின்னு கேட்டா  இது வஞ்ச்னை இல்லாத உடம்பு  அதான் இப்பிடி இருக்குன்னு சொல்றான் .   அவ்வ்வ்வ் 
     இனி ஆணியே  பிடுங்க வேனாமுன்னு இருக்கேன் அப்ப நீங்க ...????? 

Monday, February 13, 2012

எசப்பாட்டு

52 என்ன சொல்றாங்ன்னா ...
டிஸ்கி :  இடிப்பார் இல்லா......மண்ணன்   கெடுப்பார் இலானும்  கெடும் இலவசமா வாங்கிட்டு ...எதிர் கட்சின்னு  ஒன்னைகூட விட்டு வைக்காத தமிழ் நாட்டு மக்களை நினைச்சா ஹி...ஹி....  ரொம்ப பெருமையா இருக்கு

இது அரசியல் பதிவுன்னு நினைச்சு ஆட்டோ ஷேர் ஆட்டோனு செலவு செய்துகிட்டு வராதீங்க ..நான் அந்தளவுக்கு ஒர்த இல்ல ஹி...ஹி....

கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
பிளாஸ்டிக் உடம்பு  இல்லை
உடல் பெட் ஷீட் மூடி முடிவதில்லை
பிளாஸ்டிக் உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை

கொசு  பறந்த பிறகும்
கடியின் தழும்புகள் அழிவதில்லை
கடித்த காயம் நூறு கண்ட பிறகும்
உடல் அரிப்பு  நிற்ப்பதில்லை
ஒரு முறைதான் கொசு  கடிப்பதினால்
வருகிற வலி யாரும் அறிவதில்லை
கனவினிலும் பகல் நினைவினிலும்
அழுகிற என் மனம் புரிவதில்லை
(கொசு பேசும்...)

பகலியே எரியும் ஸ்டீட் லைட்டை கண்டுகொள்ள யாருமில்லை
என்னிடம் அனுமதி வாங்கி கரெண்டும்  இங்கே போவதில்லை
தாத்தாவினால் 4 மணிநேரம்  அம்மாவினால் 8 மணிநேரம்
5 வருஷம் உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
கொசுபேட்டினால் அடிக்க பேட்டினில் கூடசார்ஜ் இல்லை
கொசு கடிச்சு போன பின்னே மலேரியா டைஃபாய்டு மட்டும் எனக்கே சொந்தமடா
(கொசு பேசும்...)

உலகத்தில் எத்தனை கொசு உள்ளது
அது  என்னைய  மட்டும் கடிச்சு கொண்டாடுது
இன்னொரு முறை கடிக்க திண்டாடுது
வலி உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
கண்ணீர் துளி வந்து முட்டியதால்
இந்த முக்கும் இங்கே முனங்கியது
சாக்கடையில் உள்ள கொசுக்களெல்லாம்
அட  வீட்டிற்குள்ளே குடி புகுந்தது
கரெண்ட்  வந்தால்தால் ஃபேன் இருக்கும்
அறையில் கொசுக்களும் பறந்து விடும்
அழுகை வரும் அழுகை அழுகையா வரும்
கரெண்ட் போனால் விம்மல் கூட கலந்து வரும்
கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
கண்ணாடி உடம்பு  இல்லை
உடல் பெட் ஷீட் மூடி முடிவதில்லை
கண்ணாடி உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை
கொசு பேசும் வார்த்தை .......
(கொசு பேசும்..)

Monday, January 30, 2012

கேசரி.....!!

53 என்ன சொல்றாங்ன்னா ...

             வழக்கமா வாக்கிங் போகிற வழியில ((நீ வாங்கிங் எல்லாம் போவியான்னு யாரும் கேட்கப்பிடாது )) புதுசா ஒரு டிராவல் திறந்தாங்க. பார்க்கிறதுக்கு நல்லா கண்ணுக்கு குளிர்ச்சியா ஏகப்பட்ட லைட்ஸ்,  டெக்ரேசன் ஒரே  அமர்க்களமா இருந்துச்சி. எங்கயாவது புதுசா  ஏதாவது திறந்தா  நமக்குதான் வேடிக்கையா இருக்குமே. உள்ளே போய் பார்ததுல ஒரு பிளேட் கேசரி ஃபிரி ...... கேசரியின்  மணம் குணத்தில் (உபசரிப்பில் ) சொக்கி போய் அடுத்த பிளேட் எக்ஸ்டிரா .....(( ஃபிரியா கிடைச்சா ஃபினாயிலும் குடிப்போமுல்ல )).
அலோ..அலோவ்வ்வ்வ்வ்
          
        காலை மதியம் என இரெண்டு வேளை வரும் போதும் போகும் போதும் ஒரு லுக்.....அடுத்த நாள்  ஊருக்கு ஒரு டிக்கெட் அங்கேயே போட்டேன் . ஒரு பிளேட் கேசரி கிடைத்தது.  கூச்சப்படாமல்  இன்னொரு பிளேட் வாங்கினேன் . திரும்பவும் அந்த பக்கம் வரும்போதும் போகும் போதும் ஒரு லுக் , ஒரு ஸ்மைல் ....
        நாலாவது நாள் கடை திறக்கல...ஒரு வேளை கேசரி  தீர்ந்திருக்குமோ..???... அதுக்கடுத்த நாள்..நோ  ஓபன் ...அந்த வாரம் முழுக்க திறக்கல...... வேலை பிசியில்  பிறகு நான் கவனிக்கல அதுக்கும் அடுத்த வாரம்  பார்த்தால்  வேறு ஒரு பார்ட்டி அங்கே வந்து சலூனுக்கு உள்ள  டெக்ரேஷன் ஆரம்பிச்சாங்க . கடை காலி ....அவ்வ்வ்வ்வ்வ்வ் .
ஹி...ஹி....  எங்கே பிடிங்க பார்க்கலாம்
       
      நடுவில் ஃபிரியாக ஐஞ்சு நாள் லீவு கிடைக்க ..இங்கே இருந்து வெட்டியா பொழுதை போக்குவதை விட ((  உள்ள வேலையிலும் அதைதான் செஞ்சிகிட்டு இருக்கோங்கிறது வேற விஷயம்   ஹி..ஹி....  )) ஊருக்கே  போகலாம் ஆனால் ஃபிளைட் டைமிங்கை  மாற்ற வேற ஒரு டிராவல்ஸுக்கு போகும் போதுதான் தெரிஞ்சுது . யாருமே  மாற்றி தரமாட்டாங்கங்கிர விஷயம் ..
        நிறைய டிராவல்ஸுல  ஃபிளைட் ஸீட் காலி இருக்கான்னு கூட சொல்ல மாட்டேங்கிறானுங்க படுபாவி பசங்க ((ஒய் திஸ் கொலவெறியோ )) ..கடைசியில் ஒரு ஆள் கேட்டது நாளை மறு நாள் ஒரு சீட் இருக்கு .ஐ வில் சேஞ்ஜ்  ஆனா 600 Dhs   அதிகம் வேனுமின்னு . நான் போனாப்போகுது 400 Dhs வரை தர ரெடி .ஆனா பயபுள்ள ஒரு நயா பைசா குறைக்க தயாரில்ல . கடைசியில் ஒரு ஹைதராபாத பெண் DNATA வில் எதுக்கும் டிரை செய்யுங்கன்னு ஒரு அட்வைஸ்....!! . மற்ற ஷாப்கள் இரவு 11, 12 மணி வரை திறந்திருக்க    ஆனால் கொடுமை இரவு 8 மணி ஆனாலே  டிராவல்ஸை பூட்டிகிட்டு போயிடுறாங்க .
ஆ...இ....ஊ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

       அடுத்த நாள் DNATAவில் போய் பார்க்க நம்ம நாட்டு ஏரியாவில் ஒரு மலையாளி பெண் .ஒன்னும் பேசாமல்  டிக்கெட்டை நீட்டினேன். டேட் சேஞ்ச்  வேனும் . பெயரை பார்த்ததும் ஒரு புன்(ண்)சிரிப்புடன் நீங்க பிலாக் எல்லாம் எழுதுவீங்களான்னு ஒரு கேள்வி . நான் தலையாட்டி வைத்ததும். ((  அவங்க பிலாகர் இல்ல ஆனா ஒன்லி ரீடர் )). ஏக கலகலப்பு , சிரிப்பு ......ரசிகையாம் .((அடங்கொப்புறானே....)). ஸ்டேண்டிங்கில போனாலும் பரவாயில்லை .எப்படியாவது ஒரு சீட் கன்ஃபார்ம் செய்து கேட்டேன் . இன்னைக்கே போரீங்களான்னு ஒரு நக்கல. 
நவ் வீ ஆர் ஃபிரென்ஸூஊஊஊஊஊ

      பெட்டி எல்லாம் ரெடி இப்பவே ஏர்போர்ட் போகசொன்னாலும்  ஓக்கேன்னேன்..பயபுள்ள அப்பவே ஈவினிங் 8 மணி ஃபிளைட்டு 5 மணிக்கு துபாய் ஏற்போர்டில்  இருங்கன்னு கன்ஃபோர்ம் செய்து குடுத்தாங்க. சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய் கூட வாங்கல .பிலாக் ஒரு பொழுது போக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது இப்படி ஒரு ரெஸ்பான்ஸான்னு இனி ஒழுங்கா எழுதுறேன்னு சொன்னேன் . அதெல்லாம் வேனாம் உங்க வழியிலேயே  போங்க மாறவேனாமுன்னு ஒரு அட்வைஸ் .தொடர்ந்து எழுதும் படி ஒரு வேண்டுதல்
      ஏன்னு கேட்டதுக்கு பிலாக் எப்பவுமே  ரத்தகளரியாதான் இருக்கு .ஃபிரியா யாரும் எழுதுறதில்ல. அதனால நான் ஒரு சில பிளாக்தான் போவேன்னு சொன்னாங்க .முதல் தடவை சந்திப்பாக இருப்பதால் பக்கத்து கேண்டினில் கேசரி ஆர்டர் செய்தாங்க . இருக்கிற இடத்தை மறந்து  கத்திவிட்டேன்  திரும்பவும் கேசரியாஆஆஆஆஆஆஆஆ      

Saturday, January 7, 2012

விழிப்புணர்வு ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

67 என்ன சொல்றாங்ன்னா ...
           
             கால நேரங்களை படைத்தது  இறைவன் செயல்தான். அந்த நேரங்களில்  நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைச்சா நல்ல நேரம். ஏதாவது  பிடிக்காத விஷயம் நடந்தா கெட்டநேரமா  நினைச்சுக்கிரோம். ஆனா சில நேரம் நாம வாய திறந்து சொல்லி அது மாதிரியே ஏதாவது நடந்திட்டால்  அவ்வளவுதான் . ஒரு பக்கம் நமக்கு நல்லபேர் கிடைக்கும்  அடுத்த பக்கமோ  கெட்டபேர்தான் .
        
    இந்த வகையில பிளாக் வாழ்க்கையில விழிப்புணர்வு  பதிவு அவசியமாங்கிற கேள்வி மனசுல ஓடிகிட்டு இருக்கு . பல சமயம்   மொக்கையா ஓட்டுறது பெட்டரோன்னும் தோனுது . நியூட்டனின் எதிர்வினை கொள்கைதான் காரணம் ஹா..ஹா..
    பொதுவா எல்லாருடைய வீடுகளிலும்  கிச்சனில்தான் ஃப்ரிட்ஜ்   இருக்கும் . காரணம் ஏதாவது அவசரத்துல எடுக்க வசதியான இடம் கிச்சன்தான். ஆனா மாத்தி யோசிக்கும்  போது  ரொம்பவும் டேஞ்சரா  தெரிஞ்சுது. இதை ஒரு அரபி வீட்டில  சொன்னேன் . அந்த ஃபிரிஜ்ஜில ஒரு ஒட்டகத்தையே  உள்ளே நுழைக்கலாம்  அவ்வளவு பெரிசு .
    ஆனா அவர் கண்டுக்கல..இத்தனை  வருஷமா இருக்கு , தான் பார்த்த வரை பல பேர் வீட்டில இப்பிடிதானே  இருக்கு எந்த பிராப்ளமும் இல்லையேன்னு அவர் கவலை படல. நான் சொல்லிய நாலாம் நாள்  காலையிலேயே என்னைய தேடி வந்துட்டார்  .காரணம் ஃபயர் ...  கிச்சன் , அதை ஒட்டிய இரெண்டு ரூம் ,ஒரு பாத்ரூம் , ஃபிலிபைனி ரெஸ்ட் ரூம் எல்லாமே  காலி ..  இது நடந்தது எல்லாம் அரைமணி நேரத்துக்குள்ளேயே  ....அந்த இடத்தில் பிலிபைனி 2 பேர் மட்டுமே இருந்ததால்  எஸ்கேப்...இது நடந்தது அதிகாலை  3 மணி போல 

     விஷயம்  இதுதான் அவர்கள் வீட்டில இருந்த குழந்தைகள் கேஸ் பர்னரை லேசாக திருகி விட்டிருக்கு இரவின் கடைசி நேரமா இருந்ததால  யாரும் கவனிக்கல..  லேசா  லீகேஜ்  ஆன கேஸ் கிச்சன் பூரா ஆகிருக்கு. எந்த லைட்டும் , எக்ஸாஸ்ட் ஃபேனும் ஓடல..  தற்போது குளிர் காலமா இங்கே  இருப்பதால   லேட்டா ஆட்டோமேடிகா ஃபிரிட்ஜின் கம்ப்ரசர் ஆன் ஆனதால அதோட ஸ்விட்ஜில எழுந்த லேசான தீப்பொறி (ஸ்பார்க்)  ஒட்டு மொத்த ஃபயரா மாறிட்டுது .
    ஏற்கனவே  அறை முழுக்க கேஸ் பரவி இருந்ததால ஆயில் பெயிண்டிங் சுவர் வரை தொடர்ந்து எரிந்து விட்டது .ஃபிலிபைனி  பெண் அலறி அடித்து எழும்பி அரபியை எழுப்பி வருவதுக்குள் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து விட்டது .சுவர் வரை கிரேக் ஆகிட்டுது
    மொத்த வீடும் கரெண்ட் இல்லாமல் இருக்க டெம்ரவரியா அந்த ஏரியாவை மட்டும்  விட்டு விட்டு மற்றதை ஆன் செய்து குடுத்தேன் .அரபி  :   நீ சொன்னதால என் வீடு எரிஞ்சுதா ..???  என் வீடு எரியப்போவது  உனக்கு தெரியுமா..??? 
நான் :  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

டிஸ்கி : இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது .

Monday, January 2, 2012

2012 +++++ 100

57 என்ன சொல்றாங்ன்னா ...

             ஒரு காலத்துல  பத்திரிகைகளுக்கு  கார்டில எழுதிப்போட்டா அது அச்சில வர குறைந்தது (அப்படியே வந்தா) 2 மாசமாவது ஆகும் . இப்போது கூகிள் குடுத்த வரத்தால சில நிமிடங்களில்  நம்மால பதிவிட முடிகிறது .பதிலிடவும் முடிகிறது .

           சமைத்தாலோ  இல்லை  கடையில் போய் வாங்கினாலோ  மட்டும்தான் சாப்பிடவே  முடியும் .அதை விட்டுவிட்டு  சாப்பாடோ  இல்லை நீரோ தானே  வாய்க்கு வந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதுப்போலதான் எல்லோரையுமே  தன்னைமாதிரியே (ஙே) அறிவாளியா  நினைப்பதும் .
            ஒருவருக்கு சமையல் மட்டுமே  வரும் .அவரைப்போய் கவிதை எழுத சொல்ல முடியுமா..?. ஒரு ஓவியரைப்போய்  புனைவு எழுத வைக்க முடியுமா..? .யாருக்கு எது வருமோ அவரால் அது மட்டும்தான் முடியும் . நமக்கு பிடித்திருந்தால் நேரம் இருந்தால் மறுமொழி இடலாம் . பதிவுலகில் ரீடரில் மட்டுமே  எத்தனையோ  பேர்  படித்துவிட்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் :-) .


            திரட்டிகள்  என்பது வெறும் ஓட்டை மட்டுமே முதல் காரணியாக வைத்து  செயல்படுபவை . அதில் குறுக்கு வழியில் எப்படி முதலில் வருவது என்பதும் பல பதிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் முதலிடம் பிடித்து அதில் ஒரு முட்டையை கூட வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை .
         சிலருக்கு எப்படியாவது ஹிட்ஸ் வாங்கனுமின்னு  மதம் ,மொழி , இணங்களை போற போக்கில தெரிந்தும்  தெரியாத மாதிரி கிள்ளிவிட்டுட்டும் போறதுண்டு . அதுக்காக நாமளும் வரிந்துகட்டிகிட்டு  போவது சரியில்லை. என்னதான் ஃபில்டர் காப்பி போட்டாலும் சில நேரம் டம்ளரில் காஃபி டஸ்ட்  இறங்கிடும் அதுக்காக காஃபி குடிக்காமலா போயிடுறோம் இல்லையே...கடைசியில டம்ளரில்  கொஞ்சம் வச்சிட்டுதானே  போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் .
              இதுவுமில்லாம நா எப்படியாவது இருப்பேன். ஊருக்கு மட்டுமே  உபதேசம் என்பது மாதிரி பசுத்தோல் போர்த்திய புலிகளும்  பதிவுலகை எப்போதும் காரசாரமாக வைத்திருக்காமல் கொஞ்சம் அமைதியாக கலகலப்பாக வைத்திருப்பது நல்லதுதானே..!! .
            சிலருக்கு பதிவை காபி பேஸ்ட் செய்வது ரொம்ப பிடிச்ச மேட்டர் . ஏன்னு கேட்டா அவங்களுக்கு இது எப்படி தெரியுன்னு நினைச்சி (அது வேற பாஷையில இருந்தாலும் ) அப்படியே வாமிட் செய்வது .அடப்பாவிங்களா...
     உலகத்திலே மூலையில  எங்கேயோ  நடந்த சின்ன விஷயத்தை  ஊதி பெருசாக்கி ஆணாதிக்கம் , பெண்ணாதிக்கமுன்னு பரபரப்பாகவே செய்தி வெளியிடுவது (ஆனா யார் அது என்ன அதுன்னு கடைசிவரை சொல்லவே மாட்டாங்க )  என்ன கொடுமை ச...

படத்துல இருப்பது நீயான்னு யாரும் கேட்டுடாதீங்க மீ -க்கு 3 வயசுதான் ஆகுது ஹி..ஹி... 
               நமக்கு தெரியாததை தெரிந்துக்கொள்வதும் தெரிந்ததை மற்றவர்க்கு சொல்வதும்தான் நல்ல பதிவர்க்கு அழகு அது மொக்கையாக இருந்தாலும் கூட 
டிஸ்கி : நான் இப்பிடியெல்லாம் சொல்லுவேன்னு நம்பிட்டீங்களா.. ஹய்யோ...ஹய்யோ.....!!  புது வருடம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்வில் வரும் எல்லா நாளும் நல்ல நாளே. இனியும் வரும் நாட்கள்  நலமுடனும் வளமுடனும் வாழ நல்வாழ்த்துக்கள் many more happy   happy returns  of day  ((ஆனா ஒரு வயசு அதிகமா போய்டுமே..அவ்வ்வ்  ))

டிஸ்கி :  ஒரு வழியா மொக்கையா போட்டு இதை 100வது பதிவா ஆகிட்டேன் .இதில் உள்ள அனைத்து ஃபாலோயர்களும் ஒரே இடத்துல கூடுவதாக இருந்தால்  முட்டை வித் மட்டன் பிரியாணி என் செலவு . சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி . :-)