Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, January 7, 2012

விழிப்புணர்வு ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

67 என்ன சொல்றாங்ன்னா ...
           
             கால நேரங்களை படைத்தது  இறைவன் செயல்தான். அந்த நேரங்களில்  நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைச்சா நல்ல நேரம். ஏதாவது  பிடிக்காத விஷயம் நடந்தா கெட்டநேரமா  நினைச்சுக்கிரோம். ஆனா சில நேரம் நாம வாய திறந்து சொல்லி அது மாதிரியே ஏதாவது நடந்திட்டால்  அவ்வளவுதான் . ஒரு பக்கம் நமக்கு நல்லபேர் கிடைக்கும்  அடுத்த பக்கமோ  கெட்டபேர்தான் .
        
    இந்த வகையில பிளாக் வாழ்க்கையில விழிப்புணர்வு  பதிவு அவசியமாங்கிற கேள்வி மனசுல ஓடிகிட்டு இருக்கு . பல சமயம்   மொக்கையா ஓட்டுறது பெட்டரோன்னும் தோனுது . நியூட்டனின் எதிர்வினை கொள்கைதான் காரணம் ஹா..ஹா..
    பொதுவா எல்லாருடைய வீடுகளிலும்  கிச்சனில்தான் ஃப்ரிட்ஜ்   இருக்கும் . காரணம் ஏதாவது அவசரத்துல எடுக்க வசதியான இடம் கிச்சன்தான். ஆனா மாத்தி யோசிக்கும்  போது  ரொம்பவும் டேஞ்சரா  தெரிஞ்சுது. இதை ஒரு அரபி வீட்டில  சொன்னேன் . அந்த ஃபிரிஜ்ஜில ஒரு ஒட்டகத்தையே  உள்ளே நுழைக்கலாம்  அவ்வளவு பெரிசு .
    ஆனா அவர் கண்டுக்கல..இத்தனை  வருஷமா இருக்கு , தான் பார்த்த வரை பல பேர் வீட்டில இப்பிடிதானே  இருக்கு எந்த பிராப்ளமும் இல்லையேன்னு அவர் கவலை படல. நான் சொல்லிய நாலாம் நாள்  காலையிலேயே என்னைய தேடி வந்துட்டார்  .காரணம் ஃபயர் ...  கிச்சன் , அதை ஒட்டிய இரெண்டு ரூம் ,ஒரு பாத்ரூம் , ஃபிலிபைனி ரெஸ்ட் ரூம் எல்லாமே  காலி ..  இது நடந்தது எல்லாம் அரைமணி நேரத்துக்குள்ளேயே  ....அந்த இடத்தில் பிலிபைனி 2 பேர் மட்டுமே இருந்ததால்  எஸ்கேப்...இது நடந்தது அதிகாலை  3 மணி போல 

     விஷயம்  இதுதான் அவர்கள் வீட்டில இருந்த குழந்தைகள் கேஸ் பர்னரை லேசாக திருகி விட்டிருக்கு இரவின் கடைசி நேரமா இருந்ததால  யாரும் கவனிக்கல..  லேசா  லீகேஜ்  ஆன கேஸ் கிச்சன் பூரா ஆகிருக்கு. எந்த லைட்டும் , எக்ஸாஸ்ட் ஃபேனும் ஓடல..  தற்போது குளிர் காலமா இங்கே  இருப்பதால   லேட்டா ஆட்டோமேடிகா ஃபிரிட்ஜின் கம்ப்ரசர் ஆன் ஆனதால அதோட ஸ்விட்ஜில எழுந்த லேசான தீப்பொறி (ஸ்பார்க்)  ஒட்டு மொத்த ஃபயரா மாறிட்டுது .
    ஏற்கனவே  அறை முழுக்க கேஸ் பரவி இருந்ததால ஆயில் பெயிண்டிங் சுவர் வரை தொடர்ந்து எரிந்து விட்டது .ஃபிலிபைனி  பெண் அலறி அடித்து எழும்பி அரபியை எழுப்பி வருவதுக்குள் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து விட்டது .சுவர் வரை கிரேக் ஆகிட்டுது
    மொத்த வீடும் கரெண்ட் இல்லாமல் இருக்க டெம்ரவரியா அந்த ஏரியாவை மட்டும்  விட்டு விட்டு மற்றதை ஆன் செய்து குடுத்தேன் .அரபி  :   நீ சொன்னதால என் வீடு எரிஞ்சுதா ..???  என் வீடு எரியப்போவது  உனக்கு தெரியுமா..??? 
நான் :  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

டிஸ்கி : இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது .

Monday, January 2, 2012

2012 +++++ 100

56 என்ன சொல்றாங்ன்னா ...

             ஒரு காலத்துல  பத்திரிகைகளுக்கு  கார்டில எழுதிப்போட்டா அது அச்சில வர குறைந்தது (அப்படியே வந்தா) 2 மாசமாவது ஆகும் . இப்போது கூகிள் குடுத்த வரத்தால சில நிமிடங்களில்  நம்மால பதிவிட முடிகிறது .பதிலிடவும் முடிகிறது .

           சமைத்தாலோ  இல்லை  கடையில் போய் வாங்கினாலோ  மட்டும்தான் சாப்பிடவே  முடியும் .அதை விட்டுவிட்டு  சாப்பாடோ  இல்லை நீரோ தானே  வாய்க்கு வந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதுப்போலதான் எல்லோரையுமே  தன்னைமாதிரியே (ஙே) அறிவாளியா  நினைப்பதும் .
            ஒருவருக்கு சமையல் மட்டுமே  வரும் .அவரைப்போய் கவிதை எழுத சொல்ல முடியுமா..?. ஒரு ஓவியரைப்போய்  புனைவு எழுத வைக்க முடியுமா..? .யாருக்கு எது வருமோ அவரால் அது மட்டும்தான் முடியும் . நமக்கு பிடித்திருந்தால் நேரம் இருந்தால் மறுமொழி இடலாம் . பதிவுலகில் ரீடரில் மட்டுமே  எத்தனையோ  பேர்  படித்துவிட்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் :-) .


            திரட்டிகள்  என்பது வெறும் ஓட்டை மட்டுமே முதல் காரணியாக வைத்து  செயல்படுபவை . அதில் குறுக்கு வழியில் எப்படி முதலில் வருவது என்பதும் பல பதிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் முதலிடம் பிடித்து அதில் ஒரு முட்டையை கூட வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை .
         சிலருக்கு எப்படியாவது ஹிட்ஸ் வாங்கனுமின்னு  மதம் ,மொழி , இணங்களை போற போக்கில தெரிந்தும்  தெரியாத மாதிரி கிள்ளிவிட்டுட்டும் போறதுண்டு . அதுக்காக நாமளும் வரிந்துகட்டிகிட்டு  போவது சரியில்லை. என்னதான் ஃபில்டர் காப்பி போட்டாலும் சில நேரம் டம்ளரில் காஃபி டஸ்ட்  இறங்கிடும் அதுக்காக காஃபி குடிக்காமலா போயிடுறோம் இல்லையே...கடைசியில டம்ளரில்  கொஞ்சம் வச்சிட்டுதானே  போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் .
              இதுவுமில்லாம நா எப்படியாவது இருப்பேன். ஊருக்கு மட்டுமே  உபதேசம் என்பது மாதிரி பசுத்தோல் போர்த்திய புலிகளும்  பதிவுலகை எப்போதும் காரசாரமாக வைத்திருக்காமல் கொஞ்சம் அமைதியாக கலகலப்பாக வைத்திருப்பது நல்லதுதானே..!! .
            சிலருக்கு பதிவை காபி பேஸ்ட் செய்வது ரொம்ப பிடிச்ச மேட்டர் . ஏன்னு கேட்டா அவங்களுக்கு இது எப்படி தெரியுன்னு நினைச்சி (அது வேற பாஷையில இருந்தாலும் ) அப்படியே வாமிட் செய்வது .அடப்பாவிங்களா...
     உலகத்திலே மூலையில  எங்கேயோ  நடந்த சின்ன விஷயத்தை  ஊதி பெருசாக்கி ஆணாதிக்கம் , பெண்ணாதிக்கமுன்னு பரபரப்பாகவே செய்தி வெளியிடுவது (ஆனா யார் அது என்ன அதுன்னு கடைசிவரை சொல்லவே மாட்டாங்க )  என்ன கொடுமை ச...

படத்துல இருப்பது நீயான்னு யாரும் கேட்டுடாதீங்க மீ -க்கு 3 வயசுதான் ஆகுது ஹி..ஹி... 
               நமக்கு தெரியாததை தெரிந்துக்கொள்வதும் தெரிந்ததை மற்றவர்க்கு சொல்வதும்தான் நல்ல பதிவர்க்கு அழகு அது மொக்கையாக இருந்தாலும் கூட 
டிஸ்கி : நான் இப்பிடியெல்லாம் சொல்லுவேன்னு நம்பிட்டீங்களா.. ஹய்யோ...ஹய்யோ.....!!  புது வருடம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்வில் வரும் எல்லா நாளும் நல்ல நாளே. இனியும் வரும் நாட்கள்  நலமுடனும் வளமுடனும் வாழ நல்வாழ்த்துக்கள் many more happy   happy returns  of day  ((ஆனா ஒரு வயசு அதிகமா போய்டுமே..அவ்வ்வ்  ))

டிஸ்கி :  ஒரு வழியா மொக்கையா போட்டு இதை 100வது பதிவா ஆகிட்டேன் .இதில் உள்ள அனைத்து ஃபாலோயர்களும் ஒரே இடத்துல கூடுவதாக இருந்தால்  முட்டை வித் மட்டன் பிரியாணி என் செலவு . சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி . :-)

Monday, March 7, 2011

மகளிர் தினம்

98 என்ன சொல்றாங்ன்னா ...

           ஒவ்வொரு  வருடமும் உலக மகளிர் தினம் வந்து கிட்டும் போய் கிட்டுந்தான் இருக்கு . ஆனா அதனால பலன் ஏதாவது இருக்கான்னு பார்த்தா ஒன்னுமே இல்லைன்னுதான் சொல்லனும். அட அட்லீஸ்ட் ஒரு லீவாவது விட்டாதானே  நமக்கும் நினைவுக்கு வரும் .(( நம்ம கவலை  நமக்கு )) ஆஹா...லீவான்னுன்னு சொல்லிட்டு  அதுக்காக வீட்டில சமைக்காம  இருந்துடாதீங்க .பட்டினி போட்ட பாவம் உங்களுக்கு வந்துடும்
            பெண்கள்  இல்லாத துறைன்னு ஒன்னு சொல்லவே முடியாத அளவில இப்போ அவங்க எல்லா வேலைகளிலும் திறமையா செஞ்சிகிட்டு வராங்க .எனக்கு தெரிஞ்சி இது வரை தேங்காய் பறிக்க தென்னை மரம் மட்டும்தான் ஏறலன்னு நினைக்கிரேன்.. வருங்காலத்தில  அதுவும் நடந்தாலும் நடக்கும் யார் கண்டா ..??    
எனக்கு...எனக்கு...எனக்கூஊஊஊஊஊஊ
                             
               அதுவுமில்லாம  நெட்டில பாதிக்கு மேலே பிளாக் வச்சி இருப்பதும் அவங்கதான் .ஒரு பக்கம் பாராட்ட வேண்டிய விஷயம்தான். இனையம்  வந்த பிறகுதான் அதிகமா  பெண்களோட உணர்வுகள் வெளியே  தெரிய வந்திருக்கு . ஒரு வேளை மாட்டிகிட்டான் அடிமைங்கிற  மாதிரி போட்டு தொவச்சி எடுக்கிறாங்களோ ..? இதே  ரேஞ்சில போனா அப்புறம் ஆண்கள் தினம்ன்னு ஒன்னு கொண்டு வர வேண்டி இருக்குமோ
            அதே நேரத்துல டீவி பார்த்தே விதம் விதமா எதிர் பேச்சுக்களை கற்றுக்கொள்வதும் பல இடங்களில் நடக்குது. காரணம் தமிழ் அழுகை சீரியல் களை அதிகம் சப்போட் செய்வதும் இவங்கதான் .இல்லாட்டி  மெகா சீரியல்னு போட்டு மனுஷனை வருஷக்கணக்குல தாளிப்பானுங்களா..?? இந்த சீரியல்களாலேயே  பல வீடுகளில் உரிமை பிரச்சனைகள்  வந்து விடுகிறது
           மகளிர் தினம்  ஆரம்பிச்ச நோக்கமே  உழைக்கும் பெண்கள் தங்களுக்கு சமமான உரிமையை அடையவேனுங்கிற எண்ணத்திலதான் ஆனா இன்னும் சிலர் எது சமஉரிமைங்கிறது தெரியாமலோ இல்லை புரியாமலோ  பேரில  ஆண்களை மாதிரி உடை அணிவதும் , அவர்களுக்கு சமமா ஷாப்பிங் செய்வதும் , காதலர்கள் தினமுன்னு ஒன்னு வச்சிகிட்டு நடு ராத்திரியில பார்ட்டிகளில் கும்மாளமிடுவதிலும் தான் இருக்குன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க .
            என்னத்தான்  நல்லா படிச்சிருந்தாலும் , கடுமையா உழைச்சாலும் அவங்களுக்கு தகுந்த சம்பளம் கிடைப்பதில்லை. ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைப்ப்து இல்லை. கேட்டால ஆணாதிக்கமுன்னு ஈசியா சொல்லிடுவீங்க .இதே பெண்களே  நடத்தும் எத்தனையோ  நிறுவனங்களிலும் இல்லை பெரிய போஸ்டுகளில்  இருக்கும் பெண்களும் தங்களுக்கு கீழே  இருக்கும் சக பெண்களுக்கு சம உரிமையை ஏன் கொடுக்க முடிவதில்லை.
         ஒரு சராசரி  பெண்ணிற்கு இந்த மகளிர் தினம் தைரியத்தை  குடுத்து இருந்தாலும்  இன்னும் அவர்கள் எட்ட வேண்டிய தூரம் கொஞ்சம் அதிகமாகத்தான்  தெரிகிறது.
உலக மகளிர்களுக்கு எனது மகளிர் தின வாழ்த்துக்கள் ((ங்கொய்யால நீயும் அரசியல்வதி ரேஞ்சுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டே   )) 

Saturday, January 16, 2010

எது இலவசம்

0 என்ன சொல்றாங்ன்னா ...
தமிழ்நாட்டின் 6 மாவட்டத்திற்கு செலவிடவேண்டிய வளர்ச்சி நிதி, மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கிய ரூ121 கோடியை தன்னுடைய ?? இலவச கலர் டீவீ திட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி செலவிட்டிருக்கிறார். தன்னுடைய சொந்த பணமா இருந்தால் பரவாயில்லை. எல்லாம் மககள் ரத்தமும், வேர்வையும் சிந்தி உழைத்த வரிப்பணம். ஏற்கனவே ஆண்களை தமிழ்”குடி” மகன்களாக்கியதுமில்லாமல் தன்னுடைய குடும்ப டீவீ க்கள் சீரியல் மூலம் வீட்டு பெண்களையும் சிந்திக்க விடாமல் செய்தாகிவிட்டார். ஒருபுறம் விண்னை தொடும் விலைவாசி, மறுபுறம் இருக்கும் நீர்நிலைகளை சரியாக பராமரிக்காமல் மழைப் பெய்தும் விவசாயத்திற்கு நீர் இல்லை.

ஒரேஒரு நாள் சட்டசபைக்கு வந்து கேள்வி கேட்ட எதிர்கட்சி தலைவி ஜெ வுக்கு இன்னும் பதில் சொல்லமுடியவில்லை. இதற்கு வந்த பதில் என்னதெரியுமா?.

"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல"

அடங்கொக்கா மக்கா.. தணிக்க குழு அப்படி சொல்லவில்லை இப்படி தான் சொல்லி இருக்கு என...வார்த்தைகளை மாற்றி அறிக்கை விட்டால்..உண்மை பொய்யாகி விடுமா? தொண்ணுறு ஆயிரம் கோடி கடன் இருக்கையில் இலவச திட்டம் தேவையா? கடன் வாங்கி வாங்கி தமிழ்நாட்டை கடன் நாடாக்க வேண்டுமா என்ன?. தவறினை யார் சுட்டிக்காட்டினாலும் திருந்தப்பாருங்கள். அதைவிட்டு விட்டு பழைய கதைகளை சொல்லி மக்களை திசை திருப்பாதீர்கள். என்னதான் இலவசங்களை கொடுத்து மக்களை மயக்கினாலும் ஒருநாள் மக்கள் உங்களை தூக்கி எரிய தயங்க மாட்டார்கள். ஜாக்கிரதை!
எப்படி நீங்கள் பதவிக்கு வர ஜெயலலிதா தவறுகள் செய்தாரோ அதே தவறுகளை நீங்கள் செய்து மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வர வழி காட்டுகிறீர்கள்.