Wednesday, March 31, 2010

முட்டாள்கள் தினம்-ஒரு கழுகுப்பார்வை

73 என்ன சொல்றாங்ன்னா ...

வருஷம் முழுவதும் ஏதாவது ஒரு கருப்பொருளை பிடித்துக்கொண்டு அதுக்கு ஒரு நினைவு நாளை அனுசரிக்கின்றோம். அம்மாவை மதிக்காத எத்த்னையோ பேர்கள் இருந்தாலும் அன்னையர் தினம் , அதுப்போல ஆசிரியர் தினம் , செவிலியர் தினம் , இப்படி பல பெயரில் தினம் தினம் கொண்டாடி வரும் போது ஏப்ரல் ஒன்றை முட்டாள்கள் தினம் என்று. யாரும் வெளிப்படையாக நோட்டிஸ் ஒட்டா விட்டாலும் முட்டாள்கள் தினமாகவே நாமெல்லாம் கொண்டாடி வருகின்றோம்.


காதலர் தினம் என்றாலும் சரி , அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும். சூர்பனகை மாதிரி இருந்தாலும் நீ சீதை மாதிரி கொள்ளை அழகுன்னு யாருகூட வாவது சும்மா பிட்ட போட்டு கிட்டுவாவது இருக்கலாம் இந்த முட்டாள்கள் தினத்தில் அப்படி என்ன இருக்கு.. ரூம் போட்டு யோசித்தாலும் ஒன்னும் புரியல. சரி அரசாங்கமாவது ஒரு நாள் லீவு விட்டாலும் புண்ணியமா போகும் அதுவும் இல்ல


காலையில் முழித்த மூஞ்சில அதிர்ச்சி ஆரம்பிக்கும் .டீ கப்பில வெறும் சுடுத்தண்ணீர் நல்லா ஏமாந்தீங்களா , இட்லி தட்டு காலியா மூடி இருக்கும் அப்புறம் சில S M S நீங்க பிச்சைக் ச்சே.. பணக்காரனாயிட்டீங்கன்னு . பஸ்ல , ஆபீஸுல , தலை ச்சுற்றி இரவு வீடு வரும வரைக்கும் நாள் முழுவதும் இந்த தொந்தரவு .இதில் மனைவி முதல் கொண்டு அனைத்து மனித மனங்களும் கிண்டல் கேலி செய்யும். அப்படி என்னதான் ஆசையோ


உண்மையில நாம எல்லாருமே தினமும் ஏதாவது ஒரு வகையில எங்கையாவது ஏமாந்துகிட்டுதான் இருக்கோம். இரண்டு ரூபாய் காய்கறியை பத்து ரூபாய் கொடுத்து கிட்டு , பஸ்சில ஐந்து ரூபாய் தந்துட்டு மீதி ஒன்னு அம்பது சில்லரை வாங்காம (கிடைக்காம் ) ஒரு ரூபாய்க்கு லாயக்கு இல்லாத டீவீடீய பத்து ரூபாய் குடுத்து வாங்கி மூனு மணி நேரம் நேரத்தை வீனாக்கி , மாமியார் தரும் காது குடுத்து கேக்க முடியாத திட்டு , சாபம் மற்றும் மருமகளின் கண்ணீர் விடும் சீரியல் இப்படி


பத்திரிக்கையை பிரித்தால் ஒவ்வொரு காலத்திலும் (பத்தியிலும்) யாராவது வீட்டை விட்டு ஓட்டம் , தலையில கல்லை தூக்கிபோட்டு விட்டு கள்ள..>>> ஓட்டம் , இப்படி அடுத்தவர்களை ஏமாற்றும் செய்தி தினமும் வருகிறது.


இதில் இன்று மட்டும் (ஏப்ரல்-1 ) விஷேஷமாக ஏமாற்றுவது என்பது. நாம் நம்மையே ஏமாத்துவது போலத்தான். ஆசையை காட்டி ஓட்டு வாங்கியது அந்தகாலம் . பணத்தையும் , குவாட்டர் , பிரியாணியை காட்டி ஓட்டு வாங்குவது இந்த காலம் .எட்டு மணிநேரம் வேலை பாத்துட்டு வீட்டுக்கு (அரசு ஊழியர் ) வந்தது அந்த காலம் . மூனு மணிநேரம் , கையூட்டுடன் வேலை பார்பது இந்த காலம் .அடுத்தவரை ஏமாற்றி எத்தனை காலம் வாழ முடியும் . அதில் உண்ணும் உணவு !!!!. இப்படி எத்தனையோ>>>>>>>


அதனால் யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் . இந்த ஒரு நாளாவது. நாம் மனிதனாக இருக்க முயல்வோம். மனித நேயத்தை காப்போம். அல்லது காப்பாற்ற முயற்ச்சிப்போம்.


டிஸ்கி::: இது யாரையும் குறிப்பிட்டு போட்ட பதிவு அல்ல .ஆண் , பெண் அனைவருக்கும் சேர்த்து பொதுவாக போட்டது.


Saturday, March 27, 2010

விருது பெற்றதும் அதை இனிய முறையில் பிறருக்கு தருவதும்

55 என்ன சொல்றாங்ன்னா ...

நான் நேற்றே போடவேண்டியது . ஒரு சில தவிர்க்க முடியாத (லீவு நாட்கள்ன்னாலே சோம்பேறிதான் ) காரணத்தால் முடியவில்லை. இங்கு விருது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது.. இங்கு வலைப்பதிவுக்கு வந்து வருடம் ஆனாலும் கடந்த மூன்று மாதமாகதான் எழுதி வருகிறேன். பிறவியிலேயே , தனக்கு கிடைப்பதை அடுத்தவர்க்கு கொடுத்து பார்க்கும் தாய்குலங்கள் இந்த முறை எனக்கும் தந்திருக்கினறார்கள் அதுவும் இருவர் சமைத்து அசத்தும் சமையல் ராணி ஆசியா உமர் , மற்றும் கவிக்குயில்அன்புடன் மலீக்கா அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.(... க்ளாப்ஸ்... க்ளாப்ஸ்...)

இந்த விருது இதில் சிலவற்றை இதுவரை கிடைக்காத சிலருக்கும் கொடுக்கிறேன்.

பட்டாபட்டி

வெளியூர்காரன் மற்றும் ரெட்டைவால்ஸ்

(மேலே சொன்னவர்களின் பதிவை மட்டும் படியுங்கள். தப்பிதவறிக்கூட கமெண்ட் பக்கம் போகாமலிருப்பது உடலுக்கு நல்லது. சமீபத்தில்தான் ஒருவர் ’’தலை’’தப்பியது.)

ஹ..ஹ.. ஹாஸ்யம்

கொஞ்சம் வெட்டி பேச்சு

மெளனராகங்கள்

மன விலாசம்

பிரியாணி நாஸியா

திவ்யா ஹரி

சின்னு ரேஸ்ரி

காகித ஓடம்

கவிப்பக்கம்

என் உயிரே

ஷஃபி உங்களில் ஒருவன்

சமைத்து அசத்தலாம்

சமையல் அட்டகாசம்

நீரோடை

என் எழுத்து இகழேல்

கடைசியாக , நமக்கு விருந்து கொடுத்தவர்க்கு நாமும் கொடுப்பதுதானே முறை அதனால் அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு. மீண்டும் நன்றிகள் பல....................


Friday, March 26, 2010

நான் ரசித்த பாடல் வரிகள் தொடர்--1

44 என்ன சொல்றாங்ன்னா ...

இந்த தொடரை எழுத அழைத்த பாலமுருகனுக்கு நன்றி!!நாம பொதுவா அமைதியாகவோ , அதிக மகிழ்ச்சியாகவோ இருக்கும் போது பாட்டை விரும்புகிறோம் , அதில் மனதையும் பல நேரங்களில் பறிக்கொடுத்து விடுகிறோம். நம்மில் பாத்ரூம் பாடகர்களும் உண்டு. பல படங்கள் வெறும் பாட்டுக்காகவே நூறு நாட்கள் ஓடியதுண்டு.. காரணம் அது நமது நெஞ்சை தொட்டு போவதால். அப்படி போனதில் சில


இந்த ஒரு பாடலே போதும் காதலை வர்ணிக்க! துனைக்கு வேறு பாடலே தேவையில்லை. எனக்கு பிடித்து உங்களுக்கும் பிடிக்கும்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்குமமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா


சரி யாரைப்போல வேனும் அதையும் பார்கலாமே!! மொத்ததில் ஒரு அழகிய பூந்தோட்டம் மாதிரி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கண்ணங்கள் ரோசாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ ….

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூன்தேறு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

ஓகே டாப்பிக்க மாத்தலாம். அடுத்ததாக இந்த பாட்டுக்காகவே இந்த படத்தை அப்போது நாலு தடவை பார்த்து விட்டு நல்லா திட்டினேன். ( சன் டீவியே அப்போதுதான் வந்தது மாலை4-இரவு 10 வரை) அருமையாண பாடலை குஷ்பு அழாமல் சிரித்துக்கொண்டே பாடியது. ( ங்கொய்யால )

நீ எங்கே என் அன்பே
நீயின்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது

விடிகின்ற வரையினில்
கதைகளை படித்ததை
நினைக்குதே நினைக்குதே

முடிகின்ற கதையினை
தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்கிதே துடிக்கிதே

கதையில்லை கனவில்லை
உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே

பிழையில்லை வழியில்லை
அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே

வாழும்போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும்
விடிய வேண்டும் வா வா

வீதி என்றும் வெட்டை வெளி
பொட்டலென்றும் வெண்ணிலவு
பார்க்குமா பார்க்குமா

வீடு என்றும் ஒற்றை சுடு
காடு என்று தென்றால் இங்கு
பார்க்குமா பார்க்குமா

எத்தன் என்று ஏழை பணக்காரன்
என்று ஓடும் ரத்தம்
பார்க்குமா பார்க்குமா

பித்தன் என்றும் பிச்சை போடும்
பக்தன் என்று உண்மை தெய்வம்
பார்க்குமா பார்க்குமா

காதல் கொண்டு வாழாத கதைகள்
என்றென்றும் உண்டு

கதைகள் இன்று முடியாது மீண்டும்
தொடரட்டும் இங்கு

மொக்கை கடுமையாக தெரிந்தால் பிண்னூட்டத்தில் தெரிவிக்கலாம். மீண்டும் வருவேன்


Wednesday, March 24, 2010

என் பழைய பதிவும் புதிய இன்றைய கதையும்

35 என்ன சொல்றாங்ன்னா ...
என் அனுபவக்கதை இதில் கிளிக் கவும்

விருதுநகர் : விருதுநகரில் தந்தையின் தவறால், 'லாக்' ஆன புதிய ஐகான் காரில் சிக்கிய மூன்று வயது குழந்தைஐஸ்வர்யா, உயிருக்கு போராடியது. அரை மணிநேர போராட்டத்திற்கு பின், கார் கண்ணாடியை உடைத்து குழந்தைமீட்கப்பட்டது. விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முருகேசன்(34). இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்திவருகிறார். நேற்று காலை 10 மணியளவில் போர்டு ஐகான் புதிய காரில் (டி.என்.67-6363), மூன்று வயது மகள்ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டார்.

கந்தபுரம் தெரு எதிரே மதுரை ரோட்டிலுள்ள ஸ்டாண்டில் காரை நிறுத்தினார். காரில் ஏ.சி., ஓடிக்கொண்டிருந்தது. இதனால் காரிலிருந்து சாவியை எடுக்க மறந்து, 'லாக்' பட்டனை அழுத்திவிட்டு கதவை பூட்டினார். அருகில் உள்ள டீகடைக்கு சென்றார். காரில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, கதவு மூடப்பட்டதும் பயந்து அழத் துவங்கியது. காரின் கண்ணாடியை தட்டி கதறியது. அருகில் இருந்தவர்கள் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர். பதறிப்போனஅவர், வேகமாக வந்தார். காருக்குள் குழந்தை அழுவதை கண்டு கார் கதவை திறக்க முயன்றார். கதவை திறக்கமுடியாமல் தவித்துப்போன அவருக்கு அப்போது தான் தனது தவறு புரிந்தது. காரைச் சுற்றிலும் கூட்டம் கூடியது.

கூட்டத்தைப் பார்த்ததும், காருக்குள் இருந்த குழந்தை மேலும் பயந்து அழுதது. கூட்டத்திலிருந்தவர்கள் அருகிலிருந்தமெக்கானிக் ஒருவரை அழைத்து வந்தனர் மெக்கானிக் வந்தும் கதவைத் திறக்க முடியவில்லை. பின்னர், முன்புறகதவின் கண்ணாடியை உடைத்து காலை 10.30 மணிக்கு குழந்தையை மீட்டனர். வெளியே வந்த குழந்தையைமுருகேசன் ஆவலோடு அரவணைத்துக்கொண்டு கண்ணீருடன் காரில் ஏறி சென்றார். அரை மணி நேரம் உயிருக்குபோராடிய குழந்தை மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி தினமலர்


மக்கள் எப்போதுதான் திருந்துவாங்களோ!!

Monday, March 22, 2010

வடை மற்றும் கதை

40 என்ன சொல்றாங்ன்னா ...
முதலில் சமையல் குறிப்பு .வேண்டாதவர்கள் நான்கு பாரா தள்ளி போய் படியுங்கள்.
வாழைப்பூ வடை

அவசியமான பொருட்கள்

கடலைப் பருப்பு --- 150 கிராம்
துவரம் பருப்பு ---150 கிராம்
வெங்காயம் ---1 பெரியது
தேங்காய் -- 1மூடி துருவியது
காய்ந்த மிளகாய் -- 6
மஞ்சள் தூள் --1/2 ஸ்பூன் சின்னது
எண்னெய் -- தேவையான அளவு
உப்பு -- தேவையான அளவு
சோம்பு , சீரகம் -- 1 ஸ்பூன்
வாழைப்பூ -- 1

செய்யும் முறை:

பருப்பு வகைகளை சுமார் மூன்று மணிநேரத்திற்கு முன்னே ஊறவைப்பது நல்லது

வாழைப்பூவை பொறுமையாக சுத்தம் செய்து (கையில் சிறிது எண்ணெய் தேய்ப்பது நலம்) அதை சிறியதாக வெட்டிக்கொள்ளவும்

வெங்காயத்தையும் பொடியாக அரிந்துக்கொள்ளவும்

கிரைண்டர் அல்லது அம்மி (நகரத்தில் தேடவேண்டிவரும்) அல்லது மிக்ஸியில் ஊறிய பருப்புடன் காய்ந்தமிளகாய் , சோம்பு , சீரகம் மற்றும் உப்பு போட்டு கொஞ்ஜம் பிசிறு தட்டுவது போன்று நற ..நற வென்று ஆகும் வரை அரைத்து கடைசியில் வாழைப்பூவை போட்டு ஒரு சுற்றுசுற்றி விட்டு வெளியே எடுக்கவும்

அதில் நறுக்கிய வெங்காயம் , துருவிய தேங்காய் பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வடையாக தட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

இதோ இப்போது நீங்கள் செய்த அருமையான வாழைப்பூ வடையை குறைந்தது வாரம் இருமுறை உங்களுக்கு பிடித்த நேரங்களில் சாப்பிட்டு வந்தால் நீங்கள் ஒரு லட்சாதிபதி .என்ன வியப்பா இருக்கா. ஆமாம் உங்கள் கிட்னியின் விலை.

தண்ணீர் தேவையாண அளவு குடிக்காத காரணத்தால் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி ( வரும் நேரத்தில் வரவிடாமல் அடக்கும் சிறுநீரின் காரணத்தாலும் ) நமது சிறுநீரகங்கள் உப்பு நீரை வடிகட்ட முடியாமல் தட்டுத்தடுமாறி திணருகிறது. கடைசியில் கல்லாக மாறி நமது தலையில் கல்லை (மன்னை ) கொட்டுகிறது.

கல் அதன் அளவைக்கொண்டு சில நேரம் சிறுநீர் பாதை வழியே வெளியே வந்து விடும். சிறிது பெரியதாகி போனால் நடுவில் அடைத்துக் கொண்டு வரும் கஷ்டம் இருக்கிறதே . அந்த நேரத்தில் 100 கோடி அல்லது ஆயிரம் கோடி ரூபாயை தந்தாலும் வேண்டாண்டா சாமி இந்த மைக்ரோ மில்லிமீட்டர் கல்லை மட்டும் எடுத்துவிடு எண்பீர்கள். அவ்வளவு வேதனை. அவ்வளவு சோதனை.

இந்த கல்லை சிதைக்கும் ஆற்றல் அல்லது வரவிடாமல் தடுக்கும் வலிமை இரண்டுக்கு மட்டுமே உண்டு ,ஒன்று வாழைப்பூ மற்றது தண்ணீர் அதாவது

நீர்

சேவ் வாட்டர் SAVE THE WATER
எல்லோரும் தனித்தனியா பி எச் டி வாங்கும் அளவுக்கு நீரின் பாதுகாப்பு பயனை போட்டுவிட்டதால் அடியேனும் ஒரு எறும்பாக...... இந்த பதிவு.......

Saturday, March 20, 2010

குற்றமா குறையா !!!

25 என்ன சொல்றாங்ன்னா ...
நம்மில் பலர் எதிலாவது குற்றங்குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்களாகஇருக்கிறார்கள். இன்னும் சிலரோ மனந்திறந்து பாராட்டுவது கூட கிடையாது. இதுவும் ஒரு வகை வியாதி மாதிரிதான்.

எனது நண்பர் ஒருவர் இப்படித்தான். இவருடன் ஹோட்டலுக்கு போனால்போகும் போது எப்படி போனோமோ அதே மாதிரி பசியுடன் திரும்பவேண்டிவரும் . ஆனால் அவர் மட்டும் எல்லாத்திலேயும் ரெண்டு பிலேட் அடித்திருப்பார். எல்லாத்திலேயும் குறை சொல்லிக்கொண்டே சாப்பிட்டு விடுவதில் கில்லாடி.


இப்போதெல்லாம் அவரை கண்டாலே தலைமறைவு வாழ்கைதான். என்ன செய்வது. அந்த ஒரு குணத்தை தவிர மற்றதுக்கு ஆள் சரிதான். ஏன் இந்த குணம் முதலில் ஹோட்டலை பார்கலாம் .இதிலும் இரண்டு வகை உண்டு. தினமும் அல்லது அடிக்கடி வரும் கஸ்டமருக்காக சமைப்பது., நமது அதிருப்தியை சொன்னால் சிறிது கேட்பார்கள் ,இரண்டு நாள் கழித்து அதே கதைதான், நேரம் கிடைக்கும் போது பட்டென்று விலையை உயர்த்திவிடுவது எல்லாம் நடக்கும், இரண்டாவது வகையானது கொஞ்ஜம் அடாவடி வந்தால் வா , வேண்டாமென்றால் போ என்பது மாதிரி. இது அதிகம் நடப்பது ரயில்வே , பஸ் ஸ்டாண்ட், ஸ்டால்களில்தான்.


இங்கெல்லாம் ருசிக்கு மட்டுமே முதலிடம் , உப்பு, மிளகு, காரம் அதிகமாக இருந்தாலும் சுத்தம் என்பது மருந்துக்கு கூட இருக்காது. தலையாட்டிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்ததும் பேதி மாத்திரையை தேடி ஓட வேண்டிவரும். முடிந்த வரை வீட்டில் சாப்பிட பழகவேண்டும். அல்லது சமைக்க பழகனும்.


இரண்டாவதாக வீட்டில் பார்கலாம் , எத்தனையோ தடவை பார்த்து பார்த்து அழகாக , சுத்தமாக சமைத்து வைத்து தனக்கு பசித்தாலும் , வெளியே போன கணவருக்காக காத்திருந்து வந்ததும் முகம் மலர்ந்து முதலில் பரிமாறுவதை பார்திருக்கிறோம் , கேட்டிருக்கிறோம் ., ஆனால் எப்போதாவது ஒரு தடவை உப்போ , காரமோ அல்லது சோறு குழைந்தோ விட்டால் வீட்டில் ஒரே கூச்சல் குழப்பம்தான். ஏதோ இன்று மட்டுமில்லாமல் தினமும் நடப்பது போல் திட்டுதான் .மனைவி ஏதோ திட்டம் போட்டு செய்தது மாதிரி நடந்துக் கொள்வது. அன்று நடக்கும் திருவிழாவில் குடும்பத்தில் யாருமே சாப்பிடாமல் சூழ்நிலையை சோகமாக்கி விடுவார்கள்.. உணவும் அப்படியே கிடந்து வீணாகி போகும். சரி போனால் போகிறது விடு அடுத்தமுறை பார்த்து செய் என்று ஒருமுறை சொல்லிபாருங்கள் .மனைவியின் பார்வையில் நீங்கள் ஒருஹீரோவாகி விடுவீர்கள்.


சோற்றில் உப்பு அதிகமாகி விட்டால் , சிம்பிளாக ஒரு குழம்பு உப்பு போடாமல் வைத்து சமாளிக்கலாம். புளி அப்படியே , இல்லை எழுமிச்சை சாதமாக மாற்றி விடலாம் . அப்படியும் உண்ணமுடியாமல் இருந்தால் அதை வடாம், அல்லது முறுக்கு பிழிந்து காய வைத்து உபயோகப்படுத்தலாம்.

சோறு குழைந்து விட்டால் அதன் தகுதிக்கு ஏற்றால் போல் அதனுடன் பால் அல்லது வெல்லம் சேர்த்து வெண் பொங்கலாகவோ இல்லை சர்க்கரை பொங்கலாகவோ மாற்றி விடலாம். இல்லை இருக்கவே இருக்கு தயிர் , தயிர் தாளித்து தயிர் சாதமாக மாற்றி விடலாம்.


சில நேரங்களில் பருப்பு வேகாமல் மக்கர் பன்னும். முதல் முறையிலேயே சமைக்கும் போதே தெரிந்து விடும். என்ன செய்வது நாம் நிறைய வாங்கி இருப்போம், அதை கழுவி காயவைத்து கொள்ளவும். சாம்பார் செய்யும் முன் தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் முக்கால்பாகம் பவுடர் மாதிரி அரைத்து தண்ணீரில் கொதிக்கவிடுங்கள். இந்த முறையில் செய்தால் ஒரு மணி நேரத்தில் ஆகும் சாம்பார் 25 நிமிடத்திலேயே தயாராகிவிடும்.


இன்னும் இதுப்போல நிறைய உண்டு. ஆனால் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உலகில் எத்தனையோ பேர் ஒரு வேளை கஞ்ஜிக்கூட (வெளிநாட்டில் ரொட்டி , பிரட் ) கிடைக்காதபோது இறைவன் உங்களை இந்த அளவிற்காவது வைத்துள்ளானே என்று நன்றி கூறுங்கள்.


நம் உடலில் உள்ள உறுப்புக்கள் அதுஅது அதன் வேலையை திறன்பட செய்கிறது. அது அடுத்ததை குறை சொல்வதுமில்லை , பொறாமை படுவதுமில்லை.

Sunday, March 14, 2010

எனக்குப் பிடித்த பத்து பெண்கள்

41 என்ன சொல்றாங்ன்னா ...
இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நீரோடை மலிக்காவிற்கு நன்றி.

ஏதோ ப்ளாக் வைத்து மொக்கை போட்டுக் கொண்டு இருந்த என்னையும் மதித்து (??????) தொடர் பதிவிற்கு அழைத்ததால் இதோ இப்போது உங்கள் முன்னே..ஏதும் தவறுகள் இருந்தால் தாய்குலங்கள் கண்டிப்பாக மன்னிக்கவும்!!! ( வேற வழி . )

நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...

பெண்மனிகளா!! கூப்பிட்டுவிட்டு கண்டிஷன்வேறயா. இந்திய பெண்களைஇதற்குமுன் உள்ளவர்கள்பயன்படுத்திவிட்டதால்உலகத்தில் உள்ளஅனைத்து பெண்களும்நமது
தாய்குலமாக நினைத்து இதைஎழுதுகிறேன். தாய் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கிபின் இங்கேயேவருவோம்


( 1 ) செல்வி ஜெயலலிதா ( மக்கள் ஆளுமைத்திறன் )


இவருடயைதன்னம்பிக்கை , மற்றும்எதையும் எதிர்நோக்கும் மனோவலிமை , ஒருலேடி ஹிட்லர் என்றேசொல்லலாம். ஹிட்லர் என்பதால் சர்வாதிகாரி என்று நினைக்ககூடாது. அதை விட பல நல்லவிஷயங்கள் இருப்பதால் இவர் எனக்குபிடித்தமானவர்..

( 2 )
மேரி க்யூரி ( அறிவியல் ) கேன்சர் என்ற கொடிய உயிகொல்லி நோயை குணப்படுத்த தனது கனவருடன் இரவு பகல் பாராமல் போராடி அயராமல் உழைத்து ரேடியத்தை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர். ஆனால் அதனாலேயே உயிரையும் விட்டவர். தன் நோயையும் பாராமல் உழைத்த இவர் எனக்குபிடித்தமானவர்..

( 3 )
ப்ளேரன்ஸ் நைட்டிங்கேல் ( சமூக சேவை ) ஒரு சமுக சேவகி எப்படி எல்லாம் இருக்கவேண்டும் .என்று நினைக்கிறோமோ, அதற்கு உண்டான அத்தனை தகுதியுமே உள்ள ஒரு பெண்மனி இவர். போரில் காயம் பட்ட ரானுவ வீரர்களுக்கு உதவியதை மட்டுமே சில புத்தகங்களில் வந்தாலும் சிறு வயது முதலே தாதியாக (நர்ஸ்) பல இடங்களில் உதவி புரிந்தவர். தன்னலமற்ற இவர் எனக்குபிடித்தமானவர்..

( 4 ) மடோனா
( டான்ஸர் )

முதல் அமேரிக்க பாப் டான்ஸர் , இசை தொகுப்பாளர் , நடிகை , நல்ல நடன கலைஞர் , பாஷன் டிசைனர் ( உடை வடிவமைப்பாளர் ) , எழுத்தாளர் , இப்படி ஒரு பெண் இருப்பாரா என்று சந்தேகப்படக்கூடிய திறமைசாலி. அழகு தேவதை என்று சொல்லாவிட்டால் பதிவுலகம் போர்கொடி உயர்த்தும். இத்தனை திறமையுள்ள இவர் எனக்குபிடித்தமானவர்..

( 5 )
ஐஸ்வர்யா ராய் ( மாடல் )
இந்தியர்களும் அழகுதான் என்று உலகிற்கு உணர்தியவர் இவர்., இப்போது எந்த பெண்னை பார்தாலும் , கொஞ்ஜம் பிகு பண்ணினால் நீ என்ன .............என்று இவர் பெயரைத்தான் எல்லோரும் சொல்லும்படி செய்த 50 கே ஜி தாஜ்மஹால். (திருமணம் ஆகிவிட்டதால் நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ், கணவரின் சாபம் சிலசமயம் பலிக்கும்). உலகையே வியக்க வைத்த இவர் எனக்கு பிடித்தமானவர்..

( 6 ) சானியா மிர்ஜா ( விளையாட்டு புலி )
ஆண்களே அதிகம் விளையாடும் டென்னிஸ் என்ற பணக்கார விளையாட்டில் இந்தியாவையும் , அதுவும் எங்கள் பெண்களும் கூட விளையாடி உலக தர வரிசையில் முன்னிலை பெறமுடியும் என்று சாதித்து காட்டிய இளவயது பெண்புலி . வளையத்தை கண்ட இடத்தில் மாட்டி அழகு(???) பார்க்கும் வெளிநாட்டு பெண்களுக்கு மத்தியில் மூக்கில் மாட்டி அதற்குறிய இடம் இதுதான் என்ற இந்திய பாரம்பரியத்தை காட்டிய டென்னிஸ் புயல் . வர் எனக்குபிடித்தமானவர்.

( 7 ) ருக்சானா (வீர மங்கை )
தமிழ் இலக்கியங்களில் புலியை முறத்தால் விரட்டிய பெண்ணை மட்டுமே படித்த நாம் , தற்போது கரப்பான் பூச்சிக்கே பயப்படும் காலத்தில், தன் வீட்டில் நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவரை கொன்றுவிட்டு மற்றவர்களை அலறிஅடித்து ஓடவிட்ட வீர பெண்மனி இவர். வசிப்பது காஷ்மீரில். ஜனாதிபதியே வியந்து விருது கொடுக்கப்பட்டவர். வர்எனக்குபிடித்தமானவர்.

(8 ) ஜலீலா (சமையல் அட்டகாசங்கள் ) ஆல் இன் ஆல்

சமையல் குறிப்போ அல்லது குடும்ப டிப்ஸோ முதலில் இவர் ஏதும் போட்டுள்ளாரா என்று பார்த்து விட்டு பதிவுலகில் கால் (கை ) வைப்பது நலம். இல்லாவிட்டால் நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டிவரும். அத்தனை விதமாக சமையலில் அட்டகாசம் செய்து வருகிறார். குழந்தை வளர்ப்பா , தேடுங்க ஜலீலாவை. இறைவனின் 100 பெயரில் பொருத்தமான பெயர் உள்ளவர்

(9 ) அன்புடன் மலிக்கா ( நீரோடை ) கவிதைகள்

உரை நடையா , செய்யுளா , கவிதையா, கட்டுரையா என்று நம்மையே ஒரு வினாடி குழம்பச் செய்யும் கவிதை வரிக்கு சொந்தக்காரார். அத்தனை எளிதாக படிக்கவும் , புரிந்துக் கொள்ளக்கூடிய அழகு வர்னனைகள். ஒரு ப்ளாக் வைத்துக்கொண்டு மார்தட்டிக்கொள்ளும் இந்த காலத்தில் மூன்று ப்ளாக்குகள் அதிலும் தொடர்ந்து எழுதிவருவது உண்மையில் பாராட்டபட வேண்டியவர்.

(10 ) சுமஜ்லா ( என் எழுத்து இகழேல் ) கதை , காவியம் , கணிணி

நகைச்சுவையாகவும் , சில சீரியஸாகவும் எழுதக்கூடியவர். டெக்னிகலாகவும் கலக்கிவருகிறார். சரித்திர நாவலைப்போல பல விஷயங்களை உள்ளடக்கி ஆச்சிரியபட வைக்கிறது இவரது ப்ளாக்.


இன்னும் நிறைய பேர் வைட்டிங் லிஸ்டில் இருப்பதால் .பத்து பேர் மட்டுமே விதி என்பதால் இந்த பதிவு போதும் என நினைக்கிறேன்.