Friday, March 5, 2010

உஷார்...உஷார்.


மனித உலகில் பல்வேறு தரப்பட்ட நாகரீகங்கள் வந்து போனாலும் . கம்ப்யூட்டர் வந்த அதிக பட்சம் 30 ஆண்டுகளில் (பொது மக்கள் அதிகம் உபயோகிக்கும் ) பலதரபட்ட மக்களின் வாழ்வாதாரம் அதிகம் உயர்ந்துள்ளது. புதிதாக இண்டநெட் நாகரீகம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.. மருத்துவம், கல்வி, சுனாமி முன்னறிவிப்பு , உலக செய்தி என பல நன்மைகள். இது ஆரோக்கியமாக இருந்தாலும் நல்லது சைக்கிளில் போனால் கெட்டது ராக்கெட்டில் போகிறது.

அதில் ஒன்று இனையம் சார்ந்த வெப் கேமரா. முக்கியமான சிக்கலான ஆபரரேஷனை மற்ற டாக்டர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே பார்க்கும் , மற்றும் அறிவுரைக்கு பயன் படுகிறது. இது தவறாக எப்படியெல்லாம் பயன்படுத்த படுகிறது பாருங்கள்.

கடந்த ஒன்னரை மாதம் முன்பு புனேவில்( மஹாராஷ்டிரா) ஒரு ஐடி மாணவி மாலையில் சாட்டிங் செய்துவிட்டு முறையாக கம்ப்யூட்டரை மூடாமல் மறந்து போய் விட்டுவிட மறுநாள் காலைவரை வெப்காமிரா ஓடிக் கொண்டு இருந்தது. லேப்டாப் இருந்தது அவள் பெட்ரூமில். இதை ஒருவன் ஆஸ்திரேலியாவிலிருந்து ரெக்கார்ட் செய்து நெட்டில் விட, அந்த பெண் அதிர்ந்து போய் சைபர் க்ரைமில் புகார் செய்தாள்.

இரண்டும் நடந்தது வெவ்வேறு நாடுகள் என்பதால் அந்த பெண்னுக்கு சில புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்கள். வேறு என்ன செய்ய.தவறு இவளுடையது தானே..

இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கூடுமானவரை கேமராவை சுவர் பக்கம் திருப்பி வைக்கவும். அடிக்கடி திருப்ப முடியாவிட்டால் அதன் மீது ஒரு துணியை போட்டு வைக்கவும். அதே லேப்டாபாக (அதிலேயே இன்பில்ட்) ஆக இருந்தால் அதன் மீது ஒரு சின்ன பேப்பரை வைத்து கிளிப் மாட்டவும் . தேவை இல்லாத பிரச்சனைகளிலிருந்து இது தப்பிக்க உதவும். சில ட்ரோஜன் வைரஸ்கள் ஆஃப்மோடில் உள்ள கேமராவையும் ஆன்செய்கிறது.

இப்போது வரும் கேமரா மிகவும் சிரிய சைசில் இருப்பதால் டக்கென கண்டுபிடிக்க முடிவதில்லை, இதனால் இப்போது பல இடங்களிலும் வைத்து வரும் பொது மக்களை கண்கானிக்கவும் உதவுகிறது. பேங்க் , ஏர்போர்ட் இல்லாமல் சாதாரண துணிக்கடை வரையிலும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. மிக பிரபலமான துணிக்கடையில் (ரெடிமேட்) ஒன்றில் உடைமாற்றும் அறையின் மிக அருகில் அதை பார்தேன். ஓனரிடம் கேட்க திருப்தியான பதில் வரவில்லை.

இதை இன்னொரு முறை அங்கு போகும் போது சூசகமாக ஒரு பெண்ணிடம் சொல்ல அவர் அதிர்ச்சியில் டிரஸ்ஸே வாங்காமல் போய்விட்டார். இதிலிருந்து தப்பிக்க இதோ ...

• பெண்கள் கூடுமானவரை தாம் போட்டிருக்கும் உடைகளை ஒன்றிற்கு இரண்டு முறை சரியா என செக் பன்னிவிட்டு போகலாம்

• அலுவலகமோ வேறு எந்த இடத்திலோ கேமராவிற்கு நேர்கீழே நிற்பதை முழுவதுமாக தவிர்க்கவும்.

• ரெடிமேட் கடைகளில் பொதுவாக உடைகளை போட்டு பார்பதை தவிர்கவும் (எந்த புற்றில் எந்த பாம்போ)

• வேலைக்காரணமாக தான் போகும் புதிய இடத்தில் (லாட்ஜாகவும் இருக்கலாம் ) இரவு தங்க நேர்ந்தால் அந்த இடத்தில் உள்ள வித்தியாசமான பொருட்களை முதலில் செக் செய்யவும்.

• இப்போது சில கேமராக்கள் மின்விளக்குடனேயே வருகிறது. விளக்கு எரிந்தாலும் எரியாவிட்டாலும் கேமரா வேலை செய்யும். அதனால் உஷார்...

• தான் பார்ததை மற்றவர்க்கு சொல்லுவதன் மூலம் அவர்களையும் உஷார் படுத்தலாம்

• பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கேமரா உள்ள செல்போன் வாங்கித் தருவதை விடுங்கள்

• பிக்னிக் செல்லும் காதலராகட்டும் ,கணவன் மனைவியாகட்டும் தன்னை யாராவது பார்த்து கொண்டிருக்கிறார் என்ற எச்சரிக்கை உணர்வுடன் நடர்ந்து கொள்வது மிகவும் நல்லது.

முக்கியமாக இந்தகாலத்தில் கிராபிக்ஸ் நிறைய நடக்க சாத்தியகூறுகள் இருப்பதால் . கணவனோ அல்லது மனைவியோ அவசரப்பட்டு ஒருவர் மீது ஒருவர் சந்தேகபட்டு
தன்னுடைய அழகிய குடும்ப வாழ்கையை சிதைத்து சின்னாபின்னா ஆக்காமல் கூடுமானவரை முன் எச்சரிக்கயாக இருப்பது மிகவும் நல்லது.

நாட்டு நலன் என்பது நமது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. நான் நல்லவன் என்றால் நாட்டில் (உலகத்தில்) ஒரு கெட்டவன்( அநியாயகாரன் ) குறைந்தான் என்று அர்த்தம்.

50 என்ன சொல்றாங்ன்னா ...:

Chitra said...

நாட்டு நலன் என்பது நமது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. நான் நல்லவன் என்றால் நாட்டில் (உலகத்தில்) ஒரு கெட்டவன்( அநியாயகாரன் ) குறைந்தான் என்று அர்த்தம்

............உண்மை - அருமை. பயனுள்ள தகவல்கள் உள்ள பதிவு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சின்ன சந்தேகம்..
நீங்க சொல்வது.. மக்களுக்கா.?. இல்ல காவிகளுக்கா..?

சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டுகிறேன்..
எதுக்கும்.. பதிவின் தொடக்கத்திலே..காவிகளுக்கும்.. கல்கிகளுக்கும் அல்ல
என்று , Take Diversion Board வையுங்க சார்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
ஒண்ணும் சொல்லாம போனால்
அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!
//

ஓகே..சரி சொல்லிட்டு போலாமுனு கமென்ஸ் போட்டா,
பகல்லயே......கமென்ஸ் காணாம போயிடுது..

( என்னவோ தணிக்கை பண்ணி பப்ளிஸ் பண்ணுவாங்கலாமா!!!)

என்ன கொடுமை.. ஜெய்லானி இது..?

kavisiva said...

இப்போதுதான் இதைப்பற்றி எழுத யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்களே எழுதிவிட்டீர்கள். நன்றி நண்பரே!

இப்போதெல்லாம் தூங்கும்போது கூட விழித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கு! பெண்கள் பாடுதான் படு திண்டாட்டமா இருக்கு

சாமக்கோடங்கி said...

உங்கள் அறிவுரைகள் என் மனதின் நீண்ட நாள் ஆதங்கங்கள்..

ஆனால் நீங்கள் சொல்லும் அறிவுரை நல்லவர்களுக்கு மட்டுமே..

கீழே குனிந்தால் நம் உடல் பாகங்கள் மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படும் என்பது கூடத் தெரியாமல் பெண்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை.. அப்படியும் அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றால் தவறு அவர்களுடையதே என்பதே என் கருத்து..

இவர்களை என்ன செய்ய..? மேற்கூறிய என் கருத்து தவறாக இருப்பின், இந்த பின்னூட்டத்தை நீக்கி விடவும்...

அப்புறம் அந்த கடைசி பத்தியில், என் கொள்கையுடன் இணைந்து விட்டீர்கள்.. ஒவ்வொரு செயலும்(நல்லவையா, கெட்டவையோ) நம்மிலிருந்தே ஆரம்பிக்கிறது...

ஸாதிகா said...

ஜெயிலானி நல்லாவே சிந்திக்கின்றீர்கள்.அருமையான தகவல்.மட்டுமல்ல இப்பொழுதுள்ள பத்துவயது சிறுவர்களே பிறரது மெயிலை தனது மெயிலுக்கு அப்படியே ஃபார்வேர்ட் ஆகும்படியும்,கேமராவில் டெலிட் செய்த புகைப்படங்களை ஷாஃப்ட்வேர் மூலம் திருப்பி கொண்டு வருதல் போன்ற தகிடுதத்தங்களை எல்லாம் அனாயசமாக செய்கின்றனர்.இதனை வளர்ச்சி என்பதா?வீழ்ச்சி என்பதா?

Asiya Omar said...

நல்ல பகிர்வு.விளக்கிச்சொன்ன விதம் அருமை.

அப்துல்மாலிக் said...

நல்லா தெளிவா சொல்லிருக்கீங்க

இதுக்குமேலே நாமதான் உஷாரா இருக்கனும், டெக்னாலஜியோடு சேர்த்து நம்மோட கவனத்தையும் வளர்த்துக்கனும்.

Jaleela Kamal said...

அருமையான பதிவு, அருமையான பகிர்வு, சூப்பரான டிப்ஸ்கள், அட்வைஸ்கள்

Unknown said...

நல்ல சிந்தனை உண்மையாக எல்லோரும் கடைபிடிக்க வேண்டியவை குறிப்பாக பெண்கள்

ஜெய்லானி said...

@@@சித்ரா-தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பட்டாபட்டி--நான் சொல்வது எல்லாருக்கும் பொதுவாகவே தான்.
//சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டுகிறேன்//

ஆளை குறிபார்த்து அடிக்கதான் நீங்க இருக்கீங்களே.

//என்ன கொடுமை.. ஜெய்லானி இது..?//

வேற வழி !!!!

@@@கவிசிவா--//பெண்கள் பாடுதான் படு திண்டாட்டமா இருக்கு//

என்ன செய்ய ஆண்களுக்கான பனியன் என்றாலும் விளம்பரதிற்கு பெண்களைதானே கூப்பிடுகிறார்கள்.

@@@பிரகாஷ் --பெண்களுக்கு தெரியாமலேயே நிறைய நடக்குது சார். வெட்கப்பட்டு கொண்டு நாம சொல்லாம இருக்ககூடாது.

@@@ஸாதிகா--குழந்தை பருவத்தில் நாம் நல்லதை மட்டும் சொல்லி வளர்தாலே போதுமே..(என் அடுத்த இரெண்டொரு பதிவில் பதில் கிடைக்கும்.இன்ஷா அல்லாஹ்)

@@@ஆசியா உமர்--வாங்க நன்றி.

@@@அபுஅஃப்ஸர்--தெரிந்தவர்க்கும் சொல்லுங்க.

@@@ஜலீலா--ஆல் இன் ஆல் வாயால பாராட்டா!! இப்பவே குளிருதே!!!

@@@சிவசங்கர்--//கடைபிடிக்க வேண்டியவை குறிப்பாக பெண்கள்//

அதையும் நாம தான் எடுத்து சொல்லனும்.

####வருகைதந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி###

பத்மா said...

நல்ல அக்கறையான பதிவு.
பரங்கிபேட்டையா நீங்கள்?

அகல்விளக்கு said...

நல்ல விழிப்புணர்வு பதிவு...

நன்றி நண்பரே...

ஜெய்லானி said...

@@@பத்மா--ஆமாம்; நீங்க :)உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@அகல்விளக்கு--உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வேலன். said...

ம்...உங்கள் கட்டுரையை முதலிலேயே நம்ப நித்யானந்தா படிக்காமல் போய்விட்டார்...அருமையான கட்டுரை...வாழ்க வளமுடன்,வேலன்.

நினைவுகளுடன் -நிகே- said...

அருமை. பயனுள்ள தகவல்கள் உள்ள பதிவு.

ஜெய்லானி said...

@@@வேலன்--போனமாதமே போட வேண்டியது. சோம்பேறி தனத்தால் போடமுடியவில்லை. அதனாலென்ன இனிவரும் ஆனந்தாக்கள் உஷாராகி விடுவார்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நினைவுகளுடன் -நிகே--உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மசக்கவுண்டன் said...

ஜெய்லானி அவர்களுக்கு,
அருமையான கருத்துக்கள். சாதாரணமாக உபயோகப்படுத்தும் பாத்ரூம் சாதனங்களில் கூட மிகச்சிறிய வயர்லெஸ் கேமராக்களை பொருத்த முடியும் என்று எங்கோ படித்தேன். கம்யூனிஸட் ரஷயாவில்தான் இந்த மாதிரி கண்காணிப்பு இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது எல்லா நாடுகளிலும் இப்படிப்பட்ட கேமராக்கள் வந்து விட்டன. எந்த ஊருக்குப்போனாலும் லாட்ஜுகளில் நிம்மதியாக தூங்கமுடியாது போலிருக்கிறது.

இப்ப எனக்கு தூக்கத்தில கண்ணு தெரியங்களா?

SUFFIX said...

டெக்னாலஜி எனபதும் கத்தி மாதிரி ஆயிடுச்சு, நல்லதுக்கு பயன்படுத்தணும், ஜாக்கிரதையாகவும் இருக்கணும். நல்ல பகிர்வு ஜெ!!

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன் --முடிஞ்சளவு நாமதான் உஷாரா இருக்கோனும். நாஜ்சொன்னது சரிதானுங்களா ...கண்டிப்பா தெரியுமுங்கோ..

ஜெய்லானி said...

@@@SUFFIX --டெக்னாலஜியோட நாம ( சாதாரண மக்கள் )போட்டிபோடமுடியாது .ஜாக்கிரதையா வேனா இருக்கலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@@@மசக்கவுண்டன்---உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Muthu said...

நாட்டு நலன் என்பது நமது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. நான் நல்லவன் என்றால் நாட்டில் (உலகத்தில்) ஒரு கெட்டவன்( அநியாயகாரன் ) குறைந்தான் என்று அர்த்தம்.யோவ் பட்டு நம்ம ஆளு அறிவாளிதாண்டோய்

ஹுஸைனம்மா said...

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஜெய்லானி. நன்றி.

/பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
கீழே குனிந்தால் நம் உடல் பாகங்கள் மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படும் என்பது கூடத் தெரியாமல் பெண்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை.. அப்படியும் அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றால் தவறு அவர்களுடையதே என்பதே என் கருத்து..//

இது ஓரளவு சரி என்றுதான் சொல்லவேண்டும். நம்மளவில் உஷாராக இருந்து கொள்வதே நல்லது எப்பவும்.

ஜெய்லானி said...

@@@முத்து--///யோவ் பட்டு நம்ம ஆளு அறிவாளிதாண்டோய்///

நம்ம ஏரியாகுள்ள வந்துட்டீங்கதானே உம்மையும் அறிவாளியா ஆக்கிடுவோம்.-உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஹுஸைனம்மா --//நம்மளவில் உஷாராக இருந்து கொள்வதே நல்லது எப்பவும்.///

அதான் முக்கியம்.-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Priya said...

//நாட்டு நலன் என்பது நமது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. நான் நல்லவன் என்றால் நாட்டில் (உலகத்தில்) ஒரு கெட்டவன்( அநியாயகாரன் ) குறைந்தான் என்று அர்த்தம்.//.....உண்மை!

பயனுள்ள தகவல்கள்!

ரோஸ்விக் said...

தேவையான விழிப்புணர்வு பதிவு நண்பா... கலக்குங்க.. வாழ்த்துகள்.

நம்ம உஷாரா இருந்தா கூட நம்ம நிஜார கழட்டிடுறாங்க...

யூர்கன் க்ருகியர் said...

Nice Article. Thx!

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். சமுதாய சிந்தனையுடன் கூடியது. இதில் பெண்கள் இண்டெர்னெட்டில் தங்களது புகைப்படத்தையும் வெளியிடக்கூடாது. கிராபிக்ஸ் பண்ணும் அபாயம் உள்ளது. நன்றி.

ஸாதிகா said...

யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் ஜெய்லானி.

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி, இந்தப் பதிவு இன்னிக்கு விகடன் குட் பிளாக்ஸ்ல வந்திருக்கு!!

வாழ்த்துக்கள்!!

பித்தனின் வாக்கு said...

இப்பதிவைப் படித்து விட்டு முன்னரே நான் ஒரு பின்னூட்டம் இட்டேன். வரவில்லை. பதிவு மிக அருமையாக உள்ளது.பெண்களுக்கு எதிராக இது போல செயல்களுக்கு கடுமையான தண்டனை உடைய சட்டங்கள் வரவேண்டும். அப்போதுதான் நம்ம ஆட்கள் திருந்துவார்கள். மிக்க நன்றி ஜெய்லானி.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கருத்துகள்

ஜெய்லானி said...

@@@ப்ரியா--உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ரோஸ்விக்--அதுக்குதான் எப்பவும் ரெண்டு நிஜார் போடனும் தலைவா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@யூர்கன் க்ருகியர் --உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பித்தனின் வாக்கு--சுதாகர் சார் , எந்த சட்டமும் ஓட்டையுடந்தான் தயாராகிறது. யாரை குற்றம் சொல்ல .(ஒரு வாரம் (ஹசன் திப்பா)வெளியே போனதால் உடனே பதில் போடமுடியவில்லை. ). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஸாதிகா -- வாழ்த்துக்கு ரொம்ப நன்றி .

@@@ஹுஸைனம்மா -- வாழ்த்துக்கு ரொம்ப நன்றி .

Asiya Omar said...

ஜெய்லானி,யூத்புல் விகடனில் குட் ப்ளாகாக தேர்ந்தெடுத்ததமைக்கு வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@ஆசியா உமர்-வாழ்த்துக்கு ரொம்ப நன்றி .

ஜெய்லானி said...

@@@உழவன்- உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

அப்படியே

இங்க வாங்க உங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்.

http://niroodai.blogspot.com/2010/03/blog-post_14.html

Jaleela Kamal said...

யுத் ஃபுல் விகடன் குட் பிலாக்கில் வந்ததற்கு வாழ்த்துகக்ள்.

இப்பவே குளிருதா துபாயில் இல்லாத பிளாங்கெட்டா வாங்கி போர்த்திக்கங்க....

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--காலையிலேயே பாத்துட்டு ராத்திரியிலேயே போட்டுட்டோம்ல பதிவ . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@@@ஜலீலா--என் அடுத்த பதிவ பாருங்க உங்களுக்கும் குளிரும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Prathap Kumar S. said...

எல்லாருக்கம் தேவையான குறிப்பாக பெண்களுக்க ரொம்ப தேவையான பதிவு. ஆனாப்பாருங்க ஒரு பக்கம் விழிப்புணர்வு செய்திகள் வந்துட்டுதாயிருக்கு. அந்தப்பக்கம் இதுபோன்ற வீடியோக்கள் வந்துட்டுதான் இருக்கு... ஒண்ணும் பண்ணமுடியாது.

ஜெய்லானி said...

@@@நாஞ்சில் பிரதாப்-//ஒரு பக்கம் விழிப்புணர்வு செய்திகள் வந்துட்டுதாயிருக்கு. அந்தப்பக்கம் இதுபோன்ற வீடியோக்கள் வந்துட்டுதான் இருக்கு... ஒண்ணும் பண்ணமுடியாது.//

நமக்கு தெரிந்தவர்க்கு சொல்லலாம்., வேற வழி??? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

### இங்கு கருத்தும்+ ஓட்டும் மற்றும் வந்த அனைவருக்கும் நன்றி.###

யூத்ஃபுல் விகடனுக்கு ஸ்பெஷல் நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நாம் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தும் பதிவு!

ஜில்தண்ணி said...

மிகவும் அவசியமான பதிவு
யூத்ஃபுல் விகடனுக்கு வாழ்த்துக்கள்

:)

ஆமினா said...

நல்ல டிப்ஸ் ஜெய்!

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//நாம் எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பதிவு!//

வாங்க ..!!நிஜாம் ..!! கண்டிப்பா நாமதான் இருக்கனும் ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜில்தண்ணி - யோகேஷ்--//மிகவும் அவசியமான பதிவு யூத்ஃபுல் விகடனுக்கு வாழ்த்துக்கள்:) //

வாங்க்ல ஜில்லு..!! வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆமினா--// நல்ல டிப்ஸ் ஜெய்! //

வாங்க சகோஸ் வாங்க..!! ம் சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vadakaraithariq said...

உங்கள் பதிவை வலைசரத்தில் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு கருத்துக்களை பகிரவும்.தாரிக்

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_9654.html

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))