Thursday, September 29, 2011

போயே போச்- போயிந்தி -இட்ஸ் கான் -காயஃப்

49 என்ன சொல்றாங்ன்னா ...

    பிளாக் சம்பந்தமா எழுதி நாளாகி விட்டதால இருக்கும் சொந்த சந்தேகங்களை  ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு சமீக காலமாக பிளாகை கலங்கடித்துக் கொண்டிருக்கும் பெரிய சந்தேகத்தை தீர்க்கலாமென்னு ஓடோடி வந்த என்னை ....(( சொல்லு ஷாந்தா சொல்லுன்னு யாரோ நம்பியார் ஸ்டைலில் சொல்லுவது கேட்குது  ))
           அனைந்து எரியும் மெழுகு வர்த்தியைப்போல ஓரிரு நாட்கள் முரண்டு பிடிக்கும் பிளாக் திடீரென்று ஒரு நாள் ரெட் லைட்டை காட்டி விடுகிறது . உனக்கு இங்கே வேலை இல்லை ஓடிப்போங்கிற மாதிரி . அது வரை பிளாக் + டெம்பிளேட்  டவுன்லோட் செய்யாதவர்கள் படும் டென்ஷன் சொல்லி மாளாது.  அவர்கள் டென்ஷன் நம்மையும் சில நேரம் ஆட்டி படைக்கும் . இதுக்கு முதல் காரணம்  மால்வேர் என்று சொல்லக்கூடிய கோள் சொல்லும் புரோகிராம்தான். நமக்கு தெரியாமலேயே  அதை அனுப்பியவர்க்கு நம்முடைய சொந்த சரக்குகளை பார்ஸல் செய்து அனுப்பிக்கொண்டிருக்கும் .
எங்கே செல்லும் இந்த பாதை ....!!!
        
     சரி இதை எப்படி சரி செய்வது..?  இதை ஏன் நம்முடைய ஆண்டி வைரஸ் சிலசமயம்  கண்டுக்கொள்ள மாட்டேன் என்கிறது ..? அடிப்படை காரணம். பிளாக் நம்முடைய சொந்த கம்ப்யூடரில் இல்லை . கூகிள் சர்வரில்  இருக்கிறது . அதை இயக்கும் , அதை புரிந்துக்கொள்ளும்  தன்மை நம்முடைய கம்யூட்டரில் இருக்கிறது. கூகிள் குடுக்காத கோட்களை நாம் இனைக்கும் போது அந்த கோட்களை குடுத்த சர்வரை மால்வேர் தாக்கும் போது அது (கோட்) இனைக்கப்பட்ட  அத்தனை பிளாகையும் அது பாதிக்கிறது . சில நேரம் பிஸினஸ்களுக்காக கூகிளே  நிறுத்தி வைக்கலாம் .ஓசியில உபயோகப்படுத்தும் நாம் அதை கேள்வி கேட்கமுடியாது. பிளாக் +டெம்பிளேட் காப்பி இருந்தால் புதியதாக ஒரு பிளாக் ஓபன் பண்ணி  அதை திரும்ப கொண்டு வரலாம் .
       சரி  மால்வேர் பாதித்த நமது பிளாகை இரெண்டு வகைகளில் திரும்ப பெறலாம் . அதில் முதலாவது  உங்களுடைய டெம்பிளேட்டை டேஷ் போர்ட் >> டிஸைன்  >>எடிட் எச் டி எம் எல் போய் அதில் மேலே எக்ஸ்பேண்ட் விஜெட்டில் டிக் செய்து அதிலுள்ள  கோட்களை  ஒரு நேட் பேடில் காப்பி செய்துக்கொள்ளவும். அதில் நாம் தேடவேண்டியது  எங்கே  ஜாவா ஸ்கிரிப்ட்  , எக்ஸ் எம் எல் கோட் முடியுதோ அங்கே nn “  சந்தேகத்து க்கிடமான எழுத்து இருக்கான்னு பார்க்கனும்  ((  look at the code carefully, and look for "Gadgetnn" and "HTMLnn", where "nn" will be the sequential number for that HTML / XML gadget. This is important  ))
          இது கிடைத்ததும்  அதுக்கூடவே    <div class='widget Gadget' id='Gadget1' />  அல்லது  <div class='widget HTML' id='HTML1' />  இந்த வரி இருந்தால் இதை முன் பின் யோசிக்காமல்  டெலிட் செய்யவும் . உங்களிடம் ஆல்ரெடி  பழைய டெம்பிளேட் காப்பி இருப்பதால் பயப்படவேண்டியதில்லை . இந்த வரி ஒரு வேளை உங்களுக்கு கிடைகாமல்  போனால் .கடந்த இரெண்டு மூனுமாத்துக்குள்ளே  ஏதாவது புதியதாக சேர்த்திருந்த விட்ஜெட் , ஜாவா ஸ்கிரிப்டை  டெலிட் செய்யவும் .   ((கடந்த காலங்களில்  உலவு  பட்டை நிறுவி இருந்த கம்யூட்டர்கள் பிளாக் ஓபன் செய்ய நிறைய கஷ்டங்களும் , வார்னிங்க மெசேஜ்கள் வந்ததும் .பின் அந்த பட்டையை நீக்கியதும் சரியானது நினைவு இருக்கலாம்  ))  உங்களுக்கு அந்த கோட் தேவை என்று இருந்தால் ஒரு சில மாதங்கள் கழித்து இனைத்துக்கொள்ளலாம் . அதற்குள் அந்த கோட் வழங்கிய  நிறுவணம் பிரச்சனைக்குறிய மால்வேரை நீக்கிவிடும்.
ஏன் நான் ரோட்டு நடுவில நின்னா பார்க்கமாடீங்களா..???

           பிளாக் உலகமே ஜாவா , ஜாவா ஸ்கிரிப்டில்தான் செயல் படுகிறது . காப்பி பேஸ்ட் செய்யாமல் இருக்கவும் இதில்தான் கோட் வருகிறது . டெம்பரவரியாக இதை நிறுத்தி வைத்தால் மொத்த பிளாகையுமே  காப்பி பேஸ்ட் செய்து விடலாம் . பிரவுசர் கேச் ((   Clear browser cache.  )) திரும்ப டெஸ்ட் செய்துப்பாருங்கள் . பிளாக் திறக்கும் அப்படி திறக்கவில்லையென்றால்  முதலிலிருந்து திரும்ப தொடரவும் . சரியாகி விடும் .
  இரெண்டாவது  வழி :  கூகிள்  வெப்மாஸ்டர்  டூல்  இதுவும் பிளாக் டேஷ்போர்டில் கீழே இருக்கும் . இதை திறந்து இதன் முகப்பு பக்கத்திற்கு போய்  அதில் உங்கள  பிளாகையும் இனைக்கவேண்டும் .  இனைத்தால் அது கூகிளுக்கு சப்மிட் கேட்கும் குடுத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அது சரி செய்யும் .அது குடுக்கும் கோடையும் உங்க பிளாக் உள்ளே டெம்பிளேடில்  < ஹெட் > கோடுக்கு முன் குடுத்தால் அடுத்த தடவை மால்வேர் வார்னிங்  வராது .

Friday, September 23, 2011

ஸ்பெஷல் ஜுஸ்

54 என்ன சொல்றாங்ன்னா ...

      பாக்கெட்டுகளில்  அடைக்கப்பட்டு வரும் ஜுஸ்கள் விலைக்குறைவாக இருக்கும் மர்மம் பற்றி பலதடவை யோசித்திருக்கிறேன் . அதே  பழங்களை ஃபிரெஷாக  வாங்கும் போது விலை அதிகம் . என்னதான் மொத்தமாக வாங்கினாலும் . தயாரிப்பு செலவு  அடக்க விலை , தொழிலாளர்கள் , மிஷனரிகள் , டிரான்ஸ் போர்ட் இப்ப்டி பல விஷயங்கள் இருக்கே..!!
     ஒரு பழத்தை  ஜூஸாக செய்தால் அதிக பட்சம் இரெண்டு நாள் வரும். அதுக்கு மேல் அதுக்கு கேரண்டி கிடையாது. இது இல்லாமல்  இதை பாக்கெட் செய்யும் போது முழுக்க முழுக்க 100 சதம் ஜுஸ் மட்டுமே  வைக்க முடியாது .இதனால்தான் .சில கெமிக்கல் சேர்த்து விற்பனைக்கு வருகிறது.  ஒரு சில மில்லி க்கும் மிக க்குறைவாக சேர்ப்பதால் நமது உடம்புக்கு ஒன்னும் ஆகாது .இதுவே இந்த பொருட்களில் கலப்படம் செய்தால் நமது உடம்பு தாங்காது . அதிகளவு சர்க்கரையும் , சிலதில் போதை ஐட்டமும் சேர்ப்பதால்தான் நாமும் இதற்கு அடிமைப்பட்டு தொடர்ந்து வாங்குகிறோம் .
   
  உதாரனமாக சாதாரன லெமன் ஜுஸை  சில மணி நேரங்களுக்குள் உபயோகப்படுத்திட வேண்டும். இல்லா விட்டால் அதன் நிறம் கருப்பாக மாறி விடும் .இருக்கும் பாத்திரத்தையும் வீனாக்கிவிடும் .இதற்குதான் அதே நிறத்தை கொடுக்கும் சில கெமிக்ல்லை  சேர்த்தால் ஒரு வருடம் ஆனாலும் அப்படியே  இருக்கும் . ((ஆனா உங்கள்  உடம்புக்குதான் கேரண்டி இல்லை ஹி..ஹி.. )). 
    ஓகே திரும்பவும், முதல் வரியிலிருந்து ஆரம்பிக்கிறேன் .ஒரு சில தயாரிப்புகளில் உதாரணம் மாங்காய் .ஜுஸ் கட்டியாக இல்லாமல் தண்ணீர் அதிகம் சேர்த்து போல்  இருக்கும் .சிலதில் ஜுஸாகவே  இருக்கும் .அதுவும் மாம்பழம்தான் , இதுவும் மாம்பழம்தான் அப்புறம்  ஏன் இந்த இரெண்டு வகை  குவாலிட்டி. ஒன்றில் கெமிக்கல் எக்ஸ்ராக்ட்  அதிகம் இருக்கும் . மற்றொன்றில்  மாம்பழ ஒரிஜினல் ஜுஸாகவே இருக்குமுன்னு நினைச்சா நீங்க கண்டிப்பாக  ஏமாளிதான் .
      இரெண்டிலுமே  வாசனை க்குதான் மாம்பழம் இருக்கும் கலர் சேர்த்து இருப்பார்கள்.வருடம் முழுவதும் மாம்பழம் எங்கிருந்து வருமுன்னு யோசிக்கும் போது உண்மை புரியும் . எனது இத்தனை சந்தேகத்துடன்  ஒரு புகழ் பெற்ற கம்பெனிக்குள் உள்ளே நுழைந்தேன்.((  இதை அது மாதிரி கம்பெனி நிர்வாகிகள் படிச்சால் என்னை கம்பெனி உள்ளே  விடுவானுங்களான்னு தெரியல ..ஹி...ஹி.. )) .
     
  ஒரு பக்கம் வாழைப்பழம் , மாம்பழம் , கொய்யா இப்படி நிறைய ஐட்டங்கள் இருந்தது.. ஒவ்வொன்னா  பார்த்துகிட்டே போனேன் .  இதன் இன்னொரு ஸைடில  உருளை கிழங்குகள் டன் கணக்கில்  இருந்துச்சி .நான் இதை வித்தியாசமா பார்த்ததை கண்டு நைஸாக என்னை  வேறு பக்கம் கொண்டு போய்ட்டார் .இப்போதுதான் என்னோட ஒட்டு மொத்த சந்தேகமும் தீர்ந்தது அடப்பாவமே...!! வாழைப்பழம் கிலோ 3 ரூபாய்  ஆனா உருளை கிழங்கு ஒரு ரூபாய்தான் ,,,, வித்தியாசம் புரிந்தது.
    அப்படின்னா நாம மாம்பழமுன்னு நினைச்சு குடிப்பது முழுக்க மாம்பழஜுஸ் இல்லை. உருளை கிழங்கு ஜுஸ்தான், கொய்யா ஜுஸ் கிடையாது கொய்யா எஸன்ஸ்  கலந்த உருளை ஜுஸ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் . உள்ளே நாலு வித (ஙே) ஜுஸ் குடுத்தாங்க ..குடித்துகிட்டே வந்தேன் . உருளை சேர்ப்பதால் பழசாறுக்கு அடர்த்தி அதிகம் கிடைக்கிறது செலவும் இல்லை .உடலை குறைக்க விரும்புபவர்கள் இதை குடிச்சால் உடல் குறையாது மாறாக கூடவே செய்யும் ஏன்னா  உருளையில் கார்போ ஹைட்டேட் மிக அதிகம். சர்க்கரை வியாதி உள்ளவங்க இதை அதிகம் சாப்பிடக்கூடாது . ஆனா இதை வெளியில சொல்லாம ரொம்பவும் ஈஸியா ஏமாத்திடறாங்க .யாருக்கும் தெரியாது .கவர்ச்சிகரமா யாரையாவது வைத்து விளம்பரம் செய்தால் அக்கா மாலா, கப்சி  மாதிரி எது குடுத்தாலும் நமது மக்கள்  வாங்கி குடிப்பாங்க .விளம்பரம்தானே முக்கியம் .

     வெளியில்  எதையும் வாங்கி குடிக்க வேண்டாம் .முடிந்த வரை பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு செய்யுங்கள். வெளியே நீண்ட தூரம் போக நேர்ந்தால் ஒரு பாட்டிலில் கொண்டுப்போங்கள். முடிந்த வரை சொந்தமாக கொண்டு போவதால் போலியிலிருந்து தப்ப முடியும் .எந்த வித கெமிக்கல் சேர்க்காத ஒரிஜினல் ஜுஸ் குடித்த திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும் இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில்  மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க  முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...

Tuesday, September 13, 2011

ஓடி வாங்கோ!!! BOY பிறந்திருக்காம்ம்ம்:))

44 என்ன சொல்றாங்ன்னா ...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்.... 13.09.2011.
இதில் குழப்படியாக, குட்டியாக இருப்பது மாயா:).

===========&&&&&&&&&&&&&&&&&&&&&&&==========
,


=========================================================
மனதில் பகைமையை வைத்துக்கொண்டு 
வாழ்த்த முடியாது
வாழ்த்தும்போது பகைமை இருக்காது 
-------------------------------------------------------- ஹைஷ் 126 ம.பொ.ர
=========================================================
டிஸ்கி: பிறந்த தினக் கொண்டாட்டம் முடிந்ததும், வலைப்பூ பழைய நிலைமைக்குத் திரும்பும்.
=========================================================

Sunday, September 11, 2011

நம்பிக்கை ..???

78 என்ன சொல்றாங்ன்னா ...

டிஸ்கி :- ஜோசியத்தை  நம்பாதவங்களுக்கு  இந்த பதிவு இல்லை
    கடிகாரம் கண்டுப்பிடிக்காத  காலங்களில் சூரிய , சந்திரனின் நிலையை வைத்து பருவகாலங்களை கணக்கிட்டான், அதை வைத்தே  விவசாயம்  நடந்தது. மழைக்காலங்களில் வேலை இல்லாத போது இருக்கும் அறிவை பயன் படுத்தி  சேமிப்பை வளர்த்தான். ஜோதிடம் என்பது இவர்களை பொறுத்த வரை வான சாஸ்திரம், அறிவியல் .ஜோதிடம் ஆரம்பிச்சது அதிகமில்லை சுமார்  கிமு 1200 லிருந்து கி மு 400 வரை தான்னு வாக்கிய பஞ்சாங்கம் சொல்லுது . இதுக்கு பிறகு வந்தது எண் கணிதம் ஏன்னு கேட்டா அப்போ டெலஸ்க்கோப் கண்டுப்பிடிக்க படல அதனால துல்லியமா எதுவும் சொல்வதுக்கில்லையாம் .
    இதை இன்னும் நல்லா படிக்க உள்ளே போனா ((குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுபவனுடைய நிலைதான்னு இன்னும் எத்தனை நாளைக்குதான் சொல்றது )) கிணற்று தவளை மாதிரி 7 கிரகம்+ 2 நிழல் கிரகம்  உள்ளேயேதான் சுற்றி சுற்றி வரனும். நமது கேலக்சியில(பால் வீதி மண்டலம் ) லட்சக்கணக்குல  சூரியனும் சந்திரனும் , நட்சத்திரங்களும் கண்டுபிடிச்சு அதுக்கு பேர் வைச்சு கட்டு படியாகாததால, அதுக்கு நெம்பர் போட்டு வச்சிருக்கான் இப்போதுள்ள மனுஷன் .ஆனால் அங்கே ..?
    அந்த கிரகத்துக்கும் நம்ம மனுஷ உடலுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்டா உடனே பதில் வருவது சூரியனிடமிருந்து நமக்கு ஒளி வருது , அது இல்லாம உயிர் வாழ முடியாது , சந்திரன் சுழற்சியால அமாவாசை , பவுர்ணமி அன்னைக்கி அலை அதிகம் இருக்கும் . இதை தவிர வேறு லாஜிக் பதில் வரவே வராது . ((இதை பத்தி சொல்லப் போனா பெரிய தொடரா போயிடுங்கிறதால  இதோடு நிறுத்திக்கிறேன் )).
    ஒரு வேளை கடிகாரமே கண்டுப்பிடிகாத காலத்தில் மழை எந்த மாசத்துல பெய்யும் , காற்று எந்த திசையில் அடிக்குமுன்னு எழுதி வச்சதுக்கு இது தேவைப்படலாம். ஆனா அதுபடியா நடக்குது.?  மனித உடலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை .அப்புறம் அதனால் தோஷம் எப்படி வரும் ((ஹய்யோ  ஒரு வழியா பாயிண்டுக்கு வந்துட்டேன் )) மனிதனை படைத்த அந்த இறைவன், உடலில் எங்காவது ஒரு குறை வைத்தானா .? இல்லையே .இந்த உடம்பும் இவனுடைய ஆணைக்கு எதிர்பார்க்காமல், இரவு பகல் பாராமல் உழைக்குதே..!!  அப்படி இருக்கும் போது, இவன் வேலை எதுவும் செய்யாமல், சோம்பேறியா இருப்பதுக்கு, ராகு காலம் எமகண்டம்ன்னு,  தானே ஒரு பட்டம் குடுத்து வச்சிருக்கான் . எதிராளி சீக்கிரமே முன்னுக்கு வரவிடாமல் செய்வதுக்கு  என்ன வழின்னு யோசிச்சதுல கிடைச்சது செவ்வாய் தோஷம் , நாக தோஷம் , உச்சத்துல சனி இதெல்லாம் .
       எனக்கு தெரிஞ்ச ஒருவர் சுமார் 10 வருச காலமா பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார். இந்த தோஷம் உள்ளதால லேட்டாகிட்டே  போதுன்னு ஒரே புலம்பல் . இவ்வளவுக்கும் அவர்  குடும்பம் படிக்காத குடும்பம் இல்லை . அறிவு ஜீவிகள்தான் . ஆனா வேலைக்காகல . நானும் எவ்வளவோ சொல்லியும் சரி வரல. எறும்பு ஊர கல்லும் தேயும் ஒரு நாள், தேய்ந்தது  ஆனால் காலம் போனதே..நான் சொன்னது இதுதான்.
    எத்தனையோ தெய்வங்களை வணங்குகிறீர்கள்  ஓக்கே , இதுவும் போதாமல் கூடவே ஒரு குல தெய்வம் .அதுக்கூடவா உங்களுக்கு நல்லது செய்யாது. அதன் மீதுமா நம்பிக்கை இல்லை .இப்படி எல்லா தெய்வங்களை விடவா உங்களுக்கு இந்த ஜோதிடம் பெரியதாக போய் விட்டது .
    உடம்பில் ஓடும் இரத்தம் எப்போதாவது இது நல்ல நேரம் இல்லை நான் ஓடமாட்டேன்  என்று சொன்னதா..? கிட்னி எப்போதாவது தன்னுடைய நேர காலத்தை மாற்றி இருக்கா ..? நாம் உறங்கினாலும் சுவாசமும் , இதயமும்  உறக்கம் இல்லாமல்  வேலை செய்யுதே  .எப்போதாவது அது ராகு காலம் எமகண்டம் பார்த்து இருக்கா..?
  மேலே சொன்னது நம்முடைய கன்ட்ரோல் இல்லை ஓக்கே . இந்த நேரங்களில்  நீங்க சாப்பிடாமல் , குடிக்காமல் இருந்து இருக்கீங்களா..? அட்லீஸ்ட் யூரின், டாய்லட்  போகாமல்..? ஒரு வேளை பயணத்தில் இருந்தால் ஓடிக்கிட்டு இருக்கும் வாகனத்தை விட்டு இறங்கி அங்கேயே நிற்பீங்களா..? ஏற்போர்ட்டில், பஸ் ஸ்டாண்டுகளில் , ரயில்வே ஸ்டேஷன்களில் அந்த நேரங்களில் எதுவும் இயங்காதுன்னு சொன்னால் நீங்கள் அங்கேயே அமைதியா இருப்பீங்களா..?
   இறைவன் படைத்த படைப்பில் எதுவும் கெட்ட நேரமோ , அதில் குறையோ இல்லை .நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே இருக்கு . காமாலை கண்டவனுக்கு எல்லாமே மஞ்சளாகத்தான் இருக்கும் .பூனை குறுக்கே  போனால் அதுக்குதான் நேரம் சரியில்லை  வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது. ((உண்மை காரணம் அது ஓடி விட்டதாக  நினைத்து பயந்து அங்கேயே சிறிது நின்று விடுகிறது , நமது கவனமும் சிதறி, அதன் மேலே வண்டியை ஏற்றி விடுகிறோம் )).
   உங்கள் ஜாதகத்தை (ஙே )  இன்னும் பத்து பேரிடமும் காட்டுங்கள்,  .அந்த பத்து பேரும்  பத்து விதமாதான் சொல்லுவார்கள். அந்த பத்தும் தலை சுற்றும் விதமாதான் சொல்லுவார்கள் . ரோலக்ஸ் வாட்ச், டயோட்டா காரில் போய் கேளுங்கள் அது ஒரு விதமாகவும் , பழைய சட்டை, வாடகை சைக்கிளில் போய் கேளுங்கள் அப்போது ஒரு விதமான பலனும் சொல்வார்கள் . கொடுக்கும் பணத்துக்கேற்ப பலன் கிடைக்கும் .
    இருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்கையில் வாலிபம் போனால். எத்தனை கொட்டிக்கொடுத்தாலும் அது திரும்ப வரப்போவதில்லை . இதை எல்லாம் நினைத்து பின்னால் அழுவதுக்கு பதில் இப்போதே ஒருமுடிவுக்கு வாங்கன்னு சொன்னேன் .நான் இத்தனை சொல்லிய பிறகு இப்போது ஒரு வழியா மனம் திருந்தி மணம் செய்யப்போகிறார். அவருக்கு என வாழ்த்துக்கள் .
  -இல்லை இதில் எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொல்பவர்கள் உங்கள் ஜோதிடரிடம் கீழே உள்ள கேள்வியை கேளுங்கள். போட்டிக்கு வருபவர்கள்  கீழே கமெண்டில் தெரிவிக்கலாம் .அப்படி சரியாக சொன்னால்............ ..
என்னுடைய வரும் அடுத்த இரெண்டு வருட சம்பளம் மொத்தமாக தருகிறேன். அப்படி அவர் போட்டியில் தோற்றுவிட்டால், அவருக்கு அரேபிய படி ........தண்டனை (( அது எதுவா வேண்டுமானாலும் இருக்கும் ))   ரெடி ஸ்டாட் மியூசிக்  
 1  .அடுத்த இரெண்டு வருடம் கழித்து நான் இதே நாள் இதே நேரம் எங்கே இருப்பேன்..?
2  . நான் என்ன வேலையில் இருப்பேன். எனக்கு என்ன சம்பளம் கிடைக்கும் ...?
3.  அப்போது நான் என்ன கலர் டிரஸ் போட்டிருப்பேன் ..?.
4  .என் பக்கத்தில் யாரெல்லாம் இருப்பார்கள் .?.
5 .  தலையில் எத்தனை வெள்ளை முடி இருக்கும் ..? இல்லை இருக்காதா..?
 6 .  இதே நேரம் என்ன செய்து கிட்டு  இருப்பேன் .
    இறைவன் கொடுத்த சுய அறிவை கொண்டு மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள் .அடுத்த வேளை தான்  என்ன சாப்பிடப்போகிறோம் என்று சொல்ல முடியாதவர்களா நமது எதிர் காலத்தை சரியா சொல்ல முடியும் .

Wednesday, September 7, 2011

வாங்க பழகலாம் ...1

61 என்ன சொல்றாங்ன்னா ...

      எவ்வளவு நாளைக்குதான் இப்படி காதில ரத்தம் வரும் அளவுக்கு மொக்கையா பதிவு எழுதுவீங்க . மாறுதலுக்காக நானே பாராட்டுர மாதிரி ஒரு டெக்னிகல்  பதிவு எழுதுங்களேன்னு  கேட்டுக்கொண்ட இவருக்கு  இந்த பதிவை டெடிகேட் செய்கிறேன்.

(( யாருக்கோ நூடுல்ஸ் ரொம்பவும் பிடிக்குமுன்னு சொனாங்களே..!! ))

        மின்சார வீட்டு உபயோக பொருட்களில் பொதுவா இந்திய தயாரிப்புகளில் இல்லாத சிறப்பு ஜப்பான் , இத்தாலி  , சில ஃபிரான்ஸ் தயாரிப்புகளில்  இருக்கு .அது சில நேரங்களில்  நன்றாக இருந்தாலும் தவறாக நினைப்பதால் நிறையப்பேர் இதனை தெரிந்திருப்பார்களான்னு எனக்கு தெரியல .உதாரணம்  இஸ்திரி பெட்டி , எக்ஸாஸ்ட்  பேன் , எலக்டிரிக் இண்டக்‌ஷன்  அடுப்பு  , எலக்டிரிக் குக்கர் , வால் பேன் ((நல்லா கவனியுங்க சீலிங் பேன் இல்லை)) .
        இந்திய தயாரிப்புகளில் இது வைக்காததுக்கு காரணம் இது தான்  மிகச் சரியாக 220 , 240 ஓல்டேஜ் வருவதில்லை .இது சில நேரங்களில் வெறும் 80 லிருந்து 280 வரை கூட வரும் . அதுக்கு தகுந்த மாதிரி வைண்டிங்க காயில் உள்ளே இருக்கும் .  ஆனால் இங்கே வெளி நாட்டில (துபாய் ) மிகச்சரியாக ஓல்டேஜ் இருக்கும் .ஒரு சில மில்லி கூட,  கூட குறைய இருக்காது. அதை சரிகட்ட கெப்பாஸிட்டர் பேங்க் ஒன்னும் கூடவே இருக்கும் .
((  இது ஹீட்டர்ல இருக்கும் ))
      
    எங்காவது ஓல்டேஜ் குறைய ஆரம்பிச்சால் இந்த கெப்பாஸிட்டர் பேங்க் அதை சரி கட்டும் .நம்ம் ஊரில இந்த வசதி வர எனக்கு தெரிஞ்சி இன்னும் 100 வருஷம் ஆகுமுன்னு நினைக்கிறேன். ஓக்கே அந்த ஐட்டம் என்னன்னு இன்னும் சொல்லலையே  அதான் தெர்மல் ரெஸிஸ்டெர். இது நாம உபயோகிக்கும் எலக்டிரிக் பொருட்களுக்கு அதன் வாட்டேஜ் ( சாப்பிடும் அளவு ) க்கு தகுந்த மாதிரி அதன் ஆம்பியர்களில் ((சாப்பிடும் அளவு அதாவது பெருந்தீனி ))  வைத்திருப்பார்கள் .
     இது அதன் சூடு (ஹீட்) தேவையான அளவுக்கு மேல் போனால் உடனே இது எரிந்துப்போகும் . அதாவது மேலே நான் குறிப்பிட்ட உங்க எலக்டிரிக் சாமான்கள் வீனாகிப்போச்சுன்னு அர்த்தம் . அதை குப்பையில்தான் போடனும் . இதுதான் இது வரை நடந்து வரும் வழக்கம் . ரிப்பேர் செய்யும் அளவுக்கு  செய்யும் பணத்தில்  ஒன்று புதுசாவே வாங்கிடலாம் . ஆனால் உண்மையில் உங்கள் எலெக்டிரிக் பொருட்களில்  ஹீட்டரோ  , காயிலோ  கெட்டுப்போய் விடவில்லை. நம்பினால் நம்புங்கள் இந்த தெர்மல் ரெஸிஸ்டர்தான் எரிந்து போய் விட்டது.
     இந்த எரிந்த ரெஸிஸ்டரை நாம் பார்த்தால் புத்தம் புதுசாவே தெரியும் .ஆனால் மல்டி மீட்டரில் , கனெக்டிவிடி பார்த்தால் கனெக் ஷன் தெரியாது . இதை மட்டும் எடுத்து விட்டு திரும்ப அந்த வயர்களை இனைத்து டேப் செய்தால் போதும் .இன்னும் குறைந்தது இரெண்டு வருடமாவது  அது வேலை செய்யும் .அதுக்கு மேலே உங்க தலையெழுத்து எப்படியோ அப்படி உழைக்கும்  ஹி..ஹி..
(( இந்த மாடல் ஃபேனில் இருக்கும் ))

     சரி இதை எப்படி கண்டுப்பிடிப்பது . உங்கள் எலெக்டிரிக் குக்கர் , இண்டெக்‌ஷன் அடுப்பு , எலெக்டிரிக்  இஸ்திரி பெட்டி , பின் பக்க கதவை அதன் ஸ்குருவை கழட்டி விட்டு பார்த்தால் பின்னால் தெரியும் ஹீட்டர்  பிளேட்டில் ஒரு சின்ன உருளை ( உருளைகிழங்கு இல்லை மக்கா ))  சிலிண்டரில் அதனை வைத்து ஸ்குரு செய்திருப்பார்கள். அதிலிருந்து ஒரே கலரில் மெல்லிய வயரில் பார்க்கும் போதே தெரியும் . இதை பெண்கள் கூட செய்யலாம் .
           ஆனால் எக்ஸாஸ்ட் ஃபேனில் , வால் பேனில் ஹீட்டர் கிடையாது  அதுக்கு  பதிலாக சிங்கிள் காயில் இருக்கும் . அந்த காயில் இருக்கும் பின் பக்க டோரை கழற்றி விட்டு  பார்க்கும் போது அது தெரியாது .ஆனால் காயிலை சுற்றி மொத்தமான பேப்பர் , பேப்பரால் ஒட்டி இருப்பார்கள் . நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் .அந்த மொத்த பேப்பரை கவணமாக பிய்த்து வெளியே எடுக்கனும் .
         அதுக்குள்ளே போகும் இரெண்டு வயரிகளில் ஏதாவது ஒரு பக்கம் வயரில் இந்த தெர்மல் ரெஸிஸ்டரை இனைத்து இருப்பார்கள் . இங்கே உள்ள தெர்மல் ரெஸிஸ்டர் முன்பு பார்த்த அளவுக்கு இருக்காமல்  சின்னதா மஞ்சள் கலரில் இருக்கும் .((முன்பு சொன்ன  ஐட்டங்களில் வெள்ளை கலரில் இருக்கும் ))இங்கே வாட்டேஜ் அதிகம் இருக்காததால் அளவில் சின்னதா இருக்கும் . தெர்மல் ரெஸிஸ்டரை மெதுவாக கட் செய்து விட்டு வயரை நேரிடையாக சால்டரோ இல்லை அப்படியே ஜாயின் செய்து டேப் ஒட்டி விட்டால் போதும் . பிய்த்த மொத்த பேப்பரை திரும்ப ஒட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது
      திரும்ப கழட்டிய ஸ்குருக்களை அதன் அதன் இடத்தில் மாட்டி ஓட விடுங்கள் இப்போது ஃபேன் இயங்க ஆரம்பிச்சுடும் . புதுசாக ஒன்னு வாங்க வேண்டியதில்லை .இந்த வேலையை செய்ய அதிக பட்சம் உங்களுக்கு அரை மனிநேரம் கூட ஆகாது .இதுக்காக வெளியே யாரையும் எதிர்பார்க்கவும் தேவை இருக்காது .பணமும்  மிச்சமாகும் J

  டிஸ்கி :-  உங்களையும்  ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது . தேவைப்படும் போது இன்னும் இதுப்போல டெக்னிக் பதிவுகள் இந்த பிளாகில்  தொடரும். அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை  விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..       

Saturday, September 3, 2011

ஒரு .......டைரி....!!!-----3

89 என்ன சொல்றாங்ன்னா ...

                      ஜுலை 2010
      ரூம் மேட்டுடன் ஒரு விடுமுறை நாளின் மாலை நேரம் சிட்டியை  வலம் வந்தோம் . பேசிக்கொண்டே  வரும் போது அவன் சொன்னான் . காலையிலிருந்தே காது லேசாக அடைப்பது போல இருக்கு  பேசுவது எதுவும் சரியா கேக்கலன்னு சொன்னான் .((ஒரு வேள நம்ம போடும் மொக்கைக்கு பயந்துட்டானோ )) இங்கே ஒரு சையண்டிஸ்ட் வேஸ்டா ((யாரு நாந்தேன் )) இருக்கும் போது கிடைச்ச சான்ஸ விடலாமா வா பக்கத்திலிருக்கும் கிளினிக்குக்கு போகலாமுன்னு வலு கட்டாயமாக கூட்டிகிட்டு  போனேன் . 
        போன  இடத்தில் ஒரு ரிஷப்ஷனிஸ்ட் புன்சிரிப்புடன் (ஆடு மாட்டிகிச்சுங்கிரமாதிரி )டாக்டரிடம் உள்ளே அழைத்துப்போனாள்.அங்கே இருந்ததோ மொத்தமே எங்களை சேர்ந்தது நாலே பேர்தான் . ரூம் மேட்டை அந்த ராட்சத நாற்காலியில் உட்கார வைத்து காதுக்குள் லேசான சுடுதண்ணியை ஸ்பிரே செய்து ஒரு ரூபாய்க்கு பஞ்சை வைத்து சுத்தம் செய்து  (ரெண்டு காதுக்கும் சேர்த்து ) 150 Dhs   வாங்கிகிட்டார் . நண்பன் அழுதுகிட்டே மொய் வச்சான் .
    திரும்ப வரும் போது அமைதியா வந்தான் . ஏண்டா என்ன ஆச்சி இப்பதான் காது நல்லா கேட்குமே ஏன் பேசாமல் வருகிறாய்ன்னு கேட்ட்துக்கு . ஏதாவது ஒன்னு தப்பி தவறி என் வாயில் வந்தா நீ உடனே என்னை ஐ சி யூ விலேயே அட்மிட் செய்துடுவாய் அதான் வாயை திறக்கவே பயமா இருக்குன்னு சொன்னானே பார்க்கலாம் .
     இப்பல்லாம் எந்த பிரச்சனை இருந்தாலும் உஷரா வாயை திறப்பதே இல்லை. ஒரு வேளை பயபுள்ள திருந்திட்டானோ ...!! 

                    ஆகஸ்ட் 2010
இந்த தொடர் இதிலாவது முடியுமா..??  பொறுமையை சோதிக்கிறானே...!!!

      ஒரு கஞ்சப்பய  அன்னைக்கி பார்த்துதான் விருந்துக்கு கூப்பிட்டான் , என்னது இது ஏதாவது மழைவறதுக்கு அறிகுறியா ?  இல்லை , நம்ம ஏழரை என்னைய விட்டுட்டு  போய்ட்டுதான்னு சந்தேகப்பட்டுகிட்டே கூட போனேன் . ஏதோ வீட்டுல சந்தோஷமான விஷயம் நடந்திருக்குப்போல . ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்தான் . (( நானும் அவனும் மட்டுமே )).
     எதை பத்தியும் கவலைப்படாதேன்னு நிறைய  ஐட்டங்கள் ஆர்டர் செய்தான் .அன்லிமிட் பஃபே டைப்  ஒரு வழியா சாப்பிட்டு முடிந்ததும். தன்னோட கிரடிட் கார்டை குடுத்தான் . கொண்டு போன சர்வர் அதே வேகத்துடன் திரும்ப வந்தான் . கார்டு வேலை செய்யலையாம் . இதென்ன சோதனைன்னு நினைச்சிகிட்டே  டெபிட் கார்டை சர்வரிடம் நீட்டினான் . திரும்பவும் சர்வர்  அதே வேகத்துடன் திரும்ப வந்து இந்த கார்டும் வேலை செய்யலைன்னு திரும்ப குடுத்துட்டான்.
      இரெண்டு கார்டும் ஒரே பேங்க்தான் .என்ன பிரச்சனைன்னு தெரியல , வெளியே இருக்கும் ஏ டி எம்மில்  போய் என்னை எடுத்து வரும் படி சொன்னான் . நானும் ரெண்டு கார்டையும் வாங்கி கிட்டு வெளியே வந்தேன் .   கார்டு இரெண்டுமே  ஏ டி எம்மில் சரியாகவே வேலை செய்தது . பணம்  எடுத்துக்கிட்டு வரும் போது சரியாக என் பாஸ் வந்து என் கையபிடிச்சி உடனே வா (ஹெட்) ஆஃபீஸில நெட் ஒர்க் வேலை செய்யலன்னு காருக்குள்ளே தள்ளி விட்டார் .
    நான் நிலைமைய சொல்லி முடிக்கும் போது கார் கிட்ட தட்ட20 கிலோ மீட்டர்  போய் விட்டிருந்தது. அப்புறம் வேறு ஆள்கிட்டே பணம் குடுத்து அனுப்பும் போது அதிக மில்ல ஒரு 3 மணிநேரம் போய்டிருந்துச்சி .கொலவெறியில உட்கார்ந்திருந்ததா  தகவல் .((நான் ஒரு 10 நாள் கழிச்சிதான் அவனையே பார்த்தேன்)) .ம்ம்ம்ம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்  ஹோட்டல் போகும் போது என்னிடம் போன் கையில் இல்லை ரூமிலேயே மறந்து வச்சிட்டு போய்ட்டேன்    
                        செப்டம்பர்  2010
      ஏதோ புதுசா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷனுக்காக ஒரு பிரபல இன்ஸ்டிடியூட்டில  15 நாளைக்கு டிரைனிங்காக அனுப்பி வச்சாங்க . அங்கே ஆண்களை  விட பெண்களே  அதிகம் . ஒரு வேளை ஆண்களுக்கு படிப்பே ஏறாதோ  என்னவோ .  
    முதல் நாள் புரபஷர் மாதிரி ஒருத்தர் வந்து அரைமணி நேரம் சொந்த புராணத்தை பாடினார் . என்ன கொடுமை இது எங்கே போனாலும் இவனுங்க தொல்லை தாங்கமுடியலைப்பா ..!!  அதுல முக்கியமா  அவர் சொன்னது இதுதான் .அவரும் அதே ((இதே))  இன்ஸ்டிடியூஷனில் படித்து அங்கேயே அவருக்கு வேலை கிடைத்து இருக்கு அதை பெருமையா சொன்னார் .
     இங்கே படிப்பு அவ்வளவு மட்டமாவா இருக்கு .வெளியே வேலை கிடைக்காமதான் .இவர் இங்கேயே  வேலை பார்க்குறார்  போல. இதுல நாம் இங்கே படிச்சால் என்ன ஆகுறது அவ்வ்வ்வ்.. அடுத்த நாளிலிருந்து இந்த ஏரியா பக்கமே தலை வச்சி படுக்கல..ஹி...ஹி...
நா வரமாட்டேன் ....நா வரமாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்...!!

                 அக்டோபர்  2010     
      ஒரு யூ எஸ் பி டிரைவை வைரஸ் செக் செய்துகிட்டு இருக்கும் போது அதுல ஏகப்பட்ட மால்வேர் டிடக்ட் ஆகிட்டே இருந்துச்சி . அதுல இருக்கும் ஒவ்வொரு exe ஃபைலையும்  போல்டர் exe பைலா அது டூப்ளிகேட்டா காப்பி செய்து இருந்தது தெரிய வந்துச்சி .  ஒரு கட்டத்துல அது அப்படியே மேற்கொண்டு  தொடராம அப்படியே நின்னுடுச்சி  .எந்த ஒரு கீபோர்ட் , மவுஸும் செயல்படல .
      கம்ப்யூவை ஒரு தடவை அப்படியே ஸ்விட்ஜ் ஆஃப் செய்துட்டு திரும்ப ஆன் செய்தால் கருப்பு ஸ்கிரீனில்  சீடி டிரைவில இருப்பதை வெளியே எடுத்து விட்டு ஆன் செய்யும் படி சொன்னது . அப்படி இல்லாவிட்டால் ரீஸ்டார்ட்  செய்யும் படி சொன்னது . உள்ளே இருக்கும் 80 ஜிபி ஐட்டமும் காலி ப்போலன்னு நினைச்சி ஒரே பீலீங் .
     என்ன செய்தாலும் அதே கருப்பு ஸ்கிரீன் அதே ரீஸ்டார்ட் . கிட்ட தட்ட 3 மணி நேரமும்  டிரை செய்தும் ஒன்னும் ஆகல . கடைசியா  பி சி பின் பக்க கதவை திறந்து விட்டு காற்று அடிக்கும் ஏர் புளோரை வைத்து நன்றாக ((பிராச்சர் ஃபேன் , பவர் சப்ளை உள்ளே , அவுட் ஃபேன் )) காற்றடித்து உள்ளே இருக்கும் தூசியை வெளியேற்றினேன்.
     திரும்ப ஆன் செய்யும் போது எந்த தொந்திரவும் செய்யாமல் நல்ல பிள்ளையை போல அமைதியா வேலை செய்தது.  பவர் சப்ளையிலோ  அல்லது பிராச்சர் மேலே இருக்கும் ஃபேன் இதுல ஏதாவது தூசி சேர்ந்தாலோ  அல்லது சின்ன எலக்டிரிக் தடங்கல் வந்தாலும் கம்ப்யூ ஸ்லோவா ஆகிடும்.
இதுல உள்ள நீதி என்னன்னா  அவரசப்பட்டு  எந்த முடிவுக்கும் லேசுல வந்திடப்படாது. சர்வீசுக்கு விட்டா உள்ளே உள்ள ஐட்டங்கள் (டேட்டாக்கள்)  களவு போக வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை நாமேதான் பார்க்கனும்
                 நவம்பர்  2010   
            இது வரை மத்தவங்களுக்கு பல்ப் குடுத்து வந்த எனக்கு மொத்தமா பல்ப் கிடைச்ச கதை இது அவ்வ்வ்வ்...மேலே நன்பணின் கிரெடிட் கார்டு அனுபவங்களால், கிரெடிட் கார்டுகளை வெளியே கொண்டு போவதில்ல்லை . அதுக்கு பதில் டெபிட் கார்டை கொண்டு போனேன். ஒரு ஷாப்பிங்  மாலில் மாடியில் 50 க்கு பர்ஸேஸ் செய்தேன் . அதுக்கு பிறகு கீழே வந்து 500க்கு பர்ஸேஸ் செய்யும் போது பணம் இல்லைன்னு ரிசிப்ட்  வந்தது. இதென்ன கொடுமை
     மூனு தடவை புல்லிங் செய்தும் இல்லைன்னே வந்தது .பிலிப்பைனி பொன்னு ஒரு மாதிரியா என்னை பார்க்க இப்பதான் மேலே பர்ஸேஸ் செய்தேன் பார்ன்னு ரிசிப்டை காட்ட வேறு ஆள் மூலம் மேலே கொண்டு போய் புல்லிங் செய்ய சரியா ரிசிப்ட் வந்துச்சி . நான் பழைய மூனு பில்லையும்  கையோடு கொண்டு வந்துட்டேன். ( இதான் என்னோட புத்திசாலிதனம் )இதிலென்ன் பல்புன்னு கேக்குறீங்களா மேலே படிங்க
     அடுத்த அரை மணிநேரம் கழிச்சு அதே பேங்கில் போய் பனம் எடுக்க போகும் போது 2000 திரம்ஸ்   குறைவா காட்டியது . பயந்து போய் மினி ஸ்டேட்மெண்ட் பார்க்க பர்ஸேஸ்  500 நாலு தடவை காட்டியது .இதுல வேடிக்கை ஒரு தடவைதான்  சரியான பில் மற்ற மூனும் தவறான பில்லே வந்தது.  ஆக பர்ஸேஸ் செய்த நேரம் இரவு என்பதால் பொழுது விடியும் வரை பொறுமையா இருந்தேன்
    மறு நாள் காலை ரிஜக்டாக இருந்த மற்ற மூனு பில்லும் என் கைவசம் இருந்த்தால் பேங்கில் காட்ட நீன்ன்ன்ன்ண்ட இடைவேளைக்கு (எதுக்கும் ஒரு லிட்டர் பால் குடிச்சிட்டு போங்க  நிறைய பேச தெம்பு வேனும் )பிறகு ஃபார்ம் எழுதி கொடுத்து அது செக் செய்து திரும்ப வர 15 நாள் பிடிச்சது. அது வரை டென்ஷன் தான் . அன்றிலிருந்து எங்கே போனாலும் நோ டெபிட் கார்டு  , ஒன்லி கேஷ்தான் .
   இதில் உள்ள நீதி : கார்டு யூஸ் செய்பவர்கள் . பண்ம் இல்லைன்னு வந்தாலும் அந்த துண்டு சீட்டை பத்திரமா வாங்கி வைக்கனும் , முடிந்த வரை அடுத்த அரை மணி நேரத்தில் சரியான அளவு பணம்தான் எடுக்கப்பட்டிருக்குதான்னு  உங்க பேங்க் அக்கவுண்டை செக் செய்யனும் .இல்லாவிட்டால் பின்னால் வருத்தப்படனும் . தப்பாக தெரிந்தால் 2 நாட்களுக்குள் பேங்கிற்கு உடனே போகனும் .இல்லாவிட்டால் பணம் கிடைக்காது .
                      டிஸம்பர் 2010 
யப்பா கடிதாங்க முடியல..!!  யாராவது காப்பாத்துங்கோவ்வ்வ்வ்வ்வ்

     வேலை நேரத்துல நம்ம ஃபிரண்டுக்கு அவன் லவர் கிட்டேயிருந்து போன் .(( இந்த பொண்ணுகளுக்கு மிஸ்டு காலை தவிர வேறு ஒன்னுமே தெரியாது )) கிட்ட தட்ட முக்கால் மணி நேரமா பேசினான் .திரும்ப வர மாதிரி தெரியல இதுவேலைக்காகாதேன்னு   கிட்டக்க போய் கேட்டதுல முக்கிய விஷயம்  இதுதான்  
      சீக்கிரமா அவனையே  கல்யாணம் செய்துக்குறேன் நம்புன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்கு . இவன் நம்பாத மாதிரியே  பேசிசிகிட்டு இருந்தான் . இந்த லவ்வு கிட்டதட்ட ஓரு வருஷமா ஓடிகிட்டு இருந்தது .இப்ப நம்ம்மாட்டேங்கிறானேன்னு எனக்கும் வருத்தம் . ஆண்கள் ஏமாற்றிதான் நாம இது வரை கேட்டிருக்கோம் .இங்கே இதென்ன புதுசா நம்ம பய கொ(கெ)ஞ்சிறானேன்னு எனக்கு ஆச்சிரியம் .
     இருந்தும் அவங்கள் பேச்சில நாம குறுக்கே போக்க்கூடாதுன்னு பேசாம இருந்தேன். கடைசியா இவன் சொன்னான் உங்க வீட்டில யாரையும் நான் நம்பமாட்டேன் அதுவும் கடைசியா கேட்டது. ஏன் நம்ம மாட்டேங்கிறே .அதுக்கு இவன் சொல்றான் இதையே தான் உங்க மூத்த அக்கா என்னிடம் சொல்லிச்சு , அப்புரம் வெளிநாட்டு மாப்பிள்ளையை பாத்ததும்  என்னைய கைவிட்டுடுச்சி “  பிறகு உன்னோட இன்னொரு அக்காவும் அதேதான் சொல்லிச்சு , அப்புறம் வசதியா ஒருத்தனை பாத்ததும் அவனையே  கல்யாணம் செய்துகிச்சு .
     இப்ப நீயும் அதே டயலாக்கை சொல்றே. அதான் நம்ம முடியலே”  ன்னு  சொன்னானே  பார்க்கலாம். அதுக்கு பிறகு எதிர் முனையிலிருந்து பதிலையே கானோம் போன் கட்..      
   விடாமுயற்சி கேள்விபட்டு இருக்கேன் .இது மாதிரி ஒரே வீட்டில ரூட் விடற  விடாமுயற்சியை கேட்டதே இல்லை .இது மாதிரி ஃபிரெண்டுகளை வச்சிருக்கேனேன்னு இப்போ அவனோட மூட் அவுட் எனக்கு வந்துருச்சி  அவ்வ்வ்வ்வ்J)

    ஒரு வழியா தொடரை முடிச்சிட்டேன்னு நினைக்காதீங்க .இன்னும் நாலு வேற தொடர் பாக்கி இருக்கு .யாரோ  கூப்பிட்ட நினைவு இருக்கு ஆனா சட்டென்னு நினைவுக்கு வரல :-)

பிளேடு குறிப்பு :- ஒரு அன்பு சகோதரியின்  வேண்டுக்கோளுக்காக மட்டும் சில  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது . அவருக்கு என் நன்றி :-)