Thursday, September 29, 2011

போயே போச்- போயிந்தி -இட்ஸ் கான் -காயஃப்


    பிளாக் சம்பந்தமா எழுதி நாளாகி விட்டதால இருக்கும் சொந்த சந்தேகங்களை  ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு சமீக காலமாக பிளாகை கலங்கடித்துக் கொண்டிருக்கும் பெரிய சந்தேகத்தை தீர்க்கலாமென்னு ஓடோடி வந்த என்னை ....(( சொல்லு ஷாந்தா சொல்லுன்னு யாரோ நம்பியார் ஸ்டைலில் சொல்லுவது கேட்குது  ))
           அனைந்து எரியும் மெழுகு வர்த்தியைப்போல ஓரிரு நாட்கள் முரண்டு பிடிக்கும் பிளாக் திடீரென்று ஒரு நாள் ரெட் லைட்டை காட்டி விடுகிறது . உனக்கு இங்கே வேலை இல்லை ஓடிப்போங்கிற மாதிரி . அது வரை பிளாக் + டெம்பிளேட்  டவுன்லோட் செய்யாதவர்கள் படும் டென்ஷன் சொல்லி மாளாது.  அவர்கள் டென்ஷன் நம்மையும் சில நேரம் ஆட்டி படைக்கும் . இதுக்கு முதல் காரணம்  மால்வேர் என்று சொல்லக்கூடிய கோள் சொல்லும் புரோகிராம்தான். நமக்கு தெரியாமலேயே  அதை அனுப்பியவர்க்கு நம்முடைய சொந்த சரக்குகளை பார்ஸல் செய்து அனுப்பிக்கொண்டிருக்கும் .
எங்கே செல்லும் இந்த பாதை ....!!!
        
     சரி இதை எப்படி சரி செய்வது..?  இதை ஏன் நம்முடைய ஆண்டி வைரஸ் சிலசமயம்  கண்டுக்கொள்ள மாட்டேன் என்கிறது ..? அடிப்படை காரணம். பிளாக் நம்முடைய சொந்த கம்ப்யூடரில் இல்லை . கூகிள் சர்வரில்  இருக்கிறது . அதை இயக்கும் , அதை புரிந்துக்கொள்ளும்  தன்மை நம்முடைய கம்யூட்டரில் இருக்கிறது. கூகிள் குடுக்காத கோட்களை நாம் இனைக்கும் போது அந்த கோட்களை குடுத்த சர்வரை மால்வேர் தாக்கும் போது அது (கோட்) இனைக்கப்பட்ட  அத்தனை பிளாகையும் அது பாதிக்கிறது . சில நேரம் பிஸினஸ்களுக்காக கூகிளே  நிறுத்தி வைக்கலாம் .ஓசியில உபயோகப்படுத்தும் நாம் அதை கேள்வி கேட்கமுடியாது. பிளாக் +டெம்பிளேட் காப்பி இருந்தால் புதியதாக ஒரு பிளாக் ஓபன் பண்ணி  அதை திரும்ப கொண்டு வரலாம் .
       சரி  மால்வேர் பாதித்த நமது பிளாகை இரெண்டு வகைகளில் திரும்ப பெறலாம் . அதில் முதலாவது  உங்களுடைய டெம்பிளேட்டை டேஷ் போர்ட் >> டிஸைன்  >>எடிட் எச் டி எம் எல் போய் அதில் மேலே எக்ஸ்பேண்ட் விஜெட்டில் டிக் செய்து அதிலுள்ள  கோட்களை  ஒரு நேட் பேடில் காப்பி செய்துக்கொள்ளவும். அதில் நாம் தேடவேண்டியது  எங்கே  ஜாவா ஸ்கிரிப்ட்  , எக்ஸ் எம் எல் கோட் முடியுதோ அங்கே nn “  சந்தேகத்து க்கிடமான எழுத்து இருக்கான்னு பார்க்கனும்  ((  look at the code carefully, and look for "Gadgetnn" and "HTMLnn", where "nn" will be the sequential number for that HTML / XML gadget. This is important  ))
          இது கிடைத்ததும்  அதுக்கூடவே    <div class='widget Gadget' id='Gadget1' />  அல்லது  <div class='widget HTML' id='HTML1' />  இந்த வரி இருந்தால் இதை முன் பின் யோசிக்காமல்  டெலிட் செய்யவும் . உங்களிடம் ஆல்ரெடி  பழைய டெம்பிளேட் காப்பி இருப்பதால் பயப்படவேண்டியதில்லை . இந்த வரி ஒரு வேளை உங்களுக்கு கிடைகாமல்  போனால் .கடந்த இரெண்டு மூனுமாத்துக்குள்ளே  ஏதாவது புதியதாக சேர்த்திருந்த விட்ஜெட் , ஜாவா ஸ்கிரிப்டை  டெலிட் செய்யவும் .   ((கடந்த காலங்களில்  உலவு  பட்டை நிறுவி இருந்த கம்யூட்டர்கள் பிளாக் ஓபன் செய்ய நிறைய கஷ்டங்களும் , வார்னிங்க மெசேஜ்கள் வந்ததும் .பின் அந்த பட்டையை நீக்கியதும் சரியானது நினைவு இருக்கலாம்  ))  உங்களுக்கு அந்த கோட் தேவை என்று இருந்தால் ஒரு சில மாதங்கள் கழித்து இனைத்துக்கொள்ளலாம் . அதற்குள் அந்த கோட் வழங்கிய  நிறுவணம் பிரச்சனைக்குறிய மால்வேரை நீக்கிவிடும்.
ஏன் நான் ரோட்டு நடுவில நின்னா பார்க்கமாடீங்களா..???

           பிளாக் உலகமே ஜாவா , ஜாவா ஸ்கிரிப்டில்தான் செயல் படுகிறது . காப்பி பேஸ்ட் செய்யாமல் இருக்கவும் இதில்தான் கோட் வருகிறது . டெம்பரவரியாக இதை நிறுத்தி வைத்தால் மொத்த பிளாகையுமே  காப்பி பேஸ்ட் செய்து விடலாம் . பிரவுசர் கேச் ((   Clear browser cache.  )) திரும்ப டெஸ்ட் செய்துப்பாருங்கள் . பிளாக் திறக்கும் அப்படி திறக்கவில்லையென்றால்  முதலிலிருந்து திரும்ப தொடரவும் . சரியாகி விடும் .
  இரெண்டாவது  வழி :  கூகிள்  வெப்மாஸ்டர்  டூல்  இதுவும் பிளாக் டேஷ்போர்டில் கீழே இருக்கும் . இதை திறந்து இதன் முகப்பு பக்கத்திற்கு போய்  அதில் உங்கள  பிளாகையும் இனைக்கவேண்டும் .  இனைத்தால் அது கூகிளுக்கு சப்மிட் கேட்கும் குடுத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அது சரி செய்யும் .அது குடுக்கும் கோடையும் உங்க பிளாக் உள்ளே டெம்பிளேடில்  < ஹெட் > கோடுக்கு முன் குடுத்தால் அடுத்த தடவை மால்வேர் வார்னிங்  வராது .

50 என்ன சொல்றாங்ன்னா ...:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அப்படியா, நல்ல தகவலாயிருக்கே!

rajamelaiyur said...

Very useful information

MANO நாஞ்சில் மனோ said...

டைமிங் பதிவு.....இங்கே விக்கி இன்னைக்கு டென்ஷன் ஆகிட்டான் இப்பதான் நிரூபன் மீட்டு கொடுத்தார்...

MANO நாஞ்சில் மனோ said...

நான் என் பிளாக்கை டவுன்லோட் பண்ணி வச்சுட்டேன் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

ஒட்டகம் பாயா சாப்பிட்டா இப்பிடியெல்லாம் அறிவு வருமா...???

மோகன்ஜி said...

அன்பின் ஜெய்லானி! மிக உபயோகமான தகவல்கள்.. நன்றி சகோதரா!

Menaga Sathia said...

thx u for sharing this post jai!!

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பயனுள்ள பதிவு .வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

உபயோகமான பகிர்வுக்கு நன்றி.இந்த பிரச்சினையால் சக பதிவர் ஜலீலா இப்பொழுதுதான் மீட்டெடுத்துள்ளார்.

Prabu Krishna said...

நன்றி சகோ. இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஹையோ... உஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் சத்தம் போட்டு டிசுரேப்புப் பண்ண வேண்டாம்... நான் கொஞ்சம் நல்ல வடிவா இதைப் படிக்கோணும்.. ஒரு கப் ஜூஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்...

எல்லோரும் புத்தினுள் இருந்திட்டு ஒரேயடியாக பதிவைப் போட்டால், நான் அங்கின போவேனா இங்கின போவேனா என் வேலையைப் பார்ப்பேனா..:)).

இனிமேல் எல்லோருக்கும் ரைம் ரேபிள் போட்டுத் தரப்போறேன்:)) அந்த ஒழுங்கிலதால் போடோணும் ஓக்கை:)) அப்பூடியெண்டெல்லாம் சொல்ல மாட்டேன்.. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))...ஓக்கை எல்லோரும் காதில வச்ச கொட்டினை எனி எடுங்க, நான் கதைக்காமல் படிச்சிட்டு கொமெண்ட் போடுறேன்.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//போயே போச்- போயிந்தி -இட்ஸ் கான் -காயஃப்
//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தலைப்பைப் பார்த்ததுமே எனக்கு எல்லாமே போச்ச்ச்ச்ச்ச்ச்:)).

நல்ல பதிவு ஜெய், ஆனா
//உங்களுடைய டெம்பிளேட்டை டேஷ் போர்ட் >> டிஸைன் >>எடிட் எச் டி எம் எல் போய் அதில் மேலே எக்ஸ்பேண்ட் விஜெட்டில் டிக் செய்து அதிலுள்ள கோட்களை ஒரு நேட் பேடில் காப்பி//

இதே முடியாமல் இருக்கு, பிறகு இதுக்கு மேல எங்கின போறது அவ்வ்வ்வ்வ்:)))..... நான் மாட்டேன்... வந்தபின் காப்போனாகத்தான் மாறோணும்:)).

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//ஏன் நான் ரோட்டு நடுவில நின்னா பார்க்கமாடீங்களா..???
//

பார்க்க மாட்டாங்க உளக்கிடுவாங்க:))).. மயிலைப்போல இருக்கே:)))).

Mohamed Faaique said...

புரிஞ்சுது'னு நினைக்கிறேன். ஆனால் புரிஞ்சிருக்காது போல...

மாய உலகம் said...

சூப்பர் பாஸ்... போனவாரம் டேஸ்போர்டு ஓப்பன் பண்ண முடியாம போச்சு... நல்ல வேளை தானாவே சரியாயுடுச்சு... பயனுள்ள பதிவு பாஸ்.. பகிர்வுக்கு நன்றி... இந்த பதிவ குறிச்சு வச்சுக்கிறேன்... டைரி ப்ளீஸ்ஸ்ஸ்... பென் ப்ளீஸ்..... ஹேண்ட் ப்ளீஸ்.. எழுதிதாங்க ப்ளீஸ்... அவ்வ்வ்வ்வ்வ்... பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அகெய்ன் பாஸ்

Angel said...

பயனுள்ள தகவல் ஜெய்லானி .

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN --// அப்படியா, நல்ல தகவலாயிருக்கே! //

வாங்க நிஜாம் பாய் வாங்க ...!! இந்த பிளாக் உலகத்துல சில டேஞ்சர் மேட்டர் ஓடிகிட்டு இருக்கு .அதுக்கு முன்னெச்சரிக்கைதான் இது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@"என் ராஜபாட்டை"- ராஜா --// Very useful information //

வாங்க.. வாங்க..!! சந்தோசம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--/டைமிங் பதிவு.....இங்கே விக்கி இன்னைக்கு டென்ஷன் ஆகிட்டான் இப்பதான் நிரூபன் மீட்டு கொடுத்தார்... //

வாங்க..வாங்க...!! எதுக்கும் ரெடியா இருந்தா எதை பத்தியும் கவலைப்படவேண்டாம் :-).

//நான் என் பிளாக்கை டவுன்லோட் பண்ணி வச்சுட்டேன் ஹி ஹி....//

பார்க்க http://kjailani.blogspot.com/2010/05/blog-post_31.html

//ஒட்டகம் பாயா சாப்பிட்டா இப்பிடியெல்லாம் அறிவு வருமா...??? //

யாருக்கு ஒட்டகத்துக்கு கால்தான் நஷ்டம் ஹி...ஹி... :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மோகன்ஜி --//அன்பின் ஜெய்லானி! மிக உபயோகமான தகவல்கள்.. நன்றி சகோதரா! //

வாங்க பிரதர் வாங்க...!! சந்தோஷம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Philosophy Prabhakaran said...

தகவலுக்கு நன்றி...

Shanmugam Rajamanickam said...

உபயோகமான தகவல்...

Shanmugam Rajamanickam said...

நன்றி,,,,,,,,,

ஹுஸைனம்மா said...

நல்ல பதிவு. ஆனா, இன்னும் தெளிவா, எளிமையா இருந்திருக்கலாமோன்னு தோணுது. அதாவது, நம்பர் போட்டு, ஸ்டெப் பை ஸ்டெப்பா இருந்தா என்னைப் போல உள்ளவங்களும் ஈஸியாப் புரிஞ்சிப்போம்ல?

(ம்ம்.. தானம் கொடுத்த மாட்டை பல்லப் புடிச்சிப் பாத்த கதயாவுல்ல ஈக்கிது - அப்படின்னு யாரோ சொல்றாஹளே...) :-))))))

குறையொன்றுமில்லை. said...

நல்ல உபயோகமான பதிவு. ஹுஸைனம்மா சொன்னதுபோல இன்னும் எளிமையா சொல்லி இருக்கலாம்மோன்னு தோனுது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

பொன் மாலை பொழுது said...

கிடைக்கும் அத்தனைகளையும் வாறி பிளாக்கில் வைத்துக்கொண்டு பின்பு திண்டாடுவானேன் ?
பயன்பாடான தகவல்கள். நன்றி ஜெய்லா.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

மேஏஏஏஏஎ.. சே..சே...என்னப்பா இது செம்மறிமாதிரிக்கிடக்கு:)) மீஈஈஈஈஈஈஈ 28:)).

middleclassmadhavi said...

உங்களைப் பற்றி வலைச்சரத்தில் எழுதியுள்ளேன், http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_02.ஹ்த்ம்ல் - முடிந்த போது பார்க்கவும்

ஜெய்லானி said...

@@@S.Menaga--// thx u for sharing this post jai!!//

வாங்க..வாங்க.!! சந்தோஷம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

ஜெய்லானி said...

@@@ஆயிஷா அபுல்.--//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பயனுள்ள பதிவு .வாழ்த்துக்கள். //

வாங்க..வாங்க..!! அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்) சந்தோஷம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--// உபயோகமான பகிர்வுக்கு நன்றி.இந்த பிரச்சினையால் சக பதிவர் ஜலீலா இப்பொழுதுதான் மீட்டெடுத்துள்ளார். //

வாங்க ..வாங்க..!! அப்படியா..!! சரியான வரையில் சந்தோஷமே :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Prabu Krishna --// நன்றி சகோ. இப்போதுதான் தெரிந்து கொண்டேன். //

வாங்க..வாங்க..!! எப்போதும் பிளாக் ஒரு காப்பி எடுத்துவைத்துக் கொள்ளுங்கள் . அதுதான் தேவையான போது உதவும் :-) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//ஹையோ... உஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் சத்தம் போட்டு டிசுரேப்புப் பண்ண வேண்டாம்... நான் கொஞ்சம் நல்ல வடிவா இதைப் படிக்கோணும்.. ஒரு கப் ஜூஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்...//

வாங்க..வாங்க..!! ஜுஸ் என்ன மாதிரி வேணும் , உருளையில் செஞ்சதா...??? இல்லை லெமன் ஜுஸ் வேனுமா..????? எல்லாமே சொந்த தயாரிப்பு ஹி...ஹி... :-)))

//எல்லோரும் புத்தினுள் இருந்திட்டு ஒரேயடியாக பதிவைப் போட்டால், நான் அங்கின போவேனா இங்கின போவேனா என் வேலையைப் பார்ப்பேனா..:)). //

மரத்தை விட்டு இறங்க வேனாம் அதுதான் ஸேஃப்டி :-)))

// இனிமேல் எல்லோருக்கும் ரைம் ரேபிள் போட்டுத் தரப்போறேன்:)) அந்த ஒழுங்கிலதால் போடோணும் ஓக்கை:)) அப்பூடியெண்டெல்லாம் சொல்ல மாட்டேன்.. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))...ஓக்கை எல்லோரும் காதில வச்ச கொட்டினை எனி எடுங்க, நான் கதைக்காமல் படிச்சிட்டு கொமெண்ட் போடுறேன். //
இந்த டைம் டேபிளை முதல்ல மயிலுக்கு மயில் செய்யுங்க ஒரு செமஸ்டர் முடிஞ்சும் உறக்கம் முடியல ஹா..ஹா... :-)))

///போயே போச்- போயிந்தி -இட்ஸ் கான் -காயஃப்
//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தலைப்பைப் பார்த்ததுமே எனக்கு எல்லாமே போச்ச்ச்ச்ச்ச்ச்:)). ///

ஹா..ஹா... எது போச்சுன்னு சொன்னா அடுத்த பதிவுக்கு ரெடியாகிடுவேன் ஹா..ஹா :-)))))

நல்ல பதிவு ஜெய், ஆனா
//உங்களுடைய டெம்பிளேட்டை டேஷ் போர்ட் >> டிஸைன் >>எடிட் எச் டி எம் எல் போய் அதில் மேலே எக்ஸ்பேண்ட் விஜெட்டில் டிக் செய்து அதிலுள்ள கோட்களை ஒரு நேட் பேடில் காப்பி//

இதே முடியாமல் இருக்கு, பிறகு இதுக்கு மேல எங்கின போறது அவ்வ்வ்வ்வ்:)))..... நான் மாட்டேன்... வந்தபின் காப்போனாகத்தான் மாறோணும்:)). //

இது புதிய மாடல் டேஷ்போர்டில குழப்பும் ..இதனாலேயே நான் இன்னும் பழசை வைத்துள்ளேன்.
///ஏன் நான் ரோட்டு நடுவில நின்னா பார்க்கமாடீங்களா..???//

பார்க்க மாட்டாங்க உளக்கிடுவாங்க:))).. மயிலைப்போல இருக்கே:)))). //

ஹா..ஹா..இது ஏன்னு இன்னும் பூஸுக்கு புரியல ...ஓகே ..ஓகே..:-))))))x34679 .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique --// புரிஞ்சுது'னு நினைக்கிறேன். ஆனால் புரிஞ்சிருக்காது போல..//

வாங்க...வாங்க..!! இதே டையலாக்கை வச்சுதான் நான் வாத்தியார்களை கிண்டலடிச்சிகிட்டு இருப்பேன் ஹா...ஹா... :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாய உலகம் --//சூப்பர் பாஸ்... போனவாரம் டேஸ்போர்டு ஓப்பன் பண்ண முடியாம போச்சு... நல்ல வேளை தானாவே சரியாயுடுச்சு...//

வாங்க...வாங்க..!! இது கூகிள் சர்வர் சிலநேரம் ஃபிரீஜ் ஆகிடும் . சில நேரம் பிளாகே இல்லை 404 not found அப்படின்னு வந்து பயமுறுத்தும் . ஜஸ்ட் 5 நிமிஷம் கழிச்சு டிரை செய்தா வரும் . கவலை வேண்டாம் .எதுவுமே கால் மணிநேரம் அதே போல இருந்தால் உடனே காரியத்தில இறங்க வேண்டியதுதான் :-)
// பயனுள்ள பதிவு பாஸ்.. பகிர்வுக்கு நன்றி... இந்த பதிவ குறிச்சு வச்சுக்கிறேன்... டைரி ப்ளீஸ்ஸ்ஸ்... பென் ப்ளீஸ்..... ஹேண்ட் ப்ளீஸ்.. எழுதிதாங்க ப்ளீஸ்... அவ்வ்வ்வ்வ்வ்... பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அகெய்ன் //

ஒரு நேட் பேடில .log அப்படின்னு எழுதிட்டு திரும்ப அதை ஓபன் செய்து ஏதாவது டைப்பி ஸேவ் செய்து திரும்ப ஓபன் செய்யுங்க ..இது ஒரு ஸிம்பிள் டைரி ............நோ பேனா ...நோ....பேப்பர் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@angelin --//பயனுள்ள தகவல் ஜெய்லானி .//

வாங்க..வாங்க..!! சந்தோஷம் :-) உங்களுக்கு இந்த 16 ராசியான நெம்பர்தானா ஹா..ஹா.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

சரியான நேரத்தில் சரியான பதிவு போட்டு இருக்கீங்க

மால்வேர் என்றதும் அது என்னவோ பெரிய டயனோசர் மாதிரி பயந்துட்டேன்.

ஒரு வழியா போன பிலாக்கா சில நல்ல உள்ளங்களால் திரும்ப பிடிச்சி வச்சாச்சு,

ஆனால் இன்னும் சரியான மாதிரி தெரியல

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு! நிறைய பேருக்கு இது உதவியாக இருக்கும்!
எனக்கும் கடந்த 4 நாட்களாக பிளாகரைத் திறக்க முடியாமல் நிறைய பிரச்சினைகள்! என் மகன் நேற்று CASPERSKY என்ற ANTI VIRUSஐ பதிவிறக்கம் செய்தார். அது ஸ்கான் பண்ணி முடிந்ததும் எல்லாமே சரியாகி விட்டது.

எம் அப்துல் காதர் said...

// சொந்த சந்தேகங்களை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு சமீக காலமாக பிளாகை கலங்கடித்துக் கொண்டிருக்கும் பெரிய சந்தேகத்தை தீர்க்கலாமென்னு ஓடோடி வந்த என்னை ....(( //

இப்படி எல்லோர் சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டிருந்தா கல்லா கட்டமுடியாதே தலீவா:-0

எம் அப்துல் காதர் said...

// திடீரென்று ஒரு நாள் ரெட் லைட்டை காட்டி விடுகிறது//

ஹி.. ஹி.. சரி.. சரி.. ஒரு வார்த்தையை போட எப்படியெல்லாம் யோசிக்கிராய்ங்கய்யா அவ்வவ்வ்வ்வ்....

எம் அப்துல் காதர் said...

// வாங்க..வாங்க..!! ஜுஸ் என்ன மாதிரி வேணும், உருளையில் செஞ்சதா...??? இல்லை லெமன் ஜுஸ் வேனுமா..????? எல்லாமே சொந்த தயாரிப்பு ஹி...ஹி... :-))) //

உருளைக் கிழங்கு ஜூஸ் கொஞ்சம் புளிப்பா கிடைக்குமா ?? ... அய்யா அவ்வ்வ்வவ்...!!

எம் அப்துல் காதர் said...

// ஹா..ஹா... எது போச்சுன்னு சொன்னா அடுத்த பதிவுக்கு ரெடியாகிடுவேன் ஹா..ஹா :-))))) //

ஆனா சந்தேகப் பதிவு மட்டும் வேணாமய்யா. :-))

எம் அப்துல் காதர் said...

// ஹா..ஹா..இது ஏன்னு இன்னும் பூஸுக்கு புரியல ... //

எனக்கே இன்னும் புரீல!! பூஸுக்கு மட்டும் வெளங்கிடுமாக்கும் அவ்வ்வ்வ்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

எம் அப்துல் காதர் said...

// போயே போச்- போயிந்தி -இட்ஸ் கான் -காயஃப் //

போயல்லோ - ரோ - சொலேகியாச்சே - என்று இன்னும் வார்த்தைகள் சேர்த்திருந்தால் பதிவின் அழகு கூடியிருக்குமல்லோ...!! அவ்வ்வ்வ்

அன்புடன் மலிக்கா said...

அதுசரி நாமளும் சாக்கிரதையா இருக்கனுமோ.. நமக்கு கவலையில்லை அண்ணாத்தே இருக்கார் அப்படிங்கிர தகிரியம்தான் எப்புடி..

அது சரி கேட்க மறந்துட்டேன் எப்படி இருக்கீங்க
இன்னும் ஒன்னும் கேட்க மறந்தாச்சிநான் யாருன்னு தெரியுதா???????????????????????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

குடுத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அது சரி செய்யும் .அது குடுக்கும் கோடையும் உங்க பிளாக் உள்ளே டெம்பிளேடில் < ஹெட் > கோடுக்கு முன் குடுத்தால் அடுத்த தடவை மால்வேர் வார்னிங் வராது .//

ஓ.. அதுக்கு அப்பால என்ன செய்யனும் சார்?..
ஹி..ஹி

vetha (kovaikkavi) said...

நல்ல பதிவு யெய்லானி பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
(கூகிள் குரோமில் வர உமக்கு கருத்திட முடிகிறது. )

ப.கந்தசாமி said...

தலை சுத்துதே ஜெய்லானி, எங்களுக்கெல்லாம் புரியற மாதிரி ஏதாச்சும் சொல்லுங்களேன்?

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

மீ த 50:)))... ஹையோ இது வயசில்லை:)))... இப்போ என்ன எழுதினாலும் பத்துத்தடவை யோசிக்க வாண்டிக் கிடக்கே அவ்வ்வ்வ்வ்:))).

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))