Sunday, October 23, 2011

சந்தேகம் -9 விண்வெளி

63 என்ன சொல்றாங்ன்னா ...

     கொஞ்ச நாளைக்கு ஒரு தடவை பீதியை கிளப்புறது நாசாவோட வேலை . எப்பவெல்லாம் விண்கற்கள் பூமியை அட்டாக் செய்யும் .அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கு . அதுல ஒன்னு 2019  பிப்ரவரி 1ம்தேதி யோட பூமி அழியப் போகுதாம். மாயன் காலண்டரை விட இவங்க வச்சிருக்கிற காலண்டர்தான் ரொம்பவும் பயங்கரமா இருக்கு .
    
    நாசாவுக்கு யாராவது அப்பாயின்மெண்ட் வாங்கி தாங்களேன் . இருக்கிற கொஞ்ச நஞ்ச சந்தேகத்த  அங்கேயே  கொட்டிட்டு வந்துடரேன் J). பூமிக்கு வெளியிலிருந்து  வரும் எந்த ஒரு விண் கல்லோ  இல்லை எதுவாக இருந்தாலும் அது பூமியின் காற்று மண்டலத்தை தொடும்போது  உராய்வினால் வெடித்து சிதறிவிடும் . இப்படி ஒரு ஸிஸ்டத்தை இறைவன் படைத்திருக்கிறான் .அப்படினு  ஸையண்டிஸ்டுகள்தான் சொல்றாங்க
   இதனால் அந்த பொருள்  பூமியை தொடும் போது அதோட வேகம் குறைந்து பெரும்பாலும் கடலிலேயே விழுந்து விடும் .(நிலத்தை விட நீர்தானே 2 மடங்கு இருக்கு )இரெண்டு பேர் மேல் விழுந்து காயமான ரிப்போட் இருக்கு . அதுவுமில்லாம தினமும் சின்ன சின்ன துகள்கள் விழுந்துகிட்டேதான் இருக்கு. 

    என்னதான் விதவிதமா பயமுறுத்தினாலும்  பிறந்த மனிதன் ஒரு நாள் இறக்கத்தானே வேனும் . இதானே இயற்கையின் விதி அப்படி இருக்கும் போது இதையெல்லாம் நினைத்து ஏன் கவலைப்படனும் . இதுல எனக்கு  ஒரு சந்தேகம் என்னன்னா .இந்த ஒரு விண்கல்லாலேயே  நம்ம பூமிக்கு மிகப்பெரிய அழிவுன்னு சொன்னா அதுக்கு அப்புறம் வரும்  கல்லாலே இல்லாத பூமியை என்ன செய்து விடமுடியும் .அதுக்கு ஏன் இத்தனை பெரிய சார்ட் ரெடி செய்யனும். டைம் கிடைச்சா இங்கே  பாருங்க  
    நானும்  இதே சந்தேகங்களை ஒரு மெயில்ல  கேட்டு எழுதினேன் .என்ன ஆச்சுன்னே தெரியல ....இதுவரை பதிலே கானோம் . ஒரு வேளை இதை வச்சி ஏதும் ஆராய்ச்சி செய்றாங்களான்னு தெரியல .ஹி..ஹி....  இதுல முதல் கேள்வி  எந்த ஒரு வெளிப்பொருளும் நமது காற்றுமண்டலத்துக்குள் நுழையும் போது வெடிச்சு சிதறிவிடும் என்றால்.இங்கிருந்து அனுப்பும்  இந்த ராக்கெட் மட்டும் எப்படி ஒன்னுமே ஆகாம போய்ட்டு பத்திரமா திரும்பி வருது ..அந்த ரகசியத்தை தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்.    

Monday, October 17, 2011

தமிழ்மணம் பெயரில் மட்டும்

61 என்ன சொல்றாங்ன்னா ...

     இந்த உலகத்திலே யாராக இருந்தாலும் ஏன் எதற்கு எப்படின்னு கேள்வி கேட்டே அதற்கு பிறகு ஒத்துக்கொள்கிறான். அது அவனை படைத்த இறைவனே நேரில் வந்த போது கூட நீ யார் என்ற கேள்வியையே கேட்டிருக்கின்றனர். விமர்சனத்திறகு  அப்பாற்பட்டு யாரும் இல்லை.
     ஒரு இயக்கத்தை நடத்துபவர் என்றால் அதில் ஆயிரம் கேள்விகள் வரத்தான் செய்யும் .முடிந்தவரை  நாகரிகமாக அதற்கு பதில் சொல்லலாம். இல்லை இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லைன்னு ஒதுங்கி விடலாம் . அதை விட்டு விட்டு படிக்கவே  கண் கூசும் அளவிற்கு கேவலமாக காலையிலிருந்து மாலை வரை அங்கேயே  உட்கார்ந்தூ வேலை வெட்டி இல்லாமல் பதில் போட்டுக்கொண்டு தன்னுடைய கீழ்தர புத்தியை காட்டிய கொடுமையை என்னவென்று சொல்வது .
     இப்போது நமது  சகோதர , நண்பர்களின் பதிவுகள் தொடர்ந்து வெளிவருவதால்  திரும்பவும்  அதே வார்த்தைகளை  இங்கே உபயோகிக்க விரும்ப வில்லை ..டெரார் கும்மியில் அந்த கேவலப் பேச்சுக்களை கேட்டு எனக்கு ரத்தம் கொதித்தாலும் சக நண்பர்கள் பொருமை காத்ததால் அங்கே கமெண்ட் இடாமல் விட்டு விட்டேன் .
    பதிவுக்கும் , அங்கே இருக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல்
 "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..."  
     இந்த  வார்த்தை அங்கே வரவேண்டிய அவசியம் என்ன ..?அதுவும் எந்த ஒரு முஸ்லீமும் அடுத்தவரை முதலில் பார்க்கும் போது சொல்லும் அழகிய வார்த்தை “உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் “ இதை திரித்து கேவலமாக பேச யார் உரிமை கொடுத்தது. ஒரு தனி பதிவர் சொன்னால் ஏதோ அறியாமல் உளறிவிட்டார் என்று 0.001ன்னாவது நினைக்கலாம் .ஒரு தள நிர்வாகியே  சொல்லுவதென்றால் ....??????
     இதை தனிப்பட்ட மெயிலில் கேட்கும் போதே சாக்கு போக்கு சொன்னவர். உடனே அவருடைய பிளாகில்  இது உனது தனிப்பட்ட மொழியா..??? அரசியல்வாதி சொல்லவில்லையா..?? கோயில் கும்பாபிஷேகத்தில் சொல்லவில்லையா..?? என்று பதிவிட என்ன அவசியம்..!! இந்த வார்த்தை அரசியல்வாதி  ஓட்டு கேட்டுவரும் போது மட்டுமே  சொல்வான் , கோயில் கும்பாபிஷேகம் தினமுமா நடக்கிறது ..ஆனால் ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமை பார்த்தாலே  சொல்லுவானே...!!! பெரியவர் சிரியவர் என்ற அளவுகோல் இல்லாமல் இல்லாமல் எல்லோரும் சொல்லும் சொல் அல்லவா..!!! அரபு நாடுகள் போய் வந்தவரை கேட்டால் அதன் பெருமையை சொல்வாரே
எச்சரிக்கை :
    உடனே தமிழ்மனத்திலோ  இல்லை தன்னோட பிளாகிலோ  கண்டிப்பாக மண்ணிப்பு கேட்டே ஆக வேண்டும் . இந்த அறிவிப்பு  இந்த வாரத்துக்குள்  வரவேண்டும் .கொஞ்ச நாள் போனால் மறந்து விடுவார்கள்
    இவர்களால் என்ன செய்யமுடியும் என்று நினைத்தால் ...??? அடுத்த வாரம் எங்கள் நிறுவனம் மூலமாக அரசுக்கு ரெட் நோட்டீஸ்(கோரிக்கை) அனுப்பப்படும் அதை தொடர்ந்து  அரப் எமிரேட்டில் தமிழ்மணம் சுவடு இல்லாமல் நீக்கப்படும் .
      இதே நிலை வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற இஸ்லாமிய அரசுக்கும் கோரிக்கை போகும் .அங்கும் தமிழ்மணம் நீக்கப்படும்
வளைகுடாநாடுகளில் தமிழ்மணத்தின் பக்கமே திறக்காது.என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்  .திருந்த ஒரு சான்ஸ் மட்டுமே

டிஸ்கி :- இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே  என் பிளாகில தமிழ்மண ஓட்டுபட்டை இருக்கும் . யாராவது ஓட்டுபோடாம இதுவரை இருந்தா சந்தோசமாகவோ  இல்லை துக்கமாகவோ  ஒரு தடவை வந்து குத்திட்டு போங்க . என் அடுத்த பதிவிலிருந்து நான் தமிழ்மணத்தை டைவேர்ஸ் செய்கிரேன் ஆர்டர்..ஆர்டர்......!!!!J