Tuesday, December 21, 2010

கொக்கு --பைரவி --2

54 என்ன சொல்றாங்ன்னா ...
படம் :  கொக்கு பைரவி
இயற்றியவர் : ஜெய்லானி டீவீ
பாடியவர் : இதை யார் பாடறாங்களோ  அவங்களேதான்
இசை ;   இந்த மொக்கைக்கு அதான் குறை
  


நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே)  புரியவில்ல அதில்  உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை  இருந்தும்
தண்ணீர்  எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை இருந்தும்
தண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல

தண்ணீ இல்லாத நிலத்துக்கு ஏரின்னு பேரோ
நான் பாடும் பாட்டுக்கு வெரும் பாட்டு யாரோ
மழை இல்லாத ஊருக்கு வேடந்தாங்கல் பேரோ
நான் பாடும் பாட்டுக்கு எதிர் பாட்டு  யாரோ
வெயிலோட நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையான நானும்  கருப்பா கருத்து போனதப்பாரு
மழையும்  வந்தா  குட்டையும் நிரம்பும்
என் ஏரியாக்குள்ளையும் மீனும் வருமே கொஞ்சம் பொறு

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல

வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
இந்த நிலை வருமுன்னு அப்போதே தெரிஞ்சிருந்தாலே
அமேசான் காட்டுக்கு  நானே பறந்திருப்பேனே
கால்  எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன
கால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன சொல்லுங்களேன்

நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே)  புரியவில்ல அதில்  உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை  இருந்தும்
மீன் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

டிஸ்கி:  1      இந்த பாட்டு.. இது யார் மனதையும்  புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ்  ((வரலாறு முக்கியமில்லையா  அதான் ))

டிஸ்கி :2    பூமி சூடாவதை தடுக்க வீட்டுக்கொரு மரம் வளருங்க  .வருங்கால தலைமுறைக்கு நல்லது..((இப்படி செய்யாட்டி நான் இன்னும் இது மாதிரி நிறைய மொக்கை பாட்டா போடுவேன் ))

Thursday, December 9, 2010

உணர்வு பூர்வமான பாடல்கள் -- தொடரோ தொடர்

74 என்ன சொல்றாங்ன்னா ...

       பெண்களின் உணர்வுகளை சொல்லும் பாடல்களை  எழுத அழைத்த நீரோடை அக்கா மலீக்கா அவர்களுக்கு நன்றி.. எப்போதோ  போட வேண்டியது இது ஜொஞ்சம் லேட்டாக்கியதில் மற்ற  சகோஸ் எல்லாரும்  விளையாடி விட்டு போனதும் கொஞ்சம் லேட்டா மைதானத்துக்கு  உள்ளே வந்திருக்கிறேன் . எனக்கு பிடிச்ச பாடல்களை அவர்கள் எல்லாருமே போட்டு விட்டதால்   என்ன செய்ய  அதனால என் மனசுக்குள்ள  எப்பவும் ஓடிக்கிட்டு இருக்கும் பாடல்களை இங்கே தொகுத்திருக்கிறேன் . 
     அது பெண்களின் உணர்வுகளை  சொல்லுதா இல்லையான்னு அவங்க கிட்டதான் கேக்கனும் 


  பாண்டித்துரை  படத்தில வரும்
என்ன மறந்த பொழுதும்
நான் உன்ன மறக்கவில்லையே..
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறங்கவில்லையே...
என் ராசாதி ராசனிருந்தா
நான் வேறேதும் கேக்கவில்லையே...
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே...

உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள பாசம் வச்சு
ஆளான அன்னக் கிளி நான்...
பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு
போடாம காத்திருக்கேன் நான்..
வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்
போடாத வேலி ஒண்ணு போட்டு வச்ச நேரம் ஒண்ணு
பாடாத சோகம் ஒண்ணு பாடிவரும் பொண்ணு ஒண்ணு
என் ராகம் கேக்கவில்லையா
மாமா இன்று ஏதாச்சும் வார்த்தை சொல்லய்யா,,,

பொன்னான கூண்டுக்குள்ள பூட்டி வச்ச பச்சக்கிளி
கண்ணீரு விட்டுக் கலங்கும்
கண்ணான மாமன் எண்ணம் காட்டாறப் போல வந்து
எப்போதும் தொட்டு இழுக்கும்.
உன்ன எண்ணி நித்தம் நித்தம் ஓடுதய்யா பாட்டுச்சத்தம்
பொண்ணோட நெஞ்சம் மயங்கும்
ஓத்தயில பூங்கொலுசு தத்தளிச்சுத் தாளம் தட்ட
மெத்தையில செண்பகப் பூ பாடுக்குள்ள சோகம் தட்ட
பாடாம பாடும் குயில் நான்
மாமா உன்ன கூடாம வாடும் மயில் நான்.

  கும்பக்கரை தங்கைய்யா
தென்றல் காற்றே தென்றல் காற்றே  சேதி ஒன்னு கேட்டியா  
கன்னிப்பூவு கன்னில் நூறு கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்தை பார்த்துதான் வந்து வந்து சேர சொல்ல மாட்டியா

இந்த பூமியும் அந்த வானமும் இருக்கும் கோலம் மாறலாம் இந்த ஆசையும் செஞ்ச பூசையும் என்றும் மாற கூடுமோ

    அன்னக்கிளி

 அன்னக்கிளி உன்னை தேடுதே ஆறு மாசம் ஒருவருஷம்
 அவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி உன்னை
தேடுதே ஆறு மாசம் ஒருவருஷம் அவரம்பூ மேனி வாடுதே


வசந்த மாளிகை
 கலைமகள் கைப் பொருளே - உன்னை
கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் - உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ கலைமகள்
  
  தில்லனா மோகனாம்பாள்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
சுவாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (2)

நவரசமும்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசமும் (2)
கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார் (2)
பாவை என் பதம் காண நாணமா (2)
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் (2)
மோகத்திலே என்னை மொழ்க வைத்து (2)
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல் (2)
மாலவா வேலவா மாயவா சண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா
எனையாளும் சண்முகா வா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

      ஆனந்த கும்மி

    ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ..மைன மைனா  
   குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ  மைனா மைனா 
   தளிர் இது மலருது தானா  இது ஒரு தொடர்கதை தானா 
   ஒரு மனம் இனையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா 
 
       உல்லாச பறவைகள்  
 
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்
பாரட்ட வா.... சீராட்ட வா...
நீ நீந்த வா... என்னோடு...
மோகம் தீருமே....
ம்ம்ம்... ஆஆஆ....

      அவள் ஒரு தொடர்கதை  

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தயடி
இதில் சுற்றம் என்பது மந்தயடி
அடி என்னடி உலகம் இதில் எதனை கலகம்

        உனக்காகவே வாழ்கிரேன்

கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

  கோபுரங்கள் சாய்வதில்ல   
 இதில் வரிகளை எழுதுவதை விட பாட்டையே கேளுங்கள் ..சொல்ல முடியாத துயரத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் அருமையான வரிகள் ((பொல்லாங்கு செய்வோர் எல்லாம் ஆண்கள்தாண்டி இந்த வரியை தவிர )) 




 
       இதுல எல்லா வரிகளுமே  அமர்க்களமா இருக்கும் சிலது மட்டும் தொடர் , பக்கம் அதிகமா ஆகிடும் அதனால சில பாடல்களில்  சின்னதா ஆரம்பம் மட்டும் போட்டிருக்கிரேன் 

Saturday, December 4, 2010

ஜெய்லானி டீவியில்-சமையல்--2

90 என்ன சொல்றாங்ன்னா ...
                        நமது ஜெய்லானி டீ வி நிலையத்துக்கு கிட்டதட்ட 2 ஆயிரம் போன்கால் , நாலாயிரத்து சொச்சம் ஃபேக்ஸ் , ஈ மெயில்ன்னு ஓவர் பிசி ,ஏன் சமையல் குறிப்புகள் வருவதில்லைன்னு திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்கள் , புதுசா புகுந்த வீடு போகும் பெண்களின் அன்புத்தொல்லை. உங்களால்தான் சுடுதண்ணி வைப்பது , லெமன் ஜுஸ் போடுவது இப்படி நாங்க தெளிவா கத்துகிட்டு இருக்கோம் அதனால் சீக்கிரம் ஒரு குறிப்பு போடுங்க .அப்படி இல்லாட்டி உங்க சேனல் முன்னால போராட்டம் பண்ணுவோமுன்னு அன்பு மிரட்டல் அதனால நமது சேனலில் மீ ண்டும் சமையல் குறிப்பு ஆரம்பம்
என்ன அழிச்சாட்டியம் பண்ண போறான்னு தெரியலையே

                    அப்படி வந்த பேக்ஸ் , மெயிலில் அதிகம் கேட்ட குறிப்பு ஆம்லட் போடுவது . எப்படி?  , ஆம்லட்  போட்டாலும் சரியா வருவதில்லை எப்படி செய்து புகுந்த வீட்டில பாராட்டு பெறுவதுன்னு கேட்டு இருக்காங்க ..அவங்களுக்காக இதே...!!

தேவையான பொருள்கள்

முட்டை – உங்களுக்கு எத்தனை தேவையோ அத்தனை ((இது இல்லாமலும் ஆம்லட் போடலாம் விபரம் நீங்க கேட்டா அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் ))
உப்பு -- உங்களுக்கு போதுமான அளவு ..((இதே மத்தவங்களுக்கு குடுத்தா அவங்க சூடு , சுரனை தகுந்த அளவு ))

ஆயில் --அதாவது......ஏன் அவசரம் அப்புறமா சொல்லப்படும் .
மஞ்சள் பொடி , ப.மிளகாய்,வெங்காயம் , மிளகு சின்னதா பொடித்தது --- இதெல்லாம் இருந்தா வித்தியாசமா அசத்தலாம் அதுக்குதான்

செயல் முறை
முதல்ல தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் முட்டைய மெதுவா வையுங்க . அது நல்ல பிள்ளை (என்னைய மாதிரி )யா அமைதியா கீழே இருந்தா அது நல்ல முட்டை.. அப்படி இல்லாம லேசா தலைய தூக்கிகிட்டு இருந்தா சரி இல்ல ,கெட்டு போன முட்டை , அதுக்குள்ள சிலநேரம் குஞ்சு கூட இருக்கலாம்..பாவம் விட்டுடுங்க .

இப்ப முட்டைய வெளியே எடுத்து மெதுவா உடைச்சு ஒரு கிளாஸ்ல போட்டு அதுக்குள்ள மஞ்சள் பொடியை போடுங்க அப்பதான் ஸ்மெல் இருக்காது..ரொம்ப ஸ்மெல் இருந்தா டெட்டால் ஊத்தலாம். அதிகம் இல்ல ஒரு மூடி போதும்

ப.மிளகாயை சின்னதா வெட்டி வைக்கவும் , அதுப்போல , வெங்காயத்தையும் ரொம்ப சின்னதா வெட்டி லேசா வெண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்.

இப்ப ஒரு வானலியை அடுப்பில வச்சி அதுல வேப்பெண்ணையை கொஞ்சமா ஊத்தவும் .நல்ல சூடாகி மணம் வரும் போது அதில மஞ்சள் கலந்த முட்டையை ஊற்றவும் .இப்போ பச்சையும் மஞ்சளும் கலந்த ஒரு வித கலர் தெரியும் .அதுல உங்களுக்கு வெங்காயம் + ப.மிளகாய் போடனுங்கிற எண்ணம் வந்தால் போடவும் .இல்லாவிட்டால் நோ பிராப்ளம் .

வேப்பெண்ணெய் இல்ல விட்டால் விளக்கெண்ணெயையும் யூஸ் பண்ணலாம் . இதை மாமியார் , அல்லது உங்களுக்கு பிடிக்காத நாத்தனார்க்கு குடுத்தால் அவங்க மனமும் , உடலும் ஒரு வழியாகி அடுத்த தடவை உங்களை கிச்சன் பக்கமே அனுப்ப மாட்டாங்க .கிச்சன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
முடியல  இம்சை  .....இறைவா காப்பாத்தூஊஊஊஊஊஊஊ

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் குடுத்து சோதனை செய்யலாம் .இப்ப செய்யிற ஆம்லட் உங்களுக்கு மட்டுமா இருந்தா கடலை எண்ணெய் யூஸ் பண்ணூங்க. ஏன்னா உங்க உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமில்லையா அதான் .
இதுப்போல இன்னும் விதவித மான சமையல் குறிப்புகள் .அடுத்த அடுத்த நிகழ்ச்சிகளில் தொடரும் ஃபிரைட் ரைஸ் , சாதா ரைஸ் வைப்பது எப்படின்னும் பார்க்கலாம்

படங்கள் உதவி : கும்மி டெர்ரர்

Wednesday, November 10, 2010

சந்தேகம்-5

141 என்ன சொல்றாங்ன்னா ...

        இந்த வாரம் எந்த சந்தேகமும் யார்கிட்டையும் கேக்கக் கூடாதுன்னு நினைச்சாலும் முடியல .பாருங்க மூளை துருபிடிக்க பாக்குது அதனால எப்பவும் கெரசின்ல போட்டு வைக்க வேண்டி இருக்கு.  எப்பவும் தமிழ்ல சந்தேகம் கேட்டு அலுத்துப்போச்சி அதனால இந்த தடவை இங்கிலீஷில கேக்கரேன் பதட்டப்படாம , பயந்துகிட்டு எஸ்கேப் ஆகாம , நான் ஸ்கூலுக்கே போகலன்னு பொய் சொல்லாம தைரியமா பதில் சொல்லுங்க 
எலேய் ....!!பின்னாடி நா இருக்கேன் வண்டியை நேரே பாத்து ஓட்லே..!!

    ஆட்டோ ஓட்டுபவரை ஆட்டே டிரைவர்ன்னு சொல்றோம் , பஸ் ஓட்டுபவரை பஸ் டிரைவர்ன்னு சொல்றோம் , லாரி ஓட்டுபவரை லாரி டிரைவர்ன்னு சொல்றோம் , ஹி..ஹி.. ஸ்குரு டைட் செய்பவரை ஸ்குரு டிரைவர்ன்னு சொல்ரோம்
     சைக்கிள் ஓட்டுபவரை  ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..?  பைக் , ஸ்கூட்டர் ஓட்டுபவரையும் ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..? இதுல நீங்க சொல்லலாம் அதையெல்லாம் நாமே ஓட்டறோம் அதனால பேர் இல்லைன்னு .ஆனா அந்த ஆள் ஒரு காரோ , இல்லை டெம்போ , மினி வேனோ , வாங்கினாலும் , இல்லை ஓட்டினாலும் நான் டிரைவர்ன்னு எப்படி சொல்றாங்க .
லைசன்ஸுக்கு  அப்ளை பண்ணிட்டு அலப்பறையை பாரு..?முடியல..
    சரி , அடுத்த கொஸ்டின் அதே ,  ஆனா நோ சாய்ஸ்.. , கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க அவர் என்ன துப்பாக்கி வச்சிகிட்டு போருக்கா போறார். கப்பல் டிரைவர்ன்னு சொன்னா அசிங்கமாவா இருக்கு. அதே போல ஃபிளைட் ஓட்டுபவரை  கேப்டன்னு சொல்லவில்லை , டிரைவர்ன்னும் சொல்லவில்லை  பைலட்டாம் .. அடப்பாவிங்களா.. ஒரே வேலை செய்பவனுக்கு  மூனு வித பேரா..? 
      இங்கிலீஷ் காரன் எதை சொன்னாலும் ஆமாம் சாமி போட்டே பழகிட்டு .இது வரை யாரும் எதிர் கேள்வி கேக்காதது ஏன்னு புரியல . ஒரு படத்துல வந்த ஜோக் மாதிரி வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் .அவன் எது சொன்னாலும் சரியாதான் இருக்குங்கிர மாதிரி இருக்கு.
பாருய்யா இவனையெல்லாம் தூக்கிட்டு அலைய வேண்டியிருக்கு.... இஹிக்.ஈஹி..ஹி..ஈ.

    அதனால பொதுமக்களாகிய நீங்க தெரிஞ்சதை சொன்னா எனக்கும் புரியும் நானும் கொஞ்சம் கத்துப்பேன் ,எங்கேயே யாரோ கத்துதரதா படிச்சேன் ஆனா நினைவு இல்லை .இல்லாட்டி கீழே கண்டவாறு அறிவிப்பு விரைவில் வரும்

முக்கிய அறிவிப்பு:

    இப்பதான் நான் எல்கேஜி யிலிருந்து ஆரம்பிச்சி இருப்பதால இதுல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. நல்ல தலையில நிறைய முடி உள்ள இளவயது ஆசிரியர்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம் . உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் ..குறைந்தது மூனுமாசம் தொடர்ந்து இருந்தால் கேட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் சம்பளம் தரப்படும்..
விளக்கம்
(1)தலையில் முடி நிறைய இல்லாட்டி தலையை சொறிஞ்சே புண்ணாகிடும் அந்த பாவம்  எனக்கு எதுக்கு..ஹி..ஹி..
(2) வயசு அதிகமா இருந்தா நீங்க சொன்னது காதுல சரியா விழலன்னு சொல்லி தப்பிக்கும் அபாயம் இருப்பதால் இள வயதுக்கு முன்னுரிமை
(3) விளக்கம் சொல்லியே தொண்டைதண்ணி வத்தாமா இருக்க உணவும் , இன்னைக்கி பாடம் போதும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு ஊரைவிட்டே ஓடாமல் இருக்க தங்குமிடமும் இலவசம்.

Wednesday, November 3, 2010

மா.....!!!!

81 என்ன சொல்றாங்ன்னா ...

      முக்கனிகளில் மா , பலா , வாழைன்னு இப்ப எல் கேஜி படிக்கிற குழந்தைக்கு கூட தெரியுது.  (ஏன்னா நா இப்ப எல் கேஜி தான் படிக்கிறேன் ..ஹி..ஹி..) அப்போ இதை பத்தி உங்களுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும் .
      அதில பயன் படாத  பொருளே இல்லை , பிசின் வரை மருத்துவ பயன் உள்ளது..  மாங்காயில் செய்யும் ( ஆவக்காய் )  ஊருகாய் ருசியே தனிதான் ,  இதில மொத்தம் 1500 வகைகள் இருக்கு.
      முகல்  பேரரசர்களில் அக்பர் ஒரு மாம்பழப்பிரியர் . அவரது பீஹார் தோட்டத்தில மட்டும் கிட்டதட்ட அப்பவே ஒரு லட்சம் மாமரங்களை வளர்த்து வந்தார் . அந்த பழங்கள் லாங்கராவகைகளாம். (அந்த காலத்தில ஏன் மாசம் மும்மாரி பொழிஞ்சுதுன்னு இப்பதான் புரியுது )
     நமது கவிஞர்களும் அதை ஒட்டியே எழுதிய பாட்டுக்களும் ரசனை  மிகுநத பாட்டாவே இருந்திருக்கு உதாரணத்திற்கு ‘மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா”  ஊமை விழிகள் படப்பட்டு சசிரேகாவின் குரலும் ,சுரேந்தரின் குரலும் டாப் , ’’ அடடா  மாமரக் கிளியே  உன்னை இன்னும் நான் மறக்கலையே  “ சிட்டுக்குருவி படத்தில் ஜானகியின்  குரல் பாடலின் வரிகள் , “ நான் மாந்தோப்பில் நின்றிந்தேன் ‘’  எங்கள் வீட்டு பிள்ளை  படத்தில எம் ஜி ஆர் பாட்டு .. மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் “  டாக்டரு விசய் ஆடிய பாட்டு ...இப்படியே போகும்....!! 
      இதுப்போல மாங்காயின் , பழத்தின் சுவை , மருத்துவப் பயன்களை பக்கம் பக்கமா சொல்லிகிட்டே  போகலாம் .என்ன ஒன்னு , அதிகம் சாப்பிட்டா  உடம்பு சூடு அதிகமாகிடும் . அதனால  உடல் சூட்டை குறைக்க பால் சாப்பிட வேனும் ( ஒரிஜினல் பால் தான்..தப்பா நினைத்தா நிர்வாகம் பொருப்பல்ல.)
      இதை பத்தி பதிவு போடலாமுன்னு பார்க்கும் போது சகோ அமைதியக்கா  ஒரு பதிவு போட்டிருக்காங்க அதனால இங்கே  நிறைய  சொல்லல   என்னடா இது தெளிவா எழுதிகிட்டே வரானே என்னன்னு யோசிக்கிறீங்களா ..வாங்க மெயின் ஸீனுக்கு இப்ப போகலாம்.
      இவ்வளவு அருமையா, சுவை , குணம் , மணத்தில் மாங்காய் , பழம்  இருக்கும் போது . ஒருத்தரை அறிவு குறைவா இருப்பதாக நினைச்சிகிட்டு அவனை ( ரை ) மாங்காய் மடையன்ன்னு திட்டுரோமே ஏன் ?.
      அப்படி திட்டுவதால் நாம அவரை கேலி பண்ணுரோமா ? இல்லை மாங்காயை கேலி பண்ணுரோமா..?திட்டுவதுக்கு ஏன் வேர உதாரணம் கிடைக்க வில்லை . ஒரு வேளை திட்டும் ஆளுக்கு மா மரத்தின் , பலன்களை பத்தி தெரியலையா..?. ஒரு வேளை அந்த திட்டும் ஆளே மடையனா..?
       திட்டுறவன் அப்படி திட்டுறான் ஓக்கே..!! .அதுக்கு பதில் சொல்றவனும் பதிலுக்கு ஏன் அதையே அவனை பாத்து சொல்லனும் . அதுக்கு பதிலா அவன் கிட்ட திருப்பி கேளுங்க .அதுக்கு அர்த்தம் என்னன்னு . ஙே“ன்னு முழிப்பான். அப்போ அவனை பார்த்து  கேளுங்க .அடுத்த தடவை திட்டும் போது  மாங்காயை  கேவலப்படுத்தாதே...

     சரி சகோஸ்..உங்களில் யாருக்காவது  அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா..?  தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...பிளீஸ்  
டிஸ்கி: பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு 
        

Friday, September 24, 2010

மாலையில் நானும் மனதோடு பேச ...!!

65 என்ன சொல்றாங்ன்னா ...

      பெரியோர்களே தாய்மார்களே.. இங்கே கூடி நிற்கும் கூட்டத்தாரே..வாங்க..வாங்கன்னு உங்களை அன்போடு அழைக்கிரேன்....!!
பிளீஸ் கொஞ்சம்  பயப்படாம  நில்லுங்க..ஹி..ஹி.. 



        கொஞ்சம் ஆண்களும்  ,பெண்களும்  தனித்தனியா நில்லுங்க..அப்பதான் 50 சதம் தனி இடம் தர வசதியா இருக்கும்..

முதல்ல நிக்க சொல்லிட்டு இதை போட்டா என்ன அர்த்தம்..ஹி..ஹி..

ஒரு வழியா மொக்கை போட்டுப்போட்டு பொறுக்க முடியாம என்னை திருத்த ஆசைப்பட்டு இதான் வழின்னு நெனச்சிட்டாங்கப்போல  அதனால




நடக்க முடியாதவங்களுக்கு ஸ்பெஷல் வண்டி வருது

  இது வரை என்னை திட்ட முடியாத வங்க ..கோவம் உள்ளவங்க அங்கேயும் வந்து ஒரு வார காலத்துக்கு கும்மி எடுக்கலாம்..தயவு தாட்சனை பார்க்காம ..!! இது ஒரு அரிய வாய்ப்பு  தவற விடாதீங்க..ஹி..ஹி... வருவீங்கன்னு நம்புறேன். இங்கே கிளிக்கினால் நேரே பாஸ்போர்ட் , டிக்கெட் , விசா இல்லாம வந்துடலாம. ((  பெட் அனிமல்ஸுக்கு தனி இட வசதி உண்டு...ஹா..ஹா..))

வலைச்சரத்தில் 

( 1 )  முதல் நாள் 

(2)  இரண்டாம் நாள் 

(3)   மூன்றாம் நாள்  

(4)  நான்காவது நாள்  

(5)    ஐந்தாவது நாள்   

(6 )  ஆறாவது  நாள் 

(7)   ஏழாவது  நாள்

Saturday, September 11, 2010

பிள்ளைகள் எத்தனை--5

155 என்ன சொல்றாங்ன்னா ...
       வலையுலகில் என்னை தொடர்ந்து நமது சகோஸ் களும் நிறைய  சந்தேகங்கள் கேட்டு வருகிறார்கள்  . இது ஆரோக்கியமான விஷயந்தான் . எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவுன்னு  வள்ளுவ தாத்தா சொல்லிட்டு போய் இருக்காரு .
மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?


     இதை ஸ்கூலில் சொல்லி குடுத்தப்ப  நான் கேட்டேன் . திருக்குறளை எழுதியது எப்போ அவருக்கு கல்யாணம் ஆனப்பிறகா ஆகிறத்துக்கு  முன்னமான்னு ..அப்போ வாத்தியாருக்கு  வீட்டில என்ன கஷ்டகாலமோ பாருங்க. என்னை தொறத்தி தொறத்தி அடிச்சாரு ...நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..

   வீட்டில தொல்லை தாங்காமதான் பிள்ளைகளை ஸ்கூல் அனுப்புறாங்க .அவங்க என்னான்னா ஹோம் ஒர்க்குனு சொல்லி திரும்பவும் வீட்டில தண்டனை தராங்க.. இது என்னா அநியாயம் அக்கிரமம். அப்பா அம்மா படிகாதவங்களா இருந்தா .அந்த பிள்ளை  என்ன செய்யும்.
என்னைய வச்சா ஃபிலீம் காட்ட சொல்றே..

        நமது  பிள்ளைகளுக்கும்  நம் மீது பாசம் அதிகம் , நமக்கும் நம் பிள்ளைகள் மீது பாசம் அதிகம் . இதில காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. ஓக்கே.. இதில் எனக்கு என்ன சந்தேகமுன்னா என் பிள்ளை--> உன் பிள்ளை  சரி இதில் தென்னம்பிள்ளை  ,  கீரிப்பிள்ளை  , அணில் பிள்ளை இந்த  பிள்ளைகள் நடுவில எங்கே வந்துச்சி....
இருய்யா படம் மட்டும் பாத்துட்டு வரேன்...!!!

      அப்போ இது ம்ட்டும்தானா பிள்ளை. உலகத்துல.இந்த மூனுக்கும் மனுஷனுக்கும் என்ன உறவு .என்ன சொந்தம்
வீட்டில சொல்பேச்சு கேக்காட்டி பெரிசுகள் சொல்வது  உன்னை பெத்ததுக்கு  நாலு தென்னைம்பிள்ளை  பெத்திருக்கலாம் இல்லை வளர்த்திருக்கலாம்...... அதும் சரிதான்  ..ஸ்கூல்ல சேர்க்க வேண்டிய செலவில்லை ,,அதுவும் வளர்ந்து காதல் , கத்திரிகாய்ன்னு ஓடாது .கிரிப்பிள்ளையை  வளர்த்து போட்டோ போட ஆள் இருக்கு ((ங்கொய்யால ஒரு ஆளை பழி வாங்கியாச்சு )) ..ஆனா அணில் பிள்ளையை வளர்த்து ஃபிலிம் காட்ட யாராவது இருக்காங்களா..? வலையுலகில்

அச்சோ...கால் இல்லாத ஜீவன் விட்டுடு  பாவம்
        குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..?  அதனால மக்கள்ஸ் இனிமே யாராவது எது சொன்னாலும் தலையை ஆட்டாம ஏன் எதுக்கு எப்படின்னு கேக்கோனும் சரியா.. அப்பதான் ஒரு நல்ல ஜெனரேஷன் வரும் ((ஏதோ என்னால முடிஞ்சது )) சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு சிலபேர் கேக்கராங்கப்பா என்ன செய்ய இதுக்கு பதில் சொல்லுங்க :-))

டிஸ்கி :: நடுவில் கொஞ்சம் பிசியாக இருந்ததால்.பிளாக் பக்கம் வர முடியல .((பிளாகிலும் , பேஸ்புக்கிலும் , மெயிலிலும் ரமளான் வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளத்துக்கும் நன்றிகள் பல))

Friday, September 3, 2010

கல்யாண மாலை...!!!

88 என்ன சொல்றாங்ன்னா ...

        ஊரில அடிக்கடி விஷேஷங்கள் நிறைய நடக்கும். யாருக்காவது கல்யாணம் , காது குத்தல் , இப்பிடி நிறைய நடக்கும் போது பத்திரிக்கைகள் அடிக்கடி வரும் .சிலநேரம்  ஓரே நேரத்தில மூனு கூட வருவதுண்டு .நானும் போய் சில கூடமாட உதவிகள் செய்வதுண்டு .ஓரே ஊர் , சொந்த பந்தங்கள் என்று விழாகளை கட்டும்.

      ஒரு தடவை பழைய நண்பனின் (எதிரி ) கல்யாணத்துக்கு இப்பிடி போகும் போது  கடைசி வரை ஒரு மாதிரியே இருந்தான் பேசவா வேண்டாமான்னு. சரி நானும் ஏதோ கல்யாண டென்ஷன் போலன்னு நினைச்சிகிட்டு மொய் எழுதிட்டு வந்தேன் .

      வீட்டில மாலை நேரத்தில  பேச்சு வாக்கில .வந்ததே பிரச்சனை..  ஏன் அந்த வீட்டு கல்யாணத்துக்கு வரல நானும் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் குடும்பத்தார்கள் குறை சொல்ல  , அப்போ நானும் ஏன் சாப்பிட்டு விட்டு மொய்யும் எழுதிட்டுதானே வந்தேன் . ஆனா அந்த தறுதலை பிடிச்சவந்தான் கடைசி வரை பேசவே இல்ல இதுல வேற என்மேல குறையான்னு நானும் கத்த ஒரு வழியா வீட்டில சமாதானம் ஆனது

       மறுநாள் அந்த தெரு வழியா போகும் போது , அந்த பய வீட்டிற்கு  வெளியே நின்னுகிட்டு இருந்தவன்  . ஓடி வந்து கையை பிடிச்சிகிட்டான் ..மாப்ளே என்னை மன்னிச்சிடுடா...!!!  நானும் மவுனம் சாதிக்க..உனக்கு எவ்வளவு பெரிய மனசு “ உனக்கு பத்திரிக்கையே நான் தரல .இருந்தும், என் கல்யானத்துக்கு வந்து உதவி செய்தும் மொய்யும் வச்சிகிட்டு போனே..!! 


             இவ்வளவு நல்லவனா நீ. இதை நினைச்சே எனக்கு நேத்திலிருந்து மனசு சரியில்ல அப்ப நான் தான் சரியில்லன்னு சொல்லி கண் கலங்கிட்டான்.. வந்துச்சே ஆத்திரம் என்ன சொல்ல திருடனுக்கு தேள் கொட்டினாற் போல பழமொழி படிச்சிருக்கேன் .ஆனா எந்நிலை அப்படி ஆச்சேன்னு ஆத்திரம் பிளஸ் அவமானம். எனக்குள்ள..அவ்வ்வ்வ்

         மனசை திடப்படுத்தி கிட்டு ( பின்ன இதை வெளிய சொல்ல முடியுமா மெகா பல்பு வாங்கியதை ) வெளிக்காட்டிகாம சரி விடு நா அப்புறமா வறேன்னு சொல்லிட்டு எஸ் ஆக பார்த்தா. பய புள்ள விடவே இல்ல. நான் இத்தனை நாளா உன்கிட்டே பேசவே இல்லை பத்திரிக்கையும் வைக்கல ஆனா நீ எதையும் மனசில வைக்காம  வந்தியேன்னு ஓரே ஃபீலிங்..

        அப்புற மென்ன அவன் வீட்டிற்கு கூட்டிகிட்டு போய் திரும்பவும் விருந்து சாப்பாடுதான்..ஹி...ஹி.. வீட்டிற்கு வந்து விஷயதை சொல்ல கிண்டலும் கேலியும் மாசம் பூரா போனது தான் மிச்சம் . இது இப்பிடி ஆனா அந்த இன்னொரு வீட்டிற்கு போகாததால அவனுக்கு கோவம் வந்து அவன் இப்ப பேசுவதே இல்லை ரோட்டில என் தலையை பார்தாலே அடுத்த சந்துக்குள் அவசரமா ஓடிடறான் .நான் யாரை சமாதானப்படுத்த நீங்களே சொல்லுங்களேன்...
 
   அதுக்காக அவனை இன்னொரு தடவை கல்யாணம் பண்ன சொல்லவா முடியும் .இந்த அனுபவத்துக்கு பிறகு இப்பெல்லாம் பத்திரிக்கையை நாலு ஜெராக்ஸ் எடுத்து வைக்கிறேன்னா பாத்துக்கோங்க. இதில நீங்க எப்பூடி...???  ஹா..ஹா...           

Saturday, August 28, 2010

இதுதான் காதலா--!!

115 என்ன சொல்றாங்ன்னா ...
         உன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே
         உன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே
        உன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி
        எனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே

         உன் ஆசை அதிர்வலையில் நான் மூழ்கித்தான் போனேனே
         செல்ல சினுங்கலில் தலை சுற்றி போனதடி
         வீனே எனை தேடித்தான் பார்கின்றேன் .கனவினிலே
        கிடைக்கிரதே எனை தவிர ஏன் ஆனேன் இப்படியானேன்

         காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும்
        மனம் கொண்ட மயக்கம் தடமாறலியே
         உன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே
        உன் கண்ணில் நீர் வழிகிறதோ என் நினைவாலே
       அந்த ஒவ்வொரு துளியாலும் என் இதயம் உருகுதே

 பெண்:    ஏனோ தெரியல சாரல் காற்றிலும் அனலாய் மாறுதே
       அனலாய் மாறுதே தேகம் அலைபோல் ஆனதே
       வீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா
       புயலாய் போகுதே வரும் காலமாவது வசந்தமாகாதோ.........

Friday, August 20, 2010

ரிங் டோனா இல்லை என் டோனா

139 என்ன சொல்றாங்ன்னா ...

          போன பதிவுல வந்த அனுபவம் என் ஃபிரண்டு ஒருவனுக்கு வந்தது .முடிவு மட்டும் என்னுடையது . இதில வருவது நானே பல்ப் வாங்கிய மெகா அனுபவம்தான் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனை ( டியூட்டி டைமில் ) கிண்டல் கேலி கும்மியதின் விளைவு அன்னைக்கு அவஸ்தை பட வேண்டியதாகி விட்டது . அவனும் நல்ல பிள்ளையா எதுவுமே வாய திறக்கல
         ஒரு நல்ல ரிங்டோன் ( ராத்திரியில கேட்டா சின்ன பிள்ளங்ககூட தானா உச்சா போய்டுவாங்க அவ்வளவு டெர்ரர் ) காப்பி பண்ண அவனுடைய மெமரி கார்ட கழட்டி என்னுடைய மொபைலில் போட்டு காப்பி செஞ்சேன் . அது வரை நல்லாதான் போச்சு. இது நடந்தது  காலை 7 மணி இருக்கும்
எலியார் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

         எப்படியும் கால் மணிக்கு ஒரு தடவையாவது நம்மளை கூப்பிட்டு கழுத்தறுக்கும் யாரும் அன்னைக்கு 9 மணி வரைக்கும் கூப்பிடலை .பயபுள்ளைங்க திருந்திட்டானுங்க போலன்னு நினைச்சு போனை எடுத்து  பார்த்தா நா போனை ஆன் பண்ணவே இல்லை . சரின்னு ஆன் பண்ணி வச்ச உடனே ரிங் தங்கமணி கிட்டேயிருந்து இது எப்பத்திலோந்து போனை ஆஃப் பண்ணி வைக்கும் பழக்கமுன்னு ,  பேசிக்கிட்டு இருக்கும் போதே ஆட்டோமாடிக்கா ஆஃபாகி ரீஸ்டார்ட் ஆனது .  சரி பேட்டரிதான் சரியா இன்னைக்கு சார்ஜ் ஆகலையோன்னு பார்த்தா சரியாதான் இருந்துச்சி. உடனே தங்ஸ் கிட்டேயிருந்து திரும்ப ரிங் வந்துச்சு அதென்ன பேசிகிட்டேயிருக்கும் போது புது பழக்கம் லைன கட்பன்..ற..து......திரும்பவும் ரீஸ்டார்ட்..
 
         இப்பிடியே ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை வந்ததால என்ன செய்வதுன்னு தெரியல டென்ஷனுக்கு மேல டென்ஷன் . மேனேஜரையே சமாளிச்சுடலாம் தங்ஸ சமாளிக்க முடியுமா .?. ஒரு வழியா அதுக்கு பரிகாரம் என்னன்னு பார்த்ததுல புளுடுத்-ஐ ஆன் பண்ணி வைத்தால் ரிஸ்டார்ட் ஆகல . தப்பிச்சேன்னு ரிலாக்ஸ் ஆனேன் .ஆனா இந்த நிம்மதி அரை மணிநேரம் கூட நீடிக்கல. பக்கத்துல யார்  புளு டூத் ஆன்ல இருக்கோ அவங்களுக்கு மெசேஜ் அனுப்ப வான்னு உடனே என் ஸ்கிரீனில் வரும் .
நா சொல்றதை நல்ல பிள்ளையா கேக்கோனும்

       இதுப் போல அவங்க ஸ்கிரீனினும் ரிசீவ் பண்ணவான்னு கேக்கும் . பயந்துகிட்டு யூசர் பேர மாத்தி வச்சேன் .இல்லாட்டி இவனுககிட்ட  மாட்டிகிட்டு யார் தர்ம அடி வாங்குறது .  அப்ப தான் புரிஞ்சுது இது வைரஸின் வேலைன்னு . டியூட்டி டைமும்  முடிஞ்சி ப்போச்சி சரி  மீதியை நாளைக்கு டியூட்டி டைமிலேயே பாத்துக்கலாம் இப்ப சொந்த நேரத்துல நம்ம சொந்த வேலைய பார்த்தா பாவமுன்னு நினைச்சிகிட்டு மதியம் நல்லா சாப்பிட்டுட்டு தூங்க ஆரம்பிச்சேன்  
      சரியா அரை மணிநேரத்துல போன் தூக்க கலக்கத்தில பாதி கண்ணை திறந்து பார்த்தா புது நெம்பர் ஒரு பங்ளாதேஷி. பொந்து பாய் தும் முஜே மிஸ் கால் கியா “ ( சகோ நீ எனக்கு மிஸ்ட் கால் செஞ்சியான்னு அர்த்தம் ) ..நான் “இல்லையே “  “ அப்ப இது உன் நெம்பர்தானே “  ஆமா இது என் நெம்பர்தான் “ என்னது இது சின்ன புள்ளதனமான்னு கேக்க நா உடனே சமாளிச்சிகிட்டு சாரி ராங் நம்பரா போயிடுச்சி போலன்னு சொல்லி வச்சிட்டேன்.
ஏன் என்னை பாக்க மாட்டீங்களா நானும் பேபிதான்.

       இப்பிடி மதியம் முழுக்க என் தூக்கம் போனதுதான் மிச்சம் .அதுவா யாருக்காவது லிஸ்டில இல்லாத புது நெம்பருக்கு மிஸ்ட் கால் குடுக்கும்  , லோக்கலாவது பரவாயில்லை  .ஒரு ஆள் ஓமானிலிருந்து போன் பண்ணி திட்டினான் . இப்பிடியே ஒரு  பஞ்சாபி பொண்னு ( அதுக்கு என்ன கஷ்டமோ ) , கடைசியா அரபி பொண்ணு ( 20 வயசாவது இருக்கும் , எப்படி வயசு தெரியுமுன்னு குறுக்கு கேள்வி யாரும் கேக்க பிடாது ) திட்டிய போதுதான் மண்டையில உறைச்சது. ஆஹா இது போலீஸ் கேசா போயுடுமோன்னு . முதல் வேலையா பேட்டரி ,  சிம் வரை தனியா கழட்டி வச்சிட்டேன்
   
       ஒரு நாள போன் இல்லாட்டி எவ்வளவு கஷ்டம் .எவ்வளவு லாபமுன்னு எனக்கு அன்னைக்குதான் தெரிஞ்சுது . கஷ்டம் நமக்கு வேலை ஆகாது . லாபம் ஒரு பயபுள்ள போன் பண்ணி திட்டமாட்டான் . 
        மறு நாள் டியூட்டி நேரத்துல கடையில கொண்டு போய் கார்ட் , போன் எல்லாத்தையும் ரீ ஃபேர்மேட் செஞ்சதால 100 திர்ஹமோட தப்பியது . ஒரு தடவை சொந்த கம்ப்யூட்டரில இந்த வேலைய செஞ்சி நான் பட்ட அவஸ்தை ஒரு மெகா தொடரே போடலாம் . அதிலிருந்து  யாரிடமும் எதுவும் போன் வழியா வாங்குவதுமில்லை கொடுப்பதுவுமில்லை.
பயபுள்ள இங்கேதானே இருந்தான்  , ஜஸ்ட் மிஸ்ட்

        இதனால வரும் நீதீ என்னதுன்னா உங்களுக்கு இது மாதிரி அவஸ்தை வரும் வரை படமோ , ரிங்டோனோ டவுன்லோட் , அப்லோட் பண்ணிகிட்டே இருங்க...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ஹி..ஹி..   
           

Saturday, August 14, 2010

செல் ஃபோன் கிளீனிங்

128 என்ன சொல்றாங்ன்னா ...
          மனுசனுக்கு வாயில பல் இருக்கோ இல்லையோ கையில மொபைல் போன் இல்லாத ஆளே இல்லைன்னு சொல்ற அளவுக்கு போன் இப்ப எல்லாருகிட்டயும் இருக்கு.. பல் போனா சொல்போச்சி .பழமொழி  இப்ப  செல் போனா எல்லாம் போச்சிங்கிற அளவுல இருக்கு.


       ஒரு காலத்துல பேச மட்டுமே இருந்த போனில் இப்ப மனுச தேவைக்குள்ள மீடியா ,நெட் வரை வந்துடுச்சி .அதுக்குள்ள தேவைக்கு அதிகமான அளவு மெமரியும் கூடவே வருது. இப்படி பட்டதை காப்பாத்த பெரும்பாடா இருக்கு.  அதில ஒன்னு தண்ணீரில் விழுவது . .பெண்களுக்கு கிச்சனில வைக்கும் போதும் , சில சமயம் பேசிக்கிட்டே அப்படியே சம்பாரில் போட்டு விடுவதும் உண்டு ., ஆண்களுக்கு சாப்பிடும் போதும் இல்லை. பாத்ரூமில் , வேலை செய்யும் இடத்திலும் இப்பிடி ஆகி விடுகிறது.

          என்னதான் புதிய போனாக இருந்தாலும் , கேரண்டி , வாரண்டி இருந்தாலும் தண்ணீரில் (லிக்யூட் ) விழுந்தது என்று சொன்னால் அதுக்கு தனியாக செலவு செய்யனும் . செலவு போகட்டும் .அதில் உள்ள மேட்டரும் இல்ல போயிடும். தண்ணீரில் உள்ள உப்பு  போனில் உள்ள எலக்டிரானிக் போர்டை ஷார்ட் ஷர்க்யூட்டாக்கி விடும் .

        அப்படி அதில லிக்யூட் உள்ளே போனால் ,இல்லை தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எவ்வளவு சீக்கிரம் பின் பக்க கவரை திறக்க முடியுமோ திறந்து  முதலில் பேட்டரியை கழட்டவும்.. பிறகு சிம் கார்ட் , மெமரி கார்டையும் கழட்டி ஒரு முறை மெதுவாக நல்ல துணியால் துடைக்கவும்

        முழு கவரையும் கழட்டதெரிந்தால் கழட்டவும் , அப்படி தெரியாவிட்டால் நன்றாக உதறி அதிலுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுங்கள் .ஹேர் டிரையர் வீட்டில இருந்தால்  அதனால்
குறைந்த அளவு சூடு காற்று வருமாறு வைத்து போனை அதன் அருகில் காட்டலாம் . கவனம் அதிக சூடு  போனில் உள்ள சால்டரை உருக செய்து விடும்.

        கடைசியாக ஸ்கிரின் கீழ் பக்கம் வருமாறு சூரிய ஒளி படும் இடத்தில வைத்து எடுத்தால் சரியாகி விடும் . ஸ்கிரின் மேல் பக்கம் இருக்குமாறு வைத்தால் நீராவி ஸ்டீம் ஸ்கிரினில் வந்து ஒட்டிக்கொண்டு ஸ்கிரீனை கெடுத்து விடும் .அப்புறமென்ன . மீண்டும் சிம்மை போட்டு ஆன செய்யவும் .அதுப்போல பேட்டரியை துடைத்து விட்டு போடவும் சரியாகிவிடும்..

       சரி இதெல்லாம் , பொறுமையா , அழகா செய்ய கூடியவங்களுக்கு. டிப்ஸ் , ஆனா என்னை மாதிரி தடாலடியாக செய்ய கூடியவங்களுக்கு இது ஒத்து வராது .பேசாம கடையில குடுத்துட வேண்டியதுதான் . நா என்ன  செஞ்சேன்னு கேக்கலைலையே.

        அதிகமில்லை ஜெண்டில்மேன்ஸ்.அதை அப்படியே ஒரு துணியில் சுற்றி துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது எல்லாம் சரியாகி இருந்துச்சி 10 நிமிடத்தில் மேட்டர் ஓவர் .

    இது மாதிரி எப்பவாவது நடந்தா டிரை பண்ணி பாருங்க .ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும்  அம்புட்டுதான .  

  

     

Saturday, August 7, 2010

ஜெய்லானி டீவியில்-சமையல்--1

121 என்ன சொல்றாங்ன்னா ...
        கூவத்தை ஒட்டிய டவுன் ஹாலில் ஜெய்லானியை தேடி அப்துல் சவுண்ட் குடுத்துகிட்டே வர அங்கே ஒரு பாட்டுசத்தம் மெதுவா கேக்க அங்கே ஒரு கொசுவை பிடித்து வைத்து ஜெய் பாடி கொண்டிருக்கிறார்

     கடித்தது யாரோ நீதானே
     கடிவாங்கியது யாரோ அது நாந்தானேஏஏஏ
     நீதானே எனை கடித்தாய்
     நாந்தானே உனை அடித்தேன்
     புரிந்தது ஏதோ கொஞ்சம் எனக்கூஊஊ

         மூக்கில் ஒன்று கடித்ததம்மா ..
        கடித்ததும் உடனே தடித்தம்மா

‘’ஸ்டாப்...ஸ்டாப்....................தல இதுனென்ன தனியா உட்காந்து புலம்புறீங்க ‘’
வாய்யா நாட்டாமை வரவங்க எல்லாம் வந்துட்டாங்களா “
ம் ஆனா அதுல ஒருத்தர் பெண் வேசத்துல வந்திருக்கார் முன்ன பின்ன பார்த்த மாதிரி இருக்கு
ஓய் ஒழுங்கா சொல்லுயா முன்னயா இல்ல பின்னாயா “
“ அய்யா சாமி ஆளை விடுங்க எனக்கு தெரியல “
ம். இது நல்ல பிள்ளைக்கு அழகு வாய்யா போய் பார்க்கலாம் .இதை பார்த்தா ஷீட்டிங் எடுக்குற இடமாவா இருக்குது நா அப்பவே சொன்னேன் நல்ல இடமா பாருன்னு கேட்டாத்தானே“


எல்லாமே ரியலா இருக்கோனும் நம்ம ஜெய்லானி டீ வியில ஓக்கே .. ..கேமரா ரெடி........ஆக்‌ஷன்


வணக்கம் ..இன்னைக்கி நாம் பார்க்க போவது  ஜெய்லானி டீவியில சமையல் செய்வது எப்படின்னு சொல்ல வந்திருக்காங்க என்னவெல்லாம் செய்யபோறாங்கன்னு பார்க்கலாம் .உங்களை நீங்களே அறிமுகம் செஞ்சிக்கோங்க  “ முதல்ல நீங்க சொல்லுங்க “ உங்க பேரு

இத்தனை நாள பேபியா , பாட்டியா பழகிட்டு இப்ப போய்  பேர கேட்டா கண் கலங்குது ரத்த கண்ணீரே வருது புஸ் பூஸ்ன்னு இதயம் அடிக்குது... சரி,,சரி.. நா கேக்கல இப்பிடி சொல்லியே மனசை கரைச்சிடுறீங்க உங்க இடத்தில போய் நில்லுங்க “


அடுத்தது நீங்க சொல்லுங்கமா “  மிஸ்டர் இது என்ன இத்தனை நாள் மாமின்னு அன்பா கூப்பிட்டுட்டு பகிடியா “
மாமி அது வேறஏஏஏ இது வேறஏஏஏ இது டீவீ புரோக்கிராம்  சரி கண் கலங்காதீங்க பக்கத்தில டிஸ்யூ பண்டலே இருக்கு எடுத்துக்கோங்க..!! போய் அந்த டேபிள் பக்கத்துல இருங்கோ“


 சரி அடுத்து நீங்க சொல்லுங்க “ ஹலோ ஜெய் போன தடவை  போட்டிய ஆரம்பிச்சதே நாந்தான் தெரியுமா..? நினைவு இருக்கட்டும் இல்லாட்டி கதை சொல்லியே உங்களை அழவச்சிடுவேன் ஜாக்கிரதை ..பீ கேர் ஃபுல் “
”  வேண்டாம்மா வனி , சாரி கால வைக்க மரந்துட்டேன் . என்னைய விட்டுடுங்கோ .இல்லாட்டி என் கோட்டை வச்சு காமெடி பன்னிடுவீங்க . சரி இன்னைக்கு நாட்டாமை நீங்கதான் அப்படியே சைடுல நில்லுங்கோ.. “ 
நேயர்களே..!!  இவங்க இன்னைக்கு சிறப்பு விருந்தினர் . எல்லாத்தையும் டேஸ்ட் பாத்து சொல்லப்போறாங்க .”” அடுத்தது நீங்க சொல்லுங்க “  என் பேர் என்னது ஆ மறந்து போச்சு நா ஸீரியசா திங்க் பன்னிகிட்டே இருக்கேன் ஆனா காமெடியா வந்துகிட்டே இருக்கு அதனால இன்னைக்கி வரைக்கும் நா எல் போர்ட் தான் ..
ஓக்கே நீங்க அப்படிக்கா போய் நில்லுங்க “” 


 சார் ,அம்மா ஐயா வாங்க நீங்க யாரு “அட தல என்னை தெரியலையா நாந்தான் எல் கே “ஏன்  தல என்னாச்சு ஏன் இந்த வேஷம் ’  போன புரோகிராமுக்கு வேஷம் போட்டது அதான் அப்படியே வந்துட்டேன் “ சரி போனாப் போகுது அப்படி அந்த கேபின் பக்கமா போய் இருங்க “  அடுத்தது நம்ம அப்பாவி தங்கமணி இப்பிடி சொன்னாதான் பிடிக்குமாம் ரொம்ப்ப நன்றி “
உங்க இட்லியை தவிர ஏதாவது செய்யுங்க அடுத்தது நீங்க. என் பேரு மஹி எனக்கு பிடிச்சதூஊஊ “ சரி அப்படி போய் செய்யுங்க அப்ப வந்து பாத்துக்கிரேன் “ “ (மனசுக்குள் தப்பிச்சேண்டா சாமி ஏதாவது நொன்ன கேள்வி கேக்காம விட்டாரே மஹி ).

அடுத்ததா வந்திருக்கிறது ‘யோவ் என்னய்யா நாடகத்திலேந்து தப்பிச்சு வந்திட்டிங்களா .இது என்ன டிரஸ் புரியலையே “ என்ன ஓய் என்னை அடையாளம் தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா” “ ஹி..ஹி.. ஒன்னுமில்ல நைட்டு அடிச்ச மப்பு அதான் கொஞ்சமா கண்ணுதெரியல ஒரு நாலு அடி தள்ளி நின்னா சரியா கண்டு பிடிச்சுடுவேன்”  “ ஓ இவர் நம்ம மங்குணி ஓக்கே என்னது கையில ஒன்னுமில்லாம வந்திருக்கீறீரு.

“ அதாம்ல நம்ம ஸ்டைலு அப்புறமா கவனி உமக்கே புரியும்” “ ஓக்கே ..ஓக்கே போங்க அப்படி நில்லுங்க  

”     இவர் பேர் அப்துல் காதர் இவரும் இன்னைக்கு ஏதோ செய்யரேன்னு சொல்லிட்டு வந்திருக்கார் “   “ அடப்பாவி மனுஷா நா எப்பயையா சொன்னேன் கோத்து விட்டுட்டியே சார் கொஞ்சம் மரியாதையா சொல்லுங்க இங்கே கேமரா ஓடிகிட்டு இருக்கு இது ஒரு ரியாலிட்டி ஷோ “ உனகென்ன மரியாதை பண்ணாடை , இப்பிடி மாட்டி உட்டுட்டியே அவ்வ்வ்  சரிபோய் நில்லுயா அப்படி “உனக்கு டிஸ்கவுண்ட் தரேன்


”  என்னது நிறைய பேர் பேரு குடுத்திருந்தாங்க இன்னும் கானலையே  என்ன ஆச்சி ஒரு வேளை அப்படியே எஸ் ஆயிட்டாங்களோ பயபுள்ளங்க நியுசே தெரியல “ “ பேசாம இதிலேயே கானவில்லைன்னு அறிவிச்சுடலாமா

   எல்லாரும் கோரஸாக நீங்க ஏதோ செய்யுரேன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு ” “ சரிங்க   அந்த அண்டாதானே அது கடைசியில வரும் ” 

ஒக்கே போட்டியில செய்ய ஆரம்பிங்க எது நல்லா வருதோ அவங்களுக்கு பிரைஸ் கிடைக்கும் . எது சுத்தமா சரி யில்லையோ அவங்களுக்கும் பிரைஸ் கிடைக்கும்”  ஓக்கே ஆரம்பிங்க....
 “ ஹலோ மஹி என்னது எல்லாரும் சுறுசுறுப்பா இருக்காங்க ஏதாவது செய்ய நீங்க என்னடான்னா பொருமையா போன் பண்ணிகிட்டு இருக்கீங்க”  “ ஹலோ இது என்னோட ஹஸ்ஸுகிட்ட போன் பண்ரேன்  .எப்பவும் அவர்தான் சமையல், நா போட்டோ மட்டும் தான். அதான் என்ன செய்யலாமுன்னு யோசனை கேக்குரேன் “
“ மங்கு நீங்க என்னா ஒன்னும் செய்யாம வேடிக்கை பாத்துகிட்டு இருக்கீங்க “ “ இன்னும் நிறைய நேரம் இருக்கு அது வரை ஒரு குட்டி தூக்கம் போட்டுகிரேன். சரியா. கால் மணிரேரத்துக்கு முன்னே என்னைய எழுப்பு “  மனசுக்குள் ((ச்சே நாசமா போவ கடைசியில என்னை அலாம் டைம் பீசா ஆக்கிட்டானே படுபாவி )) சத்தமா...சரிங்க சார் .தூங்குங்க .

என்னது திடீர்ன்னு ஒரே கண்ணு எரிச்சலா இருக்கு யாருங்க அது ஒரு மூட்டை வெங்காயத்தை உறிக்கிறது ”  இதெல்லாம் உங்க வூட்டு ஹோம் வொர்க் இங்க செய்யக்கூடாது “ மாமீ  பிளிஸ் எப்பவும் நீங்க கண்ண கசக்கிட்டு இருந்துட்டு இன்னைக்கு இங்கே எல்லாரையும் கசக்க வச்சிட்டீங்களே “ “ பாருங்க கண்ணு மட்டுமா கலங்குது ..மூக்குமில்ல ஒழுவுது “
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி: ஒரு வாரத்தில போடனுங்கிற ஆர்டர்ல  வந்த தொடர் பதிவு இது அதனால்.இதில அறிமுகம் மட்டும் இருக்கு .இன்னும் அட்டகாசம் அடுத்த பதிவில் , இப்ப வந்தவங்க நல்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டு  போங்க

தொடரும்     

         

Tuesday, August 3, 2010

தாய்ப்பால் வாரம் (வரம் )

116 என்ன சொல்றாங்ன்னா ...

       ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் முதல் தேதிய உலக தாய்ப்பால் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சு இருக்கு. ஆனா வசதியா அதையெல்லாம் மறந்துட்டு நட்பு தினமா கொண்டாடுறோம். ஹி..ஹி.. ஏன்னா  நாம வளந்துட்டோம் .இனி அதுக்கு அவசியமில்லை அதன் காரணம்

       எந்த ஒரு குழந்தைக்கும் அது பிறந்து முதல் ஆறு மாசம் வரை தாய்பாலே போதும் . எந்த எக்ஸ்டிரா பிட்டிங்கும் தேவையில்லை. இறைவன் குடுத்த வரம் அப்படி ஆனா இந்த பிசாசு மட்டும் அங்கையும் நம்மை சும்மா விடுமா அது லக்டோஜன் கம்பெனி வழியா நல்லா இருக்கிற அம்மாவையும் ஆமா மா போட வச்சு காசுக்கும் கேடு , உடலுக்கும் கேடு பிள்ளைக்கும் கேடுன்னு நம்மை வாங்கஆட்டி வைக்குது.

      வீட்டில குழந்தையை பாக்க வரும் மக்களும்  இப்ப இந்த கலர் இல்ல அந்த கலர் டப்பாவை வாங்கி குடு அப்பதான் பிள்ளை நல்லா கருப்பா அழகா இருக்குமுன்னு சொல்லி பிறக்கும் போது நல்லா அசிங்கமா வெள்ளை வெளேருன்னு இருக்கும் பிள்ளாயை நாலு ஐந்சு மாசத்துல அழகா கருப்பா ஆக்கிடுறாங்க

தாய் பால கொடுப்பதால் தாய்க்கு வரும் நன்மையை பாருங்க..


·         என்னைக்காவது திட்டனுமுன்னு தோனினா உன்னை ராத்திரி பகல்ன்னு கண்ணு முழிச்சி வளர்தேனே..!! அதுக்கு இதான் நன்றியா இப்பிடி திட்டிகிட்டே இருக்க ஒரு சான்ஸ் கிடைக்கும். இல்லாட்டி அந்த சான்ஸ் வாழ்கையில கிடைக்கது


·          தொன்னூறு சதவீதம் கருப்பை புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு இல்லை-.நோய் வந்தா அவங்களுக்கு மட்டுமா கஷ்டம் வீட்டிலுள்ள எல்லாருக்குமேதானே கஷ்டம் ஆஸ்பத்திரி அலைச்சல் பண ,மன நஷ்டம்.

·         பிரசவத்திற்கு பின் வரும் அதிகப்படியான இரத்த போக்கை கட்டு படுத்தி கருப்பை தன் பழைய நிலைக்கு சுருங்க உதவுகிறது

·         எடை குறைந்து பழைய உடலைமைப்பை பெறவும் உதவுகிறது .இதுக்குன்னு தனியா வாக்கிங்கோ , ஓடிங்கோ .தேவையில்லை .அதை பாக்க  நமக்கு நல்லாவா இருக்கும்

      கொடுப்பவர்களும் ஏதோ தர்மம் பன்னுவது மாதிரி வேண்டா வெறுப்பா குடுக்காமல் நல்ல மனநிலையில் கொடுப்பது நல்லது. இல்லாட்டி வளர்ந்து பெரியவர்களானால் அந்த மன நிலையில்தான் இருப்பார்கள். அதாவது நாம் டென்ஷனில், கோபத்தில் இருக்கும்போது வரும் வியர்வைக்கும் சாதாரன நிலையில் இருக்கும் போது வரும் வியர்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை ஆராய்ச்சி நிறுபித்து இருக்கு

      தாய்ப்பால் குழந்தையின் உரிமை. எங்கே குடுத்தால் புற அழகு கெட்டு போயிடுமுன்னு நினைச்சா . புள்ளையின் அக (பாசம்) அழகிலிருந்து சீக்கிரம் விலகிப்போயிடுவீங்க.

      தாய்ப்பால் இறைவனின் அருட்கொடை ஆனால் பால் பவுடர் மனிதனின் சரிகட்டும் குளோனிங் முயற்ச்சி. ஆனா இப்ப அதுக்கும் ஆள் புடிக்கும் வேலை நடக்குது வெளிநாட்டில பாட்டில கிடைக்குதாம் .டோர் டெலிவரியும் உண்டாம் . பாட்டிலுக்கு இத்தனை டாலர்ன்னு விலை

   இதென்னடா வம்பாபோச்சின்னு பார்தால் அம்மா வேலைக்கு போறாங்களாம் ஆயா வீட்டில இருக்காங்கலாம். பிள்ளயை கவனிக்க முடியாது அதனால் நே கொஸ்டின் .சரி இதில கலப்படம் பண்ணிட மாட்டான்களா..?
 நமது ஊரில இது எப்படியிம் வர இன்னும் 20 வருஷமாவது ஆகும் . அது வரையவது தாய்ப்பாலின் அருமையை நாம் மற்றவர்க்கு எடுத்து சொல்வோம் ( இன்னைக்கு ஏதாவது ஒரு சந்தேகம் கேக்கனுமே....என்ன கேக்கலாம்)

      பசும்பால் நல்லதுன்னு அதுக்கு மாற்று வழியும் கண்டு பிடித்திருக்கும் நாம. குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!!