Saturday, August 14, 2010

செல் ஃபோன் கிளீனிங்

          மனுசனுக்கு வாயில பல் இருக்கோ இல்லையோ கையில மொபைல் போன் இல்லாத ஆளே இல்லைன்னு சொல்ற அளவுக்கு போன் இப்ப எல்லாருகிட்டயும் இருக்கு.. பல் போனா சொல்போச்சி .பழமொழி  இப்ப  செல் போனா எல்லாம் போச்சிங்கிற அளவுல இருக்கு.


       ஒரு காலத்துல பேச மட்டுமே இருந்த போனில் இப்ப மனுச தேவைக்குள்ள மீடியா ,நெட் வரை வந்துடுச்சி .அதுக்குள்ள தேவைக்கு அதிகமான அளவு மெமரியும் கூடவே வருது. இப்படி பட்டதை காப்பாத்த பெரும்பாடா இருக்கு.  அதில ஒன்னு தண்ணீரில் விழுவது . .பெண்களுக்கு கிச்சனில வைக்கும் போதும் , சில சமயம் பேசிக்கிட்டே அப்படியே சம்பாரில் போட்டு விடுவதும் உண்டு ., ஆண்களுக்கு சாப்பிடும் போதும் இல்லை. பாத்ரூமில் , வேலை செய்யும் இடத்திலும் இப்பிடி ஆகி விடுகிறது.

          என்னதான் புதிய போனாக இருந்தாலும் , கேரண்டி , வாரண்டி இருந்தாலும் தண்ணீரில் (லிக்யூட் ) விழுந்தது என்று சொன்னால் அதுக்கு தனியாக செலவு செய்யனும் . செலவு போகட்டும் .அதில் உள்ள மேட்டரும் இல்ல போயிடும். தண்ணீரில் உள்ள உப்பு  போனில் உள்ள எலக்டிரானிக் போர்டை ஷார்ட் ஷர்க்யூட்டாக்கி விடும் .

        அப்படி அதில லிக்யூட் உள்ளே போனால் ,இல்லை தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எவ்வளவு சீக்கிரம் பின் பக்க கவரை திறக்க முடியுமோ திறந்து  முதலில் பேட்டரியை கழட்டவும்.. பிறகு சிம் கார்ட் , மெமரி கார்டையும் கழட்டி ஒரு முறை மெதுவாக நல்ல துணியால் துடைக்கவும்

        முழு கவரையும் கழட்டதெரிந்தால் கழட்டவும் , அப்படி தெரியாவிட்டால் நன்றாக உதறி அதிலுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுங்கள் .ஹேர் டிரையர் வீட்டில இருந்தால்  அதனால்
குறைந்த அளவு சூடு காற்று வருமாறு வைத்து போனை அதன் அருகில் காட்டலாம் . கவனம் அதிக சூடு  போனில் உள்ள சால்டரை உருக செய்து விடும்.

        கடைசியாக ஸ்கிரின் கீழ் பக்கம் வருமாறு சூரிய ஒளி படும் இடத்தில வைத்து எடுத்தால் சரியாகி விடும் . ஸ்கிரின் மேல் பக்கம் இருக்குமாறு வைத்தால் நீராவி ஸ்டீம் ஸ்கிரினில் வந்து ஒட்டிக்கொண்டு ஸ்கிரீனை கெடுத்து விடும் .அப்புறமென்ன . மீண்டும் சிம்மை போட்டு ஆன செய்யவும் .அதுப்போல பேட்டரியை துடைத்து விட்டு போடவும் சரியாகிவிடும்..

       சரி இதெல்லாம் , பொறுமையா , அழகா செய்ய கூடியவங்களுக்கு. டிப்ஸ் , ஆனா என்னை மாதிரி தடாலடியாக செய்ய கூடியவங்களுக்கு இது ஒத்து வராது .பேசாம கடையில குடுத்துட வேண்டியதுதான் . நா என்ன  செஞ்சேன்னு கேக்கலைலையே.

        அதிகமில்லை ஜெண்டில்மேன்ஸ்.அதை அப்படியே ஒரு துணியில் சுற்றி துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது எல்லாம் சரியாகி இருந்துச்சி 10 நிமிடத்தில் மேட்டர் ஓவர் .

    இது மாதிரி எப்பவாவது நடந்தா டிரை பண்ணி பாருங்க .ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும்  அம்புட்டுதான .  

  

     

128 என்ன சொல்றாங்ன்னா ...:

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு.....வாழ்த்துகள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரி இதெல்லாம் , பொருமையா , அழகா செய்ய கூடியவங்களுக்கு. டிப்ஸ் , ஆனா என்னை மாதிரி தடாலடியாக செய்ய கூடியவங்களுக்கு
//

ஓ...அப்ப சரி...
ஆமா சார்.. என்னைய மாறி ”பொறுமையா” செய்ய கூடியவர்களுக்கு ஏதாவது டிப்ஸ்...?

பொன் மாலை பொழுது said...

//அப்படியே ஒரு துணியில் சுற்றி துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது எல்லாம் சரியாகி......//

ஒரு தடவக்கி எத்தன பீசு இதுமேரிக்கி உள்ளே போடலாம்?
ஒன்னா போடலாமா? இல்ல தனித்தனியத்தா போடணுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்க மாஸ்டர்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒரு தடவக்கி எத்தன பீசு இதுமேரிக்கி உள்ளே போடலாம்?
ஒன்னா போடலாமா? இல்ல தனித்தனியத்தா போடணுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்க மாஸ்டர்.
//

இது கேள்வி அண்ணே.. ஹா.ஹா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

பயனுள்ள தகவல் ஜெய்லானி..

தூயவனின் அடிமை said...

பயன் உள்ள செய்தி.

ப.கந்தசாமி said...

ஏனுங்க, செல்போனை முதலில் வாஷரில் போட்டு நாலு சுத்து சுத்தினதுக்கப்புறம் டிரையரில் போட்டா அழுக்கெல்லாம் சுத்தமாப் போயி புது போனாட்டம் ஆயிடாதுங்களா?

சீமான்கனி said...

பயனுள்ள பகிர்வு நன்றி ஜெய்லானி...

தூயவனின் அடிமை said...

ஒரு சின்ன கேள்வி கைபேசிக்கு தண்ணி எதிரியா? அல்லது தண்ணிக்கு கைபேசி எதிரியா?
என்ன மாதிரி சின்ன பிள்ளைகளுக்கு கொஞ்சம் விபரமா சொல்லுங்க பாஸ்.

எம் அப்துல் காதர் said...

//ஒரு சின்ன கேள்வி கைபேசிக்கு தண்ணி எதிரியா? அல்லது தண்ணிக்கு கைபேசி எதிரியா? என்ன மாதிரி சின்ன பிள்ளைகளுக்கு கொஞ்சம் விபரமா சொல்லுங்க பாஸ்.//

சின்னப் பிள்ளைங்களுக்கு கைபேசியே எதிரி தான் பாஸ்! இருங்க விவரணையா மாஸ்டர் என்ன சொல்றாங்கன்னு படிச்சிட்டு வர்றேன்>

எம் அப்துல் காதர் said...

//அதிகமில்லை ஜெண்டில்மேன்ஸ்.அதை அப்படியே ஒரு துணியில் சுற்றி துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது எல்லாம் சரியாகி இருந்துச்சி 10 நிமிடத்தில் மேட்டர் ஓவர்// ன்னா எப்படி பாஸ். துணியோடு அள்ளிக் கொண்டு போய் குப்பையில் போட்டுட்டிங்களா. இல்ல எப்படி?? ஹி..ஹி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன் பாஸ்.. செல்போனுக்கு நீஞ்ச கத்துக்கொடுத்திருந்தா.. இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதோ?.. [ கேள்விக்குறி ]

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அன்பு ஜெய்லானி ,
இதே போல் டிவி ,கம்ப்யூட்டர் போன்ற பொருட்களுக்கும் செய்ய முடியுமா ??

@பட்டபடி
/// சரி இதெல்லாம் , பொருமையா , அழகா செய்ய கூடியவங்களுக்கு. டிப்ஸ் , ஆனா என்னை மாதிரி தடாலடியாக செய்ய கூடியவங்களுக்கு
//

ஓ...அப்ப சரி...
ஆமா சார்.. என்னைய மாறி ”பொறுமையா” செய்ய கூடியவர்களுக்கு ஏதாவது டிப்ஸ்...?/////

இந்த கேள்விக்கான விடை தெரிய ஆவல்

Unknown said...

பயனுள்ள தகவல்

இலா said...

ஜெய் ! இப்படி சீரியசா வகுப்பெடுக்கறீங்களே??!!! நல்லா இருக்கு ஐடியா!நல்ல பயனுள்ள பதிவு ... என்னை மாதிரி இரும்பு கரம் இருக்கவங்களுக்கு...

ஹைஷ்126 said...

//ஒரு சின்ன கேள்வி கைபேசிக்கு தண்ணி எதிரியா? அல்லது தண்ணிக்கு கைபேசி எதிரியா?//

தண்ணியில கைபேசியை போட்டா பிரச்சனையா? அல்லது கைபேசியில் தண்ணியை ஊத்தினா பிரச்சனையா?
----------------------------
// ஏன் பாஸ்.. செல்போனுக்கு நீஞ்ச கத்துக்கொடுத்திருந்தா..//
சாதாபோன் சீக்கிரமா நீஞ்ச கத்துக்குமா? ஸ்லைட் டைப் சீக்கிரம் கத்துக்குமா? அல்லது ஃப்ளிப் டைப் சீக்கரம் நீஞ்சுமா?
----------------------------
வாட்டர் ரெஸிஸ்டன், வாட்டர் ஃப்ரூப் (50 மீட்டர்) என போட்டு போன் வருதே அதை வாங்கலாம் தானே? அதை தண்ணியில போட்டா வேலை செய்யுமா?

அப்படி வாட்டர் ஃப்ரூப் போன் வரவில்லை என்றால் ஏன் வரவில்லை? இன்னும் எத்தனை நாட்களில் வரும்?

:)

இது எல்லாத்துக்கும் பதில் சொன்ன பிறகு வாழ்க வளமுடன்:)

kavisiva said...

எதுக்கு வாஷிங் மெஷினல் எல்லாம் போட்டுக்கீட்டு. ஓவனில் ரெண்டு நிமிஷம் வச்சு எடுத்தா 'எல்லாஆஆஆம்' சரியாயிடும் :)

வேலன். said...

இன்னும் ஒரு தகவலையும் விட்டுவிட்டீர்கள். சாம்பாரில் விழுந்த போனை எடுத்து சுடாக உள்ள வெறும் சாதத்தில் போட்டு பிரட்டி எடுத்தால் அதில உள்ள சாம்பாரை சாதம் இழுத்துவிடும். சாதத்தில் உள்ள சூடு உள்ளே உள்ள சாம்பாரை ஆவியாக்கிவிடும்.மீண்டும் போனை பயன்படுத்தலாம். வாழ்க வளமுடன்.
வேலன்.

எல் கே said...

//துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு //

மெஷின் ஆன் பண்ணனும இல்ல அப்படியே இருக்கனுமா ??

எல் கே said...

//கடைசியாக ஸ்கிரின் கீழ் பக்கம் வருமாறு//

ஏன் ஸ்க்ரீன் சைட் வாக்குல வைக்கக் கூடாதா???

//ஹேர் டிரையர் வீட்டில இருந்தால் //

இல்லாட்டி ???

//பெண்களுக்கு கிச்சனில வைக்கும் போதும் , .//

உன்னை மாதிரி வீட்டில் வெந்நீர் வைக்கற ஆண்களுக்கும்

ஹைஷ்126 said...

ஆமாம் கார்புரேட்டரில் தண்ணி பூந்துகிட்டா பெட்ரோல் போட்டு கழுரோம், ஃப்யூயல் இன்ஜெரில் தண்ணி பூந்தா டீசல் போட்டு கழுவுரோம், சைகிள் ஓவராலிங் மண்ணெணை போட்டு கழுவுரோமே, செல் போன்ல தண்ணி பூந்தா எதை போட்டு கழுவனும்?:)

ஹைஷ்126 said...

//என்னை மாதிரி இரும்பு கரம் இருக்கவங்களுக்கு...// அடிக்கடி மயிலை முட்டை போட சொல்லுங்கோ இல்லைனா இரும்பு துருபிடிச்சிட போவுது:)

ஹைஷ்126 said...

அவசரமா தடாலடியா சரிபண்ண வேண்டும் என்றால் டாப் லோடிங் மெஷின் அல்லது ஃப்ரெண்ட் லோடிங் மெஷினில் போடனுமா?

Hot wash/Warm wash/Cold wash அதில் எந்த செட்டிங் வைக்கோணும்?

வாஷ் முடிந்ததும் வெயில்ல காயவைக்கலாமா? அல்லது நிழலில்தான் காய வைக்க வேணுமா? அதுக்கு பிறகு இஸ்திரி கூட போடனுமா?

ரோஸ்விக் said...

உங்க ஐடியாப்படிதான் மேல பதிவுல உள்ள ரெண்டு போனையும் துவைச்சு எடுத்தீங்களா?? ரொம்ப பளிச்சுன்னு இருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

eley ithukku naan muthalla celphone vaankanumaa?

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயனுள்ள பகிர்வு

Unknown said...

ஜெய்லானி நீங்க எங்க இருக்கீங்க ,,, என் போனு இப்ப தனிதனியா வதிருச்சு,..ஐடியா மனியன்னே..
நீங்கதான் எனக்கு புதுப் போன் வாங்கி தரனும் ....

Vidhya Chandrasekaran said...

இதுக்கு சீரியஸா பின்னூட்டம் போடனுமா?இல்ல கிண்டல் பண்ணி போடனுமா?

இந்த புள்ளைங்க கைல சிக்காம பாதுகாக்கறது எப்படின்னு ஒரு பதிவு போடனும்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

இருங்க நா முதல்ல தண்ணில போடறதா சாம்பார்ல போடறதன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..!!

யோசிச்சு, போட்டுட்டு..அப்புறம் நீங்க சொன்ன ஐடியா வொர்க் அவுட் ஆகுதான்னு பாத்து சொல்றேங்க :-))

நாடோடி said...

த‌ண்ணியில் விழுந்த‌ போனை எந்த‌ கார‌ண‌த்தை கொண்டும் ஈர‌ம் காயாம‌ல் ஆன் ப‌ண்ணிட‌ வேண்டாம்.. ப‌திவு ந‌ல்லா இருக்கு ஜெய்லானி.

சுசி said...

:))))

Anonymous said...

அரிசிக்குள்ள புதைச்சு காப்பாத்துனோம்.இப்ப ஜெய்லானியால புது தொழில்நுட்பம் அறிமுகமாயிருக்கு.வாசிங் மெஷின் இல்லாதவங்க துவைக்கிற கல்லு மேல வைக்கலாமா மேடம்?

அப்துல்மாலிக் said...

நல்ல அட்வைஸ்

Palani velu said...

அட, டிரியேரில் துணிஐ சுற்றி போடுவதறku பதிலாக மாடிலிருந்து தலையை முன்று முறை சுற்றி கீழே வீசி எறிந்தால் எல்லாம் சரியாகிவிடும்!

மங்குனி அமைச்சர் said...

ஏன் பாஸ்.. செல்போனுக்கு நீஞ்ச கத்துக்கொடுத்திருந்தா.. இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதோ?.. [ கேள்விக்குறி ]///

அதுவும் முங்கு நீச்சல் கத்து கொடுத்திட்டா ?

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

இருங்க நா முதல்ல தண்ணில போடறதா சாம்பார்ல போடறதன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..!!

யோசிச்சு, போட்டுட்டு..அப்புறம் நீங்க சொன்ன ஐடியா வொர்க் அவுட் ஆகுதான்னு பாத்து சொல்றேங்க :-))
////

முதல்ல சாம்பாருல போடுங்க , ஆபுரம் தன்னால் போட்டிங்கன்ன போன் கழுவி கிளீனா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

eley ithukku naan muthalla celphone vaankanumaa?
///

வாங்கணுமின்னு இல்லை ,முடிஞ்சா திருட கூட செய்யலாம்

Jey said...

ஒரு நைட் முழுக்க பக்கட் தண்ணில ஊரின போனுக்கும் இந்த செயல்முறை பொருந்துமா ஜெய்லானி....

ஜெய்லானி said...

@@@rk guru--//நல்ல பதிவு.....வாழ்த்துகள் //

வாங்க குரு..!!முதல் வடை இன்னைக்கு உங்களுக்குதான். ஒரே நேரத்துல ரெண்டு இடத்திலும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jey said...

//இது மாதிரி எப்பவாவது நடந்தா டிரை பண்ணி பாருங்க .ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும் அம்புட்டுதான . //

அப்படியே ஒரு போன் வாங்கி கொரியர்ல அனுப்பினா, உம்புண்ணியத்துல ட்ரை பண்னி பாத்திடிவேன்...

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//சரி இதெல்லாம் , பொருமையா , அழகா செய்ய கூடியவங்களுக்கு. டிப்ஸ் , ஆனா என்னை மாதிரி தடாலடியாக செய்ய கூடியவங்களுக்கு
//

ஓ...அப்ப சரி...
ஆமா சார்.. என்னைய மாறி ”பொறுமையா” செய்ய கூடியவர்களுக்கு ஏதாவது டிப்ஸ்...? //

ஹி..ஹி.. இதுக்குதான் பட்டா வேனுங்கிறது. இதுல மாட்டிக்கிறேனே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//அப்படியே ஒரு துணியில் சுற்றி துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது எல்லாம் சரியாகி......//

//ஒரு தடவக்கி எத்தன பீசு இதுமேரிக்கி உள்ளே போடலாம்? //

ஹா..ஹா.. அப்ப வூட்ல அடிக்கடி நடக்குற சமாசாரமா சொல்லவே யில்ல...

//ஒன்னா போடலாமா? இல்ல தனித்தனியத்தா போடணுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்க மாஸ்டர். //

ஹி..ஹி..மொத்தம் எத்தனைன்னு சொல்லுங்க . அப்புறம் ஒரு கால்குலேடர் வச்சி கூட்டி கழிச்சி சொல்றேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//ஒரு தடவக்கி எத்தன பீசு இதுமேரிக்கி உள்ளே போடலாம்?
ஒன்னா போடலாமா? இல்ல தனித்தனியத்தா போடணுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்க மாஸ்டர்.
//

இது கேள்வி அண்ணே.. ஹா.ஹா...//

பட்டா நீயுமா அவ்வ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//பயனுள்ள தகவல் ஜெய்லானி..//

வாங்க ஷேக்..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//பயன் உள்ள செய்தி.//

வாங்க பாஸ்..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//ஏனுங்க, செல்போனை முதலில் வாஷரில் போட்டு நாலு சுத்து சுத்தினதுக்கப்புறம் டிரையரில் போட்டா அழுக்கெல்லாம் சுத்தமாப் போயி புது போனாட்டம் ஆயிடாதுங்களா? //


ஹா..ஹா..நல்ல கேள்விதான் . ஆனா போன் வேலை செய்யுமான்னுதான் தெரியல .அடுத்த தடவை டிரை பண்ணி பாத்துட்டு சொல்றேன். .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சீமான்கனி--//பயனுள்ள பகிர்வு நன்றி ஜெய்லானி...//

வாங்க கனி..!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//ஒரு சின்ன கேள்வி கைபேசிக்கு தண்ணி எதிரியா? அல்லது தண்ணிக்கு கைபேசி எதிரியா? //

கை பேசியா அப்படின்னா..?? ( யப்பா நல்ல வேளை தப்பிச்சேன் ))

//என்ன மாதிரி சின்ன பிள்ளைகளுக்கு கொஞ்சம் விபரமா சொல்லுங்க பாஸ்.//

ஆறு வயசுக்கு கிழே உள்ளவங்ககளுக்கு இப்ப டியூஷன் இல்ல..ஹி..ஹி..(( ஐ .எப்படி தப்பிச்சேன் பாத்தீங்களா )) . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மங்குனி அமைச்சர் said...

49

மங்குனி அமைச்சர் said...

50

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//ஒரு சின்ன கேள்வி கைபேசிக்கு தண்ணி எதிரியா? அல்லது தண்ணிக்கு கைபேசி எதிரியா? என்ன மாதிரி சின்ன பிள்ளைகளுக்கு கொஞ்சம் விபரமா சொல்லுங்க பாஸ்.//

சின்னப் பிள்ளைங்களுக்கு கைபேசியே எதிரி தான் பாஸ்! இருங்க விவரணையா மாஸ்டர் என்ன சொல்றாங்கன்னு படிச்சிட்டு வர்றேன்.//

யப்பா ...நல்ல வேளை நீங்களே பதில சொல்லிட்டீங்க ..பிரதர்...
////அதிகமில்லை ஜெண்டில்மேன்ஸ்.அதை அப்படியே ஒரு துணியில் சுற்றி துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு போய் ஒரு காஃபி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது எல்லாம் சரியாகி இருந்துச்சி 10 நிமிடத்தில் மேட்டர் ஓவர்// ன்னா எப்படி பாஸ். துணியோடு அள்ளிக் கொண்டு போய் குப்பையில் போட்டுட்டிங்களா. இல்ல எப்படி?? ஹி..ஹி.//


ஆஹா...ராத்திரியில கண் பார்வை கம்மின்னு இன்னைக்குதாங்க தெரியுது எனக்கு . சரியா படிங்க பாஸ். அது குப்பை கூடை இல்ல .வாஷிங் மிஷின் டிரையர்..அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//ஏன் பாஸ்.. செல்போனுக்கு நீஞ்ச கத்துக்கொடுத்திருந்தா.. இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதோ?.. [ கேள்விக்குறி ] //

நானும் தேடிப்பாக்குரேன் ஒரு சைனீஸ் செண்டரும் கிடைக்கலையே பாஸ்..ஹி..ஹி.. இப்ப புரிஞ்சிதா..!!! ( நால்லா பாருங்க ஆச்சிரியக்குறி மூனு க்கி..க்கி..)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சௌந்தர் said...

ஜெய்லானியால் வாசிங் மெஷின் விற்பனை அதிகரித்து உள்ளது....

ஹுஸைனம்மா said...

ஏன்.. ஏன்... ?

செல்வா said...

//.ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும் அம்புட்டுதான . ///
சரி விடுங்க .. முயற்சி பண்ணி பார்க்கலாம் ..!!

யாரோ ஒருவன் said...

வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை

சசிகுமார் said...

//ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும் அம்புட்டுதான . //

செய்து பார்க்கலாம்னு நினைக்கும்போதே இப்படி ஒரு கண்டிசன் போட்டு விட்டீங்களே

Unknown said...

hi machan..supera erukku...
vara vara sari ellai romba yesikerengal.

நல்ல பதிவு.....வாழ்த்துகள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிணத்துக்குள்ள விழுந்த செல்போன என்னங்ணா பண்றது?

r.v.saravanan said...

நல்ல பதிவு தான் ஆனா கடைசிலே சொன்னீங்க பாருங்க உங்க அனுபவம் அது தான் சூப்பர்

athira said...
This comment has been removed by the author.
athira said...

ஆ.... ஜெய், திரும்பிப்பார்ப்பதுக்குள் 60 வந்திட்டுது.... நான் கொமெண்ட்டைச் சொன்னேன்:), கண்ணீர் மறைக்குது எழுத முடியேல்லை:).

என் நண்பியின் மகள்(2 வயது), நண்பியின் ஆப்பிள் ஐ போனை வாங்கி கொமெட்டுக்குள் தவறுதலாகப் போட்டுவிட்டாராம், ஆனால் எந்தப் பிரச்சனையுமில்லாமல் வேர்க் பண்ணுது:).

//இது எல்லாத்துக்கும் பதில் சொன்ன பிறகு வாழ்க வளமுடன்:)/// ஹா... ஹா... ஹா... ஜெய்..லானி சூப்பர் மாட்டீஈஈஈஈஈஈ.

நோன்புக் களையோ? பற்றரி வீக்கானமாதிரி இருக்கே:)).

ஜிஎஸ்ஆர் said...

தண்ணீரில் விழுந்த அலைபேசியின் பேட்டரியை மற்றும் சிம் மெம்ரி கார்டு எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டு ஒரு வெள்ளைத்துணியில் அலைபேசியை சுற்றி நம் வீட்டில் இருக்கும் அரிசியின் உள்ளே வைத்தால் ஒரு இரவில் அதில் இருக்கும் மொத்த நீரையும் உறிஞ்சி விடும் இனி முயற்சித்து பாருங்கள் பலன் தெரியும்

ஜெய்லானி said...

@@@பனங்காட்டு நரி--//அன்பு ஜெய்லானி ,
இதே போல் டிவி ,கம்ப்யூட்டர் போன்ற பொருட்களுக்கும் செய்ய முடியுமா ?? //

ஆஹா.. குட் கொஸ்டின்..ஆனா டிவி கம்ப்யூட்டர் வாஷிங் மிஷின் உள்ள போகுமா..?? பாக்கனுமே..!!

@பட்டபடி
/// சரி இதெல்லாம் , பொருமையா , அழகா செய்ய கூடியவங்களுக்கு. டிப்ஸ் , ஆனா என்னை மாதிரி தடாலடியாக செய்ய கூடியவங்களுக்கு
//

ஓ...அப்ப சரி...
ஆமா சார்.. என்னைய மாறி ”பொறுமையா” செய்ய கூடியவர்களுக்கு ஏதாவது டிப்ஸ்...?/////

இந்த கேள்விக்கான விடை தெரிய ஆவல்//

அப்ப மேல உள்ளாதை எதுவும் படிக்கலையா.. அதுல இருக்கே டிப்ஸ்..அவ்வ்வ். உங்கள் முதல் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--// பயனுள்ள தகவல் //

வாங்க ..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இலா--//.ஜெய் ! இப்படி சீரியசா வகுப்பெடுக்கறீங்களே??!!! நல்லா இருக்கு ஐடியா!நல்ல பயனுள்ள பதிவு ... என்னை மாதிரி இரும்பு கரம் இருக்கவங்களுக்கு.//

இரும்பு கரம் தானே ரொம்ப சிம்பிள். செல்லமா அதுக்கு ஒரு அடி வச்சா போதும் . புதுசாவே வாங்கிடலாம் (( அடி யாருக்குன்னு கேக்க கூடாது ))ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//ஒரு சின்ன கேள்வி கைபேசிக்கு தண்ணி எதிரியா? அல்லது தண்ணிக்கு கைபேசி எதிரியா?//

தண்ணியில கைபேசியை போட்டா பிரச்சனையா? அல்லது கைபேசியில் தண்ணியை ஊத்தினா பிரச்சனையா? //

இதுக்கு எனக்கு ரெண்டு நாள் லீவு வேனும் ரூம் போட்டு யோசிக்கதான் . வந்து சொல்ரேன்..( யப்பா ..உஸ் இப்ப தப்பிச்சாச்சி ))
----------------------------
// ஏன் பாஸ்.. செல்போனுக்கு நீஞ்ச கத்துக்கொடுத்திருந்தா..//
சாதாபோன் சீக்கிரமா நீஞ்ச கத்துக்குமா? ஸ்லைட் டைப் சீக்கிரம் கத்துக்குமா? அல்லது ஃப்ளிப் டைப் சீக்கரம் நீஞ்சுமா? //


குட் கொஸ்டின் ரக்கை உள்ள உயிரினம்தான் நல்லா நீந்தும் அப்ப ஃபிளிப் டைப் சரின்னு தோனுது. எதுக்கும் உங்க போனை குடுத்தா என் ஆராய்ச்சிக்கு வசதியா இருக்கும்.ஹி..ஹி..
----------------------------
வாட்டர் ரெஸிஸ்டன், வாட்டர் ஃப்ரூப் (50 மீட்டர்) என போட்டு போன் வருதே அதை வாங்கலாம் தானே? அதை தண்ணியில போட்டா வேலை செய்யுமா? //

எதுக்கும் சுடுதண்ணியில போட்டு பாருங்க பாஸ்..அது குளிர்ந்த நீருக்கா இருக்கும் ( பச்சை தண்ணியின்னா அது ஒரு கேள்வி வரும் ))

//அப்படி வாட்டர் ஃப்ரூப் போன் வரவில்லை என்றால் ஏன் வரவில்லை? இன்னும் எத்தனை நாட்களில் வரும்? :) //

சார்..ஐயா...அம்மா..நா செல் போன் மானுஃபேக்‌ஷரிங்கா பண்ணுரேன் . ஒரு பச்ச கொயந்தைய இந்த வாங்கு வாங்கினா என்னதுக்கு ஆகும் அவ்வ்வ்வ்

/ இது எல்லாத்துக்கும் பதில் சொன்ன பிறகு வாழ்க வளமுடன்:) //

வேண்டாம் சாமி நா இப்பிடியே இருந்துக்கிரேன் அதான் வசதி..( என்னாஆஆஆ வில்லத்தனம் )) :-))) ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@kavisiva--//எதுக்கு வாஷிங் மெஷினல் எல்லாம் போட்டுக்கீட்டு. ஓவனில் ரெண்டு நிமிஷம் வச்சு எடுத்தா 'எல்லாஆஆஆம்' சரியாயிடும் :) //

ஆமாங்க அப்படியே அதில கொஞ்சம் வெங்காயம் + தக்காளியும் வச்சா நல்லா ஃபிரை யாகி வரும் மதியம் சாப்பாட்டுக்கு நல்லா இருக்கும்ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//இன்னும் ஒரு தகவலையும் விட்டுவிட்டீர்கள். சாம்பாரில் விழுந்த போனை எடுத்து சுடாக உள்ள வெறும் சாதத்தில் போட்டு பிரட்டி எடுத்தால் அதில உள்ள சாம்பாரை சாதம் இழுத்துவிடும். சாதத்தில் உள்ள சூடு உள்ளே உள்ள சாம்பாரை ஆவியாக்கிவிடும்.மீண்டும் போனை பயன்படுத்தலாம். வாழ்க வளமுடன்.
வேலன் //

தெய்வமே எங்கே போய்ட்டீங்க உங்களைதான் தேடினேன் .என்னை மாதிரி கஞ்ச பிசினாரிக்கு சூப்பர் ஐடியா குடுத்தீங்க ஹா..ஹா.. காய்கறி விக்கும் விலைக்கு வேஸ்டாக்கலாமா என்ன .!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//துணி துவைக்கும் மிஷினில் டிரையரில் போட்டு விட்டு //

மெஷின் ஆன் பண்ணனும இல்ல அப்படியே இருக்கனுமா ?? //

அந்த அளவுக்கு வாழைபழ சோம்பேரியா நீங்க ஹி..ஹி.. ஹய்யோ..ஹய்யோ..

//கடைசியாக ஸ்கிரின் கீழ் பக்கம் வருமாறு//

ஏன் ஸ்க்ரீன் சைட் வாக்குல வைக்கக் கூடாதா???

ம் வைக்கலாம் என்னா ஒன்னு பக்கத்தில ஒரு ஊது பத்தியும் வைக்க வேண்டி வருமே இல்லாட்டி ஈ மொய்ச்சுடும்..ஹி..ஹி..

//ஹேர் டிரையர் வீட்டில இருந்தால் //

இல்லாட்டி ??? //

பால் குக்கர் விசில் பக்கம் வையுங்க அதுவா ஊஊஊஉதும்..

//பெண்களுக்கு கிச்சனில வைக்கும் போதும் , .//

உன்னை மாதிரி வீட்டில் வெந்நீர் வைக்கற ஆண்களுக்கும் //

ஹி...ஹி....வரலாறு முக்கியம் மறந்துடாதீங்க .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//ஆமாம் கார்புரேட்டரில் தண்ணி பூந்துகிட்டா பெட்ரோல் போட்டு கழுரோம், ஃப்யூயல் இன்ஜெரில் தண்ணி பூந்தா டீசல் போட்டு கழுவுரோம், சைகிள் ஓவராலிங் மண்ணெணை போட்டு கழுவுரோமே, செல் போன்ல தண்ணி பூந்தா எதை போட்டு கழுவனும்?:)//

இதையும் பெட்ரோல் போட்டுதான் கழுவனும் .ஆனா பிளாஸ்டிக் + எல் சி டி மைல்ட் சோப்தான் பெஸ்ட்(( நீங்க பினாயில் விட்டு கழுவுங்க அப்பதான் கப்பு நாத்தம் போகும் ))

////என்னை மாதிரி இரும்பு கரம் இருக்கவங்களுக்கு...// அடிக்கடி மயிலை முட்டை போட சொல்லுங்கோ இல்லைனா இரும்பு துருபிடிச்சிட போவுது:)//

ஹி..ஹி.. ஹா..ஹா....க்கி..க்கி...

//அவசரமா தடாலடியா சரிபண்ண வேண்டும் என்றால் டாப் லோடிங் மெஷின் அல்லது ஃப்ரெண்ட் லோடிங் மெஷினில் போடனுமா?

Hot wash/Warm wash/Cold wash அதில் எந்த செட்டிங் வைக்கோணும்? //


ஓஹ்..உங்க ..மிசின்ல இந்த செட்டிங்கெல்லாம் இருக்கா .என்னுடைய மிஷின்ல லெஃப்ட் , ரைட் , ரிவர்ஸ் மட்டுதான் இருக்கு..

//வாஷ் முடிந்ததும் வெயில்ல காயவைக்கலாமா? அல்லது நிழலில்தான் காய வைக்க வேணுமா? அதுக்கு பிறகு இஸ்திரி கூட போடனுமா?//

ஹா..ஹா..அதான் போன் முன்னாலேயே குளிச்சிடுச்சே ரெண்டாவது குளிக்க வச்சா ஜண்ணி வந்துடும்மே . அதனால சும்மா தலை துவட்டி விட்டா கூட போதும் . இஸ்திரி ரொம்ப முக்கியம் நினைவு படுத்தியதுக்கு நன்றி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரோஸ்விக்--//உங்க ஐடியாப்படிதான் மேல பதிவுல உள்ள ரெண்டு போனையும் துவைச்சு எடுத்தீங்களா?? ரொம்ப பளிச்சுன்னு இருக்கு...//

ஹி..ஹி.. ஒன்னு சுட்டது ..ஒன்னு சுடாதது..நீங்களே கண்டு பிடிச்சுக்கோங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--// eley ithukku naan muthalla celphone vaankanumaa? //

ஓஹ் அப்ப நீங்க இன்னும் பூமிக்கு வரலையா..? .. புதனை விட்டு விட்டு வாங்க அப்ப தான் இந்த பதிவு உங்களுக்கு ஏலியன்ஸுக்கு இல்லை.. க்கி..க்கி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வெறும்பய--//பயனுள்ள பகிர்வு //

வாங்க ..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vanathy said...

ஜெய், என்னவோ போங்க. எனக்கு இந்த செல் போன்களே அலர்ஜி. அதை தொடுவதே குறைவு.
உங்கள் பதிவு நல்லா இருக்கு.

Anonymous said...

ஜெய்லானி சார் பதிவு சூப்பர் ..இனிமேல் செல் சாம்பாரில் வீழுந்தாலும் பரவால்லே நீங்க சொன்னது போல் செஞ்சா போச்சு ...நன்றி

Jey said...

எச்சுச்ச்சு மீ , என் கமென்ஸ்க்கு இன்னும் பதில் சொல்லலை...

சிநேகிதன் அக்பர் said...

பயனுள்ள தகவல்கள் ஜெய்லானி, அதுவும் உங்கள் பாணியில்.

சுதந்திர தின வாழ்த்துகள்.

Unknown said...

எச்சுச்ச்சு மீ , என் கமென்ஸ்க்கு இன்னும் பதில் சொல்லலை...

Anonymous said...

உபயோகமான தகவல் தான்..
சரி..
சுத்தம் செய்வதற்கு போன் இல்லேனா.. ஃப்ரீயா செல்போன் தருவீங்களா??

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//ஜெய்லானி நீங்க எங்க இருக்கீங்க ,,,//

நிலாவில வாக்கிங் போய்கிட்டு இருக்கேன் . வரிங்களா சேர்ந்தே போகலாம்ஹி..ஹி..

//என் போனு இப்ப தனிதனியா வதிருச்சு,..ஐடியா மனியன்னே.. //

பரவாயில்லையே அப்ப நீங்களா பிரிக்க வேண்டிய வேலை மிச்சம் சந்தோஷப்படுங்க...

// நீங்கதான் எனக்கு புதுப் போன் வாங்கி தரனும் .... //

இந்த வரி மட்டும் சரியா புரியல என்னோட செக்கரேட்டரி (டிரான்ஸிலேட்டர்)எதுக்கும் வரட்டும் படிச்சிட்டு சொல்ரேன் ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வித்யா--// இதுக்கு சீரியஸா பின்னூட்டம் போடனுமா?இல்ல கிண்டல் பண்ணி போடனுமா? //

வாங்க இது நம்ம இடம் எப்படி வேண்டுமானாலும் போடலாம் ...!! போடுங்க..!!

//இந்த புள்ளைங்க கைல சிக்காம பாதுகாக்கறது எப்படின்னு ஒரு பதிவு போடனும்.//

போடுங்க ..போடுங்க..சீக்கிரமாவே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi--//இருங்க நா முதல்ல தண்ணில போடறதா சாம்பார்ல போடறதன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..!! //

சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க ..ஹி..ஹி..

//யோசிச்சு, போட்டுட்டு..அப்புறம் நீங்க சொன்ன ஐடியா வொர்க் அவுட் ஆகுதான்னு பாத்து சொல்றேங்க :-)) //

என்னது இது சின்ன புள்ளதனாமா...அப்ப சரியாகாட்டி என நிலைமை என்ன ஆகிறது .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அஹஹா.... செல்போன்ஐ dryer ல போட்டு தொவச்ச ஒரே ஆள் இந்த உலகத்துலேயே நீங்க தான் சார்... ச்சே... உங்கள போல யாரால முடியும் சொல்லுங்க...ஹா ஹா அஹ... (டிப்ஸ்க்கு ரெம்ப நன்றிங்கோ... நான் செல்போன் அதிகம் யூஸ் பண்றதில்லைங்க... )

ஜெய்லானி said...

@@@நாடோடி--//த‌ண்ணியில் விழுந்த‌ போனை எந்த‌ கார‌ண‌த்தை கொண்டும் ஈர‌ம் காயாம‌ல் ஆன் ப‌ண்ணிட‌ வேண்டாம்.. ப‌திவு ந‌ல்லா இருக்கு ஜெய்லானி.//

வாங்க , ஆனாலும் சீக்கிரமா பேட்டரியை கழட்டனும் இல்லாட்டி ஷார்ட் சர்க்க்யூட் ஆகிடும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சுசி--// :)))) //

வாங்க ..!! எதை நினைச்சி சிரிச்சிங்கன்னு புரியல.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ம.தி.சுதா said...

அப்ப சரி சகோதரம் முத்த மழையில் நனையும் போனுக்கும் இது பொருந்துமா?.......
நல்ல தகவல் தந்ததற்கு நன்றிகள்.

Thenammai Lakshmanan said...

வாஷிங் மெஷினை நாங்க துவைக்கத்தான் பயன்படுத்துவோம்.. முத முதலா செல்ஃபோன் செர்வீஸுக்குப் பயன்படுத்திய தங்கத்தம்பி ஜெய் வாழ்க வாழ்க் வாழ்க..

Jaleela Kamal said...

எப்படி போன வாஷிங் மிஷினில் துவைத்து, டியரில் , ஹா ஹா என்னா பிரமாதமான டிப்ஸ், விளாவாரியா விள்க்கிட்டீங்க,,

ஜெய்லானி said...

@@@ஆர்.கே.சதீஷ்குமார்--//அரிசிக்குள்ள புதைச்சு காப்பாத்துனோம்.இப்ப ஜெய்லானியால புது தொழில்நுட்பம் அறிமுகமாயிருக்கு.வாசிங் மெஷின் இல்லாதவங்க துவைக்கிற கல்லு மேல வைக்கலாமா மேடம்? //

அரிசிக்குள்ளயாஆஆஆ.... ம் துவைக்கிற கல்லு மேல வச்சு நச்சுன்னு ஒரு அடி குடுத்தா சரியாகிடும் ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அப்துல்மாலிக்--//நல்ல அட்வைஸ் //

வாங்க ..!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Palani velu--//அட, டிரியேரில் துணிஐ சுற்றி போடுவதறku பதிலாக மாடிலிருந்து தலையை முன்று முறை சுற்றி கீழே வீசி எறிந்தால் எல்லாம் சரியாகி விடும்! //

ஆஹா..சூப்பர் ஐடியா..நான் கீழே நிக்கும் போது போடுங்க சார். அழகா கேட்ச் பிடிப்பேன் நான் .ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைசர்--//ஏன் பாஸ்.. செல்போனுக்கு நீஞ்ச கத்துக்கொடுத்திருந்தா.. இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதோ?.. [ கேள்விக்குறி ]///

அதுவும் முங்கு நீச்சல் கத்து கொடுத்திட்டா ? //

ஐ இது வேரயா விளங்கிரும்...

@@@Ananthi --//

இருங்க நா முதல்ல தண்ணில போடறதா சாம்பார்ல போடறதன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..!!

யோசிச்சு, போட்டுட்டு..அப்புறம் நீங்க சொன்ன ஐடியா வொர்க் அவுட் ஆகுதான்னு பாத்து சொல்றேங்க :-))
////

முதல்ல சாம்பாருல போடுங்க , ஆபுரம் தன்னால் போட்டிங்கன்ன போன் கழுவி கிளீனா இருக்கும் //


அட ஆமாம் அப்புறமா வாஷிங் மிசின்ல போட்டா இன்னும் நல்லது.

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//

eley ithukku naan muthalla celphone vaankanumaa?
///

வாங்கணுமின்னு இல்லை ,முடிஞ்சா திருட கூட செய்யலாம் //


மங்கு, தொழில் ரகசியம் பத்திரம்..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

அருமையான‌ ப‌திவு ஜெய்லானி..

மனோ சாமிநாதன் said...

“சில சமயம் பேசிக்கிட்டே அப்படியே சம்பாரில் போட்டு விடுவதும் உண்டு”

படித்ததும் சிரிப்பு தாங்கவில்லை!
மற்றபடி மிகவும் உபயோகமான பகிர்வு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லா விளக்கி கழுவி இருக்கீங்க :)

ரெண்டு மாசம் முன்னாடி சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.. இப்ப போன் மாத்திட்டோம்.. ம்ம்.. இனிமே இப்பிடி தான் செஞ்சு பாக்கனும்..

ஸாதிகா said...

பயனுள்ள பதிவு.

ஸாதிகா said...

ஆமா..எத்தனை தடவை நீங்க சாம்பாரில் செல்போனை போட்டு இருக்கீங்க?இப்ப தினம் நோன்பு கஞ்சி சாப்பிட்டுவர்ரீங்க..பார்த்து பதனமா நடந்துக்கங்கப்பூ...நோன்புகஞ்சி பத்திரம்.

Mahi said...

செல்போனை ட்ரையர்லே போடறதா?? நாங்கள்லாம் அடுப்புலே(oven) வச்சு 20நிமிஷம் bake பண்ணறதுதான் வழக்கம் ஜெய் அண்ணா!

நெக்ஸ்ட் டைம் நீங்க இப்படி செய்து பாருங்க,நான் ட்ரையர்ல போட்டுப்பாக்கிறேன்.ஹிஹி!

Mahi said...

நானே செஞ்சுரியும் அடிச்சுடறேனே??:)

ஜெய்லானி said...

@@@Jey--//ஒரு நைட் முழுக்க பக்கட் தண்ணில ஊரின போனுக்கும் இந்த செயல்முறை பொருந்துமா ஜெய்லானி....//

ம் பொருந்தும் அப்புறம் ஈஸிய ந்ல்லாம் தானா முழு சாமானும் வரும் .என்னா ஒன்னு அப்புரம் அதுக்கு பேர் செல் போன் இல்ல .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jey said...

//இது மாதிரி எப்பவாவது நடந்தா டிரை பண்ணி பாருங்க .ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும் அம்புட்டுதான . //

அப்படியே ஒரு போன் வாங்கி கொரியர்ல அனுப்பினா, உம்புண்ணியத்துல ட்ரை பண்னி பாத்திடிவேன்..//

இருடி இரு.. அடுத்ததா வெடிகுண்ட பத்தி பதிவு போடலாமுன்னு இருக்கேன் அப்ப இதே பதில வந்து கேளு .நாலா அனுப்பி வைக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைசர்--//
49
50 //

நல்லாதான்ய என்னுறே . எனக்குதான் வாய்பாடு பத்துக்கு மேல போக மாட்டேங்குது.ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--// ஜெய்லானியால் வாசிங் மெஷின் விற்பனை அதிகரித்து உள்ளது....//

அப்படியா ..பாதி கமிஷன் வந்துடனும் இப்பவே சொல்லிட்டேன் ..ஹா..ஹா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//ஏன்.. ஏன்... ? //

ஒன்னுமில்லைங்க சும்மா..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ப.செல்வக்குமார்--

//.ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும் அம்புட்டுதான . ///
சரி விடுங்க .. முயற்சி பண்ணி பார்க்கலாம் ..!!//

நீங்களா தண்ணியில போட்டுட்டு முயற்சி பண்ணாதீங்க ..ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@யாரோ ஒருவன்--// வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை //

வாங்க அப்படின்னா..??? படிச்சிட்டேங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//ஆனா ஒரு கண்டிஷன் அது உங்க சொந்த மொபைல் ஃப்போனா இருக்கனும் அம்புட்டுதான . //

செய்து பார்க்கலாம்னு நினைக்கும்போதே இப்படி ஒரு கண்டிசன் போட்டு விட்டீங்களே //

இல்லாட்டி வேர யாருடையதாவது செஞ்சிட்டு என் பேரை மாட்டி விட்டா நான் என்னாகிறது அதான் பயம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@siva--//hi machan..supera erukku...
vara vara sari ellai romba yesikerengal.

நல்ல பதிவு.....வாழ்த்துகள்... //

ஹாய் குட்டி . சும்மா இருந்தா மண்டை காயாதா அதுக்குதான் இதெல்லாம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//கிணத்துக்குள்ள விழுந்த செல்போன என்னங்ணா பண்றது? //

அது ரொம்ப ஈஸி பன்னிசார் ..அம்மி கல்லுல வச்சி தொவச்சா சரியாகும் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//நல்ல பதிவு தான் ஆனா கடைசிலே சொன்னீங்க பாருங்க உங்க அனுபவம் அது தான் சூப்பர் //

வாங்க..!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஆ.... ஜெய், திரும்பிப்பார்ப்பதுக்குள் 60 வந்திட்டுது.... நான் கொமெண்ட்டைச் சொன்னேன்:), கண்ணீர் மறைக்குது எழுத முடியேல்லை:). ..//

வாங்க ..!! வாங்க..!! கொஞ்சம் தூக்கம் அதிகம் போல கண் 16 மைல் பர்க்கும் போதே நினைச்சேன் இப்பிடி ஆகும் போலன்னு ..ஓக்கை..

// என் நண்பியின் மகள்(2 வயது), நண்பியின் ஆப்பிள் ஐ போனை வாங்கி கொமெட்டுக்குள் தவறுதலாகப் போட்டுவிட்டாராம், ஆனால் எந்தப் பிரச்சனையுமில்லாமல் வேர்க் பண்ணுது:).//

எவ்வளாவு நேரத்துல வெளியே எடுக்குரோமுன்னு தான் முக்கியம் , சில நேரம் கவர் போட்டிருந்தாலும் நலம்.

//இது எல்லாத்துக்கும் பதில் சொன்ன பிறகு வாழ்க வளமுடன்:)/// ஹா... ஹா... ஹா... ஜெய்..லானி சூப்பர் மாட்டீஈஈஈஈஈஈ.

// நோன்புக் களையோ? பற்றரி வீக்கானமாதிரி இருக்கே:)).//

இதுக்கதான் பூஸார் வேனுங்கிறது. சரியா கண்டு பிடிக்க.. அதான் கொஞ்சம் டயர்டு..ஹி.ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜிஎஸ்ஆர்--//தண்ணீரில் விழுந்த அலைபேசியின் பேட்டரியை மற்றும் சிம் மெம்ரி கார்டு எல்லாவற்றையும் கழட்டி வைத்து விட்டு ஒரு வெள்ளைத்துணியில் அலைபேசியை சுற்றி நம் வீட்டில் இருக்கும் அரிசியின் உள்ளே வைத்தால் ஒரு இரவில் அதில் இருக்கும் மொத்த நீரையும் உறிஞ்சி விடும் இனி முயற்சித்து பாருங்கள் பலன் தெரியும் //

வாங்க பாஸ் , ஆனா இது 3நிமிஷ வேலை மட்டுமே.. அரிசி மேட்டர் ஓக்கே ஆனால் அதுக்குள்ள அதில உப்பு பூத்து கெட்டு விடும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், என்னவோ போங்க. எனக்கு இந்த செல் போன்களே அலர்ஜி. அதை தொடுவதே குறைவு. உங்கள் பதிவு நல்லா இருக்கு. //

வாங்க ..வாங்க..!!. அப்ப உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தப்பிச்சீங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@sandhya--//ஜெய்லானி சார் பதிவு சூப்பர் ..இனிமேல் செல் சாம்பாரில் வீழுந்தாலும் பரவால்லே நீங்க சொன்னது போல் செஞ்சா போச்சு ...நன்றி //

வாங்க ..!! ஹி..ஹி.. மேட்டரை சும்மா கப்புன்னு பிடிச்சிகிட்டீங்க அதுப்போதும் .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jey--//எச்சுச்ச்சு மீ , என் கமென்ஸ்க்கு இன்னும் பதில் சொல்லலை...//

வாங்க வாத்தியார்.. இப்ப பாருங்க ..கொஞ்சம் ஆனி பிடுங்கள் அப்படின்னு சொல்ல மாட்டேன் .நோன்பு டமாக இருப்பதால் கொஞ்சம் சோம்பேறி அவ்வளவுதான் .ஆனா பதில போடாம் இருக மாட்டேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--//பயனுள்ள தகவல்கள் ஜெய்லானி, அதுவும் உங்கள் பாணியில்.

சுதந்திர தின வாழ்த்துகள்.//

வாங்க அக்பர்..சந்தோஷம்.. உங்களுக்கும் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@siva --//எச்சுச்ச்சு மீ , என் கமென்ஸ்க்கு இன்னும் பதில் சொல்லலை...//

வாங்க கொயந்த ..மேல பாருங்க..போட்டாச்சு.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இந்திரா--//
உபயோகமான தகவல் தான்..
சரி..
சுத்தம் செய்வதற்கு போன் இல்லேனா.. ஃப்ரீயா செல்போன் தருவீங்களா?? //

இதென்னது புது குழப்பம்..ஹி..ஹி. நல்ல வேளை வாஷிங் மிஷின் கேக்காம் விட்டீங்களே..அவ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி--//அஹஹா.... செல்போன்ஐ dryer ல போட்டு தொவச்ச ஒரே ஆள் இந்த உலகத்துலேயே நீங்க தான் சார்... ச்சே... உங்கள போல யாரால முடியும் சொல்லுங்க...ஹா ஹா அஹ... (டிப்ஸ்க்கு ரெம்ப நன்றிங்கோ... நான் செல்போன் அதிகம் யூஸ் பண்றதில்லைங்க... //

வாங்க .. மேட்டர் பத்து நிமிஷத்துல முடிஞ்சுதா பாருங்க . அதுக்குதான் எப்பவும் மாத்தி யோசிக்கனும் என்னை மாதிரி ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ம.தி.சுதா--//அப்ப சரி சகோதரம் முத்த மழையில் நனையும் போனுக்கும் இது பொருந்துமா?.......
நல்ல தகவல் தந்ததற்கு நன்றிகள். //

ஆஹா ..சூப்பர் கேள்வி..இதுக்கு பேர்தான் மாத்தி யோசிக்கிரது ..அதுக்கு ஸ்பெஷல் கிளினிங் இருக்கு. ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தேனம்மை லெக்ஷ்மணன்--//வாஷிங் மெஷினை நாங்க துவைக்கத்தான் பயன்படுத்துவோம்.. முத முதலா செல்ஃபோன் செர்வீஸுக்குப் பயன்படுத்திய தங்கத்தம்பி ஜெய் வாழ்க வாழ்க் வாழ்க..//

வாங்க ..தேனக்கா..!! ஹா..ஹா..அதுக்குதான் நாங்க இருக்கிறோம். நல்ல டிப்ஸ் குடுக்க .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//எப்படி போன வாஷிங் மிஷினில் துவைத்து, டியரில் , ஹா ஹா என்னா பிரமாதமான டிப்ஸ், விளாவாரியா விள்க்கிட்டீங்க,,//

வாங்க ..!! ஓவனில போடலாமுன்னுதான் நெனச்சேன் அப்புறம் அதுக்கு இதான் பெஸ்ட்ன்னு விட்டுட்டேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத்--//அருமையான‌ ப‌திவு ஜெய்லானி..//

வாங்க இர்ஷாத்..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--// “சில சமயம் பேசிக்கிட்டே அப்படியே சம்பாரில் போட்டு விடுவதும் உண்டு”

படித்ததும் சிரிப்பு தாங்கவில்லை!
மற்றபடி மிகவும் உபயோகமான பகிர்வு.//

வாங்க ..!! என்னதான் டிப்ஸ் சொன்னாலும் அதை கொஞ்சம் சிரிப்பா சொன்னா படிக்க சுவாரசியமா இருக்குமுல்ல அதான் .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.. // நல்லா விளக்கி கழுவி இருக்கீங்க :) //

பின்ன ஜெய்லானின்னா சும்மாவா..பின்னிடமாட்டோம் பின்னி

//ரெண்டு மாசம் முன்னாடி சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்.. இப்ப போன் மாத்திட்டோம்.. ம்ம்.. இனிமே இப்பிடி தான் செஞ்சு பாக்கனும்..//

கொஞ்சம் உஷரா செய்யுங்க வாழ்க வளமுடன் ..ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//பயனுள்ள பதிவு.//

வாழ்த்துக்கு வந்தனங்கள்..

//ஆமா..எத்தனை தடவை நீங்க சாம்பாரில் செல்போனை போட்டு இருக்கீங்க?இப்ப தினம் நோன்பு கஞ்சி சாப்பிட்டுவர்ரீங்க..பார்த்து பதனமா நடந்துக்கங்கப்பூ...நோன்புகஞ்சி பத்திரம்.//

ஹா..ஹா..ரகசியத்தை போட்டு உடைச்சிடுவீங்க போலிக்கே..ஹா..ஹா..போன் பத்திரமா..? இல்ல நோன்பு கஞ்சி பத்திரமா..? ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகி --//செல்போனை ட்ரையர்லே போடறதா?? நாங்கள்லாம் அடுப்புலே(oven) வச்சு 20நிமிஷம் bake பண்ணறதுதான் வழக்கம் ஜெய் அண்ணா! //

அப்படியா ..!! அதுக்கு மேல வெங்காயத்தை வச்சி சாப்பிட்டுடமாட்டீங்களே..

//நெக்ஸ்ட் டைம் நீங்க இப்படி செய்து பாருங்க,நான் ட்ரையர்ல போட்டுப் பாக்கிறேன்.ஹிஹி! //

ஆஹா ..வில்லங்கமான பதிலா இருக்கே.

//நானே செஞ்சுரியும் அடிச்சுடறேனே??:).//

செஞ்சுரி அடிச்ச மஹி அவர்களுக்கு வாழ்த்துக்கள் க்ளாப்ஸ்...க்ளாப்ஸ்...க்ளாப்ஸ்...க்ளாப்ஸ்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))