Tuesday, August 3, 2010

தாய்ப்பால் வாரம் (வரம் )


       ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் முதல் தேதிய உலக தாய்ப்பால் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சு இருக்கு. ஆனா வசதியா அதையெல்லாம் மறந்துட்டு நட்பு தினமா கொண்டாடுறோம். ஹி..ஹி.. ஏன்னா  நாம வளந்துட்டோம் .இனி அதுக்கு அவசியமில்லை அதன் காரணம்

       எந்த ஒரு குழந்தைக்கும் அது பிறந்து முதல் ஆறு மாசம் வரை தாய்பாலே போதும் . எந்த எக்ஸ்டிரா பிட்டிங்கும் தேவையில்லை. இறைவன் குடுத்த வரம் அப்படி ஆனா இந்த பிசாசு மட்டும் அங்கையும் நம்மை சும்மா விடுமா அது லக்டோஜன் கம்பெனி வழியா நல்லா இருக்கிற அம்மாவையும் ஆமா மா போட வச்சு காசுக்கும் கேடு , உடலுக்கும் கேடு பிள்ளைக்கும் கேடுன்னு நம்மை வாங்கஆட்டி வைக்குது.

      வீட்டில குழந்தையை பாக்க வரும் மக்களும்  இப்ப இந்த கலர் இல்ல அந்த கலர் டப்பாவை வாங்கி குடு அப்பதான் பிள்ளை நல்லா கருப்பா அழகா இருக்குமுன்னு சொல்லி பிறக்கும் போது நல்லா அசிங்கமா வெள்ளை வெளேருன்னு இருக்கும் பிள்ளாயை நாலு ஐந்சு மாசத்துல அழகா கருப்பா ஆக்கிடுறாங்க

தாய் பால கொடுப்பதால் தாய்க்கு வரும் நன்மையை பாருங்க..


·         என்னைக்காவது திட்டனுமுன்னு தோனினா உன்னை ராத்திரி பகல்ன்னு கண்ணு முழிச்சி வளர்தேனே..!! அதுக்கு இதான் நன்றியா இப்பிடி திட்டிகிட்டே இருக்க ஒரு சான்ஸ் கிடைக்கும். இல்லாட்டி அந்த சான்ஸ் வாழ்கையில கிடைக்கது


·          தொன்னூறு சதவீதம் கருப்பை புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு இல்லை-.நோய் வந்தா அவங்களுக்கு மட்டுமா கஷ்டம் வீட்டிலுள்ள எல்லாருக்குமேதானே கஷ்டம் ஆஸ்பத்திரி அலைச்சல் பண ,மன நஷ்டம்.

·         பிரசவத்திற்கு பின் வரும் அதிகப்படியான இரத்த போக்கை கட்டு படுத்தி கருப்பை தன் பழைய நிலைக்கு சுருங்க உதவுகிறது

·         எடை குறைந்து பழைய உடலைமைப்பை பெறவும் உதவுகிறது .இதுக்குன்னு தனியா வாக்கிங்கோ , ஓடிங்கோ .தேவையில்லை .அதை பாக்க  நமக்கு நல்லாவா இருக்கும்

      கொடுப்பவர்களும் ஏதோ தர்மம் பன்னுவது மாதிரி வேண்டா வெறுப்பா குடுக்காமல் நல்ல மனநிலையில் கொடுப்பது நல்லது. இல்லாட்டி வளர்ந்து பெரியவர்களானால் அந்த மன நிலையில்தான் இருப்பார்கள். அதாவது நாம் டென்ஷனில், கோபத்தில் இருக்கும்போது வரும் வியர்வைக்கும் சாதாரன நிலையில் இருக்கும் போது வரும் வியர்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை ஆராய்ச்சி நிறுபித்து இருக்கு

      தாய்ப்பால் குழந்தையின் உரிமை. எங்கே குடுத்தால் புற அழகு கெட்டு போயிடுமுன்னு நினைச்சா . புள்ளையின் அக (பாசம்) அழகிலிருந்து சீக்கிரம் விலகிப்போயிடுவீங்க.

      தாய்ப்பால் இறைவனின் அருட்கொடை ஆனால் பால் பவுடர் மனிதனின் சரிகட்டும் குளோனிங் முயற்ச்சி. ஆனா இப்ப அதுக்கும் ஆள் புடிக்கும் வேலை நடக்குது வெளிநாட்டில பாட்டில கிடைக்குதாம் .டோர் டெலிவரியும் உண்டாம் . பாட்டிலுக்கு இத்தனை டாலர்ன்னு விலை

   இதென்னடா வம்பாபோச்சின்னு பார்தால் அம்மா வேலைக்கு போறாங்களாம் ஆயா வீட்டில இருக்காங்கலாம். பிள்ளயை கவனிக்க முடியாது அதனால் நே கொஸ்டின் .சரி இதில கலப்படம் பண்ணிட மாட்டான்களா..?
 நமது ஊரில இது எப்படியிம் வர இன்னும் 20 வருஷமாவது ஆகும் . அது வரையவது தாய்ப்பாலின் அருமையை நாம் மற்றவர்க்கு எடுத்து சொல்வோம் ( இன்னைக்கு ஏதாவது ஒரு சந்தேகம் கேக்கனுமே....என்ன கேக்கலாம்)

      பசும்பால் நல்லதுன்னு அதுக்கு மாற்று வழியும் கண்டு பிடித்திருக்கும் நாம. குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!!    

117 என்ன சொல்றாங்ன்னா ...:

http://rkguru.blogspot.com/ said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.....வாழ்த்துகள்.

என் பதிவு பக்கமும் உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்...நன்றி

பொன் மாலை பொழுது said...

வயதான பெற்றோர்களை 'முதியவர்கள் காப்பககத்தில் ' விடும் குணம் பிள்ளைகளுக்கு வேறு எங்கிருந்து வந்தது?
புட்டிப்பால் குடித்தால் பாசமா வரும் ? இப்போது எல்லாப்பிள்ளை களுக்கு புட்டிப்பால் தான்.நிறைய முதியோர் இல்லங்கள் திறக்க வேண்டியிருக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விழிப்புணர்வு பதிவு

எல் கே said...

good post jai.. athu karbap pai puttru noi illa, breast cancer

Anonymous said...

சிறப்பான பதிவு ஜெய்லானி..
படங்களும் அருமை

//அம்மா வேலைக்கு போறாங்களாம் ஆயா வீட்டில இருக்காங்கலாம் //

சிந்திக்க வேண்டிய ஒன்று தான்..

//குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே//

அப்படியா??? எங்கே அந்த கழுதை??

kavisiva said...

தேவையான நல்ல பதிவு.

இன்றைய தலைமுறை தாய்மார்களில் அதிகம் பேர் தங்கள் குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் கொடுப்பதையே விரும்புகிறார்கள் (நான் பார்த்த வரையில்). நல்லமாற்றம் மெள்ள மெள்ள வருகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் வருவதைக் குறைக்கிறது. கர்ப்பப்பை புற்று நோய் என்பதை மாற்றிவிடுங்கள்

athira said...

ஆங்..... இம்முறையும் போச்சே.....:(((.

இதுக்குன்னு தனியா வாக்கிங்கோ , ///ஓடிங்கோ//// .தேவையில்லை// இதென்ன இது புது இங்கிலீசோ?:)).

இம்முறைதான் சந்தேகமில்லாமல் ஒரு பதிவு போட்டிருக்கிறீங்க..... நீங்க வர வர முன்னேறிட்டேஏஏஏஏ வாறீங்க ஜெய்..லானி....

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசி பஞ்ச் டங்குன்னு அடிச்ச மாறி இருக்கு

சிறப்பான பதிவு...!

athira said...

குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!//// ஆ... இதுக்குத்தானா... ஜீனோ ”கயுதைப்பயம்” அங்க போட்டிருக்கிறார்....

நீங்க எவ்ளோ நல்லவர் ஜெய்..லானி, நீங்க அறிஞ்சவிஷயமெல்லாம் எங்களுக்குச் சொல்லித் தாறீங்கள்.... இப்ப நான் கயுதைக்கு எங்கின போவேன்???:))).

நாடோடி said...

ந‌ல்ல‌ ப‌திவு ஜெய்லானி...

தூயவனின் அடிமை said...

தாய் பாலின் அருமை பெருமையை விளக்கியுள்ளிர்கள். நல்ல பகிர்வு.

தூயவனின் அடிமை said...

தாய் பால் கொடுப்பதால் ,தன் அழகு குறைந்து விடும் என்று நினைக்கும் சில தாய்மார்கள். சற்று சிந்திக்க கடமைபட்டுள்ளர்கள்.

Jey said...

நல்ல ஆலோசனை மக்கா.

///குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!!///

உனக்கு அப்படியா சொன்னானுவ... எனக்கு கழுதைப் பால் சாப்பிட்ட னீண்ட ஆயுள் கிடைக்கும், அதுல விட்டமின் C, பசும்பால்ல இருக்குரத விட 60 மடங்கு இருக்கு, உடம்புக்கு நல்லது அப்பிடின்ற நூசுதாம்பா வந்தது....

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு...

Menaga Sathia said...

good post!!

ப.கந்தசாமி said...

எங்கூர்ல கழுதைப்பால் விற்பனைக்கு வந்து இந்தப் போலீஸ் பாவிங்க தடுத்துப்போட்டாங்க. உட்டுருந்தா இன்னேரம் பெரிய டெய்ரியே ஆரம்பிச்சுருப்பாங்க.

சாருஸ்ரீராஜ் said...

நல்ல பதிவு.

Riyas said...

நல்ல பதிவு ஜெய்லானி சார்..

//குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா.// முயற்சி செய்துதான் பார்க்கிறது.. கழுதப்பால் கொஞ்சம் அனுப்பிவிடவா..?

எங்க பிளாக் ஏரியா பக்கம் கானல்ல எட்றஸ் தொலஞ்சிட்டோ..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//// குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!! ///

அப்படியா ஜெய்.. ஒரு பயபுள்ள சொல்லல இத... நீங்க எம்புட்டு நல்லவக....
(ஆமா.. உங்க ஊர்ல கழுதையெல்லாம், சுதந்திரமா சுத்துதா...இல்ல..................???? )

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///இவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் முதல் தேதிய உலக தாய்ப்பால் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சு இருக்கு.///

அருமையான பதிவு ஜெய்..
ஆமா... எனக்கு ஒரு சந்தேகம் அதென்னங்க... "இவ்வொரு".........???

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//தொன்னூறு சதவீதம் கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு இல்லை-.//

ம்ம்.. நம்ப முடியல..

// பசும்பால் நல்லதுன்னு அதுக்கு மாற்று வழியும் கண்டு பிடித்திருக்கும் நாம. குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே //

அப்ப கன்னுக்குட்டிக்கும் கழுதக் குட்டிக்கும் தாய்ப் பால் தேவையில்லயா? :)))))))))

அன்பரசன் said...

நல்ல பதிவு...
பகிர்வுக்கு நன்றி..

எம் அப்துல் காதர் said...

இந்த மாதிரி நல்ல (??) நல்ல பதிவுகளை எல்லாம் போட்டு நம்மல பேச உடாம ஆக்கிடுராய்ங்கப்பா. ஹி.. ஹி..

எம் அப்துல் காதர் said...

//குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!! //

இது காற்று வாக்கில் வந்த செய்தி அல்ல. நீங்கள் அனுபவித்த விஷயத்தை தான் எழுதுவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். க்கி.. க்கி..,,

ஆகவே உங்கள் குரலை வைத்து சொல்கிறேன்.<< உண்மைதான்>> நான் கூட அன்னிக்கி (போனில் பேசிக்கொண்டிருக்கும் போது) சொன்னேனே உங்கள் குரல் அருமையா இருக்கு என்றும்,,பின்னணி பாடலாமென்றும்,, நீங்கள் பவ்யமாய் மறுத்த விஷயம் இது தானா தல ??? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்!!

இலா said...

ஜெய்! நல்ல பதிவு !
//அம்மா வேலைக்கு போறாங்களாம் ஆயா வீட்டில இருக்காங்கலாம் //
இது அந்த காலத்திலே இருந்தது ஜெய்... அவிங்களுக்கு பேர் வெட் நர்ஸ். அதாவது ரொம்ப பணம் இருந்தா குழந்தையை பாக்க ஆயா போடுவங்கல்ல அந்த ஆயாக்கும் குழந்தை இவங்க குழந்தை பிறந்த சமயத்தில் பிறந்திருந்தா.... ஒரு வேலை மிச்சம்ன்னு கவுனை மாட்டிகிட்டு போயிடுவாங்க...

ஹைஷ்126 said...

//இது காற்று வாக்கில் வந்த செய்தி அல்ல. நீங்கள் அனுபவித்த விஷயத்தை தான் எழுதுவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். க்கி.. க்கி..,,

ஆகவே உங்கள் குரலை வைத்து சொல்கிறேன்.<< உண்மைதான்>> நான் கூட அன்னிக்கி (போனில் பேசிக்கொண்டிருக்கும் போது) சொன்னேனே உங்கள் குரல் அருமையா இருக்கு என்றும்,,பின்னணி பாடலாமென்றும்,, நீங்கள் பவ்யமாய் மறுத்த விஷயம் இது தானா தல ??? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்!!// x Repeat :)

அமுதா கிருஷ்ணா said...

மிக அவசியமான பதிவு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு...

பகிர்வுக்கு நன்றி..

Chitra said...

இங்கு (USA) குழந்தை பிறந்த உடனே, ஒரு நர்ஸ் வந்து தாய் பால் கொடுப்பதின் அவசியத்தை விளக்கி, தாய்ப்பாலே குழந்தைக்கு கொடுக்க encourage செய்கிறார்கள்.

r.v.saravanan said...

அருமையான பதிவு மிக்க நன்றி ஜெய்லானி

Thenammai Lakshmanan said...

கழுதைக்குப் பால் // க்கும் ..ரொம்ப முக்கியம்..:))

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Unknown said...

நான் நான்கு வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன்.. அதன் பலன் இப்போதும் தெரிகிறது ...

ஜெய்லானி said...

@@@rk guru--//நல்ல விழிப்புணர்வு பதிவு.....வாழ்த்துகள்.//

வாங்க குரு...சந்தோஷம் ...

//என் பதிவு பக்கமும் உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்...நன்றி //

ஆனி அதிகம் நானும் வர முயற்சி செய்கிரேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//வயதான பெற்றோர்களை 'முதியவர்கள் காப்பககத்தில் ' விடும் குணம் பிள்ளைகளுக்கு வேறு எங்கிருந்து வந்தது?
புட்டிப்பால் குடித்தால் பாசமா வரும் ? இப்போது எல்லாப்பிள்ளை களுக்கு புட்டிப்பால் தான்.நிறைய முதியோர் இல்லங்கள் திறக்க வேண்டியிருக்கு //

சரியாக சொன்னீங்க கக்கு சார் .நாம இனியாவது திருந்தனும் வளமான உலகத்தை கொண்டு வரனும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//நல்ல விழிப்புணர்வு பதிவு //

வாங்க ரமேஷ்..!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//good post jai.. athu karbap pai puttru noi illa, breast cancer //

வாங்க பாஸ்..!! வெளியே போகும் அவசரத்துல போஸ்ட் பண்ணியது இன்னும் ஒரு வரி மறந்து போய்டுச்சி இப்ப அதை சேர்த்துட்டேன் .ஆனா ரெண்டும் தான் காரணம். சுட்டி காட்டியதுக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Indhira--//சிறப்பான பதிவு ஜெய்லானி.. படங்களும் அருமை //
வாங்க ..!!சந்தோஷம்

//அம்மா வேலைக்கு போறாங்களாம் ஆயா வீட்டில இருக்காங்கலாம் //

சிந்திக்க வேண்டிய ஒன்று தான்..//

ம் ரொம்பவும் ஒரு தலைமுறையை பாதிக்கும் விஷயமிது..

//குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே//

அப்படியா??? எங்கே அந்த கழுதை?? //

ஹி..ஹி.. யாரை கேக்குறீங்க ...க்கி..க்கி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@kavisiva--//தேவையான நல்ல பதிவு.

இன்றைய தலைமுறை தாய்மார்களில் அதிகம் பேர் தங்கள் குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய்ப்பால் கொடுப்பதையே விரும்புகிறார்கள் (நான் பார்த்த வரையில்). நல்லமாற்றம் மெள்ள மெள்ள வருகிறது.//

அப்படி வரனும்ங்கிறது ரொம்ப நல்ல விஷயம் .

//தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் வருவதைக் குறைக்கிறது. கர்ப்பப்பை புற்று நோய் என்பதை மாற்றிவிடுங்கள் //

ஆமா சரிதான் வேலைக்கு போகும் அவசரத்தில் போஸ்ட் போட்டதில் சின்ன தவறு ஆனால் நீங்க சொன்ன இரண்டுமே சரிதான் மாற்றி விட்டேன். தவறை சுட்டி காட்டியதுக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஆங்..... இம்முறையும் போச்சே.....:(((. //

க்கி..க்கி... மரத்திலிருந்து உருண்டு வர லேட்டகிடுச்சோ என்னவோ..இல்ல தூக்கமா தெரியலையே...

இதுக்குன்னு தனியா வாக்கிங்கோ , ///ஓடிங்கோ//// .தேவையில்லை// இதென்ன இது புது இங்கிலீசோ?:)).//

ஹி..ஹி.. வாக்கிங் இப்ப தமிழ் சொல்மாதிரி ஆகிடுச்சி இல்லையா அதான் ஓட்டத்தை இங்கிலீஷில் சொன்னேன்..ஓடிங் நல்லா இருக்கா..? க்கி..க்கி..கீஈஈஈஈஈ

//இம்முறைதான் சந்தேகமில்லாமல் ஒரு பதிவு போட்டிருக்கிறீங்க..... நீங்க வர வர முன்னேறிட்டேஏஏஏஏ வாறீங்க ஜெய்..லானி...//

ஹா..ஹா..சரியா படிக்கலையோ..!!கடைசி பாராவை . இல்ல பாதியில நல்ல குறட்டை விட்டு தூங்கிட்டீங்கலா... நம்ம டிரேட் மார்க் அதில இருக்கே..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு ஜெய்லானி..

நாந்தான் லேட்டா வந்திட்டேனா..

Kumar said...

http://www.ponmaalai.com/2010/08/1-7.html
குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நோயின்றி குழந்தை நன்றாக வாழும் என ராயப்பேட்டை அரசுமருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவர் டாக்டர் டி.குணசிங் தெரிவித்தார்.

ஜெய்லானி said...

@@@ப்ரியமுடன் வசந்த்--//.கடைசி பஞ்ச் டங்குன்னு அடிச்ச மாறி இருக்கு சிறப்பான பதிவு...! //

ஹா..ஹா..வாங்க வசந்த்..!! நீங்க சொன்னா அப்ப சரிதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!//// ஆ... இதுக்குத்தானா... ஜீனோ ”கயுதைப்பயம்” அங்க போட்டிருக்கிறார்....//

அப்படியா நா இன்னும் பாக்கலையே பாத்திடுரேன் இப்பவே..!!!

//நீங்க எவ்ளோ நல்லவர் ஜெய்..லானி, நீங்க அறிஞ்சவிஷயமெல்லாம் எங்களுக்குச் சொல்லித் தாறீங்கள்.... இப்ப நான் கயுதைக்கு எங்கின போவேன்???:))).//

ஹா..ஹா...ஏன் தேடுறீங்க யாரையாவது பிடிச்சு ரெண்டு சாத்து சாத்துங்க .உடனே பதில் கிடைக்கும்.க்கி..க்கி....க்கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சீமான்கனி said...

நல்ல விழிப்புணர்வு இடுக்கை ஜெய்லானி... இளைய தலைமுறைக்கு புரியவைத்தால் போதும் எதிர்கால இந்தியாவிற்கு ஆரோக்கியமான பிள்ளைகள் கிடைப்பார்கள்...நன்றி... ஜெய்லானி

ஹேமா said...

உடம்பை அழகா வச்சிருக்கனும்னுதானே தாய்கள் எல்லாரும் பால் கொடுக்கிறதை நிப்பாட்டுறாங்க.உங்க பதிவைப் பாத்தாங்கன்னா வீட்டுக்கே ஆட்டோ வரும் ஜெய்

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ந‌ல்ல‌ ப‌திவு ஜெய்லானி...//

வாங்க ஸ்டீபன் ..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//தாய் பாலின் அருமை பெருமையை விளக்கியுள்ளிர்கள். நல்ல பகிர்வு.//

வாங்க சார் வாங்க ..!!பெருமை படக்கூடிய விஷயம்தானே .குழந்தையின் உரிமை பிரச்சனை இது.

//தாய் பால் கொடுப்பதால் ,தன் அழகு குறைந்து விடும் என்று நினைக்கும் சில தாய்மார்கள். சற்று சிந்திக்க கடமைபட்டுள்ளர்கள்.//

நிறையவே சிந்திக்கனும் ,ஏன்னா இது அவங்களுடைய வயதான காலங்களிலும் பாதிக்க கூடிய விஷயம் இது..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Priya said...

சிறப்பான பதிவு!!!

ஸாதிகா said...

ஒரு அருமையான பதிவை,அவசியமான இடுகையை போட்டு விட்டு கடைசியா உங்களுக்கே உரித்தான (// குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!! //)கேளிவியையும் கேட்டு பதிவிட்டது ஜெய்லானியே தான் என்று நிருபித்து விட்டீர்களே?

சுசி said...

நல்ல பகிர்வு.

நிஜமா எனக்கு புதிய தகவல்.

நசரேயன் said...

// குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே //

எனக்கு ஒரு லிட்டர் வேண்டும்

Unknown said...

அண்ணே, ஆகஸ்ட் முதல் தேதி தாய்ப்பால் தினம் என்ற செய்தி புதிது. ஆனால் நண்பர்கள் தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு. இந்த வருடம் ஒன்னாம் தேதி, ஏழாம் தேதி........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படிண்ணே....!!!!

மங்குனி அமைச்சர் said...

good one

இமா க்றிஸ் said...

போஸ்டிங் பார்த்து இனி என்ன ஆகப் போகுது என்று இமா பின்னூட்டம் படிக்கப் போய்ட்டாங்க ஜெய்லானி. ;))

//அப்ப கன்னுக்குட்டிக்கும் கழுதக் குட்டிக்கும் தாய்ப் பால் தேவையில்லயா? :)))))))))// - சந்தேகம் ஓர் கொடிய தொற்றுநோய். பாருங்க என்ன வேக வேகமாப் பரவுது என்று. ;)

ஹைஷ் அண்ணே சிரிக்க முடியலைய்ய். ;))

ஜெய்லானி said...

@@@Jey--//நல்ல ஆலோசனை மக்கா.//

ஆமா மக்கா ஒரு தலைமுறையே மாத்தக்கூடிய விஷயமாச்சே இது.

///குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!!///

//உனக்கு அப்படியா சொன்னானுவ... எனக்கு கழுதைப் பால் சாப்பிட்ட னீண்ட ஆயுள் கிடைக்கும், அதுல விட்டமின் C, பசும்பால்ல இருக்குரத விட 60 மடங்கு இருக்கு, உடம்புக்கு நல்லது அப்பிடின்ற நூசுதாம்பா வந்தது....//

அப்ப கழுதைக்கு எங்கேயா போறது . அது பக்கத்தில போனாலும் உதைக்கும் .அதை நாம் உதைக்க போனாலும் புளு கிராஸ் நம்மளை உதைக்கும் என்ன செய்ய..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வித்யா--//நல்ல பதிவு...//

வாங்க ..சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--// good post!! /

வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//எங்கூர்ல கழுதைப்பால் விற்பனைக்கு வந்து இந்தப் போலீஸ் பாவிங்க தடுத்துப்போட்டாங்க. உட்டுருந்தா இன்னேரம் பெரிய டெய்ரியே ஆரம்பிச்சுருப்பாங்க //

அச்சோ... வடை போச்சே...!!!மாமூல் குடுக்காம விட்டிருப்பானுங்க அதான் மாமஸ் விக்க விடல.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--// நல்ல பதிவு.//

வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Riyas--//நல்ல பதிவு ஜெய்லானி சார்..//

என்னது சாரா நா கொயந்த புள்ளைங்க..

//குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா.// முயற்சி செய்துதான் பார்க்கிறது.. கழுதப்பால் கொஞ்சம் அனுப்பிவிடவா..? //

அப்படியே அந்த கழுதையையும் அனுப்புங்கோ அதினிடம் ஒரு சந்தேகம் கேக்க வேண்டி இருக்கு..ஹி..ஹி..

//எங்க பிளாக் ஏரியா பக்கம் கானல்ல எட்றஸ் தொலஞ்சிட்டோ..//

அப்படி இல்லீங்ன்னா நீங்க போகுற வேகத்துக்கு ஓட முடியலீங்னா .அதாங்னா காரணம். கண்டிப்பா வரேங்னா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சௌந்தர் said...

குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!

இது மூட நம்பிக்கை தல

ஜெய்லானி said...

@@@Ananthi--// குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!! ///

அப்படியா ஜெய்.. ஒரு பயபுள்ள சொல்லல இத... நீங்க எம்புட்டு நல்லவக...//

ஹி..ஹி... ஒரே கூச்சமா இருக்கு நீங்க புகழ்றத பார்த்தா...
//(ஆமா.. உங்க ஊர்ல கழுதையெல்லாம், சுதந்திரமா சுத்துதா...இல்ல..................????//

ஹும்..அந்த சோக கதையை ஏங்க கேக்குறீங்க...எந்த கழுதையும் வீட்ட விட்டு வெளியேவே வரமாட்டேங்குது . ஆமா நீங்க எந்த கழுதையை கேட்டீங்க..க்கி...க்கி..

//அருமையான பதிவு ஜெய்..
ஆமா... எனக்கு ஒரு சந்தேகம் அதென்னங்க... "இவ்வொரு".........???//

அவசரமா டைப்பண்ணி போட்டுட்டு வெளியே போனதில எழுத்து பிழையை கவணிக்கல. தவறை சுட்டி காட்டியதுக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.-- //தொன்னூறு சதவீதம் கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு இல்லை-.//

ம்ம்.. நம்ப முடியல..//

ம் ..அந்த நேரத்துல சில ஹார்மோன்கள் ஓவர்டைம் பார்க்கும் அதான் காரணம்..

// பசும்பால் நல்லதுன்னு அதுக்கு மாற்று வழியும் கண்டு பிடித்திருக்கும் நாம. குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே //

அப்ப கன்னுக்குட்டிக்கும் கழுதக் குட்டிக்கும் தாய்ப் பால் தேவையில்லயா? :)))))))))//

ஹா..ஹா..குட் கொஸ்டின் ஜெய்லானி டீவி இதை பத்திய ஆராய்சில இருக்கு .இன்னும் கொஞ்ச நாளில் ரிப்போர்ட் சப்மிட் பண்னும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்பரசன்--//நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி..//

வாங்க அன்பு..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பதிவு ஜெய்லானி.

சில நல்ல டாக்டர்கள் தாய் பால் மட்டுமே போதும் வேறு எதுவும் கொடுக்கவேண்டாம் என்பார்கள். ஆனால் அவர்களை நாம் டாக்டராக ஏற்றுக் கொள்ள மாட்ட்டோம்.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//இந்த மாதிரி நல்ல (??) நல்ல பதிவுகளை எல்லாம் போட்டு நம்மல பேச உடாம ஆக்கிடுராய்ங்கப்பா. ஹி.. ஹி..//

ஹை...ஹை.. இப்ப என்னா பன்னுவீங்க ..இப்ப என்னா பன்னுவீங்க

////குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!! //

இது காற்று வாக்கில் வந்த செய்தி அல்ல. நீங்கள் அனுபவித்த விஷயத்தை தான் எழுதுவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். க்கி.. க்கி..,,//

அடப்பாவி மக்கா நல்லா பாருயா லேபில்ல நா அனுபவமுன்னா போட்டிருக்கேன் அவ்வ்வ்வ்

//ஆகவே உங்கள் குரலை வைத்து சொல்கிறேன்.<< உண்மைதான்>> நான் கூட அன்னிக்கி (போனில் பேசிக்கொண்டிருக்கும் போது) சொன்னேனே உங்கள் குரல் அருமையா இருக்கு என்றும்,,பின்னணி பாடலாமென்றும்,, நீங்கள் பவ்யமாய் மறுத்த விஷயம் இது தானா தல ??? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்!! //

ச்சே...இதுக்குதான் நா நா அப்பவே சொன்னேன் யாரு கேக்குறா.. விடாம விரட்டி இப்பிடி திட்டு வாங்கவாஆஆஆஆ....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இலா--//ஜெய்! நல்ல பதிவு !
//அம்மா வேலைக்கு போறாங்களாம் ஆயா வீட்டில இருக்காங்கலாம் //
இது அந்த காலத்திலே இருந்தது ஜெய்... அவிங்களுக்கு பேர் வெட் நர்ஸ். அதாவது ரொம்ப பணம் இருந்தா குழந்தையை பாக்க ஆயா போடுவங்கல்ல அந்த ஆயாக்கும் குழந்தை இவங்க குழந்தை பிறந்த சமயத்தில் பிறந்திருந்தா.... ஒரு வேலை மிச்சம்ன்னு கவுனை மாட்டிகிட்டு போயிடுவாங்க...//

ஹா..ஹா..இதுக்கு இப்பிடி ஒரு கதை இருக்கா . அது சரி.. ஆனா பூரிக்கு கிழங்காவது குழந்தையின் நிலைதானே..பாவம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--////இது காற்று வாக்கில் வந்த செய்தி அல்ல. நீங்கள் அனுபவித்த விஷயத்தை தான் எழுதுவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். க்கி.. க்கி..,,

ஆகவே உங்கள் குரலை வைத்து சொல்கிறேன்.<< உண்மைதான்>> நான் கூட அன்னிக்கி (போனில் பேசிக்கொண்டிருக்கும் போது) சொன்னேனே உங்கள் குரல் அருமையா இருக்கு என்றும்,,பின்னணி பாடலாமென்றும்,, நீங்கள் பவ்யமாய் மறுத்த விஷயம் இது தானா தல ??? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்!!// x Repeat :) //


நீங்களுமாஆஆஆ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமுதா கிருஷ்ணா--//மிக அவசியமான பதிவு..//

வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வெறும்பய--// நல்ல விழிப்புணர்வு பதிவு...
பகிர்வுக்கு நன்றி..//

வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--//இங்கு (USA) குழந்தை பிறந்த உடனே, ஒரு நர்ஸ் வந்து தாய் பால் கொடுப்பதின் அவசியத்தை விளக்கி, தாய்ப்பாலே குழந்தைக்கு கொடுக்க encourage செய்கிறார்கள்.//

உங்க யூ எஸ் ஏ திருந்திகிட்டு வருது ஆனா நாம மோசமாயிட்டு வரேம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்துல்மாலிக் said...

நல்லது... இது தாய்க்கு தெரிந்தா சரிதான்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சிறந்த பதிவு ஜெய்லானி சார்... வாழ்த்துக்கள்

Mahi said...

பொறுப்பா எழுதிருக்கீங்க.ஆனாலும் கடைசில வழக்கமான சந்தேகமா? ஆள விடுங்க சாமி!:)

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//அருமையான பதிவு மிக்க நன்றி ஜெய்லானி //

வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//கழுதைக்குப் பால் // க்கும் ..ரொம்ப முக்கியம்..:)) //

தேனக்கா ஒரே பால்ல மூனு ரன்னா ..எப்படி ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹைஷ்126 said...

//நீங்களுமாஆஆஆ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
“அழுத புள்ள சிரிச்சுதாம் ! கழுதை பாலை குடிச்சுதாம்” :)))

vanathy said...

ஜெய், நல்ல பதிவு. நிறைய இங்கிலீசு வார்த்தைகள் கண்டு பிடிக்கிறீங்க.
ஐ! நான் தான் கடைசியா?

மனோ சாமிநாதன் said...

நல்ல பதிவு! தாய்ப்பாலின் அருமை தெரியாத இளம் பென்களுக்கு மிகவும் உதவும் இந்த விழிப்புணர்வுப் பதிவு!!

காஞ்சி முரளி said...

நல்ல அட்வைஸ்...!
தேவையான அட்வைஸ்...!


வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி...

புல்லாங்குழல் said...

நல்ல பதிவு! இதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம் நீங்க சொல்லக் கூடாது என வம்பிலுக்காமல் இருந்தால் சரி!

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

ஜெயந்தி said...

தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் அது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமைதான்.

Anonymous said...

இளம் தாய்கள் அறிய வேண்டியா அவசியமான பதிவு ஜெய்லானி சார் ..பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

//sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்//

வாங்க ஸ்வேதா ..!! அறிமுகத்திற்கு நன்றி. புண்ணீயம் தேடுவதில நான் எப்பவும் முதல் இடம் அதையும் பார்த்து விடுகிரேன். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//நான் நான்கு வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன்.. அதன் பலன் இப்போதும் தெரிகிறது ...//

கேக்கும் போதே உடல் புல்லரிக்கிரது பாஸ் உண்மையாகவே ..!!கொடுத்து வைத்த ஆள் நீங்கள்..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//நல்ல பகிர்வு ஜெய்லானி..நாந்தான் லேட்டா வந்திட்டேனா..//

வாங்க ஷேக்..!! எப்ப வந்தாலும் வரவேற்க்க நா ரெடி ..சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Kumar--//http://www.ponmaalai.com/2010/08/1-7.html
குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நோயின்றி குழந்தை நன்றாக வாழும் என ராயப்பேட்டை அரசுமருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவுத் தலைவர் டாக்டர் டி.குணசிங் தெரிவித்தார்.//

ஆமாங்க சரியா சொன்னீங்க ..ஆனா யாரும் இப்ப கேக்குறது இல்ல..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சீமான்கனி--//நல்ல விழிப்புணர்வு இடுக்கை ஜெய்லானி... இளைய தலைமுறைக்கு புரியவைத்தால் போதும் எதிர்கால இந்தியாவிற்கு ஆரோக்கியமான பிள்ளைகள் கிடைப்பார்கள்...நன்றி... ஜெய்லானி //

ஆமா உண்மைதான்.சரியா சொன்னீங்க கனி..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//உடம்பை அழகா வச்சிருக்கனும்னுதானே தாய்கள் எல்லாரும் பால் கொடுக்கிறதை நிப்பாட்டுறாங்க.உங்க பதிவைப் பாத்தாங்கன்னா வீட்டுக்கே ஆட்டோ வரும் ஜெய் //

நாந்தான் தோட்டத்து வாசல் வழியா எஸ்கேப் ஆயிட்டேனே .ஹி..ஹி.. !உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Priya--//சிறப்பான பதிவு!!!//

வாங்க ..!! வாங்க..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஒரு அருமையான பதிவை,அவசியமான இடுகையை போட்டு விட்டு கடைசியா உங்களுக்கே உரித்தான (// குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!! //)கேளிவியையும் கேட்டு பதிவிட்டது ஜெய்லானியே தான் என்று நிருபித்து விட்டீர்களே? //

வாங்க ஸாதிகாக்கா..!! ஹா..ஹ.. அதான் என்னோட டிரேட் மார்க்கே..ஹய்யோ..ஹய்யோ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சுசி--// நல்ல பகிர்வு. நிஜமா எனக்கு புதிய தகவல்.//

வாங்க ...வாங்க..!!சந்தோஷம் .ஒரு நல்ல லேடி டாக்டரா பாத்து கேக்கும் போது இன்னும் நிறைய விஷயங்கள் கிடைக்கும். (இதில் பிளாக்கில் போட முடியாது). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நசரேயன்--// குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே //

எனக்கு ஒரு லிட்டர் வேண்டும் //
ஒரு வேளைக்கா பாஸ்..!! இல்ல பேரல்ல பேனுமா ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//அண்ணே, ஆகஸ்ட் முதல் தேதி தாய்ப்பால் தினம் என்ற செய்தி புதிது. ஆனால் நண்பர்கள் தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு. இந்த வருடம் ஒன்னாம் தேதி, ஏழாம் தேதி........//

ஆமா வசதியா மாத்திக்கிறாய்ங்க . படு பாவி பசங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//எப்படிண்ணே....!!!! //

வாங்க ..ஹி..ஹி.. ஒரு ஃபுளோவுல தானா வருது என்ன செய்ய ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைசர்--//good one //

என்னது எல்லாருமே திருந்திகிட்டு வரமாதிரி இருக்கே..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//போஸ்டிங் பார்த்து இனி என்ன ஆகப் போகுது என்று இமா பின்னூட்டம் படிக்கப் போய்ட்டாங்க ஜெய்லானி. ;)) //

ஹா..ஹா..அவங்க எப்பவும் நாவல்ல கடைசி பக்கத்தைதான் முதல்ல படிப்பாங்க

//அப்ப கன்னுக்குட்டிக்கும் கழுதக் குட்டிக்கும் தாய்ப் பால் தேவையில்லயா? :)))))))))// - சந்தேகம் ஓர் கொடிய தொற்றுநோய். பாருங்க என்ன வேக வேகமாப் பரவுது என்று. ;)

ஹைஷ் அண்ணே சிரிக்க முடியலைய்ய். ;))//

ச்சே..இன்னுமா உலகம் நம்மளை நம்புது..அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--//குரல் இனிமைக்கு கழுதை பால் நல்லதாமே காற்று வாக்கில் வந்த செய்தி இது உண்மையா...?,,,!
இது மூட நம்பிக்கை தல //

இருக்கலாம் ,இல்லாமலும் இருக்கலாம் .. ஒரு வேளை கழுதை குட்டிக்கு இருக்கலாம்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அக்பர்--//நல்ல பதிவு ஜெய்லானி.

சில நல்ல டாக்டர்கள் தாய் பால் மட்டுமே போதும் வேறு எதுவும் கொடுக்கவேண்டாம் என்பார்கள். ஆனால் அவர்களை நாம் டாக்டராக ஏற்றுக் கொள்ள மாட்ட்டோம்.//

ஆமா அக்பர் சரியா சொன்னீங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அப்துல்மாலிக்--//நல்லது... இது தாய்க்கு தெரிந்தா சரிதான் //

ஆமா அப்துல் ..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி--// சிறந்த பதிவு ஜெய்லானி சார்... வாழ்த்துக்கள் //

என்னது திடீரென சார் ..ஒரு வேளை உங்க இட்லியை நீங்களே இன்னைக்கு சாப்பிட்டுடீங்கலா ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mahi--//பொறுப்பா எழுதிருக்கீங்க.ஆனாலும் கடைசில வழக்கமான சந்தேகமா? ஆள விடுங்க சாமி!:) //

ஹி..ஹி.. இதான் நா எப்பவுமே .அது பெட்ஷீட் மாதிரி..ஹ்ய்யோ..ஹய்யோ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@sweatha--//
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .//

ஓக்கே பார்த்து விடுகிறேன் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//“அழுத புள்ள சிரிச்சுதாம் ! கழுதை பாலை குடிச்சுதாம்” :))) //

ஹி..ஹி.. இப்பிடி விடாம துரத்தி துரத்தி அடிச்சா என்ன ஆகிரது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy-//ஜெய், நல்ல பதிவு. நிறைய இங்கிலீசு வார்த்தைகள் கண்டு பிடிக்கிறீங்க.
ஐ! நான் தான் கடைசியா? //

ஹா..ஹா..ஆமாங் ,பரவா யில்லீங் நீங் தாங் கடைசிங் போதுமாங் இல்லாட்டி வேர சொல்லவாங்..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--//நல்ல பதிவு! தாய்ப்பாலின் அருமை தெரியாத இளம் பென்களுக்கு மிகவும் உதவும் இந்த விழிப்புணர்வுப் பதிவு!! //

வாங்க ..!! வாங்க..!!சந்தோஷம்,,சரியா சொன்னீங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//

நல்ல அட்வைஸ்...!
தேவையான அட்வைஸ்...!


வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி..//

வாங்க சார் ..சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஒ.நூருல் அமீன்--// நல்ல பதிவு! இதெல்லாம் பொம்பளங்க சமாச்சாரம் நீங்க சொல்லக் கூடாது என வம்பிலுக்காமல் இருந்தால் சரி!//

நீங்க என்ன கோத்து விட்டாலும் நம்ம சகோஸ் சண்டைக்கு வரமாட்டாங்க பிரதர் ( எதுக்கும் உஷரா இருந்துக்கோ ஜெய்லானீஈஈஈ).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இமா க்றிஸ் said...

என்ன ஜெய்லானி, பிச்சுப் பிச்சு ஒரு மாதிரி எல்லாருக்கும் பதில் போட்டு முடிஞ்சா? இன்னமும் மீதி இருக்கா? ;))

ஜெய்லானி said...

@@@asiya omar --//

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.//

இதோ வந்துக்கிட்டே இருக்கிறேன்.உங்கள் வருகைக்கும் விருதுக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி --//தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் அது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமைதான்.//

ஆமாங்க ..அது வாய திறந்தா சொல்ல முடியும்..பாவம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@sandhya--//இளம் தாய்கள் அறிய வேண்டியா அவசியமான பதிவு ஜெய்லானி சார் ..பகிர்வுக்கு நன்றி//

வாங்க ..!! வாங்க..!!ம் ஆமா அவங்களுக்கு யார் சொல்லுரது..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//என்ன ஜெய்லானி, பிச்சுப் பிச்சு ஒரு மாதிரி எல்லாருக்கும் பதில் போட்டு முடிஞ்சா? இன்னமும் மீதி இருக்கா? ;)) //

அவ்வ்வ்வ் இப்ப டைம் ராத்திரி 2.41 ஆகுது ,பாருங்க117 க்மெண்ட்னா சும்மாவா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))