Wednesday, November 3, 2010

மா.....!!!!


      முக்கனிகளில் மா , பலா , வாழைன்னு இப்ப எல் கேஜி படிக்கிற குழந்தைக்கு கூட தெரியுது.  (ஏன்னா நா இப்ப எல் கேஜி தான் படிக்கிறேன் ..ஹி..ஹி..) அப்போ இதை பத்தி உங்களுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும் .
      அதில பயன் படாத  பொருளே இல்லை , பிசின் வரை மருத்துவ பயன் உள்ளது..  மாங்காயில் செய்யும் ( ஆவக்காய் )  ஊருகாய் ருசியே தனிதான் ,  இதில மொத்தம் 1500 வகைகள் இருக்கு.
      முகல்  பேரரசர்களில் அக்பர் ஒரு மாம்பழப்பிரியர் . அவரது பீஹார் தோட்டத்தில மட்டும் கிட்டதட்ட அப்பவே ஒரு லட்சம் மாமரங்களை வளர்த்து வந்தார் . அந்த பழங்கள் லாங்கராவகைகளாம். (அந்த காலத்தில ஏன் மாசம் மும்மாரி பொழிஞ்சுதுன்னு இப்பதான் புரியுது )
     நமது கவிஞர்களும் அதை ஒட்டியே எழுதிய பாட்டுக்களும் ரசனை  மிகுநத பாட்டாவே இருந்திருக்கு உதாரணத்திற்கு ‘மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா”  ஊமை விழிகள் படப்பட்டு சசிரேகாவின் குரலும் ,சுரேந்தரின் குரலும் டாப் , ’’ அடடா  மாமரக் கிளியே  உன்னை இன்னும் நான் மறக்கலையே  “ சிட்டுக்குருவி படத்தில் ஜானகியின்  குரல் பாடலின் வரிகள் , “ நான் மாந்தோப்பில் நின்றிந்தேன் ‘’  எங்கள் வீட்டு பிள்ளை  படத்தில எம் ஜி ஆர் பாட்டு .. மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் “  டாக்டரு விசய் ஆடிய பாட்டு ...இப்படியே போகும்....!! 
      இதுப்போல மாங்காயின் , பழத்தின் சுவை , மருத்துவப் பயன்களை பக்கம் பக்கமா சொல்லிகிட்டே  போகலாம் .என்ன ஒன்னு , அதிகம் சாப்பிட்டா  உடம்பு சூடு அதிகமாகிடும் . அதனால  உடல் சூட்டை குறைக்க பால் சாப்பிட வேனும் ( ஒரிஜினல் பால் தான்..தப்பா நினைத்தா நிர்வாகம் பொருப்பல்ல.)
      இதை பத்தி பதிவு போடலாமுன்னு பார்க்கும் போது சகோ அமைதியக்கா  ஒரு பதிவு போட்டிருக்காங்க அதனால இங்கே  நிறைய  சொல்லல   என்னடா இது தெளிவா எழுதிகிட்டே வரானே என்னன்னு யோசிக்கிறீங்களா ..வாங்க மெயின் ஸீனுக்கு இப்ப போகலாம்.
      இவ்வளவு அருமையா, சுவை , குணம் , மணத்தில் மாங்காய் , பழம்  இருக்கும் போது . ஒருத்தரை அறிவு குறைவா இருப்பதாக நினைச்சிகிட்டு அவனை ( ரை ) மாங்காய் மடையன்ன்னு திட்டுரோமே ஏன் ?.
      அப்படி திட்டுவதால் நாம அவரை கேலி பண்ணுரோமா ? இல்லை மாங்காயை கேலி பண்ணுரோமா..?திட்டுவதுக்கு ஏன் வேர உதாரணம் கிடைக்க வில்லை . ஒரு வேளை திட்டும் ஆளுக்கு மா மரத்தின் , பலன்களை பத்தி தெரியலையா..?. ஒரு வேளை அந்த திட்டும் ஆளே மடையனா..?
       திட்டுறவன் அப்படி திட்டுறான் ஓக்கே..!! .அதுக்கு பதில் சொல்றவனும் பதிலுக்கு ஏன் அதையே அவனை பாத்து சொல்லனும் . அதுக்கு பதிலா அவன் கிட்ட திருப்பி கேளுங்க .அதுக்கு அர்த்தம் என்னன்னு . ஙே“ன்னு முழிப்பான். அப்போ அவனை பார்த்து  கேளுங்க .அடுத்த தடவை திட்டும் போது  மாங்காயை  கேவலப்படுத்தாதே...

     சரி சகோஸ்..உங்களில் யாருக்காவது  அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா..?  தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...பிளீஸ்  
டிஸ்கி: பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு 
        

82 என்ன சொல்றாங்ன்னா ...:

Mahi said...

:)
/சரி சகோஸ்..உங்களில் யாருக்காவது அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா..? /தெரியாது ஜெய் அண்ணா! இந்த பட்டம் வாங்கிய அனுபவம் உள்ளவர்கள் யாராவது வந்து சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.ஹிஹி!

Mahi said...

ஐ..நாந்தான் பர்ஸ்ட்டா?? போட்டோல இருக்க எல்லா மாம்பழமும் எனக்கே எனக்கு!! :)))))))))))

Prasanna said...

//மாங்காய் மடையன்ன்னு திட்டுரோமே ஏன் ?//

அதானே? ஏன்? ஹீ ஹீ

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

( எப்படியோ ப்ளாக் விற்பனைய தடுத்திட்டீங்க..ஹி..ஹி)

ஆமா.. படத்தை எங்க புடிச்சீங்க..? சூப்பராயிருக்கு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்களில் யாருக்காவது அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா..? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...பிளீஸ்//

என்ன பாஸ்..இப்படி சொல்லீட்டீங்க..

நாம யாரையாவது திட்டனுமுனா, இப்படி உயர்த்தி சொல்லி திட்டினா, அவர்களுக்கு, இந்த நாள் மட்டும் அல்ல... எல்லா நாளும் இனிய நாளா அமையும் அதனாலதான் மாங்கா பேரை வெச்சு திட்ரோம்..

( வருவதே, 6 மாசத்துக்கு ஒரு தடவை.. வந்ததும் கேள்வி கேட்டா,... ஹி..ஹி இப்படித்தான் பதில் சொல்லுவோம்...)

Philosophy Prabhakaran said...

// பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு //

கரெக்டு தான்... ஒரு காலத்துல தீயா வேலை செஞ்சீங்களே... இப்போ என்னாச்சு...

இலா said...

ஜெய்யீ! நல்லா போட்டிருக்கீங்க "மாங்க" அத்தைய விட்டுபோட்டீகளே... காலேசில போடாத மாங்காயா !!
இடையில ஒரு பாரா ரொம்ப காம்ப்ளிகேட்டட் :( டவுடடு டவுட்டா வருது... ஓகே ரெஸ்ட் எடுத்திட்டு வாரன்

Anisha Yunus said...

ஆஹா.... ஒரு நீள இன்டர்வெல் இருக்கறப்பவே நாம் நினைச்சிருக்கோணும், எங்கயாவது மாமரத்தோட கீழ படுத்துகிட்டு அடுத்த சந்தேகத்தை ரெடி பண்ணிகிட்டு இருந்திருப்பீங்கன்னு. அதை விட்டுட்டு லேட்டா வந்தாலும் நல்ல பதிவா போடுவார்னு நினச்சா... நாங்கதான் மாங்கா மடையனுங்க..... ஆஹா அதுலதான் டவுட்டா.....தாமஸ்குட்டீ விட்டோடா...

தாராபுரத்தான் said...

மாங்காய் மடையன்...இன்று பார்க்கிறவர்களிடம் இதுதான் கேள்வி.

Unknown said...

மாம்பழ தாகம்.....

welcome back

வேலன். said...

ஏன்னா நா இப்ப எல் கேஜி தான் படிக்கிறேன்
மாங்காய் மடையன்....?

..ஹி..ஹி.


வாழ்க வளமுடன்.
வேலன்.

kavisiva said...

கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்ததுல சந்தேகம் எல்லாம் தீர்ந்து தெளிவாயிட்டாருன்னு நம்பி படிச்சா... மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே :(

ஜெய் எத்தனை பேருக்கிட்ட மாங்காமடையன்னு திட்டு வாங்குனீங்க :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//டிஸ்கி: பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு//

இப்பிடியெல்லாம் மிரட்டிஆவது அண்ணாத்தைய பதிவு போட வைக்கிற அன்புள்ளங்களுக்கு நன்றி..

எங்க வீட்டுல வாழைக்கா மடையான்னு தான் திட்டுவோம்.. :)

vanathy said...

ஜெய், நான் யாரையும் திட்டியதில்லை. எனவே பதில் தெரியாது. மாமங்க மடையன் மருவி மாங்கா மடையன் ஆகியிருக்கலாம்!!!!!! யாருப்பா அது ஜெய்யின் ப்ளாக்கினை விற்கப்போறதா சொன்னது ? சும்மா நின்னவனை சொறிஞ்சு விடுறது என்பது இது தானா????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாருப்பா அது ஜெய்யின் ப்ளாக்கினை விற்கப்போறதா சொன்னது ? சும்மா நின்னவனை சொறிஞ்சு விடுறது என்பது இது தானா????
//

நாந்தாங்கோ அது.. விடுங்க..விடுங்க.. மனுசன்-னா, தவறு ஏற்படுவது சகஜங்க..

erodethangadurai said...

ரொம்ப நல்ல பதிவு .. ! வாழ்த்துக்கள்.. ! உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

சௌந்தர் said...

இவ்வளவு அருமையா, சுவை , குணம் , மணத்தில் மாங்காய் , பழம் இருக்கும் போது . ஒருத்தரை அறிவு குறைவா இருப்பதாக நினைச்சிகிட்டு அவனை ( ரை ) மாங்காய் மடையன்ன்னு திட்டுரோமே ஏன்...?////


நேத்து இவங்களை யாரோ மாங்காய் மடையன்னு திட்டி இருப்பாங்க போல...!

சாந்தி மாரியப்பன் said...

லீவு போட்டு யோசிக்கிறதுன்னா இதானா :-))))))))

என் இடுகைக்கு லிங்கினதுக்கு நன்றி..

ஸாதிகா said...

மாம்பழத்தை நல்லாவே அரைத்து ஜூஸ் போட்டு இருக்கீங்க.நீண்ட இடைவேளைக்கு பிரகு வந்தாலும் இன்னும் சந்தேகம் கேட்பது மறக்கவில்லையோ?

சசிகுமார் said...

மிரட்டுனா தான் பதிவு போடுறாங்க. யாருப்பா அந்த மொட்ட கடுதாசி போட்டது. நல்ல விலைக்கு வித்துடுலாமுன்னு பார்த்தால் அதுக்குள்ள எவனோ பொழப்ப கெடுத்துட்டானே.

Anonymous said...

எங்க போய்ட்டீங்க இத்தன நாளா???? இனி தொடர்ந்து எழுதுங்க ஜெய்..

மனோ சாமிநாதன் said...

சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!

உங்களுக்காகவே கீழ்க்கண்ட இணைப்பில் ‘ மாங்காய் மடையனுக்கான’ விளக்கம் இருக்கு!!

http://maniyinpakkam.blogspot.com/2008/07/2.html

Chitra said...

வாங்க வாங்க... வரும் போதே maaza ஓட வந்து இருக்கீங்க... சூப்பர்!

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு

Anonymous said...

//கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்ததுல சந்தேகம் எல்லாம் தீர்ந்து தெளிவாயிட்டாருன்னு நம்பி படிச்சா... மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே :(
ஜெய் எத்தனை பேருக்கிட்ட மாங்காமடையன்னு திட்டு வாங்குனீங்க :))//


//யாருப்பா அது ஜெய்யின் ப்ளாக்கினை விற்கப்போறதா சொன்னது ? சும்மா நின்னவனை சொறிஞ்சு விடுறது என்பது இது தானா????
//

நாந்தாங்கோ அது.. விடுங்க..விடுங்க.. மனுசன்-னா, தவறு ஏற்படுவது சகஜங்க..//


ha ha

இந்த மாங்காயை எப்படி உங்க ஊர்ல சொல்லுவாங்க. எங்க ஊர்ல விலாட்டு மாங்காய் என்று சொல்லுவார்கள்.

ஜெயந்தி said...

மாம்பழம் கிடைக்காத நேரத்துல படத்தைப்போட்டு நாக்கில் நீர் ஊற வைத்த ஜெய்லானியை என்னவென்று திட்டலாம்.

Unknown said...

மாம்பழமாம் ...மாம்பழம் .. அப்புறம் நீங்களே பாடிக்குங்க..

எம் அப்துல் காதர் said...

மிரட்டல் விட்டது யாருங்க அதுவும் உங்கள போயி!! (அப்படீன்னா தில் உள்ள பார்டியா தானிருக்கும்) ஆமா ஆமா அவரு 'பட்டா' போட்டு வித்தாலும் நீங்க கேட்க முடியாது தான்.

எம் அப்துல் காதர் said...

சரி சரி பதில நீங்களே சொல்லுங்க. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு அடுத்த பதிவு!! தொடரட்டும். ஹி.. ஹி.. என்னாச்சு பாஸ் உங்களுக்கு??

எம் அப்துல் காதர் said...

ஊருக்கு போயிருந்தீங்களே, வீட்ல 'தங்ஸ்' பிள்ளைகள் நலமா பாஸ்?? ஊர்ல மாங்கா சீசன் கூட இப்ப இல்லையே ?? அப்ப எப்படி?? ஆமா சந்தேகம் வர்றதுக்கு நேரம் காலமா இருக்கு ??

admin said...

www.vivasayi.tk

மாம்பழ தாகம் ஈழத்திலும் இருக்கு

Jaleela Kamal said...

பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு hhaaa .

appaa pathivu oru vaziya pooddaasaa

ஆமினா said...

ஒரு வழியா பதிவு போட்டாச்சா?

திட்டும் போது கூட வர்ணீச்சு உயர்வா திட்டுராங்களாம். அதான் அர்த்தம்.

NaSo said...

// இவ்வளவு அருமையா, சுவை , குணம் , மணத்தில் மாங்காய் , பழம் இருக்கும் போது//

எவ்வளவுன்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

r.v.saravanan said...

பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு

ஹா ஹா

இருந்தாலும் நீங்க இதுக்கெல்லாம் பயப்படற ஆளா என்ன

மா பற்றி ய இடுகை ஓகே

எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஜெய்லானி

'பரிவை' சே.குமார் said...

மா.... ரொம்ப நல்ல பதிவு ..!

ஜெய்லானி said...

@@@மகி--// :)
/சரி சகோஸ்..உங்களில் யாருக்காவது அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா..? /தெரியாது ஜெய் அண்ணா! இந்த பட்டம் வாங்கிய அனுபவம் உள்ளவர்கள் யாராவது வந்து சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.ஹிஹி! //

வாங்க சகோஸ் ..!! ஆஹா..செம உள்குத்தால்ல இருக்கு . முதல் கமெண்டே இப்பிடி போட்டா யார்தான் பதில் சொல்வாங்க ஹா..ஹா..

//ஐ..நாந்தான் பர்ஸ்ட்டா?? போட்டோல இருக்க எல்லா மாம்பழமும் எனக்கே எனக்கு!! :))))))))))) //

எல்லாமே உங்களுக்குதான் ஆனா ஒரே நேரத்தில சாப்பிடாதிங்க அப்புறம்....> ஹா..ஹா.. !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--//மாங்காய் மடையன்ன்னு திட்டுரோமே ஏன் ?//

அதானே? ஏன்? ஹீ ஹீ //

வாங்க சார் ..!! அதானே ஏன் என்னங்க அதையே திருப்பி கேக்குறீங்க ஹா..ஹா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--// ( எப்படியோ ப்ளாக் விற்பனைய தடுத்திட்டீங்க..ஹி..ஹி)//

வாங்க தல..!!ஒரு சின்ன சத்தத்துக்கே விழிக்கிற ஆள்கிட்ட இடிமாதிரி சவுண்ட் விட்டா ..ஹி..ஹி..

//ஆமா.. படத்தை எங்க புடிச்சீங்க..? சூப்பராயிருக்கு... //

”மா” கிட்டயிருந்து ஹா..ஹா..

//உங்களில் யாருக்காவது அதுக்கு என்ன அர்த்தமுன்னு தெரியுமா..? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...பிளீஸ்//

என்ன பாஸ்..இப்படி சொல்லீட்டீங்க..

நாம யாரையாவது திட்டனுமுனா, இப்படி உயர்த்தி சொல்லி திட்டினா, அவர்களுக்கு, இந்த நாள் மட்டும் அல்ல... எல்லா நாளும் இனிய நாளா அமையும் அதனாலதான் மாங்கா பேரை வெச்சு திட்ரோம்..//

மாட்டிகிட்டியே பட்டா முதல் கமெண்டை பாருய்யா நல்லா படி ...அவ்வ்வ்வ்வ்

//( வருவதே, 6 மாசத்துக்கு ஒரு தடவை.. வந்ததும் கேள்வி கேட்டா,... ஹி..ஹி இப்படித்தான் பதில் சொல்லுவோம்...)//

பட்டா வாழ்கையில் மண்ணிப்பே இல்லையா போதும் விட்டுய்யா ஆளே நொந்து நூடுல்ஸா இருக்கும் போது ..அவ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@philosophy prabhakaran--// பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு //

கரெக்டு தான்... ஒரு காலத்துல தீயா வேலை செஞ்சீங்களே... இப்போ என்னாச்சு...//

வாங்க தோஸ்த்..!! ஒரு சின்ன இடியாப்பம் அதான் ஹா..ஹா..!! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இலா--//ஜெய்யீ! நல்லா போட்டிருக்கீங்க "மாங்க" அத்தைய விட்டுபோட்டீகளே... காலேசில போடாத மாங்காயா !! //

வாங்க மயில் ..!!ஹி..ஹி.. அதிகமா போட்டு ஒரேடியா குழப்ப கூடாது( ? )ங்கிர நல்ல எண்ணம்தான் ஹா...ஹா
// இடையில ஒரு பாரா ரொம்ப காம்ப்ளிகேட்டட் :( டவுடடு டவுட்டா வருது... ஓகே ரெஸ்ட் எடுத்திட்டு வாரன் //

வாங்க :-))...வரனும் ...நல்லா டவுட் வரனும் அப்பதான் நான் தெளிவா இருக்கேங்கிரது எனக்கே தெரியும் ஹி..ஹி.. !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்னு--//ஆஹா.... ஒரு நீள இன்டர்வெல் இருக்கறப்பவே நாம் நினைச்சிருக்கோணும், எங்கயாவது மாமரத்தோட கீழ படுத்துகிட்டு அடுத்த சந்தேகத்தை ரெடி பண்ணிகிட்டு இருந்திருப்பீங்கன்னு. //

வாங்க அனீஸ் ..!! புத்திசாலிங்கிரதை நிருபிச்சிட்டீங்க ஹா..ஹா..

//அதை விட்டுட்டு லேட்டா வந்தாலும் நல்ல பதிவா போடுவார்னு நினச்சா... நாங்கதான் மாங்கா மடையனுங்க..... ஆஹா அதுலதான் டவுட்டா.....தாமஸ்குட்டீ விட்டோடா...//

ஹா..ஹா..திரும்பவுமாஆஆஆஆஆஆ..!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹுஸைனம்மா said...

புத்திசாலிப் பிள்ளையா இருந்தா பிளாக்கை ப்ளாட் போட்டு வித்துட்டு, கைமேல காசு பாத்திருக்கும்!! சந்தேகம் கேக்கத் தெரிஞ்ச அளவுக்கு, பிழைக்கத் தெரியலையே!! ;-)))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் மாங்கா மடையன்னா மாங்கா திங்கிற மடையன்னு அர்ததம் (அதாவது இனிப்பான மாம்பழம் இருக்க, புளிக்கும் மாங்க்காய தின்றவன்!) எப்பூடி? நாங்கள்லாம் யாரு? யாருகிட்ட? (பன்னி கலக்குறேடா.....!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி உங்க ப்ளாக்க விக்கிறிங்களாமே? நல்ல ரேட்டுக்கு நான் வித்து கொடுக்குறேன், எவ்வளவு கமிசன் தருவீங்க?

தினேஷ்குமார் said...

தோட்டத்து
குயிலோனோன்று
தோகைவிரித்தாடும்
மாமரகிளையினிலே
கீதம் பயிலுகையில்
சங்கீதம்
சரணடைய
சாரலடிக்குதே
மனதில்...........

ஜெய்லானி said...

@@@தாராபுரத்தான்--//மாங்காய் மடையன்...இன்று பார்க்கிறவர்களிடம் இதுதான் கேள்வி.//

வாங்க..சார்..!! எத்தனையே இருக்கும் போது இது மட்டுமே ஏன்னுதான் சிந்தனை...!! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//மாம்பழ தாகம்.....
welcome back //

வாங்க கவிஞரே..!! அதுல மட்டும் இல்ல இன்னும் நிறைய தாகங்கள் இருக்கு.ஒன்னு ஒன்னா வெளியே விடலாம் .:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்--// ஏன்னா நா இப்ப எல் கேஜி தான் படிக்கிறேன்
மாங்காய் மடையன்....?
..ஹி..ஹி.
வாழ்க வளமுடன்.
வேலன். /

வாங்க நண்பரே..!! கரீக்டா புரிஞ்சிகிட்டீங்க போலிருக்கே..!! ஹா..ஹா.. !!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--//கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்ததுல சந்தேகம் எல்லாம் தீர்ந்து தெளிவாயிட்டாருன்னு நம்பி படிச்சா... மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே :( //

வாங்க கவி..!! என்கிட்ட இந்த வேதாளம் ஆல்ரெடி டிராஃப்டில இருக்கு ஆனா இப்ப நீங்களே சொல்லிட்டீங்க .. கூடிய சீக்கிரம் அதையும் போட்டிட வேண்டியதுதான் ஹா..ஹா..!!

//ஜெய் எத்தனை பேருக்கிட்ட மாங்காமடையன்னு திட்டு வாங்குனீங்க :)) //

வீரனின் வாழ்கையில விழுப்புண்கள் சகஜம்ப்பா..!! ஹா..ஹா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Riyas said...

நீங்க யாரு.. புதிய பதிவரா..

அட நம்ம ஜெய்லானி மறந்தேபோயிற்று.. நீண்டநாளைக்குப்பின் சுவையான ஒரு பதிவு.

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//டிஸ்கி: பதிவு போடாவிட்டால் இடம் விற்பனைக்கு என்று மிரட்டல் விடப்படுவதால் பயந்து போய் இந்த பதிவு//

இப்பிடியெல்லாம் மிரட்டிஆவது அண்ணாத்தைய பதிவு போட வைக்கிற அன்புள்ளங்களுக்கு நன்றி..//

வாங்க சந்தூஸ்..!! என்னாஆஆஆதூஊஊஊஊ அன்புள்ளங்களா...?..!! அடியாத்தீ..இது என்னா வில்லங்கம்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

//எங்க வீட்டுல வாழைக்கா மடையான்னு தான் திட்டுவோம்.. :) //

ஓஹ் வித்தியாசமாதான் இருக்கீங்க போலிருக்கு யார் யாரை திட்டீப்பீங்க ஹி..ஹி.. !உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--// யாருப்பா அது ஜெய்யின் ப்ளாக்கினை விற்கப்போறதா சொன்னது ? சும்மா நின்னவனை சொறிஞ்சு விடுறது என்பது இது தானா????
//

நாந்தாங்கோ அது.. விடுங்க..விடுங்க.. மனுசன்-னா, தவறு ஏற்படுவது சகஜங்க..//

பாத்தியா பட்டா ஹி..ஹி..எதுக்கும் அசையாத உன்னை அசத்திட்டாங்க ஹா..ஹா.. ( நினைக்க நினைக்க சிரிப்பை அடக்க முடியல )ஹா..ஹா.. !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், நான் யாரையும் திட்டியதில்லை. எனவே பதில் தெரியாது. //

வாங்க வான்ஸ்..!! எவ்ளோஓஓஓஓ நல்லவங்க நீங்க ..!! கேட்டதும் ஆனந்த கண்ணீரே வருது...!!
//மாமங்க மடையன் மருவி மாங்கா மடையன் ஆகியிருக்கலாம்!!!!!!//
அதென்ன ஒருவன் 12 வருஷமாவா மடையனா இருப்பான் ..ஹி..ஹி.. ஆனாலும் இது ரொம்ப ஓவர்தான்
//யாருப்பா அது ஜெய்யின் ப்ளாக்கினை விற்கப்போறதா சொன்னது ? சும்மா நின்னவனை சொறிஞ்சு விடுறது என்பது இது தானா???? //

அப்படி கேளுங்க .....!! கேட்டதும் கொஞ்ச நேரத்துல கதி கலங்கி போயிட்டேன்னா பாத்துக்கோங்களேன் ஹா..ஹா.. !! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஈரோடு தங்கதுரை--// ரொம்ப நல்ல பதிவு .. ! வாழ்த்துக்கள்.. ! உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்.! //

வாங்க சார்..!! சந்தோஷம் .உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மோகன்ஜி said...

மாமரத்தின் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டின புத்திசாலியை குறிப்பிட மாங்கா மடையன்னு சொல்லியிருப்பாங்களோ ?
மாங்காப் பதிவுல மசக்கையை விட்டுட்டீங்களே!

உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள் ஜெய்லானிஜி

Anisha Yunus said...

//புத்திசாலிப் பிள்ளையா இருந்தா பிளாக்கை ப்ளாட் போட்டு வித்துட்டு, கைமேல காசு பாத்திருக்கும்!! சந்தேகம் கேக்கத் தெரிஞ்ச அளவுக்கு, பிழைக்கத் தெரியலையே!! ;-)))))))))//

ரிப்பீட்டு
தென்
அப்பீட்டு... !!

ராஜவம்சம் said...

மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள்.

ரொம்ப சீரியஸா பதில் சொல்லியிறுக்கேன் ஆமா.

இமா க்றிஸ் said...

காணேல்ல எண்டு நினைச்சுக் கொண்டு இருந்தன். வந்துட்டீங்கள்.

காஞ்சி முரளி said...

மீண்டும் ஜெய்லானி?
வாழ்த்துக்கள்... நண்பரே...!

சந்தேகமில்லே...!
சந்தேகமில்லே.......!
ஜெய்லானி சந்தேகத்தில்....
சந்தேகமில்ல...!

ஜெய்லானியின் re-entryக்கு வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி....

Vijiskitchencreations said...

இருந்தாலும் நீங்க இதுக்கெல்லாம் பயப்படற ஆளா என்ன? ஜெய்.
சரவனன் சொன்னதை ரீபீட்
இதுவும் ரீபிட்
ஹூசைனம்மா நல்ல பதிவு.
புத்திசாலிப் பிள்ளையா இருந்தா பிளாக்கை ப்ளாட் போட்டு வித்துட்டு, கைமேல காசு பாத்திருக்கும்!! சந்தேகம் கேக்கத் தெரிஞ்ச அளவுக்கு, பிழைக்கத் தெரியலையே!! ;-)))))))))

நான் சொல்ல வந்ததை நம்ம நன்பர்கள் எல்லாம் நல்லா விரிவா சொல்லிடாங்கா ஜெய்.

ஆளை காணோம் பதிவை கானோம் என்று நினைத்தப்பவே ஏதோ ஒன்று பெரிதா புயல் அடிக்கும் என்று தெரியும்.ஹி...
இது எப்படி இருக்கு

Mahi said...

/முதல் கமெண்டே இப்பிடி போட்டா யார்தான் பதில் சொல்வாங்க ஹா..ஹா../ஹிஹி,ஆமாம் ஜெய் அண்ணா!ஏதோ அந்நேரம் டைப் பண்ணிட்டு யோசிச்சுட்டே இருந்தேன்.சாரி! :)

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--//நேத்து இவங்களை யாரோ மாங்காய் மடையன்னு திட்டி இருப்பாங்க போல...! //

வாங்க செளந்தர்....!!வீரனின் வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா ஹா..ஹா..ஆனா என்னை திட்டினா பதிலுக்கு அதையே சொல்ல மட்டேன் தாங்ஸுன்னுதான் சொல்லுவேன் எப்படி...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//லீவு போட்டு யோசிக்கிறதுன்னா இதானா :-)))))))) //

வாங்க சாரலக்கா..!! ஹி..ஹி.. ஆனா லீவு அதிகமா போயிடுச்சி அதான் . இனி வரும் தொடர்ந்து விட்டா ஃபிளாட் போட்டு வித்துடுவாங்களாம்...!!
//என் இடுகைக்கு லிங்கினதுக்கு நன்றி..//

நிறைய நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க .அதனால அந்த டாப்பிக் பக்கம் போகல ...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//மாம்பழத்தை நல்லாவே அரைத்து ஜூஸ் போட்டு இருக்கீங்க.நீண்ட இடைவேளைக்கு பிரகு வந்தாலும் இன்னும் சந்தேகம் கேட்பது மறக்கவில்லையோ? //

வாங்க ஸாதிகாக்கா..!! எதையுமே மாத்தி யோசிக்கும் போதுதான் சில மேட்டர் கிடைக்குது . என்னது நான் சந்தேகத்தை மறக்குறதா..நடக்குற வேலையா அது ஹா..ஹா.. !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//மிரட்டுனா தான் பதிவு போடுறாங்க. யாருப்பா அந்த மொட்ட கடுதாசி போட்டது. நல்ல விலைக்கு வித்துடுலாமுன்னு பார்த்தால் அதுக்குள்ள எவனோ பொழப்ப கெடுத்துட்டானே.//

வாங்க நண்பா..!! ஆஹா ..இந்த லிஸ்டில நீங்களுமா...!! யாரையுமே நம்ப முடியலை ..அவ்வ்வ்வ்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இந்திரா--//எங்க போய்ட்டீங்க இத்தன நாளா???? இனி தொடர்ந்து எழுதுங்க ஜெய்..//

வாங்க சகோஸ்..!! அமேஸான் காட்டுகுள்ள ஒரு சிம்பென்ஸியை பிடிக்க போனாதில வர வழி மறந்து போச்சி ஹி..ஹி... அதான் லேட்டு ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--//சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!உங்களுக்காகவே கீழ்க்கண்ட இணைப்பில் ‘ மாங்காய் மடையனுக்கான’ விளக்கம் இருக்கு!!

http://maniyinpakkam.blogspot.com/2008/07/2.html //

வாங்க சகோஸ்..!!விளக்கம் திரும்பவும் அதே இடத்துக்குதான் வந்திருக்கு.. நா கேட்டது அது எதுக்கு மாங்காயை திட்டனும் மகா ,இல்ல மஹா மடையன்னு சொல்லலாமே ” மா ” அம்மாவுக்கும் பொருந்துமே . ” மா ஊட்டாததை மாங்காய் ஊட்டும் “ இதில மா அம்மாதானே .? அதில விளக்கம் அவருக்கு தெரிஞ்ச வரை போட்டிருக்கிறார்..!! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra'--//வாங்க வாங்க... வரும் போதே maaza ஓட வந்து இருக்கீங்க... சூப்பர்! //

வாங்க டீச்சர்..!! இதுல உள்குத்து ஒன்னுமில்லையே ஹா..ஹா..!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//நல்லா இருக்கு //
வாங்க சகோஸ்..!! மொட்டைய சொன்னா நா என்னன்னு நின்னைக்க..? ஹா..ஹா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anisha Yunus said...

அம்ம்ம்.......மா!!

இது இன்னும் முடியலியா??
:((

ஜெய்லானி said...

@@@அனாமிகா துவாரகன்--//கொஞ்சநாள் ரெஸ்ட் எடுத்ததுல சந்தேகம் எல்லாம் தீர்ந்து தெளிவாயிட்டாருன்னு நம்பி படிச்சா... மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சே :(
ஜெய் எத்தனை பேருக்கிட்ட மாங்காமடையன்னு திட்டு வாங்குனீங்க :))//


//யாருப்பா அது ஜெய்யின் ப்ளாக்கினை விற்கப்போறதா சொன்னது ? சும்மா நின்னவனை சொறிஞ்சு விடுறது என்பது இது தானா????
//

நாந்தாங்கோ அது.. விடுங்க..விடுங்க.. மனுசன்-னா, தவறு ஏற்படுவது சகஜங்க..//


ha ha

இந்த மாங்காயை எப்படி உங்க ஊர்ல சொல்லுவாங்க. எங்க ஊர்ல விலாட்டு மாங்காய் என்று சொல்லுவார்கள் //

வாங்க ..!! வாங்க..!! இவ்வளவு தெளிவா எல்லாத்தையும் ரசிச்சிட்டு கடைசியா எந்த(படம் ) மாங்கான்னு சொல்லாம போய்ட்டீங்களே..!! ஹா..ஹா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//மாம்பழம் கிடைக்காத நேரத்துல படத்தைப்போட்டு நாக்கில் நீர் ஊற வைத்த ஜெய்லானியை என்னவென்று திட்டலாம். //

வாங்க ..!!வாங்க..!! அதால மட்டும் திட்டிடாதீங்க ...ஹி..ஹி..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//மாம்பழமாம் ...மாம்பழம் .. அப்புறம் நீங்களே பாடிக்குங்க..//

வாங்க அண்ணே..!! வாங்க..!! பாடியதுலதான் இந்த சந்தேகமே வந்துச்சி..ஹா..ஹா...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//மிரட்டல் விட்டது யாருங்க அதுவும் உங்கள போயி!! (அப்படீன்னா தில் உள்ள பார்டியா தானிருக்கும்) ஆமா ஆமா அவரு 'பட்டா' போட்டு வித்தாலும் நீங்க கேட்க முடியாது தான்.//

வாங்க ..!!வாங்க..!!அப்படி விட ஒரே ஒரு ஆளாகதான் இருக்கும் . ஆனா சான்ஸ் குடுத்தாதானே..!!

//சரி சரி பதில நீங்களே சொல்லுங்க. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு அடுத்த பதிவு!! தொடரட்டும். ஹி.. ஹி.. என்னாச்சு பாஸ் உங்களுக்கு?? //

:-))))))))))))))))))))))))))))

//ஊருக்கு போயிருந்தீங்களே, வீட்ல 'தங்ஸ்' பிள்ளைகள் நலமா பாஸ்?? ஊர்ல மாங்கா சீசன் கூட இப்ப இல்லையே ?? அப்ப எப்படி?? ஆமா சந்தேகம் வர்றதுக்கு நேரம் காலமா இருக்கு ??//

ஊருக்கா..????????????..!!!!!!!!!!!!!!! ..கொசுப்பதிவு போடும் போது கொசுவுக்கு சீசனா இருந்துச்சி ஹய்யோ..ஹய்யோ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ம.தி.சுதா said...

இது ஒரு பெரிய சந்தேகம் தான். எனக்குத் தெரியல இதைப்பற்றி முருகனிடம் தான் கேட்கணும் காரணம் அவர் தான் தனக்கு ஞானப்பழம் கிடைக்காததால் முதலில் இப்படிப் பேசினார் என்ற நாங்கள் பேசிக் கொள்வோம்.

இலா said...

"மா" சீசன் போயி இப்போ ஃப்ளூ சீசனாமே... என்ன பண்ண போறீங்க ?

தினேஷ்குமார் said...

http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல சந்தேகம் தான் விடை தான் தெரியல..

ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி மாங்காயில் பிசின் உள்ள மாதிரி, எப்பவாச்சும் மூளை மழுங்கி போய் பிசின் போல ஆச்சுன்னா... அப்போ "மாங்கா மடையன்..." சொல்வாங்களோ??

ஹ்ம்ம்..சரி ஓகே.. தெரிஞ்சத சொல்லிட்டேன்..

படங்கள் எல்லாம் சூப்பர் ஜெய்.. :-))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

இதெல்லாம் சரிவராது. ஆட்டோ அனுப்புனா தான் சரியா வரும். ஆமா நீங்க ஷார்ஜாவுல எங்க, அபிதாபியா? பிஹ்ரைனா? அட்ரஸ்ஸ சொல்லுங்க,

24 மணி நேரமும் ஆட்டோ, உருட்டு கட்டை தேவைக்கு அனுகவும்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//வீரனின் வாழ்கையில விழுப்புண்கள் சகஜம்ப்பா..!!//

உங்க நேர்மை எனக்கு ஒம்ப பிடிச்சிருக்கு. ஒரு வேளை ஷார்ஜாவ்ல இருக்கிறவுங்களுக்கெல்லாம் சூனியம் வச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்

Harini Nagarajan said...

மா பலா வாழை அப்டீன்னு சின்னதா பிரிச்சு சந்தேகம் கேக்கற வரைக்கும் சந்தோசம். இதுவே "பூவன்"பழம், ருமானி மாம்பழம் அப்படீன்னு வகை வகையா சந்தேகம் கேக்காம இருந்தீங்களே!

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))