Showing posts with label கவுஜ..கவுஜ... Show all posts
Showing posts with label கவுஜ..கவுஜ... Show all posts

Tuesday, December 21, 2010

கொக்கு --பைரவி --2

54 என்ன சொல்றாங்ன்னா ...
படம் :  கொக்கு பைரவி
இயற்றியவர் : ஜெய்லானி டீவீ
பாடியவர் : இதை யார் பாடறாங்களோ  அவங்களேதான்
இசை ;   இந்த மொக்கைக்கு அதான் குறை
  


நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே)  புரியவில்ல அதில்  உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை  இருந்தும்
தண்ணீர்  எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை இருந்தும்
தண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல

தண்ணீ இல்லாத நிலத்துக்கு ஏரின்னு பேரோ
நான் பாடும் பாட்டுக்கு வெரும் பாட்டு யாரோ
மழை இல்லாத ஊருக்கு வேடந்தாங்கல் பேரோ
நான் பாடும் பாட்டுக்கு எதிர் பாட்டு  யாரோ
வெயிலோட நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையான நானும்  கருப்பா கருத்து போனதப்பாரு
மழையும்  வந்தா  குட்டையும் நிரம்பும்
என் ஏரியாக்குள்ளையும் மீனும் வருமே கொஞ்சம் பொறு

நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல

வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
இந்த நிலை வருமுன்னு அப்போதே தெரிஞ்சிருந்தாலே
அமேசான் காட்டுக்கு  நானே பறந்திருப்பேனே
கால்  எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன
கால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன சொல்லுங்களேன்

நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே)  புரியவில்ல அதில்  உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம்  இருந்தும் குட்டை  இருந்தும்
மீன் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல

டிஸ்கி:  1      இந்த பாட்டு.. இது யார் மனதையும்  புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ்  ((வரலாறு முக்கியமில்லையா  அதான் ))

டிஸ்கி :2    பூமி சூடாவதை தடுக்க வீட்டுக்கொரு மரம் வளருங்க  .வருங்கால தலைமுறைக்கு நல்லது..((இப்படி செய்யாட்டி நான் இன்னும் இது மாதிரி நிறைய மொக்கை பாட்டா போடுவேன் ))

Saturday, August 28, 2010

இதுதான் காதலா--!!

115 என்ன சொல்றாங்ன்னா ...
         உன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே
         உன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே
        உன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி
        எனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே

         உன் ஆசை அதிர்வலையில் நான் மூழ்கித்தான் போனேனே
         செல்ல சினுங்கலில் தலை சுற்றி போனதடி
         வீனே எனை தேடித்தான் பார்கின்றேன் .கனவினிலே
        கிடைக்கிரதே எனை தவிர ஏன் ஆனேன் இப்படியானேன்

         காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும்
        மனம் கொண்ட மயக்கம் தடமாறலியே
         உன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே
        உன் கண்ணில் நீர் வழிகிறதோ என் நினைவாலே
       அந்த ஒவ்வொரு துளியாலும் என் இதயம் உருகுதே

 பெண்:    ஏனோ தெரியல சாரல் காற்றிலும் அனலாய் மாறுதே
       அனலாய் மாறுதே தேகம் அலைபோல் ஆனதே
       வீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா
       புயலாய் போகுதே வரும் காலமாவது வசந்தமாகாதோ.........

Wednesday, July 28, 2010

ஆசையில் ஓர் கவிதை

112 என்ன சொல்றாங்ன்னா ...
எண்ணிலடங்கா ஆசைகள்
எண்ணிக்கையில் (முக)பாவங்கள்
சொல்லெனா நேசங்கள் ஆழ்   மனதில்
தோன்றுதே..!! தோன்றுதே..!
சொல்ல வார்தைகள் தேடினேன்...........
தேடினேன்........ ஏனோ........ஏனோ..நான்

எத்தனை ஜென்மங்கள் காத்திருந்து
தேடிய பூ அது நீதானா ...... நீதானா
பார்கத்தான்        நினைத்தும்    நிஜம்
கூடலையே ..கூடலையே...நிழல் பார்த்தும் மனம்
அது ஆறலையே ஏனோ...ஏன்ன்ன்ன்

அலைகடலின் ஆழத்தில ஓடிடும்
நீரோட்டம் போல் என் ஆழ்   மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே

தேடிய பூவும் வாடிய மொட்டும் தன்னால் பூக்குதே
அது தன் வாசம் பரப்புதே கேள்விகள் கேள்விகள்
ஆயிரம் ஆயிரம் கோடிகளாகுதே
கேட்பார் ........... யாரோ ...... யாரோ..

இதய வாசலில் மின்மினிகளாய் வலம் வருதே....
பீரிட்டு   கிளம்பும்   பாசத்தாலே   வாழ்வே
திசை   மாறுமோ......   திசை மாறுமோ
ஆசை அறுபதாம் மோகம் முப்பதாம் கேள்விகள்
சிலருக்கே வாழும் உள்ளத்தில் தோன்னும்
பதில்கள் யாவும் புரியுமோ அவருக்கே


விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..



டிஸ்கி: கவிஞர் விருது வாங்கியும் இது வரை ஒன்னும் கிறுக்கலையேன்னு சொந்தமா கிறுக்கிய்து ..ஹும்..என்ன செய்ய யாரால காப்பாத்த முடியும்.. வேற வழியே இல்லை.. அப்புறம் யாரோ ஒருத்தர் ஸ்டோரி ரைட்டர் விருது குடுத்திருக்காங்க .இருங்க அதையும் ஒரு வழி பண்ணீடலாம் (( இனி இப்பிடி விருது குடுக்கிறதுக்கு முன்ன யோசிங்க மக்கள்ஸ்))