Saturday, February 25, 2012

காய் கறி ...??


    வாழ்க்கையில  எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற  ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே  இது குறைவு . நமக்கு எது தேவையோ  அது மட்டும் போதும் நினைக்கிற ஆட்களும் இருக்காங்க. இப்போ எதுக்கு இந்த  புலம்பல்ன்னு கேட்குறீங்களா  கீழே  இருப்பதை படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.
ஒன் கப் காஃபி பிளீஸ் 
    ஆரோக்கிய வாழ்வுக்கு  சமைத்த உணவா ..?  சமைக்காத உணவான்னு பட்டி மன்றம் போட்டா கடைசியில தீர்ப்பு என்னவோ  பட்டினி கிடப்பதுதான்னு வரும்..அவ்வ்வ்வ்  
    கேரட்   :  இதுல பீட்டா கரோட்டின்  இதயத்துக்கு நல்லது ..புற்று நோய் வராது ..இப்பிடியே  நிறைய விஷயம் இருக்கு. பச்சையா சாப்பிட்டா பலன் அதிகமுன்னு ஒரு டாக்டர் சொல்றார்
           இதை பச்சையா சாப்பிட்டா இதோட தடித்த தோலில் இருக்கிற பீட்டா கரோட்டினை  நம்ம உடல் கால்வாசி மட்டுமே எடுக்கும் ..இதே சமைச்சு சாப்பிட்டா பாதி பலனும் கிடைக்குமுன்னு இன்னொரு டாக்டர் சொல்றார் ...
டேஞ்சர் என்னன்னு சொன்னா செடி வளர்வதுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்து இந்த பகுதிகள்ளதான் தேங்கும்.அதனால கேரட் சாப்பிட்டாதீங்கோ  ((இதை நான் மட்டுமே  சொல்ரேன் ஹி..ஹி.. ))
      காலி ஃபிளவர் :  நிறைய வெளி இடங்கள்ள ( பீச் ) பகோடா , பஜ்ஜி  இப்போ இதுலதான் செய்யுறாங்க . விலை குறைவு , வித்தியாசமான சுவை . இதை பச்சையா சாப்பிட முடியாது ஆனா சரியா கிளீனிங்க் செய்யலேன்னா என்ன ஆகும் ..? பாருங்க... இதோட பூ இடைவெளியில இருக்கிற நுண்ணிய  புழுக்கள்  நாம கழுவுற சுடு தண்ணியில கூட சாகிறதில்லையாம் .நிறைய வீட்டில பச்சைதண்ணீரிலதான் கழுவுறாங்கப்போலிருக்கு  அதுக்காக உப்பு கலந்த சுடுதண்ணீர் சில சமயம் பலன் தரும். ஆனா போகிற இடங்கள்ள இதே மாதிரி யாரும் செய்யுறாங்காளா..???  ஹோட்டலில் சாதாரண தண்ணீரில்தான் அலசுறாங்க .இதுல  10 சதம் கூட புழுக்கள் , அதோட பிசுபிசுப்பான திரவம் வெளியேறாது . இந்த உருண்டை பூச்சிச்சியை சாப்பிட்டா டாக்டர்களுக்கு நல்லது ..நமக்கு சில ஆயிரம் நஷ்டம் ஃபீஸுங்கிர பேரில   ஹா..ஹா..  :-)
 
     முட்டை :  பச்சையா சாப்பிட்டா   நல்லதுன்னு சில  டாக்டர் சொல்றாங்க .ஆனால் இன்னும் சிலரோ  அதிலுள்ள  ஒரு ஐட்டம் செரிக்காது ஆஃப் பாயிலா அடிங்கன்னு  சொல்றாங்க..  இதை படிச்சு  வயிறு எரிஞ்சா பச்சையாவே  சாப்பிடுங்க வயித்துல போயி ஆஃப் பாயிலாகிடும்  ஹி...ஹி... 
       ((வாழை பழத்தை கூட அப்படியே ((தோலை உரித்துதாங்க )) சாப்பிடாமல்  ஒரு சுடு தண்ணீரில்  வைத்து (கொதிக்க வைக்க கூடாது ) 2 நிமிடம் கழித்து சாப்பிட்டால் சளிப்பிடிக்காது .சின்ன குழநதைக்கு கூட தரலாம் ))       
       இப்போது உள்ள சூழ்நிலையில  பச்சை காய்கறிகளை கூட சலாட் செய்து சாப்பிடுவது  டேஞ்சர் ....காரணம் எல்லாமே  பூச்சி மருந்து கலவையினால் செஇ ,கிடி பழத்தை  பாதுகாக்கிறோம் என்ற போர்வையினால்  வளரும் போதும் , பேக்கிங்கிலும்  அடித்து வருவதால் என்னதான்  வாஷிங் பவுடர் ( இது மட்டும் கெமிக்கல்  இல்லையா )  போட்டு கழுவினாலும் 10 சதம் டேஞ்சர் ரசாயனம் நம்ம உடலுக்கு போவதை தடுக்க முடியாது .
யாரோ  இங்கே கேட்டங்களே  ஃபிரஷ் ஐட்டமா வருதுன்னு   அவ்வ்வ்  :-))
     நாளொன்னுக்கு  வரும் வித விதமான கேன்சர்  , வயிற்று வலி , தலைவலி , காய்ச்சல் ..எல்லாமே  இந்த கெமிகலால் வருவதுதான் . இதை தடுக்க ஒரே வழி . முடிந்த வரை  வீட்டிலேயே  , மாடியிலேயே  ஏதாவது சின்னதா ஒரு தோட்டம் போட்டு வளர்க்க வேண்டியதுதான் .
        ஒரு  தடவை  இதில்  ஆர்வம் வந்து விட்டால் விடவே மாட்டீங்க .இருக்கிற அண்டா , குண்டானில் எல்லாம் செடி வளார்க்க ஆரம்பிச்சிடுவீங்க .  

ஆ....இனி ஸ்வீட்டிலேயே  காலத்தை தள்ளவேண்டியதுதான்  போல  :-)

       இதை எல்லாம் படிச்சு போட்டு ஒரு வாரத்துல 2 கிலோ  எடை குறைந்ததுதான் மிச்சம் எனக்கு . எதை சாப்பிடுவது எதை சாப்பிடகூடாதுங்கிற டென்ஷனில் எதை பார்த்தாலும் (கனவில கூட மூட்டை பூச்சி  யானை சைஸில வருது  ) சந்தேகமாவே  வருது . ஒரு டாக்டர் சாப்பிடலாமுன்னு சொல்றார் .இன்னொரு டாக்டரோ  இப்ப்டி எல்லாம் சாபிட்டா ஆரோக்கியமில்லைங்கிறார் 
பூஸ் ......இன்று போல் என்றும் வாழ்க  :-)

       ஆனா என ஃபிரெண்ட் 4 கிலோ  எடை ஏத்திட்டான் .ஏண்டா ஏன்ன்ன்..இப்பிடின்னு கேட்டா  இது வஞ்ச்னை இல்லாத உடம்பு  அதான் இப்பிடி இருக்குன்னு சொல்றான் .   அவ்வ்வ்வ் 
     இனி ஆணியே  பிடுங்க வேனாமுன்னு இருக்கேன் அப்ப நீங்க ...????? 

121 என்ன சொல்றாங்ன்னா ...:

எம் அப்துல் காதர் said...

வந்தேனே அய்யா வந்தேனே! நானே தான் முதலில் வந்து மாட்டிக்கிட்டேனா. அவ்வவ்...

எம் அப்துல் காதர் said...

// வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு, இன்னும் சிலருக்கே இது குறைவு. நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும் நினைக்கிற ஆட்களும் இருக்காங்க. //

இதில் நீங்க எந்த ரகம் என்று உங்களுக்கு தெரியுமா???? க்கி..க்கி.. எப்பூடி இப்படியும் கேட்போமில்ல!!

எம் அப்துல் காதர் said...

ஆஹா,,,, மைதானத்துல யாருமில்ல, நல்லா அடிச்சி விளையாடலாம் போலிருக்கே!!!

எம் அப்துல் காதர் said...

ஆமா... இந்த மாதிரி சந்தேகத்தை எல்லாம் யார் உங்களுக்கு கனவில் வந்து சொல்றா?

எம் அப்துல் காதர் said...

// ஆனா என ஃபிரெண்ட் 4 கிலோ எடை ஏத்திட்டான். ஏண்டா ஏன்ன்ன்.. இப்பிடின்னு கேட்டா இது வஞ்ச்னை இல்லாத உடம்பு அதான் இப்பிடி இருக்குன்னு சொல்றான்.அவ்வ்வ்வ் //

ஹி.. ஹி.. என்னை சொல்லலை தானே! (நல்ல பிள்ளைளோ... என் செல்லம். அவ்வ்வ்வ்...:))

எம் அப்துல் காதர் said...

//ஆனா என ஃபிரெண்ட் 4 கிலோ எடை ஏத்திட்டான். ஏண்டா ஏன்ன்ன்.. இப்பிடின்னு கேட்டா இது வஞ்ச்னை இல்லாத உடம்பு அதான் இப்பிடி இருக்குன்னு சொல்றான். அவ்வ்வ்வ் //

இது யாரையோ குறிவச்சு தாக்குறமாதிரி இருக்கு. நான் 'தே...மே' என்று பார்த்துக்கிட்டிருப்பேனாம்.

எம் அப்துல் காதர் said...

//கேரட்:பச்சையா சாப்பிட்டா பலன் அதிகமுன்னு //

ச்சே... நான் அ தி மு க ன்னு படிச்சிட்டேன். அ தி மு க-ல எங்கே பச்சை வந்தது. நோ கர்ர்ர்ர்.. அவ்வ்வ்வ்..

எம் அப்துல் காதர் said...

வடைக்கு பதிலா இன்னிக்கு கேக்கா? அப்படியே லாவிக்கிட்டு போறேன். யார் வந்து கேட்டாலும் மீ நோ சொல்லிட்டேன்ன்னு சொல்லிடுங்கோ!! அப்புறம் ....நான் ஏதும் சொல்லலை...

எம் அப்துல் காதர் said...

ஏப்ரல் வாரதுக்கு முன்னமே இப்படி குழந்தையின் மேல் இங்கை ஊற்றி அழவிட்ட பூஸை நான்.... ஏதாவது சொல்லணுமே?? பாஸ் என்ன சொல்லலாம். மீ ஙே...

எம் அப்துல் காதர் said...

// நாம் மகிழ்வதைக் காட்டிலும், பிறரை மகிழ்விப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது. //

மார்ச் சம்பளத்தை இந்த பக்கம் அனுப்பி வச்ச்ச்.....அவ்வ்வ்வவ்....

கம்பவாரிசு அதிரா:) said...

பாட்ஷாக்குக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்..

வெளங்காதவன்™ said...

ஹா ஹா ஹா...

கம்பவாரிசு அதிரா:) said...

முதல்ல மேல இருந்தே வருவம், குண்டு முயலாருக்கு, குட்டிக் கொம்பியூட்டர் வாங்கிக் கொடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:).

டாக்டர்: கரட்டைப் பச்சையாக வாங்கிச் சாப்பிடுங்க, அதுதான் உடம்புக்கு நல்லது.

பேஷண்ட்: டாக்டர் எல்லாக் கடைகளிலும் தேடிட்டேன், காரட்...ஒரேஞ் கலரிலதான் கிடைக்குது, பச்சையாக் கிடைக்குதில்ல , நான் என்ன பண்ணலாம்?:))

கம்பவாரிசு அதிரா:) said...

நீங்க இப்பூடி வெருட்டிரீங்க, இங்கே வெள்ளைகள் என்னடான்னா... கரட், செலரி, ஹொலிபிளவர், இதைஎலாம் பச்சையாக கட் பண்ணி லஞ்சோடு கொண்டுவருவார்கள்.

இங்கத்தைய சூப்பர்மார்கட்டுகளில் வாங்கினால் புழு பூச்சி என்பது மருந்துக்கும் கிடையாது, அப்படி இருந்தால் சூப்பர்மார்கட்டில் திருப்பிக் கொடுத்திடுவார்கள்... பெயர் கெட்டிடக்கூடாதென்பதில் கவனமாக இருப்பார்கள் சூப்பமார்கட்காரர்.

ஆனா நீங்க சொல்லும் மருந்து.. உண்மைதான், சில பழங்களில் வெள்ளையாக இருக்கும் எப்படிக் கழுவினாலும் போகாதுதான்.

Asiya Omar said...

பீதியை எப்படி எல்லாம் கிளப்பலாம்னு தெரிஞ்சிகிட்டேன்.

கம்பவாரிசு அதிரா:) said...

இங்கு அரிசி, பருப்பிலிருந்து மரக்கறி பழங்கள் எல்லாமே பக்ட் பண்ணி வருகின்றன, இங்கத்தையவர்கள் கழுவாமல் அப்படியேதான் சமைப்பார்கள், ஏனெனில் அனைத்தும் கழுவியே வருகின்றன.

ஆனால் நம்மவர்கள் பழக்கதோஷம் கழுவித்தான் சமைக்கிறோம்...

கம்பவாரிசு அதிரா:) said...

//ஆ....இனி ஸ்வீட்டிலேயே காலத்தை தள்ளவேண்டியதுதான் போல :-)
//

ஸ்வீட் செய்யும்போது வியர்வை + மூக்கு.. etc, etc... அதில சேருமாமே? ஹா..ஹா..ஹா.. இனியும் ஆரும் சுவீட் சாப்பிடுவினமோ?:))... எங்கிட்டயேவா சுவீட்ல காலத்தைக் கழிக்கப்போகினமாம்:))....

பகோடா, மிக்ஸர், இப்பூடிச் சாப்பிடலாமில்ல:)).

கம்பவாரிசு அதிரா:) said...

அதுசரி பாட்ஷா எதுக்காம், பச்சைப் பூவுக்குப் பின்னால பெயிண்ட் அடிச்சு மறைஞ்சு திரிகிறார்?:)).. பாதுகாப்புக்காகவோ?:)) நான் மரூண் பூவுக்குச் சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).. சொந்தப்பூ ஏதும் போடலாமில்ல:))

ஹையோ... முறைப்புக்கு மட்டும் குறைச்சலில்ல:))

கம்பவாரிசு அதிரா:) said...

பூஸிடம் பெயிண்ட் ஊத்துப்பட்ட அண்ணா ஆரு?:)) எழும்பி ஓடலாமில்ல?:))... பூஸோ கொக்கோ .. அது பாவம் வீடு கிளீன் பண்ணுது, வெளில வீசுறது ஆட்களின் தலையில பட்டால்... அதுக்குப் பூஸ் என்ன பண்ணும்?:))))

கம்பவாரிசு அதிரா:) said...

//முட்டை : பச்சையா சாப்பிட்டா நல்லதுன்னு சில டாக்டர் சொல்றாங்க .ஆனால் இன்னும் சிலரோ அதிலுள்ள ஒரு ஐட்டம் செரிக்காது ஆஃப் பாயிலா அடிங்கன்னு சொல்றாங்க.. இதை படிச்சு வயிறு எரிஞ்சா பச்சையாவே சாப்பிடுங்க வயித்துல போயி ஆஃப் பாயிலாகிடும் ஹி...ஹி... ////


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

MANO நாஞ்சில் மனோ said...

முட்டை : பச்சையா சாப்பிட்டா நல்லதுன்னு சில டாக்டர் சொல்றாங்க .ஆனால் இன்னும் சிலரோ அதிலுள்ள ஒரு ஐட்டம் செரிக்காது ஆஃப் பாயிலா அடிங்கன்னு சொல்றாங்க.. இதை படிச்சு வயிறு எரிஞ்சா பச்சையாவே சாப்பிடுங்க வயித்துல போயி ஆஃப் பாயிலாகிடும் ஹி...ஹி... //

யோவ் அன்னைக்கு உம்ம நண்பன் முட்டையை புடுங்கி தின்னதுக்கு தாக்குதலா?

MANO நாஞ்சில் மனோ said...

முட்டை : பச்சையா சாப்பிட்டா நல்லதுன்னு சில டாக்டர் சொல்றாங்க .ஆனால் இன்னும் சிலரோ அதிலுள்ள ஒரு ஐட்டம் செரிக்காது ஆஃப் பாயிலா அடிங்கன்னு சொல்றாங்க.. இதை படிச்சு வயிறு எரிஞ்சா பச்சையாவே சாப்பிடுங்க வயித்துல போயி ஆஃப் பாயிலாகிடும் ஹி...ஹி... //

ஆமா என்னாது ஐயிட்டமா, ஜயிட்டமா பிரியலை ஸாரி புரியலை அவ்வ்வ்வ்வ்வ்...

Anonymous said...

சுபேரா சொல்லி இருக்கீங்க ..கலக்குங்க ....

Anonymous said...

எனக்கு இதை படிச்சதுக்கப்புறம் மீண்டும் athe ரொம்ப டவுட் டவுட்டா வருதே ஆரணி அக்கா

Anonymous said...

இனி ஆணியே பிடுங்க வேனாமுன்னு இருக்கேன் அப்ப நீங்க ...????? /////////////////////////


நான் இனிமேல் தான் ஆணிப் பிடுங்க ட்ரை பண்ணலாமுன்னு இருக்கேன் அண்ணா

Anonymous said...

kaaigari thalaippu வைத்து விட்டு ஆரஞ்சி மிட்டாய் படஹ்தை காமிச்சி emaatruringalaa ...

மீ studied from வெல் educated குரு ..என்னைலாம் ஏமாற்ற முடியாதாக்கும்

rajamelaiyur said...

நல்ல பயனுள்ள பதிவு

rajamelaiyur said...

இன்றய அதிர்ச்சி ...
விஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..

கம்பவாரிசு அதிரா:) said...

கண்டுபிடிச்சேன்... கண்டுபிடிச்சேன்... இப்பத்தானே கண்டுபிடிச்சேன்.. மூலையில ஒரு குட்டியாத் தெரியுதே:)) பெரிசாகினால் சே..சே.. என்னப்பா இது தடுமாறுதெனக்கு.. பெரிசா”க்”கினால்... வடிவாத் தெரியுதே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

சுண்டெலி/குட்டிஎலி/எலிக்குட்டி... + எக்குசட்டா:)) வாழ்த்து.... மியாவ்...மியாவ்..மியாவ்:))).

கம்பவாரிசு அதிரா:) said...

கலை என்ன சொல்றாருன்னா:
25/2/12 5:10 PM
kaaigari thalaippu வைத்து விட்டு ஆரஞ்சி மிட்டாய் படஹ்தை காமிச்சி emaatruringalaa ...

மீ studied from வெல் educated குரு ..என்னைலாம் ஏமாற்ற முடியாதாக்கு///

அது..அது...அது... அடிக்கடி குருவை “எங்கேயோ” போக வைக்கிறீங்க:)))

குறையொன்றுமில்லை. said...

பதிவுபத்தி ஏதானும் கருத்து சொல்லலாம்னு வந்தா இந்த அதிரா, கலை இவங்கல்லாரோட பின்னூட்டம் படிச்சுட்டு அப்படியே கீழ வந்தனா என்ன பதிவு படிச்சேன்னே மறந்துடுச்சு.

Anonymous said...

புலம்பல்ன்னு கேட்குறீங்களா கீழே இருப்பதை படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.//////////////////////////


இதை படிச்சதுக்கு அப்புறமும் அந்த டவுட் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சி அண்ணா

Angel said...

//மீ studied from வெல் educated குரு ..என்னைலாம் ஏமாற்ற முடியாதாக்கு///

அது..அது...அது... அடிக்கடி குருவை “எங்கேயோ” போக வைக்கிறீங்க:)))//


நாங்கள்லாம் பிசியா இருக்க நேரம்பார்த்து குருவும் சிஷ்யையும் அட்டகாசம் பண்றாங்க .

சாந்தி மாரியப்பன் said...

சாப்பாடுன்னு ஒன்னு தேவைப்படலைன்னா எவ்ளோ நல்லாருக்கும்?..

Angel said...

//ஆரோக்கிய வாழ்வுக்கு சமைத்த உணவா ..? சமைக்காத உணவான்னு பட்டி மன்றம் போட்டா கடைசியில தீர்ப்பு என்னவோ பட்டினி கிடப்பதுதான்னு //

குரு சிஷ்யை ரெண்டு பூசும் நல்லா கேட்டுக்கோங்க .உங்களுக்கு தான் ஜெய் சில்றார்

Angel said...

@athira
சுண்டெலி/குட்டிஎலி/எலிக்குட்டி... + எக்குசட்டா:)) வாழ்த்து.... மியாவ்...மியாவ்..மியாவ்:))).//

too late .
நாங்க எப்பவோ பி ஹெச் டி .செய்தாச்சு

Angel said...

//எதை சாப்பிடுவது எதை சாப்பிடகூடாதுங்கிற டென்ஷனில் எதை பார்த்தாலும் (கனவில கூட மூட்டை பூச்சி யானை சைஸில வருது ) சந்தேகமாவே வருது .//


சந்தேகமே வேணாம் ஜெய் .நான் மியாவ் சீனியர் தலையில் சப்பாத்தி கட்டையால் அடிச்சு சத்யம் செய்றேன் .இது பிரித்தானிய மற்றும் குட்டி பூசின் கூட்டு சதி

Angel said...

//இது பிரித்தானிய மற்றும் குட்டி பூசின் கூட்டு சதி//


//ஒரு சுடு தண்ணீரில் வைத்து (கொதிக்க வைக்க கூடாது )//

கொதிக்க வைச்சாதானே அது சுடுதண்ணி ???????????

Angel said...

ஆத்தாடி !!!!! படத்ல இருக்கிற பூஸ் வில்லங்கம் புடிச்சதா இருக்கும் போலிருக்கே !!!!. என்னமா ஒரு லுக்கு

Angel said...

//பதிவுபத்தி ஏதானும் கருத்து சொல்லலாம்னு வந்தா இந்த அதிரா, கலை இவங்கல்லாரோட பின்னூட்டம் படிச்சுட்டு அப்படியே கீழ வந்தனா என்ன பதிவு படிச்சேன்னே மறந்துடுச்சு.//


பார்த்தீங்களா ஜெய் நான் சொன்னது சரிதானே .இது பூஸ்களின் கூட்டு சதி

Angel said...

//athira patient :டாக்டர் எல்லாக் கடைகளிலும் தேடிட்டேன், காரட்...ஒரேஞ் கலரிலதான் கிடைக்குது, பச்சையாக் கிடைக்குதில்ல , நான் என்ன பண்ணலாம்?:))//


டாக்டர் :ஆங் .பச்சை பெய்ன்ட் அடிச்சு சாப்பிடுங்க

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்கிற மாதிரி நாமே காய்கறித் தோட்டம் போடுவது தான் சரியாய் இருக்கும்போலத் தெரிகிறது!!

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர் ...//வந்தேனே அய்யா வந்தேனே! நானே தான் முதலில் வந்து மாட்டிக்கிட்டேனா. அவ்வவ்...//

வாங்க பாஸ் வாங்க ..ஊரிலதான் கெரண்ட் இல்லையாம் அதனால நீங்கதன் ஃபஸ்டூஊஊஊ :-))

//இதில் நீங்க எந்த ரகம் என்று உங்களுக்கு தெரியுமா???? க்கி..க்கி.. எப்பூடி இப்படியும் கேட்போமில்ல!!//

உங்களுக்கு தெரியாத்தா என்ன ஹா..ஹா.. ((பணங்காட்டு நரியாச்சே பாஸ் ..இது மாதிரி கேள்விக்கு மாட்டிக்கோமா என்ன ஹி..ஹி...))

//ஆஹா,,,, மைதானத்துல யாருமில்ல, நல்லா அடிச்சி விளையாடலாம் போலிருக்கே!!!//

உங்களுக்கு இல்லாத உரிமையா ...குட்டி கரணம் கூட போடலாம் ஹா..ஹா.. :-))

//ஆமா... இந்த மாதிரி சந்தேகத்தை எல்லாம் யார் உங்களுக்கு கனவில் வந்து சொல்றா? //

அ...னு...அக்காதான் ஹி..ஹி..இப்பிடி எல்லாம் கேட்டா நாங்க உளறிடுவோமாக்கும் இந்த குசும்புதானே வேனங்கிறது :-)))))

//
ஹி.. ஹி.. என்னை சொல்லலை தானே! (நல்ல பிள்ளைளோ... என் செல்லம். அவ்வ்வ்வ்...:))//

ச்சே..ச்சே.. நீங்க 12 கிலோ அதிகம் உங்களை இந்த லிஸ்டில சேர்க்க முடியாதே :-))))

//இது யாரையோ குறிவச்சு தாக்குறமாதிரி இருக்கு. நான் 'தே...மே' என்று பார்த்துக்கிட்டிருப்பேனாம்.//

ஆஹா... வில்லங்கமான கேள்வியா இருக்கே அவ்வ்வ்:-))

//
ச்சே... நான் அ தி மு க ன்னு படிச்சிட்டேன். அ தி மு க-ல எங்கே பச்சை வந்தது. நோ கர்ர்ர்ர்.. அவ்வ்வ்வ்..//

ம்..கண்ணாடி போட வேண்டிய நேரம் வந்துடுச்சி ..மச்சி கிட்ட சொல்லிட வேண்டியதுதான் :-)))

//வடைக்கு பதிலா இன்னிக்கு கேக்கா? அப்படியே லாவிக்கிட்டு போறேன். யார் வந்து கேட்டாலும் மீ நோ சொல்லிட்டேன்ன்னு சொல்லிடுங்கோ!! அப்புறம் ....நான் ஏதும் சொல்லலை...//

சர்க்கரை ஆகாதுன்னு எங்கையோ கேட்ட குரலா இருக்கே பாஸ் ..நானு எதுவும் சொல்லலை ஹி..ஹி.. ((ஹை..யா கோர்த்து விட்டாச்சு )

//ஏப்ரல் வாரதுக்கு முன்னமே இப்படி குழந்தையின் மேல் இங்கை ஊற்றி அழவிட்ட பூஸை நான்.... ஏதாவது சொல்லணுமே?? பாஸ் என்ன சொல்லலாம். மீ ஙே... //

நான் ஏதாவது சொன்னா என்னைய பிறாண்டி போடும் அவ்வ்வ் :-)))

//மார்ச் சம்பளத்தை இந்த பக்கம் அனுப்பி வச்ச்ச்.....அவ்வ்வ்வவ்....//

அப்படியே உங்க சம்பளத்தையும் சேர்த்தே என் வீட்டுக்கு அனுப்புறேன்னு சொல்றீங்க ...உங்க தங்க குணம் யாருக்கு வரும் பாஸ் ..இன்னும் ஒரு நாள் பொருங்க 26க்கு கிடைச்சுடும் ஹி..ஹி... :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//பாட்ஷாக்குக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்..//

வாங்க அதிஸ் வாங்க ...!! .கர்ர்ர் வேனாம் ஒரு கடியை போடுங்க . அப்போதான் அந்த 9வது கமெண்டுக்கு பழி வாங்கிய மாதிரி இருக்கும் (யப்பா கோர்த்து விட்டச்சு ..இனி கடிக்கிறதை வேடிககி பார்கக் வேண்டியதுதான் )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வெளங்காதவன் ---//ஹா ஹா ஹா.../

வாங்க ..வாங்க..!! இந்த சிரிப்பு எப்போதும் கூட வர வாழ்த்துக்கள் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//முதல்ல மேல இருந்தே வருவம், குண்டு முயலாருக்கு, குட்டிக் கொம்பியூட்டர் வாங்கிக் கொடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:). //


வாங்க..வாங்க ..என்னது மொப்பிக்கு வேனாமா ..ஓகே ஆஃப் ரேட்டில தள்ளிட வேண்டியதுதான் .நான் கம்ப்யூவை சொன்னேன் ஹா..ஹா..

//டாக்டர்: கரட்டைப் பச்சையாக வாங்கிச் சாப்பிடுங்க, அதுதான் உடம்புக்கு நல்லது.

பேஷண்ட்: டாக்டர் எல்லாக் கடைகளிலும் தேடிட்டேன், காரட்...ஒரேஞ் கலரிலதான் கிடைக்குது, பச்சையாக் கிடைக்குதில்ல , நான் என்ன பண்ணலாம்?:)) //

டாக்டர் :ஒன்னுமில்ல பச்சை மிளகாயை அரைச்சு அதை தொட்டு சாப்பிடலாம் ஹா..ஹா.. எங்கிட்டேயேவா...விட்டுட்டுவோமா :-)))
//நீங்க இப்பூடி வெருட்டிரீங்க, இங்கே வெள்ளைகள் என்னடான்னா... கரட், செலரி, ஹொலிபிளவர், இதைஎலாம் பச்சையாக கட் பண்ணி லஞ்சோடு கொண்டுவருவார்கள்.

இங்கத்தைய சூப்பர்மார்கட்டுகளில் வாங்கினால் புழு பூச்சி என்பது மருந்துக்கும் கிடையாது, அப்படி இருந்தால் சூப்பர்மார்கட்டில் திருப்பிக் கொடுத்திடுவார்கள்... பெயர் கெட்டிடக்கூடாதென்பதில் கவனமாக இருப்பார்கள் சூப்பமார்கட்காரர்.

ஆனா நீங்க சொல்லும் மருந்து.. உண்மைதான், சில பழங்களில் வெள்ளையாக இருக்கும் எப்படிக் கழுவினாலும் போகாதுதான்.//

உங்களுக்காக ஒரு படம் இப்போது இனைத்திருக்கேன் பாருங்க :-)). பேக் செய்து வருவது விலை ஏற்றத்துக்காக .நமது ஆரோக்கியத்துக்காக இல்லை . சாதா கடையில் ஒரு பொருளை வாங்குவதுக்கும் , ஹைபர் மார்க்கெட்டுகளில் வாங்குவதுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு ((பாட்சாவே ஒரு பதிவுல சொன்னாரே ))

அந்த பேக்கிங்கில் நைட்ரஜன் கேஸ் உள்ளே இருக்கும் , பூச்சி வராமல் இருக்க :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Asiya Omar --//பீதியை எப்படி எல்லாம் கிளப்பலாம்னு தெரிஞ்சிகிட்டேன்.//

வாங்க சகோஸ் வாங்க ..!! ஹி..ஹி.. நீங்க என்னைய சொல்லலைதானே :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//இங்கு அரிசி, பருப்பிலிருந்து மரக்கறி பழங்கள் எல்லாமே பக்ட் பண்ணி வருகின்றன, இங்கத்தையவர்கள் கழுவாமல் அப்படியேதான் சமைப்பார்கள், ஏனெனில் அனைத்தும் கழுவியே வருகின்றன.//

வாங்க ...வாங்க..!!அவங்க எல்லாம் முழு சேம்பேரி ஆட்கள் அப்படித்தான் பழக்கப்பட்டு இருக்காங்க :-)) ஆனால் நாம் அப்படியா..?? நமது நாட்டு கல்ச்சர் அபப்டி இல்லையே :-))

//ஆனால் நம்மவர்கள் பழக்கதோஷம் கழுவித்தான் சமைக்கிறோம்...//

கூழானாலும் குளித்து குடி கந்தையானாலும் கசக்கி கட்டுன்னு வாழும் பரம்பரையாச்சே :-))

//ஸ்வீட் செய்யும்போது வியர்வை + மூக்கு.. etc, etc... அதில சேருமாமே? ஹா..ஹா..ஹா.. இனியும் ஆரும் சுவீட் சாப்பிடுவினமோ?:))... எங்கிட்டயேவா சுவீட்ல காலத்தைக் கழிக்கப்போகினமாம்:)).... //

இது உங்களுக்கே நியாயமா படுதா ...ஏதோ இது மட்டுமாவது சாப்பிடலாமுன்னு நினைச்சா அவ்வ்வ்

//பகோடா, மிக்ஸர், இப்பூடிச் சாப்பிடலாமில்ல //

ஏற்கனவே நானே பதிவிட்டுருக்கிரேன் இப்போ எனக்கேவா..?? ஹா..ஹா.. :-)))))))))))))

//அதுசரி பாட்ஷா எதுக்காம், பச்சைப் பூவுக்குப் பின்னால பெயிண்ட் அடிச்சு மறைஞ்சு திரிகிறார்?:)).. பாதுகாப்புக்காகவோ?:)) நான் மரூண் பூவுக்குச் சொன்னேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).. சொந்தப்பூ ஏதும் போடலாமில்ல:)) //

பதிவு போடவே நேரமில்லை ..கிடைக்குற நேரத்துல காபி பேஸ்டுக்கே நைட் மணி ஒன்னுபோல ஆயிடுது .இதுல புதுசு தேட முடியுமா ...!!!

///ஹையோ... முறைப்புக்கு மட்டும் குறைச்சலில்ல:)) //

ஆ...டெலிபதியில பார்த்திட்டீங்களா..அவ்வ்வ்வ் மீ எஸ்ஸ்ஸ் :-)))

//பூஸிடம் பெயிண்ட் ஊத்துப்பட்ட அண்ணா ஆரு?:)) எழும்பி ஓடலாமில்ல?:))... பூஸோ கொக்கோ .. அது பாவம் வீடு கிளீன் பண்ணுது, வெளில வீசுறது ஆட்களின் தலையில பட்டால்... அதுக்குப் பூஸ் என்ன பண்ணும்?:))))//

குட்டி பூஸ் வீடு கிளீன் பண்னுதா ..எனக்கு எனன்மோ டப்பாவை விட்டு அடிக்கிற மாதிரிதான் தோனுது ஹி..ஹி... :-))
////முட்டை : பச்சையா சாப்பிட்டா நல்லதுன்னு சில டாக்டர் சொல்றாங்க .ஆனால் இன்னும் சிலரோ அதிலுள்ள ஒரு ஐட்டம் செரிக்காது ஆஃப் பாயிலா அடிங்கன்னு சொல்றாங்க.. இதை படிச்சு வயிறு எரிஞ்சா பச்சையாவே சாப்பிடுங்க வயித்துல போயி ஆஃப் பாயிலாகிடும் ஹி...ஹி... ////


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) //

ஆஹா... ஓவரா கடிபடுதே...நான் பல்லை சொன்னேன் ..எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப் .)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கம்பவாரிசு அதிரா:) said...

//
Lakshmi என்ன சொல்றாருன்னா:
25/2/12 7:52 PM
பதிவுபத்தி ஏதானும் கருத்து சொல்லலாம்னு வந்தா இந்த அதிரா, கலை இவங்கல்லாரோட பின்னூட்டம் படிச்சுட்டு அப்படியே கீழ வந்தனா என்ன பதிவு படிச்சேன்னே மறந்துடுச்சு.///

ஆஅ.... அதுதானே தேவை.. வெற்றி வெற்றி:)) எங்கே என் சிஷ்யை... சொல்லிக் கொடுத்ததை அப்பூடியே ஃபலோ பண்ணுறா, இம்முறை எப்பாடு பட்டாவது அவவுக்கு குட்டி விரல்ல வைர மோதிரம் போட்டிடோணும்:))).

கம்பவாரிசு அதிரா:) said...

//பூஸ் ......இன்று போல் என்றும் வாழ்க :-)//

அச்சச்சோ மறைபொருளா தெரிஞ்சது அம்பலத்துக்கு வந்திட்டுதே....:)) என்னாது நாடெல்லாம் புகைப் புகையாப் போகுது:))).. முருகா!!!! 2 நளைக்கு ஐஸ் மழை கொட்ட வையப்பா:))... வள்ளிக்கு சங்கிலியில் ஓம் பெண்டனும் சேர்ட்த்ஹுப் போடுவேன் சாமி:))

கம்பவாரிசு அதிரா:) said...

//
angelin என்ன சொல்றாருன்னா:
25/2/12 8:36 PM
//எதை சாப்பிடுவது எதை சாப்பிடகூடாதுங்கிற டென்ஷனில் எதை பார்த்தாலும் (கனவில கூட மூட்டை பூச்சி யானை சைஸில வருது ) சந்தேகமாவே வருது .//


சந்தேகமே வேணாம் ஜெய் .நான் மியாவ் சீனியர் தலையில் சப்பாத்தி கட்டையால் அடிச்சு சத்யம் செய்றேன் .இது பிரித்தானிய மற்றும் குட்டி பூசின் கூட்டு சதி///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அடிக்கிறதுதான் அடிக்கிறீங்க எதுக்கு சப்பாத்திக்கட்டை?:) பிறகு நாளைக்கு சப்பாத்தி செய்ய எங்கின போறதாம் கட்டைக்கு?:))... ஒரு செவ்வந்திப்பூ, இல்ல பிங் ரோசாப்பூ எடுத்து அடிக்கலாமில்ல:))

கம்பவாரிசு அதிரா:) said...

//angelin என்ன சொல்றாருன்னா:
25/2/12 8:42 PM
//இது பிரித்தானிய மற்றும் குட்டி பூசின் கூட்டு சதி//


//ஒரு சுடு தண்ணீரில் வைத்து (கொதிக்க வைக்க கூடாது )//

கொதிக்க வைச்சாதானே அது சுடுதண்ணி ??????????////

இது இது..இது குவெஸ்ஸன்:)))... இப்போ ஜெய் தலைகீழா ஆசனம் செய்கிறார் இதுக்கு என்ன பதில் சொல்லலாம் என:)) எங்கிட்டயேவா:)).. பிஎச்டி முடிச்சும், எனக்கு வராத கேள்வி... ச்ச்ச்சும்மா இருந்த அஞ்சுவுக்கு வந்திட்டுதே?:)).... ஹையோ சப்பாத்திக் கட்டையோட துரத்துறா... கடவுளே.... இண்டைக்குப் பார்த்து ஹெனா போட்டு தோய்ஞ்ச தலை... எப்பூடியாவது காப்பாத்திடோணும்:)).. நான் தலையைச் சொன்னேன்... அதுக்குள்ள தானே விலைமதிப்பற்ற கிட்னி இருக்கு:)).. இப்போ அதுக்குத்தான் குறி வைக்கிறாங்க எல்லாரும்:))

கம்பவாரிசு அதிரா:) said...

//angelin என்ன சொல்றாருன்னா:
25/2/12 8:44 PM
ஆத்தாடி !!!!! படத்ல இருக்கிற பூஸ் வில்லங்கம் புடிச்சதா இருக்கும் போலிருக்கே !!!!. என்னமா ஒரு லுக்கு///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு அப்பாவிப் புஸைப் பார்த்து இப்பூடிச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..... பாருங்க ஜெய்... கெதியா வந்து அந்த ”டெரர்” சவுண்டை விடுங்க அஞ்சு பயந்திடுவா:))

கம்பவாரிசு அதிரா:) said...

////ஆஹா,,,, மைதானத்துல யாருமில்ல, நல்லா அடிச்சி விளையாடலாம் போலிருக்கே!!!//

உங்களுக்கு இல்லாத உரிமையா ...குட்டி கரணம் கூட போடலாம் ஹா..ஹா.. :-))//

என்னாது பாட்ஷாட குட்டி, கரணம் போடுமா? ஒண்ணுமே பிரியல்லியே:))... ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)))..

கம்பவாரிசு அதிரா:) said...

//உங்களுக்காக ஒரு படம் இப்போது இனைத்திருக்கேன் பாருங்க :-)). பேக் செய்து வருவது விலை ஏற்றத்துக்காக .நமது ஆரோக்கியத்துக்காக இல்லை . சாதா கடையில் ஒரு பொருளை வாங்குவதுக்கும் , ஹைபர் மார்க்கெட்டுகளில் வாங்குவதுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு ((பாட்சாவே ஒரு பதிவுல சொன்னாரே ))////


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பார்த்தனே:)) குட்டித் தவளையார்:)).. சூப்பர்மார்கட்டை கோர்ட்டுக்குக் கூப்பிட்டிவிடுவார்கள் இங்கு.

Jaleela Kamal said...

mm எனக்கு பிடிச்ச புளிப்பு மிட்டாய்,
அப்பரம் வந்து பதிவை படிக்கிறேன்

குறையொன்றுமில்லை. said...

ஆஅ.... அதுதானே தேவை.. வெற்றி வெற்றி:)) எங்கே என் சிஷ்யை... சொல்லிக் கொடுத்ததை அப்பூடியே ஃபலோ பண்ணுறா, இம்முறை எப்பாடு பட்டாவது அவவுக்கு குட்டி விரல்ல வைர மோதிரம் போட்டிடோணும்:))).


ஆஹா வைரமோதிரமா எனக்கா எங்க? எங்க?

கம்பவாரிசு அதிரா:) said...

//Lakshmi என்ன சொல்றாருன்னா:
26/2/12 10:20 AM
ஆஅ.... அதுதானே தேவை.. வெற்றி வெற்றி:)) எங்கே என் சிஷ்யை... சொல்லிக் கொடுத்ததை அப்பூடியே ஃபலோ பண்ணுறா, இம்முறை எப்பாடு பட்டாவது அவவுக்கு குட்டி விரல்ல வைர மோதிரம் போட்டிடோணும்:))).


ஆஹா வைரமோதிரமா எனக்கா எங்க? எங்க?///

ஜெய்ய்ய் லக்ஸ்மி அக்காவைப் பாருங்க... இப்பத்தானே வெளில வாறா...:)) இப்பூடியே ஃபலோ பண்ணுங்க லக்ஸ்மி அக்கா... 2 விரலுக்கு வைர மோதகம்.... சே..தடுமாறுதெனக்கு மோதிரம்.. நான் போடுறேன், ஆனா அதற்கான பணம், ஜெய்யின் அடுத்த மாதச் சம்பளத்தில வாங்கிடலாம்:)).

Anonymous said...

Lakshmi என்ன சொல்றாருன்னா:
25/2/12 7:52 PM
பதிவுபத்தி ஏதானும் கருத்து சொல்லலாம்னு வந்தா இந்த அதிரா, கலை இவங்கல்லாரோட பின்னூட்டம் படிச்சுட்டு அப்படியே கீழ வந்தனா என்ன பதிவு படிச்சேன்னே மறந்துடுச்சு.///

ஆஅ.... அதுதானே தேவை.. வெற்றி வெற்றி:)) எங்கே என் சிஷ்யை... சொல்லிக் கொடுத்ததை அப்பூடியே ஃபலோ பண்ணுறா, இம்முறை எப்பாடு பட்டாவது அவவுக்கு குட்டி விரல்ல வைர மோதிரம் போட்டிடோணும்:))).////////////////

மீ காட் ..........வைர மோதிரமா ...எனக்கே எனக்கா .......kutti push மியாவ் மியாவ் மியாவ் ......


ஆத்தாடி எங்க குரு எனக்கு அப்புடியே ஜெய் அண்ணா செலவுல 10 கிலோ தங்கமும் வாங்கி கொடுப்பாக போல ....

Anonymous said...

Jaleela Kamal என்ன சொல்றாருன்னா:
26/2/12 7:36 AM
mm எனக்கு பிடிச்ச புளிப்பு மிட்டாய்,
அப்பரம் வந்து பதிவை படிக்கிறேன்/////////////////


ஜெல் அக்கா இது ஆரஞ்சு மிடாஏய் பதிவு இல்லை ...அந்த அண்ணா உங்களை எமற்றுராங்க////

Anonymous said...

/angelin என்ன சொல்றாருன்னா:
25/2/12 8:44 PM
ஆத்தாடி !!!!! படத்ல இருக்கிற பூஸ் வில்லங்கம் புடிச்சதா இருக்கும் போலிருக்கே !!!!. என்னமா ஒரு லுக்கு///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு அப்பாவிப் புஸைப் பார்த்து இப்பூடிச் சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..... பாருங்க ஜெய்... கெதியா வந்து அந்த ”டெரர்” சவுண்டை விடுங்க அஞ்சு பயந்திடுவா:))//////////////////////////////

meeeeeeeeeeeeeeeeeeyav /////meeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeyav .................

அஞ்சு அக்கா புஷ் பத்தி தெரியாம வார்த்தை விடுறிங்கள் ....இதுக்காக நீங்கள் பீல் பண்ணவேண்டிய காலம் தொலைவில் இல்லை அப்புடி எண்டு குட்டி புஷ் சொல்லுது

Anonymous said...

//பதிவுபத்தி ஏதானும் கருத்து சொல்லலாம்னு வந்தா இந்த அதிரா, கலை இவங்கல்லாரோட பின்னூட்டம் படிச்சுட்டு அப்படியே கீழ வந்தனா என்ன பதிவு படிச்சேன்னே மறந்துடுச்சு.////////////


பக்கம் பக்கமா பதிவு சொல்லுறது வெற்றி இல்லை ஜெய் அண்ணா...

மேட்டர் என்னன்னுகுடத் தெரியாம ரெண்டு வார்த்தை கமெண்ட்ஸ் போட்டு உங்க பதிவை திசைத் திருப்பி தினரடிக்கிறோம் பாருங்கோல் அங்க தான் இருக்கு எங்களது வெற்றி ....

மீ டீச்சிங் டு ஜெய் அண்ணா .....எல்லாப் புகழும் மீ குருவுக்கே !!!

Anonymous said...

angelin என்ன சொல்றாருன்னா:
25/2/12 8:31 PM
//ஆரோக்கிய வாழ்வுக்கு சமைத்த உணவா ..? சமைக்காத உணவான்னு பட்டி மன்றம் போட்டா கடைசியில தீர்ப்பு என்னவோ பட்டினி கிடப்பதுதான்னு //

குரு சிஷ்யை ரெண்டு பூசும் நல்லா கேட்டுக்கோங்க .உங்களுக்கு தான் ஜெய் சில்றார்////////////


அட என்னய்யா இங்க என்னய்யா ....நடக்குது ..நம்ம ஜெய் தம்பி பட்டிமன்றம் லாம் பேச ஆரம்பிசிட்டாயின்களா யா ??..
அப்போ அந்த பட்டிமன்றம் விளங்கவே விளங்காது யா ...அப்புடின்னு குட்டி புஷ் கிட்ட சொன்னது சாலமன் பாப்பையாவோட சித்தப்பா பையன் ...

பாச மலர் / Paasa Malar said...

நகைச்சுவை பட நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க.....

டாக்டர்ஸ் மட்டுமில்ல..உணவு விஷயத்துல ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு சொல்ல...கடைக்குப் போனா எதை வாங்குறதுன்னு தெரியாம குழம்பி மண்டை காஞ்சு....

கடைசில நாக்கு ருசிக்கே ஓட் போடுவோம் நிறைய பேர்..

enrenrum16 said...

நான் என்ன சொல்ல வர்றேன்னா .... என்னது... ஆ.... நாம வாங்கிற பாக்கெட்டில் ஏதாவது தவளை கிவளை இருந்தால் அதை அப்படியே எடுத்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து பிஸினஸ் பண்ணலாம்... பக்கத்துலயே இருந்தாங்கன்னா அவங்களுக்கு அத அன்பளிப்பா கொடுத்துடலாம். மற்றபடி முட்டை சிக்கன் என்று எல்லாத்தையும் நல்லா ஃபுல் குக் செய்து சாப்பிட வேண்டியதுதான்... வேற வழி?

ஸாதிகா said...

இப்படியே சொல்லி பயமுறுத்தினால் எப்படி?

ஸாதிகா said...

ஜெய்லானி கடைசி படம் இந்த முறை ஊர் போய் இருக்கும் பொழுது உங்கள் சம்சாரம் செய்து வைத்த விருந்தா?

Anonymous said...

//இதை எல்லாம் படிச்சு போட்டு ஒரு வாரத்துல 2 கிலோ எடை குறைந்ததுதான் மிச்சம் எனக்கு //



டைஎட் இல்லாம ஜிமுக்கு போகாம எளிய முறையில் உடல் இளைப்பது எப்படி ன்னு ஒரு புக் எழுதுங்களேன் :))

Anonymous said...

//இப்போது உள்ள சூழ்நிலையில பச்சை காய்கறிகளை கூட சலாட் செய்து சாப்பிடுவது டேஞ்சர் //



உங்க சாலட் தவளைய பார்த்த பிறகு சாலட் ஐயோ இப்படி என் வயத்துல அடிச்சிட்டீங்களே :)) நல்லாஆஅ இருங்க

Anonymous said...

//வடைக்கு பதிலா இன்னிக்கு கேக்கா? அப்படியே லாவிக்கிட்டு போறேன். யார் வந்து கேட்டாலும் மீ நோ சொல்லிட்டேன்ன்னு சொல்லிடுங்கோ!! //



என்னா தைரியம் பூஸ் பாவம் :))

Anonymous said...

கடைசி படம் பூசொட பிறந்த நாள் வாழ்த்து சூப்பர். அடுத்த வருஷம் மேள தாளத்தோட கொண்டாடலாம் ஓகே

Anonymous said...

சந்தேகமாவே வருது .//


சந்தேகமே வேணாம் ஜெய் .நான் மியாவ் சீனியர் தலையில் சப்பாத்தி கட்டையால் அடிச்சு சத்யம் செய்றேன் .இது பிரித்தானிய மற்றும் குட்டி பூசின் கூட்டு சதி//



அஞ்சு நான் பூரி கட்டையால சின்ன பூஸின் தலையில அடிச்சு :)) உங்க கூட ஒத்துக்கறேன் :))

என் கிட்ட ரெண்டு பூரி சப்பாத்தி கட்டை இருக்கு அதனால பெரிய பூஸ் டோன்ட் வொர்ரி :))

Anonymous said...

//மீ டீச்சிங் டு ஜெய் அண்ணா .....எல்லாப் புகழும் மீ குருவுக்கே !!!//



ஜெய் இன்னும்ம்ம்ம் பொயிங்க மாட்டேங்கறீங்களே ரெண்டு பூஸ் வால்ச்ச்சச்ச்ச்ஸ் கட் .......

கம்பவாரிசு அதிரா:) said...

//En Samaiyal என்ன சொல்றாருன்னா:
27/2/12 4:26 PM
கடைசி படம் பூசொட பிறந்த நாள் வாழ்த்து சூப்பர். அடுத்த வருஷம் மேள தாளத்தோட கொண்டாடலாம் ஓகே//

இந்த வருடம் முடிஞ்சு போச்சுதென்ற தைரியத்தில, அதுவும்.. டிஷம்பர் உடன்... எல்லாமே:) முடிந்திடும் எனும் தைரியத்தோடும், உஷாராக சவுண்டு விட்டிட்டுப் போயிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

பத்மா said...

உங்களுக்கு ஒரு விருதை பகிர்கிறேன் ...பெற்றுக் கொள்ளவும்

அம்பலத்தார் said...

//ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))//
தூங்கப்போற நேரமாக தூக்க கலக்கத்தில நல்லகாலம் உங்களோட அந்த வாசகத்தை படிக்கலையே. உங்க சாபத்துக்கு நன்றி தூக்கத்தில கண்ணு தெரிஞ்சா அப்புறம் நிம்மதியாக தூங்கமுடியாதே. Good night

mohamedali jinnah said...

இத்தனை 'கமென்ட்' பார்த்து பிரமித்து இந்த அருமையான கட்டுரையைப் கண்டு ஒன்றுமே எழுத முடியாமல் திகைத்து நிற்கின்றேன்

mohamedali jinnah said...

ஜெய்லானி அண்ணன் அவர்களுக்கு எல்லோரும் புலம்புவது நாம் அறிவோம்.மின்சாரம் என்ன விதி விலக்கா! அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்படும் காரணமாக மின்சாரத்தையே நாம் சாடுகின்றோம் .அம்பு எய்தவனை விடுத்து அம்பை சாடுவது ஏன்! தங்கள் அன்பான வருகையும் அருமையான விமர்சனமும் மகிழ்விக்கின்றது .

punitha said...

//பதிவுபத்தி ஏதானும் கருத்து சொல்லலாம் (கண்ணை காப்பாத்திக்கலாம்)னு வந்தா இந்த அதிரா, கலை இவங்கல்லாரோட பின்னூட்டம் படிச்சுட்டு அப்படியே கீழ வந்தனா என்ன பதிவு படிச்சேன்னே மறந்துடுச்சு. // அதுவேதான் லக்ஷ்மி அக்கா என் நிலமையும்.

வல்லாரை பிடுங்கிச் சாப்பிட்டுட்டு வாறன் பொறுங்கோ.

punitha said...

மொத்தத்துல... வீட்டுத்தோட்டம் போடச் சொல்றீங்க.
சரி, ஆரம்பிக்கிறேன். நடுவுல ஏதாச்சும் டவுட்டு வந்தா க்ளியர் பண்ணிவைப்பீங்கல்ல ஜெய்லானி சார்?

mohamedali jinnah said...

பெயர் வைத்த காரணம்! பெயர் சொன்னதால் அடி வாங்கியது!
nidurali at NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் - 2 hours ago
b
நாம் எத்தனையோ சரிதைகளும் ,சுயசரிதைகளும் படித்திருக்கின்றோம் .பண்டித ஜவகர்லால் நெஹ்ரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம் *(Glimpses of World History*) உலக வரலாறு(உலக** சரித்திரக் கடிதங்கள்) .மகாத்மா காந்தியின் சுயசரிதை,பேரறிஞர் அண்ணா எழுதிய** உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள், கலைஞர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி மற்றும் கணக்கிலடங்காதவைகள் இருக்கின்றன . நமக்குள் எத்தனை உயர்ந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதில் நடந்தவைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது நமக்கு மன நிறைவு உண்டாகும் மற்றும் அதனை மற்றவர்கள் படித்தும் பயனும் அடையலாம். ஒவ்வொருக்குள்ளும் ஓர் சரித்திரம் புதைந்து கிடக்கி... more »
new address is http://www.nidurseasons.com/. Since it takes time for this new address to be available all over the Internet, you can still get to it at http://nidurseasons.blogspot.com.

Your new address should work for everyone after at most 3 days. At that time we will redirect your readers from your old address to the new one.

Vijiskitchencreations said...

Nice information.

எம் அப்துல் காதர் said...

why change old template na??:-)

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

:) :-) :-))

mohamedali jinnah said...

மருந்துடன் கலந்த தேன் .இரண்டுமே நன்மைக்காக. நகைசுவையுடன் தந்த அருமையான கருத்துகள். இரண்டுமே நன்மை விளைவிக்கும் . நல்ல நட்பு உங்கள் அறிவின் ஆற்றலால் கிடைத்தமைக்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்கின்றேன்

Flavour Studio Team said...

//ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))/// ஒரு பச்ச மண்ணை இப்புடியா மிரட்டி கமென்ட் வாங்குவிங்க :( :( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் கமென்ட் பண்ணி விட்டேன் :( :(

வலையுகம் said...

.சகோதரரே நலமா?

///நிறைய வீட்டில பச்சைதண்ணீரிலதான் கழுவுறாங்கப்போலிருக்கு அதுக்காக உப்பு கலந்த சுடுதண்ணீர் சில சமயம் பலன் தரும்.///

உண்மையில் இதனை படிக்கும் வரை பச்சதண்ணீயில் தான்....... ஆஹா உப்பு கலந்த சுடு தண்ணீயில்....

தகவலுக்கு பகிர்வுக்கு நன்றி

கம்பவாரிசு அதிரா:) said...

இங்கு வந்து ஒரு பெரீஈய பின்னூட்டம் போட்டுத் தேட வெளிக்கிட்டேன்:)... நல்லவேளை அதற்குள், “உள்ளுணர்வு” சொல்லியதாக்கும், கிரகத்தை விட்டு தரைக்கு வந்திட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இப்ப என்ன சாப்ப்டுறீங்க?


எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.

அன்புடன் மலிக்கா said...

///நிறைய வீட்டில பச்சைதண்ணீரிலதான் கழுவுறாங்கப்போலிருக்கு அதுக்காக உப்பு கலந்த சுடுதண்ணீர் சில சமயம் பலன் தரும்.///

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-))) அதனால வந்தோம்

நல்லாயிருக்கியல்லா நல்லாயிருங்க..

அம்பாளடியாள் said...

நீண்ட கால இடைவெளிக்குப் பின் வந்துவிட்டேனே!..
இப்ப பச்சையாய் சாப்பிடுவதா அவித்துச் சாப்பிடுவதா!!!...
இந்தப் பயம் இருந்தால் போதும் என் உடல் எடை தானாய்
குறைந்துவிடும் அவ்வ்வ்வ் ...........நன்றி டாக்டர் அம்மா
சந்தேகத்தை மேலும் கிளப்பி விட்டதற்கு ஹா .....ஹா .....ஹா ...

அம்பாளடியாள் said...

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))

அம்மாடியோ இவங்க பெரிய ராட்சசியாய்தான் இருக்கணும் ஆமா !.....ஹா .........ஹா ....ஹா ..........

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு(ஹி ஹி ஹி செம காமடில )
புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

Jafarullah Ismail said...

எதை சாப்பிடுவது எதை சாப்பிடகூடாதுங்கிற டென்ஷனில் எதை பார்த்தாலும் (கனவில கூட மூட்டை பூச்சி யானை சைஸில வருது ) சந்தேகமாவே வருது

இனிமெல் தூங்கும்போது கண்ணாடி போட்டுக்கிட்டு தூங்குங்க.அது மூட்டை பூச்சி இல்ல. உன்மையிலேயெ யானைதான்.... ஹி....ஹி....

Anonymous said...

அலோ அலோ ஆராவது இருக்கீகளா ...பச்சப் புள்ள தனியா வந்து இருக்கேன் ஆளில்லாத வீட்டுக்குள் ... .....

Anonymous said...

பயமா கிடக்கு ஆருமே இங்க இல்லையா ................

நிறைய ரோசாப்பூ லாம் வைத்து இருக்கீங்களே அக்கா ...ஆருக்கு கொடுக்கப் போரிங்கள்

Anonymous said...

இப்பம் எதுக்கு இங்க வந்து இருக்கேன் எண்டால் ஒரு பதிவை உங்களோடு பகிர்ந்துள்ளேன் ..

நேரமே இருக்கும் போது வாங்கிக் கொள்ளுங்கள் என் விருதை ...

Anonymous said...

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))///


நீங்க மட்டும் உங்க ப்லோக்கை வந்து தூசு தட்டம இருந்தீங்க எண்டா நீங்க தூங்கும் போது உங்க கண்ணுல ஆசிட் உத்திடுவேன் ஆமா ...

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

Angel said...

இனிய பெரு நாள் வாழ்த்துக்கள் jai

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!!

கம்பவாரிசு அதிரா:) said...

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் ஜெய். நோன்பை முடித்த பின்பாவது வெளில வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்!!!!.

பித்தனின் வாக்கு said...

eid mubarak jailani

Vijiskitchencreations said...

How are u Jai? What happened? Are u busy ?

Unknown said...

மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ

Unknown said...

NALLAAERUKKU

இராஜராஜேஸ்வரி said...

ஆரோக்கிய வாழ்வுக்கு சமைத்த உணவா ..? சமைக்காத உணவான்னு பட்டி மன்றம் போட்டா கடைசியில தீர்ப்பு என்னவோ பட்டினி கிடப்பதுதான்னு வரும்..

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரர் ஜெய்லானி!!

mohamedali jinnah said...

ஸ்வீட் அனுப்புங்கள் .நன்றாக உள்ளது

Anisha Yunus said...

ஜெய்லானி பாய்.... ஸலாம்...

நலமா??

Long Time.... We see... :))

பாய்... உங்க இப்போதைய பதிவுகள் மாதிரியே சின்னதிலும் விவரமா ஸைண்டிஸ்ட் கணக்காத்தான் இருந்தீங்களான்னு ஒரு டவுட்டு. அதனால ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்.... மறக்காம மறுக்காம ஏத்துக்கிட்டு எழுதிடுங்க ப்ளீஸ்.... ஜஸாக்கல்லாஹு க்ஹைர் பாய் :))

விவர்ம் இங்கே -- http://mydeartamilnadu.blogspot.com/2012/12/blog-post_10.html :))
வஸ் ஸலாம்.

அன்புடன் மலிக்கா said...

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))//

சொல்லி சொல்லி தூங்காமலும் கண்ணு தெரியாம போச்சி, ஆனா பதில்போடதான் ஆளில்லை

Vetirmagal said...

பல நாட்களுக்கு பிறகு , உங்கள் பதிவு பக்கம் வர முடிந்தது.

ஏனென்றால், நீங்கள் குறிப்பிட்டுள்ள, அத்தனை சந்தேகங்களும், என்னை அரித்து, நானே மாடியில் தோட்டம் போட ஆரம்பித்தேன்.

தோட்டம் பற்றி கவலைகளால் பதிவுகள் பார்க்க நேரமில்லை! அயம் த லூசர்!

நேரம் கிடைத்தால் , என் பதிவு பக்கம் வந்து, நான் வளர்த்த காய்கறிகளை பார்க்க முடியுமா.
நன்றி.

http://www.gardenerat60.wordpress.com/


Manoj Singh said...

Wishing you all the best of everything!

Load Junction, load matching Services, Find Truck Loads, Find Freight and Trucks

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

காஞ்சி முரளி said...

இனி ஆணியே பிடுங்க வேனாமுன்னு இருக்கேன் அப்ப நீங்க ...?????

Vignesh said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA coaching | ACCA Exam Coaching Classes | ACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA courses Chennai | ACCA Training institutes Chennai | ACCA Qualifications and Courses | Diploma in International Financial Reporting | Best ACCA training institutes | CBE Centres in Chennai | DIPIFR exam coaching center | ACCA Approved Learning Partners | Diploma in IFRS Chennai | ACCA Diploma in IFRS | ACCA Approved Learning Providers | ACCA Approved Learning Partner Programme | ACCA Coaching India

Vignesh said...

I would highly appreciate if you guide me through this.Thanks for the article…
Communication workshops
Spoken English Training
English Training Institutes in chennai
English Training Institutes in Bangalore
Spoken English Classes in Bangalore
Spoken English Coaching in Bangalore

Vignesh said...

Hii, This is Great Post !
Thanks for sharing with us!!!!
I would highly appreciate if you guide me through this.
Thanks for the article…
Best Digital Marketing Agency in Chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Brand makers in chennai
Expert logo designers of chennai
Best seo analytics in chennai
leading digital marketing agencies in chennai
Best SEO Services in Chennai

Aditi Gupta said...

Hey, I like this and its helpful for me and i appreciate your work. Thanks for sharing us. Agra Same Day Tour Package

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))