Wednesday, March 24, 2010

என் பழைய பதிவும் புதிய இன்றைய கதையும்

என் அனுபவக்கதை இதில் கிளிக் கவும்

விருதுநகர் : விருதுநகரில் தந்தையின் தவறால், 'லாக்' ஆன புதிய ஐகான் காரில் சிக்கிய மூன்று வயது குழந்தைஐஸ்வர்யா, உயிருக்கு போராடியது. அரை மணிநேர போராட்டத்திற்கு பின், கார் கண்ணாடியை உடைத்து குழந்தைமீட்கப்பட்டது. விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முருகேசன்(34). இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்திவருகிறார். நேற்று காலை 10 மணியளவில் போர்டு ஐகான் புதிய காரில் (டி.என்.67-6363), மூன்று வயது மகள்ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டார்.

கந்தபுரம் தெரு எதிரே மதுரை ரோட்டிலுள்ள ஸ்டாண்டில் காரை நிறுத்தினார். காரில் ஏ.சி., ஓடிக்கொண்டிருந்தது. இதனால் காரிலிருந்து சாவியை எடுக்க மறந்து, 'லாக்' பட்டனை அழுத்திவிட்டு கதவை பூட்டினார். அருகில் உள்ள டீகடைக்கு சென்றார். காரில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, கதவு மூடப்பட்டதும் பயந்து அழத் துவங்கியது. காரின் கண்ணாடியை தட்டி கதறியது. அருகில் இருந்தவர்கள் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர். பதறிப்போனஅவர், வேகமாக வந்தார். காருக்குள் குழந்தை அழுவதை கண்டு கார் கதவை திறக்க முயன்றார். கதவை திறக்கமுடியாமல் தவித்துப்போன அவருக்கு அப்போது தான் தனது தவறு புரிந்தது. காரைச் சுற்றிலும் கூட்டம் கூடியது.

கூட்டத்தைப் பார்த்ததும், காருக்குள் இருந்த குழந்தை மேலும் பயந்து அழுதது. கூட்டத்திலிருந்தவர்கள் அருகிலிருந்தமெக்கானிக் ஒருவரை அழைத்து வந்தனர் மெக்கானிக் வந்தும் கதவைத் திறக்க முடியவில்லை. பின்னர், முன்புறகதவின் கண்ணாடியை உடைத்து காலை 10.30 மணிக்கு குழந்தையை மீட்டனர். வெளியே வந்த குழந்தையைமுருகேசன் ஆவலோடு அரவணைத்துக்கொண்டு கண்ணீருடன் காரில் ஏறி சென்றார். அரை மணி நேரம் உயிருக்குபோராடிய குழந்தை மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி தினமலர்


மக்கள் எப்போதுதான் திருந்துவாங்களோ!!

35 என்ன சொல்றாங்ன்னா ...:

மசக்கவுண்டன் said...

மாங்கா மடையன்களெல்லாம் இப்ப போர்டு ஐகான் வச்சுருக்காங்க்களா? பரவாயில்லீங்களே, ஒலகம் ரொம்பத்தான் முன்னேறிட்டுதுங்க.

kavisiva said...

குழந்தையை தனியே விட்டுச் செல்வதே தவறு. இதில் இப்படி சாவியையும் உள்ளே வைத்து பூட்டினால்... எப்படியோ குழந்தையை பத்திரமாக மீட்டார்களே... சந்தோஷம்.

கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சில வீடுகளில் குழந்தையை உள்ளே வைத்துப் பூட்டிச் செல்லும் கொடுமையும் நடக்கிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

முப்பது நிமிடம் முயற்சி செய்து நேரத்தை செலவிட்டதற்கு பதில் முதலிலே கண்ணாடியை
உடைத்திருக்கலாம், குழந்தையை விட கண்ணாடி முக்கியம் இல்லை.

ரோஸ்விக் said...

இந்த பதிவை பார்த்த உடனே... என்னடா இவனும் தினமலர் செய்தியைக் காப்பி பண்ணி போடுறவனான்னு பார்த்து கடுப்பானேன்...

உம்மோட பழைய பதிவ படிச்சதுக்கப்புறம் தான் தெரிந்தது... நீ எவ்வளவு பெரிய மூளைக்காரன்னு... சூப்பருயா.. கலக்கிட்டயா... :-)

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன் -//மாங்கா மடையன்களெல்லாம் இப்ப போர்டு ஐகான் வச்சுருக்காங்க்களா? பரவாயில்லீங்களே,//

பந்தா பண்ணும் அளவுக்கு அறிவு வேணாம். கரெக்டா சொன்னீங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva-// குழந்தையை தனியே விட்டுச் செல்வதே தவறு. இதில் இப்படி சாவியையும் உள்ளே வைத்து பூட்டினால்.//

என் அனுபவத்தை கிளிக் பண்ணிப்பாருங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா -//முப்பது நிமிடம் முயற்சி செய்து நேரத்தை செலவிட்டதற்கு பதில் முதலிலே கண்ணாடியை
உடைத்திருக்கலாம், குழந்தையை விட கண்ணாடி முக்கியம் இல்லை.//

வேற ஐடியாவும் இருக்கே!என் அனுபவத்தை கிளிக் பண்ணிப்பாருங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரோஸ்விக் --//இந்த பதிவை பார்த்த உடனே... என்னடா இவனும் தினமலர் செய்தியைக் காப்பி பண்ணி போடுறவனான்னு பார்த்து கடுப்பானேன்...//

ரோஸ்மாதிரி நட்பு வட்டாரம் இருக்கும்போது இப்படி செய்வேனா நான்..

//உம்மோட பழைய பதிவ படிச்சதுக்கப்புறம் தான் தெரிந்தது..//

தலைப்பே அதுதானே!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

http://www.tamilkudumbam.com/-mainmenu-183/--mainmenu-205/1677---------.html

அப்படியே இதையும் கொஞ்சம் படிங்க.

ஜெய்லானி said...

Jaleela said...

க்ளாப்ஸ் க்ளாப்ஸ் க்ளாப்ஸ்

சூப்பர்

மூன்று நான்கு பாஷைகளில் சொன்னதின் அர்த்தம் இதுதான்.மதராஸிக்கு மூளை இருக்கு.. ஹா ஹா
நானும் அன்று ந‌ட‌ந்த‌தை அப்ப‌டியே ஓட‌ விட்டு ப‌டித்தேன்.

பேந்த பேந்த மத்த பாக்கிஸ்தானிகள் போல நிற்காமல் உடனே சார்ஜ் எடுத்தீங்க பாருங்க அங்க நிற்கிறீங்க .....நீங்க

ஜெய்லானி said...

@@@Jaleela said...

http://www.tamilkudumbam.com/-mainmenu-183/--mainmenu-205/1677---------.html
அப்படியே இதையும் கொஞ்சம் படிங்க.//

இதுக்கு பதில்
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_14.html ல் இருக்கே! ஆல் இன் ஆல்.

ஹுஸைனம்மா said...

எனக்கு ரொம்ப ஆச்சரியம் என்னான்னா, மூணு வயசுக் குழந்தைக்குக் கார்க்கதவைத் திறக்கத் தெரியலங்கிறதுதான்!! இப்பல்லாம் ஒண்ணு, ஒண்ணரை வயசுக் குழந்தைங்களுக்கே கார், மொபைல், ரிமோட்கள பெரியவங்களவிட நல்லா விவரமாத் தெரிஞ்சு வச்சிருக்காங்க.

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா --நீங்க புத்திசாலிங்றத நிருபிச்சிட்டீங்க!! நா பார்த்து ஒன்னோ ஒன்றரை வயசோ தான் ஆனா இங்க மூனு வயசு அதுதான் கொஞ்சம் இடிக்குது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

kavisiva said...

//நீங்க புத்திசாலிங்றத நிருபிச்சிட்டீங்க!! நா பார்த்து ஒன்னோ ஒன்றரை வயசோ தான் ஆனா இங்க மூனு வயசு அதுதான் கொஞ்சம் இடிக்குது.//

பதட்டத்தில் பெரியவர்களே என்ன செய்யன்னு தெரியாம முழிக்கும் போது பாவம் 3வயசு குழந்தை பயத்தில் அழும் போது என்ன செய்யும்.

உங்கள் முந்தைய பதிவை படிச்சுட்டேங்க. சரியா செயல் பட்டிருக்கீங்க. எல்லோருக்கும் இந்த சமயோசித புத்தி இருக்காதுங்க :(

திவ்யாஹரி said...

உங்க புது பதிவு, பழைய பதிவு 2 ம் படிச்சேன்.. அருமை ஜெய்லானி..

Menaga Sathia said...

படித்ததும் நெஞ்சு பதறிடுச்சு..குழந்தை நலமாக இருப்பதே ஆறுதல்..நாம்தான் எச்சரிக்கையா இருக்கனும்.

ஜெய்லானி said...

@@@கவிசிவா--//பதட்டத்தில் பெரியவர்களே என்ன செய்யன்னு தெரியாம முழிக்கும் போது பாவம் 3வயசு குழந்தை பயத்தில் அழும் போது என்ன செய்யும்.//

நீங்க சொல்வதும் சரிதான். கூட்டத்தை பார்த்து பயந்திருக்கும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@திவ்யாஹரி--சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மேனகா சத்யா-- உண்மைதாங்க .நான் எழுதி , இந்த மூனு மாசத்தில இப்படி ஒரு சம்பவம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னைய கேட்டா.. சுத்தியோ.. இல்லை கல்லையோ
எடுத்து ஒரே போடு....
.
.
.
சார்.. கார் கண்ணாடியில இல்ல சார்..
.
.
அந்த குழந்தையின் தகப்பன் மேல..( குழந்தைய உள்ள வெச்சுட்டு .. எதுக்கு வெளிய போறானு..)

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி.///என்னைய கேட்டா.. சுத்தியோ.. இல்லை கல்லையோ
எடுத்து ஒரே போடு....சார்.. கார் கண்ணாடியில இல்ல சார்.
அந்த குழந்தையின் தகப்பன் மேல..( குழந்தைய உள்ள வெச்சுட்டு .. எதுக்கு வெளிய போறானு..)//

அது சரி பட்டு ஆணுக்கு அநத தண்டனை , நான் பார்த்த பொண்ணுக்கு ????.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸாதிகா said...

ஏனுங்கோ ஜெய்லானி சாரே ஏன் என்னட கமண்ட்டை பப்லிஷ் செடய்யவில்லை?

ஜெய்லானி said...

@@@ஸாதிகா //ஏனுங்கோ ஜெய்லானி சாரே ஏன் என்னட கமண்ட்டை பப்லிஷ் செடய்யவில்லை?//

ஏனுங்க அம்மிணி, நீங்க கமெண்ட் போட்ட இடத்தை விட்டுட்டு இங்க வந்து கேட்டா ?.( அந்த இடத்தில் ஒருவரி பதில்தான் ஏன்னெனால் ,அது தற்பெருமையாகி விடும் எனக்கு!!! )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பித்தனின் வாக்கு said...

வாயில நால்லா வருது ஜெய்லானி, பதிவு என்பதால் அடக்கிக் கொள்கின்றேன். ஏன் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு போனால் என்னவாம். என்ன மனுசனுங்க. பட்டாதால் புத்தி வரும். நன்றி. குழந்தை பாவம் அழுது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்.

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு --//வாயில நால்லா வருது ஜெய்லானி, பதிவு என்பதால் அடக்கிக் கொள்கின்றேன்//

மேலே பட்டாபட்டியின் கேள்வியும், என் பதிலயும் பாருங்க!! பணம் , பகட்டு , அலட்சியம் இதுதான். பின்னால வருத்தப்பட்டு என்ன செய்யிறது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Chitra said...

குழந்தைக்கு ஒண்ணும் ஆகவில்லை. அப்பாடா.... நிம்மதி.

Balamurugan said...

நண்பரே, உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.
http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_26.html

ஜெய்லானி said...

@@@பாலமுருகன்--சொல்லிட்டிங்க இல்லை ஜமாய்ச்சுடுவோம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--//குழந்தைக்கு ஒண்ணும் ஆகவில்லை. அப்பாடா.... நிம்மதி.//

அது ஒன்னுதாங்க சந்தோஷமே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Geetha6 said...

so sad...
Thank god!

Asiya Omar said...

ஜெய்லானி உங்களைப்போன்ற ஹீரோ யாரும் அங்கில்லாமல் போய்விட்டார்களே!
உங்களுக்கு என் ப்ளாகில் அவார்ட் தந்துள்ளேன்.பெற்றுக்கொள்ளவும்.

ஜெய்லானி said...

@@@Geetha6 --//so sad...Thank god!//

ஆமாங்க ஆமாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆசியா உமர்--//ஜெய்லானி உங்களைப்போன்ற ஹீரோ யாரும் அங்கில்லாமல் போய்விட்டார்களே!//

பதட்டத்தில யாருக்கும் மூளை வேலை செய்யல அதான் உண்மை. மத்தபடி நான் ஜீரோ

//உங்களுக்கு என் ப்ளாகில் அவார்ட் தந்துள்ளேன்.பெற்றுக்கொள்ளவும்.//

ஐ இதோ!!வரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

Jaleela Kamal said...

அங்க வாங்க நீங்க டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தீங்க மங்கு, தொப்பையானாந்தாவும் வார்ராங்க‌

ஜெய்லானி said...

@@@Jaleela said...அங்க வாங்க நீங்க டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தீங்க மங்கு, தொப்பையானாந்தாவும் வார்ராங்க‌//

ஒரு நாள் ரெண்டு பேரையும் போட்டு கும்மிடுவோம் கும்மி!!don't worry

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))