Monday, January 30, 2012

கேசரி.....!!


             வழக்கமா வாக்கிங் போகிற வழியில ((நீ வாங்கிங் எல்லாம் போவியான்னு யாரும் கேட்கப்பிடாது )) புதுசா ஒரு டிராவல் திறந்தாங்க. பார்க்கிறதுக்கு நல்லா கண்ணுக்கு குளிர்ச்சியா ஏகப்பட்ட லைட்ஸ்,  டெக்ரேசன் ஒரே  அமர்க்களமா இருந்துச்சி. எங்கயாவது புதுசா  ஏதாவது திறந்தா  நமக்குதான் வேடிக்கையா இருக்குமே. உள்ளே போய் பார்ததுல ஒரு பிளேட் கேசரி ஃபிரி ...... கேசரியின்  மணம் குணத்தில் (உபசரிப்பில் ) சொக்கி போய் அடுத்த பிளேட் எக்ஸ்டிரா .....(( ஃபிரியா கிடைச்சா ஃபினாயிலும் குடிப்போமுல்ல )).
அலோ..அலோவ்வ்வ்வ்வ்
          
        காலை மதியம் என இரெண்டு வேளை வரும் போதும் போகும் போதும் ஒரு லுக்.....அடுத்த நாள்  ஊருக்கு ஒரு டிக்கெட் அங்கேயே போட்டேன் . ஒரு பிளேட் கேசரி கிடைத்தது.  கூச்சப்படாமல்  இன்னொரு பிளேட் வாங்கினேன் . திரும்பவும் அந்த பக்கம் வரும்போதும் போகும் போதும் ஒரு லுக் , ஒரு ஸ்மைல் ....
        நாலாவது நாள் கடை திறக்கல...ஒரு வேளை கேசரி  தீர்ந்திருக்குமோ..???... அதுக்கடுத்த நாள்..நோ  ஓபன் ...அந்த வாரம் முழுக்க திறக்கல...... வேலை பிசியில்  பிறகு நான் கவனிக்கல அதுக்கும் அடுத்த வாரம்  பார்த்தால்  வேறு ஒரு பார்ட்டி அங்கே வந்து சலூனுக்கு உள்ள  டெக்ரேஷன் ஆரம்பிச்சாங்க . கடை காலி ....அவ்வ்வ்வ்வ்வ்வ் .
ஹி...ஹி....  எங்கே பிடிங்க பார்க்கலாம்
       
      நடுவில் ஃபிரியாக ஐஞ்சு நாள் லீவு கிடைக்க ..இங்கே இருந்து வெட்டியா பொழுதை போக்குவதை விட ((  உள்ள வேலையிலும் அதைதான் செஞ்சிகிட்டு இருக்கோங்கிறது வேற விஷயம்   ஹி..ஹி....  )) ஊருக்கே  போகலாம் ஆனால் ஃபிளைட் டைமிங்கை  மாற்ற வேற ஒரு டிராவல்ஸுக்கு போகும் போதுதான் தெரிஞ்சுது . யாருமே  மாற்றி தரமாட்டாங்கங்கிர விஷயம் ..
        நிறைய டிராவல்ஸுல  ஃபிளைட் ஸீட் காலி இருக்கான்னு கூட சொல்ல மாட்டேங்கிறானுங்க படுபாவி பசங்க ((ஒய் திஸ் கொலவெறியோ )) ..கடைசியில் ஒரு ஆள் கேட்டது நாளை மறு நாள் ஒரு சீட் இருக்கு .ஐ வில் சேஞ்ஜ்  ஆனா 600 Dhs   அதிகம் வேனுமின்னு . நான் போனாப்போகுது 400 Dhs வரை தர ரெடி .ஆனா பயபுள்ள ஒரு நயா பைசா குறைக்க தயாரில்ல . கடைசியில் ஒரு ஹைதராபாத பெண் DNATA வில் எதுக்கும் டிரை செய்யுங்கன்னு ஒரு அட்வைஸ்....!! . மற்ற ஷாப்கள் இரவு 11, 12 மணி வரை திறந்திருக்க    ஆனால் கொடுமை இரவு 8 மணி ஆனாலே  டிராவல்ஸை பூட்டிகிட்டு போயிடுறாங்க .
ஆ...இ....ஊ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

       அடுத்த நாள் DNATAவில் போய் பார்க்க நம்ம நாட்டு ஏரியாவில் ஒரு மலையாளி பெண் .ஒன்னும் பேசாமல்  டிக்கெட்டை நீட்டினேன். டேட் சேஞ்ச்  வேனும் . பெயரை பார்த்ததும் ஒரு புன்(ண்)சிரிப்புடன் நீங்க பிலாக் எல்லாம் எழுதுவீங்களான்னு ஒரு கேள்வி . நான் தலையாட்டி வைத்ததும். ((  அவங்க பிலாகர் இல்ல ஆனா ஒன்லி ரீடர் )). ஏக கலகலப்பு , சிரிப்பு ......ரசிகையாம் .((அடங்கொப்புறானே....)). ஸ்டேண்டிங்கில போனாலும் பரவாயில்லை .எப்படியாவது ஒரு சீட் கன்ஃபார்ம் செய்து கேட்டேன் . இன்னைக்கே போரீங்களான்னு ஒரு நக்கல. 
நவ் வீ ஆர் ஃபிரென்ஸூஊஊஊஊஊ

      பெட்டி எல்லாம் ரெடி இப்பவே ஏர்போர்ட் போகசொன்னாலும்  ஓக்கேன்னேன்..பயபுள்ள அப்பவே ஈவினிங் 8 மணி ஃபிளைட்டு 5 மணிக்கு துபாய் ஏற்போர்டில்  இருங்கன்னு கன்ஃபோர்ம் செய்து குடுத்தாங்க. சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய் கூட வாங்கல .பிலாக் ஒரு பொழுது போக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது இப்படி ஒரு ரெஸ்பான்ஸான்னு இனி ஒழுங்கா எழுதுறேன்னு சொன்னேன் . அதெல்லாம் வேனாம் உங்க வழியிலேயே  போங்க மாறவேனாமுன்னு ஒரு அட்வைஸ் .தொடர்ந்து எழுதும் படி ஒரு வேண்டுதல்
      ஏன்னு கேட்டதுக்கு பிலாக் எப்பவுமே  ரத்தகளரியாதான் இருக்கு .ஃபிரியா யாரும் எழுதுறதில்ல. அதனால நான் ஒரு சில பிளாக்தான் போவேன்னு சொன்னாங்க .முதல் தடவை சந்திப்பாக இருப்பதால் பக்கத்து கேண்டினில் கேசரி ஆர்டர் செய்தாங்க . இருக்கிற இடத்தை மறந்து  கத்திவிட்டேன்  திரும்பவும் கேசரியாஆஆஆஆஆஆஆஆ      

53 என்ன சொல்றாங்ன்னா ...:

r.v.saravanan said...

கேசரி சரி ஜெய்லானி

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஒரு கேசரிக்கு ஆசப்பட்டு, போச்சா உள்ளதும் போச்சா.. :)). நல்லவேளை. டிக்கெட் கன்பார்ம் ஆனதும் ஒரு சந்தோசம் வந்துருக்குமே.. ஹி ஹி ஹி..

சிநேகிதன் அக்பர் said...

அது சரி!

Anonymous said...

ஹை இன்னிக்கும் பூஸ் அண்ட் அஞ்சு க்கு முன்னே லான்ட் பண்ணியாச்சு இருங்க படிச்சிட்டு வரேன்

Angel said...

கேசரின்னதும் பயந்து பயந்துதான் கண்ணை மூடிகிட்டே காலை வச்சேன்
ஹப்பாடி ரெசிப்பி இல்ல

Angel said...

En Samaiyal says://


நோ நோ இது அழுகுணியாட்டம்.நான்தான் முதலில் வந்தேன்

Angel said...

பூசை காணோம் ...எங்கேயாவது மேக் பைய பார்த்து கவுன்ட் செஞ்சிக்கிட்டுருப்பாங்க

Anonymous said...

படிச்சதும் நெறைய்ய டவுட்டு வருது ஹீ ஹீ மலையாளி பொண்ணுக்கு தமிழ் படிக்க தெரியுமாஆஆ ??????

//அதனால நான் ஒரு சில பிளாக்தான் போவேன்னு சொன்னாங்க // பூஸ் ப்ளாக் பத்தி சொன்னீங்களா?

//இனி ஒழுங்கா எழுதுறேன்னு சொன்னேன் // இப்புடி அவசரப்பட்டு வாக்கு கொடுத்திட்டீங்களே. அப்புறம் சுவையான சமையல் மாதிரி டிப்சுக்கு எல்லாம் நாங்க எங்கே போறது ???

Angel said...

//சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய் கூட வாங்கல .//

டவுட்டே இல்லை .அவங்க உங்க ரெசிப்பிய படிச்சிருப்பாங்களோ???????

Anonymous said...

//.நான்தான் முதலில் வந்தேன்// அதெல்லாம் கெடையாது என் கமெண்ட் தான் முதல்ல வந்து இருக்கு:)) இந்த மாதிரி சண்டை போடுறது கூட நல்லா இருக்கே !

Anonymous said...

//கேசரின்னதும் பயந்து பயந்துதான் கண்ணை மூடிகிட்டே காலை வச்சேன்
ஹப்பாடி ரெசிப்பி இல்ல// நீங்க கண்ணை மூடிகிட்டு வர்ற நேரத்துல நாங்க கமெண்ட் போட்டுட்டோம் இல்லே :))

Angel said...

//படிச்சதும் நெறைய்ய டவுட்டு வருது ஹீ ஹீ மலையாளி பொண்ணுக்கு தமிழ் படிக்க தெரியுமாஆஆ ?????? //

இப்படி தான் யோசிச்சு நானும் என் தோழியும் மேட்லான்ல தமிழ்ல பேசி ஒரு பஞ்சாப்காரரிடம் வசமா மாட்டுபட்டோம் அவர் சென்னையில் ஆறு வருஷம் இருந்தாராம் .

Anonymous said...

//பூசை காணோம் ...எங்கேயாவது மேக் பைய பார்த்து கவுன்ட் செஞ்சிக்கிட்டுருப்பாங்க//

பூ.....ஸ்ஸ்ஸ்ஸ் ஸ் ஸ் மக்பை எல்லாம் இந்த ஊரே விட்டே போயிடிச்சாம் ஒருத்தங்க விரட்டிகிட்டே வராங்கன்னு ! அதனால நீங்க வந்து கமெண்ட் போடுங்க

Angel said...

ஜெய்ய பாருங்க போஸ்ட போட்டுட்டு கேசரி சாப்பிட போய்ட்டார்

Anonymous said...

//இப்படி தான் யோசிச்சு நானும் என் தோழியும் மேட்லான்ல தமிழ்ல பேசி ஒரு பஞ்சாப்காரரிடம் வசமா மாட்டுபட்டோம்//

என்ன பேசினீங்க சர்தார்ஜி ஜோக் ஆஆ சொல்லி மாட்டிகிட்டீங்களா ??

கரெக்ட் தான் அஞ்சு யாருக்கு என்ன மொழி தெரியுமுன்னு தெரியல இப்பெல்லாம். அதனால கொஞ்சம் சாக்கிரதையா தான் இருக்கணும்

Anonymous said...

//ஜெய்ய பாருங்க போஸ்ட போட்டுட்டு கேசரி சாப்பிட போய்ட்டார்//

கேசரி சாப்பிட போய்ட்டாரோ இல்லே கேசரி கொடுத்தவங்கள பார்க்க போய் இருக்காரோ ??? நானும் பூஸ் ஸ்டைல் ல ரெம்ப நல்ல பொண்ணு ஊஉ மீ எஸ்கேப் :))

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//கேசரி சரி ஜெய்லானி //

வாங்க .வாங்க ..!! இங்கே அட்டனன்ஸ்போட்டதாலே இப்போ உங்களுக்கு தூக்கத்துல பிரைட்டா கண்னு தெரியும் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//ஒரு கேசரிக்கு ஆசப்பட்டு, போச்சா உள்ளதும் போச்சா.. :)). //
வாங்க ஷேக் வாங்க..!! இப்பல்லாம் கேசரியை பார்த்தாலே உடல் நடுக்குது ஹி...ஹி... :-))
//நல்லவேளை. டிக்கெட் கன்பார்ம் ஆனதும் ஒரு சந்தோசம் வந்துருக்குமே.. ஹி ஹி ஹி..//

இருக்காதா பின்னே ஹி...ஹி... :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர் --//அது சரி! //

வாங்க அக்பர் வாங்க ..!! எதுக்கும் நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

/// இங்கே அட்டனன்ஸ்போட்டதாலே இப்போ உங்களுக்கு தூக்கத்துல பிரைட்டா கண்னு தெரியும் //

தூக்கத்துல ப்ரைட்டா தெரியும் முழிச்சிருக்கும் போது ????? இன்னிக்கு டவுட்டு டவுட்டா வருதே

குறையொன்றுமில்லை. said...

நீங்க கேசரி வேணாம்னு சொன்னாலும் கடைசிவரை உங்களைத்துரத்துதே. பின்னூட்டம்போடுரவங்களுக்கெல்லாம் ஒவ்வொரு ஸ்பூனா கொடுத்திடுங்க ஜெய்

ஜெய்லானி said...

@@@En Samaiyal --//ஹை இன்னிக்கும் பூஸ் அண்ட் அஞ்சு க்கு முன்னே லான்ட் பண்ணியாச்சு இருங்க படிச்சிட்டு வரேன் //

வாங்க ..வாங்க ..!உங்களுக்கு ஸ்பெஷல் கேசரி :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது அநியாயம் அக்கிரமம்... நான் இதை ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))... கேசரி குறிப்பு இல்லாவிட்டாலும் பறவாயில்லை... கேசரி எனக்குத்தான் நிறையக் கஜூ போட்டு வேணும்ம்ம்ம்ம்:)).. அவ்வ்வ்வ் எனக்கு முன்னாலயே அஞ்சு, கிரிசா.... முடியல்ல சாமீஈஈஈஈஈ முடியல்ல:))

முற்றும் அறிந்த அதிரா said...

//(( ஃபிரியா கிடைச்சா ஃபினாயிலும் குடிப்போமுல்ல )).//

ஹா..ஹா..ஹா.. 4ம் நம்பரை அடிக்கடி ஞாபகப்படுத்திறீங்களே.. free எண்டால் விடமாட்டமில்ல:)) அவ்வ்வ்வ்வ்:)) ஒரு சுண்டெலி கிடைக்குமோ? ஃபிரீஈஈஈஈஈஈஈஈயா?

முற்றும் அறிந்த அதிரா said...

//அலோ..அலோவ்வ்வ்வ்வ்//

யேஸ்..யேஸ்ஸ்ஸ் இங்கினதான் இருக்கிறீங்களா? உங்களைத்தான் தேடிட்டே இருக்கிறேன்.. எலியாரே... :) நல்ல குண்டா இருங்க வந்திட்டே இருக்கிறேன்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//பெயரை பார்த்ததும் ஒரு புன்(ண்)சிரிப்புடன் நீங்க பிலாக் எல்லாம் எழுதுவீங்களான்னு ஒரு கேள்வி . நான் தலையாட்டி வைத்ததும். (( அவங்க பிலாகர் இல்ல ஆனா ஒன்லி ரீடர் )). ஏக கலகலப்பு , சிரிப்பு ......ரசிகையாம் .((அடங்கொப்புறானே....)). //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஜெய்க்கு ரசிகைகள் ரவல் ஏஜெண்டிலும் ..... முடியல சாமீஈஈஈஈ அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊ:)))

முற்றும் அறிந்த அதிரா said...

//முதல் தடவை சந்திப்பாக இருப்பதால் பக்கத்து கேண்டினில் கேசரி ஆர்டர் செய்தாங்க . இருக்கிற இடத்தை மறந்து கத்திவிட்டேன் திரும்பவும் கேசரியாஆஆஆஆஆஆஆஆ ///

எதுக்கும் அதையும் ஒருக்கால் செக் பண்ணுங்க, இப்போ கன்போமா மூடியிருப்பாங்க:))

முற்றும் அறிந்த அதிரா said...

//ஆ...இ....ஊ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

பூஸாருக்கு லெமன் ஜூசில மயக்க மருந்து கொடுத்து, படுக்க வச்சிட்டு, பெரீய வீரர்போல குங்பூ ஸ்டைல் போட்டு படமெடுத்து பிளாக்கில வேற போட்டு... எங்கிட்டயேவா:)) அவ்வ்வ்வ்வ்வ்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//நவ் வீ ஆர் ஃபிரென்ஸூஊஊஊஊஊ//

அப்போ கேசரியை பாதியாப் பிரிச்சிடலாம்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//
En Samaiyal says:
30/1/12 6:12 PM
ஹை இன்னிக்கும் பூஸ் அண்ட் அஞ்சு க்கு முன்னே லான்ட் பண்ணியாச்சு இருங்க படிச்சிட்டு வரேன்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கையில, கழுத்தில, கால்ல,,, தேம்ஸ்ல... நினைவிருக்கட்டும்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//angelin says:
30/1/12 6:19 PM
பூசை காணோம் ...எங்கேயாவது மேக் பைய பார்த்து கவுன்ட் செஞ்சிக்கிட்டுருப்பாங்க//

சத்தியமா 2 மக் பை:) பார்த்தேன், இலையில்லாத மரத்தில உச்சில இருந்து என்னைப் பார்த்தினமே அவ்வ்வ்வ்வ்வ்... அதுதான் ஜெய் கேசரி செஞ்சு போட்டிருக்கிறார்..:))

முற்றும் அறிந்த அதிரா said...

இண்டைக்கு கேசரி கிடைக்காட்டில்... ஜெய்யிட... கைல, கால்ல, கழுத்தில.. ஸ்ரெயிட்டா தேம்ஸ்ல... அஞ்சூ, கிரிசா ரெடி?:))))).

ஜெய் ஒரே வெள்ளை வெள்ளையா இருக்கே.. கொஞ்சமாவது கலரை மாத்துங்க ஜெய்... எக்ஸாம் எழுதுற பீலிங்ஸ் வருது:))))

vanathy said...

கர்ர்ர்ர்ர்ர்.... நாலு ப்ளேட் கேசரியை சாப்பிட்டும் போட்டு பதிவு போடுறாராம். இதெல்லாம் நல்லாவே இல்லை. அது சரி எப்படி வெக்கப்படாம கேட்டீங்க? நான் காசு குடுத்து வாங்கினாலே அப்படி வெட்கப்படுவேன். நீங்க கிரேட் ஓஓஓஒ கிரேட் தான் போங்கள். உங்க விசிறியா அவங்க. இப்ப இந்தப் பதிவு பார்த்துட்டு என்ன நினைப்பாங்களோ????

vanathy said...

நவ் வீ ஆர் ஃபிரென்ஸூஊஊஊஊஊ////
அப்போ கேசரியை பாதியாப் பிரிச்சிடலாம்:))//
நான் வதனப் புத்தகத்தில் ஓக்கே சொல்லி, பாதி கேசரி வாங்கி தின்னுட்டேன். இப்ப தான் தேம்ஸ் அக்கா வராங்கோ. ஹையோ!!!

Anonymous said...

//எதுக்கும் அதையும் ஒருக்கால் செக் பண்ணுங்க, இப்போ கன்போமா மூடியிருப்பாங்க:))//


சூப்பர் சூப்பர் பலே பலே !! என்னமா தின்க் பண்ணுறீங்க ??


//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கையில, கழுத்தில, கால்ல,,, தேம்ஸ்ல... நினைவிருக்கட்டும்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்:))//

பூஸ் என்னையும் மிரட்டுறீங்க அப்புறம் கேசரி தரலேன்னா ஜெய்க்கும் இதே கதின்னு சொல்லுறீங்க.. அப்புறம் உங்களுக்கு பயந்து நான் ஜெல்ப் பண்ண வர மாட்டேன் போங்க :))

Anonymous said...

//சத்தியமா 2 மக் பை:) // பூஸ் எனக்கு நேத்திக்கே ஒரு டவுட்டு Two for Sorrow அப்புடின்னு சொல்லி இருக்கீங்க. ரெண்டு பார்த்தா நல்லதா இல்லே ஒண்ணு பார்த்தா நல்லதா

ஹேமா said...

நாங்கல்லாம் எவ்ளோ காலமா உங்க கடியையெல்லாம் தாங்கிட்டு உங்க பதிவுகளை வாசிக்கிறோம்.இப்ப வந்த அந்தப் பொண்ணு பெரிசா போய்ட்டாவா.எங்களைப் பத்தி எப்பாச்சும் ஒரு குறிப்பிலயாச்சும் எழுதினீங்களா ஜெய்.அவங்களுக்கு தமிழ் வாசிக்கத் எப்பிடித் தெரியுமாம் !

முற்றும் அறிந்த அதிரா said...

//En Samaiyal says:
30/1/12 9:24 PM
//சத்தியமா 2 மக் பை:) // பூஸ் எனக்கு நேத்திக்கே ஒரு டவுட்டு Two for Sorrow அப்புடின்னு சொல்லி இருக்கீங்க. ரெண்டு பார்த்தா நல்லதா இல்லே ஒண்ணு பார்த்தா நல்லtha?///

அவ்வ்வ்வ்வ் எனக்கு உண்மையிலயே என்னமோ ஆகிப்போச்சு... இப்போ நீங்க சொன்னபின்புதான் கவனித்து ஓடிப்போய் என்பக்கத்தில மாத்திட்டேன்:)) எங்கிட்டயேவா...

ரொம்ப ரயேட்... அதனால சிலநேரம் என்ன எழுதுகிறேன் என்று எனக்கே தெரியிறேல்லை:))).

2 கண்டால்தான் நல்லது. ஒன்று மட்டும் தான் கூடாது, ஒன்றுமேல் எத்தனை கண்டாலும் நல்லதே, ஆனா ஒரே இடத்தில பார்க்கோணும்... அஞ்சு வீட்டுக்கு பக்கத்தில ஒன்றும் அதிரா வீட்டுக்குப் பக்கத்தில ஒன்றும் பார்த்தால் அது ஒன்றுதான், ரண்டல்ல....:)).

அருகருகே கூட்டமாக பார்த்தால்தான் நல்லதாம்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

//ஹேமா says:
30/1/12 11:06 PM
நாங்கல்லாம் எவ்ளோ காலமா உங்க கடியையெல்லாம் தாங்கிட்டு உங்க பதிவுகளை வாசிக்கிறோம்.இப்ப வந்த அந்தப் பொண்ணு பெரிசா போய்ட்டாவா.எங்களைப் பத்தி எப்பாச்சும் ஒரு குறிப்பிலயாச்சும் எழுதினீங்களா ஜெய்.அவங்களுக்கு தமிழ் வாசிக்கத் எப்பிடித் தெரியுமாம் //

ஹா....ஹா...ஹா... இது...இது... இது குவெஷ்ஷன்..., பாருங்க அஞ்சுவுக்கு, கிரிஜாவுக்கெல்லாம் இப்பூடிக் கேள்வி கேட்கத் தெரியுதா? அதைவிட்டுப்போட்டுக் கேசரியாம் கேசரி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). போயும் போயும் ஒரு இம்மாந்துண்டு கேசரிக்கு அடிபடுகினம்...

நாங்க மட்டின் பிரியாணிக்கே சவுண்டு காட்டமாட்டம்:))).. சப்பிட்டு முடியத்தான் சவுண்டு வைப்பம், இல்லையெனில் ஆரும் பங்குக்கு வந்திட்டால் அவ்வ்வ்வ்வ்:))).

ப.கந்தசாமி said...

பிளாக் எழுதறதுல இப்படியெல்லாம் சௌகரியம் இருக்கா? இதுவரை என்னை ஒரு பயலும் (கேரளாப் பெண்கள் உட்பட) பிளாக் எழுதறயான்னு கேட்டதேயில்லை. எல்லாத்துக்கும் ஒரு மச்சம் தேவை போல!

ஸாதிகா said...

கேசரி என்ற தலைப்பை பார்த்ததும் பயந்து போய்ட்டேன்.சமையல் குறிப்பு போட்டு படிக்கும் மனுஷர்களை நோகடிக்கப்போகிறார் ஜெய்லானி என்று.நல்ல வேளை..தப்பிச்சுடோம்...ஸ்ஸ்ஸ்...ஹப்பா..

ஸாதிகா said...

கேசரியின் மணம் குணத்தில் (உபசரிப்பில் ) சொக்கி போய் அடுத்த பிளேட் எக்ஸ்டிரா .....(( ஃபிரியா கிடைச்சா ஃபினாயிலும் குடிப்போமுல்ல )).//ஓஓஓஒ..இதுதான் உண்மையான ஜெய்லானியின் நிஜமுகமோ..ஒகே ஒகே...


ஒரு புன்(ண்)சிரிப்புடன் நீங்க பிலாக் எல்லாம் எழுதுவீங்களான்னு ஒரு கேள்வி . நான் தலையாட்டி வைத்ததும். (( அவங்க பிலாகர் இல்ல ஆனா ஒன்லி ரீடர் )). ஏக கலகலப்பு , சிரிப்பு ......ரசிகையாம் .///

பெயரைப்பார்த்ததுமே பிளாக்கரா என்று கேட்டு விட்டார் என்கின்றீர்களே!!!! நம்பவே முடியவில்லை. பிளாக்கர் என்று நெற்றியில் ஒட்டிக்கொண்டு எதுவும் போனீர்களா?நல்லா யோசித்து சொல்லுங்கள்.

Mohamed Faaique said...

என் ப்லாக் லின்கையும் குடுக்க இருந்துச்சே!! எப்பவாவது பிளைட் டிக்கட் தேவைப்பட்டா யூஸ் புல்லா இருந்திருக்கும்....

சாந்தி மாரியப்பன் said...

நல்ல வேளை.. நீங்க செஞ்ச கேசரி இல்லை :-))

avainaayagan said...

// (( அவங்க பிலாகர் இல்ல ஆனா ஒன்லி ரீடர் ))// பிளாக்கரா இல்லைனு தெரிஞ்சதும் நிம்மதினா- பிளாக்கர எல்லாம் போட்டியா நினைப்பீங்களோ! எந்த நிகழ்வையும் சுவைபட சொல்லமுடியும் என்று செய்து காட்டியிருக்கிறீர்கள்

Mahi said...

எனக்கு கேசரின்னா ரொம்ப பிடிக்கும்! தினமும் தந்தாலும் சாப்பிடுவேன். அதனால இனிமே இப்படி வாய்ப்பு கிடைச்சால் கேசரியை இங்க:) பார்சல் அனுப்பிருங்க. :)))))) :P

ம்ம்..ப்ளாகுல இருந்தா இப்புடி எல்லாங்கூட நல்லவிஷியம் நடக்குமா?? சூப்பர் போங்க! இனிமே எப்ப டிக்கெட் புக் பண்ணவும் அந்த சைலன்ட் ரீடர் அக்காவை மறந்துராதீங்க. :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புனு சொல்ற மாதிரி பிளாக்கர்களுக்கு சென்ற இடமெல்லாம் கேசரினு புதுமொழி போடணும் போல இருக்கு... ஹ்ம்ம்... ஆனா எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்னு புரியுது... நமக்கு ஒரு கப் டீ கூட கிடைக்கறதில்ல :)))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பிரபல பதிவர் ஜெய்க்கு ஒரு பிளேட் கேசரி பார்சல்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பிரபல பதிவர் ஜெய்க்கு ஒரு பிளேட் கேசரி பார்சல்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நானும் ஜெய்லானி டீவியில புதுசா ஏதும் கேசரியோன்னு நிஅனித்தேன் ,

காஞ்சி முரளி said...

பயபுள்ள....!
யார்யா உன்ன...! உன்னையே ஏமாத்துனது...!
அவனப் பாராட்டுனையா...!
அவனுக்கு கீரிடம் சூட்டனுமையா...!
ஏய்யா....! ஜெய்லானி... ஒரு கேசரிக்கே தொபுகடீர்னு விழுந்துட்டியா...!

உங்க பிளாக் வாசகர்னு சொன்னவொடனே காலரா தூக்கிவிட்டுறுப்பியே...!

பித்தனின் வாக்கு said...

ok ok ini keralavaaa,, imm ndakkattum. aanna intha ponnuga paavampa enna sonnalum nampuranga.

amma travals ullla kesarikkuthan poniya illai site adikka ponathai eempa maraithai. imm pottu koduthachu velai mudinjuthu varatta....

Asiya Omar said...

இந்த கதையை இப்ப தானே பார்க்கிறேன்.அவ்வ்வ்..இனி கேசரியை பார்த்தாலே இந்த பதிவு தான் நினைவு வரும்.நல்ல மகிழ்ச்சியான பகிர்வு.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))