Sunday, April 4, 2010

உலகம் பிறந்தது உனக்காக !!!

ஆரம்ப காலங்களில் மக்கள் அதிக வியாதிகளுக்கு ( பெரிய ) ஆளாகாமலே இருந்து வந்ததுக்கு காரணம் . பல் துலக்க வேப்பங்குச்சி , ஆலங்குச்சி , மற்றும் கரித்தூள் போட்டு பல்லை கால் மணிநேரம் அரை மணி நேரம் தேய்த்து தேய்த்து வெள்ளை ஆக்கினார்கள் அதே நேரத்தில் நெம்பர் ஒன்னும் டூவும் முடிந்து விடும் . அதுபோல ஓடும் ஆற்று நீரில் , அல்லது கிணற்று நீரில் குளியல், குளிக்கும் போது கஸ்தூரி மஞ்சள் , சந்தனம் தேய்க்க தேங்காய் நாறு இப்படி பல பொருட்கள்.


சாப்பிட கேப்பங் கஞ்சி , பச்சை காய்கறி ,கைக்குத்தல் அரிசி சோறு , இரவில் பால் , இப்படி பட்ட உணவு முறையும் , ஒருவனுக்கு ஒருத்தியும் , ஒருத்திக்கு ஒருவனுமாக இருந்த குடும்ப வாழ்க்கையும் உள்ள வரை அவனுக்கு வியாதி என்ன என்றே தெரியாது. (இந்த காலத்துக்கு ஒத்து வராது என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது .)


நாகரீகம் என்ற ஒற்றை சொல்லால் வாழ்கையே தட்டு தடுமாறி எங்கே போகிறோம் என்றே புரியாமல் நாமும் கெட்டு , வரும் நம் தலைமுறைகளுக்கு இந்த ஒற்றை பூமியில் எதை விட்டு விட்டு போகப் போகிறோம். ஏற்கனவே விவசாய நிலம் இல்லை , இருப்பதில் பீ டி ரக காய்கறிகள் , நீர் நிலைகள் வறண்டு போய் . அதன் வழியே ( மழை நீர் வழிந்தாடும் ஆற்று வழிப்பாதை) மாறிவிட்டது . ஒரே வெள்ளப்பெருக்கு. காடுகள் இல்லாமல் அழிக்கப்பட்டு மழை இல்லா வறட்சி பூமியாகியாகி வருகிறது. இரசாயணங்களை உபயோகபடுத்தி பழகிவிட்டு மீள முடியாமல் பிளாஸ்டிக் தடை.பச்சை இலைகள் குறைந்ததால் ஆயுர் வேதம் போய் ரசாயணங்களையே மருந்தாக உப்யோகிக்க வேண்டிய கட்டாயம்.

அதிலும் கலப்படம் செய்யும் இரண்டறிவு பெற்ற மூட மணிதனே!! நாளை உன் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நீ கலப்படம் செய்த மருந்தையே தருவாயா ?. உன் குடும்பத்தில் ஒருவருக்கு கிட்னி ஃபெய்லியர் வந்தால் நீ தயாரித்த போலி மருந்தை தருவாயா ? அத்தனை ஏன் உனக்கே விபத்து எதாவது நேர்ந்தால் அப்போது என்ன செய்வாய் ? எதை கொண்டு மருத்துவம் செய்வாய் ?


இவ்வுலகம் எத்தனையே பெரும் பண முதலைகளை கண்டு சிரித்திருக்கிறது . அவர்களை விழுங்கியும் இருக்கிறது , நீ பூமிக்கு புதியவன் அல்ல . முதல்வனும் அல்ல , நம் முன்னோர்களின் மீதி , அவர்களின் அருள் கொடைஇறைவன் கொடுத்த அழகிய வாழ்க்கையை , சொர்கமாகவும் , நரகமாகவும் மாற்றுவது உன் கையில்


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார் ?

56 என்ன சொல்றாங்ன்னா ...:

ஹாய் அரும்பாவூர் said...

"இறைவன் கொடுத்த அழகிய வாழ்க்கையை , சொர்கமாகவும் , நரகமாகவும் மாற்றுவது உன் கையில்"

இவர்களுக்கு தேவை சொர்க்கம் போன்ற வாழ்க்கை அதற்க்கு அடுத்தவர் வாழ்க்கை நரகமாக்கி பணம் சம்பத்திது இவர்கள் சொர்கத்தை அனுபவிக்கிறார்கள்
உண்மையான் சொர்க்கம் எது என்று தெரியாமலே

MUTHU said...

இறைவன் கொடுத்த அழகிய வாழ்க்கையை , சொர்கமாகவும் , நரகமாகவும் மாற்றுவது உன் கையில்


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார் ?


இதில் என்ன சந்தேகம் நான் தான்

MUTHU said...

உன் பதிவை கிண்டல் பண்ணவில்லை அதில் இருப்பவை உண்மை

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லாவே சாடி இருக்கீங்க,
புரிந்து கொள்ளப்படுமானு பாப்போம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சாடியிருக்கிறீர்கள் ஜெய்லானி..அதுவும் அந்த கடைசி வரிகள்..//வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார் //

கலக்கல்

அன்புடன் மலிக்கா said...

இறைவன் கொடுத்த அழகிய வாழ்க்கையை , சொர்கமாகவும் , நரகமாகவும் மாற்றுவது உன்[அவரவர்] கையில் ..

திருந்தும்வரை சொல்லுவோம் சொல்லிக்கொண்டேயிருப்போம்.

நல்ல பதிவு ஜெய்லானி.

//சுட்ட இட்லியை சுட்டுவச்சிருக்கேன் கலைச்சாரலில்//

Bala said...

ஏய்யா அப்படி?....
மக்களின் வாழ்வை தீர்மானிப்பது அவர்களே..

athira said...

ஆ... ஜெய்..லானி,
நகைச்சுவையிலிருந்து சற்றுவிலகி வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீங்க வாழ்த்துக்கள்.

தனக்கொரு பிரச்சனைவரும்வரை மற்றவனின் பிரச்சனை பெரிதாகத் தெரிவதில்லை, அதனால்தான் இப்படி அநியாயங்கள் நடக்கிறது. நம்மை நாம் திருத்தினாலே உலகம் திருந்திவிடும்.

//வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் ?// அது மறைந்தபிறகல்லவா தெரியும்:), பொல்லாத மக்கள்ஸ்ஸ்ஸ்.... உயிருடன் இடுக்கும்போது வாழ்த்தவே மாட்டார்கள், மறைந்தபின் வாழ்த்தி என்ன பலன் சொல்லுங்கோ? எமக்கென்ன தெரியவோ போகுது...

பி.கு:
வேப்பங்குச்சியும், தலையிடிக்கு பச்சையிலை அரைத்த மருந்தும், சேப்பங்களியும் அனுப்புறேன், இவற்றைப்பாவிக்க நீங்க ரெடியா ஜெய்..லானி???? மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Unknown said...

//நாகரீகம் என்ற ஒற்றை சொல்லால் வாழ்கையே தட்டு தடுமாறி எங்கே போகிறோம் என்றே புரியாமல் நாமும் கெட்டு , வரும் நம் தலைமுறைகளுக்கு இந்த ஒற்றை பூமியில் எதை விட்டு விட்டு போகப் போகிறோம்.//

எத விட்டு போறமோ இல்லையோ.... புதுசு புதுசா வியாதிகளை விட்டுட்டு போவோம்...

நல்ல சிந்தனை...
வாழ்த்துக்கள் ஜெய்லானி..

(தூக்கத்துல கண்ணு தெரியாதுன்னு பயமுறுத்தர வேலைலாம் நம்ம கிட்ட ஆகாதே....:-) )

Ahamed irshad said...

மாறுபட்ட சிந்தனை.

Chitra said...

இவ்வுலகம் எத்தனையே பெரும் பண முதலைகளை கண்டு சிரித்திருக்கிறது . அவர்களை விழுங்கியும் இருக்கிறது , நீ பூமிக்கு புதியவன் அல்ல . முதல்வனும் அல்ல , நம் முன்னோர்களின் மீதி , அவர்களின் அருள் கொடை

.....நச். சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பச்சை இலைகள் குறைந்ததால் ஆயுர் வேதம் போய் ரசாயணங்களையே மருந்தாக உப்யோகிக்க வேண்டிய கட்டாயம்.

அதிலும் கலப்படம் செய்யும் இரண்டறிவு பெற்ற மூட மணிதனே!! //

"மூட ம'னி'தனே"
சரியான சாட்டை!

SUFFIX said...

தலைப்பும், சொன்ன கருத்துக்களும் அருமை. மனிதர்கள் திருந்த வேண்டும்.

malar said...

'''அதிலும் கலப்படம் செய்யும் இரண்டறிவு பெற்ற மூட மணிதனே!! நாளை உன் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நீ கலப்படம் செய்த மருந்தையே தருவாயா ?. உன் குடும்பத்தில் ஒருவருக்கு கிட்னி ஃபெய்லியர் வந்தால் நீ தயாரித்த போலி மருந்தை தருவாயா ?'''


அந்த சிந்தனையெல்லாம் உள்ள மனிதன் இந்த செயலில் ஈடுபடமாடான்..

இவனுங்கலுக்கெல்லாம் அன்னியன் தண்டனைதான் கொடுக்க வேண்டும்..

ஹுஸைனம்மா said...

//உனக்கே விபத்து எதாவது நேர்ந்தால் அப்போது என்ன செய்வாய் ? எதை கொண்டு மருத்துவம் செய்வாய் ?//

இந்த பயம்தான் நம்மையெல்லாம் பாவம் செய்ய விடாமல் தடுக்கிறது; அவர்களுக்கேன் இந்த பயம் இல்லை?

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பரான மேட்டர் எடுத்து சொல்லி இருக்கீங்க‌

முன்பு காலத்தில் வயதானால் தான் வியாதி, ஆனா இப்ப இளவயதிலேயே எல்லா வியாதியும் வந்துவிடுகிறது.

ஸாதிகா said...

//வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் ?///டச்சிங்..டச்சிங்..அருமையான சிந்தனை ஜெய்லானி
///

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நாளை உன் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நீ கலப்படம் செய்த மருந்தையே தருவாயா ?. உன் குடும்பத்தில் ஒருவருக்கு கிட்னி ஃபெய்லியர் வந்தால் நீ தயாரித்த போலி மருந்தை தருவாயா ? அத்தனை ஏன் உனக்கே விபத்து எதாவது நேர்ந்தால் அப்போது என்ன செய்வாய் ? //

நச்சுனு கேள்வி இருக்குங்க.. எல்லாமே சரி தான்..!!

இதையெல்லாம் புரிய வேண்டியவங்க புரிஞ்சிக்கிட்டா நல்லது..
வாழ்த்துக்கள்.. :)

ஜெய்லானி said...

@@@ஹாய் அரும்பாவூர்--//இவர்களுக்கு தேவை சொர்க்கம் போன்ற வாழ்க்கை அதற்க்கு அடுத்தவர் வாழ்க்கை நரகமாக்கி பணம் சம்பத்திது இவர்கள் சொர்கத்தை அனுபவிக்கிறார்கள்
உண்மையான் சொர்க்கம் எது என்று தெரியாமலே//

சரி , அடுத்த தலைமுறை நம்மை சபிக்காதா என்ன!! உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@முத்து-- முக்கியமான பாயிண்ட விட்டுடீங்களே, உயிர் காக்கும் மருந்திலும் கலப்படம் வந்து விட்டதே!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா //நல்லாவே சாடி இருக்கீங்க, புரிந்து கொள்ளப்படுமானு பாப்போம்.//

பாப்போம் , மூன்று மாதத்தில் மறக்கப்படும் என்பதை.!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி.//பட்டு என்னால சரியா திட்ட முடியல, உம்ம பானில நல்லா திட்டி ஒரு பதிவு போடுங்க!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா //.திருந்தும்வரை சொல்லுவோம் சொல்லிக்கொண்டேயிருப்போம்.//

மூட்டை மூட்டையா கண்டுபிடிச்ச பிறகு இன்னும் என்ன விசாரனை. உடனே என்கவுண்டர்தான் தீர்வு!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Bala //ஏய்யா அப்படி?....மக்களின் வாழ்வை தீர்மானிப்பது அவர்களே.//

மூளைக்கு வேலை தாங்க பாலா சார், மாற்றம் தானா வரும்!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அதிரா--//நகைச்சுவையிலிருந்து சற்றுவிலகி வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீங்க//

ராத்திரி தூக்கம் வரலன்னா என்ன செய்யிரதான் இதாங்க வேலையே..

//தனக்கொரு பிரச்சனைவரும்வரை மற்றவனின் பிரச்சனை பெரிதாகத் தெரிவதில்லை, அதனால்தான் இப்படி அநியாயங்கள் நடக்கிறது. நம்மை நாம் திருத்தினாலே உலகம் திருந்திவிடும்//

அதனாலென்ன எல்லாரையும் பிடிச்சி மூனு மாசம் ஜெயில்ல களி தின்ன வச்சா புரிய வைக்க முடியும்

//உயிருடன் இடுக்கும்போது வாழ்த்தவே மாட்டார்கள், மறைந்தபின் வாழ்த்தி என்ன பலன் சொல்லுங்கோ? எமக்கென்ன தெரியவோ போகுது...//

நீங்க 84ம் ((இன்னும் எத்தனை நாளைக்குதான் 16ம் )) பெற்று ஆயிரம் ஆண்டுகள் பேரும் புகழும் வீரமும் , வீவேகமும் , இளமையும் , பெரு வாழ்வு வாழ ஐயோ.. அதிரா கூடவே ..எலி , பூனை , முயல் ஐ விட்டுட்டேனே!!வாழ்த்துகிறான் இந்த ஜெய்லானி உஸ்.. அப்பாடா..ம்..முடியல..

இப்ப திருப்தியா ? !!!

//வேப்பங்குச்சியும், தலையிடிக்கு பச்சையிலை அரைத்த மருந்தும், சேப்பங்களியும் அனுப்புறேன், இவற்றைப்பாவிக்க நீங்க ரெடியா ஜெய்..லானி????//


உங்களைதாங்க இத்தனை நாளா தேடிகிட்டிருந்தேன்!! உடனே அனுப்புங்கோ!! சீக்கிரம்!!! அரைச்சது காய்திட போகுது..

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Han!F R!fay--//எத விட்டு போறமோ இல்லையோ.... புதுசு புதுசா வியாதிகளை விட்டுட்டு போவோம்...//

நமது குழந்தைகளுக்கு நாம் தரும் சாக்லேட்டா அது!!

//(தூக்கத்துல கண்ணு தெரியாதுன்னு பயமுறுத்தர வேலைலாம் நம்ம கிட்ட ஆகாதே....:-) )//

அப்ப லைட்ட போட்டுகிட்டா தூங்குறீங்க !! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத்--// மாறுபட்ட சிந்தனை.//

வருங்காலத்தை பத்தி பயம் அதான்.வேற ஒன்னுமில்ல!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--//.....நச். சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.//

விட்ட இடத்தையும் நிறப்பி இருந்தால் நல்லா இருந்திருக்கும் . (ஆமா யாருக்கு இந்த குட்டு ) உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN --//"மூட ம'னி'தனே"
சரியான சாட்டை!//

இப்படி பட்ட மனிதனுக்கு என்ன மரியாதை அதான் ” மணிதனே “ . உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@SUFFIX --//தலைப்பும், சொன்ன கருத்துக்களும் அருமை. மனிதர்கள் திருந்த வேண்டும்.//

ஊர் வரைக்கும் வந்துட்டு சொல்லாம போய்டீங்களே!!. பயணங்கள் சிறப்பா அமைஞ்சிதா!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@malar --//அந்த சிந்தனையெல்லாம் உள்ள மனிதன் இந்த செயலில் ஈடுபடமாடான்.. இவனுங்கலுக்கெல்லாம் அன்னியன் தண்டனைதான் கொடுக்க வேண்டும்..//

சபாஷ்!!! கரெக்டா புரிஞ்சிகிட்டீங்க!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா --//இந்த பயம்தான் நம்மையெல்லாம் பாவம் செய்ய விடாமல் தடுக்கிறது; அவர்களுக்கேன் இந்த பயம் இல்லை?//

பணம் , கண்ணை மறைக்குது . அதான் இப்படி அன்னியன் படத்தில் செஞ்சது மாதிரி பட்டினி போட்டு வெரும் கரன்சியை சாப்பிட வைக்கனும் . அப்பதாங்க புத்தி வரும்..உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

ஜெய்லானி said...

@@@Jaleela said...//முன்பு காலத்தில் வயதானால் தான் வியாதி, ஆனா இப்ப இளவயதிலேயே எல்லா வியாதியும் வந்துவிடுகிறது//

ஆமாங்க டாக்டர் . இதுக்கு காரணமும் நாமதாங்க டாக்டர் . நீங்க குடுத்த அவார்ட் மேலே இருக்கே பாத்தீங்களா டாக்டர். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி டாக்டர் !!!

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --//அருமையான சிந்தனை ஜெய்லானி//

இல்லைங்க பயத்தினால வந்த சிந்தனை , நம்ம தலைமுறைய இப்படியா விட்டுட்டு போகபோறோமுன்னு!!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Ananthi --//இதையெல்லாம் புரிய வேண்டியவங்க புரிஞ்சிக்கிட்டா நல்லது.//

இதையெல்லாம் நாம தட்டி கேக்கனும் இல்லாட்டி தட்டி தட்டி கேக்கனும் . அப்பதாங்க திருந்தும் !!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வேலன். said...

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் //
நிச்சயமாக ஜெய்லானி தான்...அருமையான கட்டுரை..வாழ்க வளமுடன். வேலன்.

பித்தனின் வாக்கு said...

நல்ல சிந்தனை, நல்ல கருத்துக்கள். ஜெய்லானி.

பித்தனின் வாக்கு said...

// ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!! //
ஓகே அப்படியா!. சரி சரி நான் சொல்லிவிடுகின்றேன்.

ஓன்னு !! சொல்லிட்டேன். இனி கண்ணு தெரியுமில்லை.

Asiya Omar said...

நான் வந்து கருத்து சொல்வத்ற்குள் கருத்துக்கள் குவிந்து விடுகிறது,நல்ல சிந்தனை.அருமையான வரிகள்.

ஜெய்லானி said...

@@@வேலன். --காட்டில நான் ஒரு சிறு எறும்பு மாதிரிங்க ..உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு-- அண்ணாத்த !! ஒடம்பு சரியாச்சா!! திரும்ப வந்ததுக்கு வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar ---நான் வந்து கருத்து சொல்வத்ற்குள் கருத்துக்கள் குவிந்து விடுகிறது,//

வாங்க! வாங்க!! நீங்க வந்ததே சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புத்தோழன் said...

நான் கொஞ்சம் லேட்டு தான்.... ஆனா சொல்ல வேண்டியத எப்போ சொன்னா என்ன பங்காளி... நல்ல சமூக கண்ணோட்டத்தோடு மனசுல இருக்கும் வேகம் அடங்கும் வரை கீ போர்டுடன் சண்டை போட்டுருக்கீங்கன்னு நினைக்குறேன்... திருந்துமா சமூகம்..... Lets wait and see....

ஜெய்லானி said...

@@@சசிகுமார் --வாங்க. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புத்தோழன் --//நல்ல சமூக கண்ணோட்டத்தோடு மனசுல இருக்கும் வேகம் அடங்கும் வரை கீ போர்டுடன் சண்டை போட்டுருக்கீங்கன்னு நினைக்குறேன்... திருந்துமா சமூகம்..... Lets wait and see...//

கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே தல!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

1 2 3.

ஆ கண்ணு பளிச்சின்னு தெரிந்சிரிச்சே ஜெய்லானி.

கலைச்சாரலில் உங்க கைவண்ணம்.

இனியபாதையில் என் எழுத்தின் எண்ணம்.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா /// 1 2 3.ஆ கண்ணு பளிச்சின்னு தெரிந்சிரிச்சே ஜெய்லானி.கலைச்சாரலில் உங்க கைவண்ணம்.இனியபாதையில் என் எழுத்தின் எண்ணம்//

பாக்கவே சந்தோஷமா இருந்தது . கவிஞருக்கு நல்லா கடிக்கவும் வருவது நல்ல விஷயம். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

மனோ சாமிநாதன் said...

மறைந்து வரும் நல்ல விஷயங்களைப்பற்றி மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! உங்களைப்போன்ற இளைஞர்கள் எல்லாம் இந்த போலி மருந்து விவகாரங்களை கையில் எடுத்து இன்னும் அதிகமாகவே சாட வேண்டும்! ஒரு சகோதரி எழுதியிருப்பதுபோல இதற்கெல்லாம் ‘அன்னியன்’ டைப் தண்டனைதான் கொடுக்க வேண்டும்!

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன் ---உண்மைதாங்க படிச்சதுமே ரத்தம் கொதிச்சி போச்சி . இவனுகளை அப்பவே என்கவுண்டரில் போட்டு தள்ளனும்.( 2008ம் வருஷம் சீனாவில் பால்பவுடரில் கலப்படம், சீன அரசு குவாலிட்டி ஆபீசரை உடனே தூக்கில் போட்டது ) உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .

ஜெய்லானி said...

@@@அக்பர் --//விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html //

ரொம்ப சந்தோஷம் , வருகிறேன். என் அடுத்த பதிவின் ஆச்சிரியங்களுடன்.

ஸாதிகா said...

அடடா ஜெய்லானி,எவ்வளோவ் பேருக்கு விருது...!!!!!!!!!அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்துவிட்டீர்கள்,நீங்களே உருவாக்கிய வைர விருது அழகு.எனக்கும் தந்தமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

விருது பதிவில் கமெண்ட் ஆஃப்ஷனே இல்லை.கமெண்ட்டும் பதிவு செய்ய இயலவில்லை??

Vetirmagal said...

அருமை!.

குண்டாக இருப்பவர்கள், அழகில்லாமல் இருப்பவர்கள், ரோகத்தால் பீடிக்கப்பட்டவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப் படுகிறார்கள.

ஆனால், பணத்துக்காக எமையும் செய்யும் பாவிகளை
சமூகம் கொண்டாடுகிறது. இவர்கறை நாம் ஒதுக்க வேண்டும். நம்மால் முடிந்த்து!

r.v.saravanan said...

உலகம் பிறந்தது நமக்காக

ஜெய்லானி நல்ல பதிவு

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))