Friday, April 23, 2010

ஜெய்லானி டீவியில் ---நீங்களும் சமைக்கலாம்

                        இன்று முதல் நமது ஜெய்லானி டீவியில் சமைப்பது எப்படி என்பதை நாம் பார்க்கப் போகிறோம் .

           இன்றைய நீங்களும் சமைக்கலாம் பகுதியில் சுடுதண்ணீர் வைப்பது எப்படின்னு பாக்கலாம். சுடுதண்ணீர் வைக்கிறதுக்கு முன்னே யாருக்கு அது குடிக்கவா இல்ல குளிக்கவா, எத்தனை பேருக்கு , சூடு சொரனை ஆளுக்கு எத்தனைன்னு ஒரு பிளான் பண்ணிக்கோங்க. . அப்படி பண்ணாட்டி அது உங்க மேலயே யாரும் டெஸ்ட் பண்ணிட்டா ? அப்புறம் என் மீடியா மீது கேஸ் போடக்கூடாது என்ன புரிஞ்சிதா ?ஓகே..

          அயோடக்ஸ் இல்லாட்டி நிவியா மாதிரி கிரீம் ஒன்னு கை வசம் இருக்கட்டும் சுட்டுட்டா தடவ வேனாமா அதுக்குதாங்க., மொபைல் போன் ரெடியா இருக்கட்டும் 108 ஆம்புலன்சுக்கு இல்ல உங்க குடும்ப டாக்டருக்கு போன் பண்ண வசதியா இருக்கும். சூடு எப்படின்னு அளக்க ஒரு தெர்மா மீட்டரை ரெடியா வச்சுகோங்க ஏன் விரலை விட்டா பாப்பீங்க அதுக்குதான். தரையில ஒரு காலி அரிசி சாக்கு துணியை போட்டு வையுங்க. இல்லாட்டி தூக்கும் போது வழுக்கி விழுந்துடுவீங்க .

         அடுத்ததா பாத்திரம் சின்ன குவளையா , இல்லை பெரிய அண்டாவா , சின்ன குண்டாவா என்பதை தீர்மாணிக்க வேண்டியது உங்க பொருப்பு கடைசில தூக்க கஷ்டப்படக்கூடாது பாருங்க அதுக்குதாங்க இது, ஒரு நல்ல பிராண்ட் தீப்பொட்டியா பாருங்க கடைசி நேரத்துல கழுத்து அறுக்கும் மொத்த வேலைக்கும் ஆப்பு வைத்து நம்மை திட்டு வாங்க வச்சுடும். ஜாக்கிரத சில நேரம் அடி உதைகூட கிடைக்கும் வீட்டில உள்ள மரியாதையை பொருத்து. சிலிண்டருல  கேஸ் இருக்கான்னு பாருங்க ,அண்டா குண்டாவுக்கு கேஸ் அடுப்பு சரிஆவாது . வெறகு கட்டை போட்டு எரிக்கும் அடுப்பு சரிவரும் ஓகே..


         இப்ப நீங்க எல்லா சாமானுடன் ரெடியா இருக்கீங்க. மறந்து போனா இதை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன்ல ஒட்டி வச்சு படிச்சு பாருங்க ஒரு ரெஃபரண்ஸ்சுக்கு உதவும். தெரியமா பானையை அடுப்பில வையுங்க . எத்தனை கிளாஸ் அல்லது எத்தனை அளவு என்று தீர்மானிச்சு வச்ச அளவை தண்ணீரை பானையில ஊத்துங்க. பின்ன மூடியை போடுங்க இல்லாட்டி அதுல பல்லி விழுந்து தற்கொலை பண்ணிக்கும் .கொலை கேசில உள்ள போய்டுவீங்க இதுக்கு ஜாமீன் எல்லாம் கிடைக்காது 

         நெருப்பை பத்த வச்சிட்டு ஒரு நாலு அடிதூரம் போய் குந்துங்க . ஒரு சேஃப்டிக்கு .அம்மனிகளுக்கு முன்ன ஒரு கோணி துணியை பிடிச்சிகிட்டு உட்காருவது இன்னும் நல்லது. பின்ன சேலை விக்கிற விலைக்கு  துணில ஓட்டை விழுந்தா யாரு அதுக்கு வைத்தியம் பாக்குறது. பழகிட்டா நாலு அடியை ரெண்டு அடியா கூட கொறச்சுக்கலாம். கொஞ்ச நேரத்துல கொதிக்கிற சத்தம் கேக்கும் மெதுவா ஒரு கிடுக்கியால திறந்து பாருங்க


        தெர்மாமீட்டரால மெதுவா தண்ணிக்கு மேல பிடிச்சு பாருங்க அதுல வரும் அளவு உங்களுக்கு திருப்தியா இருந்தா போதும் நெருப்பை அனைச்சிடுங்க . யாரையாவது தெம்பு உள்ள ஆளை கூப்பிட்டு பானையை இறக்கி வைக்க சொல்லுங்க. ஏன் விஷப்பரிச்சை . இப்ப நீங்க வெற்றிகரமா சுடுதண்ணீரை தயாரிச்சிட்டீங்க . வரும் பதிவுகளை தொடர்ந்து பாருங்க விரைவில நீங்களும் சமைக்கலாம்.
87 என்ன சொல்றாங்ன்னா ...:

ஹாய் அரும்பாவூர் said...

"தெர்மாமீட்டரால மெதுவா தண்ணிக்கு மேல பிடிச்சு பாருங்க அதுல வரும் அளவு உங்களுக்கு திருப்தியா இருந்தா போதும் நெருப்பை அனைச்சிடுங்க"

இது பெரிய லொள்ள இல்லே இருக்கு
கலக்கல் காமெடி பதிவு

GEETHA ACHAL said...

எப்படி ஜெய்லானி..இப்படி எல்லாம்...ஒரே சிரிச்சு...சிரிச்சு...போங்க...உங்களுடைய அடுத்த சமைக்கலாம் பகுதியினை சீக்கிரத்தில் எதிர்பார்கிறேன்...எதற்கு??..சிரிக்க தான்...சமைக்க அல்ல்ல்....

மசக்கவுண்டன் said...

ஓஹோ, இப்படித்தான் சுடுதண்ணி வைக்கறதுங்களா, இத்தனை நாளா இது தெரியாம பச்சத்தண்ணியலேயே குளிச்சுட்டு இருக்கேனுங்க.

ஆமாங்க, அது என்னமோ கெய்சர் அப்படீங்கறாங்களே, அதுலயும் சுடுதண்ணி வருமுங்களாமே,அதப்பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க.

நெறய விசயம் இருக்குது போல தெரியுதுங்க. ஒவ்வொண்ணா எடுத்து உடுங்க.

Chitra said...

நெருப்பை பத்த வச்சிட்டு ஒரு நாலு அடிதூரம் போய் குந்துங்க . ஒரு சேஃப்டிக்கு .அம்மனிகளுக்கு முன்ன ஒரு கோணி துணியை பிடிச்சிகிட்டு உட்காருவது இன்னும் நல்லது. பின்ன சேலை விக்கிற விலைக்கு துணில ஓட்டை விழுந்தா யாரு அதுக்கு வைத்தியம் பாக்குறது. பழகிட்டா நாலு அடியை ரெண்டு அடியா கூட கொறச்சுக்கலாம். கொஞ்ச நேரத்துல கொதிக்கிற சத்தம் கேக்கும் மெதுவா ஒரு கிடுக்கியால திறந்து பாருங்க


....... அதுல பாருங்க, இந்த பக்குவமான டிப்ஸ் ரெண்டு தெரியாமதான், எனக்கு சரியாம வராம, திணறிக்கொண்டு இருந்தேன். அளவை சரியா சொல்லி, ஸ்டெப் by ஸ்டெப் ஆ விளக்கி.........(அண்டாவை அல்ல, செய்முறையை) ........ திருப்தியா வைக்க சொல்லி கொடுத்திட்டீங்க. அடுத்து, நேர இருக்கும் போது, பால் காய்ச்சிறது எப்படின்னு சொல்லி கொடுத்துடுங்க. நன்றிகள் பல. ha,ha,ha,ha....

vanathy said...

ஜெய்லானி, இதை என் கணவரை படிக்க சொல்லனும். அவருக்குத் தான் சுடு தண்ணீர் கூட வைக்கத்தெரியாது. நீங்கள் அதில் expert போல இருக்கு. வாழ்த்துக்கள். உங்கள் மனைவி குடுத்து வைத்தவருங்ங்கோகா......

ஹேமா said...

அடக் கடவுளே .... ஜெய் அசத்திட்டீங்கப்பா !

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹிஹிஹிஹி....

சூப்பர் போங்க... இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்.. :)
சுடு தண்ணிய கூட இவ்வளவு அருமையா உங்கள தவிர யாரும் வைக்க முடியாது.. :) :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல்.. ஆமா ஜெய்லானி..

இதுல.. மங்குனிய ,தண்ணீரில் முங்க வைக்கும், Procedure இல்லையே..
//
மறந்து போனா இதை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன்ல ஒட்டி வச்சு படிச்சு பாருங்க //

இது வேறையா?...ஹா...ஹா...

பித்தனின் வாக்கு said...

அய்யய்யே எனக்கு இது தெரியாம போச்சுங்களே. அண்ணே அந்த பிளாஸ்டிக்குல கரண்ட் போட்டு காப்பிக்கு வெந்நி வைப்பாங்களே, அதையும் கொஞ்சம் விளக்கி சொன்னா நல்லா இருக்கும். அடுத்து என்ன பதிவு அண்ணே, நீர் மோர் செய்வது எப்படி என்றா?

கண்ணகி said...

அடடா இத்தன நாளா தெரியாமப் போச்சே....எதுக்கும் தள்ளி இருங்க...யாராச்சும் மூஞ்சியில ஊத்திரப்பொறாங்க...

Unknown said...

"ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!

இதுகாவதான் சொல்றேன்,

வெல்தண்ணிகூட போட தெரியாதுன்னா எப்புடிங்க மத்ததெல்லாம்,
பட்டாபட்டியை விட்டுதான் கேக்க சொல்லணும்

Balamurugan said...

//மொபைல் போன் ரெடியா இருக்கட்டும் 108 ஆம்புலன்சுக்கு இல்ல உங்க குடும்ப டாக்டருக்கு போன் பண்ண வசதியா இருக்கும்.//

நல்லா கெளப்புறாங்கையா பீதிய....!!
இங்க வெயில் ரொம்ப ஜாஸ்திங்க. அதனால் ஆணியே புடுங்கரதிள்ள.. ச்சே, வெந்நீரே வெக்கிறதில்ல. ஹிஹி!

Jaleela Kamal said...

ஓ எனக்கு போட்டியா வா நடத்துங்க.

ஏன் ஏன் இந்த கொலவெறி, கிங் பிஷ் மீன் சால்னவ சாப்பிட்டு இபப்டி உங்கள் மூளை சுறு சுறுப்பாயிடுச்சே,

என்ன நேயர்களே ஜெய்லான்னியின் இன்றை கிச்சனில் நீங்களும் சமைகக்லாமில் சுடுதண்ணீரை ஆபத்தில்லாமல் எப்படி போட்டு இரக்குவது என்பதை தெரிந்து கொண்டிர்கள்

அடுத்த தா மங்கு பிரபல ஆப்கானிய சமையல் கலை நிபுனர் மங்குனி அமைச்சர் பல முஸ்கி டிஸ்கியுடன் முட்டைய ( யானை முட்டைய) எப்படி பாயில் பண்ணனும் என்று சுலபமான முறையில் விளக்குவார் கான த்தவறாதீரக்ள்,

நாடோடி said...

ஆஹா வெந்நீர் இப்ப‌டி கூட போட‌லாமா?.. இது தெரியாம‌ இவ்வ‌ள‌வு நாளும் இருந்திட்டேன‌ப்பா........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீங்கள் சொன்னபடி வெந்நீர் வைத்துவிட்டேன்..
சூடு ஆறும்முன் , மங்குனி எங்கிருந்தாலும் வரவும்..

ஜெய்லானி said...

@@@ஹாய் அரும்பாவூர்--//இது பெரிய லொள்ள இல்லே இருக்கு கலக்கல் காமெடி பதிவு //

பின்ன சுடுதண்ணின்னா சும்மாவா ? .உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//எப்படி ஜெய்லானி..இப்படி எல்லாம்...ஒரேசிரிச்சு...சிரிச்சு...போங்க...உங்களுடைய அடுத்த சமைக்கலாம் பகுதியினை சீக்கிரத்தில் எதிர்பார்கிறேன்...எதற்கு??..சிரிக்க தான்...சமைக்க அல்ல்ல்...//

டீ வீ இன்னைக்கிதானே ஓப்பன் நிறைய வரும் பாருங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//ஓஹோ, இப்படித்தான் சுடுதண்ணி வைக்கறதுங்களா, இத்தனை நாளா இது தெரியாம பச்சத்தண்ணியலேயே குளிச்சுட்டு இருக்கேனுங்க.//

உங்கள மாதிரி ஆட்களின் வேண்டுதலால்தாங்க டீ வீ சேனலே திறந்திருக்கேன்.

//ஆமாங்க, அது என்னமோ கெய்சர் அப்படீங்கறாங்களே, அதுலயும் சுடுதண்ணி வருமுங்களாமே,அதப்பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க.//

அண்ணாத்தே!! அதுக்கு மூனு பக்கம் பதிவு போடனும் .அதுல அவ்வளோ விஷயம் இருக்கு

//நெறய விசயம் இருக்குது போல தெரியுதுங்க. ஒவ்வொண்ணா எடுத்து உடுங்க. //

மக்கள் தொண்டே மகேஷன் தொண்டு. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய்லானி, இதை என் கணவரை படிக்க சொல்லனும். அவருக்குத் தான் சுடு தண்ணீர் கூட வைக்கத்தெரியாது.//

பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன்ல ஒட்டுங்க இல்லாட்டி கேக்க வெக்கப்படுவார்

//நீங்கள் அதில் expert போல இருக்கு. வாழ்த்துக்கள். உங்கள் மனைவி குடுத்து வைத்தவருங்ங்கோகா......//

கில்லாடி நீங்க எப்படி கண்டுபிடிச்சிங்க.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra --//....... அதுல பாருங்க, இந்த பக்குவமான டிப்ஸ் ரெண்டு தெரியாமதான், எனக்கு சரியாம வராம, திணறிக்கொண்டு இருந்தேன். அளவை சரியா சொல்லி, ஸ்டெப் by ஸ்டெப் ஆ விளக்கி.........(அண்டாவை அல்ல, செய்முறையை) ........ திருப்தியா வைக்க சொல்லி கொடுத்திட்டீங்க. அடுத்து, நேர இருக்கும் போது, பால் காய்ச்சிறது எப்படின்னு சொல்லி கொடுத்துடுங்க. நன்றிகள் பல. ha,ha,ha,ha.... //


எப்பவும் ரெண்டு வரியோட போகும் நீங்க இன்னைக்கு ஐஞ்சி வரி பதில்!!! உங்க ஆசை விரைவில் நிறை வேறும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ILLUMINATI said...

யோவ்,ஆரம்பத்துலையே இந்த அலும்பா?ஆமா,உங்க டிவி புதுசா ஆரம்பிச்ச காமெடி சேனல்ங்களுக்கு போட்டியா ஆரம்பிச்சதா,இல்ல ஏற்கனவே இருக்குறதுக்கு போட்டியா அரம்பிச்சதா?
நான் எத சொல்றேன்னு புரியுதா?

ஜெய்லானி said...

@@@ஹேமா--//அடக் கடவுளே .... ஜெய் அசத்திட்டீங்கப்பா ! //

இதுக்கே வாயை தொறக்காதீங்க இன்னும் நிறைய வரும் . நீங்களும் ஈஸியா சமைக்கலாம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ILLUMINATI said...

அப்புறம்,சுடுதண்ணி எப்படி வைக்கணும்னு சொல்லிக்கொடுத்த கையோட இந்த பச்சைத்தண்ணி பச்சைத்தண்ணினு சொல்றாங்களே அதை எப்படி வைக்கணும்னு சொன்னிங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்.எதுனாச்சும் பச்சலை போடணுமோ?

ஜெய்லானி said...

@@@Ananthi--//
ஹிஹிஹிஹி....

சூப்பர் போங்க... இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்.. :)
சுடு தண்ணிய கூட இவ்வளவு அருமையா உங்கள தவிர யாரும் வைக்க முடியாது.. :) :) //

கல்யாணம் ஆகி புகுந்த வீட்டிற்கு போகும் பெண்களுக்காக போட்டது இது. சேனல் இப்பதானே ஓப்பன் தொடர்ந்து பாருங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ILLUMINATI said...

யய்யா ஜெயில் ஆணி...
இந்த கமெண்ட் அப்பரூவல்ல எடுத்தா நல்லா இருக்கும்.அப்படியே நம்ம பக்கமும் வர்றது...

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//கலக்கல்.. ஆமா ஜெய்லானி..இதுல.. மங்குனிய ,தண்ணீரில் முங்க வைக்கும், Procedure இல்லையே..//

முதநாளே ஆட்டை பலி குடுக்க விரும்பல. ஒரு ஒரு காலா வெட்டி சூப் வைக்கலாம்
//
மறந்து போனா இதை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன்ல ஒட்டி வச்சு படிச்சு பாருங்க //

இது வேறையா?...ஹா...ஹா...//

பின்ன உசிரு மேட்டராச்சே. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு--//அய்யய்யே எனக்கு இது தெரியாம போச்சுங்களே. அண்ணே அந்த பிளாஸ்டிக்குல கரண்ட் போட்டு காப்பிக்கு வெந்நி வைப்பாங்களே, அதையும் கொஞ்சம் விளக்கி சொன்னா நல்லா இருக்கும்.//

சார் நீங்க் சொல்ற அயிட்டம் குடுகுடு தாத்தா அவருக்கு மட்டும் செஞ்சிக்கிறது. விரிவா பின்ன பேசலாம்

//அடுத்து என்ன பதிவு அண்ணே, நீர் மோர் செய்வது எப்படி என்றா? //

பரவாயில்லையே நல்ல ஐடியா குடுக்கிறீங்க.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கண்ணகி--//அடடா இத்தன நாளா தெரியாமப் போச்சே....எதுக்கும் தள்ளி இருங்க...யாராச்சும் மூஞ்சியில ஊத்திரப்பொறாங்க...//

கொலக்காற பாவிங்க செஞ்சாலும் செய்வாய்ங்க உஷாரா இருக்கனும் .உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--// "ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!இதுகாவதான் சொல்றேன்,

வெல்தண்ணிகூட போட தெரியாதுன்னா எப்புடிங்க மத்ததெல்லாம்,
பட்டாபட்டியை விட்டுதான் கேக்க சொல்லணும்//


கரெக்டா சொல்லிட்டீங்க . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

ஜெய்லானி said...

@@@பாலமுருகன்--//நல்லா கெளப்புறாங்கையா பீதிய....!! இங்க வெயில் ரொம்ப ஜாஸ்திங்க. அதனால் ஆணியே புடுங்கரதிள்ள.. ச்சே, வெந்நீரே வெக்கிறதில்ல. ஹிஹி! //

சேனல் புதுசு இல்லையா , அடுத்த ஷோவில பாருங்க இது அதிகம் நம்ம பெண்களுக்காக போட்டது.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

ஜெய்லானி said...

@@@Jaleela--//ஓ எனக்கு போட்டியா வா நடத்துங்க.//

தலைப்பை சரியா பாருங்க மேடம். ஜெய்லானி டீவீ எப்போதுமே பெண்களுக்கு ஆதரவா இருக்குமே தவிர போட்டி பொறாமையா எப்போதும் இருக்காது.

//ஏன் ஏன் இந்த கொலவெறி, கிங் பிஷ் மீன் சால்னவ சாப்பிட்டு இபப்டி உங்கள் மூளை சுறு சுறுப்பாயிடுச்சே,//

பின்ன அரைக்கிலேன்னு போட்டா என்னா ஆகிறது. ஒரு கையிலேயே ஒரு கிலோ வரும்

//என்ன நேயர்களே ஜெய்லானியின் இன்றை கிச்சனில் நீங்களும் சமைகக்லாமில் சுடுதண்ணீரை ஆபத்தில்லாமல் எப்படி போட்டு இரக்குவது என்பதை தெரிந்து கொண்டிர்கள் //

பரவாயில்லை பேட்டி ,அறிவிப்பாளருக்கு நான் ஆள் தேடவாணாம். கூடவே ஆள் இருக்கு.

//அடுத்த தா மங்கு பிரபல ஆப்கானிய சமையல் கலை நிபுனர் மங்குனி அமைச்சர் பல முஸ்கி டிஸ்கியுடன் முட்டைய ( யானை முட்டைய) எப்படி பாயில் பண்ணனும் என்று சுலபமான முறையில் விளக்குவார் கான த்தவறாதீரக்ள்,//

வெடியை நல்லாதான் கொழுத்தி வைக்கிறீங்க . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ஆஹா வெந்நீர் இப்ப‌டி கூட போட‌லாமா?.. இது தெரியாம‌ இவ்வ‌ள‌வு நாளும் இருந்திட்டேன‌ப்பா........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

இனியாவது பாதுகாப்பா பத்திரமா வையுங்க . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//நீங்கள் சொன்னபடி வெந்நீர் வைத்துவிட்டேன்.. சூடு ஆறும்முன் , மங்குனி எங்கிருந்தாலும் வரவும்..//

ஆட்டை சுடுத்தண்ணீல போடறதுக்கு முன்ன பினாயில் தெளிக்கனும் . அப்ப தாங்க ஆந்த்ராக்ஸ் வியாதி வராது. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ILLUMINATI--//யோவ்,ஆரம்பத்துலையே இந்த அலும்பா?ஆமா,உங்க டிவி புதுசா ஆரம்பிச்ச காமெடி சேனல்ங்களுக்கு போட்டியா ஆரம்பிச்சதா,இல்ல ஏற்கனவே இருக்குறதுக்கு போட்டியா அரம்பிச்சதா?
நான் எத சொல்றேன்னு புரியுதா? //

யப்பா இலுமு , ஆரம்பத்திலேயே மூடு விழாவா ஆக்கிடதே. இப்பதான் ஒரு தாய்குலம் நலம் விசாரிச்சுது. இன்னும் வில்லங்கம் பிடிச்ச மூனு பேர் பாக்கி அறிவாளோட வந்திடப்போறாங்க. நீயே போட்டு குடுத்திடுவப்போல இருக்கே. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ILLUMINATI--//அப்புறம்,சுடுதண்ணி எப்படி வைக்கணும்னு சொல்லிக்கொடுத்த கையோட இந்த பச்சைத்தண்ணி பச்சைத்தண்ணினு சொல்றாங்களே அதை எப்படி வைக்கணும்னு சொன்னிங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்.எதுனாச்சும் பச்சலை போடணுமோ//

ஷூட்டிங் நடக்குது விரைவில் வெளிவரும் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஆ... ஜெய்..லானி.. இது எப்ப தொடக்கம் ஆரம்பம்?? தற்செயலாகப் பார்த்தேன் கண்டுவிட்டேன்..... கெதியில பிரியாணி செய்முறையையும் சொல்லுங்கோ. எல்லாம் சொன்னீங்க ஆனால் நெருப்பு எவ்வளவு “டிகிரில” இருக்கோணும் என்பதைச் சொல்லவில்லையே.... அதை எப்படிக் கண்டுபிடிப்பது? சுடுதண்ணி வைக்கிறதிலேயே எனக்கு நிறைய டவுட் வந்திட்டுது.....

ஜலீலாக்கா உங்கட கிச்சினுக்கு ஷட்டரைப் போடுங்கோ..... கீரைக்கடைக்கு எதிர்க்கடைபோல... வந்திட்டுதே..

ஜெய்லானி said...

@@@athira--//ஆ... ஜெய்..லானி.. இது எப்ப தொடக்கம் ஆரம்பம்?? தற்செயலாகப் பார்த்தேன் கண்டுவிட்டேன்..... கெதியில பிரியாணி செய்முறையையும் சொல்லுங்கோ. எல்லாம் சொன்னீங்க ஆனால் நெருப்பு எவ்வளவு “டிகிரில” இருக்கோணும் என்பதைச் சொல்லவில்லையே.... அதை எப்படிக் கண்டுபிடிப்பது? சுடுதண்ணி வைக்கிறதிலேயே எனக்கு நிறைய டவுட் வந்திட்டுது.....//

முதல்ல கொதிக்கிற சத்தம் , மூடியை தட்டுற சத்தம் கேக்கும் அதுதான் கொதிக்கிற அறிகுறி உடனே தட்டை எடுத்திருங்க . டிகிரி கண்டுபிடிக்கிறது உங்க சூடு சொரனை யை பொருத்து கொஞ்சம் கூட கொறய இருக்கும் அதுக்குதான் தெர்மா மீட்டர் இருக்கே.

//ஜலீலாக்கா உங்கட கிச்சினுக்கு ஷட்டரைப் போடுங்கோ..... கீரைக்கடைக்கு எதிர்க்கடைபோல... வந்திட்டுதே.. //

கிளஸ்டர் குண்டா போட்டுட்டீங்களே. வத்தி வக்கிறதுக்கு அதிரா மாதிரி வேற ஆளே கிடைக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நசரேயன் said...

வாழ்க வெந்நீர்

Starjan (ஸ்டார்ஜன்) said...

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. வெந்நீர் சூடு ஆறினால் வெந்நீரா தண்ணியா..

ஜெய்லானி said...

@@@நசரேயன்--//வாழ்க வெந்நீர் //

எதாவது கட்சி தொறக்க ஆசையா என்ன . எதுவா இருந்தாலும் கொ.ப.செ .நாந்தேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.. வெந்நீர் சூடு ஆறினால் வெந்நீரா தண்ணியா.. //

வாங்க வாத்யார் !!ஏன் இந்த கொல வெறி. தண்ணிதாங்க . சூடா இருந்தா மட்டுமே அது சுடுதண்ணி அல்லது வெந்நீர். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

வெந்நீர் வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா?ஏற்கனவே மங்குனிக்கு சுடு தண்ணி என்றால் பயம்,இந்தப்பக்கம் வருவாரு?

ஜெய்லானி said...

@@@asiya omar--// வெந்நீர் வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா?ஏற்கனவே மங்குனிக்கு சுடு தண்ணி என்றால் பயம்,இந்தப்பக்கம் வருவாரு?//

வந்தா ஒரே அமுக்கு . தப்பிக்க சான்ஸே இல்ல வேக வைக்க பெரிய குண்டா ரெடி..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சுசி said...

கடவுளே.. எங்கள காப்பாத்துங்க..

:))))

ஜெய்லானி said...

@@@சுசி--//கடவுளே.. எங்கள காப்பாத்துங்க.. :)))) //

பயப்படாதீங்க இந்த முறையில சுடுத்தண்ணீர் வைத்தா கண்டிப்பா கடவுளின் கருனை உங்களுக்கு உண்டு. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

r.v.saravanan said...

சாதாரண சுடு தண்ணி வைக்கிறதுக்கு இவ்வளவு கஷ்டப்படனுமா
இப்பவே கண்ணை கட்டுதே

SUFFIX said...

நல்லா பத்தவச்சிட்டிங்க ஜெய்லானி :)

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//சாதாரண சுடு தண்ணி வைக்கிறதுக்கு இவ்வளவு கஷ்டப்படனுமா
இப்பவே கண்ணை கட்டுதே //


சேஃப்டி ரூல்ஸ்ன்னு ஒன்னு இருக்கே. இனிமேலாவது ஜக்கிரதையா பாத்து பண்ணுங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@SUFFIX--//நல்லா பத்தவச்சிட்டிங்க ஜெய்லானி :)//

நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க சூடா வெந்நீர் குடிச்சிட்டு போங்க .( டீயே அப்படிதான் இருக்கும் ) சூடு சரியா இருக்கா நீங்கதான் பாத்து சொல்லனும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

சுடுதண்ணி வக்கிறது, இம்பூட்டு சுலுவா!!!
நிலையத்தாருக்கு நன்றி :))

அன்புடன் மலிக்கா said...

//நெருப்பை பத்த வச்சிட்டு ஒரு நாலு அடிதூரம் போய் குந்துங்க . ஒரு சேஃப்டிக்கு .அம்மனிகளுக்கு முன்ன ஒரு கோணி துணியை பிடிச்சிகிட்டு உட்காருவது இன்னும் நல்லது. பின்ன சேலை விக்கிற விலைக்கு துணில ஓட்டை விழுந்தா யாரு அதுக்கு வைத்தியம் பாக்குறது. பழகிட்டா நாலு அடியை ரெண்டு அடியா கூட கொறச்சுக்கலாம். கொஞ்ச நேரத்துல கொதிக்கிற சத்தம் கேக்கும் மெதுவா ஒரு கிடுக்கியால திறந்து பாருங்க//

நிருபர் மலிக்காவின் கேள்விகளுக்கு. சுட சுட தண்ணீர்போடச்சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஜெய்லானியின் சுளீர் பதில் என்ன என எதிர்பார்க்கப்படுகிறது..

ஜெய்லானி எப்படி இப்படியெல்லாம்.
இதுவெல்லாம் எங்க கத்துக்கிட்டீங்க.
எத்தனை மாச கோர்ஸ் ல இதை கத்துகுனீங்க.
இதை கத்துக்கிடபின்னால எத்தன் பேருக்கு சொல்லிகொடுத்துயிருக்கீக.
முக்கியமா மங்குக்கும் ஜலீல்லாக்கு கத்துக்கொடுத்தீங்களா?
சூடான தண்ணீரில் ஜில் சூப் வைக்கமுடியுமா?
கொதிக்கும் தண்ணீரில் எத்தனை முறை கைவிட்டு சூடாகிவிட்டதென பார்த்தீர்கள்.

இதற்கு பதில் சொல்லுங்கள் சுடுதண்ணீ ஜெய்லானி

அடுத்த கேள்விக்கு மீண்டும் வருவாள்
அன்புடன் மலிக்கா

Priya said...

அப்பப்பா... இவ்வளவு விஷயமிருக்கா? நான் கூட என்னமோ சாதாரணமா நினைச்சுட்டேன்.மிக தெளிவா அழகா விளக்கிய விதம் சூப்பர்.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஜெய்..லானி!! நீங்க இப்படிச் செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.... ஏன் எம்பிக்கு நித்திரைக்குளிசை கொடுத்தீங்க? பாருங்க, ஆள் அட்ரசே இல்லை.. உங்களுக்கு சங்கிலி வந்தாலும் வரலாம், எதுக்கும் ரெடியா இருங்க.. சுடுதண்ணியை ஓஓஓஓஓஓஓஓவ் பண்ணிட்டு:).

Menaga Sathia said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு...

மின்மினி RS said...

வெந்நீர் அப்படின்னா என்ன?.. வெந்நீர் எப்படி இருக்கும் ஜெய்லானி...

ஹரீகா said...

ஹாய் சலாமலைக்கும்..

நான் தான் ஹரீகா வந்துட்டேன். ஒரு வார்த்தை வாங்கன்னு சொல்லமாட்டீங்களா அங்கிள்.

சரீ...

**((ஏன்னு தெரியல!!! நான் இது வரைக்கும் யார் பிளாக்கிலயும் போய் என் பிளாக்குக்கு வாங்கன்னு யாரையும் கூப்பிட்டது இல்ல,அதுக்கூட காரணமா
இருக்கலாம் !!!!)))**

==@@@இந்த பேர நா எங்கயே பாத்திருக்கேனே!!! ஏனுங்க அம்மினி கொஞ்சம் என் பிளாக் பக்கம் வந்துட்டு போனா இந்த நக்கலுக்கு கரெக்டா பதில் செல்லுவேன்@@@===

-- இதை எழுதியது யாராம்? காலரை தூக்கி விட்டுக்கொண்டு.. ஹய்யோ ஹய்யோ. "என் பிளாக்குக்கு வாங்கன்னு யாரையும் கூப்பிட்டது இல்ல" என்று ஆண்ட புளுகு ஆகாச புளுகு வேறயா. கஷ்டம்டா சாமீ

**((ஆடு விக்கிர விலையில, வாண்ட்டா வந்த ஆட்டை இப்பிடி ஓட்டி விட்டியே மங்கு. இனி யாராவது நம்மை நலம் விசாரிக்க வருவாங்களா என்ன?))**

-- இந்த ஆட்டை அடவிடுவீங்களோ ஓட விடுவீங்களோ உங்க பாடு, மங்கு அங்கிள் பாடு.சரியான கொலைகார கூட்டத்திலே வந்து மாட்டிகிட்டோமோன்னு பயமா இருக்கு.

கவலையே படாதீர்கள் இனிமேலும் நானே வருவேன்
-------------------------------------------------
அன்புடன் ஹரீகா

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//சுடுதண்ணி வக்கிறது, இம்பூட்டு சுலுவா!!! நிலையத்தாருக்கு நன்றி :)) //

பின்ன உயிர குடுத்து ஷூட்டிங் பண்ணியிருக்கு. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//நிருபர் மலிக்காவின் கேள்விகளுக்கு. சுட சுட தண்ணீர்போடச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஜெய்லானியின் சுளீர் பதில் என்ன என எதிர்பார்க்கப்படுகிறது//

ஜெ.டீவீ :வாங்க!! வாங்க!! நீரோடை நிருபரே வந்தனம். உட்காருங்க.

நீரோ. மலீ :ஜெய்லானி எப்படி இப்படியெல்லாம்.?

ஜெ.டீவீ : எப்படி இப்படி ?

நீரோ. மலீ :இதுவெல்லாம் எங்க கத்துக்கிட்டீங்க.

ஜெ.டீவீ : எங்க வீட்டு தோட்டத்தில , அதாங் சேஃப் பிளேஸ் அதாங்க பாதுகாப்பான இடம் அடி வாங்குனா வெளியே தெரியாது.

நீரோ. மலீ :எத்தனை மாச கோர்ஸ் ல இதை கத்துகுனீங்க.?

ஜெ.டீவீ : அடி பலமா எப்ப விழுந்துச்சோ அப்பவே கத்துகிட்டேன்.

நீரோ. மலீ :இதை கத்துக்கிடபின்னால எத்தன் பேருக்கு சொல்லிகொடுத்துயிருக்கீக ?

ஜெ.டீவீ : இல்ல டீ.வீயில போட்ட பின்ன கிடைக்கிற விமர்சனத்த பொருத்து கத்து குடுப்பேன். சேனல் புதுசுங்க

நீரோ. மலீ :முக்கியமா மங்குக்கும் ஜலீல்லாக்கு கத்துக்கொடுத்தீங்களா ?

ஜெ.டீவீ :இன்னும் இல்ல , கொழுக்கட்டை சந்திப்புக்கு பின்ன நேரடி லைவ் டெலிகாஸ்ட் இருக்கு அப்ப நீங்களும் வாங்க . கையில வெறகு கட்டையோட ச்செ..ஸாரி ஒளரிட்டேன்.. மைக்கோட

நீரோ. மலீ :சூடான தண்ணீரில் ஜில் சூப் வைக்கமுடியுமா?

ஜெ.டீவீ :ஏன் முடியாது நீங்க சூடான ஒட்டகப்பாலில் ஐஸ் டீ போடும் போது சூடான தண்ணீரில் ஜில் சூப் வைக்கலாம். ரொம்ப சுவையா இருக்கும். நேயர்கள் விருப்பப் பட்டால் எங்கள் ஜெ சேனல் அதை ஒலிப்பரப்பும்.

நீரோ. மலீ : கொதிக்கும் தண்ணீரில் எத்தனை முறை கைவிட்டு சூடாகிவிட்டதென பார்த்தீர்கள்.?

ஜெ.டீவீ :தொழில் ரகசியத்தை வெளியில் சொன்னால் மற்ற டீவீக்களில் வந்து விடும். பேடண்ட் க்கு அப்ளை பண்ணி இருக்கு .வந்ததும் நிச்சயமாய் உங்களுக்கு அழைப்பு உண்டு அப்ப வாங்க விலாவாரியா பேட்டி தரேன்.

நீரோ. மலீ :இதற்கு பதில் சொல்லுங்கள் சுடுதண்ணீ ஜெய்லானி!!அடுத்த கேள்விக்கு மீண்டும் வருவாள்

ஜெ.டீவீ : நீரோடை மலீக்கா அவர்களே! உங்க சந்தேகம் எல்லாம் தீர்ந்ததுன்னு நினைக்கிரேன். ஜெய்லானி டீ வீ சார்பா நன்றி......நன்றி....

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Priya--//அப்பப்பா... இவ்வளவு விஷயமிருக்கா? நான் கூட என்னமோ சாதாரணமா நினைச்சுட்டேன்.மிக தெளிவா அழகா விளக்கிய விதம் சூப்பர்.//

இன்னும் ஏதாவது சந்தேகம் வந்தால் நம்ம டீ வீ க்கு எழுதி அனுப்பலாம். மக்கள் தொண்டே மாங்காய் தொண்டு. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஜெய்..லானி!! நீங்க இப்படிச் செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.... ஏன் எம்பிக்கு நித்திரைக்குளிசை கொடுத்தீங்க? பாருங்க, ஆள் அட்ரசே இல்லை.. உங்களுக்கு சங்கிலி வந்தாலும் வரலாம், எதுக்கும் ரெடியா இருங்க.. சுடுதண்ணியை ஓஓஓஓஓஓஓஓவ் பண்ணிட்டு:).//

வாசல்ல ரெண்டு டாபர்மேன் காவலுக்கு வைக்க சொன்னேனே வைக்கலியா!! அடப்பாவிங்களா. மங்கு ஒரு வேளை தற்கொலை பண்ணிகிச்சா.உங்கள் மீள் வருகைக்கு நன்றி

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//.சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு...//

சந்தோஷமா இருந்தா நமக்கு அதுவே போதும் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மின்மினி--//வெந்நீர் அப்படின்னா என்ன?.. வெந்நீர் எப்படி இருக்கும் ஜெய்லானி... //

சேனல் தொறந்த உடனே சந்தேகம் கேக்கக்கூடாது . வரும் டெலிகாஸ்டில் நிறைய போடுவேம் அப்ப தானாவே புரியும். ஆங் என்ன கேட்டீங்க் !வெந்நீர் பாட்டில்ல வரும் , கூவம் தண்ணிய சுத்தப்படுத்தினா என்னா கலர் , மஞ்சள் கலந்த வென்மை நிறம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எனக்கும் 'பச்சை'க் கலரில்,
பச்சைத் தண்ணீர் செய்முறை
தெரியணும். அதை எப்போ
விளக்குவீங்க?

ஜெய்லானி said...

@@@HARIKA--//ஹாய் சலாமலைக்கும்.. நான் தான் ஹரீகா வந்துட்டேன். ஒரு வார்த்தை வாங்கன்னு சொல்லமாட்டீங்களா அங்கிள்.//

வஅலைக்கும்அஸ்ஸலாம்.முதல்முறையா வீட்டுக்கு வந்துட்டீங்க வாங்கன்னு சொல்லாம விடுவேனா வாங்க!!! வாங்க!! வாங்க!! வலது காலையும் இடது காலையும் ஒன்னா சேத்து வச்சி வாங்க. நல்வரவு

//சரீ...((ஏன்னு தெரியல!!! நான் இது வரைக்கும் யார் பிளாக்கிலயும் போய் என் பிளாக்குக்கு வாங்கன்னு யாரையும் கூப்பிட்டது இல்ல, அதுக்கூட காரணமாஇருக்கலாம் !!!!)))//

உண்மைதாங்க இது வரைக்கும் அப்படிதான்.

//இந்த பேர நா எங்கயே பாத்திருக்கேனே!!! ஏனுங்க அம்மினி கொஞ்சம் என் பிளாக் பக்கம் வந்துட்டு போனா இந்த நக்கலுக்கு கரெக்டா பதில் செல்லுவேன் //

-- இதை எழுதியது யாராம்? காலரை தூக்கி விட்டுக்கொண்டு.. ஹய்யோ ஹய்யோ. "என் பிளாக்குக்கு வாங்கன்னு யாரையும் கூப்பிட்டது இல்ல" என்று ஆண்ட புளுகு ஆகாச புளுகு வேறயா. கஷ்டம்டா சாமீ

**((ஆடு விக்கிர விலையில, வாண்ட்டா வந்த ஆட்டை இப்பிடி ஓட்டி விட்டியே மங்கு. இனி யாராவது நம்மை நலம் விசாரிக்க வருவாங்களா என்ன?))**

-- இந்த ஆட்டை அடவிடுவீங்களோ ஓட விடுவீங்களோ உங்க பாடு, மங்கு அங்கிள் பாடு.சரியான கொலைகார கூட்டத்திலே வந்து மாட்டிகிட்டோமோன்னு பயமா இருக்கு.//

அது வந்து இதே மாதிரி பேரோட இன்னொரு பிளாக்கில ஒன்னு வந்துச்சி அதனால அப்படி கூப்பிட்டேன். நீங்க சவுதியில ரியாத்ன்னு நெனக்கிரேன் சரியா? நாங்க கொலக்கார கூட்டமெல்லாம் இல்ல பயப்பட்டதீங்க சும்மா தமாசு. வாழக்கூடிய சின்ன வாழ்கையில எல்லாரும் சந்தோஷமா இருக்கனும் அதுதான் எங்க பாலிஸி.

// கவலையே படாதீர்கள் இனிமேலும் நானே வருவேன்அன்புடன் ஹரீகா //

வாங்க ஆனா கோபப்படக்கூடாது.கோவப்பட்டா கலாய்ப்பு அதிகமா இருக்கும் பரவாயில்லயா ? உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//எனக்கும் 'பச்சை'க் கலரில், பச்சைத் தண்ணீர் செய்முறை தெரியணும். அதை எப்போ விளக்குவீங்க? //

சித்த வைத்தியம் பிரிவில் வரும். அப்ப தெளிவா புரியும் படி சொல்றேன்.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

MUTHU said...

இப்படி கூட தண்ணீர் போடா முடியுமா

ஜெய்லானி said...

@@@Muthu--//இப்படி கூட தண்ணீர் போடா முடியுமா //

தண்ணீர் போட முடியாது வைக்கதான் முடியும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கண்ணா.. said...

என்ன தல...

இத்த இப்பிடி விலாவாரியா சொல்லிட்டு... அடுப்பு பத்த வைக்குறது எப்பிடின்னு சொல்லலியே தல...

பாரு அது தெரியாம நானெல்லாம் எப்பிடி தவிச்சு போய்ட்டேன்னு... சீக்கிரம் அதுக்கும் ஓரு பதிவு போடு தல....

ஜெய்லானி said...

@@@கண்ணா--//என்ன தல...இத்த இப்பிடி விலாவாரியா சொல்லிட்டு... அடுப்பு பத்த வைக்குறது எப்பிடின்னு சொல்லலியே தல...

பாரு அது தெரியாம நானெல்லாம் எப்பிடி தவிச்சு போய்ட்டேன்னு... சீக்கிரம் அதுக்கும் ஓரு பதிவு போடு தல//

அடடா மறந்து போச்சே. சரி அடுத்த ப்ரேகிராம்ல நேயர் விருப்பத்தை பூர்த்தி பண்ணிடலாம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எல் கே said...

jai nan itha apapve padichituen aanal comment poda mudiyala.. suduthanni vaika katthu kudutheenga sari. ippa thanni vacha paathiram(andaa)adi pidchiruchuna atha eppadi clean panrathunu eppa pathivu poda poreenga

ராஜேஷ் said...

தல முதல்ல தண்ணி எப்படி தயார் பண்ணுரதுனு சொல்லுங்க அப்பறம் சுடுதண்ணி தயார் பண்ணலாம்

ஜெய்லானி said...

@@@LK--//jai nan itha apapve padichituen aanal comment poda mudiyala.. suduthanni vaika katthu kudutheenga sari. ippa thanni vacha paathiram(andaa)adi pidchiruchuna atha eppadi clean panrathunu eppa pathivu poda poreenga //

வாங்க சார் . பாத்திரம் கழுவுவது பெரிய புராஜக்ட் ஆச்சே . அதையும் சீக்கிரமா டெலிகாஸ்ட் பண்ணிடலாம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செந்தில்குமார் said...

அடடா இத்தன நாளா தெரியாமப் போச்சே....

"தெர்மாமீட்டரால மெதுவா தண்ணிக்கு மேல பிடிச்சு பாருங்க அதுல வரும் அளவு உங்களுக்கு திருப்தியா இருந்தா போதும் நெருப்பை அனைச்சிடுங்க"

எப்படி ஜெய்லானி..இப்படி எல்லாம்...

ஹுஸைனம்மா said...

ஒரு சுடுதண்ணிப் பதிவுக்கு 73 கமெண்டுகள்!!

சுடுதண்ணிகூட வைக்கத் தெரியலன்னு யாராவது இனி சொல்லட்டும் தெரியும் சேதி!! இதப் படிச்சதுக்கப்புறந்தான் எவ்ளோ கஷ்டமான வேலையை நானும் செஞ்சுருக்கேன்னு புரியுது!! என் அறிவுக் கண்ணைத் திறந்ததுக்கு நன்றி!!

ஜெய்லானி said...

@@@ராஜேஷ்--//தல முதல்ல தண்ணி எப்படி தயார் பண்ணுரதுனு சொல்லுங்க அப்பறம் சுடுதண்ணி தயார் பண்ணலாம் //

ஏங்க நிலா விலா இருக்கீங்க சொல்லவேயில்லையே. எனக்கு அங்க போரிங் பண்ண தெரியாதே. பாக்கலாம் ஏதாவது ராக்கெட் விட்டுதாங்க பாக்கனும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@செந்தில்குமார்--// அடடா இத்தன நாளா தெரியாமப் போச்சே....எப்படி ஜெய்லானி..இப்படி எல்லாம்... //

வாங்க , ஜெய்லானி டீ வீ எப்பவும் உங்கள் டீ வீ. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//

ஒரு சுடுதண்ணிப் பதிவுக்கு 73 கமெண்டுகள்!!

சுடுதண்ணிகூட வைக்கத் தெரியலன்னு யாராவது இனி சொல்லட்டும் தெரியும் சேதி!! இதப் படிச்சதுக்கப்புறந்தான் எவ்ளோ கஷ்டமான வேலையை நானும் செஞ்சுருக்கேன்னு புரியுது!! என் அறிவுக் கண்ணைத் திறந்ததுக்கு நன்றி!! //

ஜெய்லானி டீவீயை தொடர்ந்து பாருங்க உங்க அறிவு மழுங்கி ச்சீ...அறிவு இன்னும் ஷார்பா ஆகும். கஷ்டமான வேலையை பாதுகாப்பா ஈஸியா செய்யலாம் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

நிருபர் மலிக்கா கேட்ட கேள்வியும், அதுக்கு பட்டு பட்டுன்னு ஜெ,டீவி பதிலும் அருமை, அடுத்த வாரம் மங்கு டீவியா, ஏன் மங்கு இன்னும் வரல், சுடுதண்ணீ என்றதும் ரொம்ப ஜ்ல்பு பிடித்து கொண்டதா?


// நான் முதலில் இதை பார்த்ததும் ஜெய்லானி டீவிய ஜெயா டீவி நினைத்து கொண்டேன், நெஜமாவே சுடு தண்ணீர் போடுவ்த சொல்லி காண்பிக்க போறீங்க என்று நினைத்து கொண்டேன், ஹாஅஹா


///ஆனாலும் அந்த கரி அடுப்பு மூட்டி போடும் வெண்ணீரின் வாசனையே ரொம்ப நல்ல இருக்கும் மணமா.//

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சத்தியமா முடியல ஆத்தா.... நீங்க என்னை விட பெரிய சமையல் ராணியா இருப்பீக போல (இனிமே என்னோட சமயலை ரங்கமணி குறை சொன்ன ரெபர் ஜெய்லானி ப்ளாக்ன்னு சொல்லிட போறேன்...ஹா ஹா ஹா)

இமா க்றிஸ் said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது// ம். ;)

//இதை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன்ல ஒட்டி வச்சு படிச்சு பாருங்க// இப்பவே சிரிச்சு சிரிச்சு... முடியல. இது வேற பண்ணணுமா!! ;)

ஜெய்லானி said...

@@@Jaleela--//நிருபர் மலிக்கா கேட்ட கேள்வியும், அதுக்கு பட்டு பட்டுன்னு ஜெ,டீவி பதிலும் அருமை, அடுத்த வாரம் மங்கு டீவியா, ஏன் மங்கு இன்னும் வரல், சுடுதண்ணீ என்றதும் ரொம்ப ஜ்ல்பு பிடித்து கொண்டதா?//

வாங்க, நான் இது வரைக்கும் யாரையும் என் பிளாக்குக்கு வாங்கன்னு கூப்பிட்டது இல்லை. மொக்கையா ஓட்டிகிட்டு இருக்கேன். அந்த அளவு தகுதி எனக்கு இருக்கா அதுவும் தெரியாது.


// நான் முதலில் இதை பார்த்ததும் ஜெய்லானி டீவிய ஜெயா டீவி நினைத்து கொண்டேன்,//

யப்பா, கூப்பிட்டு அடி வாங்க வச்சிடுவீங்க போலிருக்குதே!!!

// நெஜமாவே சுடு தண்ணீர் போடுவ்த சொல்லி காண்பிக்க போறீங்க என்று நினைத்து கொண்டேன், ஹாஅஹா//

அப்ப இதை பாத்தா சுடுதண்ணீ வைக்கிற மாதிரி தெரிலயா ஹி...ஹி...ஹி...


///ஆனாலும் அந்த கரி அடுப்பு மூட்டி போடும் வெண்ணீரின் வாசனையே ரொம்ப நல்ல இருக்கும் மணமா.//

உண்மைதான். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி --//சத்தியமா முடியல ஆத்தா.... நீங்க என்னை விட பெரிய சமையல் ராணியா இருப்பீக போல (இனிமே என்னோட சமயலை ரங்கமணி குறை சொன்ன ரெபர் ஜெய்லானி ப்ளாக்ன்னு சொல்லிட போறேன்...ஹா ஹா ஹா)//

இதுக்கே அசந்தா எப்படி அடுத்த பதிவையும் பாருங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா-- //ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது// ம். ;)

//இதை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன்ல ஒட்டி வச்சு படிச்சு பாருங்க// இப்பவே சிரிச்சு சிரிச்சு... முடியல. இது வேற பண்ணணுமா!! ;)

பாதி அதிராவை பாத்து கத்துகிட்டது. இன்னும் முழுசா ஆனாஆஆஆஆஆஆஅ....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anisha Yunus said...

நல்லாத்தானைய்யா போயிட்டு இருந்தீக? திடீர்னு ஏன் இப்புடி?

ஜெய்லானி said...

@@@அன்னு--//நல்லாத்தானைய்யா போயிட்டு இருந்தீக? திடீர்னு ஏன் இப்புடி?//

ஹா..ஹா...புதுசா கல்யாணம் ஆகிற வங்களுக்கு இது ரெம்ப பயன் படும் அனீஸ். சேஃப்டி , செக்யூரிட்டி நிறைய இருக்குல்ல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

Jaleela Kamal said...

அட்டகாசமான அடுப்படிகள்
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_21.html
உங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))