Saturday, March 20, 2010

குற்றமா குறையா !!!

நம்மில் பலர் எதிலாவது குற்றங்குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்களாகஇருக்கிறார்கள். இன்னும் சிலரோ மனந்திறந்து பாராட்டுவது கூட கிடையாது. இதுவும் ஒரு வகை வியாதி மாதிரிதான்.

எனது நண்பர் ஒருவர் இப்படித்தான். இவருடன் ஹோட்டலுக்கு போனால்போகும் போது எப்படி போனோமோ அதே மாதிரி பசியுடன் திரும்பவேண்டிவரும் . ஆனால் அவர் மட்டும் எல்லாத்திலேயும் ரெண்டு பிலேட் அடித்திருப்பார். எல்லாத்திலேயும் குறை சொல்லிக்கொண்டே சாப்பிட்டு விடுவதில் கில்லாடி.


இப்போதெல்லாம் அவரை கண்டாலே தலைமறைவு வாழ்கைதான். என்ன செய்வது. அந்த ஒரு குணத்தை தவிர மற்றதுக்கு ஆள் சரிதான். ஏன் இந்த குணம் முதலில் ஹோட்டலை பார்கலாம் .இதிலும் இரண்டு வகை உண்டு. தினமும் அல்லது அடிக்கடி வரும் கஸ்டமருக்காக சமைப்பது., நமது அதிருப்தியை சொன்னால் சிறிது கேட்பார்கள் ,இரண்டு நாள் கழித்து அதே கதைதான், நேரம் கிடைக்கும் போது பட்டென்று விலையை உயர்த்திவிடுவது எல்லாம் நடக்கும், இரண்டாவது வகையானது கொஞ்ஜம் அடாவடி வந்தால் வா , வேண்டாமென்றால் போ என்பது மாதிரி. இது அதிகம் நடப்பது ரயில்வே , பஸ் ஸ்டாண்ட், ஸ்டால்களில்தான்.


இங்கெல்லாம் ருசிக்கு மட்டுமே முதலிடம் , உப்பு, மிளகு, காரம் அதிகமாக இருந்தாலும் சுத்தம் என்பது மருந்துக்கு கூட இருக்காது. தலையாட்டிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்ததும் பேதி மாத்திரையை தேடி ஓட வேண்டிவரும். முடிந்த வரை வீட்டில் சாப்பிட பழகவேண்டும். அல்லது சமைக்க பழகனும்.


இரண்டாவதாக வீட்டில் பார்கலாம் , எத்தனையோ தடவை பார்த்து பார்த்து அழகாக , சுத்தமாக சமைத்து வைத்து தனக்கு பசித்தாலும் , வெளியே போன கணவருக்காக காத்திருந்து வந்ததும் முகம் மலர்ந்து முதலில் பரிமாறுவதை பார்திருக்கிறோம் , கேட்டிருக்கிறோம் ., ஆனால் எப்போதாவது ஒரு தடவை உப்போ , காரமோ அல்லது சோறு குழைந்தோ விட்டால் வீட்டில் ஒரே கூச்சல் குழப்பம்தான். ஏதோ இன்று மட்டுமில்லாமல் தினமும் நடப்பது போல் திட்டுதான் .மனைவி ஏதோ திட்டம் போட்டு செய்தது மாதிரி நடந்துக் கொள்வது. அன்று நடக்கும் திருவிழாவில் குடும்பத்தில் யாருமே சாப்பிடாமல் சூழ்நிலையை சோகமாக்கி விடுவார்கள்.. உணவும் அப்படியே கிடந்து வீணாகி போகும். சரி போனால் போகிறது விடு அடுத்தமுறை பார்த்து செய் என்று ஒருமுறை சொல்லிபாருங்கள் .மனைவியின் பார்வையில் நீங்கள் ஒருஹீரோவாகி விடுவீர்கள்.


சோற்றில் உப்பு அதிகமாகி விட்டால் , சிம்பிளாக ஒரு குழம்பு உப்பு போடாமல் வைத்து சமாளிக்கலாம். புளி அப்படியே , இல்லை எழுமிச்சை சாதமாக மாற்றி விடலாம் . அப்படியும் உண்ணமுடியாமல் இருந்தால் அதை வடாம், அல்லது முறுக்கு பிழிந்து காய வைத்து உபயோகப்படுத்தலாம்.

சோறு குழைந்து விட்டால் அதன் தகுதிக்கு ஏற்றால் போல் அதனுடன் பால் அல்லது வெல்லம் சேர்த்து வெண் பொங்கலாகவோ இல்லை சர்க்கரை பொங்கலாகவோ மாற்றி விடலாம். இல்லை இருக்கவே இருக்கு தயிர் , தயிர் தாளித்து தயிர் சாதமாக மாற்றி விடலாம்.


சில நேரங்களில் பருப்பு வேகாமல் மக்கர் பன்னும். முதல் முறையிலேயே சமைக்கும் போதே தெரிந்து விடும். என்ன செய்வது நாம் நிறைய வாங்கி இருப்போம், அதை கழுவி காயவைத்து கொள்ளவும். சாம்பார் செய்யும் முன் தேவையான அளவு எடுத்து மிக்ஸியில் முக்கால்பாகம் பவுடர் மாதிரி அரைத்து தண்ணீரில் கொதிக்கவிடுங்கள். இந்த முறையில் செய்தால் ஒரு மணி நேரத்தில் ஆகும் சாம்பார் 25 நிமிடத்திலேயே தயாராகிவிடும்.


இன்னும் இதுப்போல நிறைய உண்டு. ஆனால் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உலகில் எத்தனையோ பேர் ஒரு வேளை கஞ்ஜிக்கூட (வெளிநாட்டில் ரொட்டி , பிரட் ) கிடைக்காதபோது இறைவன் உங்களை இந்த அளவிற்காவது வைத்துள்ளானே என்று நன்றி கூறுங்கள்.


நம் உடலில் உள்ள உறுப்புக்கள் அதுஅது அதன் வேலையை திறன்பட செய்கிறது. அது அடுத்ததை குறை சொல்வதுமில்லை , பொறாமை படுவதுமில்லை.

25 என்ன சொல்றாங்ன்னா ...:

Chitra said...

சமையல் குறிப்புகளுடன், கூறியிருக்கும் அறிவுரைகளும் அருமை.

மசக்கவுண்டன் said...

நல்ல பதிவு ஜெய்லானி,

நமது வளர்ப்பு முறையில் உள்ள கோளாறு இது. தாம் பெற்ற செல்வங்கள் எவ்வளவு நன்றாகப்படித்தாலும் அல்லது வேறு நல்ல காரியங்கள் செய்தாலும் மனம் விட்டு பாராட்டுவது என்பது பெற்றோர்களிடத்தில் காணக்கிடைக்காத குணம்.

ஏனென்றால் அப்படி பாராட்டினால் அவனுக்கு கர்வம் வந்துவிடும். பிறகு யாரையும் மதிக்க மாட்டான் என்கிற மனப்பான்மை. வேறு யாராவது பாராட்டினால் கூட "ம். அவன் என்ன பெரிசா செஞ்சு கிளிச்சுட்டான்" என்று மட்டம் தட்டிப் பேசியே நம் குழந்தைகளின் ஆர்வத்தை மழுங்கடிப்பார்கள்.

இந்த சூழ்நிலையில் வளர்ந்த நாம், பின் எவ்வாறு இருப்போம்? ஆனாலும் நம்மை மாற்றிக்கொள்ள முயலவேண்டும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல வேளை.. நான் பசிக்கு சாப்பிடுவேனே தவிர, ருசிக்கு இல்லை..
நல்ல கருத்துக்கள்..

Unknown said...

ஒருமாதிரி சமையல் குறிப்பும் சொல்லி விட்டின்க போல

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல பதிவு பாஸ் ... !

Jaleela Kamal said...

என்ன ஜெய்லானி வீடு மாறி வந்துட்டேனா?

ம்ம்ம்ம்ம் கலக்கலான பதிவு . கணவரிடம் திட்டு வாங்கும் பெண்களுக்கு நல்ல அறிவுரை. நல்ல டிப்ஸ்

அப்துல்மாலிக் said...

அறிவுரையிலே முக்கியமானது வயித்துக்கு சாப்பிடும் உணவில்தான். இது நல்லாயிருந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும்

நல்ல பகிர்வு

SUFFIX said...

ஹோட்டலில் சாப்பிடப்போனால் ஏதும் குறை இருந்தால், உடனே திருப்பி கொடுத்து விடுவதுண்டு, காசு கொடுக்கிறோம் அத்ற்கு தகுந்தாற் போல இருக்க வேண்டும். ஆனால் வீட்டில் அப்படி செய்வதில்லை, அது முறையும் அல்ல!! பரவாயில்லையே ப்ராக்டிக்கலான டிப்ஸும் கொடுத்திருக்கீங்க. ஜமாய்ங்க!!

நாடோடி said...

இது தான் காரசாரமான பதிவா? நல்லா இருக்கு..

நாளும் நலமே விளையட்டும் said...

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
இது எங்கும் பொருந்தும். வீட்டில்
உப்பு பற்றவில்லை /அதிகம் என்று கூட சொல்ல முடியாவிட்டால் வேறு எங்கு சொல்வதாம்?

Unknown said...

\\ உலகில் எத்தனையோ பேர் ஒரு வேளை கஞ்ஜிக்கூட (வெளிநாட்டில் ரொட்டி , பிரட் ) கிடைக்காதபோது இறைவன் உங்களை இந்த அளவிற்காவது வைத்துள்ளானே என்று நன்றி கூறுங்கள்\\

வேலன். said...

எல்லாம் சரி நண்பரே...பிரியாணியை பற்றி ஒன்றும் காணோம்...வாழ்க வளமுடன்,வேலன்.

ஜெய்லானி said...

@@@Chitra --நடு ராத்திரியில் ,பதிவிட்டவுடன் முதல் கருத்தே உங்களுடையதுதான் சந்தோஷம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன் --கவுண்டரய்யா மேட்டர சும்மா கப்புன்னு புடிச்சிட்டீங்க , இன்னைக்கு நைட் டூட்டியா நீங்களுமா தூங்கல!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி.- வழக்கமான குசும்ப கானோமே!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@A.சிவசங்கர்--உங்க கல்யாண்த்திற்கு பிறகு தேவைப்படுமே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பிரியமுடன்...வசந்த் --உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Jaleela //என்ன ஜெய்லானி வீடு மாறி வந்துட்டேனா?//

ஒரு வேளை இந்த டிப்ஸ நீங்க முதல்லேயே போட்டுட்டீங்களா ??உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@அபுஅஃப்ஸர்-- உண்மை தாங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@SUFFIX --//ப்ராக்டிக்கலான டிப்ஸும் கொடுத்திருக்கீங்க.//
வீட்டு பெண்களுக்கு நிறைய வரும் , ஆனால் அந்த சண்டை சச்சரவில் மூட் இல்லாமல் எல்லாரையும் பட்டினி ஆக்கிவிடுவார்கள். நாமும் ஈகோவினால் சூழ்நிலையை இன்னும் கடினம் ஆக்கிவிடுவோம் அவ்வளவே !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@நாடோடி--உன்னும் உண்வை குறை சொல்வது பாவமில்லையா ? அதுதான்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@நாளும் நலமே விளையட்டும்--//வீட்டில்
உப்பு பற்றவில்லை /அதிகம் என்று கூட சொல்ல முடியாவிட்டால் வேறு எங்கு சொல்வதாம்?//

வாரத்தில் ஒருநாள் மட்டும் மூனு வேளையும் சமையல் பண்ணி பார்தால் அதன் அருமை புரியும் சகோதரா!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Han!F R!fay --உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@வேலன்.//பிரியாணியை பற்றி ஒன்றும் காணோம்.//

இதன் ஸ்பெஷலிஸ்டான பிரியாணி நாஸியா, ஜலீலா, ஆசியாஉமர் , மலீகா அவர்களுக்கு இந்த மடல் ரீடைரக்ட் செய்யபடுகிறது.( ஆத்தாடி!! தப்பிச்சேன் )பின்குறிப்பு-- சித்ரா டீச்சர்,தினேஷ் கிட்ட கேட்டா மசாலா+ சிக்கன் ஒன்னும் போடாத பிரியாணிக்கு சூப்பர் ரெஃப்ரண்ஸ் கிடைக்கும்.

http://konjamvettipechu.blogspot.com/2010/02/blog-post_15.html.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Shyam said...

நக்கீரன் பரம்பரை ஆகா இருப்பாங்களோ

ஜெய்லானி said...

@@@Shyam--//நக்கீரன் பரம்பரை ஆகா இருப்பாங்களோ//

நாம விசுவாமித்ராக இல்லாத வரை.....!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

அருமையான அறிவுரைகள்.நன்றி ஜெய்லானி.///நம் உடலில் உள்ள உறுப்புக்கள் அதுஅது அதன் வேலையை திறன்பட செய்கிறது. அது அடுத்ததை குறை சொல்வதுமில்லை , பொறாமை படுவதுமில்லை///பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை.கண்டிப்பாக இதுவும் குட் பிளாக்கில் தேர்வாகிவிடும்.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

Jaleela Kamal said...

ஆஹா எனக்கு போட்டியா ஒரு ஆளா? ம்ம் நடக்கட்டும் நடகட்டும் எப்படியோ நல்ல விஷியஙக்ள் சிலரை சென்றடைந்தால் சரிதான், அதை நான் சொன்னா என்ன, நீங்க சொன்னா என்ன.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --அடுத்தடுத்து இரண்டு தேர்வானதில் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிரது. நான் சரியாக சொல்கிறேனா என்று. இந்த பதிவுலக்காட்டில் நான் ஒரு சிறு எறும்பு அவ்வளவே!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Jaleela--போட்டியா!!! ஆத்தாடி நீங்க சுமே மல்யுத்த வீராங்கனை , நா ஒரு வயசு பச்ச கொயந்த!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!தாங்குமா ?

Balamurugan said...

நம் ஆன்றோர்கள் உணவை மருந்து மாதிரி சாப்பிடச் சொன்னார்கள். ஆனா இப்போ ஹோட்டல்ல போய் சாப்பிட்டா அதுக்கு தனியா மருந்து சாப்பிட வேண்டி இறுகுது.

அன்புடன் மலிக்கா said...

@@@Jaleela--போட்டியா!!! ஆத்தாடி நீங்க சுமே மல்யுத்த வீராங்கனை , நா ஒரு வயசு பச்ச கொயந்த!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!தாங்குமா //

என்னது கொயந்தயா. யாருப்பா அங்கே இதகேட்க நாதியே இல்லையா. இது அடுக்குமா பொறுக்குமா..

அப்படியெல்லாம் நான் சொல்லமாட்டேன் ஜெய்லானி..

பாவம் நீங்க அப்பாவி.[ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்]
பதிவு கலக்கல்... எப்படியும் ஜலீக்காவை முந்திடாலுமுன்னு நினைத்ததற்கு வாழ்த்துக்கள்..

ஜெய்லானி said...

@@@பாலமுருகன் --நீங்க சொல்வது சரிதான்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@அன்புடன் மலிக்கா-- //என்னது கொயந்தயா. யாருப்பா அங்கே இதகேட்க நாதியே இல்லையா. இது அடுக்குமா பொறுக்குமா..//

பாத்தீங்களா ஜலீலாக்கா!!.இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன்.ஓகே..ஓகே...நீங்க யானை மாதிரி நான் சுண்டெலி மாதிரி போதுமா ?..

//பாவம் நீங்க அப்பாவி//

ஐ...ஐ...ஹை....

//[ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்]//

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

//எப்படியும் ஜலீக்காவை முந்திடாலுமுன்னு நினைத்ததற்கு //

இதுவரை அந்த குணம் வந்ததில்லை , வருவதில்லை....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

ஜெய்லானி நிஜமாகவே நீங்க எழுதியதா?அல்லது திருமதி எழுதியதா?அருமை போங்கள்,பாராட்டுக்கள்.

ஜெய்லானி said...

@@@asiya omar --//ஜெய்லானி நிஜமாகவே நீங்க எழுதியதா?அல்லது திருமதி எழுதியதா//

இதுவரையில், நான் பிளாக் தொடங்கியதே என் இணிய துனைவிக்கு தெரியாது. எல்லா மொக்கைகளும் நான் போடுவதுதான். லேட்டா வந்தாலும் படித்து விட்டு கருத்து இட்டதுக்கு நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))