Monday, May 10, 2010

அம்மாக்கள் !! தினம் !!! யார் கண்டு பிடிச்சது ?


         நேற்று அன்னையர் தினம் .எல்லா பதிவுலகிலும், ரேடியோ டிவி மற்றும் பொது ஊடகங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

          கவிதை வாயிலாகவும் , கட்டுரை மற்றும் பாடல்கள் மூலம் நினைவு கொள்ளப்பட்டது.சந்தோஷமான விஷயம்தான் ஆனாலும் உலகில்  தாயாக முடியாத எத்தனையோ வாழ்ந்தும் , வாழ்ந்துக் கொண்டிருக்கும் நல்ல  உள்ளங்களுக்காக இந்த தினம் இந்தப் பதிவு.


இது யார் மனசசையும் புண்படுத்த இல்லை. அவங்களுக்காக ஒரு தினம் 365 நாட்களில் ஏன் இல்லை


67 என்ன சொல்றாங்ன்னா ...:

மசக்கவுண்டன் said...

ஜெய்லானி,
"வலைப்பதிவர்கள் தினம்" அப்படீன்னு ஒண்ணு கண்டிப்பா வேணுமுங்க. ஜூன் 15 ந்தேதி வச்சுக்கலாங்களா? அன்னிக்குத்தான் எனக்கு பொறந்த நாளு. எப்படீங்க சௌகரியம்?

Chitra said...

June 15 - super! முன்னோட்டமா, மே 13 கூட கொண்டாடி பாத்துருவோமா?

ஹேமா said...

உண்மையா மனசைத் தொடுற
சிந்தனைக் கேள்விதான் ஜெய்.

சித்ரா மே 13 ஆஆ ?

Adirai khalid said...

தினம் ஒரு தினம்
அதில் பெற்றோர்கள் தினமும்
போதை அடைத்த பாட்டில்களோடும்
ஒருவேளை உணவோடும் இங்கு
பரிமாறி பறந்துவிடுமே

நின் சேவைக்கெல்லாம்
என் கைமாறு என் செய்வேனம்மா ?

இன்றுஅன்னையர் தினமாம் !
அவர்களுக்கெங்கே தெரியும்
சுவர்க்கம் உன் காலுக்கடியில்
(செய்யும் சேவையில்) உண்டென்று

நின் செய்த சேவையெல்லாம்
யான் என் கைமாருசெய்வேனம்மா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எல்லா நாளும் இனிய நாளே..

ரொம்ப பிரச்சனைனா, பேசாமா...பட்டாபட்டியோட,
பிறந்த நாளே.. எல்லோரும் உகந்த நாள்னு அறிவிச்சுடுங்க..

சார்.. இரு ப்ளோல இதெல்லாம் வருது.. பேசாம, வைரமுத்துவ கழட்டிட்டு, நான் பாட்டு எழுதப்போகட்டுமா?..

பதிவுலகமாவது நல்லாயிருக்குமே.. அதுக்கு கேட்டேன்.. ஹி..ஹி

vanathy said...

ஜெய்லானி, மனசைத் தொடும் வாசகங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

அவர்களையும் வாழ்த்தி விடுவோம், அப்படி
இருப்பவர்கள் மனது வைத்தால், தாயில்லா
குழந்தைகளுக்கு தாய் ஆகலாம்.

Asiya Omar said...

நல்ல சிந்தனை,வாழ்த்துக்கள்.

Prasanna said...

Good one :)

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி... அருமையான‌ சிந்த‌னை..

ஜெய் said...

நீங்க சொல்லிட்டீங்க இல்ல ஜெய்லானி.. கொண்டாடிடுவோம்..

athira said...

வித்தியாசமாக சிந்திக்கிறீங்கள் ஜெய்..லானி. சிந்தனை தொடர வாழ்த்துக்கள்.

அவங்களுக்காக ஒரு தினம் 365 நாட்களில் ஏன் இல்லை/// அப்படி இருந்தால்தான், அது சொல்லிக்காட்டுவதுபோல மனதை நோகவைக்கும் ஜெய்..லானி.

பெற்றால்தான் பிள்ளையா? குழந்தை இருந்தால்தான் அன்னையோ? அன்னை திரேசா இல்ல?? பெண்கள் என்றால் அன்னையர்தான்.... எப்பவுமே அவர்களிடம் தாய்ப்பாசம் கிடைக்கும். இப்படி நினைத்துக்கூட, ஒரு தினத்தை உருவாக்காமல் இருந்திருக்கலாம் இல்லையா??.

நம் முன்னோருக்கு தெரியும் எதுக்கெல்லாம் கொண்டாட்டம் வைக்கோணுமென்று, அதுக்காகத்தானே மறக்காமல் முட்டாள்கள் தினம் உருவாக்கினார்கள்..... ஆங்..... மீஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜலீலாக்கா அந்த மெற்றோவில கொஞ்சம் இடங் கொடுங்கோ எனக்கு... ஸ்பீட்டா போகுமில்ல???

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//ஜெய்லானி "வலைப்பதிவர்கள் தினம்" அப்படீன்னு ஒண்ணு கண்டிப்பா வேணுமுங்க. ஜூன் 15 ந்தேதி வச்சுக்கலாங்களா? அன்னிக்குத்தான் எனக்கு பொறந்த நாளு. எப்படீங்க சௌகரியம்?//

அன்புடையீர் வணக்கம் , தங்கள் கடிதம் கிடைத்தது . தங்கள் கோரிக்கை தற்போது பரிசீலனையில் இருப்பதால் முடிவு குறித்து தேதி பின்னர் அறீவிக்கப்படும் .

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--//June 15 - super! முன்னோட்டமா, மே 13 கூட கொண்டாடி பாத்துருவோமா? //

வாவ்!!சரியான போட்டி .சீக்கிரம் முடிவு பண்ணுங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//உண்மையா மனசைத் தொடுற சிந்தனைக் கேள்விதான் ஜெய்.//

எத்தனையோ பேரை பாக்கும் போது பாவமா இருக்கும்.எதிலும் மனம் ஒட்டாமல்!!

//சித்ரா மே 13 ஆஆ ?//

எதாவது ஒன்னு முடிவு பண்ணுங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மு.அ. ஹாலித்--//தினம் ஒரு தினம் அதில் பெற்றோர்கள் தினமும் போதை அடைத்த பாட்டில்களோடும் ஒருவேளை உணவோடும் இங்கு
பரிமாறி பறந்துவிடுமே //

ஹாலித் ,என்னுடைய கேள்வியும் இதுதான். ஒருநாள் போதுமா ?.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//எல்லா நாளும் இனிய நாளே..//

என்னை பொருத்த வரை இதே கருத்துதான்

//ரொம்ப பிரச்சனைனா, பேசாமா... பட்டாபட்டியோட, பிறந்த நாளே.. எல்லோரும் உகந்த நாள்னு அறிவிச்சுடுங்க..//

ஆர்டர் ஆன் தி வே சார்!!

// சார்.. ஒரு ப்ளோல இதெல்லாம் வருது.. பேசாம, வைரமுத்துவ கழட்டிட்டு, நான் பாட்டு எழுதப்போகட்டுமா?..//

ஒத்த வழி பாதையிலே ஏ..ஏ...ஏ..ஏ..ஏ..ஏ
ஒத்த பனை மேட்டருகே ஏ...ஏஏ....ஏஏ
ஒத்த மாடு குறுக்கே வர ஏ..ஏ...ஏ...ஏ...ஏ
எங்கே போவேன் நா பேராண்டி நா எங்கே போவேன்.

இப்படிப்பட்ட நல்ல பாட்டா எழுதுங்க சாமி

//பதிவுலகமாவது நல்லாயிருக்குமே.. அதுக்கு கேட்டேன்.. ஹி..ஹி//

இப்ப கெடா வெட்றது போதாதா ? இன்னுமா !!! தாங்காது ராஸா..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய்லானி, மனசைத் தொடும் வாசகங்கள்.//

பாவம் அவங்க. நேற்றய நாளில் மனசு கஷ்டப்பட்டிருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//அவர்களையும் வாழ்த்தி விடுவோம், அப்படி இருப்பவர்கள் மனது வைத்தால், தாயில்லா குழந்தைகளுக்கு தாய் ஆகலாம்.//

சரியா சொன்னீங்க , ஆனால் சமுதாயம் அவ்ர்களுக்கு கொடுக்கும் பெயர்.?? !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar--//நல்ல சிந்தனை,வாழ்த்துக்கள்.//

மாத்தியும் யோசிக்கனுமில்ல. அதான் இப்படி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--// Good one :) //

வாங்க சார்!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி... அருமையான‌ சிந்த‌னை..//

வாங்க ஸ்டீபன்!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெய்--//நீங்க சொல்லிட்டீங்க இல்ல ஜெய்லானி.. கொண்டாடிடுவோம்..//

இப்பதானே திரியில நெருப்பு வச்சிருக்கு பாக்கலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//வித்தியாசமாக சிந்திக்கிறீங்கள் ஜெய்..லானி. சிந்தனை தொடர வாழ்த்துக்கள்.//

செக்கு மாடு மாதிரி இருக்குகூடாது இல்லயா அதுக்குதான்.

//அவங்களுக்காக ஒரு தினம் 365 நாட்களில் ஏன் இல்லை/// அப்படி இருந்தால்தான், அது சொல்லிக்காட்டுவதுபோல மனதை நோகவைக்கும் ஜெய்..லானி.//

இப்ப மட்டும் அவர்கள் சந்தோஷமா இருக்காங்களா என்ன !! திருமணம் ஆகி இரண்டாம் வருடத்திலிருந்து கேட்பது யார் 99 சதவீதம் பெண்கள்தான். ஏன் இல்லை ?.இன்னும் இல்லையா ? அப்படி இருக்கும் போது அன்னையர் தினம் அவர்களை இன்னும் காயப்படுத்தாதா ? இது மட்டுமே என் கேள்வி!!

//பெற்றால்தான் பிள்ளையா? குழந்தை இருந்தால்தான் அன்னையோ? அன்னை திரேசா இல்ல?? பெண்கள் என்றால் அன்னையர்தான்.... எப்பவுமே அவர்களிடம் தாய்ப்பாசம் கிடைக்கும். இப்படி நினைத்துக்கூட, ஒரு தினத்தை உருவாக்காமல் இருந்திருக்கலாம் இல்லையா??.//

கேள்விக்கேட்டு நீங்களே பதில் சொல்லிட்டீங்க

//நம் முன்னோருக்கு தெரியும் எதுக்கெல்லாம் கொண்டாட்டம் வைக்கோணுமென்று, அதுக்காகத்தானே மறக்காமல் முட்டாள்கள் தினம் உருவாக்கினார்கள்..... ஆங்..... மீஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//

ஹா...ஹா.. மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி.. அப்ப அன்னையர் தினம் முட்டாளகள் தினமா ?. இது தெரியாம நிறைய இடத்துல வாழ்த்து செய்தி போட்டுட்டேனே !!! வாட் எ பிட்டி..

//ஜலீலாக்கா அந்த மெற்றோவில கொஞ்சம் இடங் கொடுங்கோ எனக்கு... ஸ்பீட்டா போகுமில்ல???//

அதெல்லாம் ஸ்பீடா போகும் . இறங்குற இடம் வருமுல்ல.க்கி..க்கி...( தமாசு.. கோவிச்சிகாதீங்க.. )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வேலன். said...

மே 13ஐ முதலில் கொண்டாடிவோம். அப்புறம் ஜீன் 15 ஐ கொண்டாடலாம்.வாழ்க வளமுடன்,வேலன்.

r.v.saravanan said...

வித்தியாசமான சிந்தனை ஜெய்லானி

ஜெயந்தி said...

நல்ல சிந்தனை.

Ahamed irshad said...

நல்ல ஆக்கம்....


இப்படிக்கு

மற்றவர்கள் கண்டு கொள்ளாதவர்களை கண்டு அவர்களுக்கும் ஒரு பதிவு போடுபவர்களை கண்டுகொள்ளும் சங்கம்...

ஹுஸைனம்மா said...

அன்னையர் தினத்தைவிட, “வலைப்பதிவர் தினம்” ஐடியா சூப்பர்!! எதுக்கும் விஜாரிச்சு பாருங்க, ஏற்கனவே அதுக்கும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாட ஆரம்பிச்சிருப்பாங்க. அப்படி இல்லைன்னா, ஏப்ரல்-1 லயே இதுக்கும் கொண்டாடிடலாம்.

அதிரா, உங்க பாயிண்ட் சூப்பர்!! பெரிய மனுஷி மாதிரி அழகா சொல்லிட்டீங்க!! இதுக்குத்தான் பாட்டிகள் சகவாசமும் வேணுங்கிறது!! ;-)))

MUTHU said...

ஜெய்லானி நேற்று நான் தமிளிஷ் படிக்கும் போது கேபிள் ஷங்கர் சாரின்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் விமர்சனத்தில் முத்து என்ற I.D யில் ஒரு கமெண்ட் வந்து இருக்கிறது,ஆனால் அது நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் இதற்க்கு ஒரு வழி சொல்லவும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆமா உண்மையிலே கவனிக்கவேண்டிய விசயம். சிறப்பான கவனத்துக்கு கொண்டுவந்ததுக்காக மங்குனி மூலம் ஒரு பூங்கொத்து.

செந்தமிழ் செல்வி said...

சகோ. ஜெய்லானி,
இந்தக் கேள்வி என் மனதில் இருந்து கொண்டே இருந்ததால் தான் இரவு வரை நான் எங்குமே வாழ்த்துப் பதிவு போடாமல் இருந்தேன். எல்லோரும் போட்டு நாம் போடலைன்னா சரியில்லையேன்னு தான் பிறகு பதிவிட்டேன். நீங்களும் அன்னையாவீர்கள் என்று ஆசிர்வதிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
நல்ல பதிவு

நிலாமதி said...

வெளி நாடுகளில் ..வேலைப்ரபரப்பின் தொலை தூர உறவுகள் நினைக்க ஒரு நாள் அன்னையர் தின மாயிருக்க்லாம். எனக்கு என்றும் அன்னை ....தினம் நாள் தோறும்.

எம் அப்துல் காதர் said...

அன்னைகள் இல்லா உலகம் அந்நிய உலகம் சார், பதிவுக்கு வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

தங்கள் பதிவு மனசை தொட்டுவிட்டது..நீங்கள் சொல்வது உண்மை தான்..ஆனால் அப்படி ஒருநாள் இருந்தால், குழந்தைஇல்லாத பெண்கள் வருத்தபடுவார்களே தவிர சந்தோசம் கிடைக்காது...

மின்மினி RS said...

ஹாய் ஜெய்., ரொம்ப சிந்திக்கவச்சிருக்கீங்களே.. நன்று நன்று.. அருமையான பதிவு.

ஜெய்லானி said...

@@@வேலன்--//மே 13ஐ முதலில் கொண்டாடிவோம். அப்புறம் ஜீன் 15 ஐ கொண்டாடலாம்.வாழ்க வளமுடன்,வேலன்.//

அதுசரி ,யார் மனசும் நோகக்கூடாது. டபுள் ஓக்கே!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//வித்தியாசமான சிந்தனை ஜெய்லானி //

வாங்க !!வாங்க !உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//நல்ல சிந்தனை.//

வாங்க !!வாங்க !உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத்--// நல்ல ஆக்கம்....

இப்படிக்கு

மற்றவர்கள் கண்டு கொள்ளாதவர்களை கண்டு அவர்களுக்கும் ஒரு பதிவு போடுபவர்களை கண்டுகொள்ளும் சங்கம்...//

வாங்க இர்ஷாத். சங்கத்துல அட்மிஷன் எப்ப ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//அன்னையர் தினத்தைவிட, “வலைப்பதிவர் தினம்” ஐடியா சூப்பர்!!//

கவுண்டர் தாத்தா!! ஹுஸைனம்மா பேத்தியின் ஒரு ஓட்டு உங்களுக்கு ,என்னுடையும் சேர்த்து ரெண்டு ஆச்சு, கேட்டுக்கோங்க!!

// எதுக்கும் விஜாரிச்சு பாருங்க, ஏற்கனவே அதுக்கும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாட ஆரம்பிச்சிருப்பாங்க. அப்படி இல்லைன்னா, ஏப்ரல்-1 லயே இதுக்கும் கொண்டாடிடலாம்.//

நீங்க சொன்னா சரிதான் .அப்பவும் நீங்கதான் கோ ஆர்டினேட் ஓக்கே!!

//அதிரா, உங்க பாயிண்ட் சூப்பர்!! பெரிய மனுஷி மாதிரி அழகா சொல்லிட்டீங்க!! இதுக்குத்தான் பாட்டிகள் சகவாசமும் வேணுங்கிறது!! ;-)))//

பெரிய மனுஷி... பாட்டி... சரியான உள் குத்து பலமாயில்ல இருக்கு ஐயம் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்..
( தமாஸு நோ பீ சீரியஸ் )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@Muthu--// ஜெய்லானி நேற்று நான் தமிளிஷ் படிக்கும் போது கேபிள் ஷங்கர் சாரின்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் விமர்சனத்தில் முத்து என்ற I.D யில் ஒரு கமெண்ட் வந்து இருக்கிறது,ஆனால் அது நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் இதற்க்கு ஒரு வழி சொல்லவும் //

முத்து அதுல உங்க லோகோ இல்ல அதனால அது போலி .கவலையை விடுங்க. சைடுல ஒரிஜினல் ஐடி போட்டோவோட வரும் .

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//ஆமா உண்மையிலே கவனிக்கவேண்டிய விசயம். சிறப்பான கவனத்துக்கு கொண்டுவந்ததுக்காக மங்குனி மூலம் ஒரு பூங்கொத்து.//

ஆமா ஷேக், பூங்கொத்துக்கு சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@செந்தமிழ் செல்வி--//சகோ. ஜெய்லானி,
இந்தக் கேள்வி என் மனதில் இருந்து கொண்டே இருந்ததால் தான் இரவு வரை நான் எங்குமே வாழ்த்துப் பதிவு போடாமல் இருந்தேன். எல்லோரும் போட்டு நாம் போடலைன்னா சரியில்லையேன்னு தான் பிறகு பதிவிட்டேன். நீங்களும் அன்னையாவீர்கள் என்று ஆசிர்வதிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? நல்ல பதிவு //

:-)))))). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@நிலாமதி--//வெளி நாடுகளில் ..வேலைப்ரபரப்பின் தொலை தூர உறவுகள் நினைக்க ஒரு நாள் அன்னையர் தின மாயிருக்க்லாம். எனக்கு என்றும் அன்னை ....தினம் நாள் தோறும்.//

கைக்குடுங்க..முதல்ல!!! நா கேக்குறதும் இதுதான். பெத்தவங்களுக்கு ஒரு தினம் மட்டுமா ?. அடுத்த நாள் பாராட்ட மாட்டீங்களா ? உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//அன்னைகள் இல்லா உலகம் அந்நிய உலகம் சார், பதிவுக்கு வாழ்த்துக்கள் //

மறுக்கல அப்துல் காதர் . இந்த அன்னையர் தினத்தை கண்டு பிடிச்சது மாமியார்களாகவே இருந்திருக்கும் மருமகளை கிண்டல் அடிக்க. அதுக்குதான் இந்த பதிவு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//தங்கள் பதிவு மனசை தொட்டுவிட்டது..நீங்கள் சொல்வது உண்மை தான்..ஆனால் அப்படி ஒருநாள் இருந்தால், குழந்தைஇல்லாத பெண்கள் வருத்தபடுவார்களே தவிர சந்தோசம் கிடைக்காது...//

இப்பதான் என் கேள்வி கிட்ட வந்திருக்கீங்க. அப்ப அன்னையர் தினம்ன்னா மட்டும் சந்தோஷப் படுவாங்களா ? இது குழந்தை இல்லாத ,மருமகளை மாமியார்கள் மட்டம் தட்டும் தினம். அதை விட இது பரவயில்லையே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@மின்மினி--//ஹாய் ஜெய்., ரொம்ப சிந்திக்கவச்சிருக்கீங்களே.. நன்று நன்று.. அருமையான பதிவு.//

இதைப் பத்தி நிறைய எழுத வேண்டாமேன்னு பாத்தேன். எதுக்கு வீனா மனசை கஷ்டப்படுத்தனும். இருந்தும் போட்டுட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

மசக்கவுண்டன் said...

வேலன் சொன்னது;
//மே 13ஐ முதலில் கொண்டாடிவோம். அப்புறம் ஜீன் 15 ஐ கொண்டாடலாம்.வாழ்க வளமுடன்,வேலன்//
ஜெய் சொன்னது:
//அதுசரி ,யார் மனசும் நோகக்கூடாது. டபுள் ஓக்கே!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//
வேலன் சரியா சொல்லீட்டாரு, ஏதாச்சும் பண்ணுங்க,ஜெய்லானி?

மசக்கவுண்டன் said...

அன்னையர் ஆகாதவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. எனக்குத்தெரிந்து சில அன்னையர்கள் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார்கள். அவர்கள் குடும்பம் சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஸாதிகா said...

நல்ல சிந்தனையை தெளித்துவிட்டு இப்படி"மற்றவர்கள் கண்டு கொள்ளாதவர்களை கண்டு அவர்களுக்கும் ஒரு பதிவு போடும் சங்கம் ''ஒரு டிஸ்கி தேவை இல்லை என்பது என் தழ்மையான கருத்து.

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//அன்னையர் ஆகாதவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. எனக்குத்தெரிந்து சில அன்னையர்கள் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார்கள். அவர்கள் குடும்பம் சந்தோஷமாகத்தான் இருந்தது.//

இருக்கனும். கண்டிப்பா இருக்கனும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//நல்ல சிந்தனையை தெளித்துவிட்டு இப்படி"மற்றவர்கள் கண்டு கொள்ளாதவர்களை கண்டு அவர்களுக்கும் ஒரு பதிவு போடும் சங்கம் ''ஒரு டிஸ்கி தேவை இல்லை என்பது என் தழ்மையான கருத்து.//

உங்க கருத்து 100சதவீதம் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது . இப்ப பாருங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

SUFFIX said...

இப்படிப்பட்ட தினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து!!

சசிகுமார் said...

அவுங்க என்ன வைக்கிறது ஒரு நல்ல நாளா பார்த்து நம்பலே வச்சிருவோம் சார்.

ஜெய்லானி said...

@@@SUFFIX--// இப்படிப்பட்ட தினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து!!//

என்னுடைய கருத்தும் இதுவே ஷாஃபி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//அவுங்க என்ன வைக்கிறது ஒரு நல்ல நாளா பார்த்து நம்பலே வச்சிருவோம் சார்.//

வைக்கிறதா இருந்தா வச்சுடலாம் சசி ,அன்னையர் தினத்துக்கு ஒருநாள் முன்னாடியே வைக்கிரது சரியா படுது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜெயிலானி

விக்னேஷ்வரி said...

வித்தியாச சிந்தனை. முற்போக்கா இருக்கு, மகிழ்ச்சியாவும்.

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு சிந்தனையென்றபோதும். இது அவர்களின் மனவருத்தத்தை அதிகப்படுத்தும்.

இந்த அன்னையர்தினத்தால். பெற்றோரை அதாவது தாயைக்கூட தள்ளிவைத்துவிட்டு இருக்கும் பிள்ளைகளுக்கு அன்றைய தினமாவது தன் தாயின் நினைவுகள் மனதுக்குள் வந்து தன்னை உணர்ந்திடாதா என்ற எண்ணத்திலும் இருக்கலாம் என்கிறது என் மனது .

//நம் முன்னோருக்கு தெரியும் எதுக்கெல்லாம் கொண்டாட்டம் வைக்கோணுமென்று, அதுக்காகத்தானே மறக்காமல் முட்டாள்கள் தினம் உருவாக்கினார்கள்.. //

இது நம்முன்னோர்கள் உருவாக்கியது அல்ல முட்டாள்கள் உருவாக்கியது
அறிவாளிகளை அறிவாளிகளாக ஏற்றுக்கொள்ளமுடியா ஆற்றாமையினால் ஏற்படுத்திய ஒன்றாகும் என்பதுதான் இல்லையா? அறிவாளீகளே!

[அப்பாடா விளக்குவதற்க்குள் மூச்சு வாங்குது அதுக்கும் விளக்கம் கேட்டுடாதீங்கோ. காசு கொடுத்தா மூச்சு வாங்குறீங்கன்னு ஹா ஹா]

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//மிக்க நன்றி ஜெயிலானி//

தப்பை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளும் தன்மை இருக்கு எனக்கு. நீங்க வந்ததே சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@விக்னேஷ்வரி--//வித்தியாச சிந்தனை. முற்போக்கா இருக்கு, மகிழ்ச்சியாவும்.//

எத்தனையோ சில வீடுகளில் இந்த பிரச்சனை இருக்கு. அதுக்கு யோசிச்சதில வந்தது இது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//நல்லதொரு சிந்தனையென்றபோதும். இது அவர்களின் மனவருத்தத்தை அதிகப்படுத்தும்.//

இப்ப மட்டும் அவங்க சந்தோஷமா படுவாங்க . இல்லையே மனசு வருந்தவே செய்யும்.

//இந்த அன்னையர் தினத்தால். பெற்றோரை அதாவது தாயைக்கூட தள்ளிவைத்துவிட்டு இருக்கும் பிள்ளைகளுக்கு அன்றைய தினமாவது தன் தாயின் நினைவுகள் மனதுக்குள் வந்து தன்னை உணர்ந்திடாதா என்ற எண்ணத்திலும் இருக்கலாம் என்கிறது என் மனது .//

உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள். இது அதே நேரம் தாயை நினைக்க ஒரு நாள் மட்டும் போதுமா? . போதுமென்றால் இல்லாதவங்களையும் ஒரு நாள் நினைத்து விட்டு போகலாமெ!!

//நம் முன்னோருக்கு தெரியும் எதுக்கெல்லாம் கொண்டாட்டம் வைக்கோணுமென்று, அதுக்காகத்தானே மறக்காமல் முட்டாள்கள் தினம் உருவாக்கினார்கள்.. //

//இது நம்முன்னோர்கள் உருவாக்கியது அல்ல முட்டாள்கள் உருவாக்கியது
அறிவாளிகளை அறிவாளிகளாக ஏற்றுக்கொள்ளமுடியா ஆற்றாமையினால் ஏற்படுத்திய ஒன்றாகும் என்பதுதான் இல்லையா? அறிவாளீகளே!//

இது மாமியார்கள் குழந்தை இல்லாத மருமகளை கேவலப்படுத்த ஒரு நாளை உருவாக்கியதாகவே நினைக்கிறேன்.

இறைவனின் படைப்பில் யாரும் முட்டாள் இல்லை. தன் இறைவனை மறந்து விலகிப் போவோரை தவிர.

// [அப்பாடா விளக்குவதற்க்குள் மூச்சு வாங்குது அதுக்கும் விளக்கம் கேட்டுடாதீங்கோ. காசு கொடுத்தா மூச்சு வாங்குறீங்கன்னு ஹா ஹா] //

ஆமா மூச்சு வாங்குவதுன்னா என்னது. எந்த கடையில விக்கிது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thenammai Lakshmanan said...

ரொம்ப யோசிக்க வைத்த விஷயம் ஜெய்...

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//ரொம்ப யோசிக்க வைத்த விஷயம் ஜெய்...//

வாங்க!! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல சிந்தனை ஜெய்லானி.

ஜெய்லானி said...

@@@அக்பர்--//நல்ல சிந்தனை ஜெய்லானி.//

வாங்க!! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))