Saturday, June 26, 2010

ரசித்ததில் பிடித்தது

120 என்ன சொல்றாங்ன்னா ...




டிஸ்கி : நான் ரசித்ததை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Wednesday, June 23, 2010

சந்தேகம்-3

117 என்ன சொல்றாங்ன்னா ...

          நாம உன்னும் பொருட்களை பல வகையா பிரிச்சி வச்சிருக்கோம் . அரிசி முதல் அனு ஆயுதம் வரை ஒவ்வொன்னுக்கும் தனித் தனியா பெயர் இருக்கு . சிலதுக்கு குடும்பமுன்னு சொல்லி அதுக்கு ஒரு பட்ட பெயர் .வேற இருக்கு.  சயன்ஸ் படிச்சவங்களா இருந்தா இருந்தா நான் சொல்றது இன்னும் புரியும் . மால்வேசி  அசிங்கமா நெனக்காதீங்க இது ஒரு குடும்பம் ஹைபிஸ்கஸ் ரோஸா ஸைனான்ஸிஸ் அதுல ஒரு வகை  ஒன்னுமில்லீங்க நம்ம செம்பருத்தி பூவு க்கு அப்படி ஒரு பாட்டனி பேரு.

         எதுக்கு இது ஒரு பில்டப்புக்குதான் .அதுக்காக ஒரு பிரிவுயூதான் இது ..ஓக்கே ..இப்படி எல்லா பொருட்களையும் தனித்தனியா கிழங்கு , பட்டாணி வகைகள் , பூக்கள் , காய்கள் , கனிகள் ( பழங்கள் ) இப்படி வச்சவங்க . கடைசியா என்கிட்ட இப்ப மாட்டப்போறாங்க பாருங்க .ஏன் நீங்க என்கிட்ட மாட்டலையா அப்படிதான்  சந்தேகம் இப்ப கேக்கப்போறேன்.

           தரைக்கு மேல முளைப்பது காய் கறிகள் , பூக்கள் , தானிய வகைகள் மரங்கள் இப்படி நிறைய இருக்கு .எனக்கு இதில சந்தேகம் எதுவும் இல்லை . ஆஹா தப்பிச்சிட்டீங்க  
தரைக்கு கீழே முளைப்பது எல்லாம் கிழங்கு வகைகள் . உதாரணம்  இஞ்சி ,  உருளை கிழங்கு , பீட்ருட் , வெங்காயம் , புல் பூண்டுகள் சரியா .


           இதில தரைக்கு கீழே விளையும் நிலக் கடலை (ஹைய்யா...... .ஹை...ஹை..) வேர் கடலை. மல்லா கொட்டை பயிறு . கிரவுன்நெட் மூங்பலி இப்படி சொல்லுகிற அந்த கடலையை ஏன் கிழங்கு ஐட்டத்துல சேர்க்காம . பட்டாணி , பயிறு ஐட்டத்துல சேர்த்து சொல்றீங்கன்னு இன்னும் புரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லிட்டு போனா கொஞ்சம் புண்ணியமா போகும் . சொல்லுங்களேன்.

          இது கொலஸ்டிரால் உள்ளவங்க விலக்க வேண்டிய பொருள்களில் இதுவும் ஒன்னு . இதன் எண்ணெய் கொலஸ்டிரால் நீக்கி இப்ப வருது ஆனா கேரண்டிதான் இல்ல . டாக்டரின் படிப்பு சர்டிபிகேட் பாத்தா போறோம் ஹாஸ்பிட்டலுக்கு எல்லாரும் போறாங்க நாமும் போறோம்.(அது தனி பதிவு )

        இப்ப சொல்லுங்க நிலக்கடலைங்கிற  பேர் சரியா ! இல்லையா ?  அதை ஏன் கடலைன்னு சொல்லனும்  . கடுகு பிரச்சனையே இன்னும் தீரல,  அதுக்குள்ள இது தேவையா ?  இது யாரின் சதி.. கூட்டு குடும்பத்தில இந்த குழப்பம் தேவையா ?  எல்லா எண்ணெய் பொருள்களும் சண்டைக்கு வராதா.. அதனால தான்  கடுகை போட்டதும் ,ஒருவேளை வெடிக்குதா . பெரிய அளவில் சண்டை வருவதுக்குள் பெயரை என்ன செய்யலாம்  என் சந்தேகத்தை தீருங்க

டிஸ்கி : சந்தேகம்  தொடரும் பதில் கிடைக்கும்  வரையில் ( இது என் ஐம்பதாவது பதிவு )

                       
     

Saturday, June 19, 2010

இப்படியும் இருக்கலாம்

145 என்ன சொல்றாங்ன்னா ...
         வித விதமா டேஸ்ட் பாக்குறதில உள்ள ருசி ( சாப்பாட்டிலங்ன்னா ) ஒருதடவை வந்துட்டா அது அத்தனை சீக்கிரம் போகாது . அந்த வகையில இங்குள்ள பெரும்பாலான ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கிறேன் .ஒரு சைனா கடைய கூட விட்டது இல்லை அதுவும் தேடித்தேடி ஒவ்வொரு கடையிலும் சில ஐட்டங்கள் சூப்பராக இருக்கும் . அதனால் யார் என்ன சொன்னாலும் முயற்சி செய்து பார்த்து விடுவதுண்டு. 

         ஏன் சொந்த புராணம்ன்னு பாக்குறீங்களா விசயம் இருக்கு. வேலை காலையில மட்டும்ங்கிறதால மதியம் மூக்கு புடைக்க தின்னுட்டு தூங்குவதே மீதி வேலை. அப்ப ஒரு சில வருடங்களுக்கு முன்ன சாப்பாடு பிரமாத ருசியா இருந்ததால ஒரு கடையில கணக்கு வச்சி சாப்பிட ஆரம்பிச்சேன் . மதியம் தூங்கி விழிக்கும் போது  லேசா நெஞ்சி வலிக்கிற மாதிரி உணர்வு . ஒரு வேளை கேஸ் பிராப்ளமா இருக்கும்ன்னு விட்டுட்டேன். அடுத்த நாள் இதே போல இருந்ததால உஷாரா ஆயிட்டேன்.

          மறு நாளில் அங்கிருந்த உணவு பொருட்களை சிலதை தியாகம் செஞ்சிட்டு மாற்றி பாத்ததில வலி சற்று குறைந்த மாதிரி தெரிந்தது . ஆனா வயிற்று வலி வந்துடுச்சு . ( இது வலி மட்டும்தான் ) அடுத்த நாள் கூர்ந்து கவனித்ததில பிரச்சனை தெரிந்தது. அது கிளாஸ் கழுவும் லிக்யூட்.

          ஒரு  தண்ணீர் குடிக்கும் கிளாசில் தண்ணீரை வேகமா ஊத்திப் பாருங்க . அதில் வரும் நுரை வேகமாக ஒரு சில வினாடிகளில் அடங்கி போனால் . உங்க தண்ணீர் சுத்தமான தண்ணீர் . மற்றும் நீங்க நல்லா கிளாசை சுத்தம் செஞ்சிருக்கீங்கன்னு அர்த்தம் . இல்லாட்டி அதில டிஸ்வாஷ் லிக்யூட் இன்னும் கலந்திருக்குன்னு அர்த்தம் . பாத்திரம் சுத்தம் செய்யும் ( ஒரு துளி போதும் வீட்டையே சுத்தமாக்கிடும் ) ரசாயனம் உங்க வாழ்க்கையையே மாத்திடும்

       என்ன காரணம்ன்னு தெரியாமலேயே டாக்டரிடம் போய் கண்ட டெஸ்ட் எடுத்து தேவையில்லாம பணம் , உடல் நிலையை  அப்புறம் ,  கூட இருப்பவங்களையும் ஏன் கஷடப்படுத்தனும் .முடிஞ்ச வரை என்ன ஏதுன்னு நாமலே பாக்குரது நல்லது. அதாவது தெரிஞ்சா மட்டும் . இல்லாட்டி நேரா ஐ சி யூ தான். 

               கடை ஓனரிடம் சொல்லியும் ஒன்னும் ஆகல .அதனால அங்கு போவதும் இல்லை. இன்னும் நண்பர்கள் சிலர் போவதுண்டு . தலைவிதியை யாரால் மாத்த முடியும் .நான் போறதை நிறுத்தியதும் எல்லாம் சரியாகிவிட்டது ( அதில இன்னென்னு கடைசியில சொல்றேன் )
                                      படம்  : சகோ கீதா அவர்கள்  (  வடகம்  நல்லதா  கிளிக் டிஸ்கி  )
       பொதுவா ஒரு பொருள் நமக்கு அலர்ஜியா மாறதுக்கு நிறைய காரணம் இருக்கு . நாம நினைக்கிறோம் காலையில சாப்பிட்ட இட்லி சரியில்ல ., மதியம் சாப்பிட்ட பாயாசம் சரியில்ல.. ஆனா உண்மை அது இல்ல . ஆனா நேத்து சாப்பிட்ட டின் ஃபுட்டா கூட இருக்கும் . அதனால திடீர்ன்னு இந்த பொருளாலதான் வந்துச்சின்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா பாத்துட்டு அதை விட்டுடுங்க . அதுவுமில்லாம  சிலருடைய உடல்வாகு , நோய் எதிர்ப்பு சக்தி , வயசு அதாவது செரிக்கிர தன்மை இதுவும் ஒரு காரணமா இருக்கும்.

         சர்க்கரை நோய் உள்ள வங்க பழங்களை சாப்பிட்டு விட்டு அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் சர்க்கரை அளவு சமமாக இருக்கும் .  இல்லாவிட்டால் அளவு கூட காட்டும் . இதனாலேயே பழங்களை கண்டால் அவங்க பயப்படுவாங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? பேரிச்சம் பழம் அதிக இனிப்பு சுவை உடையது . சர்க்கரை வியாதி உள்ள வங்க ஐந்து பழம் ஒரு நாளைக்கு தாராளமா சாப்பிடலாம்.

         எந்த ஒரு பதப்படுத்த பட்ட பொருளும் . அது அப்பவே உபயோகிக்க இல்லை. அதுக்கு எதிர்பட்ட காலநிலைக்கு மட்டுமே . உதாரணம்  ஊருகாய்  , கருவாடு , வடகம் . இது அனைத்தும் கோடைகாலத்தில் காய வைத்து குளிர் காலத்தில உபயோகிக்க வேண்டிய ஐட்டங்கள் . இது உடலுக்கு சூடுதரும் பொருள். அதனால்தான் அந்த கால பெரியோர்கள் வெயில காலத்தில தயாரித்து குளிர்காலத்தில உபயோகப்படுத்தினங்க. ஆனா நகரத்தில நாம எது ஈஸியா இருக்கோ அதை மட்டுமே செய்வதால் எதனால் இதுன்னு தெரிய மாட்டேங்குது.

        அதனால ஏதாவது ஒரு சமையல் பொருட்களில் சந்தேகம் வந்தால் அதை மாற்றி இரண்டு குழம்பு செய்திருந்தால் அன்று ஒன்றை மட்டும் சாப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் . சிலருக்கு தயிர் , முருங்கைகாய் , கத்திரிகாய்  , கருவாடு இப்படி அலர்ஜி ( அது உயர் ரத்த அழுத்தமாகவோ ,  சர்க்கரை அளவு அதிகம் அல்லது குறைவாகவே  ) இருக்கும்..

           அந்த கடையில் அதிகம் சேர்பது அஜின மோட்டோ..இதை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு மட்டும் தொந்தி விழும் . நெஞ்சு எரிச்சல் வரும் .அதை தனிக்க பெப்ஸி ,கோக் சாப்பிட வேண்டி வரும் . அந்த கப்ஸிய குடிச்சா என்ன வரும் உங்களுக்கே தெரியும்.


Wednesday, June 16, 2010

சந்தேகம்-2

136 என்ன சொல்றாங்ன்னா ...
                                 போன பதிவில் ஒரு சந்தேகம் கேட்டு யாரும் சொல்லாத்தால் அந்த சோகம் தீரும் முன்ன இன்னெரு சந்தேகம் வந்துட்டுது. இது சின்னதா இருந்தாலும் அதோட வேகம் யப்பா துப்பாக்கியிலிந்து வரும் தோட்டா ரேஞ்சிக்கு இல்ல அடிக்கிது , இல்ல இல்ல வெடிக்கிது

                               இப்ப தெரியுதா அதாங்க கடுகு. பாருங்க. நம்ம ஆள் இதுக்கும் ஒரு பழமொழி கண்டு பிடித்து வச்சீருக்கான் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. ஏன் அந்த காலத்தில கடுகு என்ன வெங்காயம் சைசிலா இருந்துச்சி. உறிச்சி உறிச்சி சிறுத்து போக..அப்பவும் அது சின்னதாதானே இருந்தது.

                              கடுகின் சுவை காரம்ன்னு சொன்னா அப்ப மிளகாயின் சுவை இனிப்பா ? ஏன் இந்த முரண்பாடு !! ஒரு சுவைன்னு சொன்னா அது ஒரு சுவை மட்டுமே வேறு பேச்சே கிடையாது. உதாரணம் இனிப்பு . அது சீனியில , வெல்லத்தில , கருப்பட்டியில செஞ்ச எந்த பொருளா இருந்தாலும் எத்தனை விதமா செஞ்சாலும் இனிப்பு சுவை ஒன்னுதான் . அப்ப காரத்துக்கு மட்டும் ஸ்டெப்னி ஏன் ? அய்யா சாமீ தாய்குலங்களே கொஞ்சம் சொல்லுங்க !!

                                பழமொழிகள் வெறும் பேச்சுக்கு மட்டும்ன்னு சொன்னா யாரும் பெரிசுகள் இனி அதைபத்தி பேசாதீங்க சிறுசுகள் கொஞ்ச நாள் நல்லா இருக்கட்டும்.
                                            அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

                                 அதில எண்னெய் இருக்கு ..மக்கள் அதை எப்படியாவது யூஸ் பன்னட்டும் எனக்கு என்ன !! ஆனா அதை பாத்திரத்தில வச்சி அதுவும் எண்ணெய ஊத்தி சூடுபடுத்திடினா வெடிக்குதே ஏன்?. மத்த ஐட்டங்கள் சும்மா இருக்கும் போது இதுக்கு ஏன் இந்த கொலவெறி. கொஞ்சம் ஜாக்கிரதையா இல்லாட்டி நம்ம மேல பட்டு எரிச்சலை உண்டாக்குதே ஏன்? சிலநேரம் பாம் ஸ்குவாட் மாதிரி டிரஸ் எல்லாம் போட வேண்டி வருதே!!

                               அப்பவும் நல்லா காய ( வெய்யில்ல ) வச்சுதான் யூஸ் பன்னுரோம் . அதுல தண்ணீர் ஈரபசை இல்லை. ஆனா எண்ணெய் இருக்கு. அப்ப எண்ணெய எண்ணெயுடன் சேர்த்தா ஏன் வெடிக்கனும் ?..யோசிக்க வேண்டிய கேள்வி.. எனக்காக யாராவது யோசிச்சு சொல்லுங்களேன். பேசாம அதை பொடிச்சி பவுடராக்கி போட்டா என்ன . எப்படியும் வயித்துக்குள்ள போரதுதானே . எதுக்கு இத்தனை சிக்கல்

பாட்டி வைத்தியம் :

(1)            கடுகை கொஞ்சம் அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். கிட்னியில கல் சேராது . கிட்னி வீக்கம் நேய் வராது
(2)               விக்கலுக்கு சுடுதண்ணியில கடுகை பவுடராக்கி போட்டு அதை ஊற வச்சு வடிகட்டி குடித்தால் உடனே சரியாகும்
(3)               ஆரம்ப கால கர்பிணி பெண்கள் கடுகு பொருட்களை சேர்காமல் இருப்பது நல்லது

டிஸ்கி:   கடைசியில ஒன்னு சொல்லிட்டு போறேன். என் சந்தேகத்தை தீர்க்காதவரை சந்தேகம் தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்

Tuesday, June 8, 2010

தொடரும் இலவசங்கள்

125 என்ன சொல்றாங்ன்னா ...

          என்னுடைய கடந்த சில கம்ப்யூட்டர் பதிவுகளில் ஓசியில் மங்களம் பாடுவதை பத்தி படித்திருப்பீங்க. அந்த வகையில் இதுவும் ஒரு மகா பதிவு..

       சில கம்பெனி சாப்ட்வேர்கள் சுளையா சில ஆயிரங்களை தந்தால்தான் அதை பயன் படுத்த முடியும் . நம்மில் சிலர் கம்பெனி பேரை பார்த்து விட்டு அதான் நல்லது மற்ற கம்பெனி சரியில்லைன்னு நினைச்சிட்டு இருந்துடுவாங்க. அது உண்மை இல்லை

        ஒவ்வொரு விலை குடுத்து வாங்கும் மென்பொருளை விட இலவசமா கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள் தரமா இருக்கு. அதுவுமில்லாம அப்டேட்டும் கிடைக்குது. நாம தேடரதுதான் இல்ல நா நீண்ட காலமா யூஸ் பன்னும் வெப்சைட்டின் அட்ரஸ் இது போய் பாருங்க . நாம் நம்முடைய நாலட்ஜ்ஜுக்கு ( எது போதும்ன்னு நினைக்கிறோமோ ) தகுந்த மாதிரி என்ன தேவையோ அத்தனை விதமான மென்பொருள்கள் இந்த தளத்தில் கொட்டி கிடக்கு .

          அதுவும் இல்லாம இதில் உள்ள அப்டேட் செக்கர் என்னும் மிகச்சிறிய அளவுள்ள சாப்ட்வேரை நீங்க ஓட்டினா அது அந்த தளத்தில் நீங்க இதுவரை பயன்படுத்திய சாப்ட்வேரின் சமீபத்திய அப்டேட்டின் புதிய பதிப்பு எதுவும் வந்துள்ளதா அது எத்தனை அளவு எல்லாம்  உடனே தேடித்தரும் .

          இதனால் உங்களுக்கு இது ஒரு புதிய அனுபவமா இருக்கும் . ஆண்டி வைரஸ் வேனுமா ? போட்டோ எடிட்டிங் , பிரவுசர் , டெஸ்க்டாப் , ஃபைல் ஷேரிங் , ஆடியோ வீடியோ , சிஸ்டம் டூல் . மெசஞ்சர் , ஃபயர்வால் இன்னும் எத்தனை விதமான தலைப்புகளில் உங்களுக்கு தேவையோ அத்தனையும் இலவசமாக கிடைக்கிறது .

         இந்த தளத்தில் ஒரு வசதி என்ன என்றால் . நீங்க புதியதாக அக்கொவுண்ட் எதுவும் திறக்க வேண்டியதில்லை நேரடியாக அதில் உள்ள லிங்கை திறந்து டவுன்லோட் செய்யலாம் .

         முக்கியமா இது சீரியல் நெம்பரும் கேக்காது . இத்தனை நாள் மட்டும் உபயோகம்ன்னும் சொல்லாது .தேவைப்பட்டா அப்டேட் பன்னிக்கலாம் . பழைய பதிப்பே போதும்ன்னு நினைச்சாலும் ஓக்கே.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்  

டிஸ்கி: போன பதிவில் யாரும் என் சந்தேகத்தை தீர்காததால் மீண்டும் சந்தேகங்கள் தொடரும் என்பதை தெரிவித்து கொல்கிறோம்  
 

Friday, June 4, 2010

ஒரு சந்தேகம்

121 என்ன சொல்றாங்ன்னா ...

           இன்றைக்கு ஒரு சந்தேகம் யார்கிட்டயாவது கேட்கலாமான்னு பார்த்தால் லீவு , அதனால யாரையும் பார்க்க முடியல . ஒரு வேளை கேட்டு வச்சி  அவங்க என்னை அடிக்க வந்துட்டா என்ன செய்யரது . அதனால இந்த கேள்வியை நான் உங்க கிட்ட கேக்குறேன் . சரியா ! எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா மட்டும் இருக்கனும் அதுக்காக கட்டை , வேல்கம்பு , இப்படி ஆயுத்தோட சண்டைக்கு வரக்கூடாது .

          இப்ப கேள்வி என்னன்னா முட்டைக்கு ஏன் முட்டைன்னு பேர் வந்துச்சி . அது முட்டை மாதிரி இருப்பதனாலா ? இருக்கலாம்ன்னு சொல்ற பொது மக்கள் !,  அப்ப வட்டத்துக்கு என்ன பேர் சொல்வாங்க .  வட்டம் முட்டை இரண்டுமே ஒரே மாதிரிதான் இருக்குன்னு நீங்க சொன்னா . கோழி போடுற கருவுக்கு ஏன் முட்டைன்னு சொல்றாங்க.? அது நீள் வட்டமா தானே இருக்கு.

          அப்ப கோழி முட்டை , வட்டமா இல்ல முட்டையா ?, எது சரி ! கோழி முட்டைக்கு , முட்டைன்னு மட்டுமே ஏன் சொல்லனும். கடையில பொதுவா இங்கு முட்டை கிடைக்கும்ன்னு மட்டும் இருப்பது ஏன்.? வீட்டில  முட்டை வாங்கிட்டு வான்னு சொன்னா நீங்க ஏன் கோழியோட முட்டையை மட்டும் வாங்கிட்டு வறீங்க. ஒரு வாத்து வோட முட்டை , காக்கையோட முட்டை , புறாவோட முட்டை , ஆமை முட்டை , கொசு முட்டை , பல்லி முட்டை , பாம்பு முட்டை இப்படி எல்லாமே முட்டை போடும் போது தனிபட்ட கோழிக்கு மட்டும் முட்டை அந்தஸ்து குடுப்பது ஏன் ?

          சரி இது முட்டை இல்ல கருதான்னு நீங்க எஸ் ஆனா !!, இதுக்கு பதில் சொல்லுங்க . முட்டையோட  உள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இருக்கு . அப்ப இரண்டு கரு சேர்ந்தத ,  கரு முட்டைன்னு சொன்னா . ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவிலே எதுவுமே இல்லாம அதை கரு முட்டைன்னு ஏன் சொல்லனும் ?.

         ஒரு விசயத்தில சந்தேகம் வந்துட்டா அதில தெளிவு வராத வரை எனக்கு தூக்கம் வராது . இந்த விசயத்தில நா கும்ப கர்ணன் மாதிரி ? !!! .அப்படி தெரிந்தவங்க  கொஞ்சம் கும்மிட்டு போகலாம் . அப்படி தெரியாட்டி இதை படிங்க வேற தப்பிக்க இடமே இல்லை..


படம் >>> கோழிப்யோட கவிதைகள்

போனதே போனதே என் முட்டை டிரேயிலே
போனதே  போனதே என் முட்டை டிரேயிலே
நானும் சேர்ந்து போகவும் ஒருவழியும் இல்லையே
அதில் இடமும்  இல்லையே
போனதே போனதே என் முட்டை டிரேயிலே

குடோன் சேரும் போது  கரெண்ட் கட்டானதோ
அறியாமல் பிக்கப்  தடம் மாறியதோ
முட்டை அது புதுசு விழுந்தால் அழும் மனசு
தங்க முட்டையே சந்திப்போமா
சந்தித்தாலும் முழுசா பார்போமா
சந்தேகம்  தானே ?

போனதே போனதே என்

போனதும்  முட்டை ஃபிரை ஆகிடுமோ
சுட்டதும் அது கேக் ஆகிடுமோ
கடைக்கு வந்த பிறகும் தவிக்கும் இந்தச் மனசு
எதுக்கு இங்கே வெட்டிப் கொக்..கொக்...( கொக்கொரக்கோ..)
தொண்டை தண்ணீர்தானே வத்திப்போச்சு
இன்னும்  ஏது?

போனதே போனதே என் முட்டை டிரேயிலே
நானும் சேர்ந்து போகவும் ஒருவழியும் இல்லையே
அதில் இடமும்  இல்லையே

           டிஸ்கி: யாருப்பா அது கதாசிரியர் விருது குடுக்கிறது . பேசாம மொக்கை பாடலாசிரியர் ( ஐ...) விருதா மாத்தி குடுத்திடுங்க. ( அடுத்த பதிவு சீரியஸா போட்டுடுவோம் பயப்படாதீங்க )