Wednesday, July 28, 2010

ஆசையில் ஓர் கவிதை

112 என்ன சொல்றாங்ன்னா ...
எண்ணிலடங்கா ஆசைகள்
எண்ணிக்கையில் (முக)பாவங்கள்
சொல்லெனா நேசங்கள் ஆழ்   மனதில்
தோன்றுதே..!! தோன்றுதே..!
சொல்ல வார்தைகள் தேடினேன்...........
தேடினேன்........ ஏனோ........ஏனோ..நான்

எத்தனை ஜென்மங்கள் காத்திருந்து
தேடிய பூ அது நீதானா ...... நீதானா
பார்கத்தான்        நினைத்தும்    நிஜம்
கூடலையே ..கூடலையே...நிழல் பார்த்தும் மனம்
அது ஆறலையே ஏனோ...ஏன்ன்ன்ன்

அலைகடலின் ஆழத்தில ஓடிடும்
நீரோட்டம் போல் என் ஆழ்   மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே

தேடிய பூவும் வாடிய மொட்டும் தன்னால் பூக்குதே
அது தன் வாசம் பரப்புதே கேள்விகள் கேள்விகள்
ஆயிரம் ஆயிரம் கோடிகளாகுதே
கேட்பார் ........... யாரோ ...... யாரோ..

இதய வாசலில் மின்மினிகளாய் வலம் வருதே....
பீரிட்டு   கிளம்பும்   பாசத்தாலே   வாழ்வே
திசை   மாறுமோ......   திசை மாறுமோ
ஆசை அறுபதாம் மோகம் முப்பதாம் கேள்விகள்
சிலருக்கே வாழும் உள்ளத்தில் தோன்னும்
பதில்கள் யாவும் புரியுமோ அவருக்கே


விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..



டிஸ்கி: கவிஞர் விருது வாங்கியும் இது வரை ஒன்னும் கிறுக்கலையேன்னு சொந்தமா கிறுக்கிய்து ..ஹும்..என்ன செய்ய யாரால காப்பாத்த முடியும்.. வேற வழியே இல்லை.. அப்புறம் யாரோ ஒருத்தர் ஸ்டோரி ரைட்டர் விருது குடுத்திருக்காங்க .இருங்க அதையும் ஒரு வழி பண்ணீடலாம் (( இனி இப்பிடி விருது குடுக்கிறதுக்கு முன்ன யோசிங்க மக்கள்ஸ்))

Friday, July 23, 2010

கண்களா ஒரு சந்தேகம்-4

113 என்ன சொல்றாங்ன்னா ...

       மனித  உணர்ச்சிகளில் பல வகைகள இருந்தாலும் .அதில் சந்தோஷத்தை அடுத்து அழுகைதான் அதிகம் இடம் பிடிக்குது. நாம் பார்த்தும் நமக்கும் சில நேரம் அதன் பாதிப்பு வந்து மனசு கஷ்டமாகி விடுகிறது. சிலதை படிக்கும் போதும் அப்படியே..

       அதிக உணர்ச்சி வசப்படுவது ஒரு மனுஷனுக்கு நல்ல தில்லை. அது இதயத்தை தாக்கி ஹார்ட் அட்டாக் வரை போய் விடும் அபாயமும் இருக்கு  .அதே நேரம் வெளிக்காட்ட பயந்தோ அல்லது வெட்கப்பட்டோ அதை அடக்க முயன்றால் (ஸ்டிரஸ்) மன அழுத்தம் வந்து சில லூசுத்தனமான கேள்விகளும் (ஹி..ஹி.. என்ன மாதிரி இல்ல ) செயல்களும் (ஹிஸ்டீரியா) கூடவே வந்து விடுகிறது.. இது நா சொல்லல்ல பிட் அடிச்சோ இல்ல நல்லா படிச்சோ . மெரிட்ல சீட் கிடச்சோ இல்ல யார் கைல கால்ல விழுந்தோ சீட் வாங்கிய டாக்டர்களின் ஸ்டேட் மெண்ட். அதனால அளவோட வெளிப்படுத்தனும் சந்தோஷத்தையும் துக்கத்தையும்


     அதுப்போலவே சிரிப்பும் அதிக அளவு போனால் ரெண்டுமே கஷடம். என்ன ஒன்னு பக்கத்தில இருப்பவங்க ஒரு மாதிரியா பாப்பாங்க .. சில பேரு சிரிச்சே காரியத்தை சாதிக்கிறாங்க ஹி..ஹி...சில பேரு அழுதே காரியத்தை சாதிச்சிடுறாங்க  அவ்வ்வ்வ்வ்.

    எங்க அம்மா வீட்டுக்கு போக விடாட்டி நாலு நாளைக்கு சாப்பாடு கட் இப்பவே சொல்லிட்டேன்னு மனைவி சொன்னா நமக்கு சிரிப்பா வரும் .அனுப்பினாலும் சாப்பாடு கட், அந்த கிச்சன் ரகசியத்தை நாமே ஆராய வேண்டி வரும் அப்படி அனுப்பாட்டியும் சாப்பாடு கட் . உப்பிலிருந்து மிளகாய் வரை தாறுமாரா இருக்கும் .சமயத்தில பூரி கட்டை அவங்களுக்கு தெரியாமலேயே தவறி நம்ம கால்ல விழுந்திடும். கேட்டா சாரி கை தவறிடுச்சி.. நல்ல வேளை இப்ப வெல்லாம் அம்மி குழவி உபயோகம் கம்மி மிக்ஸி கண்டு பிடித்தவன் வாழ்க...


      கண்ணீர்ல ஆனந்த கண்ணீரும் இருக்கு. முதலை கண்ணீரும் இருக்கு . பயபுள்ளைக்கு எதை நம்பறது எதை நம்ப கூடாதுன்னே தெரிய மாட்டேங்குது. . சின்ன பிறந்த குழந்தைகள கூட அழுவுது ஆனா கண்ணீர் வரதில்லை .  

    இப்ப இதில எனக்கு வர சந்தேகம் என்னன்னா ( உஸ்..யப்பா ஒரு வழியா வந்தாச்சு ) மழை வரதுக்கு முன்னே ஒரு காத்து அடிக்குமே அது மாதிரி மூக்கு சிலருக்கு துடிக்கும்.. எங்கேயே இடி இடிக்கிற மாதிரி ஒரு சவுண்ட் மூக்கு உறிஞ்சுற சத்தம் வரும் . அப்ப கன்ஃபாமா அழுகை ரெடி ஆகுதுன்னு அர்த்தம். அதை கேட்டு உஷாரா ஆகிட வேண்டியதுதான்.


     என்ன ஏதுன்னு கேட்டே ஆகனும் . கண்டும் கானாம மாதிரி இருந்தா உயிருக்கு உத்திர வாதமில்ல . இந்த அழுகைக்கும் இல்ல ,  கண்ணீருக்கும் ,  மூக்குக்கும் என்ன சம்பந்தம் .இது ஏன் முந்திரி கொட்டை கனக்கா முன்னால சவுண்ட் விடுது .ஏன் இந்த கொலவெறி . சரி சமாதனமா போனாலும் அரை மனிநேரத்துக்கு இந்த மூக்கு மட்டும் ஓவர் டைம் ஏன் பாக்குது.  

        கண்ணுக்கு கண்ணாடி வாங்கி போட்டாலும் மூக்கு கண்ணாடின்னு சொல்லிடறாங்க .அதுக்குதான் வளையத்தை தூக்கி போட்டுட்டு காண்டாட் லென்ஸ்ன்னு சொல்லிடரோம். அழுதாழும் மூக்கு முன்னாடி வந்து நிக்குது . அப்புறம் கோவம் வந்தாலும் மூக்கு முன்னாடி வந்து நிக்குது.. அது என்ன மூக்கு மேல கோவம் .அப்ப மூக்கு கீழே சமாதனமா..?  

    ஒரு வேளை முகத்துல முக்கு முன்னால இருப்பதாலா .யாருகாவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.. இந்த மூக்குக்கு ஒரு நோஸ் கட் வச்சிடலாம் 


Monday, July 19, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?.. தொடரோ தொடர்

123 என்ன சொல்றாங்ன்னா ...
            பதிவுலகில் ஏகப்பட்ட ஸ்டார்கள் இருக்கும் போது பெயரிலேயே ஸ்டாரா இருக்கும் மற்றும் நண்பரான இந்த தொடரை தொடர அழைத்த ஸ்டார்ஜன் அவர்களுக்கு என் நன்றிகள்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஜெய்லானி

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாம்.சொந்த பெயர் அதான் தமிழிலேயே ரெண்டு தடவை தலைப்ப வச்சிருக்கேன் .

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
விளையாட்டுதனமா ஆரம்பிச்சது ஆனா ஆரம்பித்து ஒரு வருஷம் வரை ஒன்னுமே எழுதலைங்கிறது நிஜம் .மற்றவர்கள் எழுதுவதை படிக்கவே ஆர்வம் இருந்ததால் எனக்கு எழுத தோனலை

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் ஆரம்பத்தில் நண்பர் வேலன் அவர்கள் கேட்டுக்கொண்ட பிறகு தான், தமிழிஷில் மட்டுமே இணைத்திருந்தேன். அதன் பின் தமிழ்மணம், தமிழ் 10 , மற்றும் உலவு திரட்டிகளுக்கும் என் நன்றிகள். எனது கிறுக்கல்களை எல்லோரிடமும் கொண்டு சேர்த்த பெருமை திரட்டிகளுக்கே.

எனது கிறுக்கலகளை படித்து நொந்து நூடுல்ஸாகி ஆனால் நல்லா இருக்கு என்று பாராட்டும் நண்பர்களாகிய( நண்பிகள்) வாசகர்களாகிய அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்.



5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னுடைய சொந்த அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளேன். அனுபவங்களை பற்றி சொல்லும் போது அது சில சமயம் அவர்களுக்கு பயன் படலாம்.அப்படி பயன் படும் பட்சத்தில் அதில ஒரு சின்ன மனதிருப்தி வருகிறது
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

விளையாட்டுதனமா எழுத ஆரம்பிச்சது .நிறைய சொந்த பந்தங்கள். போல நண்பர்கள் இருப்பதால் விட்டு போக மனசு வரவில்லை. மற்றபடி இதனால் ஆதாயம் ஒன்னுமில்லை.நேரம் தான் அதிகம் விரயம் ஆகிறது .

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இப்போது உள்ளது ,மற்றது பேக்கப்காக ஒன்று சோதனையில , ஆக மொத்தம் மூன்று.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அவர் அவர் உள்ளத்தில் உள்ளதை இல்லை தோன்றுவதை எழுதுகிறார்கள். இதில கோபப்படவே பொறாமைப்படவே தேவை இல்லை என்பது என் கருத்து .ஆனால் கிண்டல் கேலி என்பது ஒரு   அளவுக்கு  மட்டுமே இருக்கனும் . அது அவருக்கு சிரிப்பு வரவழைக்கனும் மாறாக அவர் மனசை காயப்படுத்துவது மாதிரி இருக்க கூடாது.அது போல படிக்கும் மற்றவர்கள் அதை பார்த்து முகம் சுழிக்க கூடாது அவ்வளவே..!!

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

என் உடன் பிறவா சகோதரி மலிக்கா மற்றும் ஜலீலா அவர்கள் முதல் மற்றும் இரண்டாவது கமெண்ட் வழியாக எழுத தூண்டியவர்கள் . அவர்களை பற்றி நா என்ன சொல்வது. அவரது திறமை வலையுலகம் அறியாதது அல்ல.தொடரும் நல்ல நட்பு உள்ளங்கள்

பின்னர் எழுத ஆரம்பித்தவுடன் என்னை பாராட்டிக் கொண்டிருப்பவர்களை தனியாக பிரிக்க விரும்ப வில்லை

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

புதுசாக ஒன்றும் இல்லை .நான் கற்றது தூசியளவு கல்லாதது. சிகரம் அளவு. அதனால் திரும்பவும் சொல்வது நாம் எழுதும் எழுத்துக்கள் அடுத்தவர்களை மனசு புண்படுத்துவதாக இல்லாமல் அது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் நல்லது .

டிஸ்கி : இந்த தொடரை தொடர நான் அழைக்க ஆரம்பித்தால் ஒரு வாரத்துக்கு வேறு புது விதமான இடுகையே வராது .எல்லாருக்கும் போரடித்து விடும் வாய்ப்பு இருப்பதால் முடிந்தால் நீங்களே தொடருங்கள் (( குறைஞ்சது 200 பேரையாவது கூப்பிடனும் . வீடு வீடா போய் கூப்பிட நான் ரெடி ஆனா பயந்து போய் வீட்டை பூட்டிகிட்டு நீங்க ஓடிடக்கூடாது பாருங்க அதுக்குதான் ))

அன்புடன் > ஜெய்லானி <

Wednesday, July 14, 2010

வேனுமா கம்ப்யூ டிரிக்ஸ் -1

101 என்ன சொல்றாங்ன்னா ...

           பொதுவா நம்முடைய கம்ப்யூட்டரில டெஸ்க்டாப்பில முதல்லயோ இல்ல ரெண்டாவதோ ஒரு ஹோல்டர் இருக்கும். பேரு மை கம்ப்யூட்டர். அது என் கிட்ட இருக்கும் வரை மை கம்ப்யூட்டர் . அதை யாராவது திருடிகிட்டு போனாலோ இல்ல வித்துட்டாலோ அப்பவும் அது அவங்க கிட்ட போனா அது அவங்ககிட்ட  சொல்றது இது மை கம்ப்யூட்டர். என்ன கொடுமை சார் இது ... ஓக்கே..!!
           அதுல வலது கிளிக் செஞ்சு வரும் பிராப்பர்டியை கிளிக் பண்ணினா  அதுல நம்ம பேர் இல்ல . கொடுமையின் உச்சம் யார் யாரோ பேர் இருக்கு .என்னங்கடா இது காசு குடுத்து வாங்கியது நானு .பேர் என்னுது இல்ல ,என் தாத்தாதான் இல்ல போனா போகுது என் பாட்டி பேராவது இருக்கான்னு பார்த்தால் அதுவும் இல்ல அப்புறம் என் போட்டோ கூட அதில இல்லை .இதை நினைச்சு நினைச்சு அழுவாச்சியா வந்துச்சி. மவனே இதை இப்பிடியே விட்டிட கூடாதுன்னு ராத்திரி பூரா கொட்டகொட்ட முழிச்சிருந்து யோசிச்சதுல கடைசியா விடை கிடைச்சுது. அப்ப மணி 5.45 ஒரு ஜோக்கும்  நினைவுக்கும் வந்துது
           நம்ம ஆள் என்னை மாதிரி பசியோட ஹோட்டலுக்கு போய் 4 இட்லி சாப்பிட்டான் பசி அடங்கல 5 வது இட்லியை சாப்பிட்டதும் பசி அடங்கிடுச்சு அழ அரம்பிச்சான் அவன். முன்னாலயே தெரிஞ்சிருந்தா அந்த 5 வது இட்லியை முதல்ல தின்னிருக்கலாம் .காசு போச்சே....டைம் போச்சேன்னு அது மாதிரி என் நிலைமை சரி மேட்டருக்கு போகலாம்..


                      முதல்ல ஒரு நோட் பேட் புதுசா ஒன்னு திறங்க .அதில கீழே உள்ள மாதிரி டைப் பன்னுங்க .பெரும்பாலும் நோட் பேடில் தமிழ் வேலை செய்யாது அதனால் ஆங்கிலத்தில டைப் பண்ணுங்க..ஓக்கேவா..? போடவேண்டிய இடத்தில தமிழ்ல குடுத்திருக்கேன். அப்ப ஈஸியா புரியம்

 [General]

Manufacturer=" உங்களுக்கு பிடிச்ச பேரு    "

Model= அது உங்க வீட்டு குதிரை வண்டியாகூட இருக்கலாம்

[Support Information]

Line1= உங்க தாத்தா பேரு
Line2= உங்க தாத்தாக்கு பாட்டியோட அம்மா  பேரு
Line3=உங்க பாட்டிக்கு கொழுந்தியாள் சித்தப்பா  பொண்னோட பேரு
Line4=உங்க வண்டவாளம் தண்டவாளம் எல்லாம்
Line5=இது வரை யாரையவது அடிச்சிருக்கீங்கலா
LINE6=
Line7=இல்ல அடி வாங்கி இருக்கீங்கலா
Line8=நீங்க சமத்தா  இல்ல அசடா
 Line9=நாய பாத்து பயந்து ஓடி இருக்கீங்கலா
Line10=மனைவி கிட்ட ஜல்லி கரண்டியால அடி வாங்கி இருக்கீங்கலா
Line11=பாத்திரம் கழுவி இருக்கீங்கலா
Line12= எப்பவும் அழுது வடியும் சீரியல் நடிகை யார் பேர் என்ன
Line13=உங்களுக்கு பிடித்த வில்லன் பிடிக்காத ஹீரோ யார்

           இப்பிடி ஒரு நம்பர் குடுத்து அதில இங்கிலீஷல ஏதாவது உங்களுக்கு பிடித்ததை டைப் பண்ணி பாருங்க . இப்படி டைப்பன்னிய நோட் பேடுக்கு oeminfo.iniன்னு பேர குடுத்து அதை C:\WINDOWS\system32 போல்டரை திறந்து அதில் சேவ் செய்யவும் .

           இப்ப உங்களுக்கு பிடிச்ச படத்தை உங்க மனைவி , குழந்தை , இல்லை அது ஒரு நடிகையா கூட இருக்கலாம் . அந்த படத்தை உங்க பெயிண்ட் புரோமிராமில் திறந்து அந்த படத்தை .bmp (பிட் மேப் படமாக ) ஃபைலாக சேமிக்கவும் . அதுக்கு  oemlogo.bmpன்னு பேர் குடுத்து திரும்பவும் , C:\WINDOWS\system32 போல்டரை திறந்து அதில் சேவ் செய்யவும் .

            இப்ப உங்க டெஸ்க்டாப்பில் மை கம்ப்யூட்டரை வலது கிளிகிள் வரும் பிராப்பரைடிஸ் திறந்து பாருங்க . அதில் உங்க கம்பெனி மேனுஃபேக்‌ஷர் , படமும் தெரியும் .சப்போட் இன்ஃபெர்மேஷன் பெட்டியை கிளிக்கினால் அதில் நீங்கள் எழுதிய மேட்டர் எல்லாம் கிடைக்கும்..பாத்து சந்தோஷ படுங்க

டிஸ்கி..!!! கொஞ்சம்  ஆணிகள் தொல்லை தொடர்வதால் நிறைய பிளாக் பக்கம் போக முடியல.கமெண்டும் போட முடியல  இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும்ன்னு நினைக்கிறேன் ( ஒன்னுமில்ல வெய்யில் ஜாஸ்தி )  

Friday, July 9, 2010

பிளாகர் டிப்ஸ்

111 என்ன சொல்றாங்ன்னா ...

          சிலநேரம் பிளாகர் தன்னுடைய அட்ரஸை கூட்டி குறைப்பதாலும் , கூகிளின் சர்வர் குறைபாடாலும் சிலருடைய வலைப்பக்க பதிவுகள் நமக்கு கிடைக்காது. நாம் அவங்க எதுவும் இடுகை போடலன்னு நினைப்போம் ஆனா அதுக்குள்ள அவங்க குறைஞ்சது மூனு போட்டிருப்பாங்க ஆனா அது நமக்கு வராது. சிலருக்கு என்ன பண்ணினாலும் ஃபாலோயர் விட்ஜட் வைக்க முடியாது. அதுக்கு என்ன செய்ய செய்யறது    .
 
           ஏன் எனக்கே இது உதவியது. காரணம் எனக்கு என் எழுத்தை விட அடுத்தவங்க எழுதுனதை படிக்க பிடிக்கும் . ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும். கதை , கவிதை , கட்டுரை , படம் , இப்படி என்னை மாதிரி சில மொக்கை பதிவுகளும் படிக்க பிடிக்கும் . இதில் பலர் ஃபாலோயர் விட்ஜட் வச்சி இருப்பாங்க . ஏன் யாராவது தன்னோட  எழுத்தை படிக்க மாட்டாங்களான்னு ஒரு ஆசைதான் . இதில் என்னையும் சேர்த்தே அடக்கம்.
  
            நமக்கு பிடித்தவங்க அல்லது எழுதுவதை ரசிக்க முடிவு செய்து நாம ஃபோலோவரா சேர்ந்து விடுவோம்..அதுவும் நமது டேஷ் போர்ட் வியூவரில் கிடைக்கும் . அதில் உள்ள ரிடரிலும் படிக்கலாம் .இது வரை யாருக்கும் எந்த குழப்பமுமில்லை.ரைட்.  ஆனா அவங்க சிலநேரம் பிளாக் பேர அல்லது ஒரு எழுத்தையாவது மாத்தினா அது நமக்கு கிடைக்காது. 

            சிலருக்கு அந்த விட்ஜட் வேலை செய்யாது . அதனால் அவங்க ஃபாலோயர் வைக்க முடியாது . அப்ப நாம என்ன செய்யறது. அவங்க பிளாக்க எப்படி படிக்கிறது. அதுக்கு ஒரு வழி இருக்கு . நீங்க உங்க பிளாக் டேஷ் போர்டில  இடது பக்கம் நீங்க பார்க்கும் ஆட்களின் தலைப்பு பெயர் இருக்கும் .வலது பக்கம் அப்டேட் பதிவுகள் இருக்கும். அந்த இடது பக்க தலைப்பின் கீழ் ஆட் , மேனேஜ் ரெண்டு பட்டன் இருக்கே அதில் யார் உங்களுக்கு வேனுமோ

           யார் பதிவு பிடிக்குதோ , அல்லது யாரிடம் ஃபாலோயர் விட்ஜட் இல்லையோ அல்லது வைக்க முடியலையோ அவங்க. அட்ரசை. பிளாக் முகவரியை முழு முகவரியை காப்பி பண்ணிட்டு ஆட் பட்டனை அழுத்தினால் வரும் டயலாக் பாக்ஸில்  
அப்படியே குடுத்துட்டு நாம பப்ளிக்கா தொடரலமா இல்ல எப்படிங்கிற பாக்ஸில் டிக் குடுத்து ஃபாலோ குடுத்தால் இப்ப அவங்களோட பிளாக் எல்லாம் நமக்கு கிடைக்கும்

          இது பொதுவா இந்த முறையில ஈஸியா ஃபாலோயரா சேரலாம் . எப்பவாவது ஏதாவது தடைகள் மாதிரி தோனினால் இந்த முறையில் மீண்டும் முயற்சி செய்யுங்க போதும்  

Saturday, July 3, 2010

குங்குமப்பூவும் , சிவந்த மலரும்

142 என்ன சொல்றாங்ன்னா ...

            போன பதிவுவில் விருது குடுக்க , மற்றும் அதுக்கு லிங்க் குடுக்கவும்  இல்லாமல் வீடுவீடாக போய் சொல்லிட்டு வருவதுக்குள் மண்டை காய்ந்து விட்டது (( மண்டை இருக்கான்னு யாராவது பின்னுட்டமிட்டால் அவருக்கு வாழைக்காய் தோல் சாம்பார்  பார்ஸலில் அனுப்பப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்(ல்)கிறோம் )) அதனால் வழக்கமா போகும் எந்த பதிவிலும் போகமுடியல , ஓட்டும் போடமுடியல அதுவுமில்லாம நெட் நத்தை வேகத்தில் அசைந்து நடந்து போனதால் எந்த பதிவும் படிக்க முடியல சாரி மக்கள்ஸ்.

           விருது குடுத்துட்டு பின்னாடியே சந்தேகம் கேக்குறேனேன்னு நினைக்காதீங்க... இதை வச்சே நம்ம சொந்த பந்தம் ஒரு பதிவே  போட்டுட்டாங்க வாழ்க...( அப்பா ஒரு வழியா பிரபல பதிவராயாச்சி...ஹி..ஹி..) ஓக்கே இப்ப என் சந்தேகத்தை ஆரம்பிக்கிறேன்.

           இந்த அரபு நாட்டில பெண்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு மேக்கப் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் செலவிடுகிறார்கள் .ஏற்கனவே அழகா இருக்கிறவங்களுக்கு ஏங்க இந்த தொல்லை.. ஆனா பியூட்டி பார்ல இருந்து வருபவர்களை கண்டால் இன்னும் அழகா இருக்கும் மருதானி , மற்றும் லிப்ஸ்டிக் , தலைமுடி டிஸைன் . சில சமயம்  ஜொள்ளே வடியும் நமக்குதான் .அழகை அழகுன்னு சொல்லலாம் அதுக்காக அசிங்கமா சொல்லக்கூடாது .அதுப்போல செண்ட் யானை விலை குதிரை விலை. நடந்து போய் பத்து நிமிஷம் வரை வாசனை வரும் . மோப்ப நாய்க்கு வேலையே இல்லை.

            இதைப்போல நம்ம ஊர் பெண்களையும் இதுக்கு அடிமையா மாத்ததான்  உலக அழகி பட்டம் , பிரபஞ்ச அழகி பட்டம் , எல்லாம் அப்ப தான் நாம் ஏமாந்து அந்த பொருட்களை வாங்கி முகத்தில அப்பி கொள்வோம் ..இது இன்னைக்கு நேத்தைக்கு இல்ல இங்கிலீஷ் காரன் எப்ப நம்ம ஊருக்கு வந்தானோ அப்பவே தொடங்கிடுச்சி. ஆனா காக்கா  மயிலா ஆகவுமில்ல . குயில் சந்தன நிறத்தில் மாறவுமில்ல .

        ஒரு பொருள் ரொம்பவும் விலை அதிகம்  ஆனால் மக்கள் அது பின்னாடி ஓடுறாங்க . அது என்னன்னா குங்குமப்பூ   (( அப்பாடி ஒரு வழியா வந்தாச்சி சந்தேகம் கேக்க .)) அவங்க கொல்லும் ..ச்சே..சொல்லும் காரணம் அதை சாப்பிட்டா பிறக்கும் குழந்தை நல்லா சிவப்பா பிறக்கும் அப்படின்னு. ஆனா நிசத்தில அப்படி இல்லையே ஏன் . அப்ப டப்பா டப்பாவா ஏன் சாப்பிடனும். எல்லாத்திலயும் அறிவா சோதனை செய்யும் நம் நாட்டு சோதனைக்கூடம் இதை ஏன் சரியா செக் பண்ணுவது இல்ல.
         நம்ம நாட்டு கிளைமேட் கொஞ்சம் சூடு . அதனால பலவிதமான நிறத்தில ஆண் , பெண் இருக்காங்க .இங்க குங்கும்ப்பூவ பாலில் கலந்து சாப்பிட்டாஒரு வேளை நல்ல கலர் கிடைக்கும் அப்ப நீக்ரோன்னு ஒரு இனம் இருக்கே .நல்ல அண்டங்காக்கா கலர்ல பல்லை தவிர மத்த எல்லாமே கருப்பா ஆப்பிரிகாவில.!! ஏன் அவங்களுக்கு இதை பத்தி யாரும் சொல்லல. இல்ல அங்க இது சூப்பர் மார்கட்ல அவங்களுக்கு  கிடைக்கலையா..?
           அட அட்லீஸ்ட் .ஒரு எருமை மாட்டுக்காவது குடுத்து செக்பண்ணி பாத்திருக்கலாம் இல்லையா (( ப்ளூ கிராஸ் யாரும் வந்திடாதிங்கப்பா )) போடுற புண்ணாக்குல கலந்து இல்லட்டி கழுநீர் (( பழைய சாதம் + சோறு வடித்த நீர் + அரிசி கழுவிய நீர் )) பானையில கலந்து செக் பண்ணலாம். ஏன் செய்யல..?
                   
                     அப்படி செக் பண்ணினால் அதன் தரம் புரியும் . உண்மையில  அது பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு போகும் முன் குடித்து  வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும் அதே நேரம் வாய்ப்புண், வயிற்றுப்புண் இருந்தால் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.  சளி, இருமல் இருந்தால் அதுக்கு குங்குமப்பூ சிறந்த மருந்து .  இதனலேயே அரபிகள் டீயுடன் மற்றும் அரபி பிரியாணியுடன் கலந்து தினமும் சாப்பிடுகிறார்கள் .

    இப்ப சொல்லுங்க. அது உண்மையில செவப்பாக்குமா.. இதுக்கு பதில பேசாம கேரட்ட சாப்பிட்டு போகலாம் சீப்பான விலையில.

டிஸ்கி : சந்தேகமுன்னு தலைப்ப வச்சா ஒரு வேளை எங்கே ஓடிடுவீங்களோன்னு பயந்து போய்  வேறு பெயர் .ஆனா லேபிள் சந்தேகந்தான் எப்பூடி..ஹி..ஹி..மாட்டினீங்களா..!!  

Thursday, July 1, 2010

தங்க மகன் -நாங்களும் கொடுப்போமுல்ல

150 என்ன சொல்றாங்ன்னா ...

              சில நேரம் என்னை நானே நினைத்து சிரிப்பதுண்டு . என்னது லூசுன்னா அப்படியெல்லாம் இல்லை. யாருக்கு எது கிடைக்கனுமோ அது கிடைக்காது . அவசியமில்லாதவருக்கு வலிய தேடி வரும் . பேபி அதிரா சொல்வது மாதிரி கிடைக்கிடைக்குதான் கிடைக்குது. நான் விருதை சொன்னேன்.
    
              நன்றாக எழுதுபவருக்கு அமைதி விருது. மொக்கை போடுபவருக்கு பெஸ்ட் பிளாக் விருது.  இதனால் எனக்கு கிடைத்த இரண்டு விருதை இதனாலேயே யாருக்கும் தரல .. அந்த வகையில் இந்த தங்க மனிதன் ( வேற பேர் சொன்னா உலகமே திரண்டு வரும் அடிக்க ) விருதை சில ஆல்டரேஷனுடன் அடித்து நிமிர்த்தி துவைத்து காய வைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

               பொதுவா பிளாக் எழுதுறவங்களுக்கு இந்த விருதுகள் ஒரு ஆர்வத்தை , உற்சாகத்தை கொடுக்கும் . கொடுக்குமுன்னு நினைக்கிறேன். வாங்க ..!!! வந்து  கொண்டு போய் உங்க வீட்டு வரவேற்பறையில் பத்திரமா வையுங்க.

                        ஸ்டார்ட் மியூசிக்...........................

எழுத்தோசை , "எனது எண்ணங்களின் உருவம்" , "குப்பைத்தொட்டி" , நாஞ்சில் எக்ஸ்பிரஸ்" , "விழியும் செவியும்" , "ஷ‌ஃபிக்ஸ்" , :::கற்போம் வாருங்கள்::: , CREATIONS , eniniyaillam , Geetha's Womens Special , Geno's Corner , Hasheena Khan , ILLUMINATI , Ladys Blog , Mubeen Sadhika , NATHIYOSAI , Phantom Mohan , Rasikan , Rettaival's Blog , SASHIGA , Scribblings , Time Freezer , Vacant & Pensive , Vanathy's , Veliyoorkaran..Vijis Kitchen , Warrior , Welcome to Mahi's Space... , அண்ணாமலையான் ,அமைதிச்சாரல் அது ஒரு கனாக் காலம் , அதே கண்கள் , அநன்யாவின் எண்ண அலைகள் , அன்புடன் அருணா ,  அன்புடன் ஆனந்தி , அன்புடன் நான் , அன்புத்தோழன் , அன்போடு உங்களை ! , அப்பாவி தங்கமணி , அம்முவின் சமையல் , அலைவரிசை , அல்லாஹு அக்பர் , அவிய்ங்கஆயிரத்தில் ஒருவன் , ஆஹா என்ன ருசி , ஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர் , இதயத்திலிருந்து , இதயம் பேசுகிறது , இது இமாவின் உலகம்இது பவியின் தளம் .............துளிகள்.இந்திராவின் கிறுக்கல்கள் , இனிய பாதையில் , இம்சை அரசி , இயல்பானவன் , இராகவன், நைஜிரியா , உதயம் , உப்புமடச் சந்தி... , எங்கே செல்லும் இந்த பாதை ..... , எனது இரண்டு சதங்கள் –  , என் இனிய தமிழ் மக்களே..., , என் உயிரே...! , என் எண்ணங்கள் , என் கனவில் தென்பட்டது - , என் சமையலறையில் , என் சமையல் அறையில் , என் டயரி - , என் பக்கம் , என் மனதில் இருந்து... , எல்லாப்புகழும் இறைவனுக்கேஏகாந்த பூமி , கண்ணா , கருவேல நிழல்..... , கலைச்சாரல் - , கவிக் கிழவன் - , கவிப்பக்கம்(new) , கவிமதி , காகிதஓடம் கனவு பட்டறை..... குடந்தையூர் , , கொஞ்சம் வெட்டி பேச்சு ,கொத்து பரோட்டா - கோகுலத்தில் சூரியன் , கோலங்கள் - , சமைத்து அசத்தலாம் - , சமையலும் கைப்பழக்கம் , சமையல் அட்டகாசங்கள் - , சாமக்கோடங்கி ... , சாமியின் மனஅலைகள் - ,  சி@பாலாசி - , சிகப்பு வானம்சிதறல்கள் - , சிநேகிதன் - , சின்னு ரேஸ்ரி ,சிரிப்பு போலீஸ் சிறிய பறவை , சும்மா , சூன்யா - , சூர்யா ௧ண்ணன் , செ.சரவணக்குமார் பக்கங்கள் , சென்ஷி , செல்வனூரான் , சேட்டைக்காரன் , சைவகொத்துப்பரோட்டா , சொர்ணம் ... , சொல்லத் துடிக்குது மனசு , சோமாயணம் சொல்லத்தான் நினைக்கிறேன்.. , ஜில்தண்ணி , ஜெய்ஹிந்த்புரம் , தனியாவர்த்தனம் , தமிழ் பஜார் - , தமிழ்குடும்பம் - , தமிழ்ப்பெண்கள் , தாய் தரும் கல்வி , தாராபுரத்தான் , திசை காட்டி , திவ்யா ஹரி , தெரியுமா உங்களுக்கு..? , நட்பு பகுதி , நலம் வாழ எந்நாளும் ... - , நாடோடியின் பார்வையில் , நான் பேச நினைப்பதெல்லாம்...... , நான் வாழும் உலகம்...! , நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம் , நிலா அது வானத்து மேல! , நீரோடை , நிலாமதியின் பக்கங்கள். , நிலாரசிகன் பக்கங்கள் - , நீரோடை , பக்கோடா பேப்பர்கள் , பட்டாபட்டி.... ,. பட்டிகாட்டான் ( பட்டணத்தில்) . பலா பட்டறை .  பலாச்சுளை - . பாகீரதி . பாகை நிலம் . பாடினியார் - . பித்தனின் வாக்கு . பிரபாகரனின் தத்துபித்துவங்கள்... . பிரியாணி . பிரிவையும் நேசிப்பவள்.. . பிற மொழிப்படங்கள்... தமிழில்... . பூங்கதிர் தேசம்... . பேனாமுனை . பொன் மாலை பொழுது . ப்ரியா கதிரவன் ♥ப்ரியமுடன்......வசந்த் . மங்குனி அமைச்சர் . மசக்கவுண்டனின் கிறுக்கல்கள் . மஞ்சுவின் பக்கங்கள் . மன விலாசம் .. மனக்கனவுகள் . மயில் . மர்மயோகி - . மலர்வனம் - . மழை . மழை மேகம் - . மாயவரத்தானின் வலைப்பூ.... - . மின்மினியின் சிந்தனைகள் - . முகிலனின் பிதற்றல்கள் - . முத்துச்சிதறல் - .  மௌனராகங்கள் - . யாவரும் நலம் . யூர்கன் க்ருகியர் . ரேவதி . வசந்தகால பறவை . வந்தேமாதரம் . வலைச்சரம் . வால் பையன் . வி..ம..ர்..ச..ன..ம்....... . விக்னேஷ்வரி - .உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) விட்டு விடுதலையாகி.. . விந்தைமனிதன் . வெட்டி வேலை - . வெறும்பய . வேலன் . ஸ்டார்ட் மியூசிக்! - . ஹர்ஷினிக்காக (HARSHINI) . ஹா..ஹா...ஹாஸ்யம் - . ஹாய் அரும்பாவூர் .  ஹுஸைனம்மா . என்எழுத்து இகழேல்


 டிஸ்கி : வழக்கம் போல சில ஃபாலோயர் லிங்க் கிடைக்கல . மற்றும் சிலர் தலைப்பு பெயர் மாற்றியதால் திறக்கவில்லை. என்ன செய்வது. ஆ..அப்புறம் சொல்ல மறந்துட்டேன் , நீங்கள் விருப்பபட்டால் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.