Monday, April 26, 2010

ஜெய்லானி டீ வீ யில்--கொசு வளர்பது எப்படி

79 என்ன சொல்றாங்ன்னா ...

     இன்றைய நிகழ்ச்சியில் நாம இன்னைக்கு கொசு வளர்பது எப்படின்னு பாக்க போறோம்.. அதை விளக்க கொ சுந்தரம் வந்திருக்கார்..

ஜெ டீ வீ :வாங்க மிஸ்டர் கொ சுந்தரம் ( இடை மறித்து)
கொ சு  :நீங்க என்னை கொசுன்னே கூப்பிடலாம் ஜெய்லானி.
ஜெ டீ வீ :ஓகே கொசு.. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது
கொ சு :ஓ அதுவா 1980 லிருந்து இந்த ஆராய்ச்சில இருக்கேன். ஆராய்ச்சி இன்னும் நடக்குது முக்கால் வாசி சக்ஸஸ் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு..
ஜெ டீ வீ :எல்லாருமே பயந்து ஓடும் போது நீங்க மட்டும் ஆராய்ச்சி எப்படி செய்றீங்க.
கொ சு :ஸார் அதிகம் கேட்டா கடிச்சி வச்சிருவேன் .ஜாக்கிரதை.
ஜெ டீ வீ :ஓ....ஓகே.....ஓகே.... பு..ரி.ஞ்..சி..டு .ச்..சி நீங்களே சொல்லுங்க
கொ சு  :அதான் நல்ல பிள்ளைக்கு அழகு
கொசுவால என்ன நன்மைன்னு கேட்டா!. நீங்க  ராத்திரியில அதிகம் லைட் போட வேண்டாம். ஏன் முழுக்க முழுக்க லைட்டே போட வேண்டாம். அப்ப தாங்க கொசுவுக்கு கண்ணு தெரியாது. உங்களை கடிக்காது.
ஜெ டீ வீ :ஓ..அப்படியா

கொ சு  :ராத்திரி லைட்டு போடாட்டி கரண்ட் மிச்சம் , வீட்டு பட்ஜெட் நிறைய மிச்சமாகும் .மந்திரியை திட்ட மாட்டீங்க. நீங்க டாக்டரா இருந்தா நிறைய பேஷண்ட் வருவாங்க. சீக்கிரமா கிளினிக்கை காலேஜ் மாதிரி பெரிசா கட்டிடலாம்

        உங்க வீட்டில யாரும் விருந்தாளின்னு சொல்லிகிட்டு ஒரு பய வர மாட்டான் அப்படியே வந்தாலும் கடி தாங்காம தானா சொல்லிக்காம கொல்லாம ஓடியே போயிடுவான் . எப்பவும் ஒரு இசை காதுகிட்டே ரீங்காரமிட்டே இருக்கும் .

ஜெ டீ வீ : ஏங்க மலேரியா காய்ச்சல் வராதா ?

கொ சு  :ஏன்யா சிகரெட் குடிச்சி சாவரவன் அதிகமா? தண்ணி அடிச்சி சவரவன் அதிகமா ? எயிட்ஸ்ல சாவரவன் அதிகமா? மலேரியாவில சாவரவன் அதிகமா?

ஜெ டீ வீ : ஓகே..ஓகே.. சொல்லுங்க..

கொ சு  :நாய் வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? , மாடு வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? .ஆடு வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? இப்படி மனுசன் எதை வளத்தாலும் கடிக்கல . ஆனா கொசு மட்டும் உங்களை கடிக்குது ஏன் ? அதை நீங்க வளர்க்கல அதான் கடிக்குது. எப்படி நம்ம ஆராய்ச்சி.

ஜெ டீ வீ : சபாஷ் கொ சு

கொ சு  :அதனால நீங்க வளர்த்து பாருங்க கூடிய சீக்கிரத்தில அதுவும் உங்க நன்பனா ஆயிடும். அப்புறம் உங்களை அது கடிக்காது. உங்க எதிரியை மட்டும் அப்புறம் துரத்தி துரத்தி கடிக்கும். மூன்றாவது உலக யுத்தம் வந்தா அது கொசு யுத்தமாதாங்க இருக்கும் . எல்லாரும் சொறிஞ்சி சொறிஞ்சியே செத்து போவாங்க அனு ஆயுத்துக்கு வேலையே இருக்கது.

ஜெ டீ வீ : சரி கொ சு கேக்கும் போதே புல்லரிக்குதே கொசு வளர்பதை இப்ப சொல்லுங்க .

கொ சு  :ரொம்ப ஈஸி ஜெய்லானி சார் பழைய குழம்பு , பழைய சோறு இதை தூக்கி போடாம ஒரு பாத்திரத்தில வச்சி பத்து நாள் கழிச்சி திறந்தா நல்ல ஒரு மணம் வரும்.

ஜெ டீ வீ : எப்படி நாம ஊறுகாய் போடறோமே அது மாதிரியா


கொ சு  :அப்படி சொல்றா என் செல்லம் ஆனா இதை வெய்யில்ல வைக்ககூடாது அதான் முக்கியம்.  இதை தோட்டத்தில மாலை மங்கிய இரவு நேரத்தில வச்சா கொசு வரும். ஒரு வேளை அப்படி வராட்டி  இந்த பாட்டை பாடுங்க கண்டிப்பா வரும்

வாராயோ தோழி வாராயோ .
என் வீடு தேடி வாராயோ
வாராயோ தோழி வாராயோ .
என் வீடு தேடி வாராயோ
பழைய சோறு தன்னில் மணமே காணும்
என் வீடு காண வாராயோ

ரீங்காரம் கொண்ட கொசுவே
புது இசைக்கோலம் போடு கொசுவே
பேய்க்கோலம் கொண்ட கொசுவே
என் இனம் வாழ பாடு கொசுவே
அரிக்காத வாயும் அரிக்காதோ
கடிவாங்கும் நாளை கண்டு சொறியாதோ
அரிக்காத வாயும் அரிக்காதோ
கடி வாங்கும் நாளை கண்டு சொறியாதோ
வாராய் என் தோழி வாராயோ
என் வீடு காண வாராயோ

 தனியாக ஓடி  ஒளிவார்
இவள் தளிர் போலே தாவி கடிப்பாய்
தூங்காம கண் சேர்ந்து  போவார்
இரு கண்மூடினால் மார்பில் கடிப்பாய்
எழிலான கூந்தல் கலையாதோ
பரட்டையாக அழுது வடிவாரோ
எழிலான கூந்தல் கலையாதோ
பரட்டையாக அழுது வடிவாரோ
வாராய் என் தோழி வாராயோ
என் வீடு காண வாராயோ

வாராயோ தோழி வாராயோ .
என் வீடு தேடி வாராயோ
வாராயோ தோழி வாராயோ .
என் வீடு தேடி வாராயோ
பழைய சோறு தன்னில் மணமே காணும்
என் வீடு காண வாராயோ


இந்த பாட்டை ஆறு தடவை பாடினால் நீங்களும் அழுதுடுவீங்க உங்க் அன்பை பாத்து கொசுவும் தானா உங்க வீட்டுக்கு வந்துடும்.
     அப்புறம் வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு ஒரு பாட்டில் மூடியில ஆட்டு ரத்ததை முடிஞ்சா பிளட் பேங்கில மனுச ரத்தத்தை வாங்கி வந்து கிளிசரின் கலந்து வச்சா ரத்தம் உறையாம , காயம அப்படியே இருக்கும் .கொசுவும் உங்களை கடிக்காது. பத்தே நாளில் உங்க மூக்கு மேல உக்காந்தாலும் உங்களை கடிக்காது.

ஜெ டீ வீ :சரிங்க கொசு உற்பத்தியை பத்தி ஒன்னுமே சொல்லலியே !!

கொ சு :அதுக்கு ஒரு பாட்டு இருக்கு சொல்றேன் கேளுங்க

ஜெ டீ வீ :ஐயோ.........( ஜெய்லானி டீ வீ ஸ்டுடியோவில் கரெண்ட் கட் )  

Friday, April 23, 2010

ஜெய்லானி டீவியில் ---நீங்களும் சமைக்கலாம்

85 என்ன சொல்றாங்ன்னா ...
                        இன்று முதல் நமது ஜெய்லானி டீவியில் சமைப்பது எப்படி என்பதை நாம் பார்க்கப் போகிறோம் .

           இன்றைய நீங்களும் சமைக்கலாம் பகுதியில் சுடுதண்ணீர் வைப்பது எப்படின்னு பாக்கலாம். சுடுதண்ணீர் வைக்கிறதுக்கு முன்னே யாருக்கு அது குடிக்கவா இல்ல குளிக்கவா, எத்தனை பேருக்கு , சூடு சொரனை ஆளுக்கு எத்தனைன்னு ஒரு பிளான் பண்ணிக்கோங்க. . அப்படி பண்ணாட்டி அது உங்க மேலயே யாரும் டெஸ்ட் பண்ணிட்டா ? அப்புறம் என் மீடியா மீது கேஸ் போடக்கூடாது என்ன புரிஞ்சிதா ?ஓகே..

          அயோடக்ஸ் இல்லாட்டி நிவியா மாதிரி கிரீம் ஒன்னு கை வசம் இருக்கட்டும் சுட்டுட்டா தடவ வேனாமா அதுக்குதாங்க., மொபைல் போன் ரெடியா இருக்கட்டும் 108 ஆம்புலன்சுக்கு இல்ல உங்க குடும்ப டாக்டருக்கு போன் பண்ண வசதியா இருக்கும். சூடு எப்படின்னு அளக்க ஒரு தெர்மா மீட்டரை ரெடியா வச்சுகோங்க ஏன் விரலை விட்டா பாப்பீங்க அதுக்குதான். தரையில ஒரு காலி அரிசி சாக்கு துணியை போட்டு வையுங்க. இல்லாட்டி தூக்கும் போது வழுக்கி விழுந்துடுவீங்க .

         அடுத்ததா பாத்திரம் சின்ன குவளையா , இல்லை பெரிய அண்டாவா , சின்ன குண்டாவா என்பதை தீர்மாணிக்க வேண்டியது உங்க பொருப்பு கடைசில தூக்க கஷ்டப்படக்கூடாது பாருங்க அதுக்குதாங்க இது, ஒரு நல்ல பிராண்ட் தீப்பொட்டியா பாருங்க கடைசி நேரத்துல கழுத்து அறுக்கும் மொத்த வேலைக்கும் ஆப்பு வைத்து நம்மை திட்டு வாங்க வச்சுடும். ஜாக்கிரத சில நேரம் அடி உதைகூட கிடைக்கும் வீட்டில உள்ள மரியாதையை பொருத்து. சிலிண்டருல  கேஸ் இருக்கான்னு பாருங்க ,அண்டா குண்டாவுக்கு கேஸ் அடுப்பு சரிஆவாது . வெறகு கட்டை போட்டு எரிக்கும் அடுப்பு சரிவரும் ஓகே..


         இப்ப நீங்க எல்லா சாமானுடன் ரெடியா இருக்கீங்க. மறந்து போனா இதை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன்ல ஒட்டி வச்சு படிச்சு பாருங்க ஒரு ரெஃபரண்ஸ்சுக்கு உதவும். தெரியமா பானையை அடுப்பில வையுங்க . எத்தனை கிளாஸ் அல்லது எத்தனை அளவு என்று தீர்மானிச்சு வச்ச அளவை தண்ணீரை பானையில ஊத்துங்க. பின்ன மூடியை போடுங்க இல்லாட்டி அதுல பல்லி விழுந்து தற்கொலை பண்ணிக்கும் .கொலை கேசில உள்ள போய்டுவீங்க இதுக்கு ஜாமீன் எல்லாம் கிடைக்காது 

         நெருப்பை பத்த வச்சிட்டு ஒரு நாலு அடிதூரம் போய் குந்துங்க . ஒரு சேஃப்டிக்கு .அம்மனிகளுக்கு முன்ன ஒரு கோணி துணியை பிடிச்சிகிட்டு உட்காருவது இன்னும் நல்லது. பின்ன சேலை விக்கிற விலைக்கு  துணில ஓட்டை விழுந்தா யாரு அதுக்கு வைத்தியம் பாக்குறது. பழகிட்டா நாலு அடியை ரெண்டு அடியா கூட கொறச்சுக்கலாம். கொஞ்ச நேரத்துல கொதிக்கிற சத்தம் கேக்கும் மெதுவா ஒரு கிடுக்கியால திறந்து பாருங்க


        தெர்மாமீட்டரால மெதுவா தண்ணிக்கு மேல பிடிச்சு பாருங்க அதுல வரும் அளவு உங்களுக்கு திருப்தியா இருந்தா போதும் நெருப்பை அனைச்சிடுங்க . யாரையாவது தெம்பு உள்ள ஆளை கூப்பிட்டு பானையை இறக்கி வைக்க சொல்லுங்க. ஏன் விஷப்பரிச்சை . இப்ப நீங்க வெற்றிகரமா சுடுதண்ணீரை தயாரிச்சிட்டீங்க . வரும் பதிவுகளை தொடர்ந்து பாருங்க விரைவில நீங்களும் சமைக்கலாம்.








Wednesday, April 21, 2010

பிடித்த 10 தமிழ்ப் படங்கள்

41 என்ன சொல்றாங்ன்னா ...

          நண்பர்  முகிலன் மற்றும் சைவ கொத்து பரோட்டா பிடித்த 10 தமிழ்ப் படங்கள் என்று எழுத அழைத்திருந்தார்.


விதி: 
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)


(1) எங்க வீட்டு பிள்ளை          முதலில் காலம் பல சென்றாலும் இன்னும் வாழ்வில் பல அரசியல் வாதிகளை வாழவைத்து கொண்டிருக்கும் தமிழக தலைவர் எம் ஜி ஆர் படத்தை போடாவிட்டால் அவர் ஆவி என்னை தூங்க விடாது. அந்த  வகையில் அவர் நடித்ததில் வீரமாகவும் கோழையாகவும் பயந்து நடித்த எங்க வீட்டு பிள்ளை

(2) புதிய பறவை
                 கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக இருந்தாலும் முகத்தில் நவ ரசங்களையும் கொண்டு வரும் நமது சிவாஜியை நினைவு கூறாவிட்டால் அவருடைய ஆவியும் என்னை நொந்து நூடுல்ஸாக்கி கை வீசம்மா கைவீசுன்னு அழ வைத்து விடும் . இதில் சின்ன தகறாறில் சொவ்கார் ஜானகி இறந்ததும்  . சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சரோஜா தேவியை ல்வ் பண்ணவும் முடியாமல் கடைசி வரை தடுமாறும் அழகோ அழகு. கடைசியில் நீ என்னை கைது செய்ய காதல்தானா கிடைச்சுதுன்னு சிவாஜி சொல்லும் சீன் காலம் மாறினாலும் மனதை விட்டு நீங்காது. எங்கே நிம்மதிபாட்டு  இப்போதும் மண்டை காய்ந்தால் தானாகவே உதடு பாட ஆரம்பிக்கும்.

(3) புரியாத புதிர்

                  90களில் காவல் மிகுந்த கல்வி நிறுவனத்தின் சுவர் ஏறிகுதித்து கட் அடித்து பார்த்த படம் கே எஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்த  தோல்வி படம் . கடைசி வரை கொலை செய்தது யார் என்று மிக மிக நம்மை குழம்ப வைத்த படம். தமிழ்பட வரலாற்றில் இதுமாதிரி வந்திருக்குமான்னு சந்தேகமே. ரேகாவின் நடிப்பு அருமையான ஃபலுடா மாதிரி இதில். மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லைன்னு தெரியல.

(4) இரத்தக்கண்ணீர்

                  பணத்திமிரில் கட்டிய மனைவியின் அருமை புரியாமல் மது,மாதுன்னு திரியும் சபல கேஸ் பேமானிகளுக்கு உச்சந்தலையில் சும்மா நங்...நங்கொன்று கொட்டி புரிய வைக்கக்கூடிய மிக அருமையான எம் ஆர் ராதாவின் வசனம் வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பா பேசி நடித்திருக்க முடியாது.  இப்ப அந்த வசனங்களை கேட்டாலும் மனதை கட்டிப்போட்டு விடும். இந்த படத்தை பார்த்து திருந்தாவிட்டால் அவனை கடவுளால் கூட காப்பாத்த முடியாது.


(5) கரகாட்டக்காரன்
                    பெரியதாக கதை ஒன்னும் இல்லாவிட்டாலும் ஒரு வாழை பழத்தை வைத்தே மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம். எத்தனை தடவை பாத்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. படத்துக்கு கண்ணழகி கனகாவும் ஒரு பிளஸ் .

(6) வாழ்வே மாயம்
                     என்றோ வரும் நமது  மரணம் இன்னும் சிறிது நாள் , என்று நாள் குறித்து விட்டால் அவனது நிலையை என்னென்று சொல்வது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கமல ஹாசன்.இந்த படத்தில் வாழ்ந்திருப்பார். ‘வந்தனம் ‘ பாட்டில் கடைசியில் ஸ்ரீ தேவி மீது பூவை தூவி சமர்ப்பணம்ன்னு சொல்லும் சீனாகட்டும், வாழ்வே மாயம்’  பாட்டில் உயிர் போகும் வலியிலும் பழைய சிரிப்பு , பழைய நினைவுகள் வருவது.>>>மனதை விட்டு போகவில்லை. சிகரட் பிடிக்கும் மக்களே கேன்சரை காசு குடுத்து வாங்காதீங்க. பின்ன உங்க ஒருத்தரால உங்களுக்கும் கஷ்டம் உங்களை நம்பி வந்தவங்களுக்கும் , பெத்தவங்களுக்கும் கஷ்டம் ஏன் ?

(7) வசீகரா
                      ஈ அடிச்சான் கப்பி நடிகனாகிய விஜய் கொஞ்சம் கஸ்டப்பட்டு நடிச்சதுமாதிரி இருந்தது இந்த படம். பாட்டும் சினேகாவும் ஒரு பிளஸ் பாயிண்ட்.

(8) உன்னை நினைத்து
                         பணம் பொதுவா பெண்கள் வாழ்க்கையிலதான் விளையாடும் ஆனா இதுல சூர்யா வாழ்கையில விளையாடியது .ஏமாற்றிய லவர் மீது ஆசிட் வீசும் மற்றும் மொட்டைகடிதாசு போடும் இந்த காலத்தில தன் சொத்தையே குடுத்து படிக்க வைப்பது உன்மையிலேயே காதலுக்கு மரியாதைதான். ’’பொம்பலைங்க காதலைதான் நம்பிவிடாதே’’ ’’யாரிந்த தேவதை ‘பாட்டு நல்ல கவிதை வரிகள்.

(9) வானத்தைப்போல
                          எப்போதும் எதிர்மறையான எண்ணங்களுடன் வரும் நபர்களை பார்த்து பழகிய நமக்கு பாசமுள்ள அண்ணன் , குடும்பம் , வில்லன் வரை அசத்தியது இந்த படம். பாட்டுக்களும் ஏ ஓன்,,, அநியாயத்துக்கு எல்லாருமே நல்லவங்களா இருக்காங்கப்பா!!!

(10) பாட்சா
                           எல்லாரையும் சொல்லிட்டு ரஜினியை சொல்லாட்டி தமிழ் ரசிகர்கள் கும்மிடுவாங்க. அதுவும் சித்ராக்கா காதுல விசில விட்டு காதை பஞ்சராக்கிடுவாங்க. இந்த படத்துல  வழக்கமா வரும் ரஜினியின் நகைச்சுவை மிஸ்ஸிங் சீரியஸான நடிப்பில் நம்மை மிரட்டி இருப்பார். ’’நான் உண்மைய சொன்னேன்”’ நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி ‘வசனங்கள் டாப் டக்கர் . பழைய ரஜினியின் சாயல் இதில் கொஞ்சம் அதிகமாகவே தெரியும்.

                          எத்தனையோ படங்கள் இருக்கு ஓவ்வொன்னும் புதுமையாக நிறைய படங்கள் தோழர்கள் , தோழிகள் , அண்ணண்கள் , தம்பிகள் போட்டுவிட்டதால் ஏதோ சின்ன முயற்சி செஞ்சது. பாத்துட்டு எதுவா இருந்தாலும் பிண்ணூட்டத்தில் குத்தி கிழிக்கலாம். தைரியமா வாங்க!!!!!

Thursday, April 15, 2010

கதைகேளு கதகேளு![தொடரோ தொடர்]

46 என்ன சொல்றாங்ன்னா ...
இந்தபதிவ எழுத அழைத்த அக்பருக்கு மிக்க நன்றி

இப்ப நம்ம ராசி சரியில்லை. அதனால எங்காட்டி ஒரு பதிவை இல்லை எதாவது ஒரு படத்தையாவது சுட்டால் மட்டுமே ப்திவுலகத்தில் குப்பை கொட்டமுடியும் என்று பதிவுலக சோதிடர் சேட்டைக்காரன் சொன்னதால அதுவும் மங்குனி தலைமேல அடிச்சி சொன்னதால வேற வழியில்லை .பதிவை திருடினால் நம்மை கும்மி விடுவார்கள் . வேற என்னத்த செய்ய படம் ???

இப்ப கருப்பு காக்காவுக்கு பதில் வெள்ளை காக்காவுக்கு மவுசு அதிகமாச்சி . கவிஞர் மலிக்கா ஒரு வெள்ளை காக்காயை கஷ்டப்பட்டு பிடிச்சி வந்தாங்க , பிடிச்சி வந்தா மறுநாளே நம்ம பித்தன்வாக்கு சுதாகர் அண்ணாத்தே அதை லவட்டிகிட்டு போய்ட்டார்.. அப்ப நாமட்டும் என்ன ??? சரி அப்ப ஆட்டைய போட்டது

இந்த படத்தை காக்காவிடமே நீயே ஒரு கதை சொல்லுன்னு கதைய கேக்க போனபோது கொஞ்சம் வா என் கூடன்னு நீரோடை பக்கமே கூட்டிகிட்டு போச்சி . அங்க போனா கொழுக்கட்டையோட இன்னொரு காக்கா., அப்ப , அப்ப கொழுக்கட்டையை ஒரு கடிகடித்து பிறகு சொல்ல ஆரம்பிச்சது வ்வெ...வ்வெ....வ்வெ..

ஒரு ஊரில ஒரு பெரிய மனிதர் இருந்தார். வயசு , அனுபவம் இருந்தா அவர் பெரிய மனுசர் தானுங்களே .. ஆனால் ஒன்னு அவரோ ஏழை அவருக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை எப்படியாவது இறைவனுக்காக ஒரு பள்ளியை கட்டனும்ங்கிறதுதான். ஆனால் அவரால முடியல இப்படியே காலம் போச்சி. வயசும் ஆச்சு. எண்ணமும் ஆசையும் மட்டும் மாறல. ஒரு நாள் மன்னாரில் முத்து வியாபாரம் நடப்பதை கேள்விப்பட்டு மனசு நொந்து போனார். என்ன செய்வது.
அங்கே போய் சிப்பி வாங்குவதுக்கு கையில பணமும் இல்லை. இருந்தாலும் மனைவியின் கழுத்தில இருந்த கரிய மனியை விற்று அந்த பணத்துடன் மன்னாருக்கு கிளம்பினார் . அங்க போய் முயற்ச்சி செஞ்சதுல எந்த சிப்பிலயும் முத்து கிடைக்கல .கையில இருந்த பணமும் தீர்ந்து போச்சி.
வேற வழி இல்லாத்ததால முத்து சிப்பி சந்தையை விட்டு திரும்பி நடக்க ஆரம்பிச்சார் . உடல் அசதி ஒரு பக்கம் எதுவும் கிடைக்கலயேன்ற ஏக்கம் மறுப்பக்கம் . அருகில் இருந்த மரத்தின் கீழ் தங்கி அப்படியே தூங்கி போய் விட்டார். அப்போது ஒரு காக்கா ( இது உண்மையான காக்கா ) அவர் தூங்கும் இடத்துக்கு போல் உள்ள மரக்கிளையில் வந்து உட்கார்ந்து தான் ஆட்டைய போட்டு வந்த சிப்பியை கொத்தி துண்ண ஆரம்பிச்சது.


முழு சிப்பி கொழுக்கட்டை மாதிரி இருந்ததால அதனால துண்ண முடியல வழுக்கி கீழே தூங்குகிற நம்ம பெரியவரின் மேலே விழுந்தது. மனசு நொந்து நூடுல்ஸான பெரியவர் கண்ணையே திறந்து பாக்கல. என்ன குலோப்ஜாமூனோ நம்ம சொட்ட மண்டையில விழுதேன்னு நெனச்சிட்டாரு. நம்ம விடாப்பிடி காக்கா திரும்பவும் அதை கொத்தி அலகால எடுத்து வந்து பழைய இடத்திலேயே ஒக்காந்து திரும்பவும் ஒரு கடி. ஊசிப்போன கொழுக்கட்டையை கடிச்ச நம்ம பூஸார் மாதிரி முகம் மாற வழுக்கி திரும்பவும் பெரியவர் மேலே சிப்பி விழுந்தது.

இப்பவும் நம்ம பெரிசு கண்ணை தொறந்து பாக்கல என்ன கஸ்மாலமோ லெக் பீஸ துன்னுட்டு எலும்பை தூக்கி போடறானுங்க மடப்பசங்கன்னுட்டு திரும்ப தூங்கிட்டார் . சற்றும் மனம் தளராத விக்கிர மாதித்தன் போல திரும்பவும் நம்ம காக்கா பழையபடி சிப்பியை தூக்கி வந்து விட்டதை தொடர்ந்தது. மூன்றாவது முறையும் பல் இல்லாத காக்கையால முடியல. இப்ப சரியா நம்ம பெரியவரின் மூக்கில விழுந்துச்சி..

இப்பதான் அவருக்கு சரியா முழிப்பு வந்துச்சி . கொக்காமக்கா யார்ல அது என் சப்ப மூக்குல என்னத்தயோ தூக்கி போட்டதுன்னு பார்த்தாரு. பாத்தா யாருமே அங்க இல்ல ஒரு சிப்பிதான் இருந்துச்சி மேலே பாத்தா காக்கா. அது ஒரு முழுச்சிப்பியா இருந்ததால உடச்சி பாத்தாரு. உள்ளே ரெண்டு முத்து பெரிய ஸைசில என்னை எடுத்துக்கோன்னு சொல்ற மாதிரி இருந்துச்சி. அதை எடுத்துக்கொண்டு சந்தோஷமா வீடு வந்தார்.

அப்ப இருந்த மதுரை மன்னரிடம் அந்த இரண்டு முத்தையும் குடுத்து விட்டு தனது ஊரில் ஒரு பள்ளி வாசலை கட்டிதருமாறு கேட்டார். மன்னரும் முத்தின் தரத்தை பார்த்து வியந்து விட்டு தன் அமைச்சரிடம் உடனே அவரின் ஆசையை நிறைவேற்ற ஆனையிட்டார். நெடுநாளான தன் ஆசையான தொண்டி யில் அந்த பள்ளிவாசல் உருவானது கண்டு ஊரே மகிழ்ச்சியானது, அவரின் எண்ணமும் நடந்துடுச்சி அது இப்போதும் உள்ளதாக தெரிகிறது.

இதனால் வரும் நீதி:: நல்லெண்னமும் விடாமுயற்ச்சியும் இருந்தால் ஏழை என்ன ? பணக்காரன் என்ன ? . இறைவன் அருள் எப்போதும் உண்டு.
டிஸ்கி: இது சிறு வயதில் கேட்ட கதை. உண்மையான வரலாறும் கூட . படங்கள் உபயம் நீரோடையில் சுட்டது. கேஸ் போட்டால் நிர்வாகம் பொருப்பில்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொ’ல்’கிறோம். நன்றி வணக்கம்..

Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

28 என்ன சொல்றாங்ன்னா ...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Thursday, April 8, 2010

வைர விருது ------ஜெய்லானி

85 என்ன சொல்றாங்ன்னா ...
இந்த வலையுலகிற்கு வந்து எல்லோரும் எழுதியதை படித்துக் கொண்டிருந்த வேளையில் எதை எழுதுவது எதை விடுவது என நான் தடுமாறிய போது என்னையும் எழுத தூண்டிய முதல் கமெண்ட் , கவியரசி அன்புடன் மலிக்கா அவர்களையும் , இரண்டாவதாக ஆல் இன் ஆல் ஜலீலா அவர்களையும் மூன்றாவதாக வால்பையன் அவர்களையும் இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்கிறேன். ஆரம்பித்து சில மாதங்களிலேயே சில விருதுகளும் கிடைத்துள்ளதும் சந்தோஷமான செய்தி.


கமெண்ட்டுகள் பதிவு இட்டவரை உற்சாகமூட்டும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் அதை விட விருதுகள் இன்னும் நமது சிந்தனையை தூண்டும் . பொதுவாக இது நட்பின் அடிப்படையில் தான் கிடைக்கிறது .படைப்புக்காக இல்லை . இந்த விருதை நானே உருவாக்கியது . வித்தியாசமாக அதே நேரம் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். ( ஆமா எத்தனை நாள் நாமே வாங்கிட்டே இருக்கிறது. )


அன்பு நிபந்தனை <><> நீங்க யாருக்கு வேண்டுமானாலும் தரலாம் ஆனால் கண்டிப்பாக .வாசலில் மாட்டி வைக்கவும் (அப்பதான் நாம இவங்களுக்கு கொடுத்தமா இல்லையான்னு தெரியும் மறந்துராதீங்க )


வாங்க ! வாங்க !! (( ஸ்டாட் மியூஸிக் ))


நீரோடை , சமையல் அட்டகாசங்கள் , சமைத்து அசத்தலாம், ஹுஸைனம்மா , என்எழுத்து இகழேல் , ஹா..ஹா...ஹாஸ்யம் , பிரியாணி , கொஞ்சம் வெட்டி பேச்சு , எல்லாப்புகழும் இறைவனுக்கே , ஷ‌ஃபி உங்களில் ஒருவன் , கற்போம் வாருங்கள்::: , ஹாய் அரும்பாவூர் , கதம்பம்(Arts&amp... சமையல்) , வேலன் , விட்டு விடுதலை ஆகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை , விக்னேஷ்வரி , அண்ணாமலையான் , அதே கண்கள் , அன்புடன் அருணா , அன்புடன் ஆனந்தி , அன்போடு உங்களை ! , ஆயிரத்தில் ஒருவன் , இது பவியின் தளம் .............துளிகள். , இயல்பானவன் , உண்மைத்தமிழன் , உப்புமடச் சந்தி... , என் உயிரே...! , என் கனவில் தென்பட்டது , என் பக்கம் , என் மனதில் இருந்து , ஏகாந்த பூமி , கட்டுமானத்துறை , கருவேல நிழல்..... , கவிப்பக்கம்(new) , காகிதஓடம் , கோலங்கள் , சாமக்கோடங்கி ... , சாமியின் மனஅலைகள் , சிதறல்கள் , சிநேகிதன் , சின்னு ரேஸ்ரி , செ.சரவணக்குமார் பக்கங்கள் , சேட்டைக்காரன் , சைவகொத்துப்பரோட்டா , சொல்லத் துடிக்குது மனசு , சொல்லத்தான் நினைக்கிறேன்.. , ஜெய்ஹிந்த்புரம் ,, ஜெஸிலாவின் கிறுக்கல்கள் , தமிழ்குடும்பம் , தமிழ்ப்பெண்கள் , தாராபுரத்தான் , திசை காட்டி , திவ்யா ஹரி , நட்பு பகுதி , நாஞ்சில் எக்ஸ்பிரஸ் , நாடோடியின் பார்வையில் , நான் பேச நினைப்பதெல்லாம்...... , நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம், பட்டாபட்டி.... , , பித்தனின் வாக்கு, பூங்கதிர் தேசம்... , பேனாமுனை , மங்குனி அமைச்சர் , மசக்கவுண்டனின் கிறுக்கல்கள், மன விலாசம், , மழை , மின்மினியின் சிந்தனைகள், முகிலனின் பிதற்றல்கள் , மௌனராகங்கள் , வால் பையன் , Vijis Kitchen , Veliyoorkaran.. , SASHIGA ,, RettaiVal's , ILLUMINATI , Geetha's Womens Special , Globetrotter .வந்தேமாதரம் ,

அன்புத்தோழன் ♥ப்ரியமுடன்.......நிலா அது வானத்து மேல!.

மலர்வனம், , பிரியமுடன் பிரபு , என் இனிய இல்லம்

♫ ♪ …♥.சங்கரின் பனித்துளி நினைவுகள்..♥…♪ ♫ மற்றும் என்னை ஃபாலே செய்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம்

ஒரு வேளை சில பேர் விட்டிருந்தால் பின்னர் சேர்கின்றேன். சிலரின் பதிவுகள் பிடிக்கும் ஆனால் நான் பின்னூட்டம் கூட போட்டதில்லை என்பது நிஜம். ( நேரம் இல்லாத காரணத்தால் )

Sunday, April 4, 2010

உலகம் பிறந்தது உனக்காக !!!

56 என்ன சொல்றாங்ன்னா ...

ஆரம்ப காலங்களில் மக்கள் அதிக வியாதிகளுக்கு ( பெரிய ) ஆளாகாமலே இருந்து வந்ததுக்கு காரணம் . பல் துலக்க வேப்பங்குச்சி , ஆலங்குச்சி , மற்றும் கரித்தூள் போட்டு பல்லை கால் மணிநேரம் அரை மணி நேரம் தேய்த்து தேய்த்து வெள்ளை ஆக்கினார்கள் அதே நேரத்தில் நெம்பர் ஒன்னும் டூவும் முடிந்து விடும் . அதுபோல ஓடும் ஆற்று நீரில் , அல்லது கிணற்று நீரில் குளியல், குளிக்கும் போது கஸ்தூரி மஞ்சள் , சந்தனம் தேய்க்க தேங்காய் நாறு இப்படி பல பொருட்கள்.


சாப்பிட கேப்பங் கஞ்சி , பச்சை காய்கறி ,கைக்குத்தல் அரிசி சோறு , இரவில் பால் , இப்படி பட்ட உணவு முறையும் , ஒருவனுக்கு ஒருத்தியும் , ஒருத்திக்கு ஒருவனுமாக இருந்த குடும்ப வாழ்க்கையும் உள்ள வரை அவனுக்கு வியாதி என்ன என்றே தெரியாது. (இந்த காலத்துக்கு ஒத்து வராது என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது .)


நாகரீகம் என்ற ஒற்றை சொல்லால் வாழ்கையே தட்டு தடுமாறி எங்கே போகிறோம் என்றே புரியாமல் நாமும் கெட்டு , வரும் நம் தலைமுறைகளுக்கு இந்த ஒற்றை பூமியில் எதை விட்டு விட்டு போகப் போகிறோம். ஏற்கனவே விவசாய நிலம் இல்லை , இருப்பதில் பீ டி ரக காய்கறிகள் , நீர் நிலைகள் வறண்டு போய் . அதன் வழியே ( மழை நீர் வழிந்தாடும் ஆற்று வழிப்பாதை) மாறிவிட்டது . ஒரே வெள்ளப்பெருக்கு. காடுகள் இல்லாமல் அழிக்கப்பட்டு மழை இல்லா வறட்சி பூமியாகியாகி வருகிறது. இரசாயணங்களை உபயோகபடுத்தி பழகிவிட்டு மீள முடியாமல் பிளாஸ்டிக் தடை.



பச்சை இலைகள் குறைந்ததால் ஆயுர் வேதம் போய் ரசாயணங்களையே மருந்தாக உப்யோகிக்க வேண்டிய கட்டாயம்.

அதிலும் கலப்படம் செய்யும் இரண்டறிவு பெற்ற மூட மணிதனே!! நாளை உன் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நீ கலப்படம் செய்த மருந்தையே தருவாயா ?. உன் குடும்பத்தில் ஒருவருக்கு கிட்னி ஃபெய்லியர் வந்தால் நீ தயாரித்த போலி மருந்தை தருவாயா ? அத்தனை ஏன் உனக்கே விபத்து எதாவது நேர்ந்தால் அப்போது என்ன செய்வாய் ? எதை கொண்டு மருத்துவம் செய்வாய் ?


இவ்வுலகம் எத்தனையே பெரும் பண முதலைகளை கண்டு சிரித்திருக்கிறது . அவர்களை விழுங்கியும் இருக்கிறது , நீ பூமிக்கு புதியவன் அல்ல . முதல்வனும் அல்ல , நம் முன்னோர்களின் மீதி , அவர்களின் அருள் கொடை



இறைவன் கொடுத்த அழகிய வாழ்க்கையை , சொர்கமாகவும் , நரகமாகவும் மாற்றுவது உன் கையில்


வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார் ?