Monday, April 26, 2010

ஜெய்லானி டீ வீ யில்--கொசு வளர்பது எப்படி


     இன்றைய நிகழ்ச்சியில் நாம இன்னைக்கு கொசு வளர்பது எப்படின்னு பாக்க போறோம்.. அதை விளக்க கொ சுந்தரம் வந்திருக்கார்..

ஜெ டீ வீ :வாங்க மிஸ்டர் கொ சுந்தரம் ( இடை மறித்து)
கொ சு  :நீங்க என்னை கொசுன்னே கூப்பிடலாம் ஜெய்லானி.
ஜெ டீ வீ :ஓகே கொசு.. உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது
கொ சு :ஓ அதுவா 1980 லிருந்து இந்த ஆராய்ச்சில இருக்கேன். ஆராய்ச்சி இன்னும் நடக்குது முக்கால் வாசி சக்ஸஸ் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு..
ஜெ டீ வீ :எல்லாருமே பயந்து ஓடும் போது நீங்க மட்டும் ஆராய்ச்சி எப்படி செய்றீங்க.
கொ சு :ஸார் அதிகம் கேட்டா கடிச்சி வச்சிருவேன் .ஜாக்கிரதை.
ஜெ டீ வீ :ஓ....ஓகே.....ஓகே.... பு..ரி.ஞ்..சி..டு .ச்..சி நீங்களே சொல்லுங்க
கொ சு  :அதான் நல்ல பிள்ளைக்கு அழகு
கொசுவால என்ன நன்மைன்னு கேட்டா!. நீங்க  ராத்திரியில அதிகம் லைட் போட வேண்டாம். ஏன் முழுக்க முழுக்க லைட்டே போட வேண்டாம். அப்ப தாங்க கொசுவுக்கு கண்ணு தெரியாது. உங்களை கடிக்காது.
ஜெ டீ வீ :ஓ..அப்படியா

கொ சு  :ராத்திரி லைட்டு போடாட்டி கரண்ட் மிச்சம் , வீட்டு பட்ஜெட் நிறைய மிச்சமாகும் .மந்திரியை திட்ட மாட்டீங்க. நீங்க டாக்டரா இருந்தா நிறைய பேஷண்ட் வருவாங்க. சீக்கிரமா கிளினிக்கை காலேஜ் மாதிரி பெரிசா கட்டிடலாம்

        உங்க வீட்டில யாரும் விருந்தாளின்னு சொல்லிகிட்டு ஒரு பய வர மாட்டான் அப்படியே வந்தாலும் கடி தாங்காம தானா சொல்லிக்காம கொல்லாம ஓடியே போயிடுவான் . எப்பவும் ஒரு இசை காதுகிட்டே ரீங்காரமிட்டே இருக்கும் .

ஜெ டீ வீ : ஏங்க மலேரியா காய்ச்சல் வராதா ?

கொ சு  :ஏன்யா சிகரெட் குடிச்சி சாவரவன் அதிகமா? தண்ணி அடிச்சி சவரவன் அதிகமா ? எயிட்ஸ்ல சாவரவன் அதிகமா? மலேரியாவில சாவரவன் அதிகமா?

ஜெ டீ வீ : ஓகே..ஓகே.. சொல்லுங்க..

கொ சு  :நாய் வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? , மாடு வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? .ஆடு வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? இப்படி மனுசன் எதை வளத்தாலும் கடிக்கல . ஆனா கொசு மட்டும் உங்களை கடிக்குது ஏன் ? அதை நீங்க வளர்க்கல அதான் கடிக்குது. எப்படி நம்ம ஆராய்ச்சி.

ஜெ டீ வீ : சபாஷ் கொ சு

கொ சு  :அதனால நீங்க வளர்த்து பாருங்க கூடிய சீக்கிரத்தில அதுவும் உங்க நன்பனா ஆயிடும். அப்புறம் உங்களை அது கடிக்காது. உங்க எதிரியை மட்டும் அப்புறம் துரத்தி துரத்தி கடிக்கும். மூன்றாவது உலக யுத்தம் வந்தா அது கொசு யுத்தமாதாங்க இருக்கும் . எல்லாரும் சொறிஞ்சி சொறிஞ்சியே செத்து போவாங்க அனு ஆயுத்துக்கு வேலையே இருக்கது.

ஜெ டீ வீ : சரி கொ சு கேக்கும் போதே புல்லரிக்குதே கொசு வளர்பதை இப்ப சொல்லுங்க .

கொ சு  :ரொம்ப ஈஸி ஜெய்லானி சார் பழைய குழம்பு , பழைய சோறு இதை தூக்கி போடாம ஒரு பாத்திரத்தில வச்சி பத்து நாள் கழிச்சி திறந்தா நல்ல ஒரு மணம் வரும்.

ஜெ டீ வீ : எப்படி நாம ஊறுகாய் போடறோமே அது மாதிரியா


கொ சு  :அப்படி சொல்றா என் செல்லம் ஆனா இதை வெய்யில்ல வைக்ககூடாது அதான் முக்கியம்.  இதை தோட்டத்தில மாலை மங்கிய இரவு நேரத்தில வச்சா கொசு வரும். ஒரு வேளை அப்படி வராட்டி  இந்த பாட்டை பாடுங்க கண்டிப்பா வரும்

வாராயோ தோழி வாராயோ .
என் வீடு தேடி வாராயோ
வாராயோ தோழி வாராயோ .
என் வீடு தேடி வாராயோ
பழைய சோறு தன்னில் மணமே காணும்
என் வீடு காண வாராயோ

ரீங்காரம் கொண்ட கொசுவே
புது இசைக்கோலம் போடு கொசுவே
பேய்க்கோலம் கொண்ட கொசுவே
என் இனம் வாழ பாடு கொசுவே
அரிக்காத வாயும் அரிக்காதோ
கடிவாங்கும் நாளை கண்டு சொறியாதோ
அரிக்காத வாயும் அரிக்காதோ
கடி வாங்கும் நாளை கண்டு சொறியாதோ
வாராய் என் தோழி வாராயோ
என் வீடு காண வாராயோ

 தனியாக ஓடி  ஒளிவார்
இவள் தளிர் போலே தாவி கடிப்பாய்
தூங்காம கண் சேர்ந்து  போவார்
இரு கண்மூடினால் மார்பில் கடிப்பாய்
எழிலான கூந்தல் கலையாதோ
பரட்டையாக அழுது வடிவாரோ
எழிலான கூந்தல் கலையாதோ
பரட்டையாக அழுது வடிவாரோ
வாராய் என் தோழி வாராயோ
என் வீடு காண வாராயோ

வாராயோ தோழி வாராயோ .
என் வீடு தேடி வாராயோ
வாராயோ தோழி வாராயோ .
என் வீடு தேடி வாராயோ
பழைய சோறு தன்னில் மணமே காணும்
என் வீடு காண வாராயோ


இந்த பாட்டை ஆறு தடவை பாடினால் நீங்களும் அழுதுடுவீங்க உங்க் அன்பை பாத்து கொசுவும் தானா உங்க வீட்டுக்கு வந்துடும்.
     அப்புறம் வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு ஒரு பாட்டில் மூடியில ஆட்டு ரத்ததை முடிஞ்சா பிளட் பேங்கில மனுச ரத்தத்தை வாங்கி வந்து கிளிசரின் கலந்து வச்சா ரத்தம் உறையாம , காயம அப்படியே இருக்கும் .கொசுவும் உங்களை கடிக்காது. பத்தே நாளில் உங்க மூக்கு மேல உக்காந்தாலும் உங்களை கடிக்காது.

ஜெ டீ வீ :சரிங்க கொசு உற்பத்தியை பத்தி ஒன்னுமே சொல்லலியே !!

கொ சு :அதுக்கு ஒரு பாட்டு இருக்கு சொல்றேன் கேளுங்க

ஜெ டீ வீ :ஐயோ.........( ஜெய்லானி டீ வீ ஸ்டுடியோவில் கரெண்ட் கட் )  

79 என்ன சொல்றாங்ன்னா ...:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கொசுக்கடி தாங்கல சே தூக்கமே வரலியே...அப்புறம் வாரேன்.. வர்ட்டா..

athira said...

ஜெய்..லானி... இது எப்ப தொடக்கம்? திருவாளர் கொசுவால் ரொம்ப நொந்துபோய்த்தான் இப்படி ஒரு பதிவையே போட்டிருக்கிறீங்களென நன்கு தெரியுது..

இதனால்தான் அடிக்கடி கொசுமுட்டைபற்றிக் கதைக்கிறீங்களோ? வாழ்க... வளர்க.. நான் கொசுவைச் சொன்னேன்..

athira said...

சரிங்க கொசு உற்பத்தியை பத்தி ஒன்னுமே சொல்லலியே !!

கொ சு :அதுக்கு ஒரு பாட்டு இருக்கு சொல்றேன் கேளுங்க//// ஆஆஆ.... இன்னொரு பாட்டா... ஆளவிடுங்க சாமீஈஈஈஈஈ........... மீஈஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஹேமா said...

இப்போதான் ஊருக்குப்போய் நல்லா கடி வாங்கிட்டு வந்திருக்கேன் ஜெய்.இப்போதைக்கு என்னை விட்டிடச் சொல்லுங்க.கையில கால்ல எல்லம் கருப்புக் கருப்பா அடையாளம் வந்திருச்சுப்பா !

மசக்கவுண்டன் said...

அதென்னமோ ஆண் கொசு கடிக்காதாமே, பெண் கொசு, அதுவும் கர்ப்பமா இருக்கற கொசுதான் கடிக்குமுங்களாமே, அடிக்கடி ஆனகட்டி தயானந்த சரஸ்வதி சாமியார் ஒருத்தரு சொல்லிகிட்டே இருக்காருங்க, அது நெசமான்னு கொ சு கிட்டெ கேளுங்க.

Geetha Achal said...

அருமையான கொசு & ஜெ டிவி கலந்து உரையாடல்...எப்படி..இப்படிபட்ட நல்ல நிகழ்ச்சி எல்லாம் நம்ம ஜெய்லானி டிவீயை தவிர வேறு யாரால் ஒளிபரப்ப முடியும்...கலக்குங்க...

LK said...

//கொசு மட்டும் உங்களை கடிக்குது ஏன் ? அதை நீங்க வளர்க்கல அதான் கடிக்குது. எப்படி நம்ம ஆராய்ச்சி.//
eppadi ippadilam jai.. kalkareenga ponga...
antha paatu arumai

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல வேலை கரண்ட் கட்டாச்சு.......
அவ்வ்.................... :))

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//கொசுக்கடி தாங்கல சே தூக்கமே வரலியே...அப்புறம் வாரேன்.. வர்ட்டா.. //

வாத்யாரே !!நீங்க எப்ப வளர்க்க போறீங்க.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira --//ஜெய்..லானி... இது எப்ப தொடக்கம்? திருவாளர் கொசுவால் ரொம்ப நொந்துபோய்த்தான் இப்படி ஒரு பதிவையே போட்டிருக்கிறீங்களென நன்கு தெரியுது..//

ச்சே..ச்சே.. மனுச கடியை விடவா .கொசு கடி பெரிசு. ஆளுக்கொரு ரீ வீ இருக்கும் போது நானும் ஒன்னு தொறந்திட்டேன்

//இதனால்தான் அடிக்கடி கொசுமுட்டைபற்றிக் கதைக்கிறீங்களோ? வாழ்க... வளர்க.. நான் கொசுவைச் சொன்னேன்..//

இன்னும் நிறைய கடி இருக்கே. நீங்க அப்புறம் தாங்க மாட்டீங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//சரிங்க கொசு உற்பத்தியை பத்தி ஒன்னுமே சொல்லலியே !!

கொ சு :அதுக்கு ஒரு பாட்டு இருக்கு சொல்றேன் கேளுங்க//// ஆஆஆ.... இன்னொரு பாட்டா... ஆளவிடுங்க சாமீஈஈஈஈஈ........... மீஈஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் //

கவலைப்படதீங்கோ கரெண்ட்டு வந்ததும் அந்த பாட்டை யும் போட சொல்ரேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//இப்போதான் ஊருக்குப்போய் நல்லா கடி வாங்கிட்டு வந்திருக்கேன் ஜெய்.இப்போதைக்கு என்னை விட்டிடச் சொல்லுங்க.கையில கால்ல எல்லம் கருப்புக் கருப்பா அடையாளம் வந்திருச்சுப்பா ! //

ஆமாங்க !!.பதிவை லேட்டா போட்டுட்டேன்.ஒரு வேளை முன்னமே போட்டிருந்தால். நீங்க கடியிலிருந்தால் தப்பியிருக்கலாம் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//அதென்னமோ ஆண் கொசு கடிக்காதாமே, பெண் கொசு, அதுவும் கர்ப்பமா இருக்கற கொசுதான் கடிக்குமுங்களாமே, அடிக்கடி ஆனகட்டி தயானந்த சரஸ்வதி சாமியார் ஒருத்தரு சொல்லிகிட்டே இருக்காருங்க, அது நெசமான்னு கொ சு கிட்டெ கேளுங்க.//

கொ சு : உண்மைதாங்க!ஆண் கொசு அப்பாவிங்க இன்னும் சொல்ல வரத்துக்கு முன்ன நிலையத்தில கரெண்ட் கட் ஆயிடுச்சி. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha Achal --//அருமையான கொசு & ஜெ டிவி கலந்து உரையாடல்...எப்படி..இப்படிபட்ட நல்ல நிகழ்ச்சி எல்லாம் நம்ம ஜெய்லானி டிவியை தவிர வேறு யாரால் ஒளிபரப்ப முடியும்...கலக்குங்க... //

ஹ..ஹ..நேயர் விருப்பங்கள் நிறைவேற்றப்படும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK.---// eppadi ippadilam jai.. kalkareenga ponga...
antha paatu arumai //

எல் கே சார் எப்பவும் மாத்தி யோசிங்க . அருவியா கொட்டும். சிலப்ப மண்டை முடியும்தான் . பாட்டு எழுத 2 நிமிஷம் பிடிச்சுது. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பட்டாபட்டி.. said...

//
மூன்றாவது உலக யுத்தம் வந்தா அது கொசு யுத்தமாதாங்க இருக்கும் .
//

முடியல ஜெய்லானி..
உங்களை கொண்டு போயி..இந்தியாவைல அடைச்சாத்தான் வழிக்கு வருவீங்க..

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//நல்ல வேலை கரண்ட் கட்டாச்சு.......
அவ்வ்.................... :)) //

ஹி..ஹி..முக்கிய கிளைமாக்ஸில போய்டுச்சி சார். சீக்கிரமே ஒரு ஜெனரேட்டர் வாங்கனும் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி.--//முடியல ஜெய்லானி..உங்களை கொண்டு போயி..இந்தியாவைல அடைச்சாத்தான் வழிக்கு வருவீங்க..//

க்கீ..க்கீ..க்கீஈஈஈஈ. ஏன் இந்த கொல வெறி . நிறைய பாட்டா பாடி ஒரு கலக்கு கலக்கி ஒரு வழி பண்ணிட மாட்டேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Chitra said...

////நாய் வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? , மாடு வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? .ஆடு வளக்குறீங்க உங்களை கடிக்குதா ? இப்படி மனுசன் எதை வளத்தாலும் கடிக்கல . ஆனா கொசு மட்டும் உங்களை கடிக்குது ஏன் ? அதை நீங்க வளர்க்கல அதான் கடிக்குது. எப்படி நம்ம ஆராய்ச்சி.////

......... ஒரு கொசு உங்களை கடித்து, உங்களுக்குள் இருந்த மொக்கை அரசனையும் கவுஜ கனவானையும் எழுப்பி விட்டு விட்டது.

கரிகாலன் said...

ஆஹா... இவனுக்கு அந்தக் கொசுவே பரவாயில்ல போலிருக்கே... முடியலடா சாமி!

நாடோடி said...

டீடெயில் ப‌த்த‌ல‌யே ஜெய்லானி சார்...... எப்ப‌ சார் க‌ரெண்ட் வ‌ரும்.... (நான் இல்லை... வேற‌ எவ‌னோ கேட்க‌ சொன்னான்)

சசிகுமார் said...

தல இந்த கடிக்கு ஒடம்பெல்லாம் ஒரே ரத்தமா ஆகிடுச்சி. நல்ல கடி உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@Chitra--//...... ஒரு கொசு உங்களை கடித்து, உங்களுக்குள் இருந்த மொக்கை அரசனையும் கவுஜ கனவானையும் எழுப்பி விட்டு விட்டது. //

hi...hi...ha..ha..என்ன இருந்தாலும் எனக்கு குரு நீங்களும் கோமா வும் தாங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கரிகாலன்--//ஆஹா... இவனுக்கு அந்தக் கொசுவே பரவாயில்ல போலிருக்கே... முடியலடா சாமி! //

ஹா..ஹா..என்னா தல இதுக்கே அசந்தா எப்படி இன்னும் எத்தனையோ புராஜக்ட் இருக்கே. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--/ டீடெயில் ப‌த்த‌ல‌யே ஜெய்லானி சார்...... எப்ப‌ சார் க‌ரெண்ட் வ‌ரும்.... (நான் இல்லை... வேற‌ எவ‌னோ கேட்க‌ சொன்னான்) //

ஜெனரேட்டருக்கு ஆர்டர் குடுத்திருக்கு. அப்படின்னு செல்லிடுங்க. நேயர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது எங்க ஜனநாயக கடமை. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SUFFIX said...

நேத்து தாம்ப்பா கொசு அடிக்கிற பேட் வாங்கினேன், ஐ.பி.எல், பார்த்து பேட்டிங்கல இப்போ நல்ல ஃபார்ம்!!

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//தல இந்த கடிக்கு ஒடம்பெல்லாம் ஒரே ரத்தமா ஆகிடுச்சி. நல்ல கடி உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //

சார் அதுக்குள்ள கரெண்ட் கட் ஆயிடுச்சி!!. இதுக்கேவா ?? உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@SUFFIX--//நேத்து தாம்ப்பா கொசு அடிக்கிற பேட் வாங்கினேன், ஐ.பி.எல், பார்த்து பேட்டிங்கல இப்போ நல்ல ஃபார்ம்!! //

தப்பு பண்ணீட்டீங்களே !!. ஒரு உயிருள்ள ஜீவனை இப்படி கொல்லலாமா. செலவில்லாத விசயங்களை நான் சொல்லி தரேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலமுருகன் said...

ஒரு நண்பர் சொன்ன நகைசுவை.

கொசுவை எப்படி கொல்வது? (கோவிச்சுக்காதிங்க.. சும்மா....)

கொசுவை பிடித்து மல்லாக்க படுக்கப் போட்டு கிச்சு கிச்சு மூட்ட வேண்டும். அது ஹஹஹான்னு சிரிக்கும். அந்த சமயம் பார்த்து வாயில விஷத்த ஊத்தி கொள்ள வேண்டியதுதான். எப்படி?!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கொசு வரதுக்கு பாட்டா.. அந்த சமயத்துல நாங்க தூங்காம இருந்தோமே எங்களுக்கு பாட்டு ஏதாவது கிடையாதா..

Cool Boy said...

நாராயணா ஹெல்ப்!
கடி தாங்க முடியல..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அந்த கொசு பாட்டுக்கு இடையில இடையில ரீங் ரீங் ரீங்... அப்படின்னு பேக்ரவுண்ட் மியூசிக் சேத்தீங்கன்னா கொசு சீக்கிரம் வந்திரும்..

r.v.saravanan said...

ஜெய்லானி கொசு மேலே உங்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு பாசம்

ஜெய்லானி said...

@@@பாலமுருகன்--//ஒரு நண்பர் சொன்ன நகைசுவை.கொசுவை எப்படி கொல்வது? (கோவிச்சுக்காதிங்க.. சும்மா....)

கொசுவை பிடித்து மல்லாக்க படுக்கப் போட்டு கிச்சு கிச்சு மூட்ட வேண்டும். அது ஹஹஹான்னு சிரிக்கும். அந்த சமயம் பார்த்து வாயில விஷத்த ஊத்தி கொள்ள வேண்டியதுதான். எப்படி?! //

கொ சு : பால முருகன் சார் இது கொல்ற பதிவு இல்லைங்க வளக்கிற பதிவு. அதை எப்படி நண்பனாக்கிற பதிவு, என்னை கண்கலங்க வச்சிட்டீங்க். உங்க் பேச்சு நா கா....உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//கொசு வரதுக்கு பாட்டா.. அந்த சமயத்துல நாங்க தூங்காம இருந்தோமே எங்களுக்கு பாட்டு ஏதாவது கிடையாதா..//

அதுக்குள்ள தாங்க கரெண்ட் கட் ஆயிடுச்சி .நீங்க தப்பிச்சிங்க. .உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Cool Boy--//நாராயணா ஹெல்ப்! கடி தாங்க முடியல.. //

யாரோடன்னு சொன்னா தெரியும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//அந்த கொசு பாட்டுக்கு இடையில இடையில ரீங் ரீங் ரீங்... அப்படின்னு பேக்ரவுண்ட் மியூசிக் சேத்தீங்கன்னா கொசு சீக்கிரம் வந்திரும்..//

குட் ஐடியா நம்ம D J லீவு வந்ததும் சேக்க சொல்றேன் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//ஜெய்லானி கொசு மேலே உங்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு பாசம் //

போன ஜென்மத்து உறவுங்க. அவ்வளவு சீக்கிரம் விட்டிற முடியுமா. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

malar said...

ஆ... ஆ...ஐயோ

ஆனாலும் இந்த கடி கடிகபடாது...

ஹரீகா said...

இங்கு வந்த பின்பும் கொசுக்கடி தாங்கல ஸ்ஸ்ஸ்ஸ் (ட்ரியோ ட்ரியோ என்று பட்டு பாடி விரட்ட ஏதும் பாட்டு இருக்கா)

ஜெய்லானி said...

@@@malar--//ஆ... ஆ...ஐயோ

ஆனாலும் இந்த கடி கடிகபடாது...//

இன்னும் கடிக்கவே ஆரம்பிக்கலயே. அதுக்குள்ளயா . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹரீகா--//இங்கு வந்த பின்பும் கொசுக்கடி தாங்கல ஸ்ஸ்ஸ்ஸ் (ட்ரியோ ட்ரியோ என்று பட்டு பாடி விரட்ட ஏதும் பாட்டு இருக்கா)//

பாட்டா அது இருக்கு ஐந்நூறுக்கு மேல . இந்த ஒரு பாட்டுக்கே யாரும் தாங்கல அப்புறம் எப்படி. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

malar said...

அப்போ GOODNIGHT பத்தி வச்சிர வேண்டியதுதான்...

கண்ணா.. said...

பாஸ் கொசுவுக்கெல்லாம் பாட்டா..!!!

பாத்து ஜெ டீவி கொசு டிவீ ஆயிற போகுது...

:))

Mrs.Menagasathia said...

அய்யோ நிஜமாவே கொசுகடி தாங்கல..அந்த கொசு பாட்டு சூப்பர்ர்ர்!!

கீதா சாம்பசிவம் said...

ஆஹா நாட்டுக்குத் தேவையான அருமையான ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்திருக்கு, நான் தூங்கிட்டு இருந்திருக்கேனே, சொக்கா, சொக்கா, பொற்கிழியைக் கிழிச்சு இவங்களுக்கில்லை கொடுத்திருக்கணும்! :P

Muthu said...

வணக்கம் வந்தனம்

vanathy said...

ஜெய்லானி, நீங்கள் Amazon jungle இல் போய் கொசுவிடம் கடி வாங்கி வந்தது போல செம கடியா இருக்கு. அங்கிருக்கும் கொசுக்கள் ஆளையே கொலை செய்து விடுமாம்.

ராஜேஷ் said...

இந்த பதிவ படிச்ச பிறகு எனக்கு பைத்தியம் பிடிச்சுருக்குனு எல்லாரும் சொல்லுறங்க எனக்கு என்னா ஆச்சு டாக்டர்

மின்னல் said...

நல்ல கற்பனை.தொடரட்டும் இது மாதிரி கடி கள் .

NIZAMUDEEN said...

பாட்டும் மியூசிக்கும் ரொம்ப பொருத்தமாக இருந்தது.
நீங்க ஏதாவது திரைப்படத்தில பாட்டு எழுதிக்கிறீங்களா?

ஜெய்லானி said...

@@@malar--//அப்போ GOODNIGHT பத்தி வச்சிர வேண்டியதுதான்... //


யாருக்குன்னு சொல்லிட்டு செய்யுங்க எனக்கு புகை அலர்ஜி ( நான் யார் , ஜெய்லானியா இல்லை கொசுவா )உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கண்ணா--//பாஸ் கொசுவுக்கெல்லாம் பாட்டா..!!!

பாத்து ஜெ டீவி கொசு டிவீ ஆயிற போகுது...//

பின்ன தானா வராட்டி பாட்டுதான் பாடனும் , உங்க ஆசிர்வாத்தால ஜெ..ஜே ன்னு இன்னும் உயரும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கீதா சாம்பசிவம்--//ஆஹா நாட்டுக்குத் தேவையான அருமையான ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்திருக்கு, நான் தூங்கிட்டு இருந்திருக்கேனே, சொக்கா, சொக்கா, பொற்கிழியைக் கிழிச்சு இவங்களுக்கில்லை கொடுத்திருக்கணும்! :P //

வாங்க புது வரவு.!!இன்னும் எவ்வளவோ ஆராய்ச்சி இருக்கு இதுக்கே பயந்தா எப்படி. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//அய்யோ நிஜமாவே கொசுகடி தாங்கல..அந்த கொசு பாட்டு சூப்பர்ர்ர்!! //

முடிந்தால் நீங்களும் ரெண்டு வளர்த்து பாருங்க . டைம் பாசாகும். கடைசி பாட்டுக்கு முன்ன கரெண்ட் கட் ஆயிடுச்சி . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Muthu--//வணக்கம் வந்தனம் //

நமஸ்தே ! நமோஷ்கார் !! குட் மார்னிங் , ஸலாம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய்லானி, நீங்கள் Amazon jungle இல் போய் கொசுவிடம் கடி வாங்கி வந்தது போல செம கடியா இருக்கு.//

ஹா..ஹா... அனுபவம் பேசுது. சொல்லுங்க கேக்கிறேன். வரும் போது ஒரு பத்து பிடிச்சி தாங்க நன்பனா ஆக்கி காட்டுகிறேன்.

//அங்கிருக்கும் கொசுக்கள் ஆளையே கொலை செய்து விடுமாம்.//

அடடா!! அப்ப ஒரு நூறு வேனுமே, ஹோல்சேலா நானே வாங்கிக்கிறேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜேஷ்--//இந்த பதிவ படிச்ச பிறகு எனக்கு பைத்தியம் பிடிச்சுருக்குனு எல்லாரும் சொல்லுறங்க எனக்கு என்னா ஆச்சு டாக்டர் //

ஸ்டுடியோவுக்கு டாக்டர் வரும் போது சொல்றேன் அப்ப சொல்லுங்க ராஜேஷ் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மின்னல்--//நல்ல கற்பனை.தொடரட்டும் இது மாதிரி கடி கள் .//

வாங்க மின்னல் !, மூளைக்கு வேலை வானாமா ?.அதான் இப்படி . இது சின்ன கடி.பெரிய கடி இனிமே வரும் . உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//.பாட்டும் மியூசிக்கும் ரொம்ப பொருத்தமாக இருந்தது.
நீங்க ஏதாவது திரைப்படத்தில பாட்டு எழுதிக்கிறீங்களா? //

என்ன நிஜாம் நீங்களுமா ? இதுக்கு 2 நிமிஷம் போதுமே !!. திரை படத்தில் பாட்டா ? ஹா..ஹா.. எனக்கு உல்டாவாக்கதான் தெரியும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

asiya omar said...

ஜெய்லானி யு.ஏ.இ -யில் கொசு உற்பத்தி பண்ண நீங்களே போதும் போல,இதுவரை கொசுவை இங்கு நான் கண்ணீல பார்க்கலை,எதற்கும் உங்க கொசு தோழி வந்தா நான் விசாரிததாக சொல்லுங்க.இங்க அனுப்பிடாதீங்க,எப்படி இப்படி யோசிகிறீங்களோ,அதிரா மாதிரி நீங்களும் கிட்னியை யூஸ் செய்றீங்களோ!

ஜெய்லானி said...

@@@asiya omar--//ஜெய்லானி யு.ஏ.இ -யில் கொசு உற்பத்தி பண்ண நீங்களே போதும் போல,இதுவரை கொசுவை இங்கு நான் கண்ணீல பார்க்கலை,எதற்கும் உங்க கொசு தோழி வந்தா நான் விசாரிததாக சொல்லுங்க.இங்க அனுப்பிடாதீங்க,//

முயற்சி செய்யலாமான்னு பாத்தா இந்த பலுதியா பயலுகள் புகை அடிச்சி காரியத்தையே கெடுத்துடறாங்க. ஹும்..என்ன செய்ய..ஒன்னுமே புரியல...
//எப்படி இப்படி யோசிகிறீங்களோ,அதிரா மாதிரி நீங்களும் கிட்னியை யூஸ் செய்றீங்களோ!//

மூளைக்கு வேலை தராட்டி அது கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிடும். அதுக்குதான் இப்படி. எனக்கு நாலு கிட்னிங்கோ...உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

thenammailakshmanan said...

அய்யோ கொசுவுக்கு பாட்டு எழுதி வேற அழைக்கணுமா...என்னதிது ஜெய்லானி...ரொம்பக் கடிக்கிது..:)))

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//அய்யோ கொசுவுக்கு பாட்டு எழுதி வேற அழைக்கணுமா...என்னதிது ஜெய்லானி...ரொம்பக் கடிக்கிது..:))) //

கொ சு :நா உங்களுக்கு பாட்டு எழுதர கஷ்டத்தை குடுக்கல இதையே பாடிடுங்க. பாடித்தான் பாருங்களேன். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK said...

nethu nite current cut agi kosukadila avasatai pattapa neerthanya nyabagathuku vareer

ஜெய்லானி said...

@@@LK--//nethu nite current cut agi kosukadila avasatai pattapa neerthanya nyabagathuku vareer //


கொ சு : அவஸ்தைன்னு ஏன் நெனைக்கிறீங்க வந்த விருந்தாளியை சரியா நடத்துனிங்களா ?. சீக்கிரமா ஃபிரண்டா ஆக்குங்க வெற்றி உங்களுக்கே...ஸாரி வெற்றி நமதே!!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இமா said...

;D

ஜெய்லானி said...

@@@இமா--// ;D //


வாங்க !! வாங்க !! பேருக்கேத்த மாதிரி சுருக்கமா சொல்லிட்டீங்க ! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Ananthi said...

ஹா..ஹா..:D
பாட்டு செம சூப்பரு..
இன்டர்வ்யு அதை விட சூப்பருங்க..

இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்..
நைட் வேற..சத்தமில்லாம தான் சிரிக்கோணும்...!!

Ananthi said...

//ஜெ டீ வீ :சரிங்க கொசு உற்பத்தியை பத்தி ஒன்னுமே சொல்லலியே !!
கொ சு :அதுக்கு ஒரு பாட்டு இருக்கு சொல்றேன் கேளுங்க
ஜெ டீ வீ :ஐயோ.........( ஜெய்லானி டீ வீ ஸ்டுடியோவில் கரெண்ட் கட் ) //

முடியலங்க.. எப்படி இப்படி..
எங்கயோ போயிட்டீங்கப்பா..
ரொம்ப தேங்க்ஸ்..

ஜெய்லானி said...

@@@Ananthi--//ஹா..ஹா..:D பாட்டு செம சூப்பரு.. இன்டர்வ்யு அதை விட சூப்பருங்க..இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்..நைட் வேற..சத்தமில்லாம தான் சிரிக்கோணும்.//

நம்ம ஜெய்லானி டிவிய தொடர்ந்து பாருங்க. மொக்கைகள் தொடரும்.

//முடியலங்க.. எப்படி இப்படி. எங்கயோ போயிட்டீங்கப்பா..ரொம்ப தேங்க்ஸ்..//

இன்னும் ஒருவர் வரேன்னு சொல்லிட்டு இன்னும் வரல இண்டர்வியூ பாக்கி இருக்கு வந்ததும் அதையும் போடறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela said...

அட அதுக்குள்ள கொசு பதிவா?

அதுக்கு பாட்டு வேறையா?

http://allinalljaleela.blogspot.com/2009/10/blog-post_18.htmlஇதையும் படிங்க,

ஜெய்லானி said...

@@@Jaleela--//அட அதுக்குள்ள கொசு பதிவா? அதுக்கு பாட்டு வேறையா?//

ஜலீலாக்கோவ் போட்டு மூனுநாளாச்சி இப்ப இன்னொருத்தர் வர இருக்கார் .அப்பாயின்மெண்ட் இன்னும் கிடைக்கல வந்ததும் பாருங்க , எப்படின்னு !!

//இதையும் படிங்க, http://allinalljaleela.blogspot.com/2009/10/blog-post_18.html //

கொல்ல ஐடியா !! நல்ல ஜோக்,. இது வளர்க்க ஜோக்.இது முற்றிலும் ஜெய்லானி டிவிக்கு சொந்தம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

அச்சசோ நாந்தான் கடசீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈயா.

கொசுவே கொசுவே உன்ன என்னாமா போட்டு பாடுபடுத்துராங்க இந்த டீவிகாரங்க. நீ சுப்பாவிட்டுடாதே துரத்தி துரத்தி விடாம கடி.
அப்பவாவது ஒன்னயப்பசி புரிசிங்கிடட்டும்.

இவாளுக்கெல்லாம் ஈ ரமே இருக்காது நெஞ்சில இல்லயின்னா இப்படி உன்ன பாட்டுபாடி கொல்லுவாளா..

ஆனாலும் பாட்டு நல்லாத்தேன் பாடுராக நம்ம அண்ணாச்சியில்ல கொசு. இத பாத்து அப்பால கொசுமிக்ஸ் பண்ணப்போராக அச்சோ அச்சோ..

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//அச்சசோ நாந்தான் கடசீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈயா.கொசுவே கொசுவே உன்ன என்னாமா போட்டு பாடுபடுத்துராங்க இந்த டீவிகாரங்க. நீ சுப்பாவிட்டுடாதே துரத்தி துரத்தி விடாம கடி.//

நாங்க அதுகளை நண்பனாக்கி கிட்டோம் . அதனால அது எங்களை ஒன்னும் செய்யாது.

//அப்பவாவது ஒன்னயப்பசி புரிசிங்கிடட்டும். இவாளுக்கெல்லாம் ஈரமே இருக்காது நெஞ்சில இல்லயின்னா இப்படி உன்ன பாட்டுபாடி கொல்லுவாளா..//

ஹா...ஹா...ஹா....

//ஆனாலும் பாட்டு நல்லாத்தேன் பாடுராக நம்ம அண்ணாச்சியில்ல கொசு. இத பாத்து அப்பால கொசுமிக்ஸ் பண்ணப்போராக அச்சோ அச்சோ..//

நல்ல ஐடியா குடுத்தீங்க . இன்னும் சுறுசுறுப்பா மொக்கையோட பிறகு வரோம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்னு said...

பாய்,

உங்க ப்ளாக் ஸ்டைல மாத்துங்க. முதல்ல போட்ட பதிவுகளை தேடி படிப்பது சிரமமா இருக்கு. பாருங்க, இந்த மாதிரி உலகத்துக்க்கு உதவற கருத்துக்களை தேடியில்ல படிக்க வேண்டியிருக்கு. அதெப்படிங் பாய் இப்படி போஸ்ட் எல்லாம் போடறதுக்கு மனசு வருது? பயங்கரமான தைரிய பார்ட்டிதான் போங்க. இனிமே வீட்ல எல்லாம் காட்டி அனுமதி வாங்கிட்டு பதிவு போடுங்க பாய். :)

ஜெய்லானி said...

@@@அன்னு--//பாய்,
உங்க ப்ளாக் ஸ்டைல மாத்துங்க. முதல்ல போட்ட பதிவுகளை தேடி படிப்பது சிரமமா இருக்கு. பாருங்க, இந்த மாதிரி உலகத்துக்க்கு உதவற கருத்துக்களை தேடியில்ல படிக்க வேண்டியிருக்கு. அதெப்படிங் பாய் இப்படி போஸ்ட் எல்லாம் போடறதுக்கு மனசு வருது? பயங்கரமான தைரிய பார்ட்டிதான் போங்க. இனிமே வீட்ல எல்லாம் காட்டி அனுமதி வாங்கிட்டு பதிவு போடுங்க பாய். :)//

பாய்ன்னா பையந்தானே!!அனா நா அனீஸ்ன்னுதான் கூப்பிடுவேன் . இது மாதிரி கைவசம் நிறைய இருக்கு . ஆனா பொது நலம் கருதி ( ?? ) கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன் அவ்வளவுதான். வீட்டில காட்டி அடிவாங்கவா..ஹி...ஹி..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்னு said...

ஏனுங் பாய், அப்ப உங்களுக்கு 'பாய்'ன்னா வேற அர்த்தமே தெரியாது? நம்பிட்டேன்!!

இன்னும் கைவசம் நிறைய வெச்சிருக்கீங்களா...தோமஸ்குட்டி விட்டோடா...

ஜெய்லானி said...

@@@அன்னு--//ஏனுங் பாய், அப்ப உங்களுக்கு 'பாய்'ன்னா வேற அர்த்தமே தெரியாது? நம்பிட்டேன்!!//

பேரு வச்சது கூப்பிடுவதுக்குதானே. கூப்பிடுவது சரி ச்சோட்டா BAAயா இல்ல BAடா BAAயா ? எனக்கு நாலஜ் கொஞ்சம் கம்மிங்க அனிஸ்பூ

//இன்னும் கைவசம் நிறைய வெச்சிருக்கீங்களா...தோமஸ்குட்டி விட்டோடா...//

அதுக்குள்ள எஸ்கேப்பாஆஆஆஆஆ!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))