Tuesday, May 25, 2010

வீட்டிலேயே பழரசம் செய்வது எப்படி !!


         ஜெய்லானி டீவியில் இன்று வீட்டிலேயே பழ ரசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம். நாம இந்த கோடை காலத்துல வெயிலால  ரொம்பவே எரிச்சல் படறோம். அதுக்கு அக்காமாலா , கப்ஸின்னு அதிகம் செலவு பண்ணி கடைகடையா ஏறி இறங்கி குடிச்சி உடம்பை கெடுத்துக்காம அருமையா வீட்டிலேயே எழுமிச்சை பழரசம் செய்வது எப்படின்னு இன்னைக்கி பாக்க போரோம்.

        இந்த பழரசத்தில இரண்டு வகை இருக்கு. ஒன்னு சாதாரன தண்ணிலயும் மற்றும் பச்சை தண்ணிலயும் ( ஐஸ் வாட்டருங்கோ ) செய்யறது .

முதல்ல உங்களுக்கு தேவையானது :

எழுமிச்சை அல்லது லெமன்     தேவையான அளவு
சர்க்கரை (எ) சீனி அல்லது சுகர்- தேவையான அளவு
உப்பு  அல்லது சால்ட்  - உங்க குடிக்கிற திறமைய பொருத்து
ஏலக்காய் விதைகள்--- 40 சரியா எண்ணிப் பாருங்க
பன்ணீர் (ரோஸ் வாட்டர் )--10 சொட்டுக்கள் எண்ணி ஊத்துங்க
முக்கியமா வெட்ட கத்தி வேணும்.
கண்டிப்பா கலக்க தண்ணி வேணும் மறந்துராதீங்க
பாதுகாப்புக்கு கையுரை -1 செட் ,
டிஞ்சர் அயோடின் சின்ன பாட்டில் போதும்
ரெடிமேட் பிளாஸ்திரி உங்க வெட்டும் திறமைய பொருத்து

செயல் முறை விளக்கம்:

       இதை செய்ய நீங்க கிச்சனுக்குள்ள போக அவசியமில்லை. ஆனா பாருங்க கத்தியோ இல்ல மத்த சாமானை எடுக்க கிச்சனுக்குள்ள போய்தான் தீரணும். அதனால உஷாரா எல்லாத்தையும்  முதல்ல ரெடியாக்கி வையுங்க .எழுமிச்சை பழத்த வெட்ட தனிதிறமை வேணும் . வழுக்காம அடுத்த வங்க மேல தெரிச்சு கண் கலங்காம வெட்டுறத்துக்கு

          கத்தி நல்ல கூர்மையா இருக்கனும் தேவைப்பட்டா இஷ்ட தெய்வத்தை வேண்டிகிட்டு நல்லா கூர்தீட்டிக்குங்க. அந்த கேப்புல அடுப்புல கொஞ்சம் சுடுதண்ணி  வையுங்க .அது வைக்க தெரியாதவங்க இங்கு பாருங்க புரியும். இப்ப அந்த சுடுதண்ணியில பழத்தை 2 நிமிஷம் போட்டு எடுத்தா பழம் அறுக்கும் போது அழாது , ஓடாது , வழுக்காது. பின்ன அதுல நிறைய சாறும் வரும் . பழத்தை இடது கை கட்டைவிரல் மற்றும் ஆள் காட்டி விரலால் மெதுவா பிடிச்சிகிட்டு இப்ப வலது கையில் கத்தியால் மெதுவா அறுக்கவும் வரும் சாறை மட்டும் பாத்திரத்தில் ஊத்துங்க ( மக்கள் கேட்டுக்கொண்டால் மீதி வரும் சக்கையில  எலுமிச்சை ஊருகாய் செய்வது எப்படின்னு அடுத்த பதிவில் போடப்படும் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொல்கிறோம் ) தேவைக்கு தகுந்தளவு தண்ணிய சேருங்க.( டாஸ்மாக் தண்ணியான்னு கேக்கப்பிடாது.)

        இதில குடிக்கப்போறவங்க வெளியிலிருந்து வெய்யிலால கஷ்டப்பட்டு வந்தா அவங்களுக்கு அதில உப்பை போட்டு சாதா தண்ணியில குடுங்க. நீங்க வீட்டுக்குள்ளவே இருந்தா அதில சீனிப்போட்டு ஜில்தண்ணியில குடிங்க. வாசனை தேவை படறவங்க . அதுல ஏலகாய் விதைய போட்டும் இல்லாட்டி பண்ணீர் ஊத்தியும் குடிக்கலாம்.

        இதில சைட் எஃபக்ட் எதுவும் இல்லை ஏன்னா நாம ஆயுர்வேதிக் முறையில இதை வெற்றிகரமா செஞ்சிருக்கோம் இல்லயா ?. இதை குடிச்சி பாத்துட்டு ஜெய்லானி டீவிக்கு எப்படின்னு தகவல் தரலாம். இதுவரை ஜெய்லானி டீவியுடன் இனைந்திருத்ததுக்கு மிகவும் நன்றி வணக்கம்.

டிஸ்கி : நமது கதை அரசி வாணி அவர்கள் என் வீரத்தை உசுப்பேத்தி விட்டதால் ( நமக்கு ஏதுங்க வீரம் ) வந்தது. இது ஒரு உடனடிப்பதிவு .நாம யாரு. அந்த நரிக்கே ஊளையிட கத்துக்குடுக்கிற ஆளாச்சே!!

112 என்ன சொல்றாங்ன்னா ...:

சௌந்தர் said...

நம்ம மக்கள் கடைல ஜூஸ் வாங்கி குடிபாங்க தவிர விட்டுலே போட மாட்டங்க

Unknown said...

ஏற்கனவே சுடு தண்ணி போட்டு ...
பொண்டாட்டிகிட்ட வாங்குன சூடு இன்னும் ஆரல..

அனேகமா இந்த தடவ பூரிக்கட்டை..

அப்புறம் பட்டபட்டி வீட்டுக்கு போனா அவர் லெமன் ஜூசுல உங்களுக்கு பேதி மாத்திரைதான் போட்டு தருவாரு ..

எல் கே said...

ஜெய் பச்சை தண்ணி எப்படி ரெடி பண்றது அத சொல்லல பாருங்க நீங்க

சௌந்தர் said...

இவரு சொலுரதை கேட்ட வீட்டுல உதை வாங்குவிங்க

சுசி said...

//
இதில குடிக்கப்போறவங்க வெளியிலிருந்து வெய்யிலால கஷ்டப்பட்டு வந்தா அவங்களுக்கு அதில உப்பை போட்டு சாதா தண்ணியில குடுங்க. நீங்க வீட்டுக்குள்ளவே இருந்தா அதில சீனிப்போட்டு ஜில்தண்ணியில குடிங்க.
//
யப்பா.. இப்டி டிப்ஸ்லாம் குடுப்பிங்கனா உங்க டிவிய தொடர்ந்து பார்ப்பேனே..

நாடோடி said...

ய‌ப்பா இப்ப‌வே க‌ண்ணா க‌ட்டுதே.... இதுல‌ சூசூசூசூசூசு வேற‌யா?..

ஸாதிகா said...

ஆஹா..உங்கள்குறிப்புப்படி பழரசம் செய்துபார்த்தேன்.அற்புதமான சுவை.வாழ்வில் இப்படி ஒரு அருமையான பழரசமே சாப்பிட்டது இல்லை.உங்களுக்கு பழரசத்திலகம் என்ற சிறப்பான பட்டத்தினை நமது தானைத்தலைவர் மங்குனி கையால் தரவிருக்கின்றார்.அனைத்து பிளாக் உலக ஸ்நேகிதங்களும் ஜெய்லானி டிவி வளாகத்திற்கு வந்து பழரசத்திலகத்தையும்,விழாவையும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Anonymous said...

வெயிலுக்கு ஏற்ற பழரசம்..
அருமை அருமை..

//தேவைக்கு தகுந்தளவு தண்ணிய சேருங்க.
(டாஸ்மாக் தண்ணியான்னு கேக்கப்பிடாது.)//


ஜெய்லானி இங்க தான் நிக்கிறீங்க..
(எங்க'னு கேக்க கூடாது..)

பருப்பு (a) Phantom Mohan said...

நல்லாத்தான் சொல்லிக் குடுக்குற, அப்டியே ஒரு எட்டு, எல்லா வீட்டுக்கும் போய் நீயே செஞ்சு குடுத்த்றேன்...

பருப்பு (a) Phantom Mohan said...

யுவர் ஹானர்! இப்போ தான் பதிவ நல்லாபடிச்சுப் பார்த்தேன்..

உங்கள் பதிவில் பிழை உள்ளது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஜூசுக்கு முக்க்கியமான லெமன் செய்வது எப்படி என்று சொல்ல வில்லை..

காஞ்சி முரளி said...

என்ன சார்... எல்லாத்தையும் சொன்னீங்க...

சூச... எப்படி குடிகறதுன்னு சொல்லவே இல்ல....

காஞ்சி முரளி

Riyas said...

நல்லயிருக்கு... பழரசமில்ல.. பதிவு..

GEETHA ACHAL said...

உங்களுடைய ஜுஸ் குறிப்பு நல்லா ஜில்லுனு இருக்கின்றது...சூப்பர்ப்..ஜுஸ் போட தெரியாதங்களும் ஜுஸ் போட்டுடுவாங்க....//எழுமிச்சை அல்லது லெமன் – தேவையான அளவு
சர்க்கரை (எ) சீனி அல்லது சுகர்- தேவையான அளவு
உப்பு அல்லது சால்ட் - உங்க குடிக்கிற திறமைய பொருத்து
ஏலக்காய் விதைகள்--- 40 சரியா எண்ணிப் பாருங்க
பன்ணீர் (ரோஸ் வாட்டர் )--10 செட்டுக்கள் எண்ணி ஊத்துங்க
//என்ன அழகாக சொல்லி இருக்கின்றிங்க...chanceillai...உண்மையில் ஏலகாய் போட்டு குடிப்பாங்களா..இல்லை சும்மாவா...எங்கள் வீட்டில் ஏலக்காய் எல்லாம் இந்த் ஜுஸில் சேர்த்து இல்லை...

dheva said...

சூப்பர் ஜூஸ்....இல்ல இல்ல சூப்பர் பதிவு....! ஆமா.. இங்கதான் சார்ஜால இருக்கீங்க... ஏன் தொடர்பு கொள்ள மாட்டேங்கிறீங்க.... உங்க ஜி மெயில் கூட ஆஃப் லைனா காமிக்குது!

SUFFIX said...

ஜில்லுன்னு ஒரு ஜூஸ் பதிவை போட்டு நல்லா கலக்கிட்டிங்கப்பு!

r.v.saravanan said...

கோடை காலத்திற்கு ஏற்ற பழரசம் தந்துள்ளீர்கள் ஜெய்லானி

பழரசம் சுவையை விட நீங்க சொன்ன செய்முறை விளக்கம் சுவையா இருந்துச்சி

மசக்கவுண்டன் said...

ஊறுகாய் போடறதப்பத்தி காத்திருக்கிறோம்.

Menaga Sathia said...

//எழுமிச்சை அல்லது லெமன் – தேவையான அளவு
சர்க்கரை (எ) சீனி அல்லது சுகர்- தேவையான அளவு
உப்பு அல்லது சால்ட் - உங்க குடிக்கிற திறமைய பொருத்து
ஏலக்காய் விதைகள்--- 40 சரியா எண்ணிப் பாருங்க // அடடா என்ன அழகா சொல்லிருக்கிங்க.எலுமிச்சை ஜூஸ்ல ஏலக்காய் சேர்த்து குடித்ததில்லை..புதுசா இருக்கு.ஊறுகாய் பதிவுக்கு வெயிட்டிங்...

ஜெய் said...

எலுமிச்சை ஊருகாய் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

MUTHU said...

எழுமிச்சை அல்லது லெமன் – தேவையான அளவு
சர்க்கரை (எ) சீனி அல்லது சுகர்- தேவையான அளவு////////


தேவையான அளவு தேவை இல்லாத அளவை எப்படி கண்டுபிடிக்கிறது சொல்லவேஇல்ல

Asiya Omar said...

இப்படியே போனால் நம்ம ப்ளாக்கை மூடனும் போல.வாழ்க ஜெ டிவி.

Prasanna said...

ஹா ஹா..

//முக்கியமா வெட்ட கத்தி வேனும்.
கண்டிப்பா கலக்க தண்ணி வேனும் மறந்துராதீங்க
பாதுகாப்புக்கு கையுரை -1 செட் ,
டிஞ்சர் அயோடின் – சின்ன பாட்டில் போதும்
ரெடிமேட் பிளாஸ்திரி//

ஆபரேஷன் பண்ற டாக்டர் கூட இவ்ளோ முன்னேற்பாடு செய்ய மாட்டார்.. பாவம் அந்த எலுமிச்சை :)

Chitra said...

ரெடிமேட் பிளாஸ்திரி – உங்க வெட்டும் திறமைய பொருத்து


...... அருவாளுக்கு வேலை இல்லாமல் பண்ணிட்டீங்களே.....
ஹா,ஹா,ஹா,ஹா,.... செம காமெடி ரெசிபி....

vanathy said...

ஹாஹா...நல்லா சிரிச்சேன். எங்கே என்னையும் வாரி விடுவீங்களோ என்று பார்த்தேன். கடைசியிலே சின்னதா இருக்கு. யார் கண்ணிலும் படலை போல இருக்கு.

சரி ஒரு சந்தேகம். டிஞ்சர் அயோடின் எப்ப சேர்க்கணும். நீங்கள் உங்கள் குறிப்பில் குறிப்பிட மறந்து விட்டீர்கள்.

Anisha Yunus said...

ஜெய்லானி பாய்,

Feed Problemஐ சரி பண்ணிட்டேன். பாருங்க. இல்லை இன்னும் அது போஸ்ட் எதுவும் காட்டலன்னா சொல்லுங்க, இன்ஷா அல்லாஹ் பாத்துடலாம். நான் அதுவரி இந்த ஜூஸ் செஞ்சு உங்களுக்கு கொண்டு வர்றேன். சரியாங் பாய்?

எம் அப்துல் காதர் said...

ஏங்க தண்ணிக்கி பதிலா பாலை சேர்க்கலாமா? சின்ன புள்ள தெரியாம தானே கேட்கிறேன்! அதுக்காக அடிக்க வராதீக...தமாசு. ரொம்ப நல்ல பதிவு ஜெய்லா.

ஜெய்லானி said...

@@@soundar--//நம்ம மக்கள் கடைல ஜூஸ் வாங்கி குடிபாங்க தவிர விட்டுலே போட மாட்டங்க//

வாங்க சவுந்தர்!! நா மொக்கை போட்டாலும் சீரியஸா பதில் போட்டீங்க ஆனா உண்மை நிலை அதுதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//ஏற்கனவே சுடு தண்ணி போட்டு ...பொண்டாட்டிகிட்ட வாங்குன சூடு இன்னும் ஆரல..//

ஏங்க செந்தில் சார். அதுல பாதுகாப்புல எதுவும் குளறு படியா !!
//அனேகமா இந்த தடவ பூரிக்கட்டை..அப்புறம் பட்டபட்டி வீட்டுக்கு போனா அவர் லெமன் ஜூசுல உங்களுக்கு பேதி மாத்திரைதான் போட்டு தருவாரு //

ஹி..ஹி.. அது ஏற்கனவே பேதி ஆகாதவங்களுக்குதான் பேதி ஆகும். நமக்கு அது பாராசிடமல் மாத்திரை மாதிரிதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//ஜெய் பச்சை தண்ணி எப்படி ரெடி பண்றது அத சொல்லல பாருங்க நீங்க//

அடடா கார்த்திக் நீங்க இந்த கேள்விய முன்னமே கேட்டீங்க நா மறந்துட்டேன். பரவாயில்லை அதுக்கு ஒரு தனி பதிவு போட்டுடுவோம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@soundar--//இவரு சொலுரதை கேட்ட வீட்டுல உதை வாங்குவிங்க //

தலைவா உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?!!!

ஜெய்லானி said...

@@@சுசி--//யப்பா.. இப்டி டிப்ஸ்லாம் குடுப்பிங்கனா உங்க டிவிய தொடர்ந்து பார்ப்பேனே.//

கைவசம் ஏகப்பட்ட டிப்ஸ் இருக்கே ..அடிக்கடி வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ய‌ப்பா இப்ப‌வே க‌ண்ணா க‌ட்டுதே.... இதுல‌ சூசூசூசூசூசு வேற‌யா?..//

அதுக்குதான் சூசு போட்டது. நம்ம வாணி அவங்க உசுப்பேத்தியதால ஜெனரேட்டர் வச்சு மீண்டும் டீவியை தெறந்திட்டமுல்ல .வ்உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஆஹா..உங்கள்குறிப்புப்படி பழரசம் செய்துபார்த்தேன்.அற்புதமான சுவை.வாழ்வில் இப்படி ஒரு அருமையான பழரசமே சாப்பிட்டது இல்லை.//

தங்கள் அன்புக்கு ஜெய்லானி டிவி சார்பில் நன்றி

//உங்களுக்கு பழரசத்திலகம் என்ற சிறப்பான பட்டத்தினை நமது தானைத்தலைவர் மங்குனி கையால் தரவிருக்கின்றார்.அனைத்து பிளாக் உலக ஸ்நேகிதங்களும் ஜெய்லானி டிவி வளாகத்திற்கு வந்து பழரசத்திலகத்தையும்,விழாவையும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.//

அய்யா வாங்க..அம்மா வாங்க..அண்ணே வாங்க..அக்கா வாங்க... என்னது காங்கிரஸ் கூட்டம் மாதிரி யாரையும் கானல..... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கிறுக்கல்கள்--//வெயிலுக்கு ஏற்ற பழரசம்..
அருமை அருமை..//

வீட்டில டிரை பண்ணியதுக்கு நன்றி
//தேவைக்கு தகுந்தளவு தண்ணிய சேருங்க.
(டாஸ்மாக் தண்ணியான்னு கேக்கப்பிடாது.)//
ஜெய்லானி இங்க தான் நிக்கிறீங்க..
(எங்க'னு கேக்க கூடாது..) //

ஹி..ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பருப்பு The Great--//நல்லாத்தான் சொல்லிக் குடுக்குற, அப்டியே ஒரு எட்டு, எல்லா வீட்டுக்கும் போய் நீயே செஞ்சு குடுத்த்றேன்...//

யோவ் கு#$%^$#பு கிட்ட கேக்க வேண்டியதை என்கிட்ட கேக்குற..இரு இரு.. உன் பிளாக்குக்கு வந்து கேக்குறேன்
//யுவர் ஹானர்! இப்போ தான் பதிவ நல்லாபடிச்சுப் பார்த்தேன்.உங்கள் பதிவில் பிழை உள்ளது!!!!
ஜூசுக்கு முக்க்கியமான லெமன் செய்வது எப்படி என்று சொல்ல வில்லை..//

அதானே பாத்தேன் !!பருப்பூஊஊ படத்தை பாருய்யா முதல் படம் எழுமிச்சை ரெண்டாவது லெமன் சந்தேகம் போதுமா? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//என்ன சார்... எல்லாத்தையும் சொன்னீங்க...சூச... எப்படி குடிகறதுன்னு சொல்லவே இல்ல....காஞ்சி முரளி //

குட் கொஸ்டின் அதாவது தட்டுல ஊத்தியும் குடிக்கலாம் இல்லாட்டி ஃபீடிங் பாட்டில்ல ஊத்தியும் குடிக்கலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

athira said...

ஆ... ஜெய்..லானி.... உடனடியா வெளியில வாங்கோ.... இன்னும் எவ்வளவு நேரம்தான் என்னால உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்க முடியுமோ தெரியேல்லையே...

ஜெய்..லானீஈஈஈஈஈ நீங்க சொன்னபடியேதான் ஒரு சொட்டுக் கூட, குறைவில்லாமல் செய்து குடித்தேன்.... ஆனால் வயிற்றுவலி தாங்க முடியலியே.. உடனடியா உங்கட ரீவியில் வயிற்றுவலியை நிறுத்துவதுக்கு நாட்டுமருந்து விளம்பரம் செய்யுங்கோ(பி.கு: எம்பியும் ஏதோ பிரட்டு எனக் கதைத்ததாக நினைவு, எல்லாத்துக்கும் நல்லதுதானே) கடவுளே... இதை எப்ப படிப்பீங்களோ தெரியவில்லையே.. அதுவரைக்கும் வயிற்றுவலி சொல்லுக்கேட்டுமோ?

ஸாதிகா அக்கா... நீங்கள் எப்படி இன்னும் உசாராக????யூஸ் குடித்துவிட்டு ரைப்பண்ணிக்கொண்டிருக்கிறீங்க????

எல்லாம் எங்கட கால் வச்ச வனியால வந்த வினை... சும்மா இருந்த ஜெய்..லானியை ஊதிக் கெடுத்ததால.... அதிராவுக்குத்தான் பிரச்சனையாப்போச்சு....

இப்படிக்கு: ஜெய்..லானியை நம்பி, யூஸ் குடித்து வ.வலியால் துடிக்கும் அதிரா.

athira said...

அய்யா வாங்க..அம்மா வாங்க..அண்ணே வாங்க..அக்கா வாங்க//// வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஆமா.. எதுக்கு கூப்பிட்டீங்க? ஏதாவது இலவசமாக தரப்போறீங்களோ? தருவதென்றால் கெதியத் தாங்கோ, நான் போகோணும் நிறைய வேலை இருக்கு:).

ஹேமா said...

பதிவு படிச்சிட்டேன் ஜெய்.
செய்து பாத்திட்டுத்தான் சொல்லவேணும்.
அதிரா வேற பயமுறுத்தியிருக்கிறாங்க !

ஜெய்லானி said...

@@@Riyas--// நல்லயிருக்கு... பழரசமில்ல.. பதிவு..//
வாங்க ரியாஸ் வெய்யிலுக்கு நல்லது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//உங்களுடைய ஜுஸ் குறிப்பு நல்லா ஜில்லுனு இருக்கின்றது...சூப்பர்ப்..ஜுஸ் போட தெரியாதங்களும் ஜுஸ் போட்டுடுவாங்க.... என்ன அழகாக சொல்லி இருக்கின்றிங்க... chanceillai...உண்மையில் ஏலகாய் போட்டு குடிப்பாங்களா..இல்லை சும்மாவா...எங்கள் வீட்டில் ஏலக்காய் எல்லாம் இந்த் ஜுஸில் சேர்த்து இல்லை...//

சும்மா குடிக்கிறதுக்கு பதில் இப்படி குடிச்சா உடம்புக்கும் நல்லது . உண்மைதான் குடிச்சுப்பாருங்க.( உப்பு போட்டா ஏலக்காய் வேனாம் ).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@dheva--//சூப்பர் ஜூஸ்....இல்ல இல்ல சூப்பர் பதிவு....! ஆமா.. இங்கதான் சார்ஜால இருக்கீங்க... ஏன் தொடர்பு கொள்ள மாட்டேங்கிறீங்க.... உங்க ஜி மெயில் கூட ஆஃப் லைனா காமிக்குது!//

விரைவில் சந்திப்போம்....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@SUFFIX--//ஜில்லுன்னு ஒரு ஜூஸ் பதிவை போட்டு நல்லா கலக்கிட்டிங்கப்பு!//

என்னையும் வச்சு ஒருத்தரு காமெடி பண்ணிட்டாங்க அதனால கொஞ்சம் வித்தியாசமா கொஞ்சம் மொக்கையோட . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//கோடை காலத்திற்கு ஏற்ற பழரசம் தந்துள்ளீர்கள் ஜெய்லானி பழரசம் சுவையை விட நீங்க சொன்ன செய்முறை விளக்கம் சுவையா இருந்துச்சி //

ஹா...ஹா....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//ஊறுகாய் போடறதப்பத்தி காத்திருக்கிறோம்.//

வாணியக்காவ் கேட்டீங்களா!! காதுல விழுதா ??. தாத்தா அதையும் டீ வியில ரிலீஸ் பண்ணிடலாம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia // அடடா என்ன அழகா சொல்லிருக்கிங்க.எலுமிச்சை ஜூஸ்ல ஏலக்காய் சேர்த்து குடித்ததில்லை..புதுசா இருக்கு.ஊறுகாய் பதிவுக்கு வெயிட்டிங்...//

குடிச்சுப்பாருங்க வித்தியாசமா இருக்கும் . சமையல்ல தினமும் கலக்குற நீங்க ஊறுக்காவுக்கு என்னை கேக்குறது என்னை வச்சு காமெடி பண்ணலியே!!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெய்--//எலுமிச்சை ஊருகாய் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..//

ஜெய் நீங்களுமா ??? .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Priya said...

ஜில்லுன்னு ஒரு ஜூஸ்... நைஸ்!

ஜெய்லானி said...

@@@MUTHU--//தேவையான அளவு தேவை இல்லாத அளவை எப்படி கண்டுபிடிக்கிறது சொல்லவே இல்ல //

ஹி..ஹி..கேள்விய பாத்தா கல்யாணம் ஆகாத ஆளா தெரியுது. ஒரு தடவை பூரிக்கட்டை அடி வாங்குனா இந்த நொன்ன கேள்வியே வராது மாப்பு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar--//இப்படியே போனால் நம்ம ப்ளாக்கை மூடனும் போல.வாழ்க ஜெ டிவி.//

ச்சே..ச்சே.. எப்பவும் யானைக்கு எலி போட்டியா இருக்க முடியாது . எலின்னு சொன்னது என்னை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--//ஹா ஹா..ஆபரேஷன் பண்ற டாக்டர் கூட இவ்ளோ முன்னேற்பாடு செய்ய மாட்டார்.. பாவம் அந்த எலுமிச்சை :)//

பின்ன , பாதுகாப்பு முக்கியமில்லயா!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--//ரெடிமேட் பிளாஸ்திரி – உங்க வெட்டும் திறமைய பொருத்து
...... அருவாளுக்கு வேலை இல்லாமல் பண்ணிட்டீங்களே.....
ஹா,ஹா,ஹா,ஹா,.... செம காமெடி ரெசிபி....//

அருவாளு எல்லாம் கொஞ்சம் காஸ்லி ஹை டெக் . அதனால விட்டுட்டேன் டீச்சர் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஹாஹா...நல்லா சிரிச்சேன். எங்கே என்னையும் வாரி விடுவீங்களோ என்று பார்த்தேன். கடைசியிலே சின்னதா இருக்கு. யார் கண்ணிலும் படலை போல இருக்கு.//

ஏற்கனவே போட்ட மொக்கையில யாரும் சரியா கவணிக்கல தப்பிச்சீங்க..

//சரி ஒரு சந்தேகம். டிஞ்சர் அயோடின் எப்ப சேர்க்கணும். நீங்கள் உங்கள் குறிப்பில் குறிப்பிட மறந்து விட்டீர்கள்.//

பாத்தீங்காளா யானைக்கும் அடிசருக்கும்ங்கிறது இதுதான் . அது பாதுகாப்புக்கு , அடிப்பட்டா போட
உதவும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்னு--//ஜெய்லானி பாய்,
Feed Problemஐ சரி பண்ணிட்டேன். பாருங்க. இல்லை இன்னும் அது போஸ்ட் எதுவும் காட்டலன்னா சொல்லுங்க, இன்ஷா அல்லாஹ் பாத்துடலாம். நான் அதுவரி இந்த ஜூஸ் செஞ்சு உங்களுக்கு கொண்டு வர்றேன். சரியாங் பாய்? //

அனீஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு . எந்த முன்னேற்றமும் இல்ல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//ஏங்க தண்ணிக்கி பதிலா பாலை சேர்க்கலாமா? சின்ன புள்ள தெரியாம தானே கேட்கிறேன்! அதுக்காக அடிக்க வராதீக...தமாசு. ரொம்ப நல்ல பதிவு ஜெய்லா//

சேக்கலாம் அப்துல் , தயிராவும் குடிக்கலாம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

athira said...

என்னாது?? ஊறுகாயோ? எத்தனைபேர் துடியாத் துடிக்கினம் எப்போ ரீவியில போடப்போறீங்க என? வாணாம் விட்டுடுங்கோ ஜெய்..லானி... அது அதிராவுக்குச் சொந்தமான பெயராக்கும்...

ஜெய்லானி said...

@@@athira--//ஆ... ஜெய்..லானி.... உடனடியா வெளியில வாங்கோ.... இன்னும் எவ்வளவு நேரம்தான் என்னால உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்க முடியுமோ தெரியேல்லையே...//

வாசல்ல போய் எட்டி பாத்தா யாரும் இல்லையே எங்கே இருக்கீங்க!!!

//ஜெய்..லானீஈஈஈஈஈ நீங்க சொன்னபடியேதான் ஒரு சொட்டுக் கூட, குறைவில்லாமல் செய்து குடித்தேன்.... ஆனால் வயிற்றுவலி தாங்க முடியலியே.. உடனடியா உங்கட ரீவியில் வயிற்றுவலியை நிறுத்துவதுக்கு நாட்டுமருந்து விளம்பரம் செய்யுங்கோ(பி.கு: எம்பியும் ஏதோ பிரட்டு எனக் கதைத்ததாக நினைவு, எல்லாத்துக்கும் நல்லதுதானே) கடவுளே... இதை எப்ப படிப்பீங்களோ தெரியவில்லையே.. அதுவரைக்கும் வயிற்றுவலி சொல்லுக்கேட்டுமோ? //

உங்க வயித்து வலிக்கு தனி பதிவே போடுறேன் !! அப்புறம் படிச்சா உண்மையாவே வலி வந்துடும்

// ஸாதிகா அக்கா... நீங்கள் எப்படி இன்னும் உசாராக????யூஸ் குடித்துவிட்டு ரைப்பண்ணிக்கொண்டிருக்கிறீங்க????//

அவங்க இரும்பு மனுசி , எதையும் தாங்கும் இதயம்

//எல்லாம் எங்கட கால் வச்ச வனியால வந்த வினை... சும்மா இருந்த ஜெய்..லானியை ஊதிக் கெடுத்ததால.... அதிராவுக்குத்தான் பிரச்சனையாப் போச்சு....இப்படிக்கு:ஜெய்..லானியை நம்பி, யூஸ் குடித்து வ.வலியால் துடிக்கும் அதிரா.//

அவசரத்துக்கு ரெண்டு ஆமை முட்டை ,ரெண்டு பல்லி தலை , நாலு சிலந்திப்பூச்சி பச்சையா நல்லா மென்னு தின்னு ஒரு இளநீர் குடிச்சா உடனே வலி குறையும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//அய்யா வாங்க..அம்மா வாங்க..அண்ணே வாங்க..அக்கா வாங்க//// வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஆமா.. எதுக்கு கூப்பிட்டீங்க? ஏதாவது இலவசமாக தரப்போறீங்களோ? தருவதென்றால் கெதியத் தாங்கோ, நான் போகோணும் நிறைய வேலை இருக்கு:).//

ஸாதிக்காக்கா கிட்டே கேட்டா உடனே பதில் வருமே!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//பதிவு படிச்சிட்டேன் ஜெய். செய்து பாத்திட்டுத்தான் சொல்லவேணும்.அதிரா வேற பயமுறுத்தியிருக்கிறாங்க !//

பத்திரமா , பொருமையா செய்யுங்க!!! அவங்க சீனிக்கு பதில் வாஷிங் பவுடரை கலந்துட்டாங்க , இப்ப அவங்க வயிறு சுத்தமாகுது நீங்க பயப்படாதீங்க குழந்தை நிலா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Priya--//ஜில்லுன்னு ஒரு ஜூஸ்... நைஸ்!//

வாங்க ,நீங்களாவது குடிச்சு பாத்தீங்களா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//என்னாது?? ஊறுகாயோ? எத்தனைபேர் துடியாத் துடிக்கினம் எப்போ ரீவியில போடப்போறீங்க என? வாணாம் விட்டுடுங்கோ ஜெய்..லானி... அது அதிராவுக்குச் சொந்தமான பெயராக்கும்.//

பாத்தீங்களா வாணிகிட்ட சொல்லி வையுங்க .அந்த பயம் இருக்கட்டும் .ஹி..ஹி...அதுசரி ஊருகாய் உங்க பேரா !!! இது புது தகவல் எனக்கு. அப்ப போட வேனாங்கிறீங்களா!!!

CINEMA GALLARY said...

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html

வேலன். said...

வெட்ட கத்தி வேனும்
தண்ணி வேனும்
தனிதிறமை வேனும்
வேனும் என வருவதை - வேணும் என - கண்டிப்பாக மாற்றியாக வேணும். அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!
அருமையான பதிவு வாழ்க வளமுடன்,வேலன்.

mohamed khaiyum said...

எலுமிச்ச ஜூஸ் எப்படி செய்வது முன்னால் எலுமிச்சம் பழம் எப்படி தலையில் தேய்ப்பது என்று சொல்லுவது போல் சரியான ஜவ்வு

ஜெய்லானி said...

@@@CINEMA GALLARY--//தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? //

புதுசா ஆரம்பிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@வேலன்--//வெட்ட கத்தி வேனும் தண்ணி வேனும் தனிதிறமை வேனும் வேனும் என வருவதை - வேணும் என - கண்டிப்பாக மாற்றியாக வேணும். அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!! அருமையான பதிவு வாழ்க வளமுடன்,வேலன்.//

வாத்யாரே!! இதுக்குதான் நீங்க வேணுங்கிறது.. அவசரத்தில போட்டது இது.இப்ப மாத்திட்டேன் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@mohamed khaiyum--//எலுமிச்ச ஜூஸ் எப்படி செய்வது முன்னால் எலுமிச்சம் பழம் எப்படி தலையில் தேய்ப்பது என்று சொல்லுவது போல் சரியான ஜவ்வு//
வாங்க முஹம்மது கய்யூம் !! நம்ம ஏரியாவுக்கு புதுசுதானே அதான். இருந்தாலும் மனம் திறந்த மற்றும்
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெயந்தி said...

வாசகர் கடிதம்: உங்கள் டிவியில் லெமன் ஜுஸ் போடும் முறை பற்றி தெரிந்துகொண்டேன். எங்கள் வீட்டில் ஜுஸ் போட்டேன். அனைவரும் என்னை பாராட்டினர். நன்றி ஜெய்லானி டிவி. விரைவில் ஊறுகாய் செய்யும் முறை பற்றியும் அறிய ஆவல்.

சிநேகிதன் அக்பர் said...

//எலுமிச்சை ஊருகாய் செய்வது எப்படின்னு அடுத்த பதிவில் போடப்படும் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொல்கிறோம் ) //

ஜூஸை குடிச்சி முடிக்கல அதுக்குள்ள ஊறுகாயா.

இந்த மாதிரி கொலைவெறியோட அப்பப்ப பதிவு போடுங்க பாஸ்.

Unknown said...

அப்படியே கடல் ஓரமா வந்துட்டு போங்க ,நாங்களும் நன்னாரி போட்ட தண்ணி தருவோம்.
http://ilamthooyavan.blogspot.com

Jaleela Kamal said...

அப்பா வெயிலுக்கு தினம் ஒரு ஜூஸ், வாழைபழம் , அடுத்து கிரினி, அடுத்து முக்கனி ஜுஸ், இன்று தர்பூஸ், நாளை என்ன செய்யலாமுன்னு யோசித்தேன், ஜெய்லானி டீவியில புது விதமா ஒரு ஜூஸ் சொல்லி கொடுத்து இருக்காங்க, நாளை செய்துட வேண்டியது தான். இத குடிச்சா எதுவும் சைட் எபக்ட் வருமா?

கீழே என்ன் அந்த ஈகுல் உங்கள் பேருக்கு விசிறி விடுது.

athira said...

அவசரத்துக்கு ரெண்டு ஆமை முட்டை ,ரெண்டு பல்லி தலை , நாலு சிலந்திப்பூச்சி பச்சையா நல்லா மென்னு தின்னு ஒரு இளநீர் குடிச்சா உடனே வலி குறையும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி./// அப்பாடா குடிச்சதும் வயிற்றுவலி போயேபோச்சு, ஆனால் ஜெய்..லானி யாரென நினைவு வரமாட்டேனென்கிறதே இதுக்கு என்ன செய்யலாம்?????

///இத குடிச்சா எதுவும் சைட் எபக்ட் வருமா/// ஜலீலாக்கா.... சைட் எபெக்ட்டோ? என்னைப்பாருங்கோ... நான் ஆளே எபெக்ட் ஆகி நிற்கிறேன், நீங்க வேற சைட் எபெக்ட் பற்றிக் கவலைப்படுறீங்களே....

கடவுளே... வெக்கையில கருகினாலும் பறவாயில்லை எனக்கு யூசே வேண்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅம் மீஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

ஜெய்லானி said...

@@@அக்பர்--//ஜூஸை குடிச்சி முடிக்கல அதுக்குள்ள ஊறுகாயா.
இந்த மாதிரி கொலைவெறியோட அப்பப்ப பதிவு போடுங்க பாஸ்.//

தலைவா சும்மா தூங்கிய ஆளை ஒருத்தர் உசுப்பேத்தியதை டிஸ்கியில கிளிக் பண்ணி பாருங்க . அதனால போட்டதுதான் இது . ஹி..ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//வாசகர் கடிதம்: உங்கள் டிவியில் லெமன் ஜுஸ் போடும் முறை பற்றி தெரிந்துகொண்டேன். எங்கள் வீட்டில் ஜுஸ் போட்டேன். அனைவரும் என்னை பாராட்டினர். நன்றி ஜெய்லானி டிவி. விரைவில் ஊறுகாய் செய்யும் முறை பற்றியும் அறிய ஆவல்.//

கடிதம் அதிஸுக்கு ஃபார்வேட் செய்யப்பட்டுள்ளது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//அப்படியே கடல் ஓரமா வந்துட்டு போங்க ,நாங்களும் நன்னாரி போட்ட தண்ணி தருவோம்.. http://ilamthooyavan.blogspot.com //

நாகூர் தர்காவில நாங்களும் குடிச்சிருக்கோம் பாஸ் .வரேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela--//அப்பா வெயிலுக்கு தினம் ஒரு ஜூஸ், வாழைபழம் , அடுத்து கிரினி, அடுத்து முக்கனி ஜுஸ், இன்று தர்பூஸ், நாளை என்ன செய்யலாமுன்னு யோசித்தேன், ஜெய்லானி டீவியில புது விதமா ஒரு ஜூஸ் சொல்லி கொடுத்து இருக்காங்க, நாளை செய்துட வேண்டியது தான். இத குடிச்சா எதுவும் சைட் எபக்ட் வருமா?//

ஏங்க இது ஆயுர்வேதிக் முறை சரியா படிக்கலையா !!

//கீழே என்ன் அந்த ஈகுல் உங்கள் பேருக்கு விசிறி விடுது.//
ஹி..ஹி.. பொருத்தமா இருக்கா ? சூடு கொஞ்சம் ஓவர் அதேங் !!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//அப்பாடா குடிச்சதும் வயிற்றுவலி போயேபோச்சு, ஆனால் ஜெய்..லானி யாரென நினைவு வரமாட்டேனென்கிறதே இதுக்கு என்ன செய்யலாம்?????//

என்னிடம் ஆயிரம் பவுண்ட் கடன் வாங்கினிங்களே நினைவு இருக்கா ? . போகும் போது ஒரு நெக்ல்ஸ் கடன் வாங்கி போனிங்களே அதாவது நினைவு வருதா ?

///இத குடிச்சா எதுவும் சைட் எபக்ட் வருமா/// ஜலீலாக்கா.... சைட் எபெக்ட்டோ? என்னைப்பாருங்கோ... நான் ஆளே எபெக்ட் ஆகி நிற்கிறேன், நீங்க வேற சைட் எபெக்ட் பற்றிக் கவலைப்படுறீங்களே....//

ஹை..யா.. ஒரு சோதனை எலி கிடைச்சுட்டுது..ஓக்கே அடுத்து வேற டெஸ்டிங்.....

//கடவுளே... வெக்கையில கருகினாலும் பறவாயில்லை எனக்கு யூசே வேண்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅம் மீஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..//

யக்கோவ்!!! அப்ப ஊருகா வேனாமாஆஆஆஆஆ!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

என்னங்க இது.. இப்படி ஒரு ஜூஸ் ஆ?? சூப்பர்....
என்ன ஒரு விளக்கம், என்ன ஒரு விளக்கம்..
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம். யாரும் இவ்ளோ தெளிவா தண்ணிய பத்தி சொல்லிருக்க மாட்டாங்க..
அதாங்க ஜூஸ் ல சேர்க்கிற தண்ணிய தான் சொன்னேன்.. :D :D கலக்கல்.. :)

ஜெய்லானி said...

@@@Ananthi--//என்னங்க இது.. இப்படி ஒரு ஜூஸ் ஆ?? சூப்பர்....என்ன ஒரு விளக்கம், என்ன ஒரு விளக்கம்..ஹ்ம்ம் ஹ்ம்ம்ம். யாரும் இவ்ளோ தெளிவா தண்ணிய பத்தி சொல்லிருக்க மாட்டாங்க..
அதாங்க ஜூஸ் ல சேர்க்கிற தண்ணிய தான் சொன்னேன்.. :D :D கலக்கல்.. :)//

என்னைய வச்சே கதை எழுதிட்டாங்க , அதனால உச்சி குளிர இப்படி ஜூஸ் பதிவு . யாரு எனக்குதான்
இப்ப உங்க லேப்டாப் சரியா வேலை செய்யுதா அதுக்கும் ஒரு பதிவு போட்டுடலாமா ? !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Geetha6 said...

அருமையாக செயல் முறை விளக்கம்
தந்து இருகிறீர்கள்.படங்களை பார்த்தவுடன் ஜூஸ் குடித்த திருப்தி ..
நான், லெமன் ஜூஸ் போடுறது எபடின்னு சொல்லலியே கேட்டுட்டு ..இப்படி அசத்திடீங்கலே? சபாஷ் !!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஜெய்லானி!
எலுமிச்சம்'பழத்'திலிருந்து செய்வதால்,
ஊறு'காய்' வேண்டாம்;
ஊறு'பழம்' செய்முறை
சொல்லிக்கொடுங்கள்.

இமா க்றிஸ் said...

;)

goma said...

எனக்கு ,
ஞானப்பழரசம் எப்படி செய்றதுன்னு விளக்குங்களேன்

சுந்தரா said...

இனிமே லெமன் ஜூஸ் குடிக்கணும்னாக்கூட யோசிச்சுத்தான் குடிக்கணுமோ???

இதப்பாத்து எத்தனைபேர் கத்துக்கிட்டாங்களோ தெரியலியே... :)

Ahamed irshad said...

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

MUTHU said...

டிவியில் சேன்னல் மாத்து போர் அடிக்குது
ஒரே சேன்னல் எவ்வளவு நேரம் பார்க்கிறது

அன்புடன் மலிக்கா said...

சூப்பர்ப்..ஜுஸ் போட தெரியாதங்களும் ஜுஸ் போட்டுடுவாங்க....//எழுமிச்சை அல்லது லெமன் – தேவையான அளவு
சர்க்கரை (எ) சீனி அல்லது சுகர்- தேவையான அளவு
உப்பு அல்லது சால்ட் - உங்க குடிக்கிற திறமைய பொருத்து
ஏலக்காய் விதைகள்--- 40 சரியா எண்ணிப் பாருங்க
பன்ணீர் (ரோஸ் வாட்டர் )--10 செட்டுக்கள் எண்ணி ஊத்துங்க.//

ஆகா ஆகா என்னா ஒரு அருமையான சூச் ச்சே ஜூஸ் செய்முறை. பின்னிட்டீங்க.

இத யாரேனும் செய்து குடித்துவிட்டு குடல் கெட்டுப்போச்சி குடிமுழிக்கிப்போச்சின்னெல்லாம் வந்தீங்கன்னா. ஜெய்லானி ஹாஸ்பிட்டலில் அறுவை சிகிச்சை பகுதியில் இலவசமாக அனுமதிக்கப்படும்..

பொன் மாலை பொழுது said...

மிக அருமையான பதிவு!! இதுவரை யாரும் இப்படி மிக அழகாக எளிமையாக ஜூஸ் போட சொல்லிதரவில்லை. ரொம்ப நன்றி !!!!!
சுண்டைக்காய் குழம்பு வைக்கும் முறையை சொல்லிக்கொடுபீர்களா ஜெய்லா ?!
முட்டையை எப்படி உடைப்பது மற்றும் வெந்நீர் எப்படி வைப்பது போன்ற வைகளை விரைவில் எதிபார்க்கிறேன். எப்படி வசதி?!

அது சரி, ஒரு மொக்கை பதிவுக்கு 87 பின்னூட்டங்களா சாமீ?
என் வயிறு காந்துகிறது. :)

சௌந்தர் said...

இன்னும் என்ன பதிவு வரவில்லை

ஜெய்லானி said...

@@@Geetha6--//அருமையாக செயல் முறை விளக்கம்
தந்து இருகிறீர்கள்.படங்களை பார்த்தவுடன் ஜூஸ் குடித்த திருப்தி ..நான், லெமன் ஜூஸ் போடுறது எபடின்னு சொல்லலியே கேட்டுட்டு ..இப்படி அசத்திடீங்கலே? சபாஷ் !!//

ஹி..ஹி...பின்ன டிவி தொறந்ததே இப்படி நல்ல விசயமா ? போடத்தானே !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//ஜெய்லானி!எலுமிச்சம்'பழத்'திலிருந்து செய்வதால், ஊறு'காய்' வேண்டாம்;ஊறு'பழம்' செய்முறை சொல்லிக்கொடுங்கள்.//

ஆஹா..நல்ல ஐடியா குடுத்தீங்க ..உங்களுக்கு சீக்கிரம் ஜெய்லானி டிவியில ஒரு வேலை போட்டு குடுத்திடலாம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//

;) //

ஆமா இந்த ஸ்மைலிய கண்டுபிடிச்சது யாரு ?ஹி.ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@goma--//எனக்கு , ஞானப்பழரசம் எப்படி செய்றதுன்னு விளக்குங்களேன் //

கோமாக்கா , முருகன் வரேன்னு சொல்லியிருக்கார் , வந்ததும் அவர்கிட்ட முதல்ல பழம் வாங்கிட்டு அப்புறம் ரெஸிபி போட்டுடரேன் .என்னா வில்லத்தனம் ,ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுந்தரா--//இனிமே லெமன் ஜூஸ் குடிக்கணும்னாக்கூட யோசிச்சுத்தான் குடிக்கணுமோ???//

வாங்க புது வரவு !!ஆமாங்க நம்ம உடல் ஆரோக்கியம் தாங்க முக்கியம்

//இதப்பாத்து எத்தனைபேர் கத்துக்கிட்டாங்களோ தெரியலியே... :) //

இத்தனை பிண்ணூட்டம் பாத்துமா சந்தேகம் உங்களுக்கு பாவங்க நீங்க அப்பாவி ஹி..ஹி..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத்--//உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html //

வந்துகிட்டே இருக்கேன் .இர்ஷாத்

ஜெய்லானி said...

@@@MUTHU--// டிவியில் சேன்னல் மாத்து போர் அடிக்குது ஒரே சேன்னல் எவ்வளவு நேரம் பார்க்கிறது //

நேயர் விருப்பம் உடனே நிவர்த்தி செய்யப்படுகிரது. எங்கய்யா ஆளா கானேம்.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//சூப்பர்ப்..ஜுஸ் போட தெரியாதங்களும் ஜுஸ் போட்டுடுவாங்க....//

பின்னே ஜெய்லானி டிவின்னா சும்மவா

//ஆகா ஆகா என்னா ஒரு அருமையான சூச் ச்சே ஜூஸ் செய்முறை. பின்னிட்டீங்க.//

உச்சி குளிந்துப்போச்சி ஹி..ஹி..

//இத யாரேனும் செய்து குடித்துவிட்டு குடல் கெட்டுப்போச்சி குடிமுழிக்கிப்போச்சின்னெல்லாம் வந்தீங்கன்னா. ஜெய்லானி ஹாஸ்பிட்டலில் அறுவை சிகிச்சை பகுதியில் இலவசமாக அனுமதிக்கப்படும்..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//மிக அருமையான பதிவு!! இதுவரை யாரும் இப்படி மிக அழகாக எளிமையாக ஜூஸ் போட சொல்லிதரவில்லை. ரொம்ப நன்றி !!!!!//

உங்களுக்கும் நன்றி தல
//சுண்டைக்காய் குழம்பு வைக்கும் முறையை சொல்லிக் கொடுபீர்களா ஜெய்லா ?!
முட்டையை எப்படி உடைப்பது மற்றும் வெந்நீர் எப்படி வைப்பது போன்ற வைகளை விரைவில் எதிபார்க்கிறேன். எப்படி வசதி?!//

சுடுதண்ணி லிங்க் இருக்கே பாக்கலியா ஹய்யோ..ஹய்யோ..பாவம் தப்பிச்சீங்க நீங்க ,

//அது சரி, ஒரு மொக்கை பதிவுக்கு 87 பின்னூட்டங்களா சாமீ?
என் வயிறு காந்துகிறது. :)//

சார் கண்ணு பட்டுடாதீங்க அப்புறம் என் வயறு வலிக்கும் :-))))..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@soundar--//இன்னும் என்ன பதிவு வரவில்லை //

கொஞ்சம் ஆனி அதிகமா போச்சி தல அதான் இப்ப போட்டாச்சு..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Mahi said...

இப்படி ஒரு ஜூஸ் நானும் இதுவரை போட்டதே இல்லைங்ணா! ஜெ. டிவில அடுத்த சமையல் ஒளிபரப்பிற்காக காத்திருக்கிறோம்! :) :) :)

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!///////// இது வேறயா?? இப்படியெல்லாம் பயமுறுத்தறீங்களே ,நியாயமா?கர்ர்ர்..ர்ர்!

Harini Nagarajan said...

உங்க பதிவ விட வந்து இருக்கற பின்னூட்டங்கள படிக்கறதுக்கு ஒரு லிட்டர் லெமன் ஜூஸ் தேவ படும் போல! (அதாவது நீங்க சொன்ன லெமன் ஜூஸ் இல்ல இது வேற :P )

ஜெய்லானி said...

@@@மகி--//இப்படி ஒரு ஜூஸ் நானும் இதுவரை போட்டதே இல்லைங்ணா! ஜெ. டிவில அடுத்த சமையல் ஒளிபரப்பிற்காக காத்திருக்கிறோம்! :) :) :) //

நான் உலகம் பூரா லெமன் ஜூஸ் தரேன் ,ஆனா நீங்க எனக்கே குடுத்திட்டீங்களே !!,டி வியில கொஞ்சம் கேப் விட்டு மொக்கை போடலாம் . இல்லாட்டி தாங்காது ஹி..ஹி..

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!///////// இது வேறயா?? இப்படியெல்லாம் பயமுறுத்தறீங்களே ,நியாயமா?கர்ர்ர்..ர்ர்! //

பாருங்க ,கமெண்ட் வாங்க என்னல்லாம் சொஅல்ல வேண்டி வருதுன்னு.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Harini Sree--//உங்க பதிவ விட வந்து இருக்கற பின்னூட்டங்கள படிக்கறதுக்கு ஒரு லிட்டர் லெமன் ஜூஸ் தேவ படும் போல! (அதாவது நீங்க சொன்ன லெமன் ஜூஸ் இல்ல இது வேற :P ) //

அதானே பாத்தேன் நிங்க வெற எதோ புகழ்ற மாதிரி தெரிஞ்சிதேன்னு பாத்தேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பருங்கோ.... ஒரு சின்ன சந்தேகம் கேக்கலாமா? இந்த பச்சை தண்ணின்னு சொன்னீங்களே... அதை நான் எல்லா கடைலயும் கேட்டு பாத்தனுங்க... யாருமே இல்லைன்னு சொல்லிடாங்க... எல்லா கடைலயும் வெள்ளை தண்ணி தான் இருக்காம்...என்னங்க செய்யறது (நாங்க யாரு காக்காவுக்கே வடை திருட சொல்லி குடுத்தவங்க ஆச்சே...ஹி ஹி ஹி)

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி--//சூப்பருங்கோ.... ஒரு சின்ன சந்தேகம் கேக்கலாமா? இந்த பச்சை தண்ணின்னு சொன்னீங்களே... அதை நான் எல்லா கடைலயும் கேட்டு பாத்தனுங்க... யாருமே இல்லைன்னு சொல்லிடாங்க... எல்லா கடைலயும் வெள்ளை தண்ணி தான் இருக்காம்...என்னங்க செய்யறது (நாங்க யாரு காக்காவுக்கே வடை திருட சொல்லி குடுத்தவங்க ஆச்சே...ஹி ஹி ஹி)//

பின்னால ஐஸ் வாட்டன்னு போட்டதை கவனிக்கலையா அச்சொ.... நீங்க உண்மையிலேயே அப்பாவிதாங்க நா நம்பிட்டேன். ( அன்னுவோட கதையை படிச்சிட்டீங்களா..ஹி..ஹி.. ) உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்பின் தொடர்வதுக்கும் நன்றி

cheena (சீனா) said...

தூக்கத்தில கண்ணு தெரியணும்கற ஒரே காரணத்தினால இங்கே ஒண்ணு சொல்றேன் - சரியா

சூப்ப்ரா இருக்கு ஜூஸ் - ஆனா இதுக்கு நூத்துக்கு மேலெ மறுமொழி - எல்லாரும் க்ண்ணு தெரியாமப் போயிடுமோன்னு பயத்துல கிறுக்கறாங்க . ம்ம்ம்ம்

ஆமா செங்சப்புறௌம் படம் எடுக்க காமெரா வேணாமா - அதப் பத்தி ஒண்ணுமே சொல்லல -

நல்வாழ்த்துகள் ஜெய்லாணி
நட்புடன் சீனா

ஜெய்லானி said...

@@@cheena (சீனா)--//தூக்கத்தில கண்ணு தெரியணும்கற ஒரே காரணத்தினால இங்கே ஒண்ணு சொல்றேன் - சரியா //

பாதிப்பேரை இப்பிடி பயங்காட்டிதான் கூப்பிட வேண்டி வருதுங்க என்ன செய்ய...

//சூப்ப்ரா இருக்கு ஜூஸ் - ஆனா இதுக்கு நூத்துக்கு மேலெ மறுமொழி - எல்லாரும் க்ண்ணு தெரியாமப் போயிடுமோன்னு பயத்துல கிறுக்கறாங்க . ம்ம்ம்ம் //

கரெக்டா சொன்னீங்க சார்....

//ஆமா செங்சப்புறௌம் படம் எடுக்க காமெரா வேணாமா - அதப் பத்தி ஒண்ணுமே சொல்லல -
நல்வாழ்த்துகள் ஜெய்லாணி நட்புடன் சீனா //

அதில பேட்டரி வேனும் , மெமரி கார்ட் வேனும் இப்பிடியே போட்டா பதிவு பெருசாயிடும் அதான் போடல .இந்த கடிக்கே தாங்கல மக்கள்..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ராமலக்ஷ்மி said...

சுவையான பழரசம்:)!

இப்னு அப்துல் ரஜாக் said...

//கத்தி நல்ல கூர்மையா இருக்கனும் தேவைப்பட்டா இஷ்ட தெய்வத்தை வேண்டிகிட்டு நல்லா கூர்தீட்டிக்குங்க. //


அன்பு சகோதரரே,அஸ்ஸலாமு அலைக்கும்.மேற்கண்ட "இஷ்ட தெய்வத்தை"என்ற வார்த்தை இணைவைப்பாகும்.(ஷிர்க்)தயவு செய்து மாற்றி விடுங்கள்.நன்றி

ஜெய்லானி said...

@@@ராமலக்ஷ்மி--//சுவையான பழரசம்:)!//

ஆஹா. இந்த மொக்கைக்கு பாராட்டா அப்ப இன்னும் ஸ்டிராங்கா போடவேண்டியதுதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

ஜெய்லானி said...

@@@'ஒருவனின்' அடிமை-//கத்தி நல்ல கூர்மையா இருக்கனும் தேவைப்பட்டா இஷ்ட தெய்வத்தை வேண்டிகிட்டு நல்லா கூர்தீட்டிக்குங்க. //


அன்பு சகோதரரே,அஸ்ஸலாமு அலைக்கும்.மேற்கண்ட "இஷ்ட தெய்வத்தை"என்ற வார்த்தை இணைவைப்பாகும்.(ஷிர்க்)தயவு செய்து மாற்றி விடுங்கள்.நன்றி//

வாங்க சகோ வஅலைக்கும் வஅஸ்ஸலாம் . குறிப்பிட்டதுக்கு நன்றி. இது பொதுவாக அனைத்து தரப்பினரும் வருவதால் அப்படிப்போட்டது. நமக்குள் ( அதாவது இஸ்லாமிய சமுதாயத்திற்குள் ) அப்படி ஒரு விஷயம் இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததுதானே.மனதில் உள்ளதை அல்லாஹ் அறிவான். இது ஒரு மொக்கை + சிரிக்க மட்டும் போட்ட இடுக்கை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))