Friday, May 7, 2010

நீலத்திரை பிரச்சனைகள்


           நமது மக்களுக்காக கணிணி சம்பந்தமா இன்னொரு பதிவு. இது தெரிஞ்சி வச்சுகிறதுக்கும் ,  சில நேரங்களில் உபயோகப்படும் . சில புதிய ஹார்ட் வேர் அல்லது சாப்ட் வேர் இன்ஸ்டால் பண்ணிய பிறகு நீல நிறப்பின்னனி  வந்து நின்று விடும்.
            இது கம்ப்யூட்டர் சில சமயம் ஒன்னுக்கு மேலேயே இன்னொன்னை எழுதி விடுவதும் ஒரு காரணம் மற்றும் பேட் செக்டாரும் ஒரு காரணம். என்னதான் நாம தலைகீழா நின்னாலும் நீலத்திரையை காட்டி அடம் பிடிக்கும். அதுல அதிகம் வரது  

Windows XP could not start because the following file is missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM

Windows XP could not start because the following file is missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

          இந்த ஃபைலை கான வில்லை, ரிப்பேர் தேடிக்கண்டு பிடி .என்று. ஏதோ நாமதான் வேனுமின்னே தொலச்ச மாதிரி. ஒக்கே.... இப்ப தீர்வை பாக்கலாம்

         உங்ககிட்ட இதுக்கு ஒ எஸ் அதாவது ஆப்பரேடிங் சிஸ்டம் விண்டோஸ் சீ டி  இருக்கனும். அப்படி இல்லாட்டி யாருகிட்டயாவது ஆட்டைய போட்டு காப்பி பண்ணி வையுங்க. கேட்டா ஜெய்லானிதான் இப்படி ஆட்டைய போட சொன்னாருன்னு சொல்லிடாதிங்க ( பைரஸின்னு புது பூதம் கிளம்பி இருக்கு )
        அந்த சிடியை சிடிடிரைவில் போட்டு சிஸ்டத்தை ஆன் பண்ணுங்க. சிடியை படிக்கவான்னு கேக்கும் .ஒய்-ன்னுபட்டனை தட்டினா சில பைல்கள் காப்பிஆகி புதுசா விண்டோஸ் வேனுமா இல்லை ரிப்பேரான்னு கேக்கும் அப்ப ஆர்-ன்னு தட்டினா ரிப்பேர் கன்சோல் வரும்.. அதில்  CLS-ன்னு தட்டினா திரை பளிசின்னு ஒரு வரியில வந்து நிக்கும் அப்ப கீழே உள்ளது மாதிரி தட்டி ஒவ்வொரு வரிக்கும் ENTER தட்டுங்க.

·  md tmp
copy c:\windows\system32\config\system c:\windows\tmp\system.bak
copy c:\windows\system32\config\software c:\windows\tmp\software.bak
copy c:\windows\system32\config\sam c:\windows\tmp\sam.bak
copy c:\windows\system32\config\security c:\windows\tmp\security.bak
copy c:\windows\system32\config\default c:\windows\tmp\default.bak

delete c:\windows\system32\config\system
delete c:\windows\system32\config\software
delete c:\windows\system32\config\sam
delete c:\windows\system32\config\security
delete c:\windows\system32\config\default

copy c:\windows\repair\system c:\windows\system32\config\system
copy c:\windows\repair\software c:\windows\system32\config\software
copy c:\windows\repair\sam c:\windows\system32\config\sam
copy c:\windows\repair\security c:\windows\system32\config\security
copy c:\windows\repair\default c:\windows\system32\config\default

          இது நாம புதுசா ஒரு டெம்ப்ரவரியா ஒரு போல்டர் உருவாக்கி அதுல சீடியில இருந்து நாலு ஃபைல காப்பி பண்ணிட்டு பழைய கெட்டு போன நம்ம ஃபைல டெலிட் பண்ணுவது இது. கடைசியா exit-ன்னு தட்டினா . இப்ப நம்ம கம்ப்யூட்டர் தானே ரீஸ்ஸ்டார்ட் ஆகி கம்பீரமா வேலை செய்யும் .

         இதுல C ங்கிறது .உங்க டிஃபால்டா இருக்கிற டிரைவ். வேற டிரைவில உங்க ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் இருந்தா அப்ப அந்த டிரைவ் எழுத்தை அதுல போடனும். இந்த மாதிரி பிரச்சனை வந்த பொட்டிய கடையில குடுக்கிரத்துக்கு முன்ன ஒரு முறை நாமே செய்வது நல்லது . எதுக்கு அடுத்தவங்களை கஷ்டப்படுத்தனும். ஹி....ஹி.....





65 என்ன சொல்றாங்ன்னா ...:

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள தகவல்கள் நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

ஹேமா said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

இதுக்காகவே ஓட்டும் போட்டு...எனக்குப் புரியலனாலும் பிரயோசனமான பதிவுன்னு
கருத்தும் சொல்லிட்டுப் போறேன்.

எங்க காணோம் ரொம்பநாளா
குழந்தைநிலாப் பக்கம்.வாங்க ஜெய்.

athira said...

ஜ்யெ..லானி வர வர உங்களுக்கு கிட்னிப்பவர் அதிகமாகிக்கொண்டே போகுது. நல்ல பயனுள்ள பதிவு. இன்னும் தொடருங்கோ.

எதுக்கு அடுத்தவங்களை கஷ்டப்படுத்தனும். ஹி....ஹி..... /// இப்பூடி நினைத்து அடுத்தவர்களின் புழைப்பில மண்ணைப்போட்டிடாதீங்கோ... கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ

ஸாதிகா said...

பிரயோஜனமான தகவல்கள்.தொடருங்கள் ஜெய்லானி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன சார்.. சொல்லிட்டு எழுதறதில்லை..

நீலத்திரைனு என்னமோ ஏதோனு பதறிப்போய் ஓடிவரேன்...

ஆமா...திடீர்னு ,சின்னதிரையிலிருந்து..நீலத்திரைக்கு போயிட்டீங்க?

யூஸ்புல் பதிவு சார்..

நாடோடி said...

ந‌ல்ல‌ ப‌ய‌னுள்ள‌ ப‌திவு ஜெய்லானி...

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//நல்ல பயனுள்ள தகவல்கள் நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .//

வாங்க சசி , உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//இதுக்காகவே ஓட்டும் போட்டு...எனக்குப் புரியலனாலும் பிரயோசனமான பதிவுன்னு கருத்தும் சொல்லிட்டுப் போறேன்.//

இது குரளி வித்தைக்காரன் டெக்னிக் , பயப்படாதீங்க .இப்பதான் உங்க பதிவை படிச்சிட்டு வரேன். இங்கே தைரியமா கும்மி அடிக்கலாம். நம்ம அதிரா மாதிரி. மாற்று கருத்தும் சொல்லலாம்.

//எங்க காணோம் ரொம்பநாளா குழந்தைநிலாப் பக்கம்.வாங்க ஜெய்.//

சில பேரோடது ரீடரில் அப்டேட் ஆகமாட்டேங்கிறது 170 க்கு தாங்கலன்னு நெனைக்கிறேன். இனி தப்பு வ்ராம பாக்குறேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஜ்யெ..லானி வர வர உங்களுக்கு கிட்னிப்பவர் அதிகமாகிக்கொண்டே போகுது. நல்ல பயனுள்ள பதிவு. இன்னும் தொடருங்கோ.//

பேபி அதிரா..பாதி உங்க ரெயினிங் அதான் கிட்னி இப்பிடி. என்னை அடிக்க முடியாட்டி என் பேரை இப்படியா அடிப்பது க்கி...க்கி..

//எதுக்கு அடுத்தவங்களை கஷ்டப்படுத்தனும். ஹி....ஹி..... /// இப்பூடி நினைத்து அடுத்தவர்களின் புழைப்பில மண்ணைப்போட்டிடாதீங்கோ... கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ//

இப்பூடி வேற இருக்கா..அப்ப ரிப்பேர் ஆக ஐடியா தரவா ?

r.v.saravanan said...

நல்ல பயனுள்ள தகவல்கள்
நோட் பண்ணிக்கிறேன் ஜெய்லானி

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//பிரயோஜனமான தகவல்கள். தொடருங்கள் ஜெய்லானி.//

வாங்க!!வாங்க!!உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//என்ன சார்.. சொல்லிட்டு எழுதறதில்லை..நீலத்திரைனு என்னமோ ஏதோனு பதறிப்போய் ஓடிவரேன்...//

என்னா பட்டு , இன்னும் நித்தி மயக்கம் தீரலியா ? நா என்ன அந்த மாதிரி ஆளா ? .

//ஆமா...திடீர்னு , சின்னதிரையிலிருந்து.. நீலத்திரைக்கு போயிட்டீங்க? யூஸ்புல் பதிவு சார்..//

சின்ன திரை திறக்குற நேரம் வருது. ஜெனரேட்டர் ஆன் தி வே ல இருக்கு. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ந‌ல்ல‌ ப‌ய‌னுள்ள‌ ப‌திவு ஜெய்லானி...//

வாங்க ஸ்டீபன்!!.உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

vanathy said...

ஜெய்லானி, கொசு வளர்ப்பது, சுடு தண்ணீர் வைப்பது எப்படி என்று சீரியஸ் பதிவெல்லாம் விட்டாச்சா? இப்ப புதுசு புதுசா ஏதோ எழுதுறீங்கள்..

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//நல்ல பயனுள்ள தகவல்கள் நோட் பண்ணிக்கிறேன் ஜெய்லானி //

வாங்க சரவணண்.!!பதினஞ்சி நிமிஷ வேலைதான் இது. அத்தனை கஷ்டம் இல்லை. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய்லானி, கொசு வளர்ப்பது, சுடு தண்ணீர் வைப்பது எப்படி என்று சீரியஸ் பதிவெல்லாம் விட்டாச்சா? இப்ப புதுசு புதுசா ஏதோ எழுதுறீங்கள்..//

ஹி..ஹி..அது வந்துங்க , கரெண்ட் கட்டாச்சுல்ல .ஜெனரேட்டர் ஆன் தி வே ல இருக்கு . வந்ததும் திரும்ப போட்டுடுவோமே. உங்களுக்கு பிடிச்ச தலைப்பு வேனா சொல்லுங்க முன்னுரிமை கோட்டாவில தரேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Menaga Sathia said...

ந‌ல்ல‌ ப‌ய‌னுள்ள‌ ப‌திவு ஜெய்லானி!!

makdns said...

good. my tech blog
makdns.blogspot.com

வேலன். said...

எப்படியும் ரிப்பேர் ஆகப்போகின்றது.நாமே சரி செய்து பார்க்கலாம்....சரியாகவில்லையென்றால் ரிப்பேருக்கு கொடுத்துவிடலாம்...நம்ப பாலிஸியும் அதான்..சரியா...நல்ல பதிவு...வாழ்க வளமுடன்,வேலன்.

Chitra said...

Present!!! :-)

சிநேகிதன் அக்பர் said...

எங்க பொழப்புல...

சரி வேணாம்.

நல்ல பகிர்வு :)

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//ந‌ல்ல‌ ப‌ய‌னுள்ள‌ ப‌திவு ஜெய்லானி!!//

வாங்க!! சந்தோஷம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Daynight--// good. my tech blog
makdns.blogspot.com //

வாங்க ஸார். உங்க வீட்டை பார்த்தேன் . உங்க அளவுக்கு என்னால முடியாது. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//எப்படியும் ரிப்பேர் ஆகப்போகின்றது. நாமே சரி செய்து பார்க்கலாம்.... சரியாக வில்லையென்றால் ரிப்பேருக்கு கொடுத்துவிடலாம் ... நம்ப பாலிஸியும் அதான்..சரியா...நல்ல பதிவு... வாழ்க வளமுடன்,வேலன்.//

கரெக்டா சொன்னீங்க !! .அதிக பட்சம் இருபது நிமிஷம் பிடிக்கும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--//Present!!! :-) //

வாங்க டீச்சர்!!.உங்க புது மிளகா பதிவு ஏன் திறக்க அடம் புடிக்குது ? .வந்தது சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அக்பர்--//எங்க பொழப்புல... சரி வேணாம். நல்ல பகிர்வு :) //

அது சரி நீங்க ஒரு டெக்னீஷியன்ல மறந்து போயிடுச்சி. வாங்க!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மசக்கவுண்டன் said...

நல்ல தகவலுங்க. ஆனா இப்படியெல்லாம் பண்ணி அரைகுறையா இருக்கற கோளாறை முளு கோளாறா பண்ணி, அப்புறம் டாக்டரைக்கூப்பிட்டு சரி செய்யறதுதான் நம்ம வளக்கமுங்க.

Thenammai Lakshmanan said...

விண்டோஸ்லதான் இப்படியா லினக்ஸ்லயும் இருக்கா இந்தப் பிரச்சன்ை..ஜெய்லானி

அப்துல்மாலிக் said...

புளு ஸ்கிரீன் ஒரே வழி ஃபார்மட் தான்

இது புதுசு.. செய்து பார்த்துடுவோம்

அப்துல்மாலிக் said...

//அக்பர் said...

எங்க பொழப்புல...

சரி வேணாம்.

நல்ல பகிர்வு :/./

உங்க பொழப்புக்கும் இது உபயோகமாமும் லே

athira said...

என்னை அடிக்க முடியாட்டி என் பேரை இப்படியா அடிப்பது க்கி...க்கி..// நான் கரீக்டாத்தான் அடிச்சனே.... அது கூகுளின் தப்பூஊஊஊஉ. இப்ப கூட பாருங்க இரவுபகலா உங்களுக்கு எத்தனை கொமெண்ட்ஸ் போட்டிருப்பேன்... ஆனால் Athira(3) என்றுதானே காட்டுது...:).


என்னா பட்டு , இன்னும் நித்தி மயக்கம் தீரலியா ? நா என்ன அந்த மாதிரி ஆளா ? ./// எந்தமாதிரி ஜெய்..லானி? கொஞ்சம் பேபீஸுக்கும் புரியிறமாதிரிக் கதைக்கோணும். மீ எஸ்ஸ்ஸ்ஸ்

எம் அப்துல் காதர் said...

நல்ல பயனுள்ள தகவல். நோட்டட்

MUTHU said...

ஜெய்லானி நீல திரையை பற்றி போட்டு இருக்காருன்னு உடனே இனொரு நித்தி மாட்டுனான்னு நினைச்சேன்

MUTHU said...

இது தெரியாமதான் நான் நீல திரை வந்தவுடன்,கம்ப்யூட்டர்ரை மேலிருந்து கிழே போட்டு விட்டு எடுத்து வந்து கணைக்க்ஷேன் கொடுத்து பார்த்தால் நீல திரைக்கு பதில் கருப்பு திரை வருது,சரி அப்போ இது வைரஸ் வேலை தான் என்று கடைக்காரனிடம் காட்டினால் கம்ப்யூட்டர் ஓ.கே. உள்ள இருக்கறது எங்கே அப்படின்னு கேட்க்குறார் இப்ப என்ன செய்வது

MUTHU said...

இந்த மாதிரி பிரச்சனை வந்த பொட்டிய கடையில குடுக்கிரத்துக்கு முன்ன ஒரு முறை நாமே செய்வது நல்லது . எதுக்கு அடுத்தவங்களை கஷ்டப்படுத்தனும். ஹி....ஹி..... ::::::::::::::::::


எப்படி நான் செய்த மாதிரி தானே ஜெய்லானி

SUFFIX said...

ஓ.கே, ரைட்டு...

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//நல்ல தகவலுங்க. ஆனா இப்படியெல்லாம் பண்ணி அரைகுறையா இருக்கற கோளாறை முளு கோளாறா பண்ணி, அப்புறம் டாக்டரைக்கூப்பிட்டு சரி செய்யறதுதான் நம்ம வளக்கமுங்க.//

தாத்தா!! டாக்டர கூப்பிடுவதுக்கு முன்ன சுக்கு கசாயம் சாப்பிடுவோமுல்ல அது மாதிரி இது கை வைத்தியம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//விண்டோஸ்லதான் இப்படியா லினக்ஸ்லயும் இருக்கா இந்தப் பிரச்சன்ை..ஜெய்லானி//

லினக்ஸ்ல அதிகம் வருவது கெர்னல் தலைவலி. ஹார்ட்வேர் அவ்வள்வு சீக்கிரம் ஒத்துக்கொள்ளாமல் பிரச்சனை செய்யும் இதனாலதான் அது பக்கம் யாரும் போக பயப்படுவது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அபுஅஃப்ஸர்--//புளு ஸ்கிரீன் ஒரே வழி ஃபார்மட் தான் இது புதுசு.. செய்து பார்த்துடுவோம் //

எப்பவும் ஃபார்மெட் சரியான தீர்வு இல்லை. அதுக்கு முன்ன எமர்ஜென்ஸி வேலைநிறைய இருக்கே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அபுஅஃப்ஸர்--//உங்க பொழப்புக்கும் இது உபயோகமாமும் லே //

அவங்களுக்கு அதிகம் உபயோகப்படும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--// நான் கரீக்டாத்தான் அடிச்சனே.... அது கூகுளின் தப்பூஊஊஊஉ. இப்ப கூட பாருங்க இரவுபகலா உங்களுக்கு எத்தனை கொமெண்ட்ஸ் போட்டிருப்பேன்... ஆனால் Athira(3) என்றுதானே காட்டுது...:).//

இப்ப பாருங்க சரியா காட்டும். இதுவும் ஜாவா ஸ்கிப்ட் தப்புதான் என் தப்பு இல்ல

// எந்தமாதிரி ஜெய்..லானி? கொஞ்சம் பேபீஸுக்கும் புரியிறமாதிரிக் கதைக்கோணும். மீ எஸ்ஸ்ஸ்//

எப்படியும் என்ன வம்புல மாட்டாம விடமாட்டீங்க போல இருக்கு. நா ஒரு அப்பாவி !!ஆமா நா ஒன்னுமே சொல்லலியே !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//நல்ல பயனுள்ள தகவல். நோட்டட் //

வாங்க சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

MUTHU said...

athira--// நான் கரீக்டாத்தான் அடிச்சனே.... அது கூகுளின் தப்பூஊஊஊஉ. இப்ப கூட பாருங்க இரவுபகலா உங்களுக்கு எத்தனை கொமெண்ட்ஸ் போட்டிருப்பேன்... ஆனால் Athira(3) என்றுதானே காட்டுது...:).//:::::::::::::::


உங்களுக்காவது பெயரையாவது காட்டுது மேடம்,என் பெயரையே காணோம்

ஜெய்லானி said...

@@@Muthu-//ஜெய்லானி நீல திரையை பற்றி போட்டு இருக்காருன்னு உடனே இனொரு நித்தி மாட்டுனான்னு நினைச்சேன்//

அதுகளை பத்தி பேசுனா நம்ம வாய் நாத்தமடிக்கும் . ப குட்டியை விட கேவலம்.

//இது தெரியாமதான் நான் நீல திரை வந்தவுடன்,கம்ப்யூட்டர்ரை மேலிருந்து கிழே போட்டு விட்டு எடுத்து வந்து கணைக்க்ஷேன் கொடுத்து பார்த்தால் நீல திரைக்கு பதில் கருப்பு திரை வருது,சரி அப்போ இது வைரஸ் வேலை தான் என்று கடைக்காரனிடம் காட்டினால் கம்ப்யூட்டர் ஓ.கே. உள்ள இருக்கறது எங்கே அப்படின்னு கேட்க்குறார் இப்ப என்ன செய்வது//

ஹா..ஹா..உள்ளே உண்டியல் சத்தமுல்ல கேக்கும்.

//எப்படி நான் செய்த மாதிரி தானே ஜெய்லானி //

ஆமா அப்படி செஞ்ச்சா புதுசா லேட்டஸ்டு மாடல் பிசி வாங்க முடியும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@SUFFIX--// ஓ.கே, ரைட்டு..//

வாங்க!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Muthu--//உங்களுக்காவது பெயரையாவது காட்டுது மேடம்,என் பெயரையே காணோம் //


யப்பா முத்து 11ம் நெம்பரை பாருப்பா , என்னாஅ வில்லத்தனம்

ஜெயந்தி said...

தேவையான தகவல்கள்.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//தேவையான தகவல்கள்.//

வாங்க!!சந்தோஷம்.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Riyas said...

நல்லாத்தான் சொல்றீங்க செய்து பார்த்தா போச்சு..
ஆஹா...

ரியாஸ்.

Jaleela Kamal said...

எல்லோருக்கும் பயனுள்ள பதிவு

அதிரா நீங்க என்ன சொல்றீஙக்ன்னு புரியல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
சின்ன திரை திறக்குற நேரம் வருது. ஜெனரேட்டர் ஆன் தி வே ல இருக்கு. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//

எல்லாம் ஆற்காட்டார் புண்ணியம் போல.. அங்கேயுமா வந்துட்டாரு?..

சாமக்கோடங்கி said...

தேவைப் படும்போது யூஸ் பண்ணிக்கறேன்.. மிகப் பயனுள்ள தகவல்.. தொடருங்கள்...

நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப உபயோகமான டிப்ஸ்..
தேங்க்ஸ்.. :)

அன்புடன் மலிக்கா said...

மிகவும் உபயோகமான தகவல்தான்.

ஆகா வர வர கிட்னிபவர் அதிகமாகிட்டே போகுதே ஜெய்லானி

என்ன சமைச்சி துண்ணுறீங்க அத சொன்னீகன்னா ட்ரைப்பண்ணலாம் ஹி ஹி..

ஜெய்லானி said...

@@@Riyas--//நல்லாத்தான் சொல்றீங்க செய்து பார்த்தா போச்சு..ஆஹா...//

ரியாஸ் நல்லா இருக்குறத டிரை பண்ணாதீங்க ப்ளு ஸ்கிரீன் வந்தா மட்டும் பாருங்க.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela--//எல்லோருக்கும் பயனுள்ள பதிவு . அதிரா நீங்க என்ன சொல்றீஙக்ன்னு புரியல //

வாங்க!! வாங்க!! அதிராவுக்கு ஏன் இந்த கொலவெறி....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//எல்லாம் ஆற்காட்டார் புண்ணியம் போல.. அங்கேயுமா வந்துட்டாரு?..//

இங்க வந்தா கால வெட்டி முதல்ல பாயா , ஈரல் கூட்டு , கிட்னி ஃபரை (ஜலீலாக்கா மாடல்ல ), தலை கறி , அரபி மாடல்ல மந்தி பிரியாணி.

இதெல்லாம் அவரை வச்சிதான் செய்யனும் . மனுச கறி டேஸ்ட் எப்படின்னு ஒருத்தன் ரொம்ப நாளா கேக்குறான் . வரும் போது நம்ம பசங்களையும் கூட்டிட்டு வாங்க . தலக்கறி யாருக்குன்னு பேசி தீத்துக்கலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Asiya Omar said...

இதெல்லாம் நமக்கு எங்கே புரியப்போவுது ?அப்புறம் இன்று தான் கவனித்தேன்,கீழே ஸ்க்ரோல் பண்ணினால் ஜெய்லானி ஜெகஜோதியாக மின்னுகிறாப்ல.

ஜெய்லானி said...

@@@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி---//தேவைப் படும்போது யூஸ் பண்ணிக்கறேன்.. மிகப் பயனுள்ள தகவல்.. தொடருங்கள்... நன்றி..//

வாங்க பிரகாஷ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi--//ரொம்ப உபயோகமான டிப்ஸ்.. தேங்க்ஸ்.. :) //

வாங்க!! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//மிகவும் உபயோகமான தகவல்தான். ஆகா வர வர கிட்னி பவர் அதிகமா கிட்டே போகுதே ஜெய்லானி //

கிட்னி அப்படியேதாங்க இருக்கு. அடிக்கடி பொட்டி ரிப்பேர்ன்னு எல்லாரும் சொல்றாங்களேன்னு போட்டேன் . யாருக்காவது உபயோகப்பட்டா சின்ன சந்தோஷம் அம்புட்டுதேன்!!

// என்ன சமைச்சி துண்ணுறீங்க அத சொன்னீகன்னா ட்ரைப்பண்ணலாம் ஹி ஹி..//

கொஞ்ச நாளா உங்க சமையல பாத்து டிரை பண்ரேன் ஹி...ஹி...( ஆத்தாடி...எஸ்கேப்ப்ப்ப்ப்ப்) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாத்திமா ஜொஹ்ரா said...

very useful information thanks brother.

ஜெய்லானி said...

@@@asiya omar--//இதெல்லாம் நமக்கு எங்கே புரியப்போவுது ?அப்புறம் இன்று தான் கவனித்தேன்,கீழே ஸ்க்ரோல் பண்ணினால் ஜெய்லானி ஜெகஜோதியாக மின்னுகிறாப்ல.//

பிராப்ளம் வந்தா இது மாதிரி டிரை பண்ணிப்பாருங்க. சரியாகும்.அது ஒன்னுமில்லை சூடு கொஞ்சம் ஜாஸ்தி அதான் ஹி...ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பாத்திமா ஜொஹ்ரா--// very useful information thanks brother.//

வாங்க!!என் ரீடரில் உங்க பதிவு அப்டேட் ஆகல இதனால நீங்க போடுவதும் தெரியமாட்டேங்குது. வந்ததுக்கு சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காஞ்சி முரளி said...

ரொம்ப.. ப.. ப.. நாளேச்சுன்னு...
நம்பி வந்த என்னை..!
இப்பிடி ஏமாத்திட்டீங்களே...!

நல்ல பயனுள்ள தகவல்தான்...
தெரியும்.... ஆ..... ஆனா....... தெரியாது...

இந்தளவிற்கு நாம அறிவாளியில்ல..
ஜெய்லானி...

any have...
பொழுபோக்குக்கு மட்டுமல்ல வலைதளம்...

இதுபோன்ற நல்ல பயனுள்ள தெரிந்துகொள்ள உதவும் தளம்.. என்பதை உணர்த்திய தங்களுக்கு.. நன்றி... நன்றி...

நட்புடன்...
காஞ்சி முரளி...

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))