Monday, May 31, 2010

இந்த நிலை வரும் முன்னே


         முன்னல்லாம் நான் நிறைய பிளாக் படிக்கிரது வழக்கம். இப்பவும் அந்த பழக்கம் அதிகமாவே இருக்கு. ஆனா கொஞ்சநாளா நான் ஃபேவரைட் எடுத்து வச்ச  பக்கத்தை திறந்தா அந்த பக்கம் கண்டறியப்படவில்லைன்னு ஒரே எர்ரர் மெசேஜா வருது..
        அதுல சில பேரோட மெயில அட்ரஸ் என்னிடம்  இருந்ததால அவங்களை கேக்கும் போது என்னன்னு தெரியல திறக்க மாட்டேங்குதுன்னு பதில வருது .
       ஒரு வேளை எதுவும் ஆட்வேர் பிராப்ளமான்னு கூகிள் கிட்டயும் கேட்டு பாத்ததுக்கு சரியான பதில இல்லை . அப்ப இத்தனை நாள் மாங்கு மாங்குன்னு எழுதியதுக்கு என்ன அர்த்தம். நானாவது சும்மா மொக்கையா எழுதி வரேன் . ஏதோ என்னால முடிஞ்சது
       ஆனா நிறை பேர் தன்னோட > கதை ,  கவிதை ,  சமையல் , போட்டோக்கள் இப்படி திரும்பி கிடைக்காத பல நல்ல விசயங்கள் எழுதி வருபவங்களின் கதி என்ன ஆவது . ஒரு சில தவறான பிண்ணூட்டத்தால் மூக்கால் அழும் ஆட்களும் இருக்கும் போது மொத்த பிளாக்கும் கானாமல் போனால் என்ன செய்வாங்களோ தெரியல.
      இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் ஐயா , அம்மா ,அக்கா, தங்கச்சி , தம்பி , அண்ணாக்களே !! உடனே உங்க பிளாக்கு , மற்றும் டெம்லேட்டுகளை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . அது தவிர ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் அல்லது முடிவிலும் பேக்கப் எடுப்பதை மறக்க வேண்டாம் . புதியது எடுத்ததும் பழையதை டெலிட் செய்துடுங்க. அப்படி தேவை பட்டால் இரண்டு எடுத்து வையுங்க

  டெம்லேட்டில் புதியதாக எதுவும் சேர்தால் மட்டும் அதை மீண்டும் பேக்கப் எடுக்கவும் . அப்படி இல்லாவிட்டால் ஒன்னு மட்டும் போதுமானது. எடுக்க தெரிந்தவர்க்கு ஓக்கே தெரியாதவர்க்கு மேலே படிங்க

உங்களுடைய டேஷ்போர்டில செட்டிங்க்ஸ் கிளிக் பண்ணினா வரும் முதல் பக்கத்தில் முதல் வரியில் இம்போர்ட் பிளாக் --எக்ஸ்போர்ட் பிளாக் டெலிட் பிளாக் இப்படி மூனு ஆப்ஷன் இருக்கும் . இதில் நமக்கு வேண்டியது இரண்டாவதா இருக்கும் எக்ஸ்போர்ட் பிளாக் மட்டுமே.
  அதை கிளிக் பண்ணினா வரும் பக்கத்தில் டவுன்லோட் பிளாக் என்கிற பட்டனை கிளிக்கி எங்கே சேவ் பண்ணுமோ அங்கே பத்திரமா சேவ் பண்ணி வையுங்க. ஒரு வேளை உங்க பிளாக்  கானாம போனால் மீண்டும் அதே டேஷ் போர்ட் > செட்டிங்ஸ் > இப்ப இம்போர்ட் பிளாக் கிளிக் பண்ணீனா வரும் பக்கத்தில நீங்க உங்க ஃபைல எங்க பத்திரமா வச்சிங்களோ அந்த இடத்தை பிரவுஸ் பண்ணி அதன் கிழே உள்ள வார்த்தயை டைப்பி  இம்போர்ட் பட்டனை கிளிக்கினால் உங்க பழைய பதிவு அப்படியே கிடைக்கும்.

அப்புறம் டெம்லேட்டுக்கு  டேஷ்போர்ட் > லேஅவுட் > எடிட் ஹெச் டி எம் எல் கிளிக் அதில் . Expand Widget Templates ல் உள்ள பெட்டியை டிக் பண்ணி கீழே உள்ள பெட்டியில உள்ள எல்லாத்தையும் செலக்ட் செய்து ரைட் கிளிக் காப்பி பண்ணி ஒரு நோட் பேடில் பேஸ்ட் செய்யுங்க. இதுக்கு ஒரு பேர் குடுத்து பத்திரமா வையுங்க.

எப்பவாவது உங்க பிளாக் டெலிட் ஆனா புதுசா ஒரு பிளாக் தொடங்கி அதில மீண்டும் இது போல டேஷ்போர்ட் > லேஅவுட் > எடிட் ஹெச் டி எம் எல் கிளிக் அதில் . Expand Widget Templates ல் உள்ள பெட்டியை டிக் பண்ணி கீழே உள்ள பெட்டியில உள்ள எல்லாத்தையும் செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து டெலிட் பண்ணுங்க , உங்க நோட் பேடில உள்ளதை காப்பி பண்ணி இங்க பேஸ்ட் பண்ணி பிளாக சேவ் பண்ணிணால் பழைய டெம்ப்லேட் மற்றும் அனைத்து பழைய சங்கதிகளும் மின்னும்.

நான் ஆரம்பத்தில சொன்னவங்ககிட்ட கேட்டேன் இது மாதிரி எதுவும் இருக்கான்னு இல்லைன்னு பதில் வந்துச்சி. என்னத்த சொல்ல .நாளை உங்களுக்கும் இது போல ஆகும் முன்னால் >>>>  
கண்ணதாசா என்ன மன்னிச்சிடுப்பா!!


பிளாக்கே மாயம் இந்த பிளாக்கே மாயம்
வெப்பின் மீது காணும் யாவும், கூகிளில் போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
கூகிலேடு யார் போட்டி போடுவது ? அப்படி நாம் போடும் போது,
யாரோடு யார் நாம் கேட்பது?
(பிளாக்கே)


யாரார்க்கு என்ன தலைப்போ ? இங்கே
யாரார்க்கு எந்த டெம்ப்லேட்டோ?
பிளாக் இருக்கும் வரைக் கூட்டம் வரும்,
பிளாக் நின்றால் ஓட்டம் விடும்!
நெட்டால வந்தது வைரஸால வெந்தது!
நெட்டால வந்தது வைரஸால வெந்தது!
இது பிஸி என்று கம்ப்யூட்டரை யார் சொன்னது?
(பிளாக்கே)


மொக்கை போட்டாலும் ஓட்டு போடுவார் ,  இங்கே
அப்படி இல்லாட்டாலும்  கருத்து  போடுவார்
பிளாக் உண்டாவது உண்ணாலதான்!
பேர் கெட்டு போவதும்  உண்ணாலதான்!
லிங்க் கோடு வந்தது, பிளிங்காகி  போனது!
லிங்க் கோடு வந்தது, பிளிங்காகி  போனது!
இது பிஸி என்று கம்ப்யூட்டரை யார் சொன்னது?
(பிளாக்கே)


டிஸ்கி::: இந்த பதிவு பிளாக் ஆரம்பிக்காமல் வெறும் பிண்ணூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு இது பொருந்தாது.  

113 என்ன சொல்றாங்ன்னா ...:

எல் கே said...

நல்ல பதிவு, மிக அவசியமானதும் கூட. நான் இதுக்குதான் வோர்ட் பிரச்ஸ்ல ஒரு அக்கௌன்ட் வச்சிருக்கேன். இங்க இருந்து எக்ஸ்போர்ட் பண்ணி அங்க இம்போர்ட் பண்ணிடுவேன் எப்படி

தோழி said...

நல்ல தகவல்...நன்றி...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அடடா நாம இதை செய்யாமல் விட்டுட்டுடோமே என்று வருத்தம் வேண்டாம். இப்போதே உங்கள் பிளாக்கை ஜெய்லானி சொன்னதுபோல பேக்கப் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். உபயோகமான தகவல்கள். நன்றியை ஜெய்லானிக்கு சொல்லிடுங்க. நன்றி ஜெய்லானி.

Menaga Sathia said...

ஜெய்லானி நான் செய்து பார்த்தேன்.சேவ் செய்து பைல் ஒப்பன் செய்தால் Macromedia product activation நு வருது...ஏன்???

சௌந்தர் said...

நல்ல பதிவு... html நான் காப்பி எடுத்து வைத்து கொள்வேன்
அடிகடி பதிவு வரவேண்டும்

மின்மினி RS said...

நல்ல தகவல்கள் ஜெய்லானி. நன்றி ஜெய்லானி

dheva said...

Thanks Jailani! really useful information!

Jaleela Kamal said...

நீங்கள் சொல்வது 100 % சரி ரொம்பபயனுள்ள் பதிவுகளை போட்டுள்ளோம் ஆனால் எல்லாம் காணம போச்சுன்னா ரொம்ப நொந்துடுவோம்.


சரியான் நேரத்தில் பிளாக்கர் களின் ந்ஞான்க் கண்ணை
திற்ந்து விட்டு இருக்கிங்க

நான் முன்று மாதம் முன்பு பேக் அப் எடுத்தேன்.

சேமித்த்தை திரும்ப கொண்டு வர வேர பிளாக் பெயர் வைக்கனுமா?

இது இம்போட் செய்ய ஈசியான ஒரு லிங்க் தரேன்
அதையும் பதிவில் சேர்த்து கொள்ள்ங்கள்
புரியாதவ்ர்கள் அதை பார்த்து புரிந்து கொள்ளட்டும்.

Jaleela Kamal said...

அது எப்படி ஓவ்வொரு பதிவு போடும் போது எடுத்து வைப்பது.

Jaleela Kamal said...

பிளாக்கர் பாட்டு கண்ணாதாசன் மெட்டில் ஹி ஹி

Jaleela Kamal said...

http://athekangal.blogspot.com/2009/12/settings-export-blog-down-load-blog.html

இத பாருங்கள் ஈசியாக இருக்கும்

SUFFIX said...

ஓ.கே ஜெ!! நல்ல தகவல், அப்பாலிக்கா செஞ்சுடுறேன். பாடுபட்டு ஒரு பாட்டு, பாராட்டுக்கள்!!

Priya said...

தமிழ் சினிமாவில் வரும் குடும்ப பாட்டு போல ப்ளாக்கர் குடும்பப் பாட்டை உருவாக்கிய ஜெய்லானிக்கு.... ஓரு'ஓ'போடுங்க எல்லாம்!

Unknown said...

எங்களப் பாத்தா உங்களுக்கு பாவமா தெரியலையா..?

நாஸியா said...

Thanks for the info! :) Should be very helpful

ஸாதிகா said...

ரொம்ப சீரியசா,சிறப்பான,அவசியமான ஒரு பதிவைப்போட்டுவிட்டு வழக்கம் போல் மொக்கை கவிதை பாடாவிட்டால் ஜெய்லானிக்கு தூக்கம் வராதோ?

சிநேகிதன் அக்பர் said...

//டிஸ்கி::: இந்த பதிவு பிளாக் ஆரம்பிக்காமல் வெறும் பிண்ணூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு இது பொருந்தாது.//

இது சூப்பர் மேட்டர் ஜெய்லானி.

ஆமா பாட்டு பட்டையை கிளப்புது.

நல்ல பயனுள்ள தக்வல் ஜெய்லானி.

athira said...

ஆ... ஜெய்..லானி, என் போன்றோருக்கு மிக முக்கியமான பதிவு. நானும் நீண்ண்ண்ண்ண்ட நாளாக இப்படிச் செய்யோணும் என யோசித்துக்கொண்டே இருக்கிறேன் எங்கே நேரம் கிடைக்குது? ஒரு பதிவு போட நேரம் கிடைத்தாலே லொட்றி விழுந்த சந்தோசமாக இருக்கும்போது, இதுக்கெல்லாம் எங்கே நேரம்... செய்யத்தான் வேணும்.

//கண்ணதாசா என்ன மண்ணிச்சிடுப்பா!!/// என்னுயிர்க் கண்ணதாசனைக்கூப்பிட்டு மன்னிப்புக் கேட்டுவிட்டதால..... பாட்டு நன்றாகவே இருக்கெனச் சொல்லிட்டுப் போகிறேன்:).

டிஸ்கி::: இந்த பதிவு பிளாக் ஆரம்பிக்காமல் வெறும் பிண்ணூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு இது பொருந்தாது. /// ஹக்...ஹக்....ஹக்...ஹாஆஆ..கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈஈ.... நீங்க எழுதின கட்டுரையைவிட இதுதான் பெஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.

முதல்ல ஜலீலாக்காவின் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்க ஜெய்..லானி:)...

Kousalya Raj said...

ரொம்ப அவசியமான பதிவு. பாட்ட அதே மெட்ல பாடி வயிறு வலி வந்துவிட்டது.....!!?

எம் அப்துல் காதர் said...

டிஸ்கியில் எங்களை எல்லாம் எட்டி உதைத்த மாதிரி இருக்கே தலீவா! இருந்தாலும் நாங்கல்லாம் அமீபா பரம்பரை, ஒன்னிலிருந்து - நான்காய், எட்டாய், பதினாறாய்...புதிய பதிவராய் உங்கள் முன் எழுச்சியுடன் வருவோம். அப்ப கண்டுங்க பாஸ்!!

வேலன். said...

கண்ணதாசா என்ன மண்ணிச்சிடுப்பா!!
மண்ணிச்சிடுப்பா:- மன்னித்தேன்.

அருமையான பதிவு நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//ஜெய்லானி நான் செய்து பார்த்தேன்.சேவ் செய்து பைல் ஒப்பன் செய்தால் Macromedia product activation நு வருது...ஏன்???//

XML ஃபைல்இதுXML எடிட்டரில் திறக்கும். இது எதில டிபால்டா திறக்கனுமோ அதில தான் திறக்கும் . நீங்க ஃபைல ரைட் கிளிக் பண்ணி ப்ராபரடீஸ்ல கிளிக்கி சேஞ்ச் பிறகு ஐ ஈ லயும் பாக்கலாம் வெறுமனே நேட் பேடுலயும் பாக்கலாம் . உங்க கிட்ட மாக்ரோமிடியா புராடக்ட் எஸ்பிரி ஆகி இருந்தா ஆக்டிவேஷன் காட்டும். கூடுமானவரை அதை திறக்காம இருப்பது நல்லது. (நீங்க புரோகிறாமரா இல்லாத வரை ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//நல்ல பதிவு, மிக அவசியமானதும் கூட. நான் இதுக்குதான் வோர்ட் பிரச்ஸ்ல ஒரு அக்கௌன்ட் வச்சிருக்கேன். இங்க இருந்து எக்ஸ்போர்ட் பண்ணி அங்க இம்போர்ட் பண்ணிடுவேன் எப்படி//

உங்க கிட்ட இரெண்டு பிளாக் இருப்பதால ஈஸியா செய்யுறீங்க. ஆனா ரெண்டுமே ஒரே மாதிரியாவேதானே இருக்கும். சின்ன சின்ன மாற்றங்களோட ஆனாலும் ஓக்கே !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@தோழி--//நல்ல தகவல்...நன்றி...//

வாங்க!! வாங்க!! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//அடடா நாம இதை செய்யாமல் விட்டுட்டுடோமே என்று வருத்தம் வேண்டாம். இப்போதே உங்கள் பிளாக்கை ஜெய்லானி சொன்னதுபோல பேக்கப் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். உபயோகமான தகவல்கள். நன்றியை ஜெய்லானிக்கு சொல்லிடுங்க. நன்றி ஜெய்லானி.//

வாங்க ஷேக் !!பின்னால கஷ்டப்படுவதை விட இரெண்டு நிமிஷம் வேலை ஈஸிதானே !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@soundar--//நல்ல பதிவு... html நான் காப்பி எடுத்து வைத்து கொள்வேன் அடிகடி பதிவு வரவேண்டும்//

உஷாரான பார்ட்டிதான் நீங்க .வெளி பிளாக்ல சுத்துறதுல உள்ள ஆர்வம் சொந்த பிளாக்கில வரமாட்டேங்கிது தல கொஞ்சம் சோம்பல் அதான்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

மின்மினி--//நல்ல தகவல்கள் ஜெய்லானி. நன்றி ஜெய்லானி//

மறக்காம செய்யுங்க .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@dheva--// Thanks Jailani! really useful information! //

வாங்க தேவா!! போன மொக்கைக்கு இது தேவலயா என்ன ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela--//நீங்கள் சொல்வது 100 % சரி ரொம்பபயனுள்ள் பதிவுகளை போட்டுள்ளோம் ஆனால் எல்லாம் காணம போச்சுன்னா ரொம்ப நொந்துடுவோம்.//
ஜலீலக்காவ் இதுமாதிரி ஆகி இருக்கு அதனாலதான் போட்டேன் .

//சரியான் நேரத்தில் பிளாக்கர் களின் ந்ஞான்க் கண்ணை திற்ந்து விட்டு இருக்கிங்க நான் முன்று மாதம் முன்பு பேக் அப் எடுத்தேன்.//

இப்ப நீங்க ரீஸ்டோர் பண்ணினா அந்த மூனு மாச முன்னாடியுள்ள பதிவு மட்டுமே வரும்

//சேமித்த்தை திரும்ப கொண்டு வர வேர பிளாக் பெயர் வைக்கனுமா?//

பதிவை பத்தியா இல்லை டெம்ப்லேட் பத்தியா ?பதிவா இருந்தா இது பிளாக் இனி திறக்காதுன்னும் போது புதுசா நாம பிளாக் ஆரம்பிச்சா அப்ப ரீஸ்டோர் பண்ணும்போது பழைய பதிவு எல்லாம் வரும் . டெம்லேட்டா இருந்தா அதுக்கு வேற வழி இருக்கு .மேலே சொன்ன மாதிரி செஞ்சா அதே டெம்ப்லேட் அப்படியே வரும் . டெம்லேட் மட்டும் மாத்துனுமின்னா Expand Widget Templates ல் உள்ள பெட்டியை டிக் பண்ணக்கூடாது. வெறும் அதிலுள்ள மேட்டரை மட்டும் டெலிட் பண்ணிட்டு புதியதை காப்பி பண்ணி போட்டுட்டு பிரிவியூ பாருங்க அதில பழையது எல்லாம் காட்டும் பிடிசிருந்தா சேவ் பண்ணூங்க......

//இது இம்போட் செய்ய ஈசியான ஒரு லிங்க் தரேன் . அதையும் பதிவில் சேர்த்து கொள்ள்ங்கள்
புரியாதவ்ர்கள் அதை பார்த்து புரிந்து கொள்ளட்டும்.//
அது தமிழில் இருக்கு . நான் சொன்னது ஆங்கிலத்தில இரண்டும் ஒன்றுதான் . ஆனா அவர் டெம்ப்லேட் விசயத்தை விட்டுட்டார்.

//அது எப்படி ஓவ்வொரு பதிவு போடும் போது எடுத்து வைப்பது.//

அதாவது புது பதிவு போட்டதும் ஏன்னா பழையதுல பதிவுடன் கமெண்டும் சேவ் ஆகும் . அப்ப உங்ககிட்ட பழைய பதிவின் முழு காப்பியும் , புதியதின் புது காப்பியும் இருக்கும்.

//பிளாக்கர் பாட்டு கண்ணாதாசன் மெட்டில் ஹி ஹி//

ஹி..ஹி..நாங்களும் மொக்கைதாசன் தாங்க .ஏதோ இந்த ஊரில வந்து மாட்டிகிட்டேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@SUFFIX--//ஓ.கே ஜெ!! நல்ல தகவல், அப்பாலிக்கா செஞ்சுடுறேன். பாடுபட்டு ஒரு பாட்டு, பாராட்டுக்கள்!!//
வாங்க ஷாஃபி !! செய்யுங்க .பாடுபட்டெல்லாம் பாட்டு இல்ல இது மாதிரி மொக்கை வாய தொறந்தாவே தானா வரும் .ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Priya--//தமிழ் சினிமாவில் வரும் குடும்ப பாட்டு போல ப்ளாக்கர் குடும்பப் பாட்டை உருவாக்கிய ஜெய்லானிக்கு.... ஓரு'ஓ'போடுங்க எல்லாம்!//

ஓ..ஓஹோ.. பிளாக்கர் குடும்ம பாட்டாஆஆஆஆ..நீங்க ரொம்ப புகழ்றிங்க போக்க ஒரே வெட்கம் வெட்கமா வருது..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//எங்களப் பாத்தா உங்களுக்கு பாவமா தெரியலையா..? //

கொஞ்சம் இருக்கு அதனால இந்த அளவுக்கு விடுறேன் செந்தில். இதுக்கே தாங்காட்டி எப்படி ஹா.. ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாஸியா--//Thanks for the info! :) Should be very helpful //

நல்ல வேளை போன பதிவுல வராம தப்பிச்சீங்க. பிரியாணியில அப்ப அப்ப ஏதாவது போடுங்க .வெரும் சட்டிய பாத்துட்டு ஏக்கத்தோடு போக வேண்டி வருது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ரொம்ப சீரியசா, சிறப்பான, அவசியமான ஒரு பதிவைப் போட்டுவிட்டு வழக்கம் போல் மொக்கை கவிதை பாடாவிட்டால் ஜெய்லானிக்கு தூக்கம் வராதோ//

என்னங்க பண்றது சாதிகாக்கா இப்படியே பழகிப் போச்சி. எல்லாரும் சீரியசா போகாம சிரிச்சிகிட்டே போகட்டுமின்னுதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அக்பர்--//டிஸ்கி::: இந்த பதிவு பிளாக் ஆரம்பிக்காமல் வெறும் பிண்ணூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு இது பொருந்தாது.//

இது சூப்பர் மேட்டர் ஜெய்லானி.

ஆமா பாட்டு பட்டையை கிளப்புது.

நல்ல பயனுள்ள தக்வல் ஜெய்லானி.//

டெக்னிகல் புலி நீங்க இருக்கும் போது நான் ஒரு எலி அக்பர், கண்ணதாசன் ஆவி கூட சும்மா விடாது இந்த பாட்ட கேட்டா!! ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஆ... ஜெய்..லானி, என் போன்றோருக்கு மிக முக்கியமான பதிவு. நானும் நீண்ண்ண்ண்ண்ட நாளாக இப்படிச் செய்யோணும் என யோசித்துக்கொண்டே இருக்கிறேன் எங்கே நேரம் கிடைக்குது? ஒரு பதிவு போட நேரம் கிடைத்தாலே லொட்றி விழுந்த சந்தோசமாக இருக்கும்போது, இதுக்கெல்லாம் எங்கே நேரம்... செய்யத்தான் வேணும்.//

பாத்துங்க ஓவரா வேலை செய்யாதிங்க . உடல் நலமே முதல்ல அப்புறம் தான் மத்ததெல்லாம். அதுக்காக 24 மணிக்கும் தூங்கிகிட்டே இருக்காதீங்க

//கண்ணதாசா என்ன மண்ணிச்சிடுப்பா!!/// என்னுயிர்க் கண்ணதாசனைக்கூப்பிட்டு மன்னிப்புக் கேட்டுவிட்டதால..... பாட்டு நன்றாகவே இருக்கெனச் சொல்லிட்டுப் போகிறேன்:).//

இது போடாட்டி எந்தல தப்புமா என்ன !!பாட்டு நல்லா இல்லன்னு சொன்னாலும் தப்பு இல்ல டேக் இட் பாலிஸி ...நாம யாரு மொத்த குண்டு உருளை கிழங்காச்சே !!க்கி...க்கி.ஈ.

டிஸ்கி::: இந்த பதிவு பிளாக் ஆரம்பிக்காமல் வெறும் பிண்ணூட்டம் மட்டும் போடுபவர்களுக்கு இது பொருந்தாது. /// ஹக்...ஹக்....ஹக்...ஹாஆஆ..கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈஈ.... நீங்க எழுதின கட்டுரையைவிட இதுதான் பெஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.//

அப்புறம் அவங்க இதுல சந்தேகம் கேட்கக்கூடாதில்ல கிட்னி வேலை செய்யுதா பூஸார் எனக்கு !!

//முதல்ல ஜலீலாக்காவின் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்க ஜெய்..லானி:)...//

ஆர்டர் கிராண்டட்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Kousalya--//ரொம்ப அவசியமான பதிவு. பாட்ட அதே மெட்ல பாடி வயிறு வலி வந்துவிட்டது.....!!?//

அடிக்கடி பேக்கப் எடுங்க!! பாட்டை பாடியும் பாத்துட்டீங்களா !! பக்கத்தில அப்ப யாரும் இல்லயே !!ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய் said...

நல்ல பகிர்வு ஜெய்லானி...

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//டிஸ்கியில் எங்களை எல்லாம் எட்டி உதைத்த மாதிரி இருக்கே தலீவா!//


நாங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படரோமுன்னு புரிய வைக்கதான் அப்படி போட்டேன் பாஸ்!! வேற உள் நோக்கம் எதுவும் இல்ல..அப்படியாவது நீங்கலெல்லாம் ஒரு பிளாக் திறக்க மாட்டீங்களா என்ன !!
// இருந்தாலும் நாங்கல்லாம் அமீபா பரம்பரை, ஒன்னிலிருந்து - நான்காய், எட்டாய், பதினாறாய்...புதிய பதிவராய் உங்கள் முன் எழுச்சியுடன் வருவோம். அப்ப கண்டுங்க பாஸ்!!//

வாங்க !!வாங்க !! திறந்ததுடன் என் மெயிலுக்கு ஒரு மயில அனுப்புங்க .ரெம்ப சந்தோஷம்.. புதியவர்களை ஊக்குவிப்பதில நான் முதல் ஆள்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//கண்ணதாசா என்ன மண்ணிச்சிடுப்பா!!
மண்ணிச்சிடுப்பா:- மன்னித்தேன்.அருமையான பதிவு நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன.//

அவசரத்தில போடும் போது இது மாதிரி எழுத்துப் பிழை வந்து விடுகிறது தலைவரே. நானும் குறைக்க முயற்சி செய்கிறேன்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல்...நன்றி

இமா க்றிஸ் said...

நானும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன். தேட நேரம் கிடைக்காது. மிக்க நன்றி ஜெய்லானி. ;)

ஹேமா said...

ஐயோ....ஜெய்.பாட்டு வேறயா !

ஜெய்லானி said...

@@@ஜெய்--//நல்ல பகிர்வு ஜெய்லானி...//

வாங்க ஜெய்!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)--// நல்ல தகவல்...நன்றி //

வாங்க உலவு .சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//நானும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பேன். தேட நேரம் கிடைக்காது. மிக்க நன்றி ஜெய்லானி. ;)//

இது உங்கள மாதிரி உள்ளவங்களுக்கு ரொம்ப முக்கியம். அவசியமானதும் கூட .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஐயோ....ஜெய்.பாட்டு வேறயா !//

வாங்க குழந்தை நிலா!!,ஏன் பயப்படுறீங்க ..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சுசி said...

எப்பவோ ஒரு தடவை எடுத்து வச்சது.. அப்புறம் மறந்துட்டேன். இப்போவே செஞ்சுடறேன்.

பாட்டு சூப்பருங்க..

வேலன். said...

உங்கள் இ-மெயில் முகவரியை அனுப்பவும்:-velantkm@gmail.com வாழ்க வளமுடன்.வேலன்.

vanathy said...

ஜெய்லானி, மிக்க நன்றி. பயனுள்ள தகவல்.

எல் கே said...

illathala, wordpress just for backup from blogspot atha naan yarukkum sonnathu illa ippathan solren

அன்புடன் நான் said...

அக்கறையான... அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றிங்க ஜெய்லானி.

நாடோடி said...

அவ‌சிய‌மான‌ த‌க‌வ‌ல் ஜெய்லானி..

அன்புடன் மலிக்கா said...

//Expand Widget Templates ல் உள்ள பெட்டியை டிக் பண்ணி கீழே உள்ள பெட்டியில உள்ள எல்லாத்தையும் செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து டெலிட் பண்ணுங்க , உங்க நோட் பேடில உள்ளதை காப்பி பண்ணி இங்க பேஸ்ட் பண்ணி பிளாக சேவ் பண்ணிணால் பழைய டெம்ப்லேட் மற்றும் அனைத்து பழைய சங்கதிகளும் மின்னும்.
//

இத இததான் இப்ப செய்துவிட்டு ஒரு புதிய பதிவையும் போட்டு தமிழிஸ்லில் பதியப்போனா அங்கே அண்ணாதேவின் சவுண்ட் கேட்டது உடனே ஓடிவந்து பாத்தா. நான் செய்தமாதரியே சொல்லிக்கொடுத்துகிறீங்க.. [அடியே மல்லி உனக்கும் மூளைக்கொஞ்சம் இருக்குதான் காலரை தூக்கிவிட்டுக்கோ]

தெரியாதவங்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் பதிவை எழுதிய அண்ணாவுக்கு ஜே!!!!!!!

அப்பால சின்ன விண்ணப்பம் நிறைய மிஸ்டேக் உள்ளது எழுத்துக்களில் சரி செய்துடுங்கோண்ணா..

Prasanna said...

ஹா ஹா ஹா.. பாட்டு சூப்பரப்பு :)

கண்ணகி said...

தொழிழ்நுட்பம் தெரியாத என் போன்றவர்களுக்கு பயனுள்ள தகவல்...நன்றி..நன்றி...முயற்சி செய்து பார்க்கிறேன்.

சசிகுமார் said...

பயனுள்ள செய்தி நண்பரே , பாடலும் அருமை உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டம்ல
என்ன சார், இப்பத்தான் ப்ளாக்கே ஆரம்பிச்சு இருக்கேன், அதுக்குள்ள பேக்கபு மேக்கப்பு கொழப்புறீங்க?
ஒரு வழியா இன்னிக்கும் கடை தொறந்தாச்சு!

கவிதா said...

thankyou

கவிதா said...

கண்ணதாசன் உங்களை மன்னிசிருப்பார்
உங்க பாட்டு மிக மிக அருமை

கவி அழகன் said...

நல்ல படைப்பு

MUTHU said...

அப்போ இது எனக்கு பொருந்தாது

Asiya Omar said...

ரொம்ப உபயோகமானது.நானும் உட்கார்ந்து இந்த வேலையை முடிக்கணும்.நான் ரொம்ப லேட்,ஏன்னா எல்லாப்பின்னூட்டத்தையும் சேர்த்து படிக்கலாம் தானே.
ப்ளாக்கே மாயம் தான் இனிமே நினைவு வரும்,வாழ்வே மாயம் மறந்து போகும் போல.

ஜெய்லானி said...

@@@சுசி--//எப்பவோ ஒரு தடவை எடுத்து வச்சது.. அப்புறம் மறந்துட்டேன். இப்போவே செஞ்சுடறேன்.
பாட்டு சூப்பருங்க..//

அடிக்கடி எடுங்க சமயத்தில உதவும்.பாட்டு ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//உங்கள் இ-மெயில் முகவரியை அனுப்பவும்:-velantkm@gmail.com வாழ்க வளமுடன்.வேலன் //

அண்ணாத்தே!! அதான் என்னுடைய புரோஃபைலில் இருக்கே.!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய்லானி, மிக்க நன்றி. பயனுள்ள தகவல்.//
வாங்க!! உங்களையும் நினைத்துதான் இந்த பதிவை போட்டது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//illathala, wordpress just for backup from blogspot atha naan yarukkum sonnathu illa ippathan solren //

வாங்க !!. இதுவும் நல்ல ஐடியா. பிறகு ஏதாவது ஆனால் பிளாக் முழுசா கிடைக்கும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சி. கருணாகரசு--//அக்கறையான... அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றிங்க ஜெய்லானி.//

வாங்க சார்!! ஒரு நினைவுறுத்தல் அவ்வளவுதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//அவ‌சிய‌மான‌ த‌க‌வ‌ல் ஜெய்லானி..//

வாங்க !!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//இத இததான் இப்ப செய்துவிட்டு ஒரு புதிய பதிவையும் போட்டு தமிழிஸ்லில் பதியப்போனா அங்கே அண்ணாதேவின் சவுண்ட் கேட்டது உடனே ஓடிவந்து பாத்தா. நான் செய்த மாதரியே சொல்லிக்கொடுத்துகிறீங்க.. [அடியே மல்லி உனக்கும் மூளைக்கொஞ்சம் இருக்குதான் காலரை தூக்கிவிட்டுக்கோ]//

யக்கா நீங்க புத்திசாலின்னு நீங்க சொல்லாமலே எனக்கு தெரியும் ஹி..ஹி..

//தெரியாதவங்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் பதிவை எழுதிய அண்ணாவுக்கு ஜே!!!!!!!//
ரொம்ம்ம்ம்ப டாங்ஸுங்கோ!!

//அப்பால சின்ன விண்ணப்பம் நிறைய மிஸ்டேக் உள்ளது எழுத்துக்களில் சரி செய்துடுங்கோண்ணா.//

நானும் நிறைய முயற்சிக்கிறேன் . இருந்தும் தப்பு வருது . இதுக்கு ஒரு சாப்ட்வேர் தேடனும் வேற வழி இல்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--//ஹா ஹா ஹா.. பாட்டு சூப்பரப்பு :)//

அப்ப இதுமாதிரி மொக்கை நிறைய போடலாம்ன்னு சொல்றீங்க !!.ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கண்ணகி--//தொழிழ்நுட்பம் தெரியாத என் போன்றவர்களுக்கு பயனுள்ள தகவல்.. .நன்றி.. நன்றி... முயற்சி செய்து பார்க்கிறேன்.//

கண்டிப்பா பாருங்க !!உபயோகப்படும் . .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//பயனுள்ள செய்தி நண்பரே , பாடலும் அருமை உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வாங்க சசி!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//வந்துட்டம்ல என்ன சார், இப்பத்தான் ப்ளாக்கே ஆரம்பிச்சு இருக்கேன், அதுக்குள்ள பேக்கபு மேக்கப்பு கொழப்புறீங்க ஒரு வழியா இன்னிக்கும் கடை தொறந்தாச்சு!//

வாங்க குட்டி!! புதுசுதான நீங்க !!அப்புறமா நான் பாடிய பாட்டை நீங்க பாடக்கூடாது இல்ல அதுக்குதான் இந்த பேக்கப் அண்ட் மேக்கப் . உங்க கடைய நா அப்பவே என்னோட கடையுடன் இனைச்சாச்சு அடிக்கடி வருவேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கவிதா--// thankyou .கண்ணதாசன் உங்களை மன்னிசிருப்பார் உங்க பாட்டு மிக மிக அருமை //

வாங்க !!சீக்கிரம் நீங்களும் ஒரு கடைய திறங்க . நாங்களும் வரனுமில்ல அதுக்குதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@யாதவன்--//நல்ல படைப்பு //

வாங்க யாதவன்!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@MUTHU--//அப்போ இது எனக்கு பொருந்தாது //

இருப்பதைதான் தொலைக்க முடியும்
இல்லாததை தொலைக்க முடியாது .அதனால சீக்கிரம் ஒரு பிளாக் திறக்கவும் . நம்ம ப குட்டியே திறந்துடுச்சி அப்புறம் என்ன . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar--// ரொம்ப உபயோகமானது.நானும் உட்கார்ந்து இந்த வேலையை முடிக்கணும்.நான் ரொம்ப லேட்,ஏன்னா எல்லாப்பின்னூட்டத்தையும் சேர்த்து படிக்கலாம் தானே.//

ஏதோ சொல்லவறீங்கன்னு மட்டும் புரியுது. பத்து நிமிட வேலை இது. பின்னாடி வருத்தபடாம இருக்கலாம் நிறைய பேரோட பிளாக் இப்ப இல்ல.

//ப்ளாக்கே மாயம் தான் இனிமே நினைவு வரும்,வாழ்வே மாயம் மறந்து போகும் போல.//

ஹி..ஹி.....ஏதோ தோனுச்சி உடனே போட்டுட்டேன். வழுக்கைக்கே முடிவெட்டுவோமுல்ல.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Madumitha said...

உபயோகமான தகவல்.
மிக்க நன்றி.

மசக்கவுண்டன் said...

மிகவும் உபயோகமான தகவல்.

நாங்கெல்லாம் வாழைப்பழத்தை உரிச்சுத் தந்தாத்தான் சாப்பிடுவோம். அப்படி ஏதாவது வழி இருக்குதுங்களா? அதாவது நாங்க பதிவு போடுவோம், அது தானாகவே பேக்அப் எடுத்துக்கிட்டு வேணும்கிறப்போ திருப்பி கொடுக்கோணும். பில்கேட்ஸ் கிட்ட சொல்லி அப்படி ஒரு சாப்ட்வேர் டெவலப் பண்ணச்சொல்லோணுமுங்க.

Mahi said...

உபயோகமான தகவல்..நான் இதுவரை இதை செய்யலை..இனிமேலாவது செய்து வைக்கிறேன்.
பாட்டு..நல்லாருக்கு..ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆயிட்டீங்களோ?!

GEETHA ACHAL said...

சூப்பர்ப் பதிவு..கண்ணதாசம் வருத்த படமாட்டார்....

பனித்துளி சங்கர் said...

பாடல் கலக்கல் எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் . ம்ம் கலக்குங்க

ஜெய்லானி said...

@@@Madumitha--//உபயோகமான தகவல்.மிக்க நன்றி.//

வாங்க !! சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//மிகவும் உபயோகமான தகவல்.
வாங்க கவுண்டறைய்யா!!
நாங்கெல்லாம் வாழைப்பழத்தை உரிச்சுத் தந்தாத்தான் சாப்பிடுவோம். அப்படி ஏதாவது வழி இருக்குதுங்களா? அதாவது நாங்க பதிவு போடுவோம், அது தானாகவே பேக்அப் எடுத்துக்கிட்டு வேணும்கிறப்போ திருப்பி கொடுக்கோணும். பில்கேட்ஸ் கிட்ட சொல்லி அப்படி ஒரு சாப்ட்வேர் டெவலப் பண்ணச் சொல்லோணுமுங்க.//

உங்க கோரிக்கையை ஒபாமாகிட்டயே அனுப்பிட்டேன். பதில் வருதான்னு பாக்கலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மகி--//உபயோகமான தகவல்..நான் இதுவரை இதை செய்யலை..இனிமேலாவது செய்து வைக்கிறேன்.//

அடிக்கடி செஞ்சி வைக்கிறது நல்லது.
//பாட்டு..நல்லாருக்கு..ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆயிட்டீங்களோ?!//

அடுத்தவங்கள நூடுல்ஸாக்குறது நமக்கு வழக்கங்க ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//சூப்பர்ப் பதிவு..கண்ணதாசம் வருத்த படமாட்டார்....//

வாங்க !!அப்ப நீங்க சொன்னா சரிதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫--//பாடல் கலக்கல் எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் . ம்ம் கலக்குங்க//

வாங்க !!ஏதோ தோனியதை சட்டென்னு எழுதிட்டேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Harini Nagarajan said...

அருமையிலும் அருமையான பதிவு. மிக முக்கியமான தகவல். நன்றி :)

Anonymous said...

நான் ஸ்கிறீன் க்ரப் (வலது கீழ் மூலையில் உள்ளது) போய், சேவ், கெம்ப்ளீட் ஃப்ரேம்/பேஜ் க்ளிக் பண்ணி சேவ் பண்ணுவேன். இனிமேல் நீங்க சொன்னமாதிரி செய்றேன். சீரியஸ் பதிவில பாட்டா? கொடுமைடா.

ஜெய்லானி said...

@@@Harini Sree--//அருமையிலும் அருமையான பதிவு. மிக முக்கியமான தகவல். நன்றி :)//

வாங்க!! ரொம்ப சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அனாமிகா துவாரகன்--//நான் ஸ்கிறீன் க்ரப் (வலது கீழ் மூலையில் உள்ளது) போய், சேவ், கெம்ப்ளீட் ஃப்ரேம்/பேஜ் க்ளிக் பண்ணி சேவ் பண்ணுவேன். இனிமேல் நீங்க சொன்னமாதிரி செய்றேன்.//

நீங்க சொன்னதில டவுன்லேட் ஆகும் . ஆனா அது திரும்ப அப்லேட் ஆகாது தவிர மொத்த பதிவுகளை
அப்லோட் பண்ணவும் முடியாது. இது டோட்டல் பிளாக்கையும் டவுன்லேட் பண்ணும் .

//சீரியஸ் பதிவில பாட்டா? கொடுமைடா.//

இடுக்கண் வருங்கால் நகுக ன்னு ஒரு தாத்தா சொன்னதா நியாபகம் அதான் இப்படி அவ்வ்வ்வ்வ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடேங்கப்பா... பின்னி பெடல் எடுத்துடீங்க போங்க..
நெஜம்மா சொல்றேன்.. ரொம்ப ரொம்ப உபயோகமான தகவல்..
அதுலயும் ப்ளாக் பாட்டு இருக்கே...!! என்ன்ன்ன்ன்ன்ன்ன.... அர்த்தமுள்ள பாடல்..
செம செம தூள்.. :D :D

எப்பவும் போல கலக்கிடீங்க.. நன்றி.. :)

ஜெய்லானி said...

@@@Ananthi--//அடேங்கப்பா... பின்னி பெடல் எடுத்துடீங்க போங்க..நெஜம்மா சொல்றேன்.. ரொம்ப ரொம்ப உபயோகமான தகவல்..//

கம்யூட்டரில வைரஸ் வந்ததுக்கே கஷ்டப்பட்ட ஆள் நீங்க ,கொஞ்டம் யோசித்து பாருங்க, பிளாக் கஷ்டம் புரியும்
//அதுலயும் ப்ளாக் பாட்டு இருக்கே...!! என்ன்ன்ன்ன்ன்ன்ன.... அர்த்தமுள்ள பாடல்..
செம செம தூள்.. :D :D
எப்பவும் போல கலக்கிடீங்க.. நன்றி.. :) //

உடம்பு புல்லரிக்குதுங்கோ!!அப்ப இதுமாதிரி இன்னும் நிறைய போடவா. அப்புறம் நம் மக்கள்ஸ் ஒரு வழியா ஆயிடுவாங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

r.v.saravanan said...

ரொம்ப உபயோகமான தகவல் thanks jailaani

r.v.saravanan said...

நீங்கள் சொன்னது போல் save செய்து விட்டேன் ஜெய்லானி
எனக்கு தனி systum இல்லாததால் நான் ஆபீஸ் சிஸ்டத்தில் save செய்து
பின் அதை என் மெயில் இல் அட்டாச் செய்து எனது இன்னொரு மெயில் க்கு
அனுப்பி விட்டேன் இது சரியா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்

ஜெய்லானி said...

@@@r.v.saravanan////நீங்கள் சொன்னது போல் save செய்து விட்டேன் ஜெய்லானி எனக்கு தனி systum இல்லாததால் நான் ஆபீஸ் சிஸ்டத்தில் save செய்து பின் அதை என் மெயில் இல் அட்டாச் செய்து எனது இன்னொரு மெயில் க்கு அனுப்பி விட்டேன் இது சரியா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் //

இதுவும் ரொம்பவும் ஈஸிதான் . இருந்தாலும் யூ எஸ் பி டிரைவ் விலை மலிவாக கிடைக்கும் இந்த காலத்தில் அதில் வைத்துக் கொள்ளுங்கள் . சில நேரம் மெயில் டவுன்லோட் படு ஸ்லோவா இருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... சூப்பர் மேட்டர்ஆ இருக்கே? இப்பவே செஞ்சுடறேன்...இன்னொரு வாட்டி இதை எல்லாம் எழுதறது என்ன ஆகற வேலையா... எப்பா? நெனச்சாலே கண்ணை காட்டுதே... சூப்பர் useful போஸ்ட். தேங்க்ஸ்... அந்த பாட்டு சூப்பர்ங்க... எப்படி இப்படி எல்லாம்?

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி--//ஆஹா... சூப்பர் மேட்டர்ஆ இருக்கே? இப்பவே செஞ்சுடறேன்... இன்னொரு வாட்டி இதை எல்லாம் எழுதறது என்ன ஆகற வேலையா... எப்பா? நெனச்சாலே கண்ணை காட்டுதே... சூப்பர் useful போஸ்ட். தேங்க்ஸ்... அந்த பாட்டு சூப்பர்ங்க... எப்படி இப்படி எல்லாம்? //

முதல்ல ஒரு காப்பியாவது எடுத்து வையுங்க . ஒரு பயம் இருக்காது . பாட்டு சீரியஸ்னஸை குறைக்க போடுவது . வந்ததுக்கு கொஞ்சம் சிரித்து விட்டு போக . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

அப்பாடா பெரிய தலைவலி சரியானது போல் இருக்கு,
இதன் படி இது வரை எழுதியதை சேவ் பண்ணியாச்சு
இனி மறுப்டி போட்டு கொண்டே இருக்கும் பதிவ்வுகள். வாரம் ஒருமுறை இதே போல் இம்போட் செய்யனுமா ,
நானும் தெரிந்த தோழிகளுக்கு எல்லாம் லிங்கை அனுப்பி அவங்க அவங்க பதிவ பாதுகாத்து கொள்ள சொல்லிட்டேன்.

நான் தான் இங்கு 100 வது கமெண்டா?

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//அப்பாடா பெரிய தலைவலி சரியானது போல் இருக்கு இதன் படி இது வரை எழுதியதை சேவ் பண்ணியாச்சு//

இதை எடுக்கவே அதிக பட்சம் மூனு நிமிஷம்தான் ஆகும் . அப்புரம் பழகிடும்

//இனி மறுப்டி போட்டு கொண்டே இருக்கும் பதிவ்வுகள். வாரம் ஒருமுறை இதே போல் இம்போட் செய்யனுமா , //

வாரம் இல்லை . அடுத்த ஒரு பதிவு போட்டதும் பழையதை எடுங்க...இதுக்கு முன்ன உள்ளதை டெலிட் பன்னிடுங்க. அது தேவை இல்லை..

//நானும் தெரிந்த தோழிகளுக்கு எல்லாம் லிங்கை அனுப்பி அவங்க அவங்க பதிவ பாதுகாத்து கொள்ள சொல்லிட்டேன்.//

எத்தனையோ பேர் அக்கொவுண்டே டெலிட் ஆகி இருக்கு. இன்னைக்கு Vijis Kitchen - என்ன ஆச்சுன்னு தெரியல 25 போஸ்ட்டும் ரீ போஸ்ட் ஆகி இருக்கு...

//நான் தான் இங்கு 100 வது கமெண்டா? //

இப்ப இது 100 மேலயும் இருக்கீங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

viji en thoozi, RSS feed enRu iruppathai eppadi eduppathu enRu keedkiRaangka

இந்த லிங்கை கொடுத்து சேவ் பண்ணவும் சொன்னேன்.
அவ்ங்க பிள்ளைகளின் ஸ்கூல் டே பங்க்‌ஷனில் பிஸியாக இருக்காங்க.

டெம்ப்லேட் மாற்றும் போது ஏதோ டெலிட் ஆகி இருக்கும்.

Vijiskitchencreations said...

ஜெய் & ஜலீ நன்றி. நல்ல பயனுள்ள தகவல்கள் எல்லாருக்கும் உதவி எடுத்து சொல்வது என்பது பெரிய உதவி.

எனக்கும் ஒரு டவுட்
உங்களது வலைப்பூவின் RSS feed முகவரியாக http://feeds.feedburner.com/Vijiskitchen
வருகிறது. இது உங்கள் வலைப்பூவான Vijis Kitchen ஐ குறிப்பதல்ல.

என்ரு எனக்கு ஒரு தளத்தில் இனைக்க போகும்போது இந்த தகவல் மெயிலில் வந்தது.
இதை எப்படி சரிசெய்வது, தெரிந்தால் ஜெய் கொஞ்சம் சொல்லுங்க.

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//en thoozi, RSS feed enRu iruppathai eppadi eduppathu enRu keedkiRaangka //

இது ஒரு என்க்ரிப்ட் செஞ்ச ஒரு லிங்க் அவ்வளவுதான் . அதாவது ஷார்ட் கட் முழு விஷயம் இல்லை. அதாவது குக்கி

//இந்த லிங்கை கொடுத்து சேவ் பண்ணவும் சொன்னேன்.
அவ்ங்க பிள்ளைகளின் ஸ்கூல் டே பங்க்‌ஷனில் பிஸியாக இருக்காங்க.//

மேலே உள்ளது ஈஸியா இருக்கும். அது சர்வரில் உள்ளதை அப்படியே எக்ஸ் எம் எல் லா பேக்கப் எடுக்கும்..
// டெம்ப்லேட் மாற்றும் போது ஏதோ டெலிட் ஆகி இருக்கும்.//

டெம்லேட்டுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருப்பது மாதிரி தெரியல.. ஒரு வேளை டிராஃப்டில் உள்ளதை டெலிட் பன்னாமல் இருந்து ரீப்போஸ்ட் செய்திருக்கலாம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Vijiskitchen--//ஜெய் & ஜலீ நன்றி. நல்ல பயனுள்ள தகவல்கள் எல்லாருக்கும் உதவி எடுத்து சொல்வது என்பது பெரிய உதவி.
எனக்கும் ஒரு டவுட்
உங்களது வலைப்பூவின் RSS feed முகவரியாக http://feeds.feedburner.com/Vijiskitchen
வருகிறது. இது உங்கள் வலைப்பூவான Vijis Kitchen ஐ குறிப்பதல்ல.

என்ரு எனக்கு ஒரு தளத்தில் இனைக்க போகும்போது இந்த தகவல் மெயிலில் வந்தது.
இதை எப்படி சரிசெய்வது, தெரிந்தால் ஜெய் கொஞ்சம் சொல்லுங்க //
http://feedburner.google.com/fb/a/myfeeds இதில் பாருங்க உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும் .

டேஷ் போர்ட்>>செட்டிங்க்ஸ் >>சைட் ஃபீட் டேப்பில் பாருங்க..உங்களுக்கு தேவையானதும் கிடைக்கும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Vijiskitchencreations said...

thanks a lot jay.

ஜெய்லானி said...

@@@Vijiskitchen--//thanks a lot jay. //

வாங்க !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

பயனுள்ள இடுகை. நன்றி.

ஜெய்லானி said...

@@@புவனேஸ்வரி ராமநாதன்--//

பயனுள்ள இடுகை. நன்றி.//

வாங்க மேடம் ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

isaianban said...

யப்பா எனக்கு நல்ல பாடம் கெடைச்சிருக்கு நான் உடனேயே செய்யப்போறேன்
செய்லானி அண்ணாச்சி ரொம்ப நன்றி
(அப்பா கமெண்ட் போட்டாச்சி கண்னுதெரியும்)

Jaleela Kamal said...

ஓவ்வொரு முறையும் இந்த பதிவை தேட வேண்டியதா இருக்கு,

இந்த லின்க மட்டும் தனியாக சைடில் லேபிலில் ,பேகப் என்று (அ) டாப் பாரில் வையுங்களே....

Asiya Omar said...

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

Asiya Omar said...

சகோ.உங்க புண்ணியத்தில் இப்ப எல்லாம் தெரிஞ்சிகிட்டேன்.டெம்ப்லேட் ட்ரையல் பார்த்தாச்சு.மிக்க நன்றி.:))!

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))