Tuesday, January 19, 2010

இது தேவையா?

இரவு 10.30 மணி இருக்கும் அரபிக்கள் வாழும் ஏரியாவில் கடைதெருவின் பக்கம் நடந்து போகும் போது(குளிருக்கு டீ குடிக்க), ஒரு கடையின் வாசலின் அடுத்துள்ள கார் பார்கிங்கில் சிறுக்கூட்டம்.அந்த இடத்தில் வெளிச்சமும் கம்மி .ஒரு இளவயது ச்சுரித்தார் அழுதுக்கொண்டு இருக்க சுற்றிலும் பாக்கிஸ்தானிகலும், நம்ப முல்லை பெரியாறு தண்னீ தராத பயல்கலும் சுறுசுறுப்பாக இருக்க இதென்னடா இந்தியாவுக்கு வந்த சோதனை என்று கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்தால் காரினுல் அந்த இளவயது ச்சுரித்தாரின் சாயலில் ஒன்னோ ஒன்னரையோ வயசுள்ள குழந்தை. அது அம்மாவை பார்த்து என்னை தூக்கு தூக்கு எனறு அழ.காரின் கன்ணாடி மேலே இருக்க கார் உள்ளே பூட்டி இருக்கு.
விஷயம் இதுதான் அம்மா தன் பிள்ளையை காரினுல் விட்டு விட்டு சாவியும் இக்னீஷியனில் இருக்க கடையினுல் போய்விட்டு வரும் 2 நிமிஷத்தில் குழந்தை ஆட்டோ டோர் சுவிச்சில் கையை வைத்து தட்ட கார் உள்ளே பூட்டிக் கொண்டது. காரும் புதிய கார் என்பதால் திறக்க முயன்ற எல்லா முயற்சியும் படுதோல்வி. இந்த கலோபரத்தில் போலீசும் வந்து பார்த்து விட்டு பூட்டு திறப்பவர்க்கு போன் செய்ய அவர் டிராபிக்கில் மாட்டிகொண்டு, வர ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்ல, அவள் கணவருக்கு போன் செய்து வேறுசாவி கொண்டு வர சொல்ல அவரும் டிராபிக்கில் மாட்டிகொண்டார்.இப்போது குழந்தை ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டது.
அப்போதுதான் என் மண்டைக்குள் ஒரு மின்னல் ஏன் குணா கமலாக மாறக்கூடாது. உடனே என் மொபைல் போனை எடுத்து ஸ்கிரீனில் ஸ்கிரின்சேவரை ஓடவிட்டு விளையாட்டு காட்ட அழுகை நின்று சினேகமாக சிரிக்க, மகனே நல்ல சான்ஸ் விட்டுடாதே என்று உடனே ஆட்டோ லாக் பட்டனை சுட்டிகாட்டி தட்டசொல்ல குழந்தை சிரித்துக் கொண்டே தன் இரண்டு பிஞ்சு கைகளால் தட்டி தட்ட பட்டன் அன்லாக் ஆக உடனே வெகுவேகமாக வெளியே இருந்து கார் கதவை திறந்து விட்டேன்.குழந்தையை தூக்கி அம்மா கையில் தர,ஒரு மெகா போட்டியே வைத்திருக்கலாம்.அம்மா பிள்ளைக்கு தந்த முத்தம் எத்தனை????..’’அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்’’(எங்கொ படித்தது)அந்த உணர்சிகரமான சீனை பார்த்த போலீஸ் உள்பட அனைவருடைய கண்களிலும் ஆனந்த கண்ணீர். மூன்று நான்கு பாஷைகளில் சொன்னதின் அர்த்தம் இதுதான்.மதராஸிக்கு மூளை இருக்கு..
கேட்டதும் வெட்கமாக இருந்தது(இருக்காதா பின்ன..தமிழ்நாட்டின் அரசியல் பாவம் இவர்கலுக்கு தெரியவில்லை.)அந்த பெண் சில சலவை நோட்டுக்களை சுருட்டி என்கையில் வைத்து பஹுத் பஹுத் சுக்ரியா என்று அழுத்த ,அந்த கையை பிடித்து நறுக் என்று கடிக்கத் தோன்றியது. செய்யும் உதவிக்கு இவ்வுலகில் விலை இருக்கா? விலை இருந்தால் அதன் பெயர் உதவியா ! வியாபாரமா?நான் கேட்க, உதடுகள் துடிக்க பேச்சுவராமல் சிலையாக அவள் நிற்க.குழந்தை கைகொட்டி சிரிக்க. நான் நடந்தேன் என்வழியே...............

டிஸ்கி: 1. குழந்தைகளை எப்போதும் நமது கண்காணிப்பில் வைக்கவேண்டும்.
2.உதவி என்ற சொல்லுக்கு தவறான முன்னுதாரனமாக வேண்டாம்.

20 என்ன சொல்றாங்ன்னா ...:

goma said...

எச்சரிக்கை செய்யும் விதமாக அமைந்திருக்கும் இந்த பதிவு எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒன்று.
அழகை மட்டும் பார்த்து மக்கள் ஆபத்தில் விழுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

ஜெய்லானி said...

///அழகை மட்டும் பார்த்து மக்கள் ஆபத்தில் விழுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.///
மிகச்சரியாக சொன்னீங்க
வருகைக்கு நன்றி கோமதி.

வேலன். said...

மூன்று நான்கு பாஷைகளில் சொன்னதின் அர்த்தம் இதுதான்.மதராஸிக்கு மூளை இருக்கு.//

சூப்பர்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

அண்ணாமலையான் said...

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்..

Anonymous said...

super.....................

கிருது said...

Very good & nice மதராஸிக்கு மூளை இருக்கு.

கிருது said...

Nice & மதராஸிக்கு மூளை இருக்கு

வடுவூர் குமார் said...

செம‌ ஐடியா செய்தீர்கள்.

ஜெய்லானி said...

வருகைத்தந்த அனைவருக்கும் நன்றி...

Asiya Omar said...

ஜெய்லானி intelligent.நிகழ்ச்சி என் கண் முன்னாடி அப்ப்டியே ஓடியது.

ஜெய்லானி said...

///asiya omar said...ஜெய்லானி intelligent.நிகழ்ச்சி என் கண் முன்னாடி அப்ப்டியே ஓடியது.///

வந்ததுக்கு நன்றி.

kavisiva said...

கிரேட்!

கண்ணகி said...

அருமை...

Jaleela Kamal said...

க்ளாப்ஸ் க்ளாப்ஸ் க்ளாப்ஸ்

சூப்பர்

மூன்று நான்கு பாஷைகளில் சொன்னதின் அர்த்தம் இதுதான்.மதராஸிக்கு மூளை இருக்கு.. ஹா ஹா
நானும் அன்று ந‌ட‌ந்த‌தை அப்ப‌டியே ஓட‌ விட்டு ப‌டித்தேன்.

Jaleela Kamal said...

பேந்த பேந்த மத்த பாக்கிஸ்தானிகள் போல நிற்காமல் உடனே சார்ஜ் எடுத்தீங்க பாருங்க அங்க நிற்கிறீங்க .....நீங்க

ஜெய்லானி said...

//kavisiva

கண்ணகி

Jaleela

வருகைத்தந்த அனைவருக்கும் நன்றி

ஸாதிகா said...

கடைசியில் ஒரு பன்ச் டயலாக் கொடுத்து பரசவசப்படுத்திவிட்டீர்கள் ஜெயிலானி.இடுகையை படிக்கும் பொழுதே திகிலாகத்தான் இருந்தது.முந்தைய இடுகையைப்படிக்கும் பொழுது ஆஹா ஜெய்லானி ஐடியா மன்னராக இருப்பார் போலிருக்கே!! நல்ல காரியம் செய்தீர்கள்

ஜெய்லானி said...

@@@ஸாதிகா-- வருகைக்கு நன்றி.

Rettaival's Blog said...

நாங்க என்னமோ..இதுக்கு முன்னால ஜெயில்ல ஆணி புடிங்கிட்டு இருந்தியோன்னு தான்லே நினைச்சோம்! இம்புட்டு ஹீரோவாலே நீயி!

ஜெய்லானி said...

@@@ரெட்டைவால் ' ஸ் --வருகைக்கு நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))