Friday, January 29, 2010

அதிர்ச்சி வைத்தியம்

என்னுடைய பாஸ் மிகவும் நல்ல டைப் ஆள்.எத்தனையோ பொருளாதார வசதியிருந்தும் கூடப்பணிப்புரியும் எல்லோரிடமும் ஏற்றதாழ்வு பார்காதவர்.வீட்டில் டெக்னிக்கல் வேலை எதுவும் இருந்தால் என்னைத்தான் கூப்பிடுவார்.நாம்தான் ஆலின் ஆல் அழகு ராஸா ஆச்சே.அரபு நாட்டில் பொதுவாக இந்தியருக்கு மரியாதை அதிகம் ஏனென்றால் மற்ற நாட்டவர்கள் சொன்ன வேலையைத்தான் செய்வார்கள். நம்ம ஆள் அந்த வேலையை இன்னும் திறன்பட யோசித்து அழகாக செய்வார்கள்.( என்னது மேட்டர் டிராக் மாறுதா..சரி..)அவர் வீட்டில் அனைவருமே நல்ல குணம் (ஃபிலிப்பைனி,இந்தோனேசி உள்பட ஹி..ஹி..)
மாதுளம் பழம் என்னத்தான் பழுத்திருந்தாலும் உள்ளே ஒரு மொக்கைப்பல் கருப்பாக ஈ..என்று இளிக்கும். அதுப்போல அவருடைய சித்தப்பா(வயசு 55) பயங்கர சந்தேக பார்ட்டி.எதையுமே சந்தேகத்தோடேயே பார்பவர்க்கு கலகலபாக பேசும் என்னை கண்டால் முகம் அல்ஷேசன் நாய் மாதிரி ஆகிவிடும்.(ஒருவேளை போனஜென்மத்தில் நான் பெண்னாய் பிறந்து எனக்கு மாமியாராக இருந்திருப்பாரோ.)
வீட்டில் கரண்ட இல்லை என்றவுடன் பார்க்கபோனேன். மெயின் போர்டில் பிரச்சனை.பக்கத்தில் உள்ள லெதர் சோஃபாவின் மீதுஏறி ஆன்லைனில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது அடிக்கடி உடம்பில் ஸ்டேட்டிக் கரண்ட் ஆனது. ஒரு எல்க்ட்டிரிக் டெஸ்ட்டரால் எர்த் செய்து கொண்டே வந்தேன்.( தரையில் கால் படாமல் அல்லது நியூட்ரல் வயர் தொடாமல் லைவ் வயரை தொட்டால் அது எத்தனை வோல்டேஜில் இருந்தாலும் ஒன்றும் செய்யாது. அதேநேரம் காலில் உள்ள செருப்போ அல்லது சிறிதளவு லீக்கேஜ் இருந்தால் நமது உடல் பேட்டரி போல் சார்ஜ் ஆகிவிடும்.)இதை எல்க்ட்டிரிக் டெஸ்ட்டரால் எர்த் செய்வதுதான் சரியான முறை. முதலில் எர்த் செய்யும் போது டெஸ்டர் அதிகமாக ஒளிரும்,திரும்ப வைக்கும்போது லேசாகவும் மூண்றாவதாக ஒன்றும் இருக்காது. எர்த் செய்யாமல் நேரடியாக நாம் எதையாவது தொட்டால் நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படும்.
வேலை செய்வதை கிழம் (மாமியார்)பார்த்துக்கொண்டிருந்தார். இவரை வைத்து ஏன் காமடிபன்னக் கூடாது. உடனே செயலில் இறங்கினேன்.கீழ உள்ள ஒருஅடிநீல ஸ்குரு டிரைவரை எடுத்துக்கேட்டேன்(அரபியில்). நம்பியார் மாதிரி முறைத்து கொண்டே எடுத்து தர நானும் வடிவேலு மாதிரி முகத்தை வைத்து ஸ்குரு டிரைவரை பிடிக்க கிழம் வீல்...கத்திக் கொன்டே நாலு அடி தள்ளி விழுந்த்து.அடித்த ஷாக் அப்படி (அது திட்டிய திட்டை இங்கு எழுதினால் நீங்க ஒரே நாளில் அரபிபாஷை கத்துப்பீங்க )
அதுக்கு பிறகு நான் எப்போது அங்கே போனாலும் கிழம் மிஸ்ஸிங். கூப்பிட்டாலும் பக்கமே வராது.”சும்மாவா சொன்னார்கள்,அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பிகூட உதவமாட்டார்கள் என்று”. (தயவு செய்து இதை யாரும் முயற்சிசெய்ய வேண்டாம்.தெரிந்துக்கொள்ள மட்டுமே)
ஆமா இது டெக்னிக் பதிவா இல்லை மொக்கையா????????

5 என்ன சொல்றாங்ன்னா ...:

Jaleela Kamal said...

(அரபியில்). நம்பியார் மாதிரி முறைத்து கொண்டே எடுத்து தர நானும் வடிவேலு மாதிரி முகத்தை வைத்து ஸ்குரு டிரைவரை பிடிக்க கிழம் வீல்...கத்திக் கொன்டே நாலு அடி தள்ளி விழுந்த்து.

ஆ அந்த கிழம் என்ன திட்டிய்து மண்ட வெடிக்குது.

ஸாதிகா said...

ஐயோ..இனி எலக்ட்ரிகல் வர்க் பண்ண வருபவர்களிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள் என்று சமூகத்திற்கு நல்ல மெசேஜ் கொடுத்து விட்டீர்கள் ஜெய்லானி.பதிவு மிகவும் தமாஷாக இருந்தது!

ஜெய்லானி said...

///Jaleela said..ஆ அந்த கிழம் என்ன திட்டிய்து மண்ட வெடிக்குது//
உங்களுக்கும் என்னைத்திட்ட ஆசையா என்ன?
//ஸாதிகா said..ஐயோ..இனி எலக்ட்ரிகல் வர்க் பண்ண வருபவர்களிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள் என்று சமூகத்திற்கு நல்ல மெசேஜ் கொடுத்து விட்டீர்கள் //

மேட்டரை சரியாக புரிந்துக்கொண்டீர்கள்.வருகைக்கு நன்றி.

Asiya Omar said...

ஒரு பல்பு மாட்டனும்னாலும் பயப்ப்டுவேன்,இது வேறயா?

ஜெய்லானி said...

///asiya omar said...ஒரு பல்பு மாட்டனும்னாலும் பயப்ப்டுவேன்,இது வேறயா///

மின்சாரம் என்பது விளையாட்டு அல்ல.. வருகைக்கு நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))