Saturday, January 30, 2010

பகைவனை நன்பனாக்கும் வழி

தலைப்பை பார்த்தவுடன் யாருக்குத்தான் ஆசையிருக்காது.நாம இதுக்கு முன்னே பார்த்தேயிருக்காத (உதாரணம்)இரண்டு பேரில் ஒருவரை பார்த்ததுமே பேச ஆசையாஇருக்கும். மற்றவரிடம் அத்தனை ஸ்நேகம் இருக்காது. சிலநேரம் வெறுப்பாகவும் இருக்கும்.முதலாமவர் நமது உள்ளத்தில் ஆட்சிசெய்யும் எண்ணத்தை போலவே அவருக்கும் இருக்கும்.இரண்டாமவர் அதற்கு நேர்மாறான எண்ணம் கொண்டவர்.
நம்முடைய நண்பர்கள்(சொந்தம்+பந்தம்)சிலர் மீது அதிகமான அன்பு செலுத்தவும் வேறு சிலர் மீது குறைவான அன்பு செலுத்தவும் என்ன காரணம். அவர்கள் உங்கள் மீது எப்படி அன்பு செலுத்துகின்றார்களோ அதுக்கேற்றமாதிரி உங்களை அறியாமலே நீங்கள் அவர்கள் மீது அன்பு செலுத்துவது தான்.சிலப்பேரிடம் எந்த கொடுக்கல் வாங்கலும் இருக்காது. இருந்தாலும் அந்த ஆளை பார்த்ததும் இவன்(ள்) ஆளே சரியில்லை பொறாமை பிடித்தவன்(ள்) சொல்ல காரணம் அவர்கள் நீங்க நல்லா வாழ்வதைக் கண்டு மனசுக்குள்ளேயே பொறாமை தான். அது உங்களுக்கு தெரியாது என்று நினைத்து மனதில் பொறாமை கொள்வதுதான்.ஆனால் எண்ண அலைகள் வெளியேறி உங்கள் உள்மனதை தொட்டு உங்களையறியாமலெயெ அவரை வெறுக்க செய்துவிடும்.
அதனால் பகைவனை நன்பனாக்குவதும் நன்பனை பகைவனாக்குவதும் நம் மனம்தான். அதனாலே பகைவனை நீங்க உள்ளன்போடு நேசித்தால் (இருங்க..அடிக்க கையை ஓங்க வேண்டாம்..)அவன் உங்க நண்பனாகிவிடுவான். நண்பன் மீது வேண்டாவெறுப்பாக போலியாக அன்பு செலுத்தவோ மனசுக்குள்ளே வெறுத்தாலோ ரொம்ப சீக்கிறம் எதிரியாகிவிடுவான். நீங்க நேர்ல அவனை திட்டவோ ஏசவோ தேவையில்லை.
-----------------------------------------------------------------------
இப்போ பகைவனை நன்பனாக்கும் வழி>> முதல்ல நமக்கு யாரை பிடிக்கவில்லையோ மனவருத்தமோ அவரை பற்றி நினைப்பை கொஞ்ஜ நேரம் மறக்கமுயற்சி செய்யவும். எப்படி >> பேப்பர் படிக்கலாம், குழந்தைகள் இருந்தால் கொஞ்ஜி விளையாடலாம்...(என்னுடைய கோபமா..உங்களுக்கு பதிவை படிக்கலாம் )இப்படியே நாலுநாள் போகட்டும். பிறகு அவனிடம் உள்ள ஏதாவது நல்ல குணத்தை பாருங்கள் (என்னதான் போக்கிரியாக இருந்தாலும் அவன் மனைவியிடம் அல்லது குழந்தைகளிடம் அன்பாக இருந்திருப்பான், யாருக்காகவும் எதுவும் கொடுத்து உதவியிருப்பான், இப்படி..) இதை ஒரு நாலு நாள் யோசனை பன்னிப்பாருங்கள். இப்போது அவனை பற்றிய கெட்ட எண்ணம் உங்கள் மணதில் இல்லை ஓக்கே....>.நேரில் பார்க்கும் சந்தர்பம் வரும் போது பாருங்கள் மாற்றத்தை. அவனே உங்களை பார்த்து புன்னகை புரிவான் தேவை பட்டால் மன்னிப்பே கேட்பான் உங்களிடம். நீங்களே ஆச்சிரியப்படுவீங்க.
இதே போல் மனைவியிடம் சும்மாவாவது புகழ்ந்து பாருங்கள். பதிலுக்கு அவர்கள் காட்டும் அன்பின் மழையில் திக்குமுக்காடிப்போவீர்கள். உங்கள் வாழ்க்கை டிராக்கே மாறிப்போகும். உண்மையிலெயே லவ் பண்ன ஆரம்பித்துவிடுவீர்கள். வாழ்க்கை இனிமையாக போகும்.
---------------------------------------------------------------------------
நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒரு பாக்கிஸ்தானி என் குருப்பில் இருந்தார்.அவர் பழைய டெக்னால்ஜி , நானோ மாடல் டெக்னால்ஜி ,தினமும் பாஸிடம் என்னை பற்றி கம்ப்ளைண்ட். (அவருக்கு வேலை போய்விட்டால் என்னசெய்வது பயம் ) பாஸும் கால்மணி நேரம் விசாரனை.நானும் பொருமையாக பதில் சொல்வேன் ஆனால் அவரைப்பற்றி எதுவும் கம்ப்ளைண்ட் செய்வதில்லை. இப்படியே ஒருமாசம் போனது. பாஸும் வெறுத்துப்போய் ஒருநாள் அவரை திட்டி இனி என்னைப்பற்றி கம்ப்ளைண்ட் செய்தால் உனக்கு நோட்டீஸ்தான் கிடைக்கும் என என் முன்னாலெயே விரட்டி விட்டார். பாக்கிஸ்தானியும் என்னதான் அடிச்சாலும் இவன் தாங்குரானே ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்ன்ன்ன்னு. அதன் பிறகு இரண்டு பேருக்கும் நடுவில் நல்ல நட்பு. அது பத்து வருடமாக இன்னும் தொடர்கிறது..ஆனால் நான் அவசரபட்டு இருந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகி இருவர் பெயருமே கெட்டிருக்கும்.
என்னது பயபுள்ள சொல்வது சரிதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

15 என்ன சொல்றாங்ன்னா ...:

அண்ணாமலையான் said...

நல்ல அனுகுமுறை

வேலன். said...

சூப்பர் கருத்துங்க...அப்படியே தமிழில் தவறுகளை குறைச்சுக்குங்க...(தப்பா சொல்லியிருந்தா மன்னிக்சுக்குங்க)
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஜெய்லானி said...

//அண்ணாமலையான் said...
நல்ல அனுகுமுறை///
நன்றி வாத்தியாரே..(ஆமா நீங்க சிதம்பரமா?, சென்னையா?)

///வேலன். said...
சூப்பர் கருத்துங்க...அப்படியே தமிழில் தவறுகளை குறைச்சுக்குங்க. )///
கருத்துக்கு நன்றி .முயற்சி செய்கிறேன்.

நாஸியா said...

நல்ல விஷயத்தை சொல்லிருக்கீங்க.. ஜஸகல்லாஹு க்ஹைர்.

குரானில் நமக்கு ஒரு நல்ல படிப்பினை இருக்கு.. நீங்களும் செஞ்சது தான்: மன்னிப்பு.. எப்படி நாம இறைவனிடத்துல பாவ மன்னிப்ப தேடுறோமோ அதே போல நமக்கு பாவம் செஞ்சவங்களையும் மன்னிச்சு விடுறது நிச்சயமா அல்லாஹ் சுப்ஹானவதாஆலவிடம் நம்மை உயர்த்தும்..

அஷ்‍ஷு'ரா (42 ஆவது அத்தியாயம்)

(36)ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும். (37) அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (38) இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

ஜெய்லானி said...

///நாஸியா said...
நல்ல விஷயத்தை சொல்லிருக்கீங்க.///
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
குரானை நினைவுப் படுத்தியதற்கு மிகவும் நன்றி.எத்தனை முறை (தமிழில் )படித்தாலும் (ஓதினாலும்) புதியது போலவே தோன்றும் .அதுதான் அல்குர் ஆனின் மகிமை.
உங்கள் வருகைக்கு நன்றி..

Prapa said...

நம்ம பாக்கமும் கொஞ்சம் பார்வைய செலுத்துறது...

ஸாதிகா said...

அழகிய அலசல்!!!

Sakthi said...

yethavathu vali iruntha sollunga pakkathu naatayum natpu naada maatha..

ஜெய்லானி said...

பிரபா-- இனி நிறையவே பார்கிறேன் ok....
ஸாதிகா---வருகைக்கு நன்றி.
சக்தியின் மனம் --ஒருத்தருடைய குறையை மன்னித்தல் என்பது முற்றுப் புள்ளி.தோண்டிக்கொண்டே இருந்தால் அது கமா,,,,,,,

ஹுஸைனம்மா said...

அட, நீங்க எழுத ஆரம்பிச்சுட்டீங்களா? என்ன எழுதன்னு தெரியலன்னு சொல்லிருந்தீங்களே, அப்பப் பாத்தது, அப்புறம் இப்பத்தான் பாக்கிறேன். நல்லாருக்கு. மாஷா அல்லாஹ்.

Jaleela Kamal said...

அட‌ ஒரு மாத‌மா பொறுமையா இருந்த‌ நீங்க‌ நெச‌மாவே ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ர்

ந‌ல்ல‌ ப‌திவு

Jaleela Kamal said...

கோபம் பற்றியும் ரொம்ப நல்ல யோசனை.

ஜெய்லானி said...

ஹுஸைனம்மா said...
ஏதோ கத்துக்குட்டிதனமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.நீங்க வந்ததற்கு நன்றி....
///Jaleela said...
அட‌ ஒரு மாத‌மா பொறுமையா இருந்த‌ நீங்க‌ நெச‌மாவே ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ர்///

என்னை வச்சி நீங்க காமடிகீமடி பன்னலை இல்லை.

Asiya Omar said...

இதுவும் நல்ல தான் இருக்கு.

ஜெய்லானி said...

//asiya omar said...இதுவும் நல்ல தான் இருக்கு.//

இது மாமியார் மருமகளுக்கும் பொருந்தும். உங்கள் வருகைக்கு நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))