Sunday, January 24, 2010

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கான புதிய சட்டம்

துபாய் : சவுதி அரேபியா சென்று பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், பணியாளர் விசா பெற, போலீசாரின் தடையின்மை சான்றிதழ் பெற்று (கிளியரன்ஸ் சர்டிபிகேட்) சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, "அரபு நியூஸ்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:சவுதி அரேபியாவில் பணியாற்ற விசா பெற விண்ணப்பிக்கும் இந்தியர்கள் அனைவரும், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு முன், போலீசாரின் தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்றும்படி, இந்தியாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு பணி நியமன நிறுவனங்கள் ஆகியவை, இந்த புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என, டில்லியில் உள்ள சவுதி தூதரகம் மற்றும் மும்பையில் அமைந்துள்ள துணை தூதரகம் ஆகியவையும் கேட்டுக் கொண்டுள்ளன.
"இந்த புதிய சட்டத்தால், குற்றப்பின்னணி உடையவர்கள், சவுதி அரேபியாவிற்கு வருவது தடுக்கப்படும்' என, பணி நியமனம் செய்யும் நிறுவனம் ஒன்றின் மேலாண்மை இயக்குனரான இப்ராஹிம் குட்டி என்பவர் தெரிவித்தார்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ""இந்தப் புதிய சட்டம் இரு நாட்டு ஒப்புதலின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே, சவுதிக்கு வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தலாம்'' என்றார்.

நன்றி : தினமலர்

ஏதோ இப்போதுதான் இந்த சட்டம் வந்ததுபோல் தமிழ் நாட்டு பத்திரிக்கைகளும்,மற்ற ப்ளாகிலும் நிறைய செய்திகள்.உண்மையிலேயே இந்த சட்டம் வந்தது 1993ம் வருடம் ஆகஸ்ட் 19ம் தேதி.. நான் மும்பை(அப்போது பாம்பே)யில் இண்டர்வியூ முடிந்து விசா சப்மிட் ஆன அதேதினம் இந்த சட்டம் வந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் மெட்ராஸ் திரும்பி வந்தேன்.(3 மாசம் முடிந்து பிறகு ரியாத் போனது தனிக்கதை)
P.C.C.(போலிஸ் க்ளியரன்ஸ் சர்டிபிகேட்) இது நீங்கள் எங்கு பாஸ்போர்ட் எடுத்தீர்களோ (மெட்ராஸ்,திருச்சி)நேரடியாக ஒருஜினல் பாஸ்போர்டுடன் அப்ளிகேசன் +பணம்(1993 ல் 100ரூபாய்) தந்தால் 2 நாளில் ( பாஸ்போர்ட் கடைசிப்பக்கம் ஒரு சீல் + ஒரு துண்டு பேப்பர் ) கிடைக்கும்..
புதிதாக பாஸ்போர்ட் எடுப்பவர்கள் கூடவே இந்த P.C.C.(போலிஸ் க்ளியரன்ஸ் சர்டிபிகேட்) எடுத்து வைத்துக் கொண்டால் பிறகு நாய் அலைச்சல் பேய் அலைச்சல் இருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

2 என்ன சொல்றாங்ன்னா ...:

பித்தனின் வாக்கு said...

நல்ல அறிவுறுத்தல் பதிவு. நல்ல சட்டம் ஆனால் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதால் இதன் பயன்பாடு பயனற்றுப் போகின்றது. ரூபாய்களில் குற்றப் பின்னனி மறைக்கப் படும் அபாயம் உள்ளது. நன்றி. உடனடியாக உங்கள் வலைப்பதிவுக்கு பாலோயர் போட முடியவில்லை. கூகிளாண்டவரில் எதோ பிரச்சனை போலும் சரியானவுடன் வருகின்றேன். நன்றி.

ஜெய்லானி said...

///பித்தனின் வாக்கு said...
நல்ல சட்டம் ஆனால் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதால் இதன் பயன்பாடு பயனற்றுப் போகின்றது.///
உண்மைதான் சட்டம் எப்போதுமே பணத்திற்குதான் சல்யூட் அடிக்கும்
தங்கள் வருகைக்கு நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))