Wednesday, January 27, 2010

கோபமா! உங்களுக்கா!!

கோபம் என்பது சாதாரணமாக எல்லோருக்குமே வரும்.கோபத்தில் இரண்டு வகை இருக்கிறது.அதில் முதல் வகை ஒருவரை அன்பினாலோ,நட்பினாலோ அல்லது இவள் அல்லது இவர் தன்னுடையவள்(வர்)என்ற உரிமையிலேயே வருவது. மற்றது காரணம் இல்லாமல் வருவது யார் மீதாவது உள்ள கோபத்தை யாரிடமாவது காட்டுவது. கோபம் உலகில் சாதித்ததை விட அழித்ததே அதிகம்.அப்படிப்பட்ட கோபத்தை குறைக்க சில வழிகள் இதோ...
1.பதிலே பேசாமல் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடுதல்.(எதிராளிக்கு உங்கள் கோபம் புரிந்து விடும்)
2.வெளியே போக முடியவில்லையா ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.(அதன் பலன் உடனே தெரியும்.முயற்சி செய்து பாருங்கள்)
3.ஒரு பேப்பர் எடுத்துக்கொண்டு உங்களுக்கு யார்மேல் கோபமோ அவர்களை திட்டி, திட்டி எழுதுங்கள்.பிறகு அந்த பேப்பரை கிழித்து விடுங்கள்.
4. அந்த நேரம் கண்ணாடியில் உங்கள் முகத்தை பாருங்கள்.(இரண்டு,மூன்று தடவை இப்படி செய்தால் வாழ்கையில் அதன் பிறகு கோபமே படமாட்டீர்கள்.
5.வெது வெதுப்பான தண்ணீரில் தலை குளித்தால் கோபம் தணியும்.
6.பிடித்த பாடலை மெதுவாக ஹம்மிங் செய்யுங்கள்.
கோபம் (உடல் ரீதியாக )ஏன் வருகிறது.செரிக்காத உணவு வகை, நேரந்தவரிய உணவு பழக்கம்.அஜீரணக்கோளாறு (மலச்சிக்கல் அதைத்தொடர்ந்து வரும் மூலவியாதி)அடுத்தவர் பிரச்சனையில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது.(டீவியில் சீரியல் பார்பது)
பெண்கள் மாதவிலக்கு வரும் தினத்திற்கு முன்னே கண்ட கண்ட வலிநிவாரணிகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு ஒரு வாரத்திற்கு முன்பாக இருந்தே, தினமும் கசகசா அரை டீஸ்பூன் எடுத்து அரைத்து,அதைப் பாலில் கலக்கிச் சாப்பிட்டால் வலி போயே போச்!!..
இதை ஏன் இங்கு குறிப்பிட்டேன் என்றால் பெண்களுக்கு மனவலிமை குறையும் இந்த நேரத்தில் வலியும் சேர்ந்துக்கொண்டால் வரும் கோபத்தில் அந்த வீடு நரகமாகிவிடும்.(சாப்பாட்டில் உப்பு, காரம் ஏற்ற இறக்கம்)

இதைப்படித்த உங்களுக்கு கோபம் வருதா!!!.அப்ப இந்த பதிவு முக்கியமா உங்களுக்குதான் திரும்பவும் முதலிலிருந்து படியுங்கள்..

10 என்ன சொல்றாங்ன்னா ...:

அண்ணாமலையான் said...

ட்ரை பண்னுவோம்.

வேலன். said...

//இதைப்படித்த உங்களுக்கு கோபம் வருதா!!!.அப்ப இந்த பதிவு முக்கியமா உங்களுக்குதான் திரும்பவும் முதலிலிருந்து படியுங்கள்//.ஃ

அருமை நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஜெய்லானி said...

///அண்ணாமலையான் said...
ட்ரை பண்னுவோம்///
முயற்சித்தால் எல்லாமே கூடி வரும்.தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

///வேலன். said..அருமை நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்///
மிக்க நன்றி.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

ஜெய்லானி said...

///முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.///
வாழ்த்துக்கள்.!!!!!!!

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் ஜெய்லானி சூப்பர் டிப்ஸ்.


//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில் கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//


ஹா ஹா நான் சொல்லி பூட்டேன் , ரொம்ப சிரிச்சாச்சு

ஜெய்லானி said...

//Jaleela said...
வாழ்த்துக்கள் ஜெய்லானி சூப்பர் டிப்ஸ்//

உங்களால்தான் எழுதவே ஆரம்பித்தேன். ரொம்பவும் நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல டிப்ஸ் சார்...

ஜெய்லானி said...

பட்டாபட்டி.-- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!!

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))