அதிகாலையில் நெட்-ஐ திறந்த்தும் இடிபோல செய்தி துபாயிலிருந்து மங்களூர் போன விமானம் தரை இறங்கிய நேரத்தில் வானிலை காரனமாக ஏழு கிலோ மீட்டர் வரை இழுத்துப் போய் மலையில் மோதியது , அதில் பயணம் செய்த 158 பேர் பலி.
வாழ்க்கையில் மனிதன் தன் சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு பிரிந்து , வாழ்கையில் கிடைக்கும் ஓரிரு மாத விடுமுறையில் போகிறான் .பிரிவின் வலி பிரிந்தவருக்கே புரியும் . விடுமுறைக்கு அப்ளை பண்னிய நாளிலிருந்து சந்தோஷம் கொடிக்கட்டி பறக்கும் . விரும்பியவருக்கு விரும்பியதை வாங்கிதர அலையும் அலைச்சலும் சுகமாய் இருக்கும்
வரும் நம்மை விட ஊரில் உள்ள பெற்றவர்களும் மனைவியும் குழந்தைகளும் நாம் ஊர் வரும் நாட்களை எண்ணிக்கொண்டு நேரம் போகாதா என நாள் காட்டியையும் மணியையும் பார்த்து உறக்கம் வராத நாடகள் எத்தனை.
மொபைல் போன் கலாச்சாரமாக மாறியதால் ஏர் போர்ட் போவதிலிருந்து விமானம் கிளம்பும் நேரம் வரை பேசிய பேச்சுக்கள எத்தனை எத்தனை..... தனிமையில் வருடங்கள் சில போனாலும் சில மனிநேர பயணம் தவிப்பாய் அல்லவா போகிறது.
இதோ அன்பான செய்தி இன்னும் சில மணித்துளியில் நாம தரை இறங்கப்போகிறோம் .இதயம் கட்டுக்கடங்காமல் துடிக்கிறது . நம் உறவுகள் யார் வெளியே காத்திருப்பார்கள் , அன்பான துனைவியா , நம் குழந்தைகளா , ஊட்டி வளர்த்த தாய் தந்தையா , நட்பு வட்டமா..
ஏன் எதற்கு என்ற விடை தெரியும் முன் மரணம். வெளியே ஆசையோடு காத்திருந்தவர்களுக்கு இடிச்செய்தி வருடம் முழுதும் காத்திருந்தவர்களுக்கு
இனி வாழ்க்கை முழுதும் காத்திருப்பா ?? யாரை குறை சொல்வது. நினைக்கவே மனம் வலிக்கிறது . கண்ணீர் பெருகுகிறது . ஏதோ ஒரு இடத்தில் இந்த செய்தி இருந்தும் நம் மனம் ஏன் விம்முகிறது. மனிதம் இன்னும் சாகவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு இதய அஞ்சலி
“இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் “ (இறைவனிடமிருந்து வந்தோம் அவனிடமே திரும்ப வருபவர்களாக இருக்கிறோம் )
9 என்ன சொல்றாங்ன்னா ...:
////மனிதம் இன்னும் சாகவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு இதய அஞ்சலி..யாரை குறை சொல்வது. நினைக்கவே மனம் வலிக்கிறது .../// பிரார்த்திப்போம்
May their souls rest in peace....
Our sincere prayers for the grieving family members.
விதி வலியது என்றாலும் இது மாதிரி ஏன் நடக்கிறது என்பதற்கு எந்த மதத்திலும் சரியான விளக்கம் இல்லை.
//மனிதம் இன்னும் சாகவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு இதய அஞ்சலி//
வருத்தமான நிகழ்வு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு இறைவன் சாந்தியும் சமாதானமும் வழங்கட்டும். இனியும் இது போல நடக்காது ஏர் இந்தியா நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
எனது மன இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் இறந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இறைவன் பொறுமையை கொடுப்பானாக!
நெஞ்சை பிழிந்த சோக நிகழ்வு... இன்னும் வழித்து கொண்டிருக்கிறது.... எல்லாம் வல்ல இறைவன்... உயிரிழந்த அனைவரின் பிழை பொருத்து, மறுமையில் அவர்களுக்கு மிக சிறப்பான அந்தஸ்தை வழங்குவானாக... உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு இவ்விழப்பை தாங்கக்கூடிய சக்தியையும் பொறுமையையும் கொடுப்பாக... ஆமீன்...
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))