Saturday, May 1, 2010

யூ எஸ பி ரீட் ரைட் ஆகாவிட்டால்


        இந்த வாரமாவது கும்பகர்ண்ணை மாதிரி தூங்கி ரெண்டு லீவு நாளையும் அழகா அனுபவிக்கலாம்ன்னு பாத்தால்  காலைல அதுவும் விடிகாலை  ஒம்போதரை மணிக்கு போன் அடிக்குது ,

         நம்ம அமீர் பய  மாப்பு எங்கடா இருக்கேன்னு கேட்டான். நா சொன்னேன் அபிதாபின்னு, அவனும் அப்ப அபிதாபியா ? எப்படா வருவ ஜார்ஜாவுக்கு ஏன் ?. நா வர ரெண்டு நாளாவும். அப்ப... சரி உன் ரூமில் தங்கிட்டு.... உன்னை பாக்காம நா போவ் மாட்டேன்னான்.

      இதென்னடா கொடா கண்டனா இருக்கானேன்னு. யோசிட்டு ரூமை விட்டு .வெளியே வந்தேன். அவனை உடனே இடத்தை காலி பண்ண வச்சா முப்பது திர்ஹமோட போகும் .தங்கிட்டா தக்காளி ரெண்டு நாள் என் அக்கவுண்ட் முன்னூறு திர்ஹம் காலி பண்ணாம சனி விடாது . முப்பது பெரிசா முன்னூரு பெரிசா

      விசயம் இதுதான் மாப்பி ஒரு யூஎஸ்பி 64 gbக்கு வாங்கி வந்திருக்கான். புதுசு ஆனா அது ரீட் ரைட் ஆகல . ஃபார் மேட்டும் ஆகல. நீதான் நல்லா ஆணி புடுங்குவியே  கொஞ்சம் பாருன்னான்  நல்லா தான் புரிஞ்சி வச்சிருக்காய்ங்க நம்மல )
 
       அதை என் சிஸ்டமில் போட்டதும் ஜோரா வேலை செஞ்சது. அப்பதான் எனக்கு சந்தேகம் வந்துச்சி  ஒரு வேளை இரண்டு நாளைக்கு தங்க ஐடியாவா ?. ஏண்டா ஏன் நல்லா தானே வேலை செய்யுது. அப்புறம் ஏன் ?

        அவனுடைய லேப்டாப்பை தந்தான் இப்ப இதுல போட்டு பாரு !!. அட ஆமா.ரீட்ரை பட்டனை ரிலீஸ் பண்ணுன்னு மெசேஜ் வந்துச்சி .  கம்ப்யூட்டரை செக் பண்ணியதுல வைரஸ் இல்லை. ஒரு வேளை வந்துட்டு போயிருக்கலாம் . ஒரு சின்ன வேலை செஞ்சதுல . சூப்பரா யூஎஸ்பி ஓடுச்சி .அவனையும் அப்பவே ஓட வச்சேன்.

       விஷயம் இதுதான் மக்களே உஷாரா பாருங்க!! ரெஜிஸ்டிரில ஒரு சின்ன மாற்றம் நாம இப்ப செய்ய போறது. முதல்ல அதை ஒரு பேக்கப் எடுத்து வைப்பது நல்லது. ஏன்னா இது நரம்பு மண்டலம் மாதிரி. ஏதாவது தப்பு நடந்தா மொத்த கம்ப்யூட்டரையும் பாதிக்கும்

       முதல்ல   Start >  Run >  பாக்ஸ்ல regedit ன்னு எழுதி Enter தட்டுங்க . உங்களுக்கு வரும் பார்மில் மேலே File இதில் கிளிக்கி Export  பட்டனை தட்டி பைலுக்கு புது பேர் குடுத்து டெஸ்க் டாப்பில் சேவ் பண்ணுங்க். ஏதாவது எசகு பிசகா மாட்டிகிட்டா இதை டபுள் கிளிக்கி ரீஸ்டோர் பண்ணலாம்.  இதுக்கு ரிஜிஸ்டரி பேக்கப்புன்னு பேரு. இப்ப அசல் மேட்டருக்கு வருவோம்.

     இதில்  My Computer \HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies ன்னு தொடர்ந்து கிளிக்கிகிட்டே வாங்க . இதில எதிர் புறம் இரண்டு வரி இருக்கும் ஒன்னு டிபால்ட் , இது நமக்கு வானாம்  அதுக்கு கீழே ரைட் புரொடக்ட்ன்னு இருக்கும் .இதை இரட்டை கிளிக் பண்ணி அதன் வேல்யூவை 0ன்னு வையிங்க. இப்ப ஓக்கே குடுத்துட்டு வெளியே வந்து  பழைய படி

      இதில My Computer \HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Control\StorageDevice Policies ன்னு தொடர்ந்து கிளிக்கிகிட்டே வாங்க . இதில எதிர் புறம் இரண்டு வரி இருக்கும் ஒன்னு டிபால்ட் , இது நமக்கு வானாம்  அதுக்கு கீழே ரைட் புரொடக்ட்ன்னு இருக்கும் .இதை இரட்டை கிளிக் பண்ணி அதன் வேல்யூவையும் 0ன்னு வையிங்க. இப்ப ஓக்கே குடுத்துட்டு வெளியே வந்து  ரெஜிஸ்டிரி எடிட்டரை மூடுங்க.

        கடைசியா யூஎஸ்பியை  வெளியே எடுத்துட்டு திரும்ப மாட்டுங்க இப்ப ஜோரா வேலை செய்யும். இது செய்ய தெரியாட்டி கம்ப்யூட்டரை ஃபார்மேட் செய்வதை தவிர வேற வழியில்லை. அதனால கவனமா செய்யுங்க.


      நண்பர்கள் யாரும் இதுக்கு முன்னே செய்திருந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கலாம் .

74 என்ன சொல்றாங்ன்னா ...:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான தகவல்கள்..

பாரணை முடிச்ச:) அதிரா said...

ஆ.. ஜெய்..லானி,
இம்முறைதான் விடுமுறை நாள்ல ஒழுங்கான விஷயம் செய்திருக்கிறீங்க, கிட்னியை யூஸ்பண்ணி நல்ல தகவல் வெளியிட்டிருக்கிறீங்க. ஆனால் இதைச் செய்யப்போய் ஏதாவது ஏடாகூடம் நடந்திட்டால்(எங்கட PCக்குத்தான்), உடனே வருவீங்களோ திருத்திவிட?

vanathy said...

ஜெய்லானி,
//கம்ப்யூட்டரை செக் பண்ணியதுல வைரஸ் இல்லை. ஒரு வேளை வந்துட்டு போயிருக்கலாம்.//
நிஜமாவா?? எங்கையாவது ஒளித்திருந்து விட்டு மீண்டும் வரும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. டாக்டர் பட்டம் ஏதாவது வாங்கிட்டீங்களா?..
Format பண்றதை ஒரு தவம் மாறி பண்ணனும்.. அதுக்கும் வெச்சுட்டுங்களே ஆப்பு..
ஹி..ஹி

டமாசு..

நல்ல பதிவு.. மீண்டும் வருவான் பட்டாபட்டி..( கொஞ்ச நாள, தனிமனித தாக்குதல்னாவே பயமாயிருக்கு ஜெய்லானி..)

Chitra said...

Present!!!

சைவகொத்துப்பரோட்டா said...

தகவலுக்கு நன்றி ஜெய்லானி.

எல் கே said...

a good informative one. you can try changing the write protect by right cliking the pen drive icon and going to properties :)

நாடோடி said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல் ஜெய்லானி....

GEETHA ACHAL said...

எப்படி ஜெய்லானி...இது ஜெய்லானி ப்ளாக் தானே...வேறு எதாவது கம்பூயூட்டர் ப்ளாக் பக்கம் வந்துவிட்டேனே என்று நினைத்துவிட்டேன்..(சும்மா கிண்டலுக்கு...நம்ம ஜெய்லானி தானே...)...அருமையான சூப்பரான தகவல்...நன்றி...

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//அருமையான தகவல்கள்..//

வாங்க வாத்யார்.!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஆ.. ஜெய்..லானி,இம்முறைதான் விடுமுறை நாள்ல ஒழுங்கான விஷயம் செய்திருக்கிறீங்க, கிட்னியை யூஸ்பண்ணி நல்ல தகவல் வெளியிட்டிருக்கிறீங்க.//

எங்கங்க சரியாவே தூக்கம் இல்ல , காலையில ஒம்பதரை மணிக்கே எழுப்பி விட்டா

//ஆனால் இதைச் செய்யப்போய் ஏதாவது ஏடாகூடம் நடந்திட்டால்(எங்கட PCக்குத்தான்), உடனே வருவீங்களோ திருத்திவிட?//

அதாவது யூஎஸ்பில ரைட் புரொடக்ட் ன்னு எச்சரிக்கை செய்தி வரும் , ஆனால் யூஎஸ்பில ரீட் ஒன்லி பட்டன் எதுவும் இருக்காது. ஃபார்மட்டும் ஆகாது. அப்ப பண்ணவேண்டியது இது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய்லானி,
//கம்ப்யூட்டரை செக் பண்ணியதுல வைரஸ் இல்லை. ஒரு வேளை வந்துட்டு போயிருக்கலாம்.//
நிஜமாவா?? எங்கையாவது ஒளித்திருந்து விட்டு மீண்டும் வரும். //

இல்லை, போகிற போக்கில மாத்தி விட்டுட்டு போயிடுசி. அந்த கம்ப்யூட்டர்ல எந்த யூஎஸ்பியை போட்டாலும் அதே எர்ரர் காட்டுச்சி. அப்பதாங்க இந்த வைத்தியம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//ஏண்ணே.. டாக்டர் பட்டம் ஏதாவது வாங்கிட்டீங்களா?. Format பண்றதை ஒரு தவம் மாறி பண்ணனும்.. அதுக்கும் வெச்சுட்டுங்களே ஆப்பு..ஹி..ஹி டமாசு..//

Formatக்கு கடையில எப்படியும் 100 திர்ஹம் வாங்கிடுவான், நாம எல்லாத்தையும் செய்ய ஆரம்பிச்சா அரைநாள் தண்டமா போகும். அதான் தல இப்படி.

//நல்ல பதிவு.. மீண்டும் வருவான் பட்டாபட்டி..( கொஞ்ச நாள, தனிமனித தாக்குதல்னாவே பயமாயிருக்கு ஜெய்லானி..) //

எதையும் தாங்கும் இதயம் இருக்கனும்.அதுதான் அடி வாங்க மங்கு இருக்கே ஏன் பயம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--// Present!!! //

குட்,சந்தோஷம் , அட்டனன்ஸ் போட்டாச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//தகவலுக்கு நன்றி ஜெய்லானி. //

வாங்க!! சந்தோஷம் , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//.a good informative one. you can try changing the write protect by right cliking the pen drive icon and going to properties :)//

வாங்க எல் கே properties க்குள்ளே போய் ஒன்னும் பண்ண முடியாது. ஃபார்மெட்டும் ஆகாது. அதுதான் சிக்கல் .இன்னொன்னு வேற எந்த யூஎஸ்பி போட்டாலும் இதே எர்ரர் காட்டும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ந‌ல்ல‌ த‌க‌வ‌ல் ஜெய்லானி....//

வாங்க ஸ்டீபன் சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//எப்படி ஜெய்லானி...இது ஜெய்லானி ப்ளாக் தானே...வேறு எதாவது கம்பூயூட்டர் ப்ளாக் பக்கம் வந்துவிட்டேனே என்று நினைத்துவிட்டேன்..(சும்மா கிண்டலுக்கு...நம்ம ஜெய்லானி தானே...)...அருமையான சூப்பரான தகவல்...நன்றி... //

ஹா...ஹா....எப்பவும் மொக்கை போடும் நாந்தான். என் ஃபிரண்டு பட்ட கஷ்டம் வேர யாரும் படக்கூடாதுன்னு நெனச்சேன் அதான் இப்படி. கிண்டலுக்கு எல்லாம் வருத்தப்படற ஆள் நான் இல்ல. பயப்படாதீங்க ,பின்னூட்டட்தில எப்படி வேனும்னாலும் கும்மலாம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன் மலிக்கா said...

/இம்முறைதான் விடுமுறை நாள்ல ஒழுங்கான விஷயம் செய்திருக்கிறீங்க, கிட்னியை யூஸ்பண்ணி நல்ல தகவல் வெளியிட்டிருக்கிறீங்க//

ஜெய்லானிஅண்ணாக்கு கிட்னியெல்லாம் வேலைசெய்துன்னு சொன்னதும் அடுத்தமுறை பாருங்க சும்மா பின்னி எடுக்கப்போறாக.

இப்போது நல்ல தகவல் தந்தமைக்கு அமுல் ஸ்பிரே 2 ஸ்பூன் ஃபிரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//ஜெய்லானிஅண்ணாக்கு கிட்னியெல்லாம் வேலைசெய்துன்னு சொன்னதும் அடுத்தமுறை பாருங்க சும்மா பின்னி எடுக்கப்போறாக.//

என்னது டிவி ஸ்டேஷனை தொறக்கவா ?.ம்..ம்.. புரியுது..

// இப்போது நல்ல தகவல் தந்தமைக்கு அமுல் ஸ்பிரே 2 ஸ்பூன் ஃபிரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ //

ஹை..ஐ..பெரிய ஸ்பூனா தாங்க ,அப்பதான் ஒருநாள் முழுசா வாயை திறக்க முடியாது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

நல்ல தகவல்

athira said...

எங்கங்க சரியாவே தூக்கம் இல்ல , காலையில ஒம்பதரை மணிக்கே எழுப்பி விட்டா///

ஆ... ஜெய்...லானி ///எழுப்பி விட்டா//// இது எப்ப தொடக்கம்???? எனக்குத் தெரியாதே?????

வேலன். said...

அமீர் வாழ்க...அடிக்கடி உங்கள் இல்லம் வரவேண்டுகின்றேன்.(என்னடா இவன்...அமீருக்கு சப்போர்ட் பண்ணுகின்றானே என எண்ண வேண்டாம்.அவரால் தானே நல்ல ஒரு தகவல் பதிவர்களுக்கு கிடைத்தது)அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.வேலன்.

ஜெய்லானி said...

@@@தமிழ் வெங்கட்--//நல்ல தகவல் //

வாங்க!! தமிழ் சந்தோஷம் , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--// ஆ... ஜெய்...லானி ///எழுப்பி விட்டா//// இது எப்ப தொடக்கம்???? எனக்குத் தெரியாதே????? //

யக்கோவ் !! குடும்பத்தில குழப்பத்தை உண்டாக்கிடாதீங்கோ., என் மேல நல்ல நம்பிக்கை என் மனைவிக்கு.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//அமீர் வாழ்க...அடிக்கடி உங்கள் இல்லம் வரவேண்டுகின்றேன்.(என்னடா இவன்...அமீருக்கு சப்போர்ட் பண்ணுகின்றானே என எண்ண வேண்டாம்.அவரால் தானே நல்ல ஒரு தகவல் பதிவர்களுக்கு கிடைத்தது)அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.வேலன்.//

வாங்க தல. சில சமயம் குழப்பத்திலதான் மூளை நல்லா வேளை செய்யும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SUFFIX said...

உபயோகமான தகவல் ஜெய்லானி, எங்களையும் ரவுடியாக்கிருவீங்க போல.

சிநேகிதன் அக்பர் said...

மிக பயனுள்ள தகவல்.

எங்களைப்போன்ற டெக்னீசியன்கள் சில நேரம் இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் மண்டையை பிய்த்துக்கொள்வதுண்டு. பின்பு கூகிளில் தேடினால் நம்மைப்போன்ற ஆங்கில வலைப்பூக்களில் பதில் கிடைக்கும். தமிழில் இது போல தொழில் நுட்பம் சர்ந்த பதிவுகள் நிறைய வரவேண்டும்.

ஜெய்லானி said...

@@@SUFFIX--//உபயோகமான தகவல் ஜெய்லானி, எங்களையும் ரவுடியாக்கிருவீங்க போல.//

இதெல்லாம் பப்ளிக்கா சொல்லாதீங்க ஷாஃபி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அக்பர்--//மிக பயனுள்ள தகவல். எங்களைப்போன்ற டெக்னீசியன்கள் சில நேரம் இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் மண்டையை பிய்த்துக்கொள்வதுண்டு. பின்பு கூகிளில் தேடினால் நம்மைப்போன்ற ஆங்கில வலைப்பூக்களில் பதில் கிடைக்கும். தமிழில் இது போல தொழில் நுட்பம் சர்ந்த பதிவுகள் நிறைய வரவேண்டும்.//

உண்மைதான். நிறைய விஷயம் நினைவில் வருவது இல்லை. உங்களுக்கு தெரிந்ததையும் அப்ப அப்ப போடுங்க. சிலருக்கு உதவியா இருக்கும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹுஸைனம்மா said...

பயனுள்ள தகவல். நன்றி.

மின்மினி RS said...

ஆஹா இப்படியும் வழி இருக்கா.. சொல்லித்தந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றி ஜெய்லானி..

Asiya Omar said...

நானும் வந்திட்டேன்,நமக்கு என்ன சொல்றீங்கன்னே தெரியலை,ட்யூப் லைட்டுங்கோ.

அப்துல்மாலிக் said...

இது புது தகவல்

//\StorageDevicePoliசிஎச்// அப்படினு ஒன்னு என் பிசிலே இல்லியே.. தேடலிலும் கொடுத்து பார்த்தாச்சு

அன்புத்தோழன் said...

Good one.. Thanks bro... :-)

ஹரீகா said...

நீங்கள் எழுதியிருந்த விளக்கம் புரியாதவர்களுக்கு கூட புரிந்து விடும். simply super .

//அது சரி நீங்க இன்னும் எத்தனை நாள் ஒத்தையா சுத்த ஆசை , சீக்கிரம் ஒரு பிளாக் திறங்க . நாங்களும் வந்து கும்மி அடிப்போமுல்ல//.

==** இப்போதைக்கு ஒத்தையா சுத்த தான் ஆசை சார். பிளாக் திறக்கும் எண்ணமில்லை. அப்படி இருப்பின் அதற்கும் உங்க உதவி தேவைப்படும். சரியா!!!

Menaga Sathia said...

very nice!!

MUTHU said...

நீ நல்லா தான் ஆணி புடுங்குற

மசக்கவுண்டன் said...

ரொம்ப நல்லாப்புரிஞ்சுதுங்கோ, ஆனா நமக்கு வேண்டாமுங்கோ.

பாரணை முடிச்ச:) அதிரா said...

தகவலுக்கு நன்றி ஜெய்..லானி. நான், நீங்க இன்னும் சின்னப்பிள்ளைதான்(திருமணம் முடிக்கவில்லை) எனத் தப்பாக நினைத்திருந்தேன்.

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//பயனுள்ள தகவல். நன்றி.//

வாங்க!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மின்மினி--//ஆஹா இப்படியும் வழி இருக்கா.. சொல்லித்தந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நன்றி ஜெய்லானி.//

இது ஈஸியா ரெண்டு நிமிஷ வேலைதான். இல்லாட்டி பெரிய தலைவலி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar--//நானும் வந்திட்டேன்,நமக்கு என்ன சொல்றீங்கன்னே தெரியலை,ட்யூப் லைட்டுங்கோ//

எல்லாமே மனுஷன் கண்டு பிடிச்சதுதாங்க. கொஞ்சம் பொறுமை வேனும் அவ்வளவுதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அபுஅஃப்ஸர்--// இது புது தகவல்

//\StorageDevicePoliசிஎச்// அப்படினு ஒன்னு என் பிசிலே இல்லியே.. தேடலிலும் கொடுத்து பார்த்தாச்சு //

@@@அபுஅஃப்ஸர்--// இது புது தகவல்

//\StorageDevicePoliசிஎச்// அப்படினு ஒன்னு என் பிசிலே இல்லியே.. தேடலிலும் கொடுத்து பார்த்தாச்சு //

நா எழுதியதை நீங்க சரியா படிக்கலன்னு தோனுது . இது நரம்பு மண்டலம் சர்ச் பாக்ஸ்ல எப்பவும் வராது ஓக்கே.

மெயில் பண்ணுகிறேன் புரியும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புத்தோழன்--//Good one.. Thanks bro... :-) //

வாங்க அன்பு. சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹரீகா--//நீங்கள் எழுதியிருந்த விளக்கம் புரியாதவர்களுக்கு கூட புரிந்து விடும். simply super .//

வாங்க ஹரீகா ஆண்ட்டி , ஆண்ட்டியா , பாட்டியா ஹி...ஹி..க்கி..கிக் கீகீஈஈஈஈ..சந்தோஷம்


//இப்போதைக்கு ஒத்தையா சுத்த தான் ஆசை சார்.//

எங்கூருல பேய்தாங்க ஒத்தயா சுத்தும்.

// பிளாக் திறக்கும் எண்ணமில்லை. அப்படி இருப்பின் அதற்கும் உங்க உதவி தேவைப்படும். சரியா!!! //

உங்க பேருலயா ? என் பேருலயா ? ஒன்னு ஒன்னா , ரெண்டு ரெண்டா கலர்லயா பிளாக் அண்ட் ஒயிட்லயா ,சீக்கிரம் முடிவு பண்ணுங்க அப்பதான் சரி கடி கடிக்கலாம் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//very nice!! //

வாங்க!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Muthu--// நீ நல்லா தான் ஆணி புடுங்குற //

இப்படிதான் பாராட்டனும் முத்து. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மசக்கவுண்டன்--//ரொம்ப நல்லாப்புரிஞ்சுதுங்கோ, ஆனா நமக்கு வேண்டாமுங்கோ //

தாத்தாவ் , இது மாதிரி சில கம்ப்யூட்டர்ல வரும் .எந்த யூஎஸ்பிய போட்டாலும் படிக்கும் ஆனா புதுசா எதுவும் போடமுடியாது. அழிக்க முடியாது. ஃபார்மெட்டும் பண்ண முடியாம அழிச்சாட்டியம் பண்ணூம். அதுக்கு வைத்தியம் இதுதான் . அப்படி இல்லாட்டி கடையில பிசிய தரனும் அவங்களுக்கு தெரியாட்டி எல்லாத்தையும் திரும்ப ரீபார்மெட் , லோடிங் பண்ண அரை நாள் பிடிக்கும், அதுக்கு 300ரூ செலவும் ஆகும். இது ரெண்டு நிமிஷ செலவில்லா வேலை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//தகவலுக்கு நன்றி ஜெய்..லானி. நான், நீங்க இன்னும் சின்னப்பிள்ளைதான்(திருமணம் முடிக்கவில்லை) எனத் தப்பாக நினைத்திருந்தேன்.//

என் பாட்டிக்கு நான் சின்ன புள்ள, என் அம்மாவுக்கு நான் சின்ன புள்ள , என் மனைவிக்கு சில நேரம் நான் சின்ன புள்ளதாங்க .(இதை பற்றி பிறகு ஒரு பதிவு வரும் ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Prasanna said...

//நீதான் நல்லா ஆணி புடுங்குவியே//
உங்க பேர்லயே ஆணி இருக்கே, அத வச்சி கண்டு பிடிச்சாங்களோ.. heehee :)

தகவல் சூப்பரப்பு :)

எல் கே said...

@jailani

hmm might be.... so far i did not have seen any case like this :)

ஜெய்லானி said...

@@@பிரசன்னா-- //நீதான் நல்லா ஆணி புடுங்குவியே//
உங்க பேர்லயே ஆணி இருக்கே, அத வச்சி கண்டு பிடிச்சாங்களோ.. heehee :)

தகவல் சூப்பரப்பு :)//
என் பேரே ஊர் பேர்தான் ( பழனி , திருப்பதி மாதிரி )இருக்கலாம். சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK --// @jailani hmm might be.... so far i did not have seen any case like this :) //

இது கம்ப்யூட்டரில் வைரஸால் வரும் பிராப்ளம். வைரஸ் போகும் போது ரெஜிஸ்டிரியில் சில மாற்றங்களை செஞ்சிட்டு போகும். நாம அதை மேனுவலாதான் மாத்த வேண்டி வரும். யூஎஸ்பிக்காக நிறைய வைரஸ் வருது இப்ப. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

முதல் முறை உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்..
நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்
கம்ப்யூட்டர் பற்றிய உங்கள் தகவல்.. நல்ல இருக்கு.
உண்மைய சொல்லுங்க.. நீங்க முயற்சி செஞ்சுட்டு தான சொல்றிங்க..?
எங்கள வச்சு காமெடி பணலேல?

ஜெய்லானி said...

@@@எனது கிறுக்கல்கள்--//முதல் முறை உங்கள் பதிவுகளை பார்க்கிறேன்..நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள் கம்ப்யூட்டர் பற்றிய உங்கள் தகவல்.. நல்ல இருக்கு.//

வாங்க !!வாங்க!!சந்தோஷம் எதுவா இருந்தாலும் தைரியமா குட்டலாம் கும்மலாம். தயங்காம சொல்லுங்க
//உண்மைய சொல்லுங்க.. நீங்க முயற்சி செஞ்சுட்டு தான சொல்றிங்க..?எங்கள வச்சு காமெடி பணலேல //

அமீரை விரட்டுனதை சொல்றீங்களா . அவனும் நானும் பதிமூனு வருட பழக்கம். அதெல்லாம் அவன் கவலை படமாட்டான். கல்லூளி மங்கன். அடிக்கடி வாங்க. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Pragash said...

ஆகா இதைத்தானே தேடிக்கொண்டு இருந்தேன்.//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!//
வேணாம்பா வம்பு.இப்பதான் நல்ல நல்ல கனவா வருது.

சௌந்தர் said...

http://rasikan-soundarapandian.blogspot.com/

ஜெய்லானி said...

@@@PRAKASH--//ஆகா இதைத்தானே தேடிக்கொண்டு இருந்தேன்.

இது மாதிரி வந்தால் டிரை பண்ணுங்க சரியாகும்.

//வேணாம்பா வம்பு.இப்பதான் நல்ல நல்ல கனவா வருது.//

பாருங்க இப்படி சொல்லிதான் கமெண்ட் வாங்க வேண்டி இருக்கு. சும்மா போனா எப்படி. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@soundarapandian--//

http://rasikan-soundarapandian.blogspot.com/

வாங்க!!சவுந்தரபாண்டியன்.ஸார்.

சசிகுமார் said...

பயனுள்ள பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//பயனுள்ள பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

வாங்க சசி,சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

ரொம்ப பயனுள்ள தக்வல் என்க்கு ரொம்ப உதவியா இருக்கும் ஆனால் இத செய்ய போய் ஏடாகூடம் ஏதும் ஆகிட்டா,

ஆமாம் சைடில் லைனா பெயர் லிஸ்ட் இருக்கு , என்ன அது

கீழே உங்கள் பெயர் தீப்பொறியுடன் வருதே அப்ப உங்கள் பேரு தீப்பொறி ஜெய்லானியா?
எப்ப இருந்து வெண்ணீர் வைக்க ஆரம்பித்ததிலிருந்தா?

ஜெய்லானி said...

@@@Jaleela--//ரொம்ப பயனுள்ள தக்வல் என்க்கு ரொம்ப உதவியா இருக்கும் ஆனால் இத செய்ய போய் ஏடாகூடம் ஏதும் ஆகிட்டா,//

ஒன்னும் ஆகாது. தைரியமா செய்யுங்க

//ஆமாம் சைடில் லைனா பெயர் லிஸ்ட் இருக்கு , என்ன அது//

அதை கிளிக் பண்ணினா நேரா அவங்க பிளாக் போகலாம். எத்தனை தடவை வந்தாங்கன்னு தெரியும்

//கீழே உங்கள் பெயர் தீப்பொறியுடன் வருதே அப்ப உங்கள் பேரு தீப்பொறி ஜெய்லானியா?
எப்ப இருந்து வெண்ணீர் வைக்க ஆரம்பித்ததிலிருந்தா//

சூடு ஆரம்பிச்சிரிச்சு இல்லயா ஹி..ஹி..அதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எல் கே said...

//யூஎஸ்பிக்காக நிறைய வைரஸ் வருது இப்ப/
terium boss. nama aani pidungarathu technical support linthan thala. athan ketten :)

ஜெய்லானி said...

@@@LK--//terium boss. nama aani pidungarathu technical support linthan thala. athan ketten :)//

வாங்க!!எப்படி வேனாலும் கும்மியடிக்கலாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

r.v.saravanan said...

தகவலுக்கு நன்றி ஜெய்லானி

Anonymous said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//தகவலுக்கு நன்றி ஜெய்லானி //

வாங்க சரவணண், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ammu Madhu--//பயனுள்ள தகவலுக்கு நன்றி.//

வாங்க!! அம்மு மது , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காஞ்சி முரளி said...

ரொம்ப.. ப.. ப.. நாளேச்சுன்னு...
நம்பி... வந்த என்னை..!
இப்பிடி ஏமாத்திட்டீங்களே...!

நல்ல பயனுள்ள தகவல்தான்...
தெரியும்.... ஆ...ஆனா....... தெரியாது...!

இந்தளவிற்கு நாம அறிவாளியில்ல..
ஜெய்லானி...

any have...
பொழுபோக்குக்கு மட்டுமல்ல வலைதளம்... இதுபோன்ற நல்ல பயனுள்ள தெரிந்துகொள்ள உதவும் தளம்.. என்பதை உணர்த்திய தங்களுக்கு.. நன்றி... நன்றி...

நட்புடன்...
காஞ்சி முரளி...

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--// ரொம்ப.. ப.. ப.. நாளேச்சுன்னு...நம்பி... வந்த என்னை..! இப்பிடி ஏமாத்திட்டீங்களே...!நல்ல பயனுள்ள தகவல்தான்... தெரியும்.... ஆ...ஆனா....... தெரியாது...! இந்தளவிற்கு நாம அறிவாளியில்ல..
ஜெய்லானி... any have...
பொழுபோக்குக்கு மட்டுமல்ல வலைதளம்... இதுபோன்ற நல்ல பயனுள்ள தெரிந்துகொள்ள உதவும் தளம்.. என்பதை உணர்த்திய தங்களுக்கு.. நன்றி... நன்றி... நட்புடன்...காஞ்சி முரளி...//

ரொம்பவும் மொக்கை போட்டா சரிஆகாது அதுக்குதான் இந்த மாதிரி சமயத்துல சின்ன சின்ன விசயங்களை போடறது. எதாவது யாருக்காவது நல்லது என்னால நடந்தா ஒரு சின்ன சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

ஒகே விபரத்த படித்து கொண்டேன்.

ஜெய்லானி said...

@@@Jaleela--//ஒகே விபரத்த படித்து கொண்டேன்.//

வாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))