Saturday, February 13, 2010

மருதாணி யாருக்கு!

நமக்கு எல்லாம் மருதாணி யைப் பற்றி தெரியும். பொதுவாக இது பெண்கள் அதிகம் விரும்பக்கூடியது .அதிலும் கொஞ்ஜம் வெள்ளை நிற பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்க்கும். பல இடங்களில் போட்டியே நடக்கும் யார் அழகான டிஸைன் வரைகின்றாரோ அவருக்கு பரிசுகளும் கிடைக்கும். அழகு நிலையங்களில் இது இல்லாமல் இருக்காது.
திருமணங்களில் எது இருக்கிறதோ இல்லையோ மணப்பெண் அலங்காரத்தில் கை,கால் முழுவதும் டிஸைன் எனற பெயரால் பூசி மெழுகி இருக்கும்.
இதை அதிகம் பயன்படுத்துவது பாக்கிஸ்தானியர்கள் தான். இதன் பூர்வீகம் ஆப்பிரிகா .
நாம் மருதாணியை அழகு சாதனமாக மட்டுமே நினைகிறோம். அதனால தானோ என்னவோ இது பெண்களுக்கு மட்டுமானது என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது. ஆனால் என்னை பொருத்தவரை ஒவ்வொரு ஆணுக்கும் இது தேவை. நாம் (ஆண்) கையில் , காலில் இட்டால் நீ என்ன பொம்பளையா? என்ற கேள்வி உடனே வரும். அது தவிர நமக்கு தரவும் மாட்டார்கள்.

மருதாணியின் முக்கிய பலன் என்னவென்றால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். முறைபடி பயன் படுத்தும் போது அதிக அளவில் பலன் தருகிறது. ஆண்கள் பொதுவாக வேலையின் காரணமாக (வேலைவெட்டி இல்லாட்டியும்)வெளியே சுற்றுவதாலும், சிலருக்கு வேலையே அதுவாக அமைந்து விடுவதாலும், கையேந்திபவனில்(அவசர உலகில் எல்லாமே ரெடிமேட்) உப்பு, காரம் (அசைவம்) சற்றே கூடுதலாக இருப்பதால் எதைப்பற்றியும் கவலை படாமல் தின்றுவிடுவதால் ,வரும் உடல் சூட்டை குறைக்க வழி தெரிவதில்லை. தேவை இல்லாத டென்ஷன்., வயிற்று வலி.,ஆக உடல் சூடுதான் முதற்காரணம்.

இரண்டாவதாக கண்எரிச்சல். இதில் உண்மைநிலை புரியாமல் ஒருவேளை பார்வை குறைவோ என்ற பயமும் இருக்கும். இந்த இரண்டு வியாதிக்கும் வருமுன் காக்கும் அற்புதமான மூலிகைதான்நமது மருதானி. கடைகளில் கலர் சேர்காத பவுடராகவும்(u.a.e யில் சூடானி மெஹந்தி எல்லா கடைகளிலும் கிடைக்கும்)
கிடைக்கும். இதை நீர் விட்டு குழைத்து முதலில் சிறிது உள்ளங்காலில் வைத்து ஒரு மணிநேரம் இருக்கவும் . (பத்து நிமிடத்திலேயே கால் மரத்து போய்விடும்) புதிதாக வைப்பவர் குறைந்த நேரமே வைத்து டெஸ்ட் செய்யவும். பிறகு நேரத்தை கூட்டலாம். இல்லாவிட்டால் குளிர்ஜுரம் வந்துவிடும்.

பழகியபின் தேவைக்கு ஏற்ப தலைமுழுவதும்(ஆண்கள்) வைத்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து தலைக்கு குளிக்கவும் .சோப்பு தேவை இல்லை. கலர் சேர்காத பவுடரினால் தலை முடி சிவப்பாக ஆகாது. தலைமுடியும் கொட்டாது. விடுமுறை நாட்களில் செய்யவும். (இல்லாவிட்டால் ஆபீஸில் தூக்கம் வரும்) பெண்கள் உச்சந்தலையில் மட்டும் வைத்து விட்டு குளிக்கலாம்.

கோடைக்காலத்தில் வாரம் ஒருமுறை இதுப்போல செய்துவந்தால் 48டிகிரி வெயில் அடித்தாலும் நமக்கு , உடலுக்கு ஒன்னும் செய்யாது. சிவாஜியில் ரஜினி சொல்வது போல் ஹை...ஹை...கூல்...


டிஸ்கி: அனுபவமா என்று கேட்பவர்களுக்கு 100சதவிகிதம் டெஸ்டட். கோடைக்காலம் நெருங்குவதால் இந்த டிப்ஸ் பயன் படும்.




29 என்ன சொல்றாங்ன்னா ...:

அண்ணாமலையான் said...

உபயோகமான பதிவு. ஜில்லுனு ஒரு பதிவு... இதான்

அண்ணாமலையான் said...

உபயோகமான பதிவு,,, ஜில்லுனு ஒரு பதிவு இதான்

டவுசர் பாண்டி said...

நல்ல மேட்டரு தான் தல !!
நல்லா இருக்கும் போல கீதே !! சூப்பர் !!

Menaga Sathia said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!// இதுக்கு பயந்தே கமெண்ட் போடுறேன்.. நல்ல பதிவு!!

jothi said...

மருதாணியில் இவ்வளவு இருக்கா? மிக்க நன்றி

Chitra said...

"ஹென்னாமா" மருதாணி பத்தி எழுதி இருக்கீங்க. நன்றி.

Jaleela Kamal said...

மருதாணி ஆமாம் ஆண்கள் உள்ளங்காலில் வைக்கலாம் ஆனால் நிறைய ஆண்கள் இதை விரும்புவதில்லை அந்த காலத்தில் கண்டிப்பாக கல்யாணத்தில் உள்ளங்கை, உள்ளங்கால், கால் பெருவிரலில் கண்டிப்பாக வைப்பார்கள்.

குளிர் ஜுரம் வருபவர்கள் கவலை பட வேண்டாம் என் பகுதில் டிப்ஸ் இருக்கு பிறகு எடுத்து லின்ங் தரேன்.

நல்ல இடுகை எல்லோருக்கும் தேவையான இடுகை..

தமிழ்ப்பெண்கள் said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://tamilpenkal.co.cc/

ஸாதிகா said...

//ஒவ்வொரு ஆணுக்கும் இது தேவை. நாம் (ஆண்) கையில் , காலில் இட்டால் நீ என்ன பொம்பளையா? என்ற கேள்வி உடனே வரும். அது தவிர நமக்கு தரவும் மாட்டார்கள்.// சகோ ஜெயிலானி,உடலை குளிர்ச்சி படுத்த எவ்வளவோ உணவுவகைகள் உள்ளதே.அதை ஃபாலோ செய்து கொள்ளுங்களேன்.மருதாணியிலுமா போட்டிக்கு வருவீர்கள்?அது நன்றாகவும் இருக்காது.

Unknown said...

ஐயோ வைச்சிடிங்க மருதாணி

ஹுஸைனம்மா said...

அட, அழகு/ ஹெல்த் டிப்ஸ்கூடச் சொல்வீங்களா நீங்க? பலகலைவித்தகர்தான் போல!!

siva said...

thi good py sankar dubai

ஜெய்லானி said...

அண்ணாமலையான் -துபாய்,ஷார்ஜாவில் அடிக்கபோகும் வெயிலை இதில் உள்ள க்ளைமேட் விஜ்ஜடில் பார்த்து வாருங்கள்.மண்டை காய்ந்துவிடும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டவுசர் பாண்டி --டிரை பண்ணி பாருங்க. டாங்ஸ் வாஜாரே..

Mrs.Menagasathia---பயப்படாதீங்க நா சொன்னது தூங்கும் போது.(கருத்து வாங்க என்னல்லாம் சொல்லவேண்டிருக்கு.. ம்..) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

jothi. - --ஆமாங்க .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
Chitra--நீங்க சொல்லவேண்டியதை நா சொல்லிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Jaleela --///நிறைய ஆண்கள் இதை விரும்புவதில்லை ///
நீங்க தருவதில்லைன்னு சொல்லுங்க (ஸாதிகாக்கா பதிலை பாருங்க).கோடை காலத்தில் அவசியம் தேவை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

தமிழ்ப்பெண்கள் -அங்க வந்தால் அடிக்கமாட்டிங்க தானே!!! ஜெய்லானி என்பது ஆண் பெயர்.(நா ரொம்ம்ம்ம்ப நல்லபிள்ளை)

ஸாதிகா ///உடலை குளிர்ச்சி படுத்த எவ்வளவோ உணவுவகைகள் உள்ளதே.அதை ஃபாலோ செய்து கொள்ளுங்களேன்//
காலையில் வைத்துவிட்டால் மதியம் சிறிது தூக்கம் வரும் அடுத்த நாளிருந்து ஃப்ரஷ். உணவுமுறை என்றால் செலவு அதிகம்.
//மருதாணியிலுமா போட்டிக்கு வருவீர்கள்?அது நன்றாகவும் இருக்காது.///
இதுக்கேவா????.இன்னும் நிறைய இருக்கே!!!!மனசை திடபடுத்தி கொள்ளுங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

V.A.S.SANGAR --//ஐயோ வைச்சிடிங்க//
நமது போராட்டத்திற்கு முதல் படி.வந்ததற்கு நன்றி..

ஹுஸைனம்மா --///அட, அழகு/ ஹெல்த் டிப்ஸ்கூடச் சொல்வீங்களா நீங்க?///
நாலு பேருக்கு நல்லது நடந்தால் சரி.தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//tttttttttt said...
thi good py sankar dubai//

heartily welcome.

திவ்யாஹரி said...

நல்ல உபயோகமான பதிவு ஜெய்லானி..

ஜெய்லானி said...

திவ்யாஹரி --வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

suvaiyaana suvai said...

மருதாணியில் இவ்வளவு இருக்கா!!

Asiya Omar said...

அட மருதாணியில் இவ்வளவு இருக்கா?சூப்பர்.ஜெய்லானி என்ற பெயரை என் ப்ளாக கமெண்ட்ஸில் பார்த்தவுடன் ஓடி வந்துவிட்டேன்.ஏனெனில் என் உடன் பிறந்த சகோதரியின் பெயர் ஆயிஷத்துல் ஜெய்லானி.

ஜெய்லானி said...

suvaiyaana suvai--வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
asiya omar --பெயர் ராசி அப்படி.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வேலன். said...

மருதாணி இப்போது எங்கே கிடைக்கின்றது..எல்லாம் பவுடர் மயமாகிவிட்டதே...நல்ல பதிவு... வாழ்க வளமுடன் வேலன்.

சசிகுமார் said...

நல்ல உபயோகமான பகிர்வு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

வேலன்.-நிறம் சேர்காத பவுடராக தேடனும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சசிகுமார் -உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SUFFIX said...

சரி, மருதாணி போட்டுவோம், ரெண்டு டிசைன் சாம்ப்பிலும் போட்டிருந்தா நல்லா இருக்கும் :)

ஜெய்லானி said...

SUFFIX --யூஸ் பண்ணி பாருங்க வித்தியாசம் தெரியும். படம் போடலாம்,ஆனால் தாய்குலம் சண்டைக்கு வந்துடுவாங்க. அதான் பயம்.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மருதாணியில இவ்வளவு விசயம் இருக்கா சார்..
நான் ஏதோ , பெண்கள் கைகளில் இடும் அழகுப்பொருள் என நினைத்தேன்..

ஓ.கே.. டிரை பண்ணி பார்க்கிறேன்..

ஜெய்லானி said...

பட்டாபட்டி..-பட்டு சார்,கோடை காலத்து நோய்கள் எதுவும் வராது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

kavisiva said...

வளைகுடா நாடுகளில் அடிக்கும் வெயிலுக்கு மட்டுமல்ல இப்போ இங்க காய்ச்சற வெயிலுக்கு கூட மருதாணி போட்டுக்கணும்! ஆனா ஆண்கள்தான் பாவம் யாருக்கும் தெரியாமல் காலில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிரது :-(.

ஜெய்லானி said...

//kavisiva said... ஆனா ஆண்கள்தான் பாவம் யாருக்கும் தெரியாமல் காலில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிரது //

உண்மைதாங்க!!. கிண்டல் அதிகமாக இருக்கும் அதான் பயம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Priya said...

சரியா சொல்லி இருக்கீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சது மருதாணி!
(நான் வரைந்த மருதாணி படங்களை முடிந்தால் பாருங்க http://enmanadhilirundhu.blogspot.com)

ஜெய்லானி said...

@@@Priya said...சரியா சொல்லி இருக்கீங்க. எனக்கு ரொம்ப பிடிச்சது மருதாணி!(நான் வரைந்த மருதாணி படங்களை முடிந்தால் பாருங்க http://enmanadhilirundhu.blogspot.com)

உங்க ப்ளாக் நல்லா இருக்கு ,மொத்தமா படிச்சுட்டு சொல்கிறேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))