Thursday, February 4, 2010

பேய், பிசாசு இருக்கா ?

பேய், பிசாசு இருக்கா ? இந்த கேள்வியை முன் வைக்கும் போது உலக மக்களில் நூற்றுக்கு தொன்னூறு பேர் ஆமாம் இருக்கு என்பார்கள். ஆறு பேர் இல்லை என்பார்கள். நான்கு பேரோ (உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டே )பதில் சொல்லத்தெரியாமல் பேய்முழி முழிப்பார்கள். மத நம்பிக்கையை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது எல்லோருமே ஒப்புக்கொள்ளத்தக்க விஷயம்; ஆமாம் என்பதே.. (அதற்கு ஏன் இந்த பதிவு என்கிறீர்களா!)
ஆனால் இந்த பிசாசில் ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஒன்றே ஒன்று தான். இது யாரையும் பிடிக்கும். ஆனால் பிடிப்பவருக்கு குறைந்தது டீன் ஏஜ் வயது வேண்டும். அந்த பேய் ஒருவரை பிடித்து விட்டால் அத்தனை விரைவில் அதுவிடாது.எந்த வேப்பிலைக்கும் அடங்காது.எந்த தர்காவிலும் ஒடுங்காது. அந்த பேய் பிசாசின் பெயர் சந்தேகம். பிடித்தவர் பள்ளி மாணவனாக இருந்தால் கூடப்படிக்கும் பெண் சின்னதாக (ஸ்நேகமாக )புன்னகைத்தால் உடனே சின்ன சந்தேகம். ஒரு வேளை லவ்வாக ஒருக்குமோ. தேவையில்லாமல் மனஅமைதி கெட்டு படிப்பும் ஏறாமல் தன்னை ஹீரோவாக காட்ட முயன்று செய்யும் அட்டகாசம் எத்தனை எத்தனை..அவனை பெற்ற குடும்பம் ஏழையாக இருந்தால் எவ்வளவு கஷ்டம்..
அதே பள்ளி மாணவியாக இருந்தால், இத்தனை வருடம் பெற்ற தாய் தந்தையை உதாசினப்படுத்தி விட்டு சிலசமயம் வீட்டைவிட்டே வெளியேறி விடுகிறாள். பிள்ளையை பெற்றவர்களுக்கு தலைக்குனிவும், மனவருத்தமும், கெட்ட பெயரும்தான் கடைசியில் மிஞ்சும்.
ஆண் பணியின் காரணமாக, பொதுவாக பத்து மணிநேரம் வீட்டை விட்டு வெளியே வேலை செய்ய வேண்டியிருப்பதால் சிலப்பல பேரிடம் சிரித்து பேசிவிட்டு களைத்துப்போய் வீடு வந்தால் மனைவி, கேட்கும் முதல் கேள்வியே எவக்கூட பேசிவிட்டு இவ்வளவு நேரம் லேட், வீட்டில் உங்களுக்காக ஒருத்தி இருப்பது, காத்திருப்பது தெரியாதா?? இந்த சந்தேகம் தொடரும் போது உண்மையிலேயே ஒரு சின்னவீடு செட்டப்பாகி பின் அது பெரியவீடாகி, உண்மையான பெரியவீடு காலாவதி ஆகிவிடும் நிலை (டைவர்ஸ்).காரணம் சந்தேகப்பேய்.
அதே ஆண், வீட்டில் மனைவி தனியாக இருக்கிறாளே. பால் காரனிடம், (அல்லது) காய்காறி விற்பவனிடம சிரித்து பேசுகிறாளே. என்று சந்தேகப்படும் போது. மனைவி மனம் வெறுத்துப்போய், பொய்யை ஏன் மெய்யாக்ககூடாது என்று மனம் வெதும்பி சில நாட்களில், கள்ளக்காதல் கணவன் கொலை, தினசரி பத்திரிக்கைகளில் நாம் தினசரி படிக்கின்றோமே. காரணம் சந்தேகப்பேய்.
சரி, நேற்றுவரை சொந்தம், தெரிந்தப்பெண் ,தன் மகனுக்கு பொருத்தமானவள், குடும்பத்திற்கு ஏற்றவள் என்று திருமணம் செய்துவிட்டு, நான்கே நாட்களில் எங்கே தன்மகனை என்னை விட்டு வந்தவள் பிரித்து விடுவாளோ என்று தாயை போன்று கவனிக்கவேண்டியவள் மாமியாராக மாறிவிடுகிறாளே. ஒரு கட்டத்தில் உயிரோடு எரித்தும் விடுகிறாளே. காரணம் சந்தேகப்பேய். .
இப்படி சந்தேகம் எந்தரூபத்தில் எப்படி நுழைந்தாலும் அது வாழ்கை வண்டியை தடம்மாற செய்வது மட்டுமல்லாது. அதலபாதாலத்திலும் தள்ளிவிடுகிறது.
என்னதான் தீர்வு? நம்பிக்கை ஒன்றுதான். இந்த நம்பிக்கையானது ஒரே நாளில்வருமா? கண்டிப்பாக வராது. எட்டுவயது முதலே கற்றுத்தரவேண்டும். கல்வி (பாடத்திட்டம்) என்பது பொருளீட்டுவதற்கு மட்டும் இல்லாமல் வாழ்கையை சரியாக வாழ பழக்கப்படுத்துவது போல இருக்காதவரையில் சந்தேகப்பேய் உலகில் சந்தோஷத்துடன் உலாவரும்.........

16 என்ன சொல்றாங்ன்னா ...:

ஸாதிகா said...

பேய்களில் எத்தனை வகை!!நல்ல அலசல்.

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை.தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. கருத்து சொல்லிட்டேன் எனக்கு கண்ணு தெரியுமில்லையா? நன்றி ஜய்லானி.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இந்தப் பேய் புதிதாக உருவாகுவதுபோல் தெரியவில்லை. மனிதனின் ரத்தத்திலேயே கலந்துள்ளது.இந்தப் பேய் தன்னைத் தானே நம்பாது.
முடிந்தவரை உடனே சந்தேகப் படுவதை நிறுத்தி விட்டு, அலசி பின் முடிவெடுக்கலாம். ஆனால் இந்தப் பேய் சில நேரங்களில் தேவை.
நல்லதொரு அலசல்.
நன்றி..

ஜெய்லானி said...

ஸாதிகா--ஒரிஜினல் பேயே இதுதாங்க.. நன்றி.
பித்தனின் வாக்கு--கருத்து சொல்லாட்டிதான் கண்ணு தெரியாது. வருகைக்கு நன்றி.
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி -//இந்தப் பேய் சில நேரங்களில் தேவை///
போலீசுக்கு ம்ட்டுமே தேவை.பொது மக்களுக்கு இல்லை. நன்றி..

Jaleela said...

நான்கு பேரோ (உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டே )பதில் சொல்லத்தெரியாமல் பேய்முழி முழிப்பார்கள்// haa haa

ரொம்ப நல்ல அலசல், நெசமாவே இருக்கா?

Jaleela said...

உங்கள் வலை அப்படியே மலர் கொடுத்து வரவேற்கிறது.

ஜெய்லானி said...

////Jaleela said.நெசமாவே இருக்கா?///
அப்ப முழுவதும் படிக்கவில்லையா?
தங்கள் வருகைக்கு நன்றி...

Jaleela said...

சரியான பதிவு சந்தேகப்பேய பற்றி,ஆனால் சந்தேகப்பேய் மட்டும் பிடித்தால் இது விடாது கருப்பு போல் மனுசாளை விட்டுபோகவே போகாது

முன்பு போட்ட பதில் அநத லைன் சிரிப்பா இருந்துச்சி அதான் சொன்னேன்.

முழுவதும் முன்று முறை வந்து படிச்சாச்சு

Jaleela said...

பதிவுகளை கொஞ்சம் விட்டு போடுங்கள்

ஜெய்லானி said...

///Jaleela said...
பதிவுகளை கொஞ்சம் விட்டு போடுங்கள்///

வாரத்திற்கு ஒன்னு போடவா??? இல்லை ஒருநாள் விட்டு ஒரு நாளா???

Chitra said...

கல்வி (பாடத்திட்டம்) என்பது பொருளீட்டுவதற்கு மட்டும் இல்லாமல் வாழ்கையை சரியாக வாழ பழக்கப்படுத்துவது போல இருக்காதவரையில் சந்தேகப்பேய் உலகில் சந்தோஷத்துடன் உலாவரும்.........

............ so true. moral values and ethics - வாழ்க்கைக்கு மிகவும் தேவையான கல்வி பாடங்கள்.

ஜெய்லானி said...

Chitra -உங்கள் வருகைக்கு நன்றி.

gulf-tamilan said...

நல்லாயிருக்கு!!!முடிந்தால் தமிழ்மணத்தில் இணைக்கவும்.

ஜெய்லானி said...

gulf-tamilan-முயற்சிக்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.

கண்ணகி said...

சந்தேகப்பேயை நம்பிக்கைக்கடவுளால் அழித்துவிடலாம்.. பதிவு நல்லாருக்கு...

ஜெய்லானி said...

///கண்ணகி said...சந்தேகப்பேயை நம்பிக்கைக்கடவுளால் அழித்துவிடலாம்.///

நாம நல்லது நினைத்தாலே போதும் இதுக்கு கடவுள் தேவையில்லை.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))