Friday, February 26, 2010

நினைவில் நின்ற பாடல்-5


ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்
2. நீயே என் இதயமடி, நீயே என் ஜீவனடி
***
உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா
சின்னதாக நீயும்தான்
முகம் சுழித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்
ஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே
2.
***
காற்று வீசும் மாலையில்
கடற்கரையில் நடை போடணும்
உன்மடிதான் பாய்மரம்
படகேறி திசைமாறணும்
ஒளி வீசிடும் இரு கண்கள்தான்
வழி காட்டிடும் கலங்கரையா
கரைசேரவே மனம் இல்லையே
என தோன்றினால் அது பிழையா
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து
பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா

4 என்ன சொல்றாங்ன்னா ...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யார் கண்ணு தெரியாது சார்..?
அதையும் சொல்லிடுங்க...

எனக்கு கவிதை வராது சார்..
அடுத்த பதிவில கலந்துக்கிறேன்

ஜெய்லானி said...

//பட்டாபட்டி.. said...
யார் கண்ணு தெரியாது சார்..?
அதையும் சொல்லிடுங்க...
எனக்கு கவிதை வராது சார்..///

ஹை ..இதுக்கு பேரு பாட்டுங்கோ. கவித இல்ல,

Priya said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது, நன்றி!

ஜெய்லானி said...

@@@Priya said...எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது, நன்றி!

வாங்க வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))