தற்போதுள்ள அவசர உலகத்தில் அத்தியாவசியமான பொருட்களில் கணிணியும் ஒன்றாகி விட்டது..பலருக்கு இது இல்லாமல் பொழுதும் போகாது என்னும் அளவிற்கு இருக்கிறது. பல நேரங்களில் நண்பனாக இருக்ககூடியது. சில நேரங்களில் சண்டிக்குதிரை ஆக மாறி நம்ம BP ஐ எகிறவைக்கும். இதிலிருந்து தப்பிக்க இதோ சில ஆலோசனைகள்.
உங்களில் உள்ள ஏதாவது ஒரு போல்டரை திறக்கவும். அதில் மேலே உள்ள பட்டையில் டூல்ஸ் ஐ அழுத்தி போல்டர் ஆப்ஷன் என்பதை திறக்கவும். இதில் வியூ டேபில் show hidden files and folders ஐ தேர்ந்தெடுத்து. அப்ளை செய்து ஓகே தந்து வெளியேறவும். இப்போது சில ஃப்பைல்கள் நமது கண்ணுக்கு தெரியும்.சில வைரஸ்கள் hidden files ஃப்பைல்களாக வரும்
யாரிடமிருந்தும் சீடியோ அல்லது பெண்டிரைவோ வாங்கினால், அதில் என்ன தலைவலி உள்ளே உள்ளது என்பது தெரியாது. அதனால், சீடி டிரைவில் அல்லது USB யில் போட்டதும் வரும் ஆட்டோ ப்ரோகிராமை க்ளோஸ் செய்துவிடுங்கள். பின் மை கம்ப்யூட்டர் ஐ திறந்து சீடி அல்லது USB ஐ வலது கிளிக்கில் ஓப்பன் என்பதை அழுத்தி திறக்கவும்..
அதில் நமக்கு புரியாத விளங்காத ஃப்பைல், ஃப்போல்டர் இருந்தால் திறக்க வேண்டாம். இல்லையெனில் சில வைரஸ்கள் அழையா விருந்தாளிகளாக உள்ளே வந்து விடும்.
பொதுவாக நாம் நெட்டிலிருந்தோ , சீடி அல்லது USB யிலிருந்தோ, டவுன்லோட் இல்லை காப்பி செய்தால் அது டிபால்டாக மை டாக்குமென்ஸில் காப்பி , டவுன்லோட் ஆகும். நாம் இதில் காப்பி , டவுன்லோட் செய்யாமல் வேறு ஒரு டிரைவில் சேமிக்க வேண்டும். இதற்காகவே ஒரு டிரைவ் வைத்திருப்பது மிகவும் நல்லது.
விண்டோஸ் 3.5 வந்தபோது ஹாட்டிஸ்கின் அளவு சுமார் 160 எம்பிதான் வந்தது .ஆனால் இப்போதோ 1000ஜிபி (1 டிபி) சர்வசாதாரணமாக கிடைக்கிறது.
விண்டோஸ் பிறகு ஆபிஸ், ஆட்டோகேட், போட்டோஷாப் ஆகியவற்றை தவிர மற்ற மென்பொருட்களுக்கு சில ஜிபி இடம் போதும். மொத்ததில் 25 ஜிபி இடம் போதும் . சி-டிரைவில் மற்றும் டெஸ்க்டாப்பில் சொந்த, பர்சனல் விபரங்களை எப்போதுமே வைக்கவேண்டாம். அது நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியதாக இல்லை, கொடுத்ததாக இருக்கலாம் , போட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
ஒரே டிரைவாக 30ஜிபி 40ஜிபி 80ஜிபி 130ஜிபி என்று இருக்காமல் 20+10 ,20+20, 30+30+20, 40+30+30+30 என்று தேவைக்கு தகுந்தமாதிரி பிரித்து கொள்ளவும்.( 30ஜிபிஐ இட்டால் 8ஜிபிஐ அதே சாப்பிட்டுவிடும்) உங்களுடைய தகவல்களை இரண்டு வெவ்வேறு டிரைவில் பதிந்து வைப்பது மிகவும் நல்லது.
வைரஸ் பாதிப்பது அதிகம் நமது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகிய விண்டோசைதான். சில, பல நேரங்களில் ரீஸ்ஸ்டோரும் ஆகாமல் அதனுடன் சண்டை போடவேண்டிவரலாம். நம்மால் முடியாதபோது அடுத்தவரிடம் (கடைகளில்) தருகிறோம்.
அப்படி தரும் போது சி-டிரைவ் உள்ள ஹார்டிஸ்க் தவிர மற்ற ஹார்டிஸ்க்கை (சிஸ்டம் டோரை திறந்து)கழட்டி தனியே வைத்துவிட்டு தரவும். பின் கணிணி வந்தவுடன் பழையபடி தனியே கழட்டி வைத்த ஹார்டிஸ்க்கை மாட்டவும். லேப்டாபில் கழட்டி மாட்டும் சங்கதி கஷ்டம் என்பதால்தான் தனியாக USB டிரைவ் பயன்படுத்த சொன்னேன்.
ஒரே ஹார்டிஸ்கில் எல்லாவற்றையும் போடும் போது ரிப்பேர் ஆனால்மீண்டும் எதுவும் கிடைக்காது. டெஸ்க்டாப் என்பதும் சி-டிரைவில் வரும்ஒருஃப்போல்டர்தான். ஒரே ஹார்டிஸ்கில் சி-டிரைவும் இருந்தால் ,சி-டிரைவ்மட்டுதானே ரிப்பேர் மற்ற டிரைவ் நல்லதுதானே என கேட்பவருக்குபதில்.........கடையில் தரும் போது அதையும்தானே தரவேண்டி இருக்கும். தந்தால் என்ன?....... தந்தால் என்னவாகும்?............. தந்தால் என்னதான் ஆகும்?.
ஆப்பு உலகில் அதனதன்இடத்தில்தான் இருக்கிறது. நாமாகதான் தேடிபோய்அதில் உட்காருகிறோம் . நமக்குயாரும் வைப்பதில்லை (உதா:குருக்கள்தேவநாதன்)
20 என்ன சொல்றாங்ன்னா ...:
நல்லாத்தானே கீது !! செரி எனுக்கு ஒரு விசியம் தான் பிரியல , அது எப்பிடி c ஐ மட்டும் வெச்சிட்டு மீதிய கயட்டி எட்துக்குறது ? நிஜிமாவே பிரியலப்பா ! ! (என்கிட்டே கீரது , 320 GB hard டிஸ்க்கு , அதுல தான் பார்டிசியன் பண்ணிக்கறோம் , அப்பால எப்பிடி ? )
///டவுசர் பாண்டி-நிஜிமாவே பிரியலப்பா ! ///
தனியா ஒரு ஹார்டிஸ்க் குறைந்த நெம்பரில் (40 அ 80)வாங்கவேண்டியதுதான் ஒரே வழி.second hand கிடைத்தாலும் ஓகே... டாங்ஸ் வாத்யாரே!!!!
டாக்டர் டாக்டர்
அருமையா சொல்லியிருக்கீங்க.....
அதிலும் அந்த ஆப்பு ..பிட் சூப்பருங்க....
ஆப்பு உலகில் அதனதன்இடத்தில்தான் இருக்கிறது. நாமாகதான் தேடிபோய்அதில் உட்காருகிறோம் . நமக்குயாரும் வைப்பதில்லை (உதா:குருக்கள்தேவநாதன்)
.............ha,ha,ha,ha,......
C - drive?
டவுசர் பாண்டி சொல்லியது:-நல்லாத்தானே கீது !! செரி எனுக்கு ஒரு விசியம் தான் பிரியல , அது எப்பிடி c ஐ மட்டும் வெச்சிட்டு மீதிய கயட்டி எட்துக்குறது ?//
இன்னாப்பா...டவுசரு. ....இதுகூட புரியலைன்றேயே...உன் கம்யூட்டருக்கு போ...ஹார்ட்டிஸ்கை கழட்டு...அதில் சைடில் உள்ள ஸ்கூரு எல்லாத்தையும் கழட்டினால் உள்ள c,d,e,f ன்னு எல்லா இங்கிலீஸ் எழுத்தும் இருக்கும். அதில் சி -யை மட்டும் எடுத்துக்கோ...உள்ளே தூசி இருப்பதுபோல் தெரிந்தால் சோப்புதண்ணீரை பக்கெட்டில் வைத்து அதில் முக்கி எடு ...வைரஸ் போயோ போச்...(இது சும்மா நம்ம டவுசருக்காக போட்டது...இதுபோல் யாரும் செய்யவேண்டாம்)//
கட்டுரை அருமை நண்பர் ஜெய்லானி அவர்களே.....வாழ்க வளமுடன் வேலன்.
ஜெய்லாணி எல்லோருக்கும் பயனுள்ள நல்ல பதிவு.
// அந்த ஆப்பு சூப்பரு// ஹி ஹி
அப்படியே இஞ்சி சட்னியும் போடுங்க
பாண்டி அண்ணாத்தே, வேலன் சார் சொன்னத கரீட்டா நோட் பண்ணிட்டீங்களா? ..
//சி -யை மட்டும் எடுத்துக்கோ...உள்ளே தூசி இருப்பதுபோல் தெரிந்தால் சோப்பு.தண்ணீரை பக்கெட்டில் வைத்து அதில் முக்கி எடு ...வைரஸ் போயோ போச்//
இப்படியே சோப் தண்ணீல முக்கிட்டு நாளைக்கு கண்ண கசக்கிகிட்டு நிக்கக்கூடாது.
அஹா கெளம்பிட்டாங்கையா !! கேளம்பிட்டாங்கோ !!
உபயோகமான தகவல்கள் வாத்தியாரே..
goma-,Chitra வாங்க வாங்க.. வருகைக்கு நன்றி..
//Chitra said...
C - drive?//
இது பெருங்கதை தனி பதிவாக போடுகிறேன்.
//வேலன். said... சோப்பு.தண்ணீரை பக்கெட்டில் வைத்து அதில் முக்கி எடு //
ஹ..ஹ.. நல்ல ஐடியா சார் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//Jaleela said.. அந்த ஆப்பு சூப்பரு// ஹி ஹி
அப்படியே இஞ்சி சட்னியும் போடுங்க//
ஆகா!!! நம்ம ஆல் இன் ஆலே கேட்டுட்டாங்க அப்ப போட்டுடவேண்டியது தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
///SUFFIX said...
உபயோகமான தகவல்கள் வாத்தியாரே.//
சமீபத்தில் புகழ்பெற்ற பாடகரின் மகளின் லேப்டாப் ரிப்பேர். அதை கடையில் தர, அதில் சில அவரின் அரைகுறை படத்தை காட்டி மிரட்ட ரு 3 லட்சம் வரை தந்தும் முடியாமல் போலிஸ் வரை போனது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ஜெய்லானி என்ன புரியுதோ இல்லையோ நீங்க ஒரு கம்யூட்டர் மாஸ்டர்ன்னு புரியுது.எல்லாத்தையும் இனிமே தான் கத்துக்கணும்.
///asiya omar said...ஜெய்லானி என்ன புரியுதோ இல்லையோ .எல்லாத்தையும் இனிமே தான் கத்துக்கணும்.///
பிறக்கும் போதே யாரும் எதையும் கத்துக்கிட்டு பிறப்பதில்லையே.( அழுகையை தவிர )முயற்சி செய்தால் போதும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
உபயோகமான தகவல்கள்.இனி உங்களிடம் இருந்து இப்படி டெக்னிகல் விஷயங்களையும் எதிர் பார்க்கலாம்.
///ஸாதிகா said...உபயோகமான தகவல்கள்.இனி உங்களிடம் இருந்து இப்படி டெக்னிகல் விஷயங்களையும் எதிர் பார்க்கலாம்.///
பொது மக்களுக்கு பிடித்திருந்தால் தொடரலாம். யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்(பயபடாதீங்க )
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
உபயோகமான தகவல்கள்!
kavisiva ---தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
அட, டெக்னிக்கல் பதிவுகளுமா? ஆல் இன் ஆல்தான் போல!!
//ஹுஸைனம்மா -அட, டெக்னிக்கல் பதிவுகளுமா?//
ஏதோ தெரிந்த வரைக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))