Tuesday, February 9, 2010

மீண்டும் முயல் ஆமை

தலைமுறை மாறமாற அர்த்தங்களும் மாறிக்கொண்டேதான் வருகிறது. கேட்பவர்களும் அதையே மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு வருவதால் உண்மை எது பொய் எது என்று பிரித்து அறியாமல் தலைஆட்டுகிறோம். எப்படி?

சின்ன வயதில் பள்ளியில், ஓட்டபந்தையத்தில் முயல் தூங்கிவிட்டது. ஆமை தூங்காமல் ஓடி??? கோப்பையை வென்றது என்று கதை சொன்னார்கள் . நான் கேட்டேன், ஸார் போட்டி என்றால் சமமானவர்கள் தேவை. இங்கே ஜோடி பொருத்தமே சரி இல்லையே என்று. பதிலும் கிடைத்தது தலையில் நறுக்.. என்று. அதிலிருந்து நான் கேள்வியே கேட்பதில்லை.

முயல் என்பது நாம் பார்க்கும் காது நீண்டு உள்ள காட்டு விலங்கு இல்லை. முயல் என்றால் முயற்சி அல்லது முயற்சி செய் என்று அர்த்தம். சோம்பேறியாக இருக்காமல் முயன்றுக்கொண்டே இருக்கவேண்டும் அதாவது விடாமுயற்சியாக ஒரு செயலை செய்யவேண்டும். ஆமை என்பதும் அதைப்போலவே நாலு கால் பிராணி இல்லை. அமைதி அல்லது பொறுமை என்று பொருள். ஒரு செயலானது அவசரப்படாமல் பொறுமையாக முயற்சி செய்தால் அது கைக்கூடும் என்பதே!! இதன் முழுப்பொருள்.. நிதானம் அல்லது அமைதி இல்லாமல் வெறும் முயற்சி மட்டும் பலன் தராது. அது தடுமாற்றத்தில்தான் முடியும்.அதை போல எதையும் முயற்சி செய்யாமல் அமைதியாக இருப்பதும் வேலைக்காகாது. ஆக இரண்டுமே தேவை.
அடுத்தது

””மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்.””
நான் கேட்கிறேன், அப்பா என்ன பாவம் செய்தார்? உடன் பிறந்தவர்கள் என்ன தவறு புரிந்தார்??.ஏன் மாதாவை மட்டும் மறக்கவேண்டாம். மற்றவர்களை விட்டுவிடலாமா?? மா போன்ற பெரிய மரங்களையும், செடிக் கொடி போன்ற தாவரங்களையும் தினமும் நீர், உரம் போன்றவை போட்டு அதை மறக்காமல் பார்த்துக் கொண்டால். பெரிய மரங்கள் மழை பெய்யவும், பின் நிலத்தடி நீரை பிடித்து வைக்கவும், நிலச்சரிவிலிருந்து (சமீபத்தில் ஊட்டியில் நடந்தது) பாதுகாக்கவும் தேவை. நமக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் செடிக்கொடிகள் மூலமே கிடைக்கிறது. அப்படி மறந்தால் உணவுக்காக நாம் அலைய வேண்டிவரும்.(சோமாலியா நாட்டின் நிலை). தற்போது நிலை என்ன?. விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருகிறது. உணவு பற்றாக்குறை வந்தால் கருங்கல், செங்கலையா சாப்பிடமுடியும்.

ஆக நடப்பது என்ன? நாம் எதையுமே தீர விசாரிக்காமல் ஏட்டு சுரைக்காய்( அட நல்லாயிருக்கே அடுத்த பதிவில் பார்க்கலாம்) கறிக்குதவாது என்பது போல குழந்தைகளுக்கு சொல்லிவந்தால் 3020ல் கூட இந்தியா வல்லரசு ஆகாது.

டிஸ்கி:: சூடான கருத்துக்கள் வரவேற்கப்படும்.

21 என்ன சொல்றாங்ன்னா ...:

Unknown said...

அப்ப்பு நாங்களும் வந்திட்டம்

ஸாதிகா said...

அட ..நல்லா யோசித்து இருக்கின்றீர்கள் சகோதரரே!!

வேலன். said...

விததியாசமாக யோசித்திருக்கின்றீரகள். அருமை..வாழ்க வளமுடன், வேலன்.

Jaleela Kamal said...

””மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்.””

//அப்பா என்ன பாவம் செய்தார்//

நீங்கள் கேட்பதும் நியாயம் தான்.

டவுசர் பாண்டி said...

//அப்பா என்ன பாவம் செய்தார்? //

செர் தான் , நம்பளுக்கு மின்னாளியே ஜலீலா கேட்டுடாங்கோ !! செரி வேற இன்னா ,

//மா போன்ற பெரிய மரங்களையும், செடிக் கொடி போன்ற தாவரங்களையும் தினமும் நீர், உரம் போன்றவை போட்டு அதை மறக்காமல் பார்த்துக் கொண்டால்.//

அது இந்த மாவா !! இன்னாவோ கொயப்பமா
கீதே !! செரி இப்பிடியே வெச்சிக்கலாம் அப்ப தான் ஊரு பூரா மாங்கா மரமா இருக்கும் , எனுக்கு ரொம்ப புடிக்கும் பா !! அதனால இது கரீக்ட்டு தான் இன்னு ஒத்துக்கறேன் , !!

டவுசர் பாண்டி said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!//

இது வேறயா, எனுக்கு நடக்கும் போதே கண்ணு தெரியாது !! தூங்கும் போதாவது கண்ணு தெரிஞ்சா தானே , கனாவுல எதுனா ஹி ஹி ..... தெரியும் !!

Menaga Sathia said...

வித்தியாசமான சிந்தனை!!

அண்ணாமலையான் said...

நியாயமா கேக்கறீங்க..

வால்பையன் said...

//””மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்.””
நான் கேட்கிறேன், அப்பா என்ன பாவம் செய்தார்? //

இது மானாவுக்கு மானா! டெக்னிக்!
நாம் கூட எழுதலாம்!

அப்பாவை ஒருநாளும் அறைய வேண்டாம்!
(அப்போ அம்மாவை அறையலாமான்னு கேள்வி வரும்)

இது ஆனாவுக்கு ஆனா டெக்னிக்!

malar said...

’’’
சின்ன வயதில் பள்ளியில், ஓட்டபந்தையத்தில் முயல் தூங்கிவிட்டது. ஆமை தூங்காமல் ஓடி??? கோப்பையை வென்றது என்று கதை சொன்னார்கள் . நான் கேட்டேன், ஸார் போட்டி என்றால் சமமானவர்கள் தேவை. இங்கே ஜோடி பொருத்தமே சரி இல்லையே என்று.’’’



இது கர்வதுகும் பொறுமைக்கும் சொல்லும் கதை.


’’மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்’’

சரி அப்பாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்’’சேர்த்துக்கொள்ளுங்கள் .

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள், வித்தியாசமான சிந்தனை. நிமிர்ந்து உக்கார வைத்த கருத்துக்கள். இரண்டும் அருமை. மாதாவிற்கு விளக்கம் புதுமை, அருமை. நன்றி.

Henry J said...

Unga Blog Romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

High Definition Youtube Video Download free Click here

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Type anywhere in your language Type a word in English and press SPACE to transliterate

ஜெய்லானி said...

V.A.S.SANGAR-தங்கள் வருகைக்கு நன்றி
ஸாதிகா -தங்கள் வருகைக்கு நன்றி..
வேலன்.- தங்கள் வருகைக்கு நன்றி.
Jaleela - தங்கள் வருகைக்கு நன்றி.
டவுசர் பாண்டி -///அது இந்த மாவா !! இன்னாவோ கொயப்பமா
கீதே !! செரி இப்பிடியே வெச்சிக்கலாம் அப்ப தான் ஊரு பூரா மாங்கா மரமா இருக்கும் ///

இப்டி கொய்ம்பிதான் அசோகர் அன்னாதே ரோடு முழுக்கா புளி மரமா நட்டாரு!

///இது வேறயா, எனுக்கு நடக்கும் போதே கண்ணு தெரியாது !! தூங்கும் போதாவது கண்ணு தெரிஞ்சா தானே ///

வாஜாரே உனுக்கு தான் படத்திலே கண்ணாடி(சோடாபுட்டி) கீதே.
தங்கள் வருகைக்கு நன்றி.
Mrs.Menagasathia - தங்கள் வருகைக்கு நன்றி.
அண்ணாமலையான் - தங்கள் வருகைக்கு நன்றி.
வால்பையன்- ///இது மானாவுக்கு மானா! டெக்னிக்!
நாம் கூட எழுதலாம்!///
எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு..... தங்கள் வருகைக்கு நன்றி.
malar -//இது கர்வதுகும் பொறுமைக்கும் சொல்லும் கதை///
ஓட்டப் பந்தயத்திற்கு ஜோடி பொருத்தம் சரி இல்லையே!!
தங்கள் வருகைக்கு நன்றி.

பித்தனின் வாக்கு -இன்னும் சொல்லலாம் பதிவு நீண்டுவிடும் தங்கள் வருகைக்கு நன்றி

henry J -தங்கள் வருகைக்கு நன்றி

சாமக்கோடங்கி said...

அருமையான சிந்தனை.. வித்தியாசமான கோணம்.. ஓட்டு போட்டாச்சு...
தொடருங்கள் ஜெய்லானி...

நன்றி...

ஜெய்லானி said...

பிரகாஷ்-அடிக்கடி வாங்க- நன்றி

KarthigaVasudevan said...

நீங்க சொல்றதும் சரி தான்.முயலாமைக் கதைக்கும் மாதாவை மறக்க வேண்டாம்க்கும் நல்லா இருக்குங்க உங்க சிந்தனை.

ஜெய்லானி said...

KarthigaVasudevan -உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Tirupurvalu said...

Your thinking is tooooooooooooooooooooooooooooooooooooooooooo bad.Don't waste your time to think like this my dear fool

ஜெய்லானி said...

Abiramii Fashions --என்ன செய்ய மூளை இப்படி தானே போகுது. அடிக்கடி வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

kavisiva said...

"மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்"

வித்தியாசமான இன்றைய கால கட்டத்திற்கேற்ற விளக்கம்.

ஜெய்லானி said...

//kavisiva said..."மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்" வித்தியாசமான இன்றைய கால கட்டத்திற்கேற்ற விளக்கம்.//

இப்படி மறைமுகமா நிறைய இருக்கு. அன்றைய காலகட்டத்தில் நூறு வயது சர்வசாதாரணம். இப்போது ஆவரேஜ் ஐம்பத்திஐந்தாகி விட்டது.வியாதி நாற்பதில் தொடங்குகிறது.
அடிக்கடி வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))