ரொம்ப நாளைக்கி (வருஷங்கள் )பிறகு நம்ம தோஸ்த் ஒருத்தரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சு பேசிக்கிட்டு இருந்ததில் வீட்டுக்கு விருந்துக்கு அழைச்சார். பொதுவா யார் வீட்டுக்கும் போய் பழக்கம் இல்லாததால நழுவிக்கொண்டே இருந்தேன் . அன்னைக்கி பார்த்து என் கெட்ட நேரம் விடப் பிடியா தள்ளிக்கொண்டு போய்ட்டார் . அவங்க தங்ஸும் அன்பா நிறைய ஐட்டம் செய்து வச்சிருந்தாங்க. ((ஹை..சொல்ல மாட்டேனே ..! அதையெல்லாம் சொன்னா நீங்க கண்ணு போட்டுடூவீங்க ))
அடேய், நான் இன்னைக்கி விரதம்டான்னு (பொய்)சொல்லியும் விடல. வேற வழி .நாலு நாளைக்கி தாங்குற மாதிரி சாப்பிட்டேன் . (முழுக்க நனைஞ்ச பிறகு பாக்கெட்டில இருக்கிற கைகுட்டை இருந்தா என்ன நனைஞ்சா என்ன ஹி..ஹி..)). ஆனா தோஸ்த்தான் என் வாயயே ஒரு மாதிரி ஏக்கமா பார்த்துகிட்டு இருந்தான்.டேய் உன் தட்டை பார்டா இல்லாட்டி எனக்கு வயத்த வலிக்குமுன்னு சொன்னேன் . பயபுள்ள சொல்றான் .இல்லடா இத சாப்பிட்டா எனக்கு வயத்த வலிக்கும் .அதான் நீ சாப்பிடறதை பாக்குரேன் . (நா சாப்பிட்டது 5 முட்டை போட்ட ஆம்லெட் ))
![]() |
| யாரை பாத்து இன்னாங்கிரே.ஐயே...கீசிபுடுவேன் கீசி.... |
வித விதமா சாப்பிட்டதும் கைகழுவிவிட்டு பேசிக்கிட்டு இருக்கும் போது போரடிக்காம இருக்க ஃபிரெஞ்ச் ஃபிரையை (( கொஞ்சம் தாங்க அரை கிலோ )) ருசிச்சிகிட்டு இருந்தேன் . அப்பவும் அவன் என் வாயயே பார்த்துகிட்டு இருந்தான் ஆனா அவன் சாப்பிடல ..கேட்டா அதே பழைய பாட்டு .இதை சாப்பிட்டா எனக்கு வயத்த வலிக்கும் .இதையெல்லாம் விட்டு தலைமுழுகி பல வருஷமாச்சின்னுட்டான்
இப்ப இதை எல்லாம் சாப்பிடு ஒன்னும் ஆகாது . செலவு இல்லாத வைத்தியம் நான் தரேன்னு சொன்னதும் பயந்துகிட்டேதான் சாப்பிட்டான் சாப்பிட்டதும் நான் அதை குடுத்ததும் உடலுக்கு ஒன்னுமே ஆகல.. ஆனா ஆனது ஒன்னுதான் . அடுத்த தடவை 5 முட்டை ஆம்லெட்டு பதில் 2 முட்டை ஆம்லெட்தான் எனக்கு கிடைச்சது .அவ்வ்வ்
விஷயம் இதுதான் .. வீட்டு சாப்பாடா இருந்தாலும் சிலருக்கு கத்திரிகாய் , உருளை கிழங்கு , முட்டை இதுமாதிரி பொருட்களை சாப்பிட்டா அவர்களுக்கு வயிறு உப்பிக்கும் முதுகு , கால் , கை போன்ற இடங்களில் வாயு பிடிச்சிக்கும் , அசைக்க முடியாது . இன்னும் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் இருக்கும் ஈனாக். மாத்திரை , ஜெலுசில் இப்படி எதாவது சாப்பிடுவது . கடைசியில் எதுவும் சரியாகாமல் அந்த அந்த பொருட்களையே விட்டு விடுவது ..
![]() |
| அடேய் யார்ராஅவன் யானை குட்டியை ஆட்டோவில ஏத்தினது...?? :-)) |
சிலருக்கு வயிற்றில ஆசிட் அதிகம் சுரக்கும் . இது தெரிஞ்சி இருந்தா போதும். அவர்கள் ஏதாவது கடலை மிட்டாயோ இல்லை சுவீட்டோ சாப்பிடனும் ..அமிலத்தை நேராக்க இனிப்பு அல்லது வாழைப்பழம் ஒன்னுதான் வழி .அந்த நேரம் அது இல்லாம போனா குடல் எரிச்சல் வந்து அல்சராக போகும் .
இன்னும் சிலருக்கு ஆசிட்டை நேராக்கும் பித்த நீர் அதிகமானால் இனிப்பு , வாழைப்பழம் எதுவும் ஒத்து வராது அவங்களுக்கு கொத்து மல்லி இலை அதிகம் போட்டு எந்த வகையிலாவது சாப்பிட்டா சரி வரும் .ஓகே. ஆனா இதெல்லாம் எதுவும் சாப்பிடாதவங்களுக்கு .வயிறு காலிய இருப்பவங்களுக்கு மேலே சொன்னது. சாப்பிட்டதும் வரும் பிரச்சனைக்கு கீழே படிங்க
அதிகமில்லை ஜெண்டில் மேன் மற்றும் வுமன் .ரொம்ப சிம்பிளா கொஞ்சம் ஓமத்தை பவுடராக்கி அதில் நான்கில் ஒன்று உப்பு பவுடரையும் சேர்த்து அப்படியே வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் . 5 நிமிடத்தில் பலன் தெரியும் .அப்படி தெரியாவிட்டால் அதே போல இன்னொரு தடவை சாப்பிடுங்கள் போதும் . சுவிட்ஜை ஆஃப் செய்தால் எப்படி மின்சார பல்ப் எரிவதை நிறுத்துதோ அதே மாதிரி உங்க நெஞ்சி எரிச்சல், வயிறு உப்புதல், அடிக்கடி ஏப்பம் விடுதல் எல்லாமே பட்டுன்னு நின்னு போகும்
![]() |
| எழுந்து நிக்க தெம்பில்லைன்னு யார் சொன்னது ? |
புது ஓமம் நல்ல வாசனையா கலரா இருக்கும் அவரவர் வசதிக்கு தகுந்த மாதிரி (அதாவது பாட்டல் அல்லது பிளாஸ்டிக் டப்பா ) வாங்கி அதை பவுடராக்கி கூடவே உப்பையும் பவுடராக்கி மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும் (பழைய ஓமம் வாசனையும் இருக்காது பலனும் இருக்காது ) தேவைப்டும் போது சின்ன டீஸ்பூன் போதும் . தேவைப்பட்டால் வெளியூர் போகும் போதும்.கூடவே வைத்துக் கொள்ளலாம் . .கடையில் உள்ள ஓமநீர் தேவையில்லை . அதில் அதிக அளவு தண்ணீரோ இல்லை வேறு எதுவும் கலந்திருக்க சான்ஸ் இருக்கு அதனால்தான் .
டிஸ்கி : இனி ஆங்கில மருந்து பக்கம் போகாமல் டாக்டரிடம் போவதுக்கு முன் இதை முயற்சி செய்யுங்கள். இதுவும் பூண்டு வைத்தியம் மாதிரி 100 சதம் டெஸ்ட் செய்தது J





