Friday, March 11, 2011

ஒரு ரூபாயில் மருத்துவம் ...!!! --2

 
       ரொம்ப நாளைக்கி (வருஷங்கள் )பிறகு நம்ம தோஸ்த் ஒருத்தரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சு  பேசிக்கிட்டு இருந்ததில் வீட்டுக்கு விருந்துக்கு அழைச்சார். பொதுவா யார் வீட்டுக்கும் போய் பழக்கம் இல்லாததால நழுவிக்கொண்டே இருந்தேன் . அன்னைக்கி பார்த்து என் கெட்ட நேரம் விடப் பிடியா தள்ளிக்கொண்டு போய்ட்டார் . அவங்க தங்ஸும்  அன்பா நிறைய ஐட்டம் செய்து வச்சிருந்தாங்க. ((ஹை..சொல்ல மாட்டேனே ..! அதையெல்லாம் சொன்னா நீங்க கண்ணு போட்டுடூவீங்க ))
        அடேய்,  நான் இன்னைக்கி விரதம்டான்னு (பொய்)சொல்லியும் விடல. வேற வழி .நாலு நாளைக்கி தாங்குற மாதிரி சாப்பிட்டேன் . (முழுக்க நனைஞ்ச பிறகு பாக்கெட்டில இருக்கிற கைகுட்டை இருந்தா என்ன நனைஞ்சா என்ன ஹி..ஹி..)).  ஆனா தோஸ்த்தான் என் வாயயே ஒரு மாதிரி ஏக்கமா பார்த்துகிட்டு இருந்தான்.டேய் உன் தட்டை பார்டா இல்லாட்டி எனக்கு வயத்த வலிக்குமுன்னு சொன்னேன் . பயபுள்ள  சொல்றான் .இல்லடா இத சாப்பிட்டா எனக்கு வயத்த வலிக்கும் .அதான் நீ சாப்பிடறதை பாக்குரேன் . (நா சாப்பிட்டது  5 முட்டை போட்ட ஆம்லெட் ))
யாரை பாத்து இன்னாங்கிரே.ஐயே...கீசிபுடுவேன் கீசி....
   
     வித விதமா சாப்பிட்டதும் கைகழுவிவிட்டு பேசிக்கிட்டு இருக்கும் போது போரடிக்காம இருக்க ஃபிரெஞ்ச் ஃபிரையை (( கொஞ்சம் தாங்க அரை கிலோ ))  ருசிச்சிகிட்டு இருந்தேன் . அப்பவும் அவன் என் வாயயே  பார்த்துகிட்டு  இருந்தான் ஆனா அவன் சாப்பிடல ..கேட்டா அதே பழைய பாட்டு .இதை சாப்பிட்டா எனக்கு வயத்த வலிக்கும் .இதையெல்லாம் விட்டு தலைமுழுகி பல வருஷமாச்சின்னுட்டான்
       இப்ப இதை எல்லாம் சாப்பிடு ஒன்னும் ஆகாது . செலவு இல்லாத வைத்தியம் நான் தரேன்னு சொன்னதும் பயந்துகிட்டேதான் சாப்பிட்டான் சாப்பிட்டதும்  நான் அதை குடுத்ததும் உடலுக்கு ஒன்னுமே ஆகல..  ஆனா ஆனது ஒன்னுதான் . அடுத்த தடவை  5 முட்டை ஆம்லெட்டு பதில் 2 முட்டை ஆம்லெட்தான் எனக்கு கிடைச்சது .அவ்வ்வ்  
      விஷயம் இதுதான் .. வீட்டு சாப்பாடா இருந்தாலும் சிலருக்கு கத்திரிகாய் , உருளை கிழங்கு , முட்டை இதுமாதிரி  பொருட்களை  சாப்பிட்டா அவர்களுக்கு வயிறு உப்பிக்கும் முதுகு , கால் , கை போன்ற இடங்களில் வாயு பிடிச்சிக்கும் , அசைக்க முடியாது . இன்னும் சிலருக்கு நெஞ்சு எரிச்சல் இருக்கும் ஈனாக். மாத்திரை , ஜெலுசில்  இப்படி எதாவது  சாப்பிடுவது . கடைசியில் எதுவும் சரியாகாமல்  அந்த அந்த பொருட்களையே  விட்டு விடுவது ..

அடேய்  யார்ராஅவன் யானை குட்டியை  ஆட்டோவில ஏத்தினது...??  :-))

      சிலருக்கு வயிற்றில ஆசிட் அதிகம் சுரக்கும் . இது தெரிஞ்சி  இருந்தா போதும். அவர்கள் ஏதாவது கடலை மிட்டாயோ  இல்லை சுவீட்டோ சாப்பிடனும் ..அமிலத்தை நேராக்க இனிப்பு அல்லது வாழைப்பழம் ஒன்னுதான் வழி .அந்த நேரம் அது இல்லாம போனா குடல் எரிச்சல் வந்து  அல்சராக போகும் .
     இன்னும் சிலருக்கு ஆசிட்டை நேராக்கும் பித்த நீர்  அதிகமானால் இனிப்பு , வாழைப்பழம் எதுவும் ஒத்து வராது  அவங்களுக்கு கொத்து மல்லி இலை அதிகம் போட்டு எந்த வகையிலாவது  சாப்பிட்டா சரி வரும்  .ஓகே. ஆனா இதெல்லாம் எதுவும் சாப்பிடாதவங்களுக்கு .வயிறு காலிய இருப்பவங்களுக்கு மேலே சொன்னது. சாப்பிட்டதும் வரும் பிரச்சனைக்கு கீழே  படிங்க
       அதிகமில்லை  ஜெண்டில் மேன் மற்றும் வுமன் .ரொம்ப சிம்பிளா கொஞ்சம் ஓமத்தை பவுடராக்கி அதில் நான்கில் ஒன்று உப்பு பவுடரையும் சேர்த்து அப்படியே  வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் . 5 நிமிடத்தில்  பலன் தெரியும் .அப்படி தெரியாவிட்டால் அதே போல இன்னொரு தடவை சாப்பிடுங்கள் போதும் . சுவிட்ஜை  ஆஃப் செய்தால் எப்படி மின்சார பல்ப் எரிவதை நிறுத்துதோ  அதே மாதிரி உங்க நெஞ்சி எரிச்சல், வயிறு உப்புதல், அடிக்கடி ஏப்பம் விடுதல்  எல்லாமே பட்டுன்னு நின்னு போகும்
எழுந்து நிக்க தெம்பில்லைன்னு யார்  சொன்னது  ?  
     புது ஓமம் நல்ல வாசனையா  கலரா இருக்கும் அவரவர் வசதிக்கு தகுந்த மாதிரி (அதாவது பாட்டல் அல்லது பிளாஸ்டிக் டப்பா ) வாங்கி அதை பவுடராக்கி  கூடவே  உப்பையும் பவுடராக்கி மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும் (பழைய ஓமம் வாசனையும் இருக்காது பலனும் இருக்காது ) தேவைப்டும் போது சின்ன டீஸ்பூன் போதும் . தேவைப்பட்டால் வெளியூர் போகும் போதும்.கூடவே வைத்துக் கொள்ளலாம் . .கடையில் உள்ள ஓமநீர் தேவையில்லை . அதில் அதிக அளவு தண்ணீரோ  இல்லை வேறு எதுவும் கலந்திருக்க சான்ஸ் இருக்கு அதனால்தான் .
  டிஸ்கி :  இனி ஆங்கில மருந்து பக்கம் போகாமல் டாக்டரிடம் போவதுக்கு முன் இதை முயற்சி செய்யுங்கள். இதுவும் பூண்டு வைத்தியம் மாதிரி 100 சதம் டெஸ்ட் செய்தது  J  

90 என்ன சொல்றாங்ன்னா ...:

ராஜவம்சம் said...

நன்றி மருத்துவரே.

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துறியே மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால வடை போச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

// வித விதமா சாப்பிட்டதும் கைகழுவிவிட்டு பேசிக்கிட்டு இருக்கும் போது போரடிக்காம இருக்க ஃபிரெஞ்ச் ஃபிரையை (( கொஞ்சம் தாங்க அரை கிலோ )) ருசிச்சிகிட்டு இருந்தேன் .//

அதுதான் இப்பிடி தடியா இருக்கிரீரா ஒய்...

MANO நாஞ்சில் மனோ said...

//அடுத்த தடவை 5 முட்டை ஆம்லெட்டு பதில் 2 முட்டை ஆம்லெட்தான் எனக்கு கிடைச்சது .அவ்வ்வ்//

ஹா ஹா ஹா ஹா சொந்த செலவுல சூனியமா....

athira said...

அவ் வடையும் போச்சு வடை இருந்த தட்டும் போச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

ஹா..ஹா...ஹா..... ஆயாவையும் தூக்கிட்டுப் போயிட்டினம்.... வெல் டன்:).

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான மருத்துவம் நன்றி மக்கா ஆசிட்'டுக்கு ஸ்வீட்டா???
இது முன்னமே தெரியாம போச்சே மக்கா... வீனா ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சே....

ப.கந்தசாமி said...

ஆஹா, வைத்தியம் தெரிஞ்சு போச்சு, இனி எங்க போனாலும் வெளுத்துக் கட்டிடுவோமில்ல. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், ஜெய்லானி.

டாஸ்மாக் போனா என்ன வைத்தியம்னு சொன்னா ரொம்ப சௌகரியமாயிருக்கும், டாக்டர்.

MANO நாஞ்சில் மனோ said...

//athira said... 6
அவ் வடையும் போச்சு வடை இருந்த தட்டும் போச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

அய்யோ அம்மா கரடி உருமுது.....

MANO நாஞ்சில் மனோ said...

அப்பிடியே சிவந்த கண் வெள்ளை ஆகுரதுக்கு மருந்து சொல்லுங்க டாக்டர்.

vanathy said...

ஜெய், எப்படி இப்படியெல்லாம் அசத்துறீங்க!!! சூப்பர். எனக்கும் இந்த ஆசிட் பிரச்சினை இருக்கு. ஓமத்துக்கு நான் எங்கே போவதாம். இந்த இந்தியன் கடையில் நான் சொல்றது அந்தாளுக்கு விளங்காது. அந்தாள் சொல்றது எனக்கு விளங்காது. ஏதாச்சும் ஐடியா குடுங்கோ.

முதல் படம் சூப்பர். என் குட்டி பார்த்து இன்னும் சிரிச்சுட்டு இருக்கிறா.
ரண்டாவது படம் நம்ம பூஸாரோ???

ஹேமா said...

ஜெய்....மிகவும் அவசியமான மருத்துவக் குறிப்பு.

அதுசரி....நீங்க சொல்றதெல்லாம் நம்பலாமா?சின்னதா சந்தேகம்தான் வேறொண்ணுமில்ல !

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம்--// நன்றி மருத்துவரே. //

வாங்க நிஜாம் பாய் வாங்க..!! என்னது டாக்டரா..?ஹி..ஹி.. ஏதோ நமக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு உதவட்டுமே அதான் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ --// அசத்துறியே மக்கா....//

வாங்க...வாங்க..!! எது சாப்பாட்டிலா.. ஹி.. ஹி.. பயப்படாதீங்க அதெல்லாம் சும்மா கம்மியாதான் சாப்பிடுவேன் .:-))

//கொய்யால வடை போச்சே....//
அதான் சட்னி கிடைச்சி இருக்கே .

//// வித விதமா சாப்பிட்டதும் கைகழுவிவிட்டு பேசிக்கிட்டு இருக்கும் போது போரடிக்காம இருக்க ஃபிரெஞ்ச் ஃபிரையை (( கொஞ்சம் தாங்க அரை கிலோ )) ருசிச்சிகிட்டு இருந்தேன் .//

அதுதான் இப்பிடி தடியா இருக்கிரீரா ஒய்...//

கண்ணு போட்டுறாதீரும் ஓய்..இது வஞ்சனையில்லாம வளர்ந்த உடம்பு ஹா..ஹா..

////அடுத்த தடவை 5 முட்டை ஆம்லெட்டு பதில் 2 முட்டை ஆம்லெட்தான் எனக்கு கிடைச்சது .அவ்வ்வ்//

ஹா ஹா ஹா ஹா சொந்த செலவுல சூனியமா....//

ஆமப்பா ஆமாம் ..பாதி அவனே தின்னுட்டான்.. அவ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//அவ் வடையும் போச்சு வடை இருந்த தட்டும் போச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

வாங்க சகோஸ் வாங்க..!! அப்பவும் நீங்க முழுச்சிகிட்டு இருக்கும் போதுதானே போட்டேன் ... பரவாயில்லை ஒரு தட்டு அ கோ மு உள்ளே தனியே இருக்கு அது உங்களுக்குதான் :-)

// ஹா..ஹா...ஹா..... ஆயாவையும் தூக்கிட்டுப் போயிட்டினம்.... வெல் டன்:). //

ஆயாவை வச்சி என்ன ரிசர்ச்சா பண்ணப்போறீங்க ? ஹி..ஹி.. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//அருமையான மருத்துவம் நன்றி மக்கா ஆசிட்'டுக்கு ஸ்வீட்டா??? //

ம்...இது கிடைக்காட்டி ஐஸ் கிரீம் கூட சாப்பிடலாம் . பசி எடுக்காது .ஆசிடிட்டியும் இருக்காது (( சிலருக்கு பசி எது , அசிடிட்டி எதுன்னே தெரியாது ))

// இது முன்னமே தெரியாம போச்சே மக்கா... வீனா ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியதா போச்சே..//

ஹும்..டாக்டர் குடுத்து வச்ச ஆள்....இனி அவர் பாவம் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD --//ஆஹா, வைத்தியம் தெரிஞ்சு போச்சு, இனி எங்க போனாலும் வெளுத்துக் கட்டிடுவோமில்ல. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், ஜெய்லானி.//

வாங்க சகோ வாங்க..!! இனி கவல படாம வெளுத்து கட்டுங்க :-))

//டாஸ்மாக் போனா என்ன வைத்தியம்னு சொன்னா ரொம்ப சௌகரியமாயிருக்கும், டாக்டர்.//

அதை தெளிய வைக்க கொத்து மல்லி இலையை சட்னி மாதிரி செஞ்சி சாப்பிடுங்க .அப்பவே போதை கானாமப்போயிரும் .எப்பூடீ..ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ --//
athira --//
அவ் வடையும் போச்சு வடை இருந்த தட்டும் போச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

அய்யோ அம்மா கரடி உருமுது.....//

மக்கா கண்டஇடத்துல கடிச்சி வச்சிருவாங்க ..ஜாக்கிரத...அப்புறம் ஊசிக்கு என் கிட்டேதான் வரனும் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//அப்பிடியே சிவந்த கண் வெள்ளை ஆகுரதுக்கு மருந்து சொல்லுங்க டாக்டர்.//

மப்பு அடிச்சி மட்டையாகாம இருந்தாலே போதுமே ..!! இன்னொரு சுலப வழி இருக்கு .ஆனா அதை பப்ளிக்குல சொன்னா தாய்குலம் நம்மளை பெண்டு நிமித்திடுவாங்க .ஹி..ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Mohamed Faaique said...

நன்றி... நல்ல குறிப்பு...

ஜெய்லானி said...

@@@vanathy --//ஜெய், எப்படி இப்படியெல்லாம் அசத்துறீங்க!!! சூப்பர். எனக்கும் இந்த ஆசிட் பிரச்சினை இருக்கு. ஓமத்துக்கு நான் எங்கே போவதாம். இந்த இந்தியன் கடையில் நான் சொல்றது அந்தாளுக்கு விளங்காது. அந்தாள் சொல்றது எனக்கு விளங்காது. ஏதாச்சும் ஐடியா குடுங்கோ. //

வாங்க வான்ஸ் வாங்க..!!நீங்க வீட்டிலேயே இருக்கக்கூடிய ஆள்தானே .டயமுக்கு சாப்பிடுங்க .நேரம் தவறுகிற மாதிரி இருந்தா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க ..(( சாக்லேட் , பிஸ்கெட் வேண்டாம் )) . இந்தியக்கடைகளில் ஹிந்தி ,உருது பேசக்கூடிய ஆள் இருந்தால் ””அஜ்வான்”” (( ajwain )) அப்படின்னு சொன்னா அவனே எடுத்து கொடுப்பான்

// முதல் படம் சூப்பர். என் குட்டி பார்த்து இன்னும் சிரிச்சுட்டு இருக்கிறா.
ரண்டாவது படம் நம்ம பூஸாரோ??? //

ஹா..ஹா.. அவர் ஆயாவை வைச்சி ஏதோ ரிசர்ச செயய்ப்போரார் போல ..ஹி..ஹி.. மி எஸ்ஸ்ஸ்கேப்ப் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா --//ஜெய்....மிகவும் அவசியமான மருத்துவக் குறிப்பு. //

வாங்க குழந்தை நிலா வாங்க..!! சந்தோசம் .தெரிஞ்சவருக்கும் சொல்லுங்க .அவர் உங்களை வாழ்த்துவார்

//அதுசரி....நீங்க சொல்றதெல்லாம் நம்பலாமா? சின்னதா சந்தேகம்தான் வேறொண்ணுமில்ல ! //

அனுபவமுன்னு லேபில் இருந்தா தைரியமா நம்பலாம் . அது இல்லாட்டி பாதிக்கு பாதி கிண்டலா இருக்கும் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique --// நன்றி... நல்ல குறிப்பு...//

வாங்க ..வாங்க...!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

athira said...

ஆ... ஒரு ரீ குடிச்சிட்டு வாறதுக்குள் நிறைய விஷயங்கள் போச்சே... ஜெய் ஆயாவைத் தூக்கினபின்னாடிதான் நான் இங்கு வந்தேன்.... இல்லாவிட்டால் ஆயாவை என் தலையில கட்டியிருப்பினம் மக்கள்ஸ்ஸ் எல்லோரும் சேர்ந்து... சரி அதை விடுங்க, நான் முழிச்சிட்டு இருந்தது மட்டுமில்ல, இன்று வீட்டிலிருந்தேன்.. இருந்தும் வடை கிடைக்கலா..

விஷயத்துக்கு வருவம். எங்கட ஹைஷ் அண்ணன் மாதிரி நகைச்சுவையோடு சேர்த்து மருத்துவத்தையும் சொல்றீங்க அதால மக்கள்ஸ்ஸ் மறக்கமாட்டம் ....

உண்மைதான் பழசை வச்சு பாவித்தால் பலனில்லை என்றுதான் நானும் கேள்விப்பட்டேன், ஆனா வான்ஸ் சொன்னதுபோல இங்கயும் எல்லாம் வாங்க முடியாது, அதனால கிடைக்கும்போது கொஞ்சம் அதிகமாக வாங்கி வந்திடுவேன், ஓமம் பவுடராக்காமல் வைத்திருந்தால் பழுதாகாதுதானே? என்னிடம் அப்புடி இருக்கு.

ஓ... அஜ்வான் என்றுதான் இங்கயும் கிடைக்குது.. அது ஹிந்தியா?:))..

//முதல் படம் சூப்பர். என் குட்டி பார்த்து இன்னும் சிரிச்சுட்டு இருக்கிறா.
ரண்டாவது படம் நம்ம பூஸாரோ???/// கர்ர்ர்ர்ர் , ஜெய் இதுக்குத்தான் சொல்றது பூஸாரின் படம் போடோணும் என, போட்டிருந்தா இப்பூடியெல்லாம் கேக்க வேண்டி வருமோ?:))

ஜெய் எனக்கொரு சந்தேகம்... கரடியும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றுதான் உறுமுமோ?:))))

athira said...

முதல்படம்.... இருவருக்கும் எழுந்து நிக்கவே திராணியில்லை.... அதுக்குள் கீசியாம் கீசி..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ரெண்டாவது படம்:... நோ கொமெண்ட்ஸ்ஸ்ஸ்:))).

athira said...

இப்படி ஓமமும் உப்பும் சாப்பாடின் பின்புதானே சாப்பிட வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை தடவை எடுக்கலாம்?

ஜெய்லானி said...

@@@athira--// ஆ... ஒரு ரீ குடிச்சிட்டு வாறதுக்குள் நிறைய விஷயங்கள் போச்சே... //

வாங்க..வாங்க..!! ஒரு டீ--யின் சைஸ் என்ன 40 லிட்டர் இருக்குமோ ஹி...ஹி.... நான் கேக்கல..வான்ஸ் கேக்க சொன்னது இது .க்கி...க்கீ...
//ஜெய் ஆயாவைத் தூக்கினபின்னாடிதான் நான் இங்கு வந்தேன்.... இல்லாவிட்டால் ஆயாவை என் தலையில கட்டியிருப்பினம் மக்கள்ஸ்ஸ் எல்லோரும் சேர்ந்து... சரி அதை விடுங்க, நான் முழிச்சிட்டு இருந்தது மட்டுமில்ல, இன்று வீட்டிலிருந்தேன்.. இருந்தும் வடை கிடைக்கலா..//

ஓஹ்...குப்புற படுத்து யோசிச்சும் ..(( நாந்தான் ))>> அவ்வ்வ்வ்

// விஷயத்துக்கு வருவம். எங்கட ஹைஷ் அண்ணன் மாதிரி நகைச்சுவையோடு சேர்த்து மருத்துவத்தையும் சொல்றீங்க அதால மக்கள்ஸ்ஸ் மறக்கமாட்டம் ....//

மறக்காம இருந்தால் மக்களுக்கு நல்லது.மறந்துட்டா டாக்டெர்ஸுக்கு நல்லது

// உண்மைதான் பழசை வச்சு பாவித்தால் பலனில்லை என்றுதான் நானும் கேள்விப்பட்டேன், ஆனா வான்ஸ் சொன்னதுபோல இங்கயும் எல்லாம் வாங்க முடியாது, அதனால கிடைக்கும்போது கொஞ்சம் அதிகமாக வாங்கி வந்திடுவேன், ஓமம் பவுடராக்காமல் வைத்திருந்தால் பழுதாகாதுதானே? என்னிடம் அப்புடி இருக்கு. //

ம் ..புதியதை அப்படியே மிக்ஸியில் இட்டு கூடவே கொஞ்சம் உப்பையும் போட்டு நாலைந்து சுற்றீனால் நல்லா பவுடராகிடும் .அபப்டியே காற்றுப்போகாத பாட்டில் இல்லை பிளாஸ்டிக் டப்பாவில போட்டு வையுங்க . கெட்டுப்போகாது . (( புதியது கரும்பச்சை வெளிர் கலரில் நல்ல வாசனையா இருக்கும் . பழையது வெளிர் கலரில் தனியா கலரில்(கொத்து மல்லி விதை))இருக்கும் .வாசனையும் குறைவாதான் இருக்கும்

// ஓ... அஜ்வான் என்றுதான் இங்கயும் கிடைக்குது.. அது ஹிந்தியா?:))..

ம் அதுதான் ஒரிஜினல் உருதுப்பெயர் ..ஹிந்தியிலும் அதுதான் சொல்வாங்க ..

//முதல் படம் சூப்பர். என் குட்டி பார்த்து இன்னும் சிரிச்சுட்டு இருக்கிறா.
ரண்டாவது படம் நம்ம பூஸாரோ???/// கர்ர்ர்ர்ர் , ஜெய் இதுக்குத்தான் சொல்றது பூஸாரின் படம் போடோணும் என, போட்டிருந்தா இப்பூடியெல்லாம் கேக்க வேண்டி வருமோ?:))///

இன்னும் சில நிமிடங்களில் ஆசை பூர்த்தி செய்யப்படும் :-))

//ஜெய் எனக்கொரு சந்தேகம்... கரடியும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றுதான் உறுமுமோ?:))) //

அது கர் இல்லை உர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு தான் உறுமும் :-))
//முதல்படம்.... இருவருக்கும் எழுந்து நிக்கவே திராணியில்லை.... அதுக்குள் கீசியாம் கீசி..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். //

ஹா..ஹா..அதானே..!!

//ரெண்டாவது படம்:... நோ கொமெண்ட்ஸ்ஸ்ஸ்:))). //
ஏன் நீங்களும் இல்ஸும் இப்படிதானே சைடில வளர்வதா சொன்னீங்க ஹி.....ஹி...

//இப்படி ஓமமும் உப்பும் சாப்பாடின் பின்புதானே சாப்பிட வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை தடவை எடுக்கலாம்? //

இதுவும் மருந்துப்போலதான் .ஆனா மருந்து இல்லை.. எப்போது அது மாதிரி ஃபீலிங் வருதோ அப்போ சாப்பிடலாம் . இதே பால் குடிக்கும் சிறு பிள்ளையா (குழந்தையா) இருந்தா ஒரு டீஸ்பூன் பவுடரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைத்து அதுக்கூட உப்புக்கு பதில் சீனி சேர்த்து ஃபீடிங்க் பாட்டிலில் குடுக்கலாம் .

((குழந்தை பால் குடிக்கும் போது கூடவே காற்றும் உள்ளே போய்டும் .படுக்க வைத்தும் காற்றூடன் பாலும் வெளியே தயிர் மாதிரி வந்துடும் , ஒரு வேளை காற்று வெளியே வராவிட்டால் குழந்தைக்கு வயிறு உப்பிடும் . அதுக்கு மேலே சொன்ன மாதிரி குடுத்தால் சரியாகிடும் --இல்லாவிட்டால் குழந்தை ஏன் அழுகிறதுன்னு தெரியாம டாக்டரிடம் ஓட வேண்டு வரும் -- குழந்தை பவுடரை செரிகக் வைக்க முடியாது அதனால தண்ணீர் . நமக்கு தண்ணீர் சரிவராது அதனால் டைரக்டா பவுடர் ))
இதனால் வயசு வித்தியாசம் தெரியாமல் யார் வேனுமின்னாலும் எப்ப வேனுமின்னாலும் சாப்பிடலாம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

very interesting.பின்னூட்டமே பின்னி பெடல் எடுக்குதே!

குறையொன்றுமில்லை. said...

அனை வருக்குமே பயன்படும் தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி

பொன் மாலை பொழுது said...

போற போக்க பாத்தா நம்ம ஜெய்லானி
" இவ்விடம் நாட்டு வைத்தியம் செய்யப்படும் " போர்டு போட வேண்டி இருக்கும் போல.
என்ன இருந்தாலும் "டாகுடறு" இல்லையா??
நல்ல வழிமுறைகள் ஜெய்லா. :))))

Chitra said...

consulting fees வாங்காதது ஒன்றுதான் குறை! நடத்துங்க.... நடத்துங்க....

ம.தி.சுதா said...

எல்லாரும் இப்புடி கிளம்பீட்ட லட்சம் செலவளித்த வைத்தியர்கள் பாவமில்லையா ? ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

athira said...

////ரெண்டாவது படம்:... நோ கொமெண்ட்ஸ்ஸ்ஸ்:))). //
ஏன் நீங்களும் இல்ஸும் இப்படிதானே சைடில வளர்வதா சொன்னீங்க ஹி.....ஹி...

/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது அப்போ, இப்பத்தான் ஆரும் பிச்சுப்பிச்சுத் தாறேல்லையே எங்களுக்கு.. அப்போ நாங்க எப்படி வளருறதாம்:)).

பதில்களுக்கு நன்றி.நாங்களும் எம் பிள்ளைகளுக்கு, ஒரு வயதுவரை, தினமும் காலையில் ஒரு தே.க ஓமத்தை கொதி நீரில் ஊறவிட்டு, பின் நன்கு துணியில் வடித்துக் கொடுப்போம்.... அதனால் எப்போதும் எந்த வயிற்றுப் பிரச்சனையும் வந்ததில்லை அவர்களுக்கு.... அதை இப்போ நினைக்க வச்சிட்டீங்க.

ஸாதிகா said...

ஏனுங்கோ,பூண்டு விற்கிற விலையில் ஒரு ரூபா வைத்தியம் என்று போட்டீர்கள்.இப்ப ஓமம்.உங்கள் ஊரில் ஒரு ரூபாய்க்கு ஓமம் தருவாங்களா என்ன?

//அடேய், நான் இன்னைக்கி விரதம்டான்னு (பொய்)சொல்லியும் விடல// விருந்துக்கு போய்ட்டு மேலே கண்ட வாரத்தையை உபயோகித்த ஒரே விருந்தாளி நீங்களாகத்தான் இருக்கும்.

GEETHA ACHAL said...

அருமையான பயனுள்ள பதிவு...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்..தொடரட்டும் உங்கள் பணி...

தூயவனின் அடிமை said...

ஆஹா ரகசியம் வெளியாகிவிட்டது, டெய்லி கம்சா பஹம் லஹம் தான்.

அஸ்மா said...

நல்ல வைத்தியம் சகோ! குழந்தைகளுக்கு நீங்க சொல்வதுபோல் கஷாயமாக செய்து கொடுத்திருக்கோம். ஆனா இப்படி உப்பு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டதில்லை.

அதுசரி.., வாய்க்கொழுப்புக்கு ஒரு ரூபாயில் மருந்தில்லையோ? அப்படீன்னு நான் கேட்கல..! 1/2 கிலோ ஃப்ரெஞ்ச் ஃப்ரை சாப்பிட்டவங்களுக்குதான் கேட்டேன் :))) எஸ்கேப்...!

isaianban said...

அருமையான பதிவு டாகுடர்ரு ஜெய்லானி வாழ்க. (அப்பா கமெண்ட் போட்டாச்சு கண்ணு தெரியும்)

ஜெய்லானி said...

@@@asiya omar-// very interesting.பின்னூட்டமே பின்னி பெடல் எடுக்குதே! //

வாங்க ஆசியாக்கா வாங்க..!!எனக்கு ஒத்த வரியில பதில் போடத்தெரியாதே.. :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸாதிகா said...

அஸ்மா said...

//அதுசரி.., வாய்க்கொழுப்புக்கு ஒரு ரூபாயில் மருந்தில்லையோ? அப்படீன்னு நான் கேட்கல..! 1/2 கிலோ ஃப்ரெஞ்ச் ஃப்ரை சாப்பிட்டவங்களுக்குதான் கேட்டேன் :))) //

அஸ்மா,வாய் கொழுப்பு குறைய அருமையான மருந்து ஒன்றுள்ளது.இரண்டு டம்ளர் நீரில் முக்கால் டம்ளர் உப்பு,முக்காலே அரைக்கால் டம்ளர் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி,ஒரு டம்ளர் ஆகும் வரை வற்ற காய்ச்சி,சிறிதும் சூடு குறையாமல் அப்படியே ஒரே மடக்கில் குடித்தால் ஒரே நாளில் நீங்கள் குறிப்பிட்ட வாய்க்கொழுப்பு உடனே குறையாது.மறைந்தே விடும்.1/2 கிலோ பிரஞ்ச் ஃபிரை சாப்பிடுபவர்களை செயல்முறிப்படுத்தச்சொல்லுங்கள்.

ஜெய்லானி said...

@@@Lakshmi--//அனை வருக்குமே பயன்படும் தகவல் சொல்லி இருக்கீங்க. நன்றி //

வாங்க...வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம் -//போற போக்க பாத்தா நம்ம ஜெய்லானி
" இவ்விடம் நாட்டு வைத்தியம் செய்யப்படும் " போர்டு போட வேண்டி இருக்கும் போல.//


வாங்க..வாங்க..!! அப்படி ஒரு ஐடியா இல்லை நேரடியா நம்ம குரு பட்டா மாதிரி இவ்விடம் ஆபரேஷன் செய்யப்படுமுன்னு போர்டு போடலாம்ன்னு இருக்கேன் .முதலில் வருபவருக்கே முன்னுரிமை..ஆமா நீங்க எப்போ வறீங்க ..? ஹி.ஹி..

// என்ன இருந்தாலும் "டாகுடறு" இல்லையா??
நல்ல வழிமுறைகள் ஜெய்லா. :)))) //

ம் ஆமா இன்னும் இதுல எம் டி , எஃப் ஆர் சி எஸ் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra --//consulting fees வாங்காதது ஒன்றுதான் குறை! நடத்துங்க.... நடத்துங்க....//

வாங்க சித்ராக்கா வாங்க ..!! பிளாக் ,ஃபேஸ்புக்கில ரொம்ப மொக்க போட்டு சில பேருக்கு வயித்து வலி வந்துப்போச்சாம் அதான் வழி முறை சொல்லிகிட்டு இருக்கேன் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

உபயோகமான எளிய மருத்துவம்தான்

ஜெய்லானி said...

@@@♔ம.தி.சுதா♔ --//எல்லாரும் இப்புடி கிளம்பீட்ட லட்சம் செலவளித்த வைத்தியர்கள் பாவமில்லையா ? ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா //

வாங்க மதி வாங்க.!! லட்சம் செலவழிச்ச டாக்டர் எல்லாம் ஆயிரக்கணக்கில நம்ம கிட்ட பிடுங்கினா என்ன ஆகிறது .ஒரு வேளை நீங்க டாகடரோ :-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --///ரெண்டாவது படம்:... நோ கொமெண்ட்ஸ்ஸ்ஸ்:))). //
ஏன் நீங்களும் இல்ஸும் இப்படிதானே சைடில வளர்வதா சொன்னீங்க ஹி.....ஹி...

/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது அப்போ, இப்பத்தான் ஆரும் பிச்சுப்பிச்சுத் தாறேல்லையே எங்களுக்கு.. அப்போ நாங்க எப்படி வளருறதாம்:)). //


வாங்க..அதீஸ் வாங்க..!!ஹா..ஹா.. அப்போ யாரோ பூஸுக்கு மணிகட்டிட்டாங்க போல அதான் முதல் வடை கிடைக்கிறதில்லை . :-)))

// பதில்களுக்கு நன்றி.நாங்களும் எம் பிள்ளைகளுக்கு, ஒரு வயதுவரை, தினமும் காலையில் ஒரு தே.க ஓமத்தை கொதி நீரில் ஊறவிட்டு, பின் நன்கு துணியில் வடித்துக் கொடுப்போம்.... அதனால் எப்போதும் எந்த வயிற்றுப் பிரச்சனையும் வந்ததில்லை அவர்களுக்கு.... அதை இப்போ நினைக்க வச்சிட்டீங்க. ///

ம் அதேதான் .எப்பவும் சொந்தமா செய்வதில் நிறைய சந்தோஷம் இருக்கு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஏனுங்கோ,பூண்டு விற்கிற விலையில் ஒரு ரூபா வைத்தியம் என்று போட்டீர்கள்.இப்ப ஓமம்.உங்கள் ஊரில் ஒரு ரூபாய்க்கு ஓமம் தருவாங்களா என்ன? //

வாங்க ஸாதிகாகா வாங்க..!! 2 திர்ஹம்ஸ் குடுத்தா 200 கிராம் இங்கே குடுக்கிறாங்க ஹி..ஹி.. சில ரூபாய்களில்-ன்னு போடலாமுன்னுதான் முதல்ல நினைசேன் .டாக்டர் கன்சல்டிங்க் பீஸே 50 , 100ன்னு ஆகும் போது இது ஈஸியா எல்லாருடைய மனசிலயும் பதியுமுன்னு போட்டது :-))

//அடேய், நான் இன்னைக்கி விரதம்டான்னு (பொய்)சொல்லியும் விடல// விருந்துக்கு போய்ட்டு மேலே கண்ட வாரத்தையை உபயோகித்த ஒரே விருந்தாளி நீங்களாகத்தான் இருக்கும்.//

ஹா..ஹா.. இது அடிக்கடி நான் கடிக்கும் கடி இது .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL --// அருமையான பயனுள்ள பதிவு...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்..தொடரட்டும் உங்கள் பணி...//

வாங்க ..வாங்க..!! ம்...பிராப்ளம் வந்தா டிரை பண்ணிப்பாருங்க ..!! ஆனா இப்படியே நான் போனா அப்புறம் சித்த வைத்திய சிகாமனி ன்னு யாராவது சொல்லிடுவாங்க . அதனால மொக்கைகளுக்கு நடுவில இப்படி ஏதாவது போடுரேன் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன் --// ஆஹா ரகசியம் வெளியாகிவிட்டது, டெய்லி கம்சா பஹம் லஹம் தான்.//

வாங்க சகோ வாங்க..!! அப்போ இத்தனை நாளா ஃபாஹிம் லஹம் பார்த்து ஓடிகிட்டு இருந்தீங்களா ஹா..ஹா..இனி பூந்து விளையாடுங்க .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அஸ்மா--// நல்ல வைத்தியம் சகோ! குழந்தைகளுக்கு நீங்க சொல்வதுபோல் கஷாயமாக செய்து கொடுத்திருக்கோம். ஆனா இப்படி உப்பு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டதில்லை.//

வாங்க சகோஸ் வாங்க..!! நமக்கு( பெரியவங்களுக்கு ) சீனி ஒத்து வராது .அதனால உப்பு இது உடனே ஜீரனிக்க வசதியா இருக்கும்

//அதுசரி.., வாய்க்கொழுப்புக்கு ஒரு ரூபாயில் மருந்தில்லையோ? அப்படீன்னு நான் கேட்கல..! 1/2 கிலோ ஃப்ரெஞ்ச் ஃப்ரை சாப்பிட்டவங்களுக்குதான் கேட்டேன் :))) எஸ்கேப்...! //

ஒரு ரூபாய்க்கு வைத்தியம் இல்லை ஆனா என் சொந்தக்காரி பக்கத்தில இருந்தா வாயை திறக்கவே மாட்டேன்..ஹி..ஹி...((வாயிலேயே பொத்துன்னு ஒன்னு விழுந்துட்டா )). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@isaianban--// அருமையான பதிவு டாகுடர்ரு ஜெய்லானி வாழ்க. (அப்பா கமெண்ட் போட்டாச்சு கண்ணு தெரியும்) //

வாங்க சகோ வாங்க..!! கண்ணு மேலே அவ்வளவு பயமா ஹி....ஹி... (ஹும் ...எப்படியெல்லாம் பயம் காட்டி கமெண்ட் போட வைக்க வேண்டி வருது ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --//அஸ்மா,வாய் கொழுப்பு குறைய அருமையான மருந்து ஒன்றுள்ளது.இரண்டு டம்ளர் நீரில் முக்கால் டம்ளர் உப்பு,முக்காலே அரைக்கால் டம்ளர் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி,ஒரு டம்ளர் ஆகும் வரை வற்ற காய்ச்சி,சிறிதும் சூடு குறையாமல் அப்படியே ஒரே மடக்கில் குடித்தால் ஒரே நாளில் நீங்கள் குறிப்பிட்ட வாய்க்கொழுப்பு உடனே குறையாது.மறைந்தே விடும்.1/2 கிலோ பிரஞ்ச் ஃபிரை சாப்பிடுபவர்களை செயல்முறிப்படுத்தச்சொல்லுங்கள். //


வாங்க ஸாதிகாக்கா வாங்க ..!! ஏன் இந்த கொல வெறி....!! நல்ல வேளை அதை கண்ணுல போட்டுக்கனுமின்னு சொல்லாம விட்டீங்களே மகராசி நீங்க நல்லா இருக்கோனும் அவ்வ்வ்வ்வ் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@thirumathi bs sridhar --//உபயோகமான எளிய மருத்துவம்தான் //

வாங்க ஆச்சி வாங்க..!!ம் ஆமாங்க இது ரொம்ப சிம்பிளான மருத்துவம்தான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jey said...

ஜெய்லானி, நன்றி ராசா, இதுநாள் வரைக்கும் ஜெலுசில் சாப்டுகிட்டிருந்தே. இனி அதிலிருந்து விடுதலை. நன்றி.

athira said...

3வது படம்....: ஆளைவிடுங்க நானில்லை.... நானில்லை......

ஊசிக்குறிப்பு:
படம் பார்த்தபின்பும், தேஏஏஏகிரியம் இருந்தால் ஆரும் எதிர்ப்பினமோ பூஸாரை இனிமேல்...:))).

சாந்தி மாரியப்பன் said...

ஓமம் மட்டுமல்ல.. இங்கெல்லாம் வறுத்த பெருஞ்சீரகத்தையும் கொஞ்சூண்டு சாப்டுவாங்க..

எம் அப்துல் காதர் said...

ஏற்கனவே கொடுத்த பூண்டுக்கே உன்னைப்பிடி என்னை பிடின்னு கிடக்கு. இதுல ஓமம் வேறயா. நல்லா இருங்க மக்கா. இருங்க படிச்சிட்டு வர்றேன். மியாவ்!!

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

//என் சொந்தக்காரி பக்கத்தில இருந்தா வாயை திறக்கவே மாட்டேன்..ஹி..ஹி...((வாயிலேயே பொத்துன்னு ஒன்னு விழுந்துட்டா)). //

பார்த்து பார்த்து உங்க வயிறு நிறைய செய்து போட்டக் கை, வாயிலும் போட்டா ரெண்டு போடு என்னவாம் செல்லம். நல்ல போடுங்க தாயீ... ஹி.. ஹி.. ஹி.. ஹி ஈ.. ஈ ஈ

எம் அப்துல் காதர் said...

// வாங்க வான்ஸ் வாங்க. டயமுக்கு சாப்பிடுங்க. நேரம் தவறுகிற மாதிரி இருந்தா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க.//

அப்படியே வெய்ட் போட்டுட்டா கொஞ்சம் பூண்டு வாயில் போட்டு சுடு தண்ணி குடிங்கன்னு அதையும் சேர்த்து சொல்லிட வேண்டியது தானே!! (ஏற்கனவே அவிடத்தில் எடை பார்க்கிற மெசினை தேடிகிட்டிருக்கிறதா தகவல்!! அவ்வ்வ்வ்...!!

எம் அப்துல் காதர் said...

// யாரை பாத்து இன்னாங்கிரே.ஐயே...கீசிபுடுவேன் கீசி....//
நமக்குள் இந்த வெளாட்டெல்லாம் வேணாம் சொல்லிட்டேன் ஹக்காங்!!!

எம் அப்துல் காதர் said...

//எழுந்து நிக்க தெம்பில்லைன்னு யார் சொன்னது ? //

அத்த.. ஆசனம் செய்பவரிடம் கேளுங்க க்கி..க்கி..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அன்புடன் அறிவுரைக்கும் ஆலோசனைக்கும்
ஆயிரம் நன்றிகள்!

vanathy said...

//அப்படியே வெய்ட் போட்டுட்டா கொஞ்சம் பூண்டு வாயில் போட்டு சுடு தண்ணி குடிங்கன்னு அதையும் சேர்த்து சொல்லிட வேண்டியது தானே!! (ஏற்கனவே அவிடத்தில் எடை பார்க்கிற மெசினை தேடிகிட்டிருக்கிறதா தகவல்!! அவ்வ்வ்வ்...!! //

நாட்டாமை. பொய் பிரச்சாரம் பண்ண படாது. 50 kg தாஜ்மகால் ஆக்கும் நான்.

apsara-illam said...

சலாம் ஜெய் சகோதரரே...,மிகவும் நல்ல குறிப்பு நகைச்சுவையோடு....
ஓமத்தோடு உப்பு...உண்மையிலேயே புதுசா கேக்குறேன்.செயல்படுத்திட வேண்டியதுதான்.எங்க வீட்டிலேயும் நிறைய அசிடிட்டி கேஸ் இருக்கோமுங்க...
எங்க அம்மா எப்பவுமே... மூணு இட்லி சாப்ட்டா கூட ஒரு கல் உப்பை வாயில் வைப்பாங்க... செரிப்பதற்க்காம்.
அப்ப உங்களை மாதிரி ஐந்து ஆம்லெட் சாப்பிட்டவர்களுக்கெல்லாம்??????
நல்லா சாப்பிட்டு நல்லா வைத்தியமும் செய்துகிட்டீங்க...குட் குட்...
இருந்தாலும் இன்னும் என்னன்ன விழுங்குனிங்கன்னு... ஸாரி ஸாரி... என்னன்ன சாப்ட்டீங்கன்னு சொல்லியிருக்கலாம்.

அன்புடன்,
அப்சரா.

jothi said...

ந‌கைச்சுவையோடு நீங்க‌ள் மெஸேஜை சொல்லுவ‌து அழ‌கு,.. வ‌ழ‌க்க‌ம் போல் க‌ல‌க்க‌ல்

Angel said...

உபயோகமான தகவல் .நன்றி ஜெய்லானி.
fennel ,anis இது ரெண்டும் சேர்ந்த ஒரு டீ கடையில கிடைக்குது .
அது உடம்புக்கு நல்லதா என்று ட்ரை செஞ்சு
பார்த்து விட்டு சொல்லுங்க

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

டாக்குடர்.. சீக்கிரமா ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல நிக்கிற வழியப் பாருங்க :)

எப்பிடியும் இங்க ஓமம் கிடைக்கப் போறதில்ல.. அதனால நாங்க எஸ்கேப்பு எஸ்கேப்பு..

பாச மலர் / Paasa Malar said...

ஜெய்லானி..அதிகமா சமையல் குறிப்புகள் பகுதிகள் பார்த்தன் விளைவோ...

DR said...

ஒரே ஒரு மருந்து இருக்கணும், அதுல என்னோட எல்லா வியாதியும் குணமாகனும்... உங்ககிட்ட அந்த மருந்து இருக்குதா ?

யே அப்பா.... பயங்கரம் தான்...

erodethangadurai said...

அட நீங்க எப்போ டாக்டர் ஆனீங்க ....?

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பயனுள்ள குறிப்பு ஜெய்லானி. எனக்கும் அடிக்கடி இந்த பிரச்சனை வரும். கார்லிக் பியர்ல்ஸ் மாத்திரை சாப்பிடுவேன். கொஞ்சம் ரிலீஃபாக இருக்கும்.

ஜெய்லானி said...

@@@Jey--//ஜெய்லானி, நன்றி ராசா, இதுநாள் வரைக்கும் ஜெலுசில் சாப்டுகிட்டிருந்தே. இனி அதிலிருந்து விடுதலை. நன்றி.//

வாங்க ராஸா வாங்க..!! பலமாசம் கழிச்சி பிளாக் பக்கம் மேட்டர் ரொம்ப ஓவரோ..ஹி.. ஹி.. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//3வது படம்....: ஆளைவிடுங்க நானில்லை.... நானில்லை......//

வாங்க பேபிபூஸ்...வாங்க..!! யாரோ கேட்ட மாதிரி காதில் விழுந்துச்சே ஹா..ஹா..

//ஊசிக்குறிப்பு:
படம் பார்த்தபின்பும், தேஏஏஏகிரியம் இருந்தால் ஆரும் எதிர்ப்பினமோ பூஸாரை இனிமேல்...:))).//


ஹா..ஹா.. அதானே ..குங்க்ஃபூ போஸ்ல இருந்த தைரியம் வருமா?? :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--// ஓமம் மட்டுமல்ல.. இங்கெல்லாம் வறுத்த பெருஞ்சீரகத்தையும் கொஞ்சூண்டு சாப்டுவாங்க..//

வாங்க சாரலக்கா வாங்க..!! பெருஞ்சீரகத்தை விட பலமடங்கு எ ஃபெக்ட் ஓமத்துக்கு அதிகம் இருக்கு .:-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//ஏற்கனவே கொடுத்த பூண்டுக்கே உன்னைப்பிடி என்னை பிடின்னு கிடக்கு. இதுல ஓமம் வேறயா. நல்லா இருங்க மக்கா. இருங்க படிச்சிட்டு வர்றேன். மியாவ்!! //

வாஃங்க பாஸ் வாங்க..!! யாரையெல்லாமோ பிடிக்க வேண்டாம் ..பின்னால டேஞ்சர் ஓகே ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆயிஷா --//அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். //

வ அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ் )
வாங்க .சகோஸ் .வாங்க ..!! சந்தோஷம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்- //என் சொந்தக்காரி பக்கத்தில இருந்தா வாயை திறக்கவே மாட்டேன்.. ஹி..ஹி...((வாயிலேயே பொத்துன்னு ஒன்னு விழுந்துட்டா)). //

பார்த்து பார்த்து உங்க வயிறு நிறைய செய்து போட்டக் கை, வாயிலும் போட்டா ரெண்டு போடு என்னவாம் செல்லம். நல்ல போடுங்க தாயீ... ஹி.. ஹி.. ஹி.. ஹி ஈ.. ஈ ஈ //


வாங்க..வாங்க..!! இதை கேட்டு ரொம்பவும் சந்தோசப்படற மாதிரி தெரியுது...அனுபவம் பேசுதோ..ஹா...ஹா..

// // வாங்க வான்ஸ் வாங்க. டயமுக்கு சாப்பிடுங்க. நேரம் தவறுகிற மாதிரி இருந்தா ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க.//

அப்படியே வெய்ட் போட்டுட்டா கொஞ்சம் பூண்டு வாயில் போட்டு சுடு தண்ணி குடிங்கன்னு அதையும் சேர்த்து சொல்லிட வேண்டியது தானே!! (ஏற்கனவே அவிடத்தில் எடை பார்க்கிற மெசினை தேடிகிட்டிருக்கிறதா தகவல்!! அவ்வ்வ்வ்...!!//

எடை குறைக்கிறதுக்கும் எங்கிட்ட வைத்தியம் இருக்கே... நார்மலா சொல்லவா..? இல்லை என் டீவியில் போடவா..ஹி..ஹி...

//நமக்குள் இந்த வெளாட்டெல்லாம் வேணாம் சொல்லிட்டேன் ஹக்காங்!!!//

அப்போ அதுதான் நீங்களா..? கூட இருப்பது யாருன்னு சொல்லிடுங்க :-))

////எழுந்து நிக்க தெம்பில்லைன்னு யார் சொன்னது ? //

அத்த.. ஆசனம் செய்பவரிடம் கேளுங்க க்கி..க்கி..//

வரும்..வரும்...விரைவில் ..வரும் ...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//அன்புடன் அறிவுரைக்கும் ஆலோசனைக்கும்
ஆயிரம் நன்றிகள்! //

வாங்க ..வாங்க..!!ரொம்ப சந்தோஷம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//அப்படியே வெய்ட் போட்டுட்டா கொஞ்சம் பூண்டு வாயில் போட்டு சுடு தண்ணி குடிங்கன்னு அதையும் சேர்த்து சொல்லிட வேண்டியது தானே!! (ஏற்கனவே அவிடத்தில் எடை பார்க்கிற மெசினை தேடிகிட்டிருக்கிறதா தகவல்!! அவ்வ்வ்வ்...!! //

நாட்டாமை. பொய் பிரச்சாரம் பண்ண படாது. 50 kg தாஜ்மகால் ஆக்கும் நான்.//

வாங்க வான்ஸ் வாங்க..!! தாஜ்மஹால் 50 kg யா இருந்தா நல்லா இருக்காதே..எதுக்கும் நம்ம முன்னால் முதல்வர்கிட்டதான் கேக்கனும் ஹா..ஹா.. :-)) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@apsara-illam --//சலாம் ஜெய் சகோதரரே...,மிகவும் நல்ல குறிப்பு நகைச்சுவையோடு..../

வ அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)
வாங்க சகோஸ் வாங்க ..!! அப்படியா தெரியுது :-))
// ஓமத்தோடு உப்பு...உண்மையிலேயே புதுசா கேக்குறேன்.செயல்படுத்திட வேண்டியதுதான்.எங்க வீட்டிலேயும் நிறைய அசிடிட்டி கேஸ் இருக்கோமுங்க...//

ஒன்னும் புதுசு இல்லையே இது ரொம்பவும் பழைய சித்த வைத்திய குறிப்புதான்
//எங்க அம்மா எப்பவுமே... மூணு இட்லி சாப்ட்டா கூட ஒரு கல் உப்பை வாயில் வைப்பாங்க... செரிப்பதற்க்காம். //

உப்பு வைப்பது செரிக்க இல்லை ..அப்படி வைத்தால் நிறைய தண்ணீர் குடிக்க தோனும் .நிறைய தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதுதானே

// அப்ப உங்களை மாதிரி ஐந்து ஆம்லெட் சாப்பிட்டவர்களுக்கெல்லாம்??????
நல்லா சாப்பிட்டு நல்லா வைத்தியமும் செய்துகிட்டீங்க...குட் குட்... //

அடுத்த தடவை போன போது பயபுள்ள குடுக்கலையே ஹி..ஹி.. இது தவிர எப்பவும் சிங்கிளா டபுளா சாப்பிட்டு பழக்கமில்லை :-)
// இருந்தாலும் இன்னும் என்னன்ன விழுங்குனிங்கன்னு... ஸாரி ஸாரி... என்னன்ன சாப்ட்டீங்கன்னு சொல்லியிருக்கலாம்
அன்புடன்,
அப்சரா.//
பொம்பளைங்ககிட்ட வயச கேக்கக்கூடாதுன்னு சொல்ற மாதிரி ஆம்பளைங்ககிட்ட சாப்பிடுறதை கேக்கக்கூடாது இது என்னோட புது மொழி எப்பூடீ ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@jothi --// ந‌கைச்சுவையோடு நீங்க‌ள் மெஸேஜை சொல்லுவ‌து அழ‌கு,.. வ‌ழ‌க்க‌ம் போல் க‌ல‌க்க‌ல்//

வாங்க..வாங்க..!! ரொம்ப சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@angelin --// உபயோகமான தகவல் .நன்றி ஜெய்லானி.
fennel ,anis இது ரெண்டும் சேர்ந்த ஒரு டீ கடையில கிடைக்குது .
அது உடம்புக்கு நல்லதா என்று ட்ரை செஞ்சு
பார்த்து விட்டு சொல்லுங்க //

வாங்க...வாங்க..!! இங்கே யூ ஏ ஈ யில் ஹைபர் மார்கெட்டில டீ செக்‌ஷனுக்குள் போனால் மினிமம் 30 வகை இருக்கு . ஒவ்வொரு நாட்டவரும் விரும்பும் சீசனுக்கு தகுந்த வகையில இருக்கு .நாம அதிகம் உபயோகிப்பது ஏலக்காய் டீ மட்டுமே .அந்த வகையில் இதுவும் அதே ரகம்தான் . :-)) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..// டாக்குடர்.. சீக்கிரமா ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல நிக்கிற வழியப் பாருங்க :) //

வாங்க சந்தூஸ் வாங்க..!!வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்பவே தான் ஒரு கட்சி இருக்கே தெரியாதா..? சுப்ரமணிய சாமீ மாதிரி ஆல் இன் ஒன் நாந்தான் ஹி...ஹி...

//எப்பிடியும் இங்க ஓமம் கிடைக்கப் போறதில்ல.. அதனால நாங்க எஸ்கேப்பு எஸ்கேப்பு.. //
இந்தியன் ஸ்டோர்ஸ் ஏதாவது இருந்தா அதுல ””அஜ்வான்””ன்னு சொல்லி கேளுங்க ..கிடைக்கும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .:-)

ஜெய்லானி said...

@@@பாச மலர் / Paasa Malar --// ஜெய்லானி.. அதிகமா சமையல் குறிப்புகள் பகுதிகள் பார்த்தன் விளைவோ... //

வாங்க...வாங்க..!! அப்படின்னு சொல்ல முடியாது..ஒருத்தங்க கேட்ட சந்தேகத்துக்கு பதிலை ஒரு பதிவா போடலாமேன்னுதான் ..!! அதிகமா சமையல் குறிப்பு பார்ததா அன்னைக்கி என் பர்ஸ் காலியாவது நிச்சயம் ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தினேஷ் --//ஒரே ஒரு மருந்து இருக்கணும், அதுல என்னோட எல்லா வியாதியும் குணமாகனும்... உங்ககிட்ட அந்த மருந்து இருக்குதா ? //

வாங்க..வாங்க..!!ரொம்பவும் நொந்து போயிருக்கிறதை பார்த்தா கேக்குற கேள்வியிலேயே தெரியுதே...இதெல்லாம் வாழ்கையில சகஜமப்பா ...!! மல்லிகைப்பூவும் அல்வாவும் அந்த காலத்திலிருந்தே தொடருதே தெரியாதா ஹி..ஹி... :-))

// யே அப்பா.... பயங்கரம் தான்..//

கூல்ல்ல்ல்...இதுக்கே பயந்தா எப்பூடீ... ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஈரோடு தங்கதுரை --//
அட நீங்க எப்போ டாக்டர் ஆனீங்க ....? //

வாங்க ...வாங்க..!! எனக்கு ஒரு வக்கீல் பட்டம் நீங்க குடுத்து பாருங்க ..அப்புறம் தெரியும் ஹா.ஹா.. :-))))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--// நல்ல பயனுள்ள குறிப்பு ஜெய்லானி. எனக்கும் அடிக்கடி இந்த பிரச்சனை வரும். கார்லிக் பியர்ல்ஸ் மாத்திரை சாப்பிடுவேன். கொஞ்சம் ரிலீஃபாக இருக்கும். //

வாங்க அக்பர் வாங்க..!! அதை விட இது நல்லது 2 ரியாலில் 200 கிராம் கிடைக்கும்..சைடு எஃபெக்ட் இல்லை.. அந்த மாத்திரை சில நேரம் வேலை செய்யாது :-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

எளிமையான வைத்தியத்திற்கும் அருமையான படத்திற்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இராஜராஜேஸ்வரி--//எளிமையான வைத்தியத்திற்கும் அருமையான படத்திற்கும் நன்றி.//

வாங்க..வாங்க..!! ரொம்ப சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))