Thursday, March 3, 2011

சந்தேகம் -6 சமையல்


       சமையல்  பொருட்களில் சில சீசனில்  விலை குறையும் போதோ அல்லது அதிகம் கிடைக்கும் போதோ  வாங்கி வைத்து விடுகிறோம் . இல்லை அது மாத சாமான்களாக இருந்தாலும் சரி. அதை தொடர்ந்து உபயோகிக்காத பட்சத்தில  அதில் வித விதமா பூச்சிகள்  வந்து விடுகிறது .
       அப்படி வராமல் பார்த்துக் கொள்வது ஒரு தனி கலை. பருப்போ  இல்லை அரிசியோ  எதுவாக இருந்தாலும் அதில் ஈரம் இல்லாமலும் .அதுப்போலவே  நமது ஈரக்கை படாமலும்  பார்த்துக் கொள்ளனும் . முடிஞ்சால்  வெய்யிலில்  நல்லா காயவைச்சி அதுக்குறிய பாட்டில்  , டப்பாக்களில்  போட்டு வைக்கனும் .
என்னைய  விடுடா...நா..வரல..வரல....அவ்வ்வ்வ்வ்வ்
      சிலவற்றில்  உப்பு , கிராம்பு  , வேப்பிலை இப்படி  அதுக்கு தகுந்த மாதிரி  ரவை , கோதுமை அரிசியில் போட்டும் வைக்கலாம் .தேவைக்கு அதிகம் உள்ளதை  காற்றூப்போகாத  டப்பா , பாட்டில்களில் இட்டு அதை ஃபிரிஜில் வைத்தாலும் பூச்சி பிரச்சனை இருக்காது .      
                இது நிறைய பேருக்கு தெரிந்திருந்தாலும் எனக்கு வரும் சந்தேகம் என்னனு சொன்னா. இதெல்லாம் போடாமல் உதாரணமா கடலை மாவு என்னதான் கண்ணாடி பாட்டிலில்  போட்டு மூடி வைத்தாலும் ஒரு மாதம் அதை திறக்கா விட்டால் அதில் வண்டு  வந்து விடுகிறது  . அதேப்போல காய்ந்த மிளகாய் ..இப்படிப்பலதும் இருக்கு.
       இது எல்லாம் எங்கிருந்து  வருகிறது.  ஏர் டைட்  பாட்டில், டப்பாவாக இருந்தாலும் வருதே .அப்படி யென்றால் .நாம சாமான்கள் வாங்கும் போதே  அதில் அதன் முட்டைகள்  இருக்கா..? அதைதான் நாம இத்தனை நாளா  சாப்பிடுறோமா.?
பார்த்தா  ஆசையாதான் இருக்கு ஆனா டரியலாவும் இருக்கே..!!
     
   காரணம் இல்லாமல் காரியம்  இல்லை ..((ஹை இதை அந்த உலகத்திலிருந்து  சுட்டாச்சி )). கோழி இல்லாமல் முட்டை வருமா  மாதிரி  அதே கேள்வி ..? இதில் பூச்சிக்கள் எப்படி வருது..?  இதை தடுக்கவே  முடியாதா . காற்று இல்லாத இடத்தில பூச்சி மட்டும் உயிருடன் வளருதே எப்படி ?
       யாராவது இதை பத்தி ஆராய்ச்சி செய்திருந்தா அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ..கேட்டுக்க ஆசைதான்.ஒரு வேளை யாரும் செய்யாம இருந்திருந்தா அதை நானே செஞ்சி .சீக்கிரமே இன்னொரு டாக்டர் பட்டம் வாங்கத்தான் .
       ஹோட்டலில்  சின்ராஸுடன் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது. மெதுவா கேட்டான் எலேய் மக்கா  சாம்பார் வெஜிடேரியனா ..? இல்லை  நான் வெஜ்ஜா ..?  நான் சொன்னேன்...இது என்றா.. புது புது குழப்பம் .சந்தேகம் எப்பவும் நாந்தான் கேப்பேன் .இப்ப இது என்னது புதுசா உனக்கு வந்திருக்கு..?
இனி டைரக்டா ஃபுரூட்தான்  நோ சமையல்...நோ டென்ஷன்

       இ...ல்......லை...முதல்ல எனக்கு சின்னதா ஒரு வண்டு இருந்துச்சி ..எனக்கு அது சாப்பிட்டு பழக்கம் இல்லாத்தால டேபிள் கீழே போட்டுட்டேன் .அடுத்து ஒரு பூச்சி வந்துச்சி .அதையும் கிழே போட்டுட்டேன்.. இப்போ இதுல பெருசா கரபாண் பூச்சி  கிடக்கே என்ன செய்ய...?  நான் சொன்னேன் அடேய் கொஞ்சம் மெதுவா பேசுடா  ..கடை ஓனர் மலையாளிக்கு தெரிஞ்சா ..இதுக்கும் சேர்த்து பில் போட்டுடுவான் .
      அப்போ நீ மட்டும் சத்தம் போடாம எப்படிடா சாப்பிடுறா..??  .எனக்கு உன்னை மாதிரி  பூச்சி  வரல  டைரக்டா சாம்பாரிலே மீனே வந்துடுச்சி. அது ஒரு வேளை மத்த பூச்சிகளை சாப்பிட்டிருக்கும். இதை கேட்டு ஏதோ  புரிஞ்சதை மாதிரி  தலையாட்டினான் ..
      என்ன உங்களுக்கு எதுவும் புரியுதா...?  ஹா..ஹா....     

60 என்ன சொல்றாங்ன்னா ...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மீனு, கரப்பான் பூச்சி இதெல்லாம் சைவ வகையில சேர்த்தாச்சு பாஸு..

ஆமா, வண்டு எப்படி வருதுனு சந்தேகம் கேட்பதை விட்டுப்புட்டு, சைனா-க்கு அனுப்பி பிஸ்னஸ் மேக்னெட் ஆகும் வழியைப்பாருங்க..

தேர்தல் பிஸி-ல, எல்லாவற்றையும், நானே சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு!!!..

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடப்பாவி, ”வண்டு வடை” எனக்கே எனக்கா?.. ஹிஹி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கடைசிப்படம் , பார்க்க நம்ம மங்குனி மாறியே இருக்கே..

அவருதானா?

பார்த்து... வெயில்ல அலைஞ்சு கொஞ்சம் கறுத்துப்போயிட்டாரு போல..

நல்லா ரெஸ்ட் எடுக்கச்சொல்லுங்க பாஸு...
.
.
( காலையில் கண்டப்படி கலாய்ப்போர் சங்கம்)

Chitra said...

இது எல்லாம் எங்கிருந்து வருகிறது. ஏர் டைட் பாட்டில், டப்பாவாக இருந்தாலும் வருதே


.....உங்கள் மூளைக்குள்ள எப்படி இந்த மாதிரியெல்லாம் டவுட்டு வருதோ, அப்படியேதான் அங்கேயும் வண்டு வருது!

Mahi said...

நல்ல சந்தேகம்.தெரிந்தவங்க சொன்னா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். :)

பொன் மாலை பொழுது said...

அய்யய்யோ........,,,கொஞ்ச நாளா இந்த சந்தேக கேசு வராம இருந்தது. இப்போ திரும்பியும் வர ஆரம்பிச்ச்டுதே!
தெரியும் ஆனாக்க சொல்லமாட்டேன்.

ஸாதிகா said...

இந்தப்பதிவில் இருந்து தெரிவது என்ன வென்றால் ஜெய்லானி வீட்டில் கிச்சன் சாம்ராஜயம் முழுக்க முழுக்க ஜெய்லானிதான்.பேசாமல் கூடிய சீக்கிரம் சமையல் பிளாக் ஆரம்பித்து விடுங்கள்.

Asiya Omar said...

சந்தேகம் சமையல் ஜெய்லானி டாபிக் நல்லாயிருக்கு.எனக்கு இது மாதிரி ஆயிரதெட்டு சந்தேகம் இருக்கு அப்படின்னு சொல்ல மாட்டேன்.

sathishsangkavi.blogspot.com said...

அறிய வேண்டிய விசயம்

சாந்தி மாரியப்பன் said...

//கோழி இல்லாமல் முட்டை வருமா//

வருமே.. ஆமை,பல்லி,புறா,பாம்பு,கரப்பான்பூச்சிஇன்னும் எத்தனையோ... முக்கியமா டைனோசர் :-)))))

முட்டைன்னு பொதுவா கேட்டா இப்படித்தான் பதில்வரும் :-)))))))

athira said...

ஜெய்... நேரங்கெட்ட நேரத்தில தலைப்பைப் போட்டால், எங்களைப்போல ஆட்கள் எப்பூடித்தான் வடை எடுக்கிறது.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இப்போ சந்தேகம் உங்களுக்கா இல்ல உங்க “உயிர்” நண்பனுக்கா?:)

//இ...ல்......லை...முதல்ல எனக்கு சின்னதா ஒரு வண்டு இருந்துச்சி ..எனக்கு அது சாப்பிட்டு பழக்கம் இல்லாத்தால டேபிள் கீழே போட்டுட்டேன் .அடுத்து ஒரு பூச்சி வந்துச்சி .அதையும் கிழே போட்டுட்டேன்.. இப்போ இதுல பெருசா கரபாண் பூச்சி கிடக்கே என்ன செய்ய...? ///

ஹையோ முடியல்லயே சாமி... இது நிட்சயமா ஹோட்டல் இல்லை, ஜெய் இன் சமையல்தான்.... எக்ஸ்பெரிமெண்ட் செய்து பார்க்கிறார் ஃபிரெண்டுக்கு.. முட்டைப்பொரியலுக்கு பெனாயில் விட்டதைப்போல...:)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஎன்ன உங்களுக்கு எதுவும் புரியுதா...? ஹா..ஹா....ஃஃஃஃ

இல்லவே இல்லிங்க...

athira said...

வழமைபோல படங்கள் கலக்கல்.... பப்பியை எதுக்கு இழுக்கிறீங்க... முதல்ல நீங்க குளிங்க... ஆ .. மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

அந்தாப்பெரிய சாப்பாட்டுக்கு ஒரு இம்மாந்துண்டு மீன் பொரியலோ? இப்பூடிப் பேய்க்காட்டாக்கூடாது விருந்துக்கு வாறவங்களை....:))

கடசிப்படம்... ஹா..ஹா..ஹா... ஸ்ரிக்ட்லி நோ கொமெண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).

athira said...

பருப்பு, ஸ்பைஷஸை கொஞ்சமாக வெக்கைகாட்டி(வறுப்பதுபோல) செய்தபின் ரின்னில் அடைத்தால் பூச்சி வராதென கேள்விப்பட்டிருக்கிறேன்.

வெளிநாட்டுக்கு வந்த காலத்திலிருந்து எந்தப் பூச்சியையும் கண்டதில்லையே.

MANO நாஞ்சில் மனோ said...

// இப்போ இதுல பெருசா கரபாண் பூச்சி கிடக்கே என்ன செய்ய...?//

ஐய்யய்யோ இனி கேரளா மீல்ஸ் சாப்பிடுவே சாப்பிடுவே....
எலேய் பாவி என் பதிவு தக்காளி சட்னிக்கு எதிர் பதிவா போட்டு என்னை பழி வாங்கிட்டியாலே மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//டைரக்டா சாம்பாரிலே மீனே வந்துடுச்சி//

கொய்யால அப்பிடி போடு அருவாள....

ப.கந்தசாமி said...

ஆமா, ஏனுங்க உங்களுக்கு இந்த கொலை வெறி. இனி நாங்க ஒழுங்கா சாப்பிட முடியுமுங்களா? இப்படிப் பண்ணீட்டீங்களே. நாங்க பட்டினி கெடந்து மண்டையப்போட்டா அந்தப் பாவம் உங்களை சும்மா விடாதுங்க!!!!!

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//மீனு, கரப்பான் பூச்சி இதெல்லாம் சைவ வகையில சேர்த்தாச்சு பாஸு..//

வாங்க குருவே வந்தணம்...!! நீங்க சைனீஸ் கூட சேர்ந்து சேர்ந்து எதுன்னே தெரியாம்ப்போச்சா ஹா..ஹா..

//ஆமா, வண்டு எப்படி வருதுனு சந்தேகம் கேட்பதை விட்டுப்புட்டு, சைனா-க்கு அனுப்பி பிஸ்னஸ் மேக்னெட் ஆகும் வழியைப்பாருங்க..//

இருக்கு குரு...என்னைய வச்சி அவனுங்க உப்புகண்டம் போட்டுடமாட்டானுவளா...???

// தேர்தல் பிஸி-ல, எல்லாவற்றையும், நானே சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு!!!..//

ம் ஆண்டவனோடதான் கூட்டனின்னு சொன்னவர் அம்மா கால்ல விழுந்ததயா சொல்றீங்க ...அரசியல்அரிச்சுவடியே அதானே பாஸ்

//அடப்பாவி, ”வண்டு வடை” எனக்கே எனக்கா?.. ஹிஹி..//

எனக்கு கமெண்ட் பாக்ஸை மூடுற நல்ல பழக்கமெல்லாம் இல்லீங்க ..நீங்களே மூடிவைக்காத போது நான் மட்டும் நோ சொல்லிடுவேனா ...!!

//கடைசிப்படம் , பார்க்க நம்ம மங்குனி மாறியே இருக்கே.. //

ஹி..ஹி..

//அவருதானா? //

ஹி..ஹி..ஹி..ஹி..

//பார்த்து... வெயில்ல அலைஞ்சு கொஞ்சம் கறுத்துப்போயிட்டாரு போல..//

இல்ல தினமும் ஒரு பதிவு போட்டு போட்டு கருத்துப்போயிட்டாரு ஹா..ஹா..

//நல்லா ரெஸ்ட் எடுக்கச்சொல்லுங்க பாஸு...//

கண்ட இடத்துல கடிச்சி வச்சிட்டா அவ்வ்வ்
.
.
//( காலையில் கண்டப்படி கலாய்ப்போர் சங்கம்) //

அட நம்ம சங்கம் ...!! எங்கிட்டேயே வா..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--//இது எல்லாம் எங்கிருந்து வருகிறது. ஏர் டைட் பாட்டில், டப்பாவாக இருந்தாலும் வருதே


.....உங்கள் மூளைக்குள்ள எப்படி இந்த மாதிரியெல்லாம் டவுட்டு வருதோ, அப்படியேதான் அங்கேயும் வண்டு வருது! //

வாங்க...வாங்க..!! ஆஹா..இந்த தடவையும் நழுவிட்டீங்களே அவ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சாருஸ்ரீராஜ் said...

நல்ல சந்தேகம் தான் இதை தீர்க்கிறதுக்கு டாக்ட்ரேட் படிச்சவுங்க வராமலா போயிடுவாங்க

ராஜவம்சம் said...

அடப்போங்க இதல்லாம் ஒரு விசயம்ன்னு சதேகம் கேட்டுக்கிட்டு.
(அப்பாட எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

vanathy said...

ஜெய், ஏன் வண்டு வருது? தெரியலையே? வண்டுக்கு என்ன தான் இருக்குன்னு தோணியிருக்கும் போல. அதான் அரிசி, ரவையில் உலாவுகின்றன. எடுத்துப் போட்டுட்டு சாப்பிடுறதை விட்டுப் போட்டு கேள்வி கேட்கிறாராம் கேள்வி!!!!

ரண்டாவது படம் பார்க்க நல்லாத்தேன் இருக்கு. எங்க வீட்டிலை நாலு பேரும் சாப்பிடும் அளவுக்கு இருக்கு!!!!

பப்பியார் - கியூட். பூஸை விட அழகோ அழகு.

கடைசிப்படம் - குரங்குக்கு கோபம் வந்திடுச்சு. இனிமே கேள்வி கேப்பியான்னு யாருக்கோ பழங்களை குறி பார்த்து எறியப் போவுது??? யார், எவர்ன்னு எல்லோருக்கும் விளங்கியிருக்கும்.

athira said...

vanathy said... 22
பப்பியார் - கியூட். பூஸை விட அழகோ அழகு
////

karrrrrrrrrrrrrrrrrrrrrrr.

எம் அப்துல் காதர் said...

வடை!!

ஹா..ஹா.. தீர்ந்து போச்சா!!

இருங்க வீட்ல போய் சாப்டுட்டு வர்றேன்!

அட வடைய சொன்னேங்க!!

எம் அப்துல் காதர் said...

நீங்க ஜெய்லானி பெரிய விஞ்சானி ஆய்ட்டீங்க போல! வண்டு ஆராய்ச்சி கழகமா!!??

ஹேமா said...

ஜெய்...நல்ல சந்தேகம்தான்.வாழையிலை போட்டு மரக்கறி சாப்பாடும் போட்டு மீன் பொரியலும் வச்சிருக்கே.இந்த மீன் எப்பிடி வந்திச்சு !

ஆனா உண்மையா ஜெய்...இங்க குளிர் காரணமாகவோ என்னவோ மாதக்கணக்குக் கடந்தாலும் அரிசி பருப்புக்களில் பூச்சி புளுக்கள் வருவதேயில்லை !

ஜெய்லானி said...

@@@மகி--//நல்ல சந்தேகம்.தெரிந்தவங்க சொன்னா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். :) //

வாங்க...வாங்க..!!நீங்க என்ன சொல்றீங்கன்னு சொல்லாம எஸ்கேப்பா ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

நீங்கள் பதிவை தேத்திய விதம் அபாரம்.

இராஜராஜேஸ்வரி said...

இனி டைரக்டா ஃபுரூட்தான் நோ சமையல்...நோ டென்ஷன்//
இது ரொம்ப நல்லா இருக்கு.அப்படியே சாப்பிடுங்க.

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏன் எதுக்கெண்டெல்லாம் ஆரும் குறுக்க குறுக்க கேள்வி கேட்கப்பூடாது... எனக்கு கெட்ட கோபம் வந்திடும்....%).

GEETHA ACHAL said...

எப்படி ஜெய்லானி...இப்படி எல்லாம்..ஆனா இதுக்காகவே உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்..ஆனா எனக்கும் இதே டவுட் நிறைய வாட்டி வந்து இருக்கின்றது...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஜெய்.. //இதை தடுக்கவே முடியாதா . காற்று இல்லாத இடத்தில பூச்சி மட்டும் உயிருடன் வளருதே எப்படி ?// காற்று இல்லைன்னு எப்படிச் சொல்றீங்க? அது வளரத் தேவையான காத்து டப்பா உள்ளயே கிடைக்குமே? என்ன தான் ஏர் டைட் னாலும், டப்பா உள்ள இருக்கற காத்த வெளியேற்ற முடியாதே?

சாம்பார் சைவம் தான்.. இப்படியெல்லாம் யோசித்தால் சாப்பிட முடியாது.. சில விஷயங்களைத் தடுக்க முடியும் சிலதை முடியாது..

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--// அய்யய்யோ........,,,கொஞ்ச நாளா இந்த சந்தேக கேசு வராம இருந்தது. இப்போ திரும்பியும் வர ஆரம்பிச்ச்டுதே! //


வாங்க ..வாங்க..!! ஹி..ஹி.. கூச்சமா இருக்கு ரொம்பவும் புகழ்றீங்களே..

// தெரியும் ஆனாக்க சொல்லமாட்டேன். //

சொல்லாட்டி இன்னும் கேப்பேனே எப்பூடீ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--// இந்தப்பதிவில் இருந்து தெரிவது என்ன வென்றால் ஜெய்லானி வீட்டில் கிச்சன் சாம்ராஜயம் முழுக்க முழுக்க ஜெய்லானிதான். பேசாமல் கூடிய சீக்கிரம் சமையல் பிளாக் ஆரம்பித்து விடுங்கள். //

வாங்க ஸாதிகாக்கா..வாங்க..!! இதெல்லாம் ரொம்ப அநியாயம் இப்படியா பப்லிக்குல கோத்து விடுவீங்க அவ்வ்வ்வ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar-//சந்தேகம் சமையல் ஜெய்லானி டாபிக் நல்லாயிருக்கு.எனக்கு இது மாதிரி ஆயிரதெட்டு சந்தேகம் இருக்கு அப்படின்னு சொல்ல மாட்டேன். //

வாங்க ஆசியாக்கா வாங்க..!! சந்தேகம் இருக்குன்னு சொல்றீங்களா ?இல்லைன்னு சொல்றீங்களான்னே புரியலையே அவ்வ்வ்வ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சங்கவி-//அறிய வேண்டிய விசயம் //

வாங்க ..வாங்க..!! ஆமா ஆனா அறியமுடிலையே ...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் ---//கோழி இல்லாமல் முட்டை வருமா//

வருமே.. ஆமை,பல்லி,புறா,பாம்பு,கரப்பான்பூச்சிஇன்னும் எத்தனையோ... முக்கியமா டைனோசர் :-)))))

முட்டைன்னு பொதுவா கேட்டா இப்படித்தான் பதில்வரும் :-))))))) //

வாங்க அமைதியக்கா வாங்க..!! நீங்களும் என்னைய மாதிரி ஃபுல் ஃபாமில ஆகிட்டீங்க ..ஓக்கே..ஓக்கே.. !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//ஜெய்... நேரங்கெட்ட நேரத்தில தலைப்பைப் போட்டால், எங்களைப்போல ஆட்கள் எப்பூடித்தான் வடை எடுக்கிறது.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

வாங்க..வாங்க...!!உங்க ஊர் டைமிலதானே போட்டேன் .ஒரு வேளை மியா நின்னுகிட்டே தூங்கிருச்சோ...!!

// இப்போ சந்தேகம் உங்களுக்கா இல்ல உங்க “உயிர்” நண்பனுக்கா?:) //
எனக்குதான் ஆனா அவன் என்னை பார்த்து ரொம்பவும் குழம்பிப்போறான் ஹி..ஹி..

//இ...ல்......லை...முதல்ல எனக்கு சின்னதா ஒரு வண்டு இருந்துச்சி ..எனக்கு அது சாப்பிட்டு பழக்கம் இல்லாத்தால டேபிள் கீழே போட்டுட்டேன் .அடுத்து ஒரு பூச்சி வந்துச்சி .அதையும் கிழே போட்டுட்டேன்.. இப்போ இதுல பெருசா கரபாண் பூச்சி கிடக்கே என்ன செய்ய...? ///

ஹையோ முடியல்லயே சாமி... இது நிட்சயமா ஹோட்டல் இல்லை, ஜெய் இன் சமையல்தான்.... எக்ஸ்பெரிமெண்ட் செய்து பார்க்கிறார் ஃபிரெண்டுக்கு.. முட்டைப்பொரியலுக்கு பெனாயில் விட்டதைப்போல...:) //

ஸாதிகாக்கா எதுவும் போட்டு குடுத்துட்டாங்களா..அதெப்படி ரெண்டு பேரும் ஒரேமாதிரி கேள்வியா கேக்குறீங்க ...அவ்வ்வ்வ்வ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@♔ம.தி.சுதா♔-//ஃஃஃஃஎன்ன உங்களுக்கு எதுவும் புரியுதா...? ஹா..ஹா....ஃஃஃஃ

இல்லவே இல்லிங்க...//

வாங்க வாங்க..!! அடிக்கடி இந்த பக்கம் வந்தா புரியும்..ஹி..ஹி...((எப்படியும் ஒரு வழியா ஆகிடுவீங்க)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@@athira --//வழமைபோல படங்கள் கலக்கல்.... பப்பியை எதுக்கு இழுக்கிறீங்க... முதல்ல நீங்க குளிங்க... ஆ .. மீ எஸ்ஸ்ஸ்ஸ். //

வாங்க..வாங்க..!!ஆழம் பார்க்க வேனாமா.... அதுக்குதான் ..சாரி நான் போன வருஷமே குளிச்சிட்டேன் கோட்டா முடிஞ்சுது. இனி அடுத்து டிஸ்ம்பர் 23 2012 தான் .

//அந்தாப்பெரிய சாப்பாட்டுக்கு ஒரு இம்மாந்துண்டு மீன் பொரியலோ? இப்பூடிப் பேய்க்காட்டாக்கூடாது விருந்துக்கு வாறவங்களை....:)) //

ஹா...ஹ... வெளியே வச்சா கண்ணு பட்டுடும் அதனால சீட்டுக்கு கிழே இன்னும் 12 இருக்கு :-))

// கடசிப்படம்... ஹா..ஹா..ஹா... ஸ்ரிக்ட்லி நோ கொமெண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))). //

ச்சே..ச்சே..அது வேற யாரோ....கோட் வாங்க ஆள் கடைக்கு போயிருக்கு ஹா..ஹா...

//athira said... 14

பருப்பு, ஸ்பைஷஸை கொஞ்சமாக வெக்கைகாட்டி(வறுப்பதுபோல) செய்தபின் ரின்னில் அடைத்தால் பூச்சி வராதென கேள்விப்பட்டிருக்கிறேன்.//

உண்மைதான் , இதுவும் நிறைய பேருக்கு தெரியும் என்பதால அதிகம் போடல..ஒரு சிலது மட்டுமே பெயரளவில் போட்டேன் :-))

//வெளிநாட்டுக்கு வந்த காலத்திலிருந்து எந்தப் பூச்சியையும் கண்டதில்லையே. //

உங்களை கண்டா அதுக்கு பயம் போல ஹா..ஹா..நிறைய நாள் வச்சிப்பாருங்க .காய்ந்த மிளகாய் இருந்தாலும் வந்துடும் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ --

// இப்போ இதுல பெருசா கரபாண் பூச்சி கிடக்கே என்ன செய்ய...?//

ஐய்யய்யோ இனி கேரளா மீல்ஸ் சாப்பிடுவே சாப்பிடுவே....//

வாங்க ..வாங்க..!! ஓஹ் உங்களுக்கும் அங்கேதான் சாப்பாடா ஹி..ஹி...

// எலேய் பாவி என் பதிவு தக்காளி சட்னிக்கு எதிர் பதிவா போட்டு என்னை பழி வாங்கிட்டியாலே மக்கா....//

டூ..லேட் ...சைனீஸ் ஓட்டல்ல ஒழுங்கா ஃபிரைட் ரைஸ் சாப்பிட்ட என்னை கெடுத்த போது இதை பத்தி யோசிச்சி இருக்கனும்

//டைரக்டா சாம்பாரிலே மீனே வந்துடுச்சி//

கொய்யால அப்பிடி போடு அருவாள....//

யோவ் நானும் அவன் கிட்ட சொல்லல ..சொல்லி இருந்தா அதுக்கு தனியா 2 திர்ஹம்ஸ் கேட்டிருப்பான் ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD --//ஆமா, ஏனுங்க உங்களுக்கு இந்த கொலை வெறி. இனி நாங்க ஒழுங்கா சாப்பிட முடியுமுங்களா? இப்படிப் பண்ணீட்டீங்களே. நாங்க பட்டினி கெடந்து மண்டையப்போட்டா அந்தப் பாவம் உங்களை சும்மா விடாதுங்க!!!!! //

வாங்க சகோ வாங்க..!! இதுல இப்படி ஒரு வில்லங்கம் இருக்கா தெரியாமப்போச்சே...ஆமா தண்ணீரை மெகா மைக்ஸ்ரோஸ்கோப்பில பார்த்தா பூச்சியா கிடக்குமாமே உண்மைதாங்களா அது ?ஹி.ஹ்.ஹி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//நல்ல சந்தேகம் தான் இதை தீர்க்கிறதுக்கு டாக்ட்ரேட் படிச்சவுங்க வராமலா போயிடுவாங்க //

வாங்க சாருக்கா வாங்க ..!! வந்தாரே ஆனா அவரே டரியலா கமெண்டு போட்டுட்டு போய்ட்டாரே..மேலே உள்ள கமெண்டை படிச்சி பாருங்க :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம் --//அடப்போங்க இதல்லாம் ஒரு விசயம்ன்னு சதேகம் கேட்டுக்கிட்டு.
(அப்பாட எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு) //

வாங்க சகோ வாங்க..!! ம் ..நீங்க சைனாவிலா இருக்கீங்க ..ஒரு வேளை இதெல்லாம் சாப்பிட்டா நல்லதுன்னு யாராவது உக்ககிட்ட சொல்லிட்டங்களா...என் ஜாய் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--// ஜெய், ஏன் வண்டு வருது? தெரியலையே? வண்டுக்கு என்ன தான் இருக்குன்னு தோணியிருக்கும் போல. அதான் அரிசி, ரவையில் உலாவுகின்றன. எடுத்துப் போட்டுட்டு சாப்பிடுறதை விட்டுப் போட்டு கேள்வி கேட்கிறாராம் கேள்வி!!!! //

வாங்க வான்ஸ்..வாங்க..!! பாவமா இருக்கு உங்க மாம்ஸை பார்த்தா ஹய்யோ..ஹய்யோ... அப்ப வீட்டில தினமும் அப்படிதான் நடக்குதா..?

// ரண்டாவது படம் பார்க்க நல்லாத்தேன் இருக்கு. எங்க வீட்டிலை நாலு பேரும் சாப்பிடும் அளவுக்கு இருக்கு!!!! //

கர்ர்ர்ர்ர்...என்னது 4 பேருக்கா..????? நானே இன்னும் ஒரு பார்ஸல் வாங்கலாமான்னு இருக்கேன்

// பப்பியார் - கியூட். பூஸை விட அழகோ அழகு.//

எங்கேயோ புகையுதே..யாராவது..கணக்க அந்த சிலிண்டரை கொண்டு வாங்கோ..!!

// கடைசிப்படம் - குரங்குக்கு கோபம் வந்திடுச்சு. இனிமே கேள்வி கேப்பியான்னு யாருக்கோ பழங்களை குறி பார்த்து எறியப் போவுது??? யார், எவர்ன்னு எல்லோருக்கும் விளங்கியிருக்கும்.//

அது குரங்குதானா....!! உங்களுக்கு சந்தேகம் இல்லைதானே ..ஓக்கை...!! :-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//

vanathy said... 22
பப்பியார் - கியூட். பூஸை விட அழகோ அழகு
////

karrrrrrrrrrrrrrrrrrrrrrr. //

வாங்க பூஸ்..வாங்க ..!! நா நினைச்சேன் வந்துட்டீங்க ..டபிள் கர்ர்ர்ர்ர்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..ஓகே..!! உடனே வேகமா ஓடிவந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//
வடை!!

ஹா..ஹா.. தீர்ந்து போச்சா!!

இருங்க வீட்ல போய் சாப்டுட்டு வர்றேன்!

அட வடைய சொன்னேங்க!! //

வாங்க சகோ வாங்க..!! ராத்திரி நேரத்துல நீங்க வடைதான் சாப்பிடுவீங்களா..??

//நீங்க ஜெய்லானி பெரிய விஞ்சானி ஆய்ட்டீங்க போல! வண்டு ஆராய்ச்சி கழகமா!!??///

ம் ..சீக்கிரம் கோபார்ல ஒன்னு பிரான்ச் திறக்கலாமுன்னு இருக்கேன் ஆனா பர்மிஷன் இன்னும் கிடைகல சோ..சேட் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஜெய்...நல்ல சந்தேகம்தான்.வாழையிலை போட்டு மரக்கறி சாப்பாடும் போட்டு மீன் பொரியலும் வச்சிருக்கே.இந்த மீன் எப்பிடி வந்திச்சு ! //

வாங்க குழந்தை நிலா வாங்க..!! இது அந்த மீன் இல்ல .ஹி..ஹி...

// ஆனா உண்மையா ஜெய்...இங்க குளிர் காரணமாகவோ என்னவோ மாதக்கணக்குக் கடந்தாலும் அரிசி பருப்புக்களில் பூச்சி புளுக்கள் வருவதேயில்லை ! //

கரெக்ட் தான்..மிதமான சூடு இருக்கும் நாடுகளில் ரொம்பவே அதிகம். ஒன்னும் செய்ய முடியாது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே. ஆர்.விஜயன் --//நீங்கள் பதிவை தேத்திய விதம் அபாரம்.//

வாங்க சார் வாங்க..!! செம உள்குத்தா இருக்கே ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

சந்தேகம் எல்லோருக்கும் உள்ள ச்ந்தேகம் தான் பரவாயில்லை சிரம்ம் எடுத்து விளக்கி இருக்கீங்க
படஙக்ள் சூப்பர்

ஜெய்லானி said...

@@@இராஜராஜேஸ்வரி --// இனி டைரக்டா ஃபுரூட்தான் நோ சமையல்...நோ டென்ஷன்//
இது ரொம்ப நல்லா இருக்கு.அப்படியே சாப்பிடுங்க.//

வாங்க..வாங்க..!! இதை கேட்டதும் ஆனந்த கண்ணீரே வருது அவ்வ்வ்வ்வ்..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏன் எதுக்கெண்டெல்லாம் ஆரும் குறுக்க குறுக்க கேள்வி கேட்கப்பூடாது... எனக்கு கெட்ட கோபம் வந்திடும்....%). //

வாங்க... வாங்க..!! ஓவரா கர்ர்ர்ர் விட்டா அப்புரம் பல்லு என்னாத்துக்கு ஆகுரது ..ஏன் எதுக்குன்னு கேக்கல எப்படின்னு கேக்கவா ஹி..ஹி.... நல்ல கோவத்துலேயே சொல்லுங்க :-))உங்கள் வருகைக்கும் கர்ர்ர் கருத்துக்கும் நன்றி

enrenrum16 said...

/முதல்ல எனக்கு சின்னதா ஒரு வண்டு இருந்துச்சி ..எனக்கு அது சாப்பிட்டு பழக்கம் இல்லாத்தால டேபிள் கீழே போட்டுட்டேன் .அடுத்து ஒரு பூச்சி வந்துச்சி .அதையும் கிழே போட்டுட்டேன்.. இப்போ இதுல பெருசா கரபாண் பூச்சி கிடக்கே என்ன செய்ய...? /

அவ்வ்... மூடி வச்ச டப்பாக்குள்ளேயே பூச்சி வரும்போது திறந்திருக்கிற சாப்பாட்டுக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா... :(

//நான் சொன்னேன் அடேய் கொஞ்சம் மெதுவா பேசுடா ..கடை ஓனர் மலையாளிக்கு தெரிஞ்சா ..இதுக்கும் சேர்த்து பில் போட்டுடுவான் . // நிஜமா சொல்லுங்க..இதுதான் உங்க கவலையா....????

//டைரக்டா சாம்பாரிலே மீனே வந்துடுச்சி//..யூ மீன் வாட் ஐ மீன்..? - தான் ஞாபகம் வந்துச்சு...

இந்த மாதிரி சாப்பாடெல்லாம் அடிக்கடி சாப்பிட்டு கிடச்ச 'பின் அனுபவம்தான்' நீங்க சொல்ற மருத்துவ குறிப்புகளுக்கெல்லாம் மூலகாரணமோ? டாக்டர் பட்டம் கிடைக்க நீங்க ரொம்ப கஷ்டப்பட்டது இப்பத்தான் எங்களுக்கு புரியுது ஹி..ஹி..;)

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--//எப்படி ஜெய்லானி...இப்படி எல்லாம்..ஆனா இதுக்காகவே உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்..ஆனா எனக்கும் இதே டவுட் நிறைய வாட்டி வந்து இருக்கின்றது...//

வாங்க சகோஸ் வாங்க..!!உங்களுக்கும் சந்தேகமா..?? கண்டிப்பா வரனுமே..வராட்டிதான் என் சங்கத்துல ஏதோ பிராப்ளம் ஹா..ஹா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..--// ஜெய்.. //இதை தடுக்கவே முடியாதா . காற்று இல்லாத இடத்தில பூச்சி மட்டும் உயிருடன் வளருதே எப்படி ?// காற்று இல்லைன்னு எப்படிச் சொல்றீங்க? அது வளரத் தேவையான காத்து டப்பா உள்ளயே கிடைக்குமே? என்ன தான் ஏர் டைட் னாலும், டப்பா உள்ள இருக்கற காத்த வெளியேற்ற முடியாதே? //

வாங்க சந்தூஸ் வாங்க..!! ஒரு உயிர் வளரனுமின்னா அதுக்குன்னு சில அடிப்படை இருக்கே காற்று ,ஈரம் ,வெப்பம் இப்படி மூனுமே ஒரே சீரா கிடைக்கனும் . ஆனா இதுல ஏதாவது ஒன்னு குறைவா இருந்தாலும் கஷ்டமாச்சே..!! ஈர மிளகாய்ல ஃபங்கஸ் வரும் ஆனா அது பாக்டீரியா வகை. வண்டு வருமா?,பூச்சி வளருமா...? ஏன்னா இதுல ரெண்டுமே வெவ்வேறு வகை பரிணாம வளர்ச்சி ஆச்சே..!!

//சாம்பார் சைவம் தான்.. இப்படியெல்லாம் யோசித்தால் சாப்பிட முடியாது.. சில விஷயங்களைத் தடுக்க முடியும் சிலதை முடியாது.//

கரெக்ட் ..இதெல்லாம் சரியா சொல்லிட்டு அப்புறம் இன்னும் எல் போர்டை கழட்டாம இருக்கீங்களே..ஹி..ஹி... :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//சந்தேகம் எல்லோருக்கும் உள்ள ச்ந்தேகம் தான் பரவாயில்லை சிரமம் எடுத்து விளக்கி இருக்கீங்க
படஙக்ள் சூப்பர் //

வாங்க ஜலீலாக்கா வாங்க..!! இப்பதான் கொஞ்சமா ஒத்துகிட்டீங்கப் போல..ஆனா பதில்தான் ஒன்னும் சொல்லலியே
..பரவாயில்லை இன்னைக்கி புளி சோறு சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அந்நியன் 2 said...

பாஸ் நான் தாமதமாக வந்து விட்டேன்.

சாப்பாடு சூப்பர்.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

தெளிவ்வ்வ்வா புரியுது...
இந்தப் பக்கம் வராதீங்கனு சொன்னா வரமாட்டோம்ல..
அதுக்கு ஏன் இப்படி கொலைவெறியா பதிவு போட்றீங்க???

இலா said...

:)))

Learn said...

அருமை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))