Friday, February 25, 2011

வசந்த மாளிகை ..!!


          இங்கே  நான் இருக்கிற  இடத்துக்கு   கொஞ்ச தூரத்துல  ஒரு பில்டிங் இருக்கு .  கீழே  கடைகள்  மற்றும் மேலே இரெண்டு  ஸ்டோரி  பில்டிங்.... மெயின் ஏரியாவில  காலியா ரொம்ப நாளா இருப்பதை பார்த்துட்டு  அக்கம் பக்கம் கேட்டதுல.. அங்கே  யார் போனாலும் அடுத்த நாளே  அந்த இடத்தை விட்டு ஓடிடறாங்களாம் .
       இன்னும் விலாவாரியா  விசாரிச்சதுல  அதுல பேய் ஒன்னு இருந்துகிட்டு  யாரையும் தங்க விடறதில்லை அப்படின்னு  சொன்னாங்க .சரி அதுல ஒரு கதை (ஙே ) இது . ஒரு மந்திரம் தெரிஞ்ச ஆள்  உள்ளே வந்தாரு நான் இருக்கேன் என்ன சொல்றீங்கன்னு கேட்டதுக்கு பத்தாயிரம் திர்ஹம்ஸ் (( ஊருக்கு ரூ ஒரு லட்சத்து பதிமூணாயிரம் ))  தரேன்னு பில்டிங்க் ஓனர் சொல்லி இருக்காரு .

       மந்திரம் தெரிஞ்ச ஆள் காலையிலேயே வந்து  மந்திரம் ஓத ஆரம்பிச்சிடாரு.. இரவு வரை இது தொடர்ந்து இருக்கு அரபியும்  மூனு வேலைக்கும் வந்து சாப்பாடு பார்ஸல் குடுத்துட்டு  பார்த்துட்டு போனாரு . மறு நாள் காலையில வந்து பார்க்கும் போது  நம்ம மந்திர வாதியை  காணல..தேடிப்பார்க்கும் போது  மொட்டை மாடியில  தண்ணீத்தொட்டி  வைக்கும் இட்த்தில  தூங்கிகிட்டு இருந்தாரு . அவர் பேரை சொல்லி தேடிய போதுதான் அவருக்கே  விழிப்பு வந்திருக்கு ((காலை ஐந்தரை மணி )).
          அப்புறமென்ன கீழே வர அங்கே  படிக்கட்டு எதுவும் இல்லாத இடத்தில எப்படி இறங்கி வருவாரு..வேறு வழி இல்லாம ஃபயர் சர்வீஸுக்கு  போன் செய்து கிரேன் கொண்டு வந்துதான் இறக்கி விட்டாங்க . தரையில கால் பட்டதோ இல்லை அடுத்த வினாடியே ஆள் தலை தெறிக்க ஓடிட்டாரு .யாருடைய கேள்வி பதிலையும் கேட்கும் மன நிலையில்  அவர் இல்லை .அதுல இருந்த பேய் தூங்கும் போது அவரை மெதுவா மேலே கொண்டு போய் வைத்து விட்டது.
          


நான் மெதுவா அந்த அரபியை  கேட்டேன் . நான் வேனா அங்கேயே  இருக்கேன் .அதிகமில்லை ஜெண்டில் மேன் அந்த பில்டிங்கில ஒரு பிளாட் என் பேருக்கே குடுத்திடு  .நானே  இருந்துக்கிரேன்.. ஒரு மாசம் பார் . நான் இருப்பதை பார்த்துட்டு  அப்புறம் எல்லாருமே  அங்கே  வருவாங்கன்னு சொன்னேன் . உனக்கும் பிசினஸ் ஆச்சி லாபம்தானேன்னு சொன்னேன் .பயபுள்ளை இல்லன்னு சொல்லிட்டான் வேனா மூனு வருஷம் ஃபிரியா இருன்னு சொல்றான் . ஒரு பிளாட் ஃபிரியா குடுக்க ஆசை இல்லை மொத்த பில்டிங்கும் காலியா ரெண்டு வருஷமா இருக்கேன்னு மரமண்டுக்கு புரியல  ..
     
       உருவம் உள்ள மனுஷங்களே  என்னை பார்த்து பயப்படும் போது , உருவம் இல்லாத பேய் என்னை பார்த்து பயப்படாதா...என்ன  ? இதை அந்த அரபிக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்...!!  ஜெய்லானி டிவி ஸ்டேஷனை இடம் மாத்தலாமுன்னு பார்த்தா சரி வரலையே . இங்கே இருக்கும் பதிவர்கள் இது மாதிரி இடம் இருந்தால் தெரிவிக்கலாம் தனி கமிஷன்  தரப்படும் ஹி..ஹி...J)             

86 என்ன சொல்றாங்ன்னா ...:

r.v.saravanan said...

me first

r.v.saravanan said...

me second

பொன் மாலை பொழுது said...

ஆனா முன்ன போல ப்ளாகெல்லாம் எழுவீங்களா??

இமா க்றிஸ் said...

;)

VELU.G said...

ஆமா பாஸ் நிறையப்பேர் கண்ணாடி பார்க்காததால தான் இந்த பிரச்சனையே வருது

குறையொன்றுமில்லை. said...

பேய் என்ன சொல்லிச்சு. உங்கள கண்டு அது ஓடிச்சா?
நீங்க ஓடினீங்களா?

எல் கே said...

ஹஹஹா ..

அந்நியன் 2 said...

ஏன் அண்ணா கதையை பாதியிலியே நிறுத்திட்டியே ?

நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது பாட்டி இப்படிலாம் கதை சொல்லி பயமுறுத்தும் அப்போலாம் பயம் வரலை இப்போ மட்டும் வந்துடுமா என்ன ?

அம்புலி மாமாவுக்கு இந்தக் கதையை எழுதினால் பரிசு ஏதாவது தருவார்கள் அண்ணா.

vanathy said...

ஜெய், பேய்க் கதை நல்லா இருக்கு. இது நிசமா? கற்பனையா??

ராஜவம்சம் said...

என்னங்கய்யா 2011ல விட்டாலாச்சாரியார் படம்போட்டுக்கிட்டு இருக்கீங்க ஃபேஸ்புக்ல அகோரா விடியோ போடும்போதே நினைச்சேன்.

Chitra said...

ஒரு பிளாட் ஃபிரியா குடுக்க ஆசை இல்லை மொத்த பில்டிங்கும் காலியா ரெண்டு வருஷமா இருக்கேன்னு மரமண்டுக்கு புரியல ..


......எல்லோரும் ஜெய்லானி சார் மாதிரி புத்திசாலியா இருப்பாங்களா? ஹி,ஹி,ஹி,ஹி...

ஸாதிகா said...

நீங்க தான் ஜின்னுக்கு பிரண்ட் ஆச்சே.இப்படி வீட்டிலே போய் குடித்தனம் இருப்பீங்க.இதுக்கு மேலே பயங்கரமான வீட்டிலே போயும் குடித்தனம் இருப்பீங்க.

ஸாதிகா said...

//ஜெய், பேய்க் கதை நல்லா இருக்கு. இது நிசமா? கற்பனையா?// என்ன வானதி இப்படி அப்பாவியா கேட்டுட்டு...!

ஆச்சி ஸ்ரீதர் said...

என் டேஸ் போர்ட் வழியாக வந்துட்டேன்.பேயா?அந்த ஊர்லயும் இருக்கா?

jothi said...

த்ரில்லிங்க இருந்துச்சு,..

// .அதுல இருந்த பேய் தூங்கும் போது அவரை மெதுவா மேலே கொண்டு போய் வைத்து விட்டது.//

ஆனா அது ஏன் தூங்கும்போது கொண்டு போய் போட்டுச்சு ,..?? பேய்க்கு பயமோ??

Unknown said...

உருவம் உள்ள மனுஷங்களே என்னை பார்த்து பயப்படும் போது , உருவம் இல்லாத பேய் என்னை பார்த்து பயப்படாதா...என்ன ? //
நல்ல வேளை அந்த அரபி பேய்களை காப்பாத்திட்டாரு.

எம் அப்துல் காதர் said...

தல எனக்கொரு சந்தேகம் (ஹி..ஹி..நீங்க கேக்குற சந்தேகமல்ல...!!) இத எங்க உட்காந்துக்கிட்டு எழுதுனீங்க!! அத மொதல்ல சொல்லுங்க!! அந்த பில்டிங்கல இல்லைதானே!ஹி..ஹி..!

எம் அப்துல் காதர் said...

//ஜெய்லானி டிவி ஸ்டேஷனை இடம் மாத்தலாமுன்னு பார்த்தா சரி வரலையே. பதிவர்கள் இது மாதிரி இடம் இருந்தால் தெரிவிக்கலாம் தனி கமிஷன் தரப்படும் //

இங்கே நம்ம வீட்டுக்கு எதுத்தாப்பல ஒரு இடமிருக்கு பேசி முடிச்சிடவா. கமிஷன் வேண்டாம். இலவச சர்வீஸ். அங்க வசதி எப்படி???????

எம் அப்துல் காதர் said...

//உருவம் உள்ள மனுஷங்களே என்னை பார்த்து பயப்படும் போது, உருவம் இல்லாத பேய் என்னை பார்த்து பயப்படாதா...என்ன? //

பேய் பயப்படுறது இருக்கட்டும், வீட்ல அவுகளுக்கு நீங்களா?? இல்ல உங்களுக்கு அவுகளா?? (பயப்படுறத கேட்டேன்) அவ்வ்வ்வவ்....!!!!

Anisha Yunus said...

இப்படி ஒரு சந்தேகப் (பேய்??) பேர்வழி தங்கறதுக்கு, பேயே தங்கிக்கிடட்டும்னு அந்த ஓனருக்கு தோணியிருக்கும். ஹெ ஹெ :))

Anisha Yunus said...

//ஆமா பாஸ் நிறையப்பேர் கண்ணாடி பார்க்காததால தான் இந்த பிரச்சனையே வருது//

ஹெ ஹெ வேலுண்ணா, நீங்க ஜெய்லானி பாயை சொல்லலியே?? ஹெ ஹெ :))

எம் அப்துல் காதர் said...

//இதை அந்த அரபிக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்...!!//

சரி 'பேய்'க்கு அரபியில் எப்படி சொல்றது, அப்ப தானே அரபியிடம் போய் பேச முடியும். சொல்லுங்க செல்லம். (நான் உங்க பேர கேட்கல) கிக்..கிக்.. கிக்..

எம் அப்துல் காதர் said...

இதுக்கு டைட்டில் 'வசந்த மாளிகை'யா தல ?? அந்த 'வசந்தம்' யாரது சொல்லவே இல்ல அவ்வ்வ்வ்!!!!!!

தங்கராசு நாகேந்திரன் said...

ரொம்பவும் தைரியமான ஆளுதான் நீங்க

சாந்தி மாரியப்பன் said...

உங்கள குடிவெச்சா, சந்தேகம் கேட்டே பேயை விரட்டிருவீங்கன்னு யாருக்கும் தெரியல...

எனக்கொரு சந்தேகம்.. பேய்க்கு கால் இருக்கா இல்லியா????????????

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//me first //

வாங்க ..வாங்க..!! வடை உங்களுக்குதான்

//me second //

கூடவே சட்னி சாம்பாரும் உங்களுக்குதான் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//ஆனா முன்ன போல ப்ளாகெல்லாம் எழுவீங்களா?? //

வாங்க CEO வாங்க ..!! என்னது இப்படி கேட்டுட்டீங்க..அந்த ஃபிளாட் கிடைச்சா ஆவி கதை மன்னன் பி.டி. சாமி ரேஞ்சில இல்ல பிளாக் எழுத ஆரம்பிச்சிடுவேன் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--// ;) //

வாங்க மாமீ..வாங்க..!! இந்த ஸ்மைலிலையே பலதும் புரியுது ((என்னன்னு யாரும் கேக்கப்பிடாது )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@VELU.G--//ஆமா பாஸ் நிறையப்பேர் கண்ணாடி பார்க்காததால தான் இந்த பிரச்சனையே வருது //

வாங்க ..வாங்க..!!ஹி..ஹி...என்ன இருந்தாலும் பப்ளிக்குல அப்படியெல்லாம் சொல்லாதீங்க .இது நமக்குள்ளேயே இருக்கட்டும் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi--//பேய் என்ன சொல்லிச்சு. உங்கள கண்டு அது ஓடிச்சா ? நீங்க ஓடினீங்களா? //

வாங்க..வாங்க..!! அந்த ஆளு ஃபிளாட்டே குடுக்கல..கேட்டுட்டு வந்திருக்கேன் ..என்னைக்காவது ஒரு நாள் அவருக்கு மனசு மாறலாம் பார்க்கலாம். பேய் பிசாசுக்கெல்லாம் நா பயப்படுற ஆளா :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் கே --// ஹஹஹா .. //

வாங்க பாஸ் நீங்க எதை படிச்சி சிரிச்சீங்க ? ஒன்னும் புரியலையே ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2--// ஏன் அண்ணா கதையை பாதியிலியே நிறுத்திட்டியே ? //

வாங்க அண்ணாத்தேஇன்னும் ஒரு டெரார் கதை இருக்கு அப்புறமா சொல்ரேன் :-))

//நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது பாட்டி இப்படிலாம் கதை சொல்லி பயமுறுத்தும் அப்போலாம் பயம் வரலை இப்போ மட்டும் வந்துடுமா என்ன ? //

ம் அதானே... ஆனா இது ஒரிஜினல் . இங்குள்ள அரபிகள் ஜின்னுக்கு பயப்படுவது உங்களுக்கு தெரியாததா என்ன ?

//அம்புலி மாமாவுக்கு இந்தக் கதையை எழுதினால் பரிசு ஏதாவது தருவார்கள் அண்ணா.//

ஹி..ஹி.. அந்தளவுக்கு சின்ன பிள்ள தனமாவா இருக்கு ஒரு டவுட்டுதான் ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தூயவனின் அடிமை said...

//இங்கே நம்ம வீட்டுக்கு எதுத்தாப்பல ஒரு இடமிருக்கு பேசி முடிச்சிடவா. கமிஷன் வேண்டாம். இலவச சர்வீஸ். அங்க வசதி எப்படி???????//

பாஸ் அங்க எதிரில் மயானம்(கபர்ஸ்தான்) உள்ளது.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், பேய்க் கதை நல்லா இருக்கு. இது நிசமா? கற்பனையா?? //

வாங்க வான்ஸ் இது எல்லாமே ஒரிஜினல்தான் . இதுப்போல இங்கே கிட்டதட்ட 9 இடம் இருக்கு.. அரபிகள் பேய் (அரபில ஜின் ) பேரை கேட்டாலே பகல்லயே நடுங்கி போய்டுவானுங்க .
ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சா புதிதாக கட்டி முடித்த வீட்டை கூட ஒரே மாசத்துல இடிச்சி தரை மட்டமாக்கிடுவானுங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம்--//என்னங்கய்யா 2011ல விட்டாலாச்சாரியார் படம்போட்டுக்கிட்டு இருக்கீங்க ஃபேஸ்புக்ல அகோரா விடியோ போடும்போதே நினைச்சேன். //

வாங்க ஐயா வாங்க ..!! இந்த பதிலை படிச்சி இன்னும் சிரிப்புதான் வருது ஹா..ஹா.. :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--//ஒரு பிளாட் ஃபிரியா குடுக்க ஆசை இல்லை மொத்த பில்டிங்கும் காலியா ரெண்டு வருஷமா இருக்கேன்னு மரமண்டுக்கு புரியல ..


......எல்லோரும் ஜெய்லானி சார் மாதிரி புத்திசாலியா இருப்பாங்களா? ஹி,ஹி,ஹி,ஹி...//

வாங்க டீச்சர்..வாங்க ..!! மேலே வானதி அவங்களுக்கு பேட்ட பதிலை பாருங்க ..வருஷக் கணக்குல உள்ளே வரவே பயப்படுவாங்க அரபிகள்..இதுக்கு மட்டும்தான் அவங்களுக்கு பயம் அது மிலிட்டரி கமாண்டோவா இருந்தாலும் சரி :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--// நீங்க தான் ஜின்னுக்கு பிரண்ட் ஆச்சே.இப்படி வீட்டிலே போய் குடித்தனம் இருப்பீங்க.இதுக்கு மேலே பயங்கரமான வீட்டிலே போயும் குடித்தனம் இருப்பீங்க. //

வாங்க ஸாதிகாக்கா வாங்க ..!! அதானே , இதை எழுதும் போதே நீங்க இதான் சொல்லுவீங்கன்னு தெரியும் ஹி..ஹி...

////ஜெய், பேய்க் கதை நல்லா இருக்கு. இது நிசமா? கற்பனையா?// என்ன வானதி இப்படி அப்பாவியா கேட்டுட்டு...!//

ஏங்க அவங்களை போய் பயங்காட்டிகிட்டு இருக்கீங்க நான் என்ன எக்ஸாஸிஸ்டா ஹா..ஹா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@thirumathi bs sridhar --//என் டேஸ் போர்ட் வழியாக வந்துட்டேன்.பேயா?அந்த ஊர்லயும் இருக்கா?//

வாங்க ..வாங்க..!! மனுஷன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கெல்லாம் இந்த பயங்களும் இருக்கே ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@jothi--// த்ரில்லிங்க இருந்துச்சு,..//

வாங்க ..வாங்க..!! இப்பவும் அந்த இடம் அப்படியேதான் இருக்கு .அதுவும் மெயின் ஏரியாவில ரெஸிடென்ஷியல் பகுதிதான் :-))

// .அதுல இருந்த பேய் தூங்கும் போது அவரை மெதுவா மேலே கொண்டு போய் வைத்து விட்டது.//

ஆனா அது ஏன் தூங்கும்போது கொண்டு போய் போட்டுச்சு ,..?? பேய்க்கு பயமோ?? //

அத சொல்லாமத்தான் தான் அந்த ஆள் கிரேனை விட்டு இறங்கியதும் துண்டைகானோம் துனியை கானோமுன்னு ஓடிட்டாரு யார்கிட்ட கேக்க .? கிழே கடையை வாங்கக்கூட யாரும் வரல பில்டிங்க் அப்படியே காலியாதான் இருக்கு :-). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே. ஆர்.விஜயன்--//உருவம் உள்ள மனுஷங்களே என்னை பார்த்து பயப்படும் போது , உருவம் இல்லாத பேய் என்னை பார்த்து பயப்படாதா...என்ன ? //
நல்ல வேளை அந்த அரபி பேய்களை காப்பாத்திட்டாரு.//

வாங்க ..வாங்க..!! ம்..இருக்கலாம் அதாவது சந்தோஷமா இருக்கட்டுமுன்னு விட்டிருக்கலாம் ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர் --//தல எனக்கொரு சந்தேகம் (ஹி..ஹி..நீங்க கேக்குற சந்தேகமல்ல...!!) இத எங்க உட்காந்துக்கிட்டு எழுதுனீங்க!! அத மொதல்ல சொல்லுங்க!! அந்த பில்டிங்கல இல்லைதானே!ஹி..ஹி..! //

வாங்க பங்காளி வாங்க ..!! ஹும் ..சைக்கிள் கேப்பில சான்ஸ் விட்டுப்போச்சி .. கிடைச்சி இருந்தா ஒரு ஆவி தொடர் போட்டிருப்பேன் .

// //ஜெய்லானி டிவி ஸ்டேஷனை இடம் மாத்தலாமுன்னு பார்த்தா சரி வரலையே. பதிவர்கள் இது மாதிரி இடம் இருந்தால் தெரிவிக்கலாம் தனி கமிஷன் தரப்படும் //

இங்கே நம்ம வீட்டுக்கு எதுத்தாப்பல ஒரு இடமிருக்கு பேசி முடிச்சிடவா. கமிஷன் வேண்டாம். இலவச சர்வீஸ். அங்க வசதி எப்படி???????//

அடடா...கன்னி ராசிக்கு இன்னைக்கி எதிர்பாராத பலன்னுன்னு போட்டிருந்துச்சே ..கேக்கும் போதே புல்லரிக்குதே ஹி..ஹி..
//எம் அப்துல் காதர் said... 19

//உருவம் உள்ள மனுஷங்களே என்னை பார்த்து பயப்படும் போது, உருவம் இல்லாத பேய் என்னை பார்த்து பயப்படாதா...என்ன? //

பேய் பயப்படுறது இருக்கட்டும், வீட்ல அவுகளுக்கு நீங்களா?? இல்ல உங்களுக்கு அவுகளா?? (பயப்படுறத கேட்டேன்) அவ்வ்வ்வவ்....!!!! //

என்ன பாஸ் இதெல்லம் பப்ளிக்குல கேட்டுகிட்டு வீட்டில எப்ப நாம புலியா இருந்திருக்கோம் . ஏன் இந்த திடீர் சந்தேகம் ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்னு--// இப்படி ஒரு சந்தேகப் (பேய்??) பேர்வழி தங்கறதுக்கு, பேயே தங்கிக்கிடட்டும்னு அந்த ஓனருக்கு தோணியிருக்கும். ஹெ ஹெ :)) //

வாங்க சகோஸ் வாங்க ..!! இது அந்த பில்டிங் ஓனருக்கு தெரியாதே.. ஒரு வேளை யாராவது போட்டு குடுத்திருப்பாங்களோ அவ்வ்வ்வ்வ்

////ஆமா பாஸ் நிறையப்பேர் கண்ணாடி பார்க்காததால தான் இந்த பிரச்சனையே வருது//

ஹெ ஹெ வேலுண்ணா, நீங்க ஜெய்லானி பாயை சொல்லலியே?? ஹெ ஹெ :)) //

ச்சே..ச்சே...நான் கண்ணாடி பக்கம் கூட போவதில்லை ..எனக்கே என் முகத்தை பார்க்க பயம் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

இதென்ன புது கதை? இப்ப தான் கேள்விபடுறேன்,பேய் நிஜமாவே இருக்கா?இல்லையா? யஸ் ஆர் நோ ,ப்ளீஸ்..

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//இதை அந்த அரபிக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்...!!//

சரி 'பேய்'க்கு அரபியில் எப்படி சொல்றது, அப்ப தானே அரபியிடம் போய் பேச முடியும். சொல்லுங்க செல்லம். (நான் உங்க பேர கேட்கல) கிக்..கிக்.. கிக்.. //


நம்ம ரெண்டு ””பேரும்”” ஒரே மாதிரியா இருப்பதால திட்டக்கூடாதுன்னு பார்க்கிரேன் ....!! :-))

//இதுக்கு டைட்டில் 'வசந்த மாளிகை'யா தல ?? அந்த 'வசந்தம்' யாரது சொல்லவே இல்ல அவ்வ்வ்வ்!!!!!! //

ஹி..ஹி...எல்லாம் அதுதான் .போட்டோ இங்கே போட்டால் சரிவராதேன்னுதான் போடல போதுமா..? !! இதெல்லம் ஓவர் குசும்பு :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தங்கராசு நாகேந்திரன்--//ரொம்பவும் தைரியமான ஆளுதான் நீங்க //

வாங்க..வாங்க..!! மனுஷனே 100 கம்ப்யூவுக்கு சமம் தெரியும்தானே சகோ..!! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் --// உங்கள குடிவெச்சா, சந்தேகம் கேட்டே பேயை விரட்டிருவீங்கன்னு யாருக்கும் தெரியல... //

வாங்க சகோஸ் வாங்க ..!! அதானே..யாராவது அவருக்கு எடுத்து சொன்னா தேவலாம் ஃபிளாட்(வடை) போச்சே ஹி..ஹி...

// எனக்கொரு சந்தேகம்.. பேய்க்கு கால் இருக்கா இல்லியா???????????? //

கண்டிபா இல்லை இருந்தா அது பேய் இல்ல , பேய் போய்(டும் ) ஹா..ஹா..என்கிட்டேயேவா சந்தேகம் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//இங்கே நம்ம வீட்டுக்கு எதுத்தாப்பல ஒரு இடமிருக்கு பேசி முடிச்சிடவா. கமிஷன் வேண்டாம். இலவச சர்வீஸ். அங்க வசதி எப்படி???????//

பாஸ் அங்க எதிரில் மயானம்(கபர்ஸ்தான்) உள்ளது. //

வாங்க பாஸ்..!! துபாய்ல கபர்ஸ்தான் பக்கத்திலேயே கேம்ப் 3 வருஷ அனுபவம் இருக்கு நோ பிராப்ளம் டீலிங்கை மனசு மாறதுக்குள்ள சீக்கிரம் முடிங்க :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar --// இதென்ன புது கதை? இப்ப தான் கேள்விபடுறேன்,பேய் நிஜமாவே இருக்கா?இல்லையா? யஸ் ஆர் நோ ,ப்ளீஸ்.. //

உங்களுக்கு பயம் இல்லாட்டி ஷார்ஜாவுக்கு வரும் போது வரவும் ..!!உங்க தோழியையும் கூட்டிகிட்டு வந்தால் ட்டிரிபிள் சந்தோஷம் :-)) (( தோழி மேலே 12,13 நெம்பரில் இருக்காங்க )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

athira said...

ஆ... ஜெய், அதுக்குள்ள 48 ஆ?(இது வேற 48:)).

உங்கட கதை உண்மைக்கதைதானே ஜெய், நான் இதை பகிடியாக எடுக்கவில்லை.

உலகிலேயே அதிகம் ஆவியிருக்கும் நாடு எது தெரியுமோ? ஸ்கொட்லாந்து.

என்னிடம் கொஞ்சம் இதுபற்றிய கதைகள் இருக்கு ஆனா எழுதப்பயம், நானே எழுதிட்டு, நானே நித்திரைகொள்ளமாட்டேன்:).

இன்று போட்டிருக்கும் படம் புடிக்கல்ல... ரீ ஓ ஓ பீ ஏ டீ.....

athira said...

13 PM
இமா said... 4

;)

///// தனக்கு தனக்கென்றால் மட்டும்தான், சுளகு(முறம்) படக்கு படக்கெண்ணுமாம்....
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

athira said...

ஜெய்லானி said... 48
@@@asiya omar --// இதென்ன புது கதை? இப்ப தான் கேள்விபடுறேன்,பேய் நிஜமாவே இருக்கா?இல்லையா? யஸ் ஆர் நோ ,ப்ளீஸ்.. //

உங்களுக்கு பயம் இல்லாட்டி ஷார்ஜாவுக்கு வரும் போது வரவும் ..!!உங்க தோழியையும் கூட்டிகிட்டு வந்தால் ட்டிரிபிள் சந்தோஷம் :-)) (( தோழி மேலே 12,13 நெம்பரில் இருக்காங்க )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

/// ஹா..ஹா...ஹா... இனி அவங்க யூ ஏ ஈ பக்கம் தலையே வச்சுப்படுக்க மாட்டாங்க... நானும் 12 ஐயும் 13 ஐயும்தான் சொன்னேன்... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

vanathy said...

//உலகிலேயே அதிகம் ஆவியிருக்கும் நாடு எது தெரியுமோ? ஸ்கொட்லாந்து.//


அதீஸ், இது நீங்க சொல்லாமலே எங்களுக்கு தெரியுமே???? நான் எஸ்கேப்பூபூ...

ஜெய்லானி said...

@@@athira --//ஆ... ஜெய், அதுக்குள்ள 48 ஆ?(இது வேற 48:)).//

வாங்க..வாங்க..!! சேஃப் பிளேசுக்குள்ள போய்ட்டா வெளியே வர மனசில்ல அதனாலதான் :-)) இன்னைக்கி விடாமா கமெண்டுக்கு பதில் போட்டுகிட்டு இருக்கேன்:-))

// உங்கட கதை உண்மைக்கதைதானே ஜெய், நான் இதை பகிடியாக எடுக்கவில்லை. //

முழுசும் உண்மைதான் . ஆனா அதுகள் வாழ்கை முறை வேற நம்முடைய வாழ்க்கை முறை வேற

// உலகிலேயே அதிகம் ஆவியிருக்கும் நாடு எது தெரியுமோ? ஸ்கொட்லாந்து.//

ம் யார் அதிகம் நம்பக்கூடிய இல்லை பயந்து நடுங்கக்கூடிய ஆள் இருக்கோ அந்த ஊர்தானே இதுக்கு ஃபேமஸ் :-))

// என்னிடம் கொஞ்சம் இதுபற்றிய கதைகள் இருக்கு ஆனா எழுதப்பயம், நானே எழுதிட்டு, நானே நித்திரைகொள்ளமாட்டேன்:).//

என் காதில மட்டும் சொல்லுங்க கேட்டுக்கிறேன் . எனக்கு இதுல நல்ல இண்டிரஸ்ட் :-))

// இன்று போட்டிருக்கும் படம் புடிக்கல்ல... ரீ ஓ ஓ பீ ஏ டீ.. //

இது அங்கு மட்டும்தான் இருக்குமான்னு கேக்கத்தான் இந்த படம் :-)) நேயர் விருப்பத்திற்காக ஒரு படம் இப்போ மேலே :-)))

//இமா

;)

///// தனக்கு தனக்கென்றால் மட்டும்தான், சுளகு(முறம்) படக்கு படக்கெண்ணுமாம்....
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

ஹா..ஹா... இப்ப மாமி வாயை திறந்துதான் ஆகனும் ஹா..ஹா..!!

//@@@asiya omar --// இதென்ன புது கதை? இப்ப தான் கேள்விபடுறேன்,பேய் நிஜமாவே இருக்கா?இல்லையா? யஸ் ஆர் நோ ,ப்ளீஸ்.. //

உங்களுக்கு பயம் இல்லாட்டி ஷார்ஜாவுக்கு வரும் போது வரவும் ..!!உங்க தோழியையும் கூட்டிகிட்டு வந்தால் ட்டிரிபிள் சந்தோஷம் :-)) (( தோழி மேலே 12,13 நெம்பரில் இருக்காங்க )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

/// ஹா..ஹா...ஹா... இனி அவங்க யூ ஏ ஈ பக்கம் தலையே வச்சுப்படுக்க மாட்டாங்க... நானும் 12 ஐயும் 13 ஐயும்தான் சொன்னேன்... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் //

ஹா..ஹா...இனி இவங்க அவங்களை சும்மா கூப்பிட்டால் கூட வருவாங்களா சந்தேகந்தான் ஹா..ஹா.... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy --//உலகிலேயே அதிகம் ஆவியிருக்கும் நாடு எது தெரியுமோ? ஸ்கொட்லாந்து.//


அதீஸ், இது நீங்க சொல்லாமலே எங்களுக்கு தெரியுமே???? நான் எஸ்கேப்பூப//

ஆனா தேம்ஸ் பக்கத்திலன்னு இல்ல சொன்னாங்க ..யோசிக்கனுமே ..ஆஹா..திரியை கொழுத்தி போட்டுட்டிங்களே வான்ஸ்...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

athira said...

ஹா..ஹா... இப்ப மாமி வாயை திறந்துதான் ஆகனும் ஹா..ஹா..!!

/// இல்ல ஜெய் அவங்க திறக்க மாட்டாங்க.. ஏனெண்டால்... பூஸுக்குப் பயம்.. ஆஅ.. இல்ஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈஈஈஈ

வான்ஸ்ஸ்ஸ்ஸ் வான்ஸ்ஸ்ஸ்... ஒரு பூறாப் பெட்டி தேம்ஸ்க்கு பக்கத்தில வாங்கியதாக் கேள்விப்பட்டேனே... இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் வாங்கியாச்சே...:))).

அதீஸ், இது நீங்க சொல்லாமலே எங்களுக்கு தெரியுமே???? நான் எஸ்கேப்பூப//

// கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது வேற... இது வேற....
.............................................


// இன்று போட்டிருக்கும் படம் புடிக்கல்ல... ரீ ஓ ஓ பீ ஏ டீ.. //

இது அங்கு மட்டும்தான் இருக்குமான்னு கேக்கத்தான் இந்த படம் :-)) நேயர் விருப்பத்திற்காக ஒரு படம் இப்போ மேலே :-)))////

கடவுளே ஜெய்... தெரியாமல் கேட்டுப்புட்டேன்... அது யாரு ... பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

கடலுக்கடிதான் சேவ்டி பிளேஷா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

Jose Ramon Santana Vazquez said...

...traigo
sangre
de
la
tarde
herida
en
la
mano
y
una
vela
de
mi
corazón
para
invitarte
y
darte
este
alma
que
viene
para
compartir
contigo
tu
bello
blog
con
un
ramillete
de
oro
y
claveles
dentro...


desde mis
HORAS ROTAS
Y AULA DE PAZ


COMPARTIENDO ILUSION


CON saludos de la luna al
reflejarse en el mar de la
poesía...
ESPERO SEAN DE VUESTRO AGRADO EL POST POETIZADO DE MONOCULO NOMBRE DE LA ROSA, ALBATROS GLADIATOR, ACEBO CUMBRES BORRASCOSAS, ENEMIGO A LAS PUERTAS, CACHORRO, FANTASMA DE LA OPERA, BLADE RUUNER ,CHOCOLATE Y CREPUSCULO 1 Y2.

José
Ramón...

ஜெய்லானி said...

@@@athira --//

ஹா..ஹா... இப்ப மாமி வாயை திறந்துதான் ஆகனும் ஹா..ஹா..!!

/// இல்ல ஜெய் அவங்க திறக்க மாட்டாங்க.. ஏனெண்டால்... பூஸுக்குப் பயம்.. ஆஅ.. இல்ஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈஈஈஈ //

ஓ...பூஸை கண்டா ஆமைக்கு பயமா..ஹா..ஹா....ஹா..

// வான்ஸ்ஸ்ஸ்ஸ் வான்ஸ்ஸ்ஸ்... ஒரு பூறாப் பெட்டி தேம்ஸ்க்கு பக்கத்தில வாங்கியதாக் கேள்விப்பட்டேனே... இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் வாங்கியாச்சே...:))).//


ஆஹா...பூஸுக்கு நினைவு அதிகம் :) இதுக்கு பேர்தான் குப்புற படுத்துகிட்டு யோசிக்கிறதா ..!!!

அதீஸ், இது நீங்க சொல்லாமலே எங்களுக்கு தெரியுமே???? நான் எஸ்கேப்பூப//

// கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது வேற... இது வேற....//

ஹா..ஹா..ஹா..
.............................................


// இன்று போட்டிருக்கும் படம் புடிக்கல்ல... ரீ ஓ ஓ பீ ஏ டீ.. //

இது அங்கு மட்டும்தான் இருக்குமான்னு கேக்கத்தான் இந்த படம் :-)) நேயர் விருப்பத்திற்காக ஒரு படம் இப்போ மேலே :-)))////

கடவுளே ஜெய்... தெரியாமல் கேட்டுப்புட்டேன்... அது யாரு ... பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ். //

நல்லா பாருங்க கண்ணை உருட்டி உருட்டி பாருங்க :-)))))))))))))))))))))))

கடலுக்கடிதான் சேவ்டி பிளேஷா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) //

சூப்பர் பிஸி மயில் கிட்ட கேட்டுப்பாருங்க..!! ஹா..ஹா..:-))))))))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jose Ramon Santana Vazquez --//

வாங்க வாத்யாரே..வாங்க..!! க்ரெடிட் கார்டு , டெபிட் கார்டு இதுல எதை குடுத்தா வாங்கிப்பீங்க ..!! அதிலமில்ல கால் கிலோ பட்டாணி வேனும் அவ்வளவுதான் ..ஹி..ஹி.. இன்னும் ஸ்பானிஷ் கத்துக்கல அதனால அழகு தமிழில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ப.கந்தசாமி said...

எனக்கும் ஒண்ணு பாருங்க!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன்? ஏன்?.. இந்த கொலைவெறி?..
பதிவை படிச்சதும் , பயந்து..

போங்க சார்..பய்ய்ய்ய்ய்ய்யம்மா இருக்கு...
:-)

( பின்குறிப்பு : பேயோட ஈ மெயில் ஐடி இருந்தா அனுப்பிவைக்கவும்.. சிலபல டீலீங் வேலைகள் செய்யனும்)

ஹி..ஹி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD -//எனக்கும் ஒண்ணு பாருங்க! //

வாங்க..வாங்க..!! அதனாலென்ன இரெண்டா பார்த்துடலாம் எதுக்கும் ஒரு பாஸ்போர்ட் எடுத்து வையுங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--// ஏன்? ஏன்?.. இந்த கொலைவெறி?..//

வாங்க குருவே வாங்க..!! நீங்க அங்கே செய்யுறத நான் இங்கிருந்து செய்யுறேன் ஹி..ஹி...
//பதிவை படிச்சதும் , பயந்து..

போங்க சார்..பய்ய்ய்ய்ய்ய்யம்மா இருக்கு...
:-) //

உங்களுக்கே பயமா..? அப்படின்னா..???

// ( பின்குறிப்பு : பேயோட ஈ மெயில் ஐடி இருந்தா அனுப்பிவைக்கவும்.. சிலபல டீலீங் வேலைகள் செய்யனும்)

ஹி..ஹி //

புரிஞ்சிப்போச் ...அதுக்குதான் நான் டிரை பண்றேன் ..ஆனா கிடைக்க மாட்டேங்குதே..ஹி..ஹி...!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jaleela Kamal said...

நெஜமான கதையா, அங்கு இருந்தவர் மொட்டை மாடியில் பேய் தூக்கி போட்டது நிஜமா?

Jaleela Kamal said...

முதல் போட்டோ பேய் டான்ஸ் ஆடும் போது எடுத்திங்களா?

சுந்தரா said...

அந்த வசந்த மாளிகையோட விலாசத்தையும் சொல்லியிருக்கலாம்...

பேயா, பத்தாயிரமான்னு பாத்துரலாம்ல்ல :)

சிநேகிதன் அக்பர் said...

நம்மூரு அரசியல்வாதிட்ட கொடுத்துப்பாருங்க பேய் தலை தெறிக்க ஓடும் :)

MANO நாஞ்சில் மனோ said...

எங்க ஊர்ல இது மாதிரி ரெண்டு பில்டிங் இருக்குய்யா....

MANO நாஞ்சில் மனோ said...

//தரையில கால் பட்டதோ இல்லை அடுத்த வினாடியே ஆள் தலை தெறிக்க ஓடிட்டாரு .யாருடைய கேள்வி பதிலையும் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை .அதுல இருந்த பேய் தூங்கும் போது அவரை மெதுவா மேலே கொண்டு போய் வைத்து விட்டது.//

ஹா ஹா ஹா ஹா அந்த மந்திரவாதியை எனது "மோகினி" பதிவை படிக்கலை போல ஹா ஹா ஹா.....

Mahi said...

பேய் இருக்கும் இடத்தையா வசந்தமாளிகைன்னு சொல்லறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! நல்லவேளை,அந்தப்பேய் உங்ககிட்ட இருந்து தப்பிச்சது. :) :)

உலக சினிமா ரசிகன் said...

போலியான நடுநிசிபேயை ஸாரி..நாயை முகத்திரையை கிழித்திருக்கிறேன்.வந்து பாருங்கள்.
http://worldcinemafan.blogspot.com/2011/02/blog-post.html

இலா said...

ஹா ஹா! நானும் நல்லா கதை கேட்டு இருக்கேன். பிரெண்ட் வீட்டுக்கு போனா ஒரு 11:59க்கு பேய்க்கதை ஆரம்பிக்கும் எப்படின்னு தெரியலை. இப்பவும் தூங்க நேரம் ஆகுது 12 டு 1 பயமா இருக்கும் அப்புறம் என்ன 1 மணி வரை ஆடாம அசையாம ஒரே ரூம்ல இருப்பேன்.. அப்புறம் 1 மணிக்கு சூடா ஒரு டீ போட்டு குடிச்சிட்டு "டிலைலா" ரேடியோ ஸ்டேஷன்ல பாட்டு கேட்டுட்டே தூங்க வேண்டியதுதான்...

ஆனாலும் பாருங்க மனுஷனுக்கு பேயை விட பணத்துக்கு மேலதான் பயம் அதிகம் :)

அதீஸ்! அங்கங்க போய் வம்பிழுத்துட்டு இப்போ என்ன இல்ஸ்ஸ்... சரி சரி...
யாரங்கே பூஸை பயமுறுத்துவது :))

வான்ஸ் ! புறாப்பெட்டியா??!! சொல்லவே இல்லை.. எந்த ஹான்டட் மேன்ஷன் அது :))

apsara-illam said...

சலாம் ஜெய் சகோதரரே...,எனக்கு த்ரில்லான பேய் கதைன்னா ரொம்ப பிடிக்கும்.ரசிச்சு கேட்ப்பேன்,படிப்பேன்.அப்பைட்த்தான் இன்னைக்கும் படிச்சேன்.
அப்பதான் ஒரு யோசனை தோணுச்சு.
இப்பதான் இந்த துபாய்,அபுதாபியில் ரெண்ட் ஜாஸ்தியாக இருக்கே... இந்த மாதிரி பேய் கப்ஸா விட்டா ரெண்ட் குறைய வாய்ப்பு ஏற்படுமோ....
தின்க் பண்ண வேண்டிய விஷயம் இல்லையா சகோதரரே....

அன்புடன்,
அப்சரா.

இப்னு ஹம்துன் said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

ஏற்கனவே பேய்க்கதை. இதுல இது வேறயா : -)))))

enrenrum16 said...

ஐ...பேய்க் கதை...இன்னொரு பேய்க்கதை சொல்லுங்க...எனக்கு பேய்க் கதைன்னா ரொம்ப பிடிக்கும்...ஏன்னா அடுத்தவங்க கதைய கேட்கிறதுல அவ்வளவு சந்தோஷம்...ஹி..ஹி..

இராஜராஜேஸ்வரி said...

மரமண்டுக்கு புரியல //

புரிய வையுங்க. பிளக்கெல்லாம் எழுதத் தெரியுது. பேய் பாஷையில் பேசுங்க

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal --// நெஜமான கதையா, அங்கு இருந்தவர் மொட்டை மாடியில் பேய் தூக்கி போட்டது நிஜமா? //

வாங்க ..ஜலீலாக்கா வாங்க..!! ஏன் நீங்க டிரை செய்யுறீங்களா..? சொல்லவா...ஹா..ஹா..!!

//முதல் போட்டோ பேய் டான்ஸ் ஆடும் போது எடுத்திங்களா?//

இல்ல இதெல்லாம் கூகிளார் குடுத்தது..!! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுந்தரா--// அந்த வசந்த மாளிகையோட விலாசத்தையும் சொல்லியிருக்கலாம்...//

வாங்க ..வாங்க..!! இங்கே தான் ஷார்ஜாவுக்குள்ளேயேதான் இருக்கு :-))

//பேயா, பத்தாயிரமான்னு பாத்துரலாம்ல்ல :) //
எனக்கு ரெண்டுமே கிடைச்சா சந்தோஷம்தான் ...உங்களுக்கு எதுன்னு சொல்லலையே . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--//நம்மூரு அரசியல்வாதிட்ட கொடுத்துப்பாருங்க பேய் தலை தெறிக்க ஓடும் :)//

வாங்க அக்பர்..வாங்க..!! உண்மைதான்..இவனுங்க ரத்த காட்டேரி மாதிரி...இப்பவே நம்ம ரத்தத்தை உறிஞ்சிகிட்டுதான் இருக்கானுங்க.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//எங்க ஊர்ல இது மாதிரி ரெண்டு பில்டிங் இருக்குய்யா....//

வாங்க...வாங்க..!!கிடைக்குமான்னு சொல்லி போய் பார்த்துட வேண்டியதுதானே...!!

////தரையில கால் பட்டதோ இல்லை அடுத்த வினாடியே ஆள் தலை தெறிக்க ஓடிட்டாரு .யாருடைய கேள்வி பதிலையும் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை .அதுல இருந்த பேய் தூங்கும் போது அவரை மெதுவா மேலே கொண்டு போய் வைத்து விட்டது.//

ஹா ஹா ஹா ஹா அந்த மந்திரவாதியை எனது "மோகினி" பதிவை படிக்கலை போல ஹா ஹா ஹா.....//

ஆள் கொஞ்சம் அசந்து தூங்கிட்டு இருக்கும் போது அது பண்ணீய வேலை அது ..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகி--//பேய் இருக்கும் இடத்தையா வசந்தமாளிகைன்னு சொல்லறீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! நல்லவேளை,அந்தப்பேய் உங்ககிட்ட இருந்து தப்பிச்சது. :) :) //

வாங்க மஹி வாங்க..!!! எனக்கு அது வசந்த மாளிகை மாதிரிதான் .ஏன் உங்களுக்கு பயமா..? மனுஷனே ஃபிரெண்டா இருகும் போது பேய் எனக்கு ஃபிரெண்டா இருக்காதா..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@உலக சினிமா ரசிகன் --//போலியான நடுநிசிபேயை ஸாரி..நாயை முகத்திரையை கிழித்திருக்கிறேன்.வந்து பாருங்கள்.
http://worldcinemafan.blogspot.com/2011/02/blog-post.html //

வாங்க வாங்க..!! எனக்கு தமிழ் படம் பார்க்கவே பிடிக்காது..பின்னனனி இசையை தவிர மற்றது செயற்கையா இருக்கும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இலா-// ஹா ஹா! நானும் நல்லா கதை கேட்டு இருக்கேன். பிரெண்ட் வீட்டுக்கு போனா ஒரு 11:59க்கு பேய்க்கதை ஆரம்பிக்கும் எப்படின்னு தெரியலை. இப்பவும் தூங்க நேரம் ஆகுது 12 டு 1 பயமா இருக்கும் அப்புறம் என்ன 1 மணி வரை ஆடாம அசையாம ஒரே ரூம்ல இருப்பேன்.. அப்புறம் 1 மணிக்கு சூடா ஒரு டீ போட்டு குடிச்சிட்டு "டிலைலா" ரேடியோ ஸ்டேஷன்ல பாட்டு கேட்டுட்டே தூங்க வேண்டியதுதான்...//

வாங்க மயில் வாங்க..!! இதிலிருந்து என்ன தெரியுது...!!நாமரெண்டுப் பேரும் ஒரே மாதிரின்னு தெரியுது.

//ஆனாலும் பாருங்க மனுஷனுக்கு பேயை விட பணத்துக்கு மேலதான் பயம் அதிகம் :)//

அதெப்படி கரெக்டா கண்டு பிடிச்சீங்க ..செம உள் குத்து அவ்வ்வ்வ்வ்

//அதீஸ்! அங்கங்க போய் வம்பிழுத்துட்டு இப்போ என்ன இல்ஸ்ஸ்... சரி சரி...
யாரங்கே பூஸை பயமுறுத்துவது :)) //
அதானே கேட்குரதுக்கு ஆள் இல்லைன்னு நினைப்பா...

//வான்ஸ் ! புறாப்பெட்டியா??!! சொல்லவே இல்லை.. எந்த ஹான்டட் மேன்ஷன் அது :)//
நீங்க வந்தாதானே தெரியும்..வான்ஸ் அப்படியே மயிலுக்கு ரெண்டு புறா பார்ஸல் பிளீஸ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@apsara-illam-//சலாம் ஜெய் சகோதரரே..., எனக்கு த்ரில்லான பேய் கதைன்னா ரொம்ப பிடிக்கும்.ரசிச்சு கேட்ப்பேன், படிப்பேன். அப்பைட்த்தான் இன்னைக்கும் படிச்சேன்.//

அலைக்கும் வ அஸ்ஸலாம்
வாங்க சகோஸ் வாங்க ..!! படிப்பதுக்கும் அது மாதிரி இடத்திறகு போவதுக்கும் வித்தியாசம் இருக்கே..!!
// அப்பதான் ஒரு யோசனை தோணுச்சு.
இப்பதான் இந்த துபாய்,அபுதாபியில் ரெண்ட் ஜாஸ்தியாக இருக்கே... இந்த மாதிரி பேய் கப்ஸா விட்டா ரெண்ட் குறைய வாய்ப்பு ஏற்படுமோ....
தின்க் பண்ண வேண்டிய விஷயம் இல்லையா சகோதரரே....

அன்புடன்,
அப்சரா //

இல்லையே இது ரொம்ப வருஷமாவே இருக்கு . இது மாதிரியான இடங்கள் .இந்த ஒரு பில்டிங் நீங்க சொல்றது ஓக்கே..ஆனா மத்ததுகள்.யாருமே வருவதில்லையே..

உதா: ஒரு பழைய வீட்டை இடித்து கட்ட எத்தனையோ தடவை புல்டோசர் வந்தும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து இடிக்கமுடியாமல் போவதுண்டு ((இங்கு புல்டோசர் +கிரேன் ஒரு மணிக்கு இத்தனை பணம் என்பது தெரியுமா .வேலை நடந்தாலும் நடக்காவிட்டாலும் பணம் தரனும்.அதுவும் அது அவங்க ஸ்டேஷனை விட்டு கிளம்பியதும் ஸ்டாட்டிங் ஆகிடும் )).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இப்னு ஹம்துன்--//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

ஏற்கனவே பேய்க்கதை. இதுல இது வேறயா : -))))) //

வாங்க...வாங்க..!! முதல்ல வரும் எல்லாமே இப்படிதான் பயந்துகிட்டாவது சொல்லிட்டு போறாங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@enrenrum16 --// ஐ...பேய்க் கதை...இன்னொரு பேய்க்கதை சொல்லுங்க...எனக்கு பேய்க் கதைன்னா ரொம்ப பிடிக்கும்...ஏன்னா அடுத்தவங்க கதைய கேட்கிறதுல அவ்வளவு சந்தோஷம்...ஹி..ஹி../

வாங்க சகோஸ் வாங்க..!!நீங்களும் நம்ம கட்சிதானா ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இராஜராஜேஸ்வரி-//மரமண்டுக்கு புரியல //

புரிய வையுங்க. பிளக்கெல்லாம் எழுதத் தெரியுது. பேய் பாஷையில் பேசுங்க //

வாங்க..வாங்க..!!நான் ரெடி ஆனா பில்டிங் ஓனருக்கு பயம் கடைசியில பேஸ்மெண்டையே எழுதி வங்கிப்பேனோன்னு அதான் ஒத்துக்க மாட்டேங்கிறார் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))