Thursday, February 10, 2011

ஒரு ரூபாயில் மருத்துவம் ...!!!


         ஆரம்பத்துல  கவிஞர் பட்டம் குடுத்தாங்க ..அதுக்கு தகுந்த மாதிரி  கவிதைங்கிற பேர்ல இங்கே  இரெண்டும்  மூஞ்சி புக்கில சிலநேரம்  கிறுக்கி சில பல பேரை தடுமாறி விரட்டியும் இருக்கிறேன் .. இன்னொன்னு ((இது ரைட்டர் ))  வைட்டிங்க் லிஸ்டில இருக்கு .அதுப்போட நேரம் கிடைக்கல... 
பெட்ரோல் விலை +  ஸ்பெக்ட்ரம்  ஊழல்   
      
         சமீபத்தில  டால்டா  அடச்சே.....டாகுடர் பட்டம் கிடைச்சி அது சம்பந்தமா ஒரு பதிவு கூட போடாட்டி அது சரில்லை ...கூடவே  நர்ஸ் கேட்டும் அவர் தரல..சரி போனா போகட்டும் எங்காவது ஒரு மலை உச்சியில ஒத்தைக்கு ஒரு கிளினிக்  திறக்காமலா போயிடப்போரேன்.. ((மக்கா எங்காவது போலீஸ்  தொந்திரவு இல்லாத இடமா சொல்லுங்க ..கமிஷன் உங்க சுவிஸ் அக்கவுண்டுக்கு அனுப்பிடரேன் ))  அதனால இதில் ஒரு மருத்துவக்குறிப்பு சொல்றேன் கேட்டதும் இல்லாம முடிஞ்சா உபயோகித்துப் பாருங்க..ஓக்கே ....!! இனி சீரியஸ்  

       நமது உடம்பில  நாளுக்கு நாள்  கொழுப்பு சத்து சேர்ந்து கிட்டுதான் இருக்கு. முறையா உடற்பயிற்ச்சி செய்யும் போது அது தானா குறையும் . அப்படி இல்லாமப்போகும் போது அது ரத்தத்தில சேர்ந்துகிட்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமா  சேரும் போதுதான் ஹார்ட் அட்டாக்  வரை போகும் ..ஆனா அதுல வர மிகக் குறைந்த அளவுதான் மூட்டு வலி . ஏன் அந்த இடங்களில் சில மெல்லிய ரத்தகுழாய்களில்  கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தை தடை செய்திடும்... ஆரம்ப காலத்தில  மறத்து போனமாதிரி தெரியும்  ..சிலருக்கு கால் கை உப்பிப்போகும்...உட்கார்ந்தே இருப்பாங்க 

      இந்த மூட்டு வலி சிலருக்கு மாச, ஏன் சிலருக்கு வருஷ கணக்குல கூட இருக்கும் .எத்தனையோ  டாக்டர் ( ஒரிஜினல் ) கிட்ட போய் காட்டினாலும் அவர் சில பல டெஸ்ட் செய்ய சொல்லி ஆட்டோமேடிக்கா நமது பர்ஸை  குறைச்சி  பல்ஸை அதிகமாக்கி பட்டை பட்டையா மருந்து மாத்திரையை குடுத்து அனுப்புவார் . அப்போதைக்கி சரியாகி  கொஞ்ச நாள் கழிச்சி திரும்பவும் வந்துடும்.. நாமளும் பழைய டாக்டரை ( ஒரிஜினல் ) நல்லா திட்டிட்டு  வேற புது டாக்டரை பார்க்க போயிடுவோம்  ..இது ஒரு தொடர் கதையாகி போகும்..  இது வீட்டில் இருப்பவங்களுக்கு ..இதே  வெளியே  வேலைக்கு போகும் ஆண்களா இருந்தா ரொம்பவும் பாவம்.  சிலருக்கு அலைய முடியாமல் வேலையே  போகும் பரிதாப நிலையும் வரலாம் .

     இதை செலவே இல்லாமல் குணமாக்க  முடியும்..அதுவும்  வீட்டில்  இருக்கும் பொருளைக்கொண்டே  ..என்ன ஆச்சிரியமா இருக்கா... !!  இதுப்போல எத்தனையோ  பொருட்கள்  இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை  புரிவதில்லை.. என் கூட வேலை பார்க்கும் ஒருவரின் உறவினருக்கு இந்த பிரச்சனையால்  நடக்கவே சிரமப்பட்டார்.. அப்போது நான் சொன்னேன் .இது மாதிரி செய்யுங்க போதுமுன்னு..சந்தேகத்தோடவே போனார்  அடுத்த நாள்  பயங்கர சந்தோஷத்தோட வந்து சொன்னார்.. இது கடந்த மூனு வருஷமா இருக்கு ஆனா இன்னைக்கி காலையில எழுந்திருச்சதும் பார்த்தேன் . ரொம்ப நன்றி என் வாழ்க்கையில மூட்டு வலியே வந்ததில்லை போல உணர்ந்தேன் என்றார் நான் சொன்னேன் எப்பவாவது திரும்ப வருவது மாதிரி இருந்தா இதை திரும்பவும் செய்யுங்க போதுமுன்னேன்  ...

       விஷயம் இதுதான்  வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு நாலு அதாவது நாலு பல்  எடுத்து அதை கத்தியால்  சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு  தூங்கப்போகும் போது  அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில  அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..தட்ஸ் ஆல்..... மறு நாள் காலை எழுந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் ..

       காரணம்  இது ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் குறைப்பதால இதயம் பம்ப் செய்ய அதிக மெனக்கெடுவதில்லை சாதாரனமாகவே பம்ப் செய்வதால் . ரத்தம் உடல் முழுக்க அதன் முழு பலத்துடன் பாய்வதால் மூட்டுக்களில்  தேங்கி இருக்கும் கொழுப்பு தானாக கரைந்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது ..நான்கு பூண்டுப்பல் ஒரு விலையே  இல்லை அப்படியே இருந்தாலும் அது அதிகபட்சம் ஒரு ரூபாய்  வருமா..? 
 அடுத்த தடவை யாருக்காவது  மூட்டு வலி மாதிரி இருந்தால் , தெரிந்தால்  டக்டரிடம் போவதுக்கு முன்  இதை செய்யுங்கள்.. தெரியாத வருக்கும் தெரியப்படுத்துங்கள்.. எல்லா புகழும் இறைவனுக்கே...!!  
    

128 என்ன சொல்றாங்ன்னா ...:

Nivethanum said...
This comment has been removed by the author.
ஹேமா said...

ஏதாவது சந்தேகமோன்னு நினைச்சேன் ஜெய்.நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க.

எங்க ரொம்பக் காலமா குழந்தைநிலாப் பக்கம் காணல.கவிதை புரியலயா !

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எப்ப இருந்து டாக்குடர் ஆனீங்க ஜெய்லானி? எத்தன படம் நடிச்சிருக்கீங்க இதுவரைக்கும்? :)

Priya said...

//வீட்டில்,எத்தனையோ பொருட்கள் இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை புரிவதில்லை.. //... உண்மைதான். மிகவும் பயனுள்ள விஷயத்தை பகிர்த்தமைக்கு நன்றி!

Philosophy Prabhakaran said...

ஆஹா... நீங்க அந்த டாக்டரா...? தெரியாம போச்சே...

கவி அழகன் said...

மிகவும் பயனுள்ள விஷயத்தை பகிர்த்தமைக்கு நன்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நிசமாவா பாஸு?...

பன்னிக்குட்டிய செயல்முறை விளக்கம் செய்துகாட்டச்சொல்லி, வீடியோவை வெளியிட்டு இருக்கலாமே..ஹி..ஹி

(ட்ரை பண்ணிப்பார்க்கிறேன்.. எதுக்கும் அடுத்த வாரம் ரெடியா இருங்க.. பூச்செண்டு வருதா..இல்ல பூதம் வருதானு பார்க்க..)

ப.கந்தசாமி said...

செஞ்சு பாத்துட்டு அப்பறமா விரிவா கமென்ட் போடறேனுங்க.

Chitra said...

டாக்டர் ஜெய்லானி வாழ்க! வருங்கால முதல்வர் டாக்டர் ஜெய்லானி வாழ்க! டாக்டர் ஜெய்லானியின் தேர்தல் பிரச்சார வாகனம் - போட்டோ சூப்பர்!

ப.கந்தசாமி said...

பூண்டு இப்ப என்ன வெலைன்னு தெரியுமா டாக்டர். கிலோ 300 ரூபாயாக்கும்!

ஜெய்லானி said...

@@@nivetha ---//
This post has been removed by the author. //

வாங்க.....நல்ல விஷயம் சொல்லிட்டு ஏன் அப்புறம் டெலிட்...பரவாயில்லை உங்கள் முதல் வருகைகும் கருத்துக்கும் நன்றி.(( வடை உங்க்ளுக்குத்தான் ))

ஜெய்லானி said...

//@@@ஹேமா--// ஏதாவது சந்தேகமோன்னு நினைச்சேன் ஜெய்.நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க.//

வாங்க குழந்தை நிலா..சந்தேகமா...ஹா..ஹா.. இனிமே வரும்..டிரை செய்து பாருங்க ..

// எங்க ரொம்பக் காலமா குழந்தைநிலாப் பக்கம் காணல.கவிதை புரியலயா ! //

ஏறக்குறைய பிளாக் ஸ்பாட் பக்கமே வரதில்லை அதனாலதான் ..இனி பார்க்கலாம் .உங்க கவிதை புரியாட்டி பிறகு யார் கவிதைதான் புரியும் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//எப்ப இருந்து டாக்குடர் ஆனீங்க ஜெய்லானி? எத்தன படம் நடிச்சிருக்கீங்க இதுவரைக்கும்? :) //

வாங்க சந்தூஸ்...வாங்க..ஒரு நல்ல மனுஷன் அவரா பார்த்துட்டு குடுத்தார்..ஒரு நல்ல ஹிரோயின் கிடைக்கல ((யாருமே வரதில்லன்னு எப்படி சொல்ல )) கிடைச்சா வருஷத்துக்கு 12 படம் ரிலீஸ் செய்ய நான் ரெடி .அந்த கொடுமையை பார்க்க நீங்க ரெடியா..ஹா..ஹா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Priya --//வீட்டில்,எத்தனையோ பொருட்கள் இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை புரிவதில்லை.. //... உண்மைதான். மிகவும் பயனுள்ள விஷயத்தை பகிர்த்தமைக்கு நன்றி! //

வாங்க சகோஸ்..வாங்க..!!ஆமாம் அதை தெரிந்து பயன் படுத்தினாலே போதும் ...ஆரோக்கியமா வாழலாம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Philosophy Prabhakaran--//ஆஹா... நீங்க அந்த டாக்டரா...? தெரியாம போச்சே...//

வாங்க பிரபா...!! ம்..உள்குத்து புரியுது...அவ்வ்வ்வ் உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வேலன். said...

4 பூண்டு பல் 1 ஒரு ரூபாயா..? இங்கு 7 பூண்டுபல்(சுமார் 50கிராம்)விலை 15 ரூபாய் சார்...பூண்டுவிலையை கேட்டாலே உங்களுக்கு ஹார்ட்அட்டாக் வந்துவிடும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஜெய்லானி said...

@@@யாதவன் --// மிகவும் பயனுள்ள விஷயத்தை பகிர்த்தமைக்கு நன்றி //

வாங்க ..வாங்க..!! இதை தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க ..அப்புறம் பாருங்க உங்களை பாராட்டுவதை ..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//நிசமாவா பாஸு?...//

வாங்க குருவே...வாங்க..!!ஆமாம் உண்மைதான் :-))

//பன்னிக்குட்டிய செயல்முறை விளக்கம் செய்துகாட்டச்சொல்லி, வீடியோவை வெளியிட்டு இருக்கலாமே..ஹி..ஹி //

ஓக்கே..ஓக்கே...அப்பாயின்மெண்ட் கிடைக்கல...கிடைச்சதும் முதல் பலி போட்டுட வேண்டியதுதான் :-)))))

//(ட்ரை பண்ணிப்பார்க்கிறேன்.. எதுக்கும் அடுத்த வாரம் ரெடியா இருங்க.. பூச்செண்டு வருதா..இல்ல பூதம் வருதானு பார்க்க..) //

இது ஒரு நைட்டில முடியும் மேட்டர்..உடனே பாருங்க..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--// செஞ்சு பாத்துட்டு அப்பறமா விரிவா கமென்ட் போடறேனுங்க.//

வாங்க (ஒரிஜினல்) டாக்டர்..!!ம்...செஞ்சி பாருங்க ..நைட் கடைசியா தூங்கப்போகும் போது டிரை செய்யுங்க ..பகல்ல வேண்டாம் .நல்ல பலன் தெரியும் .உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra --//டாக்டர் ஜெய்லானி வாழ்க! வருங்கால முதல்வர் டாக்டர் ஜெய்லானி வாழ்க! டாக்டர் ஜெய்லானியின் தேர்தல் பிரச்சார வாகனம் - போட்டோ சூப்பர்! //

வாங்க டீச்சர் வாங்க...!! ஹா..ஹா.. முதல்வரா வந்தா கொ.ப.செ நீங்கதான் எப்பூடி... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//பூண்டு இப்ப என்ன வெலைன்னு தெரியுமா டாக்டர். கிலோ 300 ரூபாயாக்கும்! //

அட...இதுக்குதான் அடிக்கடி ஊருக்கு வரனும் போலிருக்கே..விவசாயம் குறைந்து போய் இலவச டீவி பார்த்தா என்ன ஆகிரது ...உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்.--//4 பூண்டு பல் 1 ஒரு ரூபாயா..? இங்கு 7 பூண்டுபல்(சுமார் 50கிராம்)விலை 15 ரூபாய் சார்...பூண்டுவிலையை கேட்டாலே உங்களுக்கு ஹார்ட்அட்டாக் வந்துவிடும்...
வாழ்க வளமுடன்.
வேலன். //

வாங்க ..சகோஸ் வாங்க..!! அந்த அளவுக்கா விலை ஏறிப்போச்...அவ்வ்வ் நான் இன்னும் பழைய நினைவுகளிலேயே இருக்கேன் ..!!விலை போட்டது தப்பா...!! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸாதிகா said...

அட..அருமையான தகவலை பகிர்ந்து இருக்கின்றீர்கள்.

பொன் மாலை பொழுது said...

நம்ம டுபாக்கூர் யுனிவர் சிடியில உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததற்கு பெருமை படுகிறோம்.மிக நல்ல மருத்துவ முறையினை சொல்லியதற்கு.
நான்கு பல் பூண்டை பாலில் இட்டு கொதிக்க வைத்து சாப்பிடும்படி ஒரு இலங்கை காரர் என்னிடம் சொன்னதுண்டு.உங்கள் முறை அதைவிட அதிக பலன் உள்ளதுபோல தெரிகிறது.(சாமி ...எனக்கு ஒன்றும் கொழுப்பு சமாச்சாரம் இல்லை.)
என்ன தலைவா நீங்களே இப்படி குறை சொன்ன எப்படி? நர்ஸ் தானே வேணும்? நம்ம பட்டாபியை கேட்டால் ஒன்னுக்கு நாலா சிங்கையிலிருந்து அனுப்பி வைப்பார் . கவலையை விடுங்க.

Unknown said...

நல்ல விஷயம்..எனக்கும் கொஞ்சம் இருக்கிறது..

பொன் மாலை பொழுது said...

தலைவரே பட்டாப்பட்டி ! சீக்கிரம் நாலு பிலிப்பைனி நர்ஸ்கல நம்ம டாக்டர் ஜெய்லானி கிட்டே அனுப்பி வையுங்க . டாக்டர் பட்டம் வாங்கிய கையேடு நர்ஸ் வேணும் நர்ஸ் வேணும்னு ஒரே நச்சரிப்பு தாங்கல சாமி.

மாதேவி said...

ஒரு ரூபாயில் மருத்துவமா
டொக்டர்ஸ் எல்லாம் அடிக்கப்போறாங்க.

sathishsangkavi.blogspot.com said...

வாங்க டாக்டர்...

Anonymous said...

உள்ளி (பூடு/பூண்டு) சாப்பிட்ட பின்னர் பல் விளக்க மறக்காதீர்கள். காலையில் வாய் துர்நாற்றம் தாங்க முடியாமல் வீட்டை விட்டு துரத்தப் போகிறார்கள்.

முழுதாக கடித்து 3 உள்ளிப்பல்லு இரவில் சாப்பிட்டால் கொழுப்பு குறையும் என்பது உண்மை. அப்படி முடியாதவர்கள் மத்திய சாப்பாட்டுடன் ஒரு முழுப்பூண்டை (விறகடுப்பு பாவிப்பவர்கள்) தணலில் புதைத்து , சுட்டு சாப்பிடுவார்கள். இல்லாவிட்டால் வாணலியில் தோலுடன் வறுத்து விட்டு சாப்பிடுவார்கள் (தோலை நீக்கவேண்டும்). எங்கள் கிராமத்தில் வீட்டில் இருக்கும் நாட்களில் மதிய சாப்பாட்டின் பின்னர் சுட்ட பூண்டு சாப்பிடுவது (ஒருவருக்கு ஒரு முழு பூண்டு. எங்க ஊரில் பூண்டு கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். இங்கே உள்ளது போல சின்னது இல்லை) வழக்கம்.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல மருத்துவ குறிப்பு டாக்டர்.

athira said...

ஆ... ஜெய் இது அவசரத்தில் படித்து, அந்தரத்தில் பதில் போடுறேன், திரும்பவந்து நல்ல விஷயங்களைப் படிக்கிறேன்.... இப்போ இது மட்டும்தான் கண்ணில பட்டுது...

///நர்ஸ் கேட்டும் அவர் தரல..சரி போனா போகட்டும் எங்காவது ஒரு மலை உச்சியில ஒத்தைக்கு ஒரு கிளினிக் //// எதுக்கு ஒரு நர்சோடு தனியா மலை உச்சிக்குப் போறீங்க.....? என் டவுட்டைக் கெதியா ஆராவது கிளியர் பண்ணுங்க பிளீஸ்ஸ்... கொழுப்பில்லாமலே கார்ட் அட்டாக் வந்திடும்போல இருக்கே....
எதுக்கும் இப்போதைக்கு ஓடிப்போய்க் கட்டிலுக்குக்கீழ இருப்பதுதான்... பாஆஆஅதுகாப்பு... மீயா... எஸ்ஸ்ஸ்ஸ்.

ஹுஸைனம்மா said...

தினமும் அனாமிகா சொல்லியிருப்பதுபோல, சில பூண்டு பற்களைச் சுட்டுச் சாப்பிடும் வழக்கமுண்டு. அது கொலஸ்ட்ரால்/பிரஷர்/வாய்விற்கு மருந்த என்பதால். மூட்டு வலிக்கும் மருந்து என்பது புதிய செய்தி. ஆனால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தும், மூட்டு வலி ஓரளவு இருக்கத்தானே செய்கிறது எனக்கு?

//ஒரு ரூபாய் மருத்துவம்//
உங்க ஃபீஸ்தான் ஒரு ரூபான்னு நெனச்சேன்!! :-))))

MANO நாஞ்சில் மனோ said...

அசத்திட்டியலே மக்கா.........!!!
உமக்கு டாக்டர் பட்டம் உறுதியா கிடைச்சிரும்.......[கூடவே நர்சும் வேணும்னு கேக்கபூடாது]

Jaleela Kamal said...

4 pal puuNda eppadi muzungkuathu
athuvum passaiyaa?
muddu vali nejamaavee pooydumaa?
mudduvali uLLavangkalukku sollalaame

kakku maanikkam dr paddam koduththaalum koduththaar. appaa arumaiyaan avaiththiyam

எம் அப்துல் காதர் said...

இதை தான் 'கார்லிக் பேர்ல்ஸ்'(garlic pearls) என்று கேப்சுயூல்ஸ் வடிவில் ரொம்ப காலமா, இதை விட மிகக் குறைந்த விலையில் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். இது bp க்கும் உகந்தது!!

Jaleela Kamal said...

டாக்டர் ஜெய்லானி வாழ்க!

Geetha6 said...

தகவலுக்கு நன்றி !பாட்டி வைத்தியம் போல இனி ஜெய்லானி வைத்தியம் என்று ஒரு ப்ளாக் சிக்கீரம் ஆரம்பிங்க..நான் முதல் பாலோவ்வேர் ஆக ஜாய்ன் பண்றேன்.

எம் அப்துல் காதர் said...

((மக்கா எங்காவது போலீஸ் தொந்திரவு இல்லாத இடமா சொல்லுங்க ..கமிஷன் உங்க சுவிஸ் அக்கவுண்டுக்கு அனுப்பிடரேன் ))
போலீஸ் ஸ்டேஷன்லேயே திறங்களேன்!! அங்க தான் அவங்க தொந்தரவு இருக்காது. ஏன்னா அவங்க வெளில வசூல்ல இருப்பாங்க. ஹி..ஹி..!!

எம் அப்துல் காதர் said...

// வெள்ளை பூண்டு நாலு அதாவது நாலு பல் எடுத்து அதை கத்தியால் சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு தூங்கப்போகும் போது அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..தட்ஸ் ஆல்.//

அந்த நாலு பல் பூண்டை நெருப்பில் சுட்டு, பாலில் போட்டு காய்ச்சி குடிக்கலாமா டாகுடரே!!

RVS said...

ஒரு ரூபாயோட மகத்துவம் இந்த மருத்துவத்தில் தெரியுதுங்க.
பூண்டின் மருத்துவ குணங்கள் அலாதியானது. நன்றி ;-)

r.v.saravanan said...

பயனுள்ள விஷயத்தை பகிர்த்தமைக்கு நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --//அட..அருமையான தகவலை பகிர்ந்து இருக்கின்றீர்கள்.//

வாங்க ..அக்கா வாங்க..!! ரொம்ப சந்தோஷம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--// நம்ம டுபாக்கூர் யுனிவர் சிடியில உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததற்கு பெருமை படுகிறோம்.மிக நல்ல மருத்துவ முறையினை சொல்லியதற்கு.//

வாங்க ஓனர் ஆஃப் டுபாக்கூர் யுனிவர்சிட்டி சார்..வாங்க
// நான்கு பல் பூண்டை பாலில் இட்டு கொதிக்க வைத்து சாப்பிடும்படி ஒரு இலங்கை காரர் என்னிடம் சொன்னதுண்டு.உங்கள் முறை அதைவிட அதிக பலன் உள்ளதுபோல தெரிகிறது.(சாமி ...எனக்கு ஒன்றும் கொழுப்பு சமாச்சாரம் இல்லை.)//

அது கேஸ் பிராப்ளத்துக்கு செய்யும் முறை..ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் ..இது ஒன்லி தூங்கப்போகும் போது மட்டும் செய்யும் முறை
//என்ன தலைவா நீங்களே இப்படி குறை சொன்ன எப்படி? //
இது என்ன அநியாயமா இருக்கு ...வேற யார்கிட்டேயும் போய் கேட்டா அதுக்கு அர்த்தம் வேற மாதிரியில்ல ஆகிடும் அவ்வ்வ்வ்வ்

//நர்ஸ் தானே வேணும்? நம்ம பட்டாபியை கேட்டால் ஒன்னுக்கு நாலா சிங்கையிலிருந்து அனுப்பி வைப்பார் . கவலையை விடுங்க.//

ஆஹா...வேற வினையே வேனாம் ..ஏற்கனவே அவரால சமாளிக்க முடியாமல் அவஸ்தை படுறாராம் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மைந்தன் சிவா--//நல்ல விஷயம்..எனக்கும் கொஞ்சம் இருக்கிறது..//

வாங்க ..வாங்க..!! யோசிக்காம இன்னைக்கே காரியத்துல இறங்குங்க .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம் --//தலைவரே பட்டாப்பட்டி ! சீக்கிரம் நாலு பிலிப்பைனி நர்ஸ்கல நம்ம டாக்டர் ஜெய்லானி கிட்டே அனுப்பி வையுங்க .//

என்னாதூஊஊஊ நாலா ...நான்...அவன்... இல்லை

// டாக்டர் பட்டம் வாங்கிய கையேடு நர்ஸ் வேணும் நர்ஸ் வேணும்னு ஒரே நச்சரிப்பு தாங்கல சாமி.//

ஹி...ஹி....என்ன இருந்தாலூம் சிங்கப்பூரிலிருந்தா...!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாதேவி--//ஒரு ரூபாயில் மருத்துவமா டொக்டர்ஸ் எல்லாம் அடிக்கப்போறாங்க.//

வாங்க...வாங்க..!! ஆமா பிஸினஸ் படுத்துப் போச்சின்னா ஹா..ஹா..எதுக்கும் உஷாரா இருக்கனும் போல ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும்

பயனுள்ள விஷயத்தை பகிர்த்தமைக்கு நன்றி

apsara-illam said...

சலாம் ஜெய்லானி சகோதரரே....,சிம்பிளான ஆனால் உதவியாக இருக்கும் கைமருத்துவம் சொல்லியிருக்கீங்க... டாக்டர்ட்ட போய் அந்த டெஸ்ட்,இந்த டெஸ்ட்ன்னு காசை கொடுக்கிறதுக்கு இந்த ஒரு ரூபாய் நமக்கு பெரிசா என்னா..?
இது மட்டும் பலருக்கும் ஒர்க் அவுட் ஆயிடுச்சு.... அப்புறம்,எலும்பு மருத்துவர்கள் எல்லாம் கையில் கம்போடு உங்களை தேடிகிட்டு இருப்பாங்க ஆமாம்... சொல்லிட்டேன்...
நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.இப்போது எனது மாமியாருக்கு இது உபயோகபடுதான்னு பார்ப்போம்.(இன்ஷாஅல்லாஹ்)
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

கோமதி அரசு said...

உறவினருக்கு சொல்ல வேண்டும்.பூண்டை உண்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா அது வெந்நீரா? தண்ணீரா? பூண்டை முழுங்க வேண்டுமா? கடித்து சாப்பிட வேண்டுமா என்பதை சொன்னால் நல்லது ஜெய்லானி.

சாருஸ்ரீராஜ் said...

டாக்டர் சார் நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்க நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மெய்யாலுமா நைனா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடர் சார், அந்த லேகியமும் சேத்துகலாமா...?

vanathy said...

டாக்டர். ஜெய், வாழ்க! வாழ்க.

//எதுக்கு ஒரு நர்சோடு தனியா மலை உச்சிக்குப் போறீங்க...//
அதீஸ், அதான் எனக்கும் ஒரே குழப்பம் குழப்பமா இருக்கு. மூஞ்சிப் புத்தகத்தில் மலை மேலை நின்று போஸ் எல்லாம் வேறு... கடவுளே! ஜெய்யின் அண்ணிக்கு யாராவது தகவல் சொல்லி விடுங்கோ.

ஜெய்லானி said...

@@@சங்கவி --//வாங்க டாக்டர்...//

வாங்க கவித்திலகமே வாங்க..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

//அனாமிகா துவாரகன்-//உள்ளி (பூடு/பூண்டு) சாப்பிட்ட பின்னர் பல் விளக்க மறக்காதீர்கள். காலையில் வாய் துர்நாற்றம் தாங்க முடியாமல் வீட்டை விட்டு துரத்தப் போகிறார்கள்.//

வாங்க சகோஸ் வாங்க..!! பொதுவா இரவில் நான் பிரஷ் செய்வதுண்டு அதனால ஒன்னும் வித்தியாசமா தெரியல . :-))

//முழுதாக கடித்து 3 உள்ளிப்பல்லு இரவில் சாப்பிட்டால் கொழுப்பு குறையும் என்பது உண்மை. அப்படி முடியாதவர்கள் மத்திய சாப்பாட்டுடன் ஒரு முழுப்பூண்டை (விறகடுப்பு பாவிப்பவர்கள்) தணலில் புதைத்து , சுட்டு சாப்பிடுவார்கள். இல்லாவிட்டால் வாணலியில் தோலுடன் வறுத்து விட்டு சாப்பிடுவார்கள் (தோலை நீக்கவேண்டும்). எங்கள் கிராமத்தில் வீட்டில் இருக்கும் நாட்களில் மதிய சாப்பாட்டின் பின்னர் சுட்ட பூண்டு சாப்பிடுவது (ஒருவருக்கு ஒரு முழு பூண்டு. எங்க ஊரில் பூண்டு கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். இங்கே உள்ளது போல சின்னது இல்லை) வழக்கம். //

நீங்க சொல்றது சரிதான் ..எனக்கும் சுட்ட பூண்டு ரொம்பவும் பிடிக்கும் குறிப்பா அதன் வாசம் ..இது கடிக்க வேண்டாம் .மிகப்பொடிதா வெட்டி அப்படியே முழுங்கனும் (தோல் இல்லாமத்தான் ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--// நல்ல மருத்துவ குறிப்பு டாக்டர். //

வாங்க பாஸ்..வாங்க..சந்தோஷம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --//ஆ... ஜெய் இது அவசரத்தில் படித்து, அந்தரத்தில் பதில் போடுறேன், திரும்பவந்து நல்ல விஷயங்களைப் படிக்கிறேன்.... இப்போ இது மட்டும்தான் கண்ணில பட்டுது...//

வாங்க பூஸ் வாங்க..!! முதல்ல வீட்டுக்கு வந்த விருந்தாளியை நல்லா கவனியுங்க ..ஓடிடப்போறாங்க :-))

///நர்ஸ் கேட்டும் அவர் தரல..சரி போனா போகட்டும் எங்காவது ஒரு மலை உச்சியில ஒத்தைக்கு ஒரு கிளினிக் //// எதுக்கு ஒரு நர்சோடு தனியா மலை உச்சிக்குப் போறீங்க.....? என் டவுட்டைக் கெதியா ஆராவது கிளியர் பண்ணுங்க பிளீஸ்ஸ்... கொழுப்பில்லாமலே கார்ட் அட்டாக் வந்திடும்போல இருக்கே....//

ஹா..ஹா... ஆஹா...எங்கே போனாலும் (தலையில ஈறெடுத்தாலும் கண் வேலியில போற ஓணான் மேலே தான் ) கரெக்டா பாயிண்டை பிடிச்சிடுறீங்களே
//எதுக்கும் இப்போதைக்கு ஓடிப்போய்க் கட்டிலுக்குக்கீழ இருப்பதுதான்... பாஆஆஅதுகாப்பு... மீயா... எஸ்ஸ்ஸ்ஸ்.//பாத்துங்க இட நெருக்கடி வந்துடப்போகுது ஏற்கனவே மயில் அங்கே ஒளிஞ்சிட்டிருக்கு ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//தினமும் அனாமிகா சொல்லியிருப்பதுபோல, சில பூண்டு பற்களைச் சுட்டுச் சாப்பிடும் வழக்கமுண்டு. அது கொலஸ்ட்ரால்/பிரஷர்/வாய்விற்கு மருந்த என்பதால்.//

வாங்க சகோஸ் வாங்க..!! இது நல்ல பழக்கம்தான் விடாதீங்க தொடர்ந்து செய்யுங்க

// மூட்டு வலிக்கும் மருந்து என்பது புதிய செய்தி. ஆனால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தும், மூட்டு வலி ஓரளவு இருக்கத்தானே செய்கிறது எனக்கு? //

மேலே சொன்ன முறையை முயற்சித்து பாருங்க. முதல் நாளே வித்தியாசம் தெரியும் . அடுத்த நாள் ஒரு வேளை இருந்தால் திரும்பவும் சாப்பிடுங்க . பிறகு அப்படி ஒன்னு இருந்த மாதிரியே தெரியாது . இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது தூங்கப்போகும் முன் நைட்டில செய்யனும்

//ஒரு ரூபாய் மருத்துவம்//
உங்க ஃபீஸ்தான் ஒரு ரூபான்னு நெனச்சேன்!! :-)))) //

எப்படி நம்ம முன்னால முதலமைச்சர் மாதிரியா..? ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//அசத்திட்டியலே மக்கா.........!!! //

வாங்க மக்கா வாங்க..!! எல்லோரும் நல்லா இருந்தா சரிதான் :-)

//உமக்கு டாக்டர் பட்டம் உறுதியா கிடைச்சிரும்.......[கூடவே நர்சும் வேணும்னு கேக்கபூடாது] //

என்னது இது அப்போ டுபாக்கூர் யுனிவர்சிட்டியில படிக்காம வாங்கியதை நீங்க இன்னும் நம்ம்பலையா..அவ்வ்வ்வ்..

நர்ஸ் வேனுமுன்னுதான் இன்னமும் அடம்பிடிச்சிகிட்டு இருக்கேன் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//4 pal puuNda eppadi muzungkuathu athuvum passaiyaa? //

வாங்க ஜலீலாக்கா வாங்க ..!! ம் ஆமா ரொம்ப சின்னதா வெட்டி அப்படியே முழுங்கனும் கடிச்சி சாப்பிடக்கூடாது

// muddu vali nejamaavee pooydumaa?
mudduvali uLLavangkalukku sollalaame //

ம் நிச்சயமா போகும் .தெரிஞ்சவங்களுக்கும் சொல்லுங்க ..மீதியை அவங்களே சொல்லுவங்க :-)

// kakku maanikkam dr paddam koduththaalum koduththaar. appaa arumaiyaan avaiththiyam //

ஹா...ஹா.. அப்ப தைரியமா போர்ட் வச்சிடலாமுன்னு சொல்லுங்க :-))

//டாக்டர் ஜெய்லானி வாழ்க!//

ஆஹா..இதை கேட்டா முதல்ல சந்தோஷப்படுறவர் தலைவர் கக்கு தான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//இதை தான் 'கார்லிக் பேர்ல்ஸ்'(garlic pearls) என்று கேப்சுயூல்ஸ் வடிவில் ரொம்ப காலமா, இதை விட மிகக் குறைந்த விலையில் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். இது bp க்கும் உகந்தது!! //

வாங்க சகோஸ் வாங்க..!! உண்மைதான் ரொம்ப காலமா இருக்கு , குழாயில் அடைத்து மருந்து வடிவில் குடுப்பதுக்கும் நேரிடையா அப்படியே சாப்பிடுவதுக்கும் வித்தியாசம் இருக்கே..!! இரண்டாவது அது கெட்டுப்போகாம இருக்க கெமிக்கல் இருக்குமே..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Geetha6 --// தகவலுக்கு நன்றி !பாட்டி வைத்தியம் போல இனி ஜெய்லானி வைத்தியம் என்று ஒரு ப்ளாக் சிக்கீரம் ஆரம்பிங்க..நான் முதல் பாலோவ்வேர் ஆக ஜாய்ன் பண்றேன்.//

வாங்க சகோஸ் வாங்க..!! அப்படிங்கிறீங்க ஓக்கே..இந்த பிளாக்கிலேயே அடிக்கடி காணாம போயிடுறேனே என்ன செய்ய :-)) முடிந்த போது இங்கேயே போடுகிறேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//போலீஸ் ஸ்டேஷன்லேயே திறங்களேன்!! அங்க தான் அவங்க தொந்தரவு இருக்காது. ஏன்னா அவங்க வெளில வசூல்ல இருப்பாங்க. ஹி..ஹி..!! //

ஹா..ஹா.. அனுபவம் பேசுதா.. நல்லா இருங்க மக்கா நல்லா இருங்க..!! :-)))))))

//அந்த நாலு பல் பூண்டை நெருப்பில் சுட்டு, பாலில் போட்டு காய்ச்சி குடிக்கலாமா டாகுடரே!! //

அது கேஸ் டிரபிளுக்கு செய்யுறது..நேரடியா சாப்பிட பிடிக்காதவங்களுக்கு இது வேற மாதிரி டெக்னிக் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

athira said...

வாங்க பூஸ் வாங்க..!! முதல்ல வீட்டுக்கு வந்த விருந்தாளியை நல்லா கவனியுங்க ..ஓடிடப்போறாங்க :-))///
ஓட விட்டுடுவமா ஜெய்?:).... அதுக்குத்தானே குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பூஸ் ஆடுது...:))).

கட்டிலுக்குக்கீழ கை விட்டெல்லாம் தேடிட்டேன் ஜெய், ம்ஹூம் மயில் அங்கேயில்லவே இல்லை... அவ சிக்குப்பட்டுப்போயிருக்கிறா:).. விடமாட்டேன்... வரவச்சிடுவமில்ல:)..

athira said...

மூஞ்சிப் புத்தகத்தில் மலை மேலை நின்று போஸ் எல்லாம் வேறு... கடவுளே! ஜெய்யின் அண்ணிக்கு யாராவது தகவல் சொல்லி விடுங்கோ.

/// வான்ஸ்... இதென்ன இது ... எங்கட ஹைஷ் அண்ணனின் தின சிந்தனை மாதிரி, இன்று ஒரு தகவலா வெளிவருதே ஜெய் பற்றி.. இவ்வளவு நாளும் கதைதான் சொல்றார் எனப் பார்த்தேன், இப்போ பாட்டும் பாடி போஸ் வேறு கொடுக்கிறாரோ? கடவுளே.. எனக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்....

athira said...

ஜெய்... காதில வேலை செய்யாத:) மொபைலை ஸ்டைலாப் பிடிச்சுக்கொண்டிருக்கிறது நீங்கதானென உடனேயே கண்டுபிடிச்சிட்டேன்... ஆனா உத்து உத்துப் பார்த்தும் வண்டிலை இழுப்பவர்:) யாரெனத் தெரியேல்லையே... ஒருவேளை... “அவராக” இருக்குமோ? மீ எஸ்கேப்யாஆஆஆஆஆ

அஸ்மா said...

நல்ல வைத்தியமா இருக்கே.., மாஷா அல்லாஹ்! கஷ்டப்படுபவர்களுக்கு சொல்லலாம். //அதை கத்தியால் சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது// இந்த முறையில் வெட்டி பிரஷ்ஷருக்காக காலையில் டிபன் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவார்கள். இப்போது மூட்டுவலிக்குமா..? பகிர்வுக்கு நன்றி சகோ.

Anisha Yunus said...

nalla pathivu. appo neenga thirunthitteengala???

:)

vanathy said...

ஜெய், இதுக்குத் தான் அப்பவே மெதுவா இறங்கி வந்திடுங்கோ என்று சொன்னேன். நீங்க கேட்கலை!!!!

Asiya Omar said...

சமையலில் நிறைய பயன்படுத்துவேன்,பச்சையாக சாப்பிட்டதில்லை,கால்வலி இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு.பகிர்வுக்கு நன்றி டாக்டர்.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக அம்மா கிட்ட சொல்லுறேன்...என்னத சொல்ல எங்க வீட்டிலேயே என் தங்கை MD படித்த டாக்டர் தான்..

அவளும் எதோ எதோ மருந்து கொடுக்கிறாள்..இருந்தாலும் அம்மாவிற்கு கால்வலி அப்படியே தான் இருக்கு...

இது மூட்டு வலிக்கு மட்டும் தான் சாப்பிட வேண்டும்...இல்லை கால் வலிக்கும் சாப்பிடலாமா...அம்மாவிடம் கண்டிப்பாக சொல்லி சாப்பிட சொல்கிறேன்...

நன்றி ஜெய்லானி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

விஷயம் இதுதான் வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு நாலு அதாவது நாலு பல் எடுத்து அதை கத்தியால் சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு தூங்கப்போகும் போது அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..தட்ஸ் ஆல்..... மறு நாள் காலை எழுந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியும்
//

டவுட் 1 : பூண்டை யார் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சொல்லவேண்டும்?

டவுட் 2 : அதை அடிக்கடி செய்யலாமா?...அல்லது மாதம் ஒரு முறையா? விளக்குங்கள் டாக்டர்?

Prasanna said...

நலமா.. நல்ல நல்ல சமையல் குறிப்பெல்லாம் மறுபடி கொடுக்க ஆரம்பிச்சாச்சா (பூண்டதான் சொல்றேன்) ஹி ஹி

அன்புடன் நான் said...

ஒரு நல்ல விடயம் சொல்லியிருக்கிங்க..... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

இதை மற்றவருடனும் பகிர்ந்துகொள்வேன்.

அன்புடன் நான் said...

இது மிக எளிமையான விடயன் அல்ல.
பலருக்கு பயனுள்ள தகவல்.
மிக்க நன்றி

அன்புடன் நான் said...

மேலும் இதுபோல தகவல் இருந்தா பகிர்ந்து கொள்ளவும்.... அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன் நான் said...

நீங்க (நிஜ) மருத்துவரா?

athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வீட்டுக்கு வாறவைக்கு ஒரு பிளேன் ரீ(பிளாக் ரீ) கூடக் குடுக்காமல் அப்படியென்ன வேலை மலை உச்சியில:)..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

ஜெய்லானி said...

@@@RVS--//ஒரு ரூபாயோட மகத்துவம் இந்த மருத்துவத்தில் தெரியுதுங்க.
பூண்டின் மருத்துவ குணங்கள் அலாதியானது. நன்றி ;-) //

வாங்க ஆர் வி எஸ் வாங்க..!!ம் ஆமாம்..நாமதான் உபயோகப்படுத்துறதில்லை . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆயிஷா--//அஸ்ஸலாமு அழைக்கும்//

வ அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ் )

// பயனுள்ள விஷயத்தை பகிர்த்தமைக்கு நன்றி //

வாங்க சகோஸ்..சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@apsara-illam --//சலாம் ஜெய்லானி சகோதரரே....,சிம்பிளான ஆனால் உதவியாக இருக்கும் கைமருத்துவம் சொல்லியிருக்கீங்க... டாக்டர்ட்ட போய் அந்த டெஸ்ட்,இந்த டெஸ்ட்ன்னு காசை கொடுக்கிறதுக்கு இந்த ஒரு ரூபாய் நமக்கு பெரிசா என்னா..? //

சலாம் ..வாங்க..வாங்க.சகோஸ் .. ம் .முடிஞ்ச வரைக்கும் டாக்டர்கிட்டே போகாம எவ்வளவோ கை வைத்தியம் இருக்கு
// இது மட்டும் பலருக்கும் ஒர்க் அவுட் ஆயிடுச்சு.... அப்புறம்,எலும்பு மருத்துவர்கள் எல்லாம் கையில் கம்போடு உங்களை தேடிகிட்டு இருப்பாங்க ஆமாம்... சொல்லிட்டேன்... ///

அதுக்குதான் மலை உச்சியில கிளினிக் வைக்கப்போறேன் :-))))))))
// நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.இப்போது எனது மாமியாருக்கு இது உபயோகபடுதான்னு பார்ப்போம்.(இன்ஷாஅல்லாஹ்)
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா. //

இன்ஷா அல்லாஹ் டிரை பண்ணுங்க சரியாகும் :-)நாள் பட்டதா இருந்தாலும் வித்தியாசம் தெரியும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கோமதி அரசு --//உறவினருக்கு சொல்ல வேண்டும்.பூண்டை உண்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா அது வெந்நீரா? தண்ணீரா? பூண்டை முழுங்க வேண்டுமா? கடித்து சாப்பிட வேண்டுமா என்பதை சொன்னால் நல்லது ஜெய்லானி. //

வாங்க ..வாங்க..!! அது எந்த தண்ணீரா இருந்தாலும் ஓக்கேதான் .. முழுங்கிடுங்க ..கடிக்க வேண்டாம் ..ஈஸியா உள்ளே போய் வேலை செயய்வே சின்ன சின்ன பொடியா கட் செய்வது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ் --- டாக்டர் சார் நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்க நன்றி.//

வாங்க சகோஸ்.வாங்க..ஹி..ஹி.. ரொம்பவும் புகழ்றீங்க ..கூச்சமா இருக்கு ..:-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி --//மெய்யாலுமா நைனா.....? //

வாங்க சார் வாங்க ..!! ம் உண்மைதான் :-))

//டாகுடர் சார், அந்த லேகியமும் சேத்துகலாமா...?//

அப்புறம் பிச்சிகிட்டு அடிச்சா எங்கிட்ட வரவேனாம்..வந்தா 12 ஆயிரம் டெஸ்ட் எடுக்க சொல்லுவேன் ஆமா வசதி எப்படி..?? ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy --//டாக்டர். ஜெய், வாழ்க! வாழ்க. //

வாங்க வான்ஸ் வாங்க ..!! தேங்கூஉ..தேங்யூஉ

//எதுக்கு ஒரு நர்சோடு தனியா மலை உச்சிக்குப் போறீங்க...//
அதீஸ், அதான் எனக்கும் ஒரே குழப்பம் குழப்பமா இருக்கு. மூஞ்சிப் புத்தகத்தில் மலை மேலை நின்று போஸ் எல்லாம் வேறு... கடவுளே! ஜெய்யின் அண்ணிக்கு யாராவது தகவல் சொல்லி விடுங்கோ. //

கொழுத்தி போட்டது நல்லவே வெடிக்குது வான்ஸ்..இப்ப பூஸுக்கு என்ன பதில் போடறதுன்னே குயப்பமா கீது அவ்வ்வ்வ்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//வாங்க பூஸ் வாங்க..!! முதல்ல வீட்டுக்கு வந்த விருந்தாளியை நல்லா கவனியுங்க ..ஓடிடப்போறாங்க :-))///
ஓட விட்டுடுவமா ஜெய்?:).... அதுக்குத்தானே குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பூஸ் ஆடுது...:))). //

வாங்க ..வாங்க..!! பூஸ் ஆடினா எபப்டி இருக்கும் இருங்க ..யோசிச்சிகிட்டு இருக்கேன் ..ஹா..ஹா..

// கட்டிலுக்குக்கீழ கை விட்டெல்லாம் தேடிட்டேன் ஜெய், ம்ஹூம் மயில் அங்கேயில்லவே இல்லை... அவ சிக்குப்பட்டுப்போயிருக்கிறா:).. விடமாட்டேன்... வரவச்சிடுவமில்ல:).. //

ஓக்கே..ஓக்கே... எங்காவது கேமரா கையுமா சுத்துதோ...வலை வீசி தேடிடலாம் ..

####மீதி மதியம் இப்போ கடமை அழைக்கிறது ### :-))

Kurinji said...

மிகவும் பயனுள்ள பகிர்வு !

குறிஞ்சி குடில்

enrenrum16 said...

நல்ல தகவல்... கண்டிப்பா எனக்குத் தெரிந்தவங்களிடம் சொல்கிறேன்...

அப்டியே உங்க அட்ரஸைக் கொடுத்துடுங்க... பயப்படாதீங்க... எங்க அங்கிள் ஒருத்தர் கம்பௌண்டரா இருந்து ரிட்டயர் ஆகிட்டார்...உங்களுக்கு நர்ஸா இருந்து சேவை செய்றதுக்கு அவர் ரொம்ப ஆவலா இருக்கார்... அதுக்குத்தான்...;)

சிநேகிதன் அக்பர் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். http://sinekithan.blogspot.com/2011/02/blog-post_14.html

vanathy said...

// எங்க அங்கிள் ஒருத்தர் கம்பௌண்டரா இருந்து ரிட்டயர் ஆகிட்டார்...உங்களுக்கு நர்ஸா இருந்து சேவை செய்றதுக்கு அவர் ரொம்ப ஆவலா இருக்கார்... அதுக்குத்தான்...;) //
ஹையோ!! ஹிஹிஹி....

Mahi said...

நல்ல நல்ல தகவல்களாத் தரீங்க,நன்றி!

வயக்கம்போல பூஉஸார்..ச்சீ,ச்சீ பூஸார் & வானதி கமெண்ட்ஸ் சூப்பர்! துணைக்கு என்றென்றும் 16-ம் வந்தாச்சு போலவே! ஜெய் அண்ணா,பாவம் நீங்க!! :)

ஜெய்லானி said...

@@@athira--//ஜெய்... காதில வேலை செய்யாத:) மொபைலை ஸ்டைலாப் பிடிச்சுக்கொண்டிருக்கிறது நீங்கதானென உடனேயே கண்டுபிடிச்சிட்டேன்... ஆனா உத்து உத்துப் பார்த்தும் வண்டிலை இழுப்பவர்:) யாரெனத் தெரியேல்லையே... ஒருவேளை... “அவராக” இருக்குமோ? மீ எஸ்கேப்யாஆஆஆஆஆ //


இங்கே அவர் எல்லாம் இல்லை அவருக்கு பதில் இன்னொருவர் இருக்கிறார் நீங்க அவரைதான் சொல்றீங்களான்னு தெரியல ஆமா நீங்க யாரை சொல்றீங்க எப்பூடீ ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அஸ்மா-//நல்ல வைத்தியமா இருக்கே.., மாஷா அல்லாஹ்! கஷ்டப்படுபவர்களுக்கு சொல்லலாம். //அதை கத்தியால் சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது// இந்த முறையில் வெட்டி பிரஷ்ஷருக்காக காலையில் டிபன் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவார்கள். இப்போது மூட்டுவலிக்குமா..? பகிர்வுக்கு நன்றி சகோ.//

வாங்க சகோஸ் வாங்க..!! இரெண்டும் ஒரே மாதிரிதான் ஒரு சின்ன வித்தியாசம் இது இரவு தூங்கப்போலும் முன் செய்துப்பாருங்க. அவ்வளவுதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்னு--// nalla pathivu. appo neenga thirunthitteengala???

:) //

வாங்க அனீஸ் வாங்க ..!! அதோட வால்ல பைப்ப மாட்டி வச்சாலும் 60 வருஷம் கழிச்சி திறந்தாலும் நேராகுமா..? அப்படி நேரானா நானும் நேரான மாதிரிதான் ஹா..ஹா.. ஒரே மாதிரி போட்டா அப்புறம் போறடிச்சிடும் . சின்ன சின்ன நல்ல விஷயங்களும் சொல்லனுமில்ல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--// ஜெய், இதுக்குத் தான் அப்பவே மெதுவா இறங்கி வந்திடுங்கோ என்று சொன்னேன். நீங்க கேட்கலை!!!! //

வாங்க வான்ஸ்..!!என்னைக்காவது சான்ஸ் கிடைச்சா நீங்களும் ஏறிப்பாருங்க .அப்புறம் கிழே இறங்கவே மாட்டீங்க ( பயத்துல இல்ல க்கி...க்கி....)) என்ன ஒரு அமைதி ..என்ன ஒரு அமைதி...

ஆழ் மனதிந் தாவல்கள்
அடங்கியே அடங்கும்பார் அங்கே
ஆடும் உலகின் ஓட்டங்கள் பலத்
தேடுவாய் எங்கே யெனமயங்கியே
வராது வந்த மாணிப்போற்
துள்ளியே ஓடும் மனமிங்கே
--ஜெய்லானந்த அடிகள்
அப்படி சொல்லி இருக்கிறார்..அவர் யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--//சமையலில் நிறைய பயன்படுத்துவேன்,பச்சையாக சாப்பிட்டதில்லை, கால்வலி இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு.பகிர்வுக்கு நன்றி டாக்டர். //

சாப்பிடுங்க ..சாப்பிடுங்க எவ்வளவு சாப்பிடுறோமோ உடம்புக்கு அவ்வளவுக் கவ்வளாவு நல்லது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL --//கண்டிப்பாக அம்மா கிட்ட சொல்லுறேன்...என்னத சொல்ல எங்க வீட்டிலேயே என் தங்கை MD படித்த டாக்டர் தான்..//

வாங்க சகோஸ் வாங்க ..!! இது சித்த வைத்தியம் போலத்தானே..ஒரு வேளை அவங்க கிளாஸ் எடுத்தா நீங்க வீட்டில கேட்க மாட்டீங்கப்போல ஹி..ஹி.. அதான் அவங்க சொல்லல :-))

// அவளும் எதோ எதோ மருந்து கொடுக்கிறாள்..இருந்தாலும் அம்மாவிற்கு கால்வலி அப்படியே தான் இருக்கு...//

சிலருக்கு அல்சர் மாதிரி இருந்தா , பூண்டு இஞ்சி சாதாரனமா சாப்பிட்டா அதிகம் வயத்த வலிக்கும் ஒரு வேளை அதனால அவங்க பயந்துப்போய் இருக்கலாம் ..

// இது மூட்டு வலிக்கு மட்டும் தான் சாப்பிட வேண்டும்...இல்லை கால் வலிக்கும் சாப்பிடலாமா...அம்மாவிடம் கண்டிப்பாக சொல்லி சாப்பிட சொல்கிறேன்...//

மூட்டு வலிக்கு உடனே வித்தியாசம் தெரியும் . கால் வலிக்கு வேறு டைப் இருக்கு . அது சர்க்கரையாலையும் இருக்கலாம் உப்பு நீராகவும் இருக்கலாம் அதாவது அதிக உப்பு சத்து சேர்ந்து இருக்கும் (( அதாவது கிட்னியில கல் )) அதுக்கு பிறகு விரிவா போடுகிறேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//

டவுட் 1 : பூண்டை யார் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சொல்லவேண்டும்? //

பக்கத்துல யாராவது அடிமை இருந்தா வாயை திறக்காட்டியும் காதுக்குள்ள விட்டாலும் போதும் ஹி..ஹி..

// டவுட் 2 : அதை அடிக்கடி செய்யலாமா?...அல்லது மாதம் ஒரு முறையா? விளக்குங்கள் டாக்டர்? //

முதல் நாளே வித்தியாசம் தெரியும் . தேவைப்பட்டா அடுத்த நாளும் செய்யுங்க போதும் .அதிக பட்சம் ரெண்டு நாளே போதும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தளிகா said...

ஜெய்லாணி சார் இதை தினமும் செய்றதா இல்ல நிவாரணம் தெரிஞ்சா நிறுத்திடனுமா

ஆனா அருமையான மருத்துவம் சொல்லியிருக்கீங்க..நிறிய பேருக்கு பயன்படும்

ஜெய்லானி said...

@@@சி.கருணாகரசு--/ஒரு நல்ல விடயம் சொல்லியிருக்கிங்க..... பாராட்டுக்கள்.//

வாங்க கவிஞரே வாங்க.!! சந்தோஷம்

//இதை மற்றவருடனும் பகிர்ந்துகொள்வேன்.//

வேனுமின்ன மொத்த பிளாகையும் எடுத்துக்கோங்க நோ பிராப்ளம் :-)
//இது மிக எளிமையான விடயன் அல்ல.
பலருக்கு பயனுள்ள தகவல்.
மிக்க நன்றி //

நமக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு பயன் பட்டா சந்தோஷம்
// மேலும் இதுபோல தகவல் இருந்தா பகிர்ந்து கொள்ளவும்.... அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்//

நிறைய இருக்கு முடிந்த போடு போடுகிறேன் :-)
// நீங்க (நிஜ) மருத்துவரா? //

கண்டிப்பா இல்லை. ஆனா நிறைய மருத்துவ புக் படிப்பதும் அதை டிரை செய்து பார்ப்பதும். சிலரது அனுபவங்களை பார்த்தும் கேட்டும் தெரிந்துக்கொள்வதும் வழக்கம் ..அறிவு+இயல் எனக்கு மிகவும் பிடிச்ச பாடம் அந்த வகையில இது ஒரு அனுபவப்பதிவு :-) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அதிரா --//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வீட்டுக்கு வாறவைக்கு ஒரு பிளேன் ரீ(பிளாக் ரீ) கூடக் குடுக்காமல் அப்படியென்ன வேலை மலை உச்சியில:)..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

வாங்க..வாங்க...உங்களுக்காக மலைதேன் இருக்கு சாப்பிடுறீங்களா..? வித் மில்க் சூப்பரா இருக்கும் .:-)) ஹா..ஹா.. யார் கூட போயிருந்தேன்னு கேட்கப்பிடாது இப்பவே சொல்லிட்டேன் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Kurinji--//மிகவும் பயனுள்ள பகிர்வு ! //

வாங்க வாங்க ..!! குறிஞ்சி அழகான பெயர் ..சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@enrenrum16 --// நல்ல தகவல்... கண்டிப்பா எனக்குத் தெரிந்தவங்களிடம் சொல்கிறேன்...//

வாங்க சகோஸ் வாங்க ..!! சந்தோஷம் .கண்டிப்ப சரியாகும் :-)

//அப்டியே உங்க அட்ரஸைக் கொடுத்துடுங்க... பயப்படாதீங்க... எங்க அங்கிள் ஒருத்தர் கம்பௌண்டரா இருந்து ரிட்டயர் ஆகிட்டார்...உங்களுக்கு நர்ஸா இருந்து சேவை செய்றதுக்கு அவர் ரொம்ப ஆவலா இருக்கார்... அதுக்குத்தான்...;) //
அடரஸ்தானே கிழே பாத்துட்டு அனுப்புங்க

ஜெய்லானி
NO : AE234JR42PM45098 Q2E4G5B7M4DVH87 ,
வெள்ளி மண்டலம் ,
மார்ஸ் கிரகம்

பின் குறிப்பு : எங்களுக்கு வேறு கிரகத்தில் பிரான்ச் கிடையாது .:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--//உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். http://sinekithan.blogspot.com/2011/02/blog-post_14.html //

வாங்க சகோ வாங்க ..!! பழைய பாக்கியே இன்னும் அப்படியே இருக்கே.. அதை முதல்ல குடுத்துட்டு வரேன் ..இன்னும் கடன்காரனா ஆக்கிட்டீங்களே அவ்வ்வ் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy --//எங்க அங்கிள் ஒருத்தர் கம்பௌண்டரா இருந்து ரிட்டயர் ஆகிட்டார்...உங்களுக்கு நர்ஸா இருந்து சேவை செய்றதுக்கு அவர் ரொம்ப ஆவலா இருக்கார்... அதுக்குத்தான்...;) //
ஹையோ!! ஹிஹிஹி.... //

வான்ஸ் வீட்டுக்கு வந்தவங்களை இப்படி சிரிச்சி பயங்கட்டக்கூடது பொருமை :-)))))))))).. அடரஸ் குடுத்து இருக்கேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மகி --//நல்ல நல்ல தகவல்களாத் தரீங்க,நன்றி!//

வாங்க மஹி..வாங்க..!! ஒரே மாதிரி இருந்தா போரடிச்சிடுமே அதுக்குதான் சில நல்ல விஷயங்களும் தர முயற்சி செய்றேன் :-))

// வயக்கம்போல பூஉஸார்..ச்சீ,ச்சீ பூஸார் & வானதி கமெண்ட்ஸ் சூப்பர்! துணைக்கு என்றென்றும் 16-ம் வந்தாச்சு போலவே! ஜெய் அண்ணா,பாவம் நீங்க!! :) //
இந்த ஆமை எப்படி அடிச்சாலும் தாங்கும் தெரியாதா உங்களுக்கு :-)) நீங்க பயந்துப்போய் இருக்கீங்க ஹய்யோ..ஹய்யோ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தளிகா--// ஜெய்லாணி சார் இதை தினமும் செய்றதா இல்ல நிவாரணம் தெரிஞ்சா நிறுத்திடனுமா //

வாங்க சகோஸ் வாங்க.. !! தினமும் சாப்பிட்டாலும் ஒன்னும் கெடுதல் இல்ல .சீக்கிரம் மெலிஞ்சி போய்டுவீங்க . அதாவது தேவையில்லாத கொழுப்புக்கள் குறைந்து டிரிம் ஆகிடுவீங்க .அதான் குறை .

//ஆனா அருமையான மருத்துவம் சொல்லியிருக்கீங்க..நிறிய பேருக்கு பயன்படும் //

ம் அதுக்குதான் இங்கே போட்டது :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

vanathy said...

எதுக்கும் கதவை நல்லா பூட்டிட்டு உள்ளே இருங்கோ. அங்கிள் வாசலில் வந்து நின்றாலும் நிற்பார் போலிருக்கு.

அந்நியன் 2 said...

நல்ல அருமையான பதிவு சகோ.

வாழ்த்துக்கள் !

சாந்தி மாரியப்பன் said...

நல்லாருக்குதே :-)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//சமீபத்தில டால்டா அடச்சே.....டாகுடர் பட்டம் கிடைச்சி அது சம்பந்தமா ஒரு பதிவு கூட போடாட்டி அது சரில்லை//
எனக்கென்னமோ நீங்க "அடச்சே" னு முன்னாடி ஒரு வார்த்த சொன்னீங்களே...அதான் கரெக்ட்னு தோணுது...LOL ..:)

//கமிஷன் உங்க சுவிஸ் அக்கவுண்டுக்கு அனுப்பிடரேன் //
கமிஷன் வாங்க மனுசம் உயிரோட இருக்க வேணாமா? மீ எஸ்கேப்...:)

Jokes apart...nice message you passed...

சுந்தரா said...

எடக்குமடக்கா ஏதாவது இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனா, கிடைச்சது உண்மையிலேயே நல்லவிஷயம் :)

நன்றிகள் ஜெய்லானி!

Thenammai Lakshmanan said...

பூண்டு கிலோ 300 ரூபாய் விக்கிது ஜெய்.. இர்ந்தாலும் இது மாத்திரைகளை விட குறைவுதான்..:))

சீமான்கனி said...

அருமையான தகவல் அண்ணாத்தே...நானும் நாளைக்கே ஸ்டார்ட் பண்ணுறேன்..நன்றி..

enrenrum16 said...

ஹோமியோபதி,ஆங்கில மருந்துகள் உட்கொள்ளும்போதும் இந்த வைத்தியம் மேற்கொள்ளலாமா? உடனடி பதில் தேவை.

Unknown said...

இன்னைக்கி நைட்டே வெள்ளப்பூண்டு கட் பண்ணீர வேண்டியதுதான்.(யாரும் நெருங்க மாட்டாங்க ஆனாலும் பரவாயில்லை!! அதுதான் சைட் எபக்டோ??)

ஜெய்லானி said...

@@@vanathy--//எதுக்கும் கதவை நல்லா பூட்டிட்டு உள்ளே இருங்கோ. அங்கிள் வாசலில் வந்து நின்றாலும் நிற்பார் போலிருக்கு. //

வாங்க வான்ஸ்..நானும் கட்டிலுக்கு கீழே எப்பவும் பிசிதான் ..!! அதனால அபருக்கு நான் இருக்கும் இடம் தெரியாது ஹா..ஹா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

பக்க விளைவு இல்லாத அருமையான மருத்துவக் குறிப்பு. நன்றி.

ஜெய்லானி said...

@@@அந்நியன் 2--// நல்ல அருமையான பதிவு சகோ.

வாழ்த்துக்கள் ! //

வாங்க..வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல் --// நல்லாருக்குதே :-))) //

வாங்க சாரலக்கா வாங்க .!!! ஆமா இது டெஸ்டட் ஓகே ஆனது ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி -- //சமீபத்தில டால்டா அடச்சே.....டாகுடர் பட்டம் கிடைச்சி அது சம்பந்தமா ஒரு பதிவு கூட போடாட்டி அது சரில்லை//
எனக்கென்னமோ நீங்க "அடச்சே" னு முன்னாடி ஒரு வார்த்த சொன்னீங்களே...அதான் கரெக்ட்னு தோணுது...LOL ..:) //


வாங்க சகோஸ் வாங்க ..!! உங்க பக்கம் வராததால ம்....சொல்லுங்க ..கதை எழுதி முடிங்க மொத்தமா வரேன் ...அப்புறம் பாருங்க ..ஹி...ஹி.. :-))

//கமிஷன் உங்க சுவிஸ் அக்கவுண்டுக்கு அனுப்பிடரேன் //
கமிஷன் வாங்க மனுசம் உயிரோட இருக்க வேணாமா? மீ எஸ்கேப்...:) //

ஹா..ஹா...ஏன் அதே இன்சூரன்ஸ் மாதிரிதானே ஹா..ஹா..

// Jokes apart...nice message you passed.. //

இது சொல்லாட்டியும் நா சீரியஸா நினைக்க மாட்டேன் நோ பயம் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுந்தரா --// எடக்குமடக்கா ஏதாவது இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனா, கிடைச்சது உண்மையிலேயே நல்லவிஷயம் :)

நன்றிகள் ஜெய்லானி! //

வாங்க..வாங்க..!! தொடர்ந்து அதே மாதிரி செய்தா போரடிச்சிடுமே சகோஸ் அதான் நடுவில ஏதாவது பயனுள்ளதை சொல்றேன் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தேனம்மை லெக்ஷ்மணன்--//பூண்டு கிலோ 300 ரூபாய் விக்கிது ஜெய்.. இர்ந்தாலும் இது மாத்திரைகளை விட குறைவுதான்..:)) //

வாங்க தேனக்கா வாங்க..!!ஆமா இப்ப ஊர் விலைவாசி எங்கே போகுதுன்னே புரிய மாட்டேங்குது . இனி செவ்வாயில போய்தான் விவசாயம் செய்யனுமோ..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சீமான்கனி --//அருமையான தகவல் அண்ணாத்தே...நானும் நாளைக்கே ஸ்டார்ட் பண்ணுறேன்..நன்றி.. //

வாங்க சகோ வாங்க..!! நம்மளை மாதிரி கல்ஃபில இருப்பவங்களுக்கு சீக்கிரமே வரசான்ஸ் இருக்கு தண்ணீ சரியில்லையே...!! டிரை பண்ணுங்க இன்ஷாஅல்லாஹ் சரியாகும் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@enrenrum16--//ஹோமியோபதி,ஆங்கில மருந்துகள் உட்கொள்ளும்போதும் இந்த வைத்தியம் மேற்கொள்ளலாமா? உடனடி பதில் தேவை.//

வாங்க சகோஸ் வாங்க ..!!அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .தைரியமா சாப்பிடலாம் . இதுவும் ஒரு உணவுப்பொருள்தானே . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே. ஆர்.விஜயன்--// இன்னைக்கி நைட்டே வெள்ளப்பூண்டு கட் பண்ணீர வேண்டியதுதான்.(யாரும் நெருங்க மாட்டாங்க ஆனாலும் பரவாயில்லை!! அதுதான் சைட் எபக்டோ??) //

வாங்க ..வாங்க..!! அதுக்குதான் சொன்னேன் தூங்கப்போகும் கடைசி நிமிடம் செய்யனுமின்னு அப்பதான் அதன் முழு பலன் கிடைக்கும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இராஜராஜேஸ்வரி --// பக்க விளைவு இல்லாத அருமையான மருத்துவக் குறிப்பு. நன்றி. //

வாங்க..வாங்க.!! உண்மைதான் இது மாதிரி எத்தனையோ இருக்கு..ஆனா மக்களுக்கு தெரியரது இல்லை அதான் கஷ்டம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))