Saturday, August 28, 2010

இதுதான் காதலா--!!

         உன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே
         உன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே
        உன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி
        எனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே

         உன் ஆசை அதிர்வலையில் நான் மூழ்கித்தான் போனேனே
         செல்ல சினுங்கலில் தலை சுற்றி போனதடி
         வீனே எனை தேடித்தான் பார்கின்றேன் .கனவினிலே
        கிடைக்கிரதே எனை தவிர ஏன் ஆனேன் இப்படியானேன்

         காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும்
        மனம் கொண்ட மயக்கம் தடமாறலியே
         உன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே
        உன் கண்ணில் நீர் வழிகிறதோ என் நினைவாலே
       அந்த ஒவ்வொரு துளியாலும் என் இதயம் உருகுதே

 பெண்:    ஏனோ தெரியல சாரல் காற்றிலும் அனலாய் மாறுதே
       அனலாய் மாறுதே தேகம் அலைபோல் ஆனதே
       வீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா
       புயலாய் போகுதே வரும் காலமாவது வசந்தமாகாதோ.........

115 என்ன சொல்றாங்ன்னா ...:

athira said...

ஆ..... வட எனக்கே எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன், பிச்சுப் பிச்சுத் தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

athira said...

கவிதை அருமை ஜெய், ஆனால் உந்த அக்காவின் பார்வையே சரியில்லையே:), நானே தடக்கி விழுந்திடுவேனோ எனப் பயம்மாக்கிடக்கே... அப்போ சகோஸ்.. இன் கதி??????:)).

ஜெய்லானி said...

@@@athira--//ஆ..... வட எனக்கே எனக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன், பிச்சுப் பிச்சுத் தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).//

வாங்க ..வாங்க.. இனிய மண நாளில் வடை ,சட்னி எல்லாம் இன்னைக்கு உங்களுக்குதான் ..வாழ்க வளமுடன்

// கவிதை அருமை ஜெய், ஆனால் உந்த அக்காவின் பார்வையே சரியில்லையே:), நானே தடக்கி விழுந்திடுவேனோ எனப் பயம்மாக்கிடக்கே... அப்போ சகோஸ்.. இன் கதி??????:)).//

ஹா..ஹா.. கிட்னி ஓவர் டைம் வேலை பாக்குதே இன்னைக்கு உங்களுக்கு... உங்கள் வருமைக்கும் கருத்துக்கும் நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

காதல் கவிதை ரொம்ப நல்லாருக்கு ஜெய்லானி.. எல்லாமே அழகான வரிகள்... கலக்குறீங்க போங்க...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வூட்டுக்காரம்மாவ நெனச்சு எழுதினது தானே? :))

நல்லாயிருக்கு.. கொஞ்சம் எழுத்துப் பிழைகளயும் சரி பாத்துட்டா தமிழோட அழகு செம்மையாகும்.

ப.கந்தசாமி said...

//வாங்க ..வாங்க.. இனிய மண நாளில் வடை ,சட்னி எல்லாம் இன்னைக்கு உங்களுக்குதான் ..வாழ்க வளமுடன்//
இன்னிக்கு உங்களுக்கு மண நாளா? அப்படியென்றால் வாழ்த்துக்கள். அதுதான் பழைய ஞாபகங்கள் கவிதையா வெளி வருதோ?

ஜீனோ said...

இதான் காதலா ஜெய்..லானியண்ணே? கேன் ஜீனோ யூஸ் திஸ் பார் இம்ப்ரெஸிங் சம்படி??ஹிஹிஹி!

அண்ணி உன்னியும் ஊர்ல இருந்து வரல்லையோ?;)

ஹைஷ்126 said...

ஜெய் கவிதை நல்லா இருக்கு இருந்தாலும் ....

//எனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே// அப்படி என்னா பண்ணீங்க விளக்கம் பிளீஸ்ஸ்ஸ்ஸ். கவிதையாவே சொன்னாலும் பரவாயில்லை நாங்களே புரிஞ்சுக்குவோம்:)

//கனவினிலே
கிடைக்கிரதே எனை தவிர ஏன் ஆனேன் இப்படியானேன்// அப்போ அங்கயூ ஜீனோ மாதிரி தங்ஸ் பட்டினிதான் போடராங்களோ??? இதுக்கு நோ விளக்கம் பிளிஸ். காலைல காபியில் ஏன் சர்கரை இல்லைனு எங்களுக்கு தெரியும்:)))

ஜெய் இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலை
//உன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே //

அப்ப உங்க தங்ஸுக்கு மட்டும் ஒத்தை முகம் என் சகோஸ் மற்றும் இங்கு வந்து போற மத்த சகோஸ் எல்லாம் என்ன இரண்டு அல்லது மூணு முகத்தோடயா அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க...???

சே ..ஜெய்லானியை அதட்டி கேட்க எந்த சகோஸுக்கும் தெகிரியம் இல்லையா????

//ஏனோ தெரியல சாரல் காற்றிலும் அனலாய் மாறுதே// இது ஒன்னு மட்டும்தான் எனக்கு புரியுது சின்ன வயசுல எம்ஜியாரின் “நீரும் நெருப்பும்” படம் பார்த்து இருக்கோமுல்ல:)

ஜெய் ஆக மொத்தம் இந்த கவிதை கோத்து புடுங்கவும், போட்டு கொடுக்கவும் நல்ல வசதியா இருந்துது...சோ (இது வேற சோ) சூப்ப்ப்ர் கவிதை!

ஹைஷ்126 said...

ஆமா இப்பதான் கவனிச்சேன் ஏன் அந்த அக்கா ஒருமாதிரி தலையை திருப்பி பாக்குறாங்க??? இதைதான் தண்ணிக்குள்ள இருந்தாலும் பார்வையில் நெருப்பு வருதுனு சொல்லுறீங்களா?

Unknown said...

//உன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி// என்று எழுதிவிட்டு

//வீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா // எனவும் உள்ளதே.
ஆக இது இருவரும் சேர்ந்து எழுதிய கவிதையா.......??

kavisiva said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜெய்லானி!. ஹைஷ் அண்ணாவின் கேள்விகள் சூப்பரோ சூப்பர். வந்து விளக்கம் சொல்லுங்கோ!

பூஸ் மரத்து மேல இருந்துகிட்டு உந்த அக்காவை பார்க்கதீங்கோ. தடுக்கி விழுந்து அடிபட்டுடப் போகுது

Chitra said...
This comment has been removed by the author.
வேலன். said...

என்னா சார் கவிதை எல்லாம் வெளுத்துக்கட்டறீங்க...மலரும் நினைவுகளா?
கவிதை அருமை..வாழ்க வளமுடன்.
வேலன்.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//காதல் கவிதை ரொம்ப நல்லாருக்கு ஜெய்லானி.. எல்லாமே அழகான வரிகள்... கலக்குறீங்க போங்க...//

வாங்க ஷேக்..!! சும்மா ஒரு மாறுதலுக்காக டிரை பண்ணியது..உங்கள் வருமைக்கும் கருத்துக்கும் நன்றி.

தினேஷ்குமார் said...

வணக்கம்
வீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா
புயலாய் போகுதே வரும் காலமாவது வசந்தமாகாதோ.
வரிகள் நன்றாக உள்ளன ஆனால் ஏதோ குறைவது போல தோன்றுகிறது
http://marumlogam.blogspot.com

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//வூட்டுக்காரம்மாவ நெனச்சு எழுதினது தானே? :)) //

வாங்க சந்தூஊ..இல்லைன்னு சொன்னா சரி வருமா அதனால ஆமாம் (யப்பாஆஆ ஒரு கண்டத்திலிருந்து தப்பிச்சாச்சு ))

// நல்லாயிருக்கு.. கொஞ்சம் எழுத்துப் பிழைகளயும் சரி பாத்துட்டா தமிழோட அழகு செம்மையாகும். //

இந்த தகராறுக்கு யாரும் சாஃப்ட் வேர் கண்டு பிடிக்க மாட்டேங்கிறாங்களே...அவ்வ்வ்வ்....உங்கள் வருமைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//வாங்க ..வாங்க.. இனிய மண நாளில் வடை ,சட்னி எல்லாம் இன்னைக்கு உங்களுக்குதான் ..வாழ்க வளமுடன்//

இன்னிக்கு உங்களுக்கு மண நாளா? அப்படியென்றால் வாழ்த்துக்கள். அதுதான் பழைய ஞாபகங்கள் கவிதையா வெளி வருதோ? //

வாங்க டாக்டர்...!! அது அவங்களுக்கு இன்னைக்கி மண நாள் அதனால அப்படி சொன்னேன் . எனக்கு இன்னும் எட்டு மாசம் இருக்கு.. கவித ஒரு ஃஃபுளோவில வந்தது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜீனோ--//இதான் காதலா ஜெய்..லானியண்ணே? கேன் ஜீனோ யூஸ் திஸ் பார் இம்ப்ரெஸிங் சம்படி??ஹிஹிஹி! ///

வாங்க ஜீனோ.. ஹி..ஹி.. கவித வந்தாலே காதல்ன்னு அர்த்தமா...

//அண்ணி உன்னியும் ஊர்ல இருந்து வரல்லையோ?;) //

இன்னைக்கி எல்லாருக்கும் முளை பார்ட்டைம் பாக்குதே எப்படி..க்கி..க்கி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்பரசன் said...

கவிதை நன்று

அந்நியன் 2 said...

ஏண்டா மயிலு,ஊருக்குள்ளே அய்யா தீர்ப்பை பத்தி என்னடா பேசிக்கிராணுக.
மயிலு : போங்க எசமான் ..நீங்க வேரே..ஊருக்குத்தான் நீங்க நாட்டாமையாம்,வீட்டிலே அம்மாகிட்டே பொட்டிப் பாம்பா இருக்கியலாம்.
நாட்டாமை : அப்படியா பேசிக்கிராணுக களவாணிப் பசங்க,சரி அப்படியே ஜிலானி வீட்டிற்கு வண்டியை விடு, ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடுவோம்.
மயிலு : சரிங்க எசமான்........ஹோ ..ஹோ...எறங்குங்க எசமான் வீடு வந்துருச்சு.
நாட்டமை : ஏண்டா எருமை ..உன்னை எங்கே போகச்சொன்னேன் ? எங்கே வந்து நிக்கிறே ?( பளார்னு கன்னத்தில் ஒரு அறை) என்னை எண்ணக் கேனப்பயல்னு நிநெச்சுகிட்டியாக்கும் உந்தர மனசுலே, எந்தர அப்பன் அப்பவே சொன்னான்லே இந்த போக்கத்துப் பயலை வேலைக்கு வைக்கிறதுக்குப் பதிலா ரெண்டு எருமையை வாங்கி விட்டாலும் பாலு பீச்சி விக்கலாம்னு,ஆனால் நான் அதையும் மீறி உன்னை வேலைக்கு வச்சேன் பாரு ..எந்தர புத்தியை செறுப்.. ...

மயிலு :நிறுத்துங்க எசமான் (அழுதுகிட்டே) நல்லாப் பாருங்க ஜிலானி வீட்டிர்க்குத்தேன் வந்திருக்கேன்.
நாட்டமை :என்னாட நீ அய்யாவை எதிர்த்துப் பேசுறே,கொன்னுப் புடுவேன் கொன்னு,ஏலே தங்கம் இது யாரு வீடுலே ?
தங்கம் :அய்யா இது வந்து ..வந்து ..வந்து ..
நாட்டாமை : என்னலே வந்து வந்துன்னு ..இழுக்குறே ,சொல்லித் தொலையும்லே எனக்கு ஆயிரம் ஜோலி கிடக்கு.
தங்கம் : மயிலு சொல்றது சரிதான் எசமான் இது ஜிலானி வீடுதாங்க.
நாட்டமை :என்னலே சொல்றே,கவிதையைப் பார்த்துபோட்டு நான் மலிக்கா வீடுன்னு நெனைச்சுப் புட்டேன்லே,ஏலே மயிலு என் மேலே கோவம் ஒன்னும் இல்லியே?
மயிலு :( மனசுக்குள்ளேயே )உந்தர அப்பன் சொன்னது போல ரெண்டு எருமையை வாங்கினாலும் நான் பொழச்சுப் போயிருப்பேன்)
நாட்டாமை : என்னலே மொனங்குரே.....
மயிலு : ஒன்னும் இல்லை எசமான்.

சைவகொத்துப்பரோட்டா said...

காதலேதான் :))

சாந்தி மாரியப்பன் said...

ஏதோ சினிமாவுல உள்ள பாட்டாக்கும்ன்னு நெனைச்சு வந்தா... அட!!! நீங்களே..நீங்களே எழுதினதா??????
நல்லாருக்கு :-)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

அழகான வரிகள் ரொம்ப நல்லாருக்கு ...

vanathy said...

ஜெய், நல்லா இருக்கு கவிதை. அப்பாடா! இந்த முறை ஜெய்க்கு சந்தேகமே வரலை. நிம்மதி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ப்ளாக் மாறி வந்துட்டனா?

இமா க்றிஸ் said...

ஜெய்லானி,
எல்ஸ் கமண்ட் படிச்சா என் கமண்ட் படிச்ச மாதிரி. ;)

இதுக்குத் தான் யார் யாரை எங்க வாழ்த்தணுமோ அங்க மட்டும் வாழ்த்தணும்கிறது. ;))

Mohamed Faaique said...

நல்லாயிருக்கு boss

kavisiva said...

ஜெய்லானி இமா டீச்சர்கிட்ட தமிழ் ட்யூஷன் போங்க. ஆனா பூஸ்கிட்ட மாட்டிக்காதீங்க. அதுக்கு எப்பவுமே 'ழ' 'ள' குழப்பம்தான் :)

ஜில்தண்ணி said...

தல இது எனக்கு கவிதையா தெரியல

பாட்டாவே பாடிட்டேன்,இதுக்கு யுவனோட இசையை நானே சேத்து பாத்துட்டேன் :) செம

ஒரு வேலை அண்ணன் டூயட் பாடுனதா இருக்குமோ ??

Chitra said...

தல இது எனக்கு கவிதையா தெரியல

பாட்டாவே பாடிட்டேன்,இதுக்கு யுவனோட இசையை நானே சேத்து பாத்துட்டேன் :) செம

ஒரு வேலை அண்ணன் டூயட் பாடுனதா இருக்குமோ ??


...... செம லொள்ளு.....

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ஜெய்லானி...

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை

dheva said...

ஜெய்லானி...எப்போ இருந்து இப்படி எல்லாம்...சொல்லவே இல்ல...

எப்படி இருந்தாலும் கவிதை நல்லா இருக்கு....பாஸ்!

சௌந்தர் said...

எனக்கு ஒரு சந்தேகம் இது யார் ப்ளாக்?

Jey said...

கவிதைய எங்கிருந்து ஆட்டயப் போட்டே? அத முதல்ல சொல்லு.

இத எழுதிக் குடுத்தவர்கிட்ட எனக்கும் ரெண்டு கவிதை எழுதி வாங்கிக் குடு மக்கா, நானும் என் பிளக்ல என் கவிதைனு போட்டுக்கிறேன்...

(அனுப்பும் போது அப்படியே அதுக்கு உரைனடை விளக்கமும் சேத்து அனுப்பு, அப்பதான் யாராவது அதுல சந்தேகம் கெட்டா ப்தில் சொல்ல முடியும்)

athira said...

kavisiva said... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜெய்லானி!. ஹைஷ் அண்ணாவின் கேள்விகள் சூப்பரோ சூப்பர். வந்து விளக்கம் சொல்லுங்கோ!

பூஸ் மரத்து மேல இருந்துகிட்டு உந்த அக்காவை பார்க்கதீங்கோ. தடுக்கி விழுந்து அடிபட்டுடப் போகுது///

கவி நான் கொப்பை நல்லா இறுக்கிப் பிடிச்சுக்கொண்டுதானிருக்கிறேஏஏஎன்.. கேட்குதோ... நான் சொல்றது கேட்குதோ? இல்ல உயரக் கொப்பாக இருக்கு அதேன்:))

//ஹைஷ்126 said... ஆமா இப்பதான் கவனிச்சேன் ஏன் அந்த அக்கா ஒருமாதிரி தலையை திருப்பி பாக்குறாங்க??? இதைதான் தண்ணிக்குள்ள இருந்தாலும் பார்வையில் நெருப்பு வருதுனு சொல்லுறீங்களா?
/// ஹா..ஹா.. ஜெய் க்கு ிப்பத்தான் லேசா தட்டுது... ஏன் தான் இந்தப்படத்தைப் போட்டோமோ என:)) இல்லையா ஜெய்??.

kavisiva said... ஜெய்லானி இமா டீச்சர்கிட்ட தமிழ் ட்யூஷன் போங்க. ஆனா பூஸ்கிட்ட மாட்டிக்காதீங்க. அதுக்கு எப்பவுமே 'ழ' 'ள' குழப்பம்தான் :)
/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் “தமி”ழ்” கரெக்ட்டா எழுதுவேன் தெரியுமோ??:))).


//சௌந்தர் said... எனக்கு ஒரு சந்தேகம் இது யார் ப்ளாக்?
/// ஹா...ஹா...ஹாஅ... கடவுளே... ஜெய்... இனியும் உயிரோடிருக்கலாமோ?:) உடனேயே ...அந்தக்கா இருக்கிற குளத்துக்குள்ளேயே குதிச்சிடுங்க....., தேம்ஸ் வர எல்லாம் நேரமெடுக்கும், அதுக்குள்ள முடிவை மாத்தினாலும் மாத்திடுவீங்க:))

செல்வா said...

///உன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே
உன் கண்ணில் நீர் வழிகிறதோ என் நினைவாலே
அந்த ஒவ்வொரு துளியாலும் என் இதயம் உருகுதே///

அருமையான வரிகள்ங்க..
அப்புறம் யாரும் சந்தேகப்படாதீங்க..
இது இவரே எழுதின கவிதைதான் ..

ஸாதிகா said...

ஜெய்லானி ஊருக்கு போகின்ற நாள் நெருங்க நெருங்க..கவிதையெல்லாம் சூப்பராக வருது.ஏ ஆர் ஆர் ஐ மியூஸிக் போட வைத்து ஒரு படத்தில் போட்டால் பாடலுக்காகவே சூப்பர் ஹிட் ஆகிடும்.

VELU.G said...

நல்லாயிருக்குங்க

எம் அப்துல் காதர் said...

// உன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே //

சோலி முடிஞ்சு போச்சா ஹி..ஹி..((சொந்த பந்தத்துக்கெல்லாம் ஏதும் அனுப்புறியலா??))

எம் அப்துல் காதர் said...

ஒரு வாரமா ஏதும் எழுதலன்னு நான் ப்ளாக் ஸ்பாட்டை வித்துடுவேன்னு பயமுறுத்திய
உடன் கவிதையா?? கவுஜ ம்ம்ம்ம்,,, ஹி..ஹி..

எம் அப்துல் காதர் said...

அந்த போட்டோவுல இக்கிறது யாரு பாஸு .. தாங்க்ஸ்க்கு தெரியுமா?? க்கி..க்கி

தூயவனின் அடிமை said...

தல சும்மா பூந்து விளையாடுகிறிர்கள். அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
அது சரி அது அது யாரு? வீட்டில் சொல்ல மாட்டேன். வீடு வாத்தியாப்பள்ளி தெரு தானே?

சசிகுமார் said...

அருமை,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அந்நியன் 2 said...

நான் இன்ட்லி ஒட்டு போடுறேன் ஆனால் பேஜ் இப்படி வருது, தவறான யுஆர்எல்.. லே வந்துட்டேன் என்று எனது ஓட்டுரிமையைப் புதிப்பிக்க, எங்கு புகார் செய்ய வேண்டும் ?
ஜிலானி அண்ணன் விபரம் சொல்லவும் .
இங்கு மட்டும் இல்லை, எல்லா இடத்தில் போட்டாலும் ஓட்டுச் செல்லாது என்றுதான் பதில் வருது .நான் ஏற்கனவே ஓட்டுப் போட்டிருக்கேன் .




The page you were looking for doesn't exist!
It may have been removed or you may have arrived here by using a bad URL
Try searching for the article you are looking for.
Visit the Homepage to see the most recent stories.
Browse categories and tags to find a related story.

சுசி said...

கவிதை நல்லா இருக்கு..

இனிமே மழைக்காலம்ல வரப் போது.. அடுத்த வருஷம் வசந்த காலம் கண்டிப்பா வரும். அப்போ எல்லாம் சரி ஆய்டும்.

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126-//ஜெய் கவிதை நல்லா இருக்கு இருந்தாலும் .... //

வாங்க ..வாங்க ..!!இப்பெல்லாம் நா உங்களுக்கு தான் பயப்பட வேண்டி வருது.

//எனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே// அப்படி என்னா பண்ணீங்க விளக்கம் பிளீஸ்ஸ்ஸ்ஸ். கவிதையாவே சொன்னாலும் பரவாயில்லை நாங்களே புரிஞ்சுக்குவோம்:) //


க்கி..க்கி... காதை மட்டும் காட்டுங்க கொஞ்சமா..இதுவும் ம.பொ.ர மாதிரிதான்..

//கனவினிலே
கிடைக்கிரதே எனை தவிர ஏன் ஆனேன் இப்படியானேன்// அப்போ அங்கயூ ஜீனோ மாதிரி தங்ஸ் பட்டினிதான் போடராங்களோ??? இதுக்கு நோ விளக்கம் பிளிஸ். காலைல காபியில் ஏன் சர்கரை இல்லைனு எங்களுக்கு தெரியும்:))) //

அப்பாடா ஒரு வழியா புரிஞ்சிப்போச்சி..தப்பிச்சேன் ஹி..ஹி..

// ஜெய் இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலை //

என்ன பண்ண .நேரம் அப்படி இது வேற..அது வேற நேரம்...ஹா..ஹா..
//உன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே //

அப்ப உங்க தங்ஸுக்கு மட்டும் ஒத்தை முகம் என் சகோஸ் மற்றும் இங்கு வந்து போற மத்த சகோஸ் எல்லாம் என்ன இரண்டு அல்லது மூணு முகத்தோடயா அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க...???//

அதாவது அந்த நேரத்தில வேற எதுவும் கண்ணுக்கு தெரியலன்னு அர்த்தம்..

/// சே ..ஜெய்லானியை அதட்டி கேட்க எந்த சகோஸுக்கும் தெகிரியம் இல்லையா???? //

அதான் நீங்க இருக்கீங்களே..இத்தனை கிராஸ் கேள்விக்கு ஒரு கோனார் உரை தனியே போட்டுடரேன்..ஹி..ஹி..

//ஏனோ தெரியல சாரல் காற்றிலும் அனலாய் மாறுதே// இது ஒன்னு மட்டும்தான் எனக்கு புரியுது சின்ன வயசுல எம்ஜியாரின் “நீரும் நெருப்பும்” படம் பார்த்து இருக்கோமுல்ல:) //

ஏன் டைட்டானிக் பாக்கலையா..ஹி..ஹி..

// ஜெய் ஆக மொத்தம் இந்த கவிதை கோத்து புடுங்கவும், போட்டு கொடுக்கவும் நல்ல வசதியா இருந்துது...சோ (இது வேற சோ) சூப்ப்ப்ர் கவிதை!//

இந்த வலையில மாட்டுற மீனா நான் ஹி..ஹி..

//ஆமா இப்பதான் கவனிச்சேன் ஏன் அந்த அக்கா ஒருமாதிரி தலையை திருப்பி பாக்குறாங்க??? இதைதான் தண்ணிக்குள்ள இருந்தாலும் பார்வையில் நெருப்பு வருதுனு சொல்லுறீங்களா?//

கவிதை (பாட்டா) எழுதி வச்ச பிறகு படம் தேடியதில இந்த படம் கொஞ்சம் மேச்சா இருந்துச்சி அதான் இங்கே போட்டேன்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--

//உன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி// என்று எழுதிவிட்டு

//வீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா // எனவும் உள்ளதே.
ஆக இது இருவரும் சேர்ந்து எழுதிய கவிதையா.......?? //

வாங்க ..!!ம் கடைசியா பெண் சொல்வது மாதிரி போட்டிருந்தேன் . இன்னும் எழுதினால நிறைய வரும் அதனால் இதோடு விட்டு விட்டேன்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

r.v.saravanan said...

ஜெய்லானி கலக்கல் கவிதை வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@kavisiva--//ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜெய்லானி!. ஹைஷ் அண்ணாவின் கேள்விகள் சூப்பரோ சூப்பர். வந்து விளக்கம் சொல்லுங்கோ! //

வாங்க ..!! சந்தோஷம் .. இல்லையே எஸ்கேப் ஆயாச்சே..கவிதையில் உங்க பரிசு வாங்கும் அளவுக்கு வர இன்னும் எனக்கு பத்து வருஷமாவது ஆகும்.. பாராட்டிறகு நன்றி.

//பூஸ் மரத்து மேல இருந்துகிட்டு உந்த அக்காவை பார்க்கதீங்கோ. தடுக்கி விழுந்து அடிபட்டுடப் போகுது//

ஹா..ஹா.. சரியான கேள்வி ..தூக்கமும் எப்பவும் மரத்துக்கு மேலதானே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//என்னா சார் கவிதை எல்லாம் வெளுத்துக்கட்டறீங்க...மலரும் நினைவுகளா?
கவிதை அருமை..வாழ்க வளமுடன்.
வேலன். //

ஒரு மாறுதலுக்காக டிரை பண்ணீயது...நமக்கு இந்த லொல்லுதான் சரி வரும் கவிதை வருமா..ஹா..ஹ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காஞ்சி முரளி said...

நண்பா ஜெய்லானி...

முதலில்...

"இன்றுபோலவே... நல்லறமாய்..
இல்லறத்துடன் இனிது வாழ்க..!
இல்லாளுடன்
இனியெல்லா நாளும்"

*****************************************
"இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" ... !
*****************************************

அடுத்து...
"கவிஞர் ஜெய்லானி"க்கு வாழ்த்துக்கள்...!

///உன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே
உன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே
உன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி
எனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே///

கவிதை அருமை..
அதிலும் இந்த வரிகள் அருமை...!

அதுவும் "உன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே".... இந்த வரி...
அழகான... கற்பனையின் உச்சத்தின் வரி...
சூப்பெர்ப்ப்...!

ஆமாம்...!
அடுத்த வரியில் "சுற்றம் மறந்தேனே.."
சுற்றம் என்றால் சுற்றுப்புறமா? இல்லை... சுற்றமும்நட்புமா? (அதாவது சொந்தங்கள்)
யோசிக்க வாய்த்த வரி...!

(அதென்ன.."ஆயிரம் தாமரை மொட்டுக்களே..." பாட்டு சிச்சுவேஷன் மாதிரி போட்டோ...)


மீண்டும் என் வாழ்த்துக்கள்...! ஜெய்லானி...!
மண நாளுக்கும்... கவிதைக்கும்...!

சரி... உங்களுக்கு சப்போர்ட் பண்ணப்போய்....
நேற்று உங்களுடன் என்னையும் சேர்த்து.... அந்த கும்மு கும்முனாங்களே... நீரோடையில்.... நாடோடியும்.. மலிக்காவும் சேர்ந்து ...
என்ன காப்பத்துவீங்கன்னு பார்த்தா?...
கவுத்துடீங்களே...! பாஸ்...!
இது நியாயமா...!

நட்புடன்...
காஞ்சி முரளி...

vanathy said...

//சரி... உங்களுக்கு சப்போர்ட் பண்ணப்போய்....
நேற்று உங்களுடன் என்னையும் சேர்த்து.... அந்த கும்மு கும்முனாங்களே... நீரோடையில்.... நாடோடியும்.. மலிக்காவும் சேர்ந்து ...
என்ன காப்பத்துவீங்கன்னு பார்த்தா?...
கவுத்துடீங்களே...! பாஸ்...!
இது நியாயமா...!//


ஜெய்யை நம்பினீங்களா??? ஹிஹி...

Mahi said...

பிரிவுத்துயரா ஜெய்அண்ணா? உருகி,உருகி எழுதிருக்கீங்க..அண்ணி இதைப் பாத்தாங்களா இல்லையா? எதுக்கும் அந்த தண்ணிக்குள்ள இருக்கற அக்கா போட்டோவ எடுத்திருங்களேன்.சும்மா ஒரு எச்சரிக்கைக்குதான்!ஹிஹி..

Riyas said...

athira said... கவிதை அருமை ஜெய், ஆனால் உந்த அக்காவின் பார்வையே சரியில்லையே:), நானே தடக்கி விழுந்திடுவேனோ எனப் பயம்மாக்கிடக்கே... அப்போ சகோஸ்.. இன் கதி??????:)).

Repeatttttt...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஏற்கெனவே கொசுவைப் பத்தி ஒரு பாட்டு
எழுதினீங்களே, இதுவும் நீங்க எழுதினதுதான்
என்று நம்பவே முடியலை.

Unknown said...

அனுபவித்து எழுதிய வரிகள்... என்று நினைக்கிறேன்.. காதல் கவிதை மிகவும் அருமை.

ஜெய்லானி said...

@@@dineshkumar--//
வணக்கம்
வீசும் பூவின் மனத்தில் புயலாய் போகுதே தலைவா
புயலாய் போகுதே வரும் காலமாவது வசந்தமாகாதோ.
வரிகள் நன்றாக உள்ளன ஆனால் ஏதோ குறைவது போல தோன்றுகிறது
http://marumlogam.blogspot.com //

வாங்க ..!! நீங்க சொன்னது சரிதான் பாட்டா எழுதலாமுன்னுதான் போட்டேன் அது கடைசி வரி பெண் சொலவதாக இருக்கும். இப்ப மாத்திடரேன் .கவனிப்பிறகு மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்பரசன்--//கவிதை நன்று //

வாங்க ..!!வங்க..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mohamed Ayoub K --//நாட்டமை :என்னலே சொல்றே,கவிதையைப் பார்த்துபோட்டு நான் மலிக்கா வீடுன்னு நெனைச்சுப் புட்டேன்லே,ஏலே மயிலு என் மேலே கோவம் ஒன்னும் இல்லியே? //

வாங்க ..!! அய்யூப்..கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க...அதுக்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...மலிக்காக்கா பிளாக் போகிற ஆட்களுக்கு கவிதயா, பாட்டா வராமலா போயிடும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//காதலேதான் :)) //

வாங்க சை கோ..ஒரு மாசமுன்னு சொல்லிட்டு போன ஆள் இவ்வளவு லேட்.. பரவாயில்லை. வந்ததும் சுட சுட கருத்து..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//ஏதோ சினிமாவுல உள்ள பாட்டாக்கும்ன்னு நெனைச்சு வந்தா... அட!!! நீங்களே..நீங்களே எழுதினதா?????? //

வாங்க சாரல்....!!அதுக்கு ஏன் இத்தனை கேள்விக்குறி... ஹா..ஹா.. இது நானே எழுதியதுதான்.

// நல்லாருக்கு :-))) //

சந்தோஷம் :-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வெறும்பய--//அழகான வரிகள் ரொம்ப நல்லாருக்கு ...//

வாங்க ..!!..வாங்க..!! சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், நல்லா இருக்கு கவிதை. அப்பாடா! இந்த முறை ஜெய்க்கு சந்தேகமே வரலை. நிம்மதி. //

வாங்க ..வாங்க..!!ஒரு வித்தியாசமா இருக்கதான் போட்டது .சந்தேகம் வரும்....வரும்...ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//
ப்ளாக் மாறி வந்துட்டனா? //

வாங்க ..மக்கா..வாங்க.. இது ஜெய்லானி வீடுதான் ..ரொம்ப மொக்கை போட்டா தாங்காதுன்னு . இப்பிடி இது ரெண்டாவது தடவை..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//ஜெய்லானி,
எல்ஸ் கமண்ட் படிச்சா என் கமண்ட் படிச்ச மாதிரி. ;) //

வாங்க மாமீ..!!அப்ப இதுக்கு வேர வழியே இல்லையா..அவ்வ்வ்வ்

//இதுக்குத் தான் யார் யாரை எங்க வாழ்த்தணுமோ அங்க மட்டும் வாழ்த்தணும்கிறது. ;)) //

ஹா....ஹா...டீச்சரா...கொக்கா...ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique --// நல்லாயிருக்கு boss //

வாங்க ..வாங்க..!! சாந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@kavisiva--// ஜெய்லானி இமா டீச்சர்கிட்ட தமிழ் ட்யூஷன் போங்க. ஆனா பூஸ்கிட்ட மாட்டிக்காதீங்க. அதுக்கு எப்பவுமே 'ழ' 'ள' குழப்பம்தான் :) //

வாங்க ..!! இமாமாமீ தமிழ் டீச்சரா...????.!! அவங்க ஜெர்மன் பாஷையில்ல சமையத்துல பேசினதா ஞாபகம் ஹி..ஹி..அப்போ ஒரு வேளை பூஸின் பாஷைதான் எனக்கு ஒட்டிகிடுச்சா.. ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜில்தண்ணி - யோகேஷ்--//
தல இது எனக்கு கவிதையா தெரியல //

வாங்க ஜில் இது பாட்டுதான் சரியா பிடிச்சீங்க..

/ பாட்டாவே பாடிட்டேன்,இதுக்கு யுவனோட இசையை நானே சேத்து பாத்துட்டேன் :) செம //

அந்த டியூனை சொல்லுங்களேன் நானும் கேக்கிறேன் ..ஹா..ஹா..

// ஒரு வேலை அண்ணன் டூயட் பாடுனதா இருக்குமோ ?? //

ஹி..ஹி.. ரகசியத்தை கேக்குறீங்களே..தல... அவ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--//

தல இது எனக்கு கவிதையா தெரியல

பாட்டாவே பாடிட்டேன்,இதுக்கு யுவனோட இசையை நானே சேத்து பாத்துட்டேன் :) செம

ஒரு வேலை அண்ணன் டூயட் பாடுனதா இருக்குமோ ??


...... செம லொள்ளு..... //

வாங்க..!!வாங்க !!டீச்சர்...க்கி..க்கி...எது டூயட்டா..!!!ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//க‌விதை ந‌ல்லா இருக்கு ஜெய்லானி..//

வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@rk guru--//கவிதை அருமை //

வாங்க ..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@dheva--//ஜெய்லானி...எப்போ இருந்து இப்படி எல்லாம்...சொல்லவே இல்ல... //

சைடில பாக்கலியா தல.. கவிஞர் விருதுன்னு குடுத்தா எதாவது போடாட்டி சரி வ்ருமா ..!! அதான் போட்டு தாலிச்சிகிட்டு இருக்கேன் வெரும் சட்டிய....ஹி..ஹி..

// எப்படி இருந்தாலும் கவிதை நல்லா இருக்கு....பாஸ்! //

சந்தோஷம் , இன்னும் கதாசிரியர் விருது பாக்கி இருக்கு பாஸ்.ஹ..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--//எனக்கு ஒரு சந்தேகம் இது யார் ப்ளாக்? //

வாங்க..!!இது ஜெய்லானி பிளாக்தான் அந்த அளவுக்கு மொக்கையா இருக்கா ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jey --//கவிதைய எங்கிருந்து ஆட்டயப் போட்டே? அத முதல்ல சொல்லு. //

ங்கொய்யால நீ இதைதான் கேப்பேன்னு எனக்கு நல்லா தெரியும்..மகனெ நீ வளர்ந்த விதம் அப்படி ஹா..ஹா..

//இத எழுதிக் குடுத்தவர்கிட்ட எனக்கும் ரெண்டு கவிதை எழுதி வாங்கிக் குடு மக்கா, நானும் என் பிளக்ல என் கவிதைனு போட்டுக்கிறேன்...//

இதை எழுத கால் மணி நேரம் பிடிச்சது மக்கா..அப்படியே போட்டுட்டேன் ஆனா அதுக்கு படம் செலக்ட் பண்ண ஒரு மணிநேரம் பிடிச்சது

// (அனுப்பும் போது அப்படியே அதுக்கு உரைனடை விளக்கமும் சேத்து அனுப்பு, அப்பதான் யாராவது அதுல சந்தேகம் கெட்டா ப்தில் சொல்ல முடியும்)//
நா என்ன தேவாவா கூடவே மூனு ஆப்ஷன் குடுக்க. உன் தலை விதி யாரால மாத்தமுடியும் ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira --//
kavisiva said... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஜெய்லானி!. ஹைஷ் அண்ணாவின் கேள்விகள் சூப்பரோ சூப்பர். வந்து விளக்கம் சொல்லுங்கோ!

பூஸ் மரத்து மேல இருந்துகிட்டு உந்த அக்காவை பார்க்கதீங்கோ. தடுக்கி விழுந்து அடிபட்டுடப் போகுது///

கவி நான் கொப்பை நல்லா இறுக்கிப் பிடிச்சுக்கொண்டுதானிருக்கிறேஏஏஎன்.. கேட்குதோ... நான் சொல்றது கேட்குதோ? இல்ல உயரக் கொப்பாக இருக்கு அதேன்:)) //

வாங்க..!!பாத்துங்க அதான் பயமே அத்தனை உயரத்திலிருந்து விழுந்த தாங்குமா..

//ஹைஷ்126 said... ஆமா இப்பதான் கவனிச்சேன் ஏன் அந்த அக்கா ஒருமாதிரி தலையை திருப்பி பாக்குறாங்க??? இதைதான் தண்ணிக்குள்ள இருந்தாலும் பார்வையில் நெருப்பு வருதுனு சொல்லுறீங்களா?
/// ஹா..ஹா.. ஜெய் க்கு ிப்பத்தான் லேசா தட்டுது... ஏன் தான் இந்தப்படத்தைப் போட்டோமோ என:)) இல்லையா ஜெய்??. //

ஹி..ஹி..அதான் இப்ப பெரிய குழப்பமேஏஏஏ

// kavisiva said... ஜெய்லானி இமா டீச்சர்கிட்ட தமிழ் ட்யூஷன் போங்க. ஆனா பூஸ்கிட்ட மாட்டிக்காதீங்க. அதுக்கு எப்பவுமே 'ழ' 'ள' குழப்பம்தான் :)
/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் “தமி”ழ்” கரெக்ட்டா எழுதுவேன் தெரியுமோ??:))).//

எனக்குதான் சிலநேரம் வாலை பலமா போயிடுது எனசெய்ய...


//சௌந்தர் said... எனக்கு ஒரு சந்தேகம் இது யார் ப்ளாக்?
/// ஹா...ஹா...ஹாஅ... கடவுளே... ஜெய்... இனியும் உயிரோடிருக்கலாமோ?:) உடனேயே ...அந்தக்கா இருக்கிற குளத்துக்குள்ளேயே குதிச்சிடுங்க....., தேம்ஸ் வர எல்லாம் நேரமெடுக்கும், அதுக்குள்ள முடிவை மாத்தினாலும் மாத்திடுவீங்க:)) //

அந்த”அக்கா” குளத்துல குதித்தா அப்புறம் என் கதி...அவ்வ்வ்வ்... அப்ப இன்னும் நீங்க குடுத்த ஸ்டோரி ரைடர் பாக்கி இருக்கே..அவ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ப.செல்வக்குமார்--//

///உன் ஒற்றை முகமே என் மனதில் சொல்லுதே
உன் கண்ணில் நீர் வழிகிறதோ என் நினைவாலே
அந்த ஒவ்வொரு துளியாலும் என் இதயம் உருகுதே///

அருமையான வரிகள்ங்க..
அப்புறம் யாரும் சந்தேகப்படாதீங்க..
இது இவரே எழுதின கவிதைதான் ..//

வாங்க பாஸ்..சந்தோஷம் நீங்களாவது. நம்பிட்டீங்களே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஜெய்லானி ஊருக்கு போகின்ற நாள் நெருங்க நெருங்க..கவிதையெல்லாம் சூப்பராக வருது.//

வாங்க ..ஸாதிகாக்கா.!!. ஹி..ஹி.. இப்பிடி உசுப்பேத்தி விட்டே உடம்பு ரணகளமா போகுது...

//ஏ ஆர் ஆர் ஐ மியூஸிக் போட வைத்து ஒரு படத்தில் போட்டால் பாடலுக்காகவே சூப்பர் ஹிட் ஆகிடும்.//

ஐ...இப்ப அவரை தேடி வேற அலையனுமா ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அப்துல்மாலிக்--//Good //

வாங்க..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@VELU.G --//நல்லாயிருக்குங்க //

வாங்க ..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--
// உன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே //

சோலி முடிஞ்சு போச்சா ஹி..ஹி..((சொந்த பந்தத்துக்கெல்லாம் ஏதும் அனுப்புறியலா??)) //

வாங்க..சிஷ்யா...!!ஏன் இந்த கொலவெறி...
//ஒரு வாரமா ஏதும் எழுதலன்னு நான் ப்ளாக் ஸ்பாட்டை வித்துடுவேன்னு பயமுறுத்திய
உடன் கவிதையா?? கவுஜ ம்ம்ம்ம்,,, ஹி..ஹி.//

ஹி..ஹி.. நோன்புல எழுதகூடாதுன்னு சொன்னது யாருப்பா அது ...கொஞ்சமா முகத்தை காட்டுங்க பாக்கலாம்...

//அந்த போட்டோவுல இக்கிறது யாரு பாஸு .. தாங்க்ஸ்க்கு தெரியுமா?? க்கி..க்கி//

ஹி..ஹி... அது வந்து..வந்து..ச்சே..வெட்கம் .வெட்கமா வருதே..!!என்னதூஊஊஊஊஊ தங்ஸ்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//தல சும்மா பூந்து விளையாடுகிறிர்கள். அருமையாக உள்ளது வாழ்த்துக்கள். //

வாங்க ..!!வாங்க..சந்தோஷம்..
//அது சரி அது அது யாரு? வீட்டில் சொல்ல மாட்டேன். வீடு வாத்தியாப்பள்ளி தெரு தானே? //

இது என்ன அநியாயமா இருக்கு..ரொம்பநாள் கழிச்சு ஒரு பெண்ணு போட்டோவை போட்டால் அதுக்கு இப்பிடியா அழிச்சாட்டியம் பண்றது..அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--// அருமை,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பா..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mohamed Ayoub K--//
நான் இன்ட்லி ஒட்டு போடுறேன் ஆனால் பேஜ் இப்படி வருது, தவறான யுஆர்எல்.. லே வந்துட்டேன் என்று எனது ஓட்டுரிமையைப் புதிப்பிக்க, எங்கு புகார் செய்ய வேண்டும் ?
ஜிலானி அண்ணன் விபரம் சொல்லவும் .
இங்கு மட்டும் இல்லை, எல்லா இடத்தில் போட்டாலும் ஓட்டுச் செல்லாது என்றுதான் பதில் வருது .நான் ஏற்கனவே ஓட்டுப் போட்டிருக்கேன் .//


அதாவது நீங்க ஓட்டு போடும் போது இண்ட்லி பட்டையில் நடுவில் இருக்கும் நெம்பரை அழுத்தவும் . அது ஓட்டு போடும் இடத்துக்கு போகும் அங்கு உங்கள அக்கவுண்ட் லாகினில் இருக்கும் போது லைக்ஸ் , இல்லை நெம்பரில் அழுத்தினால் ஓட்டு விழும்.

சில நேரம் சர்வர் பிராப்ளம் இருந்தால் ...இப்போது இல்லை-ன்னு மெசேஜ் வரும் எதுக்கும் அந்த பக்கத்தை ரெஃப்ரஸ் செய்தால் திரும்ப போட்டு பாருங்கள .அப்படியும் முடியா விட்டால் அரை மணிநேரேம் கழித்து பார்க்கலாம்.

ஆனால் ஓட்டுபட்டையில் வலது கடைசியை அழுத்தினால் எர்ரர் மெசேஜ்தான் வரும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சுசி--//கவிதை நல்லா இருக்கு..//

வாங்க..!!வாங்க..!!சந்தோஷம்..

// இனிமே மழைக்காலம்ல வரப் போது.. அடுத்த வருஷம் வசந்த காலம் கண்டிப்பா வரும். அப்போ எல்லாம் சரி ஆய்டும்.//

அப்படியா..!!ஹா...ஹா... ஆனா இங்கே இன்னும் வெய்யில் குறையலே..இன்னும் குளிர் காலம் ஆரம்பிக்க ரெண்டு மாசம் இருக்கு..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--// ஜெய்லானி கலக்கல் கவிதை வாழ்த்துக்கள் //

வாங்க சார்..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//

நண்பா ஜெய்லானி...

முதலில்...

"இன்றுபோலவே... நல்லறமாய்..
இல்லறத்துடன் இனிது வாழ்க..!
இல்லாளுடன்
இனியெல்லா நாளும்"

*****************************************
"இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" ... !
***************************************** //


வாங்க..!! வாங்க..!! வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..நான் இதை எனக்கு அட்வான்ஸா வச்சிக்கிறேன்.. ஆனா. இது முதலில வந்த சகோ அதிரா அவர்களுக்கு மண நாள் அதனால இப்போ இதை அவங்களுக்கு கொடுத்து விடுகிறேன் .

// அடுத்து...
"கவிஞர் ஜெய்லானி"க்கு வாழ்த்துக்கள்...! //

ஆ..நான் கவிஞராஆஆஆஆஆஆஆஆஆஆ

///உன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே
உன் சுவாச மூச்சினிலே என் சுற்றம் மறந்தேனே
உன் பாச உணர்வுகளில் என் நாட்கள் நகர்ந்தடி
எனை பார்த்து போனரெல்லாம் பரிகாசம் செய்தாரே///

கவிதை அருமை..
அதிலும் இந்த வரிகள் அருமை...!

அதுவும் "உன் ஒற்றை புன்னகையில் என் உள்ளம் கவர்ந்தாயே".... இந்த வரி...
அழகான... கற்பனையின் உச்சத்தின் வரி...
சூப்பெர்ப்ப்...! //

தேனி மயங்குவது பூவின்
புன்னகையாலே..
தேனை கண்டு அல்ல

// ஆமாம்...!
அடுத்த வரியில் "சுற்றம் மறந்தேனே.."
சுற்றம் என்றால் சுற்றுப்புறமா? இல்லை... சுற்றமும்நட்புமா? (அதாவது சொந்தங்கள்)
யோசிக்க வாய்த்த வரி...! //

ஹா..ஹா...சரியாக கண்டு பிடிச்சிட்டீங்க .. இதான் சிலேடை .தமிழில் இரெட்டுற மொழிதல்...இது அந்த இரண்டுக்குமே பொருந்தும்

// (அதென்ன.."ஆயிரம் தாமரை மொட்டுக்களே..." பாட்டு சிச்சுவேஷன் மாதிரி போட்டோ...) //

முதலில் கவிதை ( பாட்டு மாதிரி ) எழுதிட்டு படம் தேடியதில பொருத்தமா இந்த படம் தெரிஞ்சுது. உடனே போட்டுட்டேன் ..


// மீண்டும் என் வாழ்த்துக்கள்...! ஜெய்லானி...!
மண நாளுக்கும்... கவிதைக்கும்...! //
ரொம்ப சந்தோஷம் ( இது யாருக்கு இருந்தாலும் )

// சரி... உங்களுக்கு சப்போர்ட் பண்ணப்போய்....
நேற்று உங்களுடன் என்னையும் சேர்த்து.... அந்த கும்மு கும்முனாங்களே... நீரோடையில்.... நாடோடியும்.. மலிக்காவும் சேர்ந்து ...
என்ன காப்பத்துவீங்கன்னு பார்த்தா?...
கவுத்துடீங்களே...! பாஸ்...!
இது நியாயமா...!

நட்புடன்...
காஞ்சி முரளி...//
ஹா..ஹா.. திரும்ப வர லேட்டாகிடுச்சி அதுக்குள்ள ..ஹி..ஹி.. பாயிண்ட் நோட்டட் அடுத்த முறை விடமாட்டோமுல்ல . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy --
//சரி... உங்களுக்கு சப்போர்ட் பண்ணப்போய்....
நேற்று உங்களுடன் என்னையும் சேர்த்து.... அந்த கும்மு கும்முனாங்களே... நீரோடையில்.... நாடோடியும்.. மலிக்காவும் சேர்ந்து ...
என்ன காப்பத்துவீங்கன்னு பார்த்தா?...
கவுத்துடீங்களே...! பாஸ்...!
இது நியாயமா...!//


ஜெய்யை நம்பினீங்களா??? ஹிஹி...//

ஹலோ..வான்ஸ்.. சிரிச்சி இன்னும் பாவம் அவரை அழவைக்கதீங்க..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mahi--// பிரிவுத்துயரா ஜெய்அண்ணா? உருகி,உருகி எழுதிருக்கீங்க..அண்ணி இதைப் பாத்தாங்களா இல்லையா? //

வாங்க..!!வாங்க..!!நான் பிளாக் வச்சிருக்கிறதே அவங்களுக்கு தெரியாது இது வரை..ஹா..ஹா..

//எதுக்கும் அந்த தண்ணிக்குள்ள இருக்கற அக்கா போட்டோவ எடுத்திருங்களேன்.சும்மா ஒரு எச்சரிக்கைக்குதான்!ஹிஹி..//

சகோ..அப்போ என்னைக்காவது இது தெரிஞ்சா முதுகில டின்னுதான்னு சொல்றீங்க அதானே..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Riyas--//

athira said... கவிதை அருமை ஜெய், ஆனால் உந்த அக்காவின் பார்வையே சரியில்லையே:), நானே தடக்கி விழுந்திடுவேனோ எனப் பயம்மாக்கிடக்கே... அப்போ சகோஸ்.. இன் கதி??????:)).

Repeatttttt...//
வாங்க ..!! ரியாஸ்.. கவிதைக்கு பிறகு தேடியதில் இந்த படம் ..ஓக்கே...
ஆனால் முதல்ல இந்த படத்தை பார்த்திருந்தால் கவிதை வேற மாதிரியில்ல போயிருக்கும் போல ஹா...ஹா..(நா என்னைய சொன்னேன் ).. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//

ஏற்கெனவே கொசுவைப் பத்தி ஒரு பாட்டு
எழுதினீங்களே, இதுவும் நீங்க எழுதினதுதான்
என்று நம்பவே முடியலை.//

வாங்க ..!! அவ்வளவு நல்லாவா இருக்கு.. ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சிநேகிதி--//

அனுபவித்து எழுதிய வரிகள்... என்று நினைக்கிறேன்.. காதல் கவிதை மிகவும் அருமை.//

வாங்க..!! வாங்க.!! ஹா...ஹா..ஏங்க இந்த மாதிரி குண்டை தூக்கி போடுறீங்க ..பதிவு ஏன் போடலன்னு நிறைய பேர் கேட்டதால் அதிகம் யோசிக்காம உடனே எழுதி போட்ட கவித இது. டைம பாருங்க ராத்திரி 1.30...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹேமா said...

ஒரு காதல் பாடலைப் படித்ததுபோல இருக்கு ஜெய்.ரொம்ப நல்லா வந்திருக்கு.

பத்மா said...

ஊருக்கு போகும் போது அங்க கேளுங்க சொல்லுவாங்க

காதல் பாட்டில் தேர்ந்து விட்டீர்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்யோ..அய்யோ.. ஆரஞ்சு பச்சிடி..மூணு வேலை சாப்பிடுங்க பாஸ்....

Jaleela Kamal said...

கலக்கலான காதல் கவிதை/ ஊருக்கு போகும் நாள் வ்ந்துவிட்டதா? ஸாதிக்கா அக்காவுக்கு மட்டும் எப்படி தெரிந்தது.
அதிஸ் கல்யாண நாளுக்கு ஜெய்லானிக்கு மட்டும் தான் வடையா?

சிநேகிதன் அக்பர் said...

அசத்துறீங்க போங்க.

கவிதை நல்லாயிருக்கு.

Anonymous said...

அட.. நல்லாயிருக்கே..
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

எஸ்.கே said...

கவிதை நன்றாகவே உள்ளது!

ஜெய்லானி said...

@@@ஹேமா--// ஒரு காதல் பாடலைப் படித்ததுபோல இருக்கு ஜெய்.ரொம்ப நல்லா வந்திருக்கு.//

வாங்க குழந்தை நிலா..!! ஆஹா.. கவிதை திலகம் வாயால பாராட்டா ...சந்தோஷம் அப்ப இது மாதிரி இன்னும் கிறுக்கலாம் அப்படிதானே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பத்மா--//ஊருக்கு போகும் போது அங்க கேளுங்க சொல்லுவாங்க //

வாங்க..!! இந்த உள்குத்துக்கு அர்த்தம் புரியலையே சாமீ...

// காதல் பாட்டில் தேர்ந்து விட்டீர்கள் //


அப்படியா..?..நீங்க ஜோக் அடிக்கலதானே.. ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--// அய்யோ..அய்யோ.. ஆரஞ்சு பச்சிடி..மூணு வேலை சாப்பிடுங்க பாஸ்....//

வாங்க..!! அந்த பச்சடி சாப்பிட்டுதான் நா இப்பிடி ஆயிட்டேன் பட்டா... இதுக்கு மாற்று மருந்து ஏதாவது இருக்கா..அவ்வ்வ்வ்வ். சைனீஸ் டிரைவரிடம் தான் கேக்கோனும் போல ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//கலக்கலான காதல் கவிதை/ ஊருக்கு போகும் நாள் வ்ந்துவிட்டதா? ஸாதிக்கா அக்காவுக்கு மட்டும் எப்படி தெரிந்தது. //

வாங்க ..ஜலீலாக்கா!! ஹி..ஹி..சில பேர் எப்படிதான் கண்டு பிடிக்கிறாங்கன்னே தெரியலப்பா...இன்னும் நாள இருக்கு...

// அதிஸ் கல்யாண நாளுக்கு ஜெய்லானிக்கு மட்டும் தான் வடையா? //

ஏன் உங்களுக்கு ஸ்பெஷல் இஞ்சி டீ கிடைக்கும் கவலைபடாதீங்க நாந்தரேன்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--//அசத்துறீங்க போங்க.
கவிதை நல்லாயிருக்கு. //

வாங்க அக்பர்..!! நீங்கலெல்லாம் நாலு வரியிலேயே பிச்சி பெடலெடுக்கிற ஆளாச்சே..ஹி..ஹி..இது எனது ரெண்டாவது முயற்சி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இந்திரா--//அட.. நல்லாயிருக்கே.. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.//

வாங்க..!!ஹி..ஹி...சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எஸ்.கே --//கவிதை நன்றாகவே உள்ளது! //

வாங்க எஸ் கே..!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பித்தனின் வாக்கு said...

aakkaaa jai eppa irunthu ithu ellam??
summa kavithaiyila unarvukal koppalikinrathu.
hollo ellarukkum onnu sollaren, jey mattikittarungaaaaa

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

////"கவிஞர் ஜெய்லானி"க்கு வாழ்த்துக்கள்...!////


வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
அட அட.. கவித கவித...
கலக்குங்க.. ஜெய்.. :-)))

Thenammai Lakshmanan said...

ஏதாவது சினிமா பாட்டெழுத சான்ஸ் கிடைச்சிருக்கா ஜெய்..:))

Geetha6 said...

அருமை ஜெய்!!
இப்ப எனக்கு ஒரு சந்தேகம்?
நிசமா நீங்க தான் எழுதியதா
நீங்களான்னு..?!!
சந்தேகம் நீங்க மட்டும் தான் கேப்பீங்க?

அன்புடன் மலிக்கா said...

கல்யாண நாளா ஒரு கூப்பாடு இல்லை ஒரு விருந்து இல்லை என்ன அண்ணாத்தே இப்படிபண்ணிட்டேள்.

மச்சி கொடுத்துவிட்ட தம்ரூடைமட்டும் கேட்டு வாங்குனீங்க இதச்சொல்லவேயில்லையே!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்றும் இளமையோடு பல்லாண்டு வாழ வாழுத்துக்கள்.[குளத்திலிருக்கும் அந்த சித்தி மாதரியல்ல]

அப்புறம் கவிதை ஃப்ளஸ் பாட்டு மிக மிக அருமை
அசத்தலாக இருக்கு. அதென்ன பெண்பாடும்போது பட்டென நின்னுடுத்து [ஓரவஞ்சனை]
மச்சி போனில் சொன்ன மெட்டுதானே! சரி சரி நான் யார்கிட்டேயும் சொல்லலை போதுமா முறைக்காதீங்கண்ணாத்தே!

கொஞ்சம் எழுதுப்பிழைகளிருக்கு அண்ணாத்தே சரிசெய்க படிக்க இன்னும் சூப்பராக இருக்கும்..


@@@Mohamed Ayoub K --//நாட்டமை :என்னலே சொல்றே,கவிதையைப் பார்த்துபோட்டு நான் மலிக்கா வீடுன்னு நெனைச்சுப் புட்டேன்லே,ஏலே மயிலு என் மேலே கோவம் ஒன்னும் இல்லியே? //

வாங்க ..!! அய்யூப்..கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க...அதுக்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...மலிக்காக்கா பிளாக் போகிற ஆட்களுக்கு கவிதயா, பாட்டா வராமலா போயிடும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//

ரொம்ப ரொம்ப நன்றிங்கோ அண்ணாத்தேக்களா.
இருந்தாலும் இதுகொஞ்சம் ஓவருதான் அப்புறம் கவிஞரெல்லாம் சேர்ந்து என்ன கும்மிடப்போறாங்க..

ம.தி.சுதா said...

ஃஃஃ...ஏனோ தெரியல சாரல் காற்றிலும் அனலாய் மாறுதே
அனலாய் மாறுதே தேகம் அலைபோல் ஆனதே...ஃஃஃ
மிக மிக அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... கலக்கறீங்க... கவிதை சூப்பர்

சுந்தரா said...

கவிதை சூப்பர்.

கூடிய சீக்கிரம் தமிழ்ப்படத்துக்குப் பாட்டெழுதுவீங்கன்னு நினைக்கிறேன் :)

ஜெயந்தி said...

கவிஞர் அவதாரமா? கவிதை நல்லாயிருக்கு.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))