Monday, July 19, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?.. தொடரோ தொடர்

            பதிவுலகில் ஏகப்பட்ட ஸ்டார்கள் இருக்கும் போது பெயரிலேயே ஸ்டாரா இருக்கும் மற்றும் நண்பரான இந்த தொடரை தொடர அழைத்த ஸ்டார்ஜன் அவர்களுக்கு என் நன்றிகள்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஜெய்லானி

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாம்.சொந்த பெயர் அதான் தமிழிலேயே ரெண்டு தடவை தலைப்ப வச்சிருக்கேன் .

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
விளையாட்டுதனமா ஆரம்பிச்சது ஆனா ஆரம்பித்து ஒரு வருஷம் வரை ஒன்னுமே எழுதலைங்கிறது நிஜம் .மற்றவர்கள் எழுதுவதை படிக்கவே ஆர்வம் இருந்ததால் எனக்கு எழுத தோனலை

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் ஆரம்பத்தில் நண்பர் வேலன் அவர்கள் கேட்டுக்கொண்ட பிறகு தான், தமிழிஷில் மட்டுமே இணைத்திருந்தேன். அதன் பின் தமிழ்மணம், தமிழ் 10 , மற்றும் உலவு திரட்டிகளுக்கும் என் நன்றிகள். எனது கிறுக்கல்களை எல்லோரிடமும் கொண்டு சேர்த்த பெருமை திரட்டிகளுக்கே.

எனது கிறுக்கலகளை படித்து நொந்து நூடுல்ஸாகி ஆனால் நல்லா இருக்கு என்று பாராட்டும் நண்பர்களாகிய( நண்பிகள்) வாசகர்களாகிய அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்.5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னுடைய சொந்த அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளேன். அனுபவங்களை பற்றி சொல்லும் போது அது சில சமயம் அவர்களுக்கு பயன் படலாம்.அப்படி பயன் படும் பட்சத்தில் அதில ஒரு சின்ன மனதிருப்தி வருகிறது
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

விளையாட்டுதனமா எழுத ஆரம்பிச்சது .நிறைய சொந்த பந்தங்கள். போல நண்பர்கள் இருப்பதால் விட்டு போக மனசு வரவில்லை. மற்றபடி இதனால் ஆதாயம் ஒன்னுமில்லை.நேரம் தான் அதிகம் விரயம் ஆகிறது .

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இப்போது உள்ளது ,மற்றது பேக்கப்காக ஒன்று சோதனையில , ஆக மொத்தம் மூன்று.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

அவர் அவர் உள்ளத்தில் உள்ளதை இல்லை தோன்றுவதை எழுதுகிறார்கள். இதில கோபப்படவே பொறாமைப்படவே தேவை இல்லை என்பது என் கருத்து .ஆனால் கிண்டல் கேலி என்பது ஒரு   அளவுக்கு  மட்டுமே இருக்கனும் . அது அவருக்கு சிரிப்பு வரவழைக்கனும் மாறாக அவர் மனசை காயப்படுத்துவது மாதிரி இருக்க கூடாது.அது போல படிக்கும் மற்றவர்கள் அதை பார்த்து முகம் சுழிக்க கூடாது அவ்வளவே..!!

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

என் உடன் பிறவா சகோதரி மலிக்கா மற்றும் ஜலீலா அவர்கள் முதல் மற்றும் இரண்டாவது கமெண்ட் வழியாக எழுத தூண்டியவர்கள் . அவர்களை பற்றி நா என்ன சொல்வது. அவரது திறமை வலையுலகம் அறியாதது அல்ல.தொடரும் நல்ல நட்பு உள்ளங்கள்

பின்னர் எழுத ஆரம்பித்தவுடன் என்னை பாராட்டிக் கொண்டிருப்பவர்களை தனியாக பிரிக்க விரும்ப வில்லை

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

புதுசாக ஒன்றும் இல்லை .நான் கற்றது தூசியளவு கல்லாதது. சிகரம் அளவு. அதனால் திரும்பவும் சொல்வது நாம் எழுதும் எழுத்துக்கள் அடுத்தவர்களை மனசு புண்படுத்துவதாக இல்லாமல் அது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் நல்லது .

டிஸ்கி : இந்த தொடரை தொடர நான் அழைக்க ஆரம்பித்தால் ஒரு வாரத்துக்கு வேறு புது விதமான இடுகையே வராது .எல்லாருக்கும் போரடித்து விடும் வாய்ப்பு இருப்பதால் முடிந்தால் நீங்களே தொடருங்கள் (( குறைஞ்சது 200 பேரையாவது கூப்பிடனும் . வீடு வீடா போய் கூப்பிட நான் ரெடி ஆனா பயந்து போய் வீட்டை பூட்டிகிட்டு நீங்க ஓடிடக்கூடாது பாருங்க அதுக்குதான் ))

அன்புடன் > ஜெய்லானி <

123 என்ன சொல்றாங்ன்னா ...:

pinkyrose said...

ஐ .. நாந்தான் ஃப்ர்ஸ்ட்

pinkyrose said...

எனக்கும் பதில் சொல்ல ஆசை தான் ஆனால் இன்னும் பெரியாளாகலியே :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naanthaan 3rd

kavisiva said...

ம்ஹூஹூம் நான் தான் 3rd. ரமேஷ் நீங்க தப்பா சொல்லிட்டீங்க.

ஜெய்லானி said...

@@@pinkyrose--//ஐ .. நாந்தான் ஃப்ர்ஸ்ட் //

ஆமா வடை உங்களுக்குதான் .

//எனக்கும் பதில் சொல்ல ஆசை தான் ஆனால் இன்னும் பெரியாளாகலியே :(//

டிஸ்கிய படிக்கலையா..?ஹய்யோ..ஹய்யோ..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//
naanthaan 3rd //

ஹி..ஹி..என்ன தல..நல்லா இருக்கீங்கலா..!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@kavisiva--//ம்ஹூஹூம் நான் தான் 3rd. ரமேஷ் நீங்க தப்பா சொல்லிட்டீங்க.//

வாங்க கவி..!! மில்லியன்ல கணக்கு போடற ஆள் நீங்க உஷாராதான் இருக்கீங்கன்னு தெரியுது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

ரைட்டு ஆரம்பிங்க கச்சேரிய..

அருண் பிரசாத் said...

@ kavisiva

நீங்க நாலாவது வந்ததால் 4 வதா? இல்லை 3வது ஆள் என்பதால் 3 வதா?

நான் 4வதா? 5 வதானு தெரியனும்

ஜெய்லானி, ஒரு தீர்ப்பை சொல்லுங்க

Jey said...

//
3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...//

athu eppadi kaalai eduthu ullee vaikkirathu, shock adichiraathu?.

Jey said...

//இதில கோபப்படவே பொறாமைப்படவே தேவை இல்லை என்பது என் கருத்து///

neeru, sentleman-yaa.

Jey said...

peetti supper jailaani.:)

பொன் மாலை பொழுது said...

அந்த பெரிய கொரங்கு மற்றும் அந்த சின்ன கொரங்கு - இது என்ன, சிம்பாலிக்காக யார் யாரை காட்டுவதாக கொள்ளலாம் ஜெயிலா?

ஜில்தண்ணி said...

ஆஹா !! எல்லாரையும் கிளப்பு விடாத வரைக்கும் சந்தோசம்

ஹா ஹா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ம்ஹூஹூம் நான் தான் 3rd. ரமேஷ் நீங்க தப்பா சொல்லிட்டீங்க.

//

@ kavisiva நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கேங்கன்னு யாரும் கேக்கல, எத்தனாவது ஆளா வந்தீங்கன்னு சொல்லணும். அய்யோ அய்யோ..

எம் அப்துல் காதர் said...

அருமையான தெளிவான,எந்த வித கேலியோ கிண்டலோ இல்லாத பதில்கள்!! நிதானமானவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள் பாஸ். இதற்க்கு மேல் நானென்ன சொல்ல..!

சிநேகிதன் அக்பர் said...

பதில்கள் அனைத்தும் யதார்த்தம் + உண்மை.

எங்கே இருக்குற பாலோயரை எல்லாம் எழுத சொல்லப்போறீங்களோன்னு பயந்துட்டேன். :)

நான் தொடரலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க நீங்க.

athira said...

ஆங்.... இன்று நான் லேட்டாயிட்டனே..:(((, அது வேறொன்றுமில்லை, மரத்தால இறங்குவது கொஞ்சம் சிரமமாப்போச்சு:)), இன்னும் எதையும் படிக்கவில்லை, படித்ததும் தொடரும் பதில்.

Geetha6 said...

interview???...ok ok proceed...

அதிரை வாய்ஸ் said...

கலைஞர் போல சுயமாக கேள்வி கேட்டு பதிலும் சொல்லி உள்ளீர்கள் வருங்காலத்தில் முதல்வர் ஆகும் எண்ணம்?

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத்--//ரைட்டு ஆரம்பிங்க கச்சேரிய..//

வாங்க அஹ்மத்..தொடர்ன்னதும் அவசரமா போட்டது இது அதுத்துல அடிச்சி தூள் கிளப்பிடல்லாம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அருண் பிரசாத்--//
@@@ kavisiva

நீங்க நாலாவது வந்ததால் 4 வதா? இல்லை 3வது ஆள் என்பதால் 3 வதா?

நான் 4வதா? 5 வதானு தெரியனும்

ஜெய்லானி, ஒரு தீர்ப்பை சொல்லுங்க //

எண்னிக்கையில 8 வதுங்கோ , ஆட்களில் 6 வதுங்கோ.. இப்ப சொல்லுங்க நீங்க 4வதா? 5 வதா..?...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jey--//
3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...//

athu eppadi kaalai eduthu ullee vaikkirathu, shock adichiraathu?. //
அடி வாங்குறதெல்லாம் நமக்கு புதுசா ஜே..வீட்டு ரகசியத்த வெளியில சொல்ல கூடாது.

// //இதில கோபப்படவே பொறாமைப்படவே தேவை இல்லை என்பது என் கருத்து///

neeru, sentleman-yaa.//

ஆமாப்பா ஆமாம் வலிக்கலையே...வலிக்கலையே...( ஜெய்லானீஈஈ..இப்படியேமெயிண்டெயின் பன்னு

//peetti supper jailaani.:) //

வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நாடோடி said...

ப‌த்து கேள்விக்கும் ப‌தில் சொல்லிட்டீங்க‌ளா?... நீங்க‌ நிறையா ப‌டிச்சிருக்கீங்க‌ போல‌... ந‌ம்ம‌ எல்லாம் எப்ப‌டியும் இர‌ண்டு மூணாவ‌து சாய்ஸில் விட்டுருவோம்..ஹி..ஹி..

Riyas said...

ஆஹா வட போச்சே.. வட சுட்ட ஆயாவையும் கானலல..

பதில்கள் சூப்பர்..
//விளையாட்டுதனமா எழுத ஆரம்பிச்சது .நிறைய சொந்த பந்தங்கள். போல நண்பர்கள் இருப்பதால் விட்டு போக மனசு வரவில்லை. மற்றபடி இதனால் ஆதாயம் ஒன்னுமில்லை.நேரம் தான் அதிகம் விரயம் ஆகிறது //

சரியாகச்சொன்னிங்க வந்துசேர்ந்த நண்பர்களை விட்டுப்பிரிய மன்மில்லை " நாங்கவொன்னும் கவலப்படமாட்டோம்" யாரோ சொல்றது கேட்குதுப்பா... இதுக்கு மேல இங்க நின்றா மரியாதயில்ல வரேன்..

r.v.saravanan said...

கேள்வியும் நீங்களே


பதிலும் நீங்களே

அப்ப நாங்க

r.v.saravanan said...

கேள்வி பதில்கள் நல்லாருக்கு ஜெய்லானி

சசிகுமார் said...

super

Starjan (ஸ்டார்ஜன்) said...

அசத்திட்டீங்க ஜெய்லானி.. பதில்கள் சொன்னவிதம் அருமை. படிக்க ரொம்ப சுவாரசியமாக இருந்தது.

Menaga Sathia said...

யதார்த்தமான பதில்கள்..ஆமா இந்த பதிவுக்கும் அந்த குரங்கு படத்துக்கும் என்ன சம்பந்தம்??? நானும் யோசித்து மண்டைக்காயுது....

Paleo God said...

// இந்த தொடரை தொடர நான் அழைக்க ஆரம்பித்தால் ஒரு வாரத்துக்கு வேறு புது விதமான இடுகையே வராது .//

நீங்க ரொம்ப நல்லவருங்க! :)))

athira said...

jஜெய்..லானி, கணக்கில எங்கேயோ இடிக்குதே... ஒன்றும் ஒன்றும் மூன்றோ???????:)).

///7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இப்போது உள்ளது ,மற்றது பேக்கப்காக ஒன்று சோதனையில , ஆக மொத்தம் மூன்று./////

எதுக்கு, மங்கிப் படம் போட்டு வாலை எல்லாம் இழுக்க வைக்கிறீங்க? ஒன்றுமில்லை சும்மாதான் கேட்டேன்.

VELU.G said...

நல்ல பதிவு

தங்களைப்பற்றி கொஞ்சம் கொஞ்சம் அறிந்து கொண்டேன்

அன்புடன் நான் said...

தங்களை அறிய உதவிய பகிர்வுக்கு நன்றிங்க.

Prathap Kumar S. said...

//@ kavisiva நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கேங்கன்னு யாரும் கேக்கல, எத்தனாவது ஆளா வந்தீங்கன்னு சொல்லணும்.///

ஹஹஹ நல்லாசிரிச்சேன்...

ஜெய்லானி அந்த போட்டோவை ஏன் போட்டீங்க... ரொம்ப தெரிஞ்சவங்களா??? :))
நல்லவேளை யாரையும் கூப்பிடாமா விட்டீங்க.... முடில....

Vidhya Chandrasekaran said...

:))

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு நண்பரே.

Asiya Omar said...

எதார்த்தமாக இருக்கு.

Priya said...

யதார்த்தமான‌ எளிமையான பதில்கள்...

சீமான்கனி said...

ரத்தினச்சுருக்கமா அழகா உங்கள் எண்ணங்களை பகிர்ந்து விடீங்க அருமை வாழ்த்துகள் ஜெய்லானி ..,.

சாந்தி மாரியப்பன் said...

படத்துக்கும் பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா :-)))

மனோ சாமிநாதன் said...

“ நாம் எழுதும் எழுத்துக்கள் அடுத்தவர்களை மனசு புண்படுத்துவதாக இல்லாமல் அது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் நல்லது ”
அருமையான கருத்து!
தெளிவான யதார்த்தமான பதில்கள்!!

ஹேமா said...

ஜெய்....ரொம்ப நல்லபிள்ளையா
அழகா பதில் சொல்லிட்டீங்க.

ஆனா வால் வச்சவங்க படம் எதுக்கு?ஓ...முன்னோர்களை மதிச்சு நம்ம
வாழ்க்கையை பதிவுகளத் தொடரும்ன்னா !

உங்களுக்கு வாற சந்தேகம் எங்களுக்கும் வரும்ல !

தாராபுரத்தான் said...

ஓ..நீங்க இப்படிப்பட்டவரா?

vanathy said...

ஜெய், //நேரம் தான் அதிக விரயம் ஆகிறது.//

உண்மைதான். எனக்கு நேரமே கிடைப்பதில்லை. அதனால் நிறைய வலைப்பூ பக்கம் நான் போவதே குறைவு. போனாலும் கமன்ட் போட நேரம் வருவதில்லை.

படம் சூப்பர். அந்த 2 குரங்குகளும் யார் யார்?? பூனை படம் போட்டிருந்தால் இப்படி கேள்வி கேட்கமாட்டோம் அல்லவா?!!!

Unknown said...

உங்களின் இயல்பான பதில்கள் நன்று.

Prasanna said...

புரிஞ்சி போச் :)

ஹைஷ்126 said...

//நிறைய சொந்த பந்தங்கள். போல நண்பர்கள் இருப்பதால் விட்டு போக மனசு வரவில்லை. மற்றபடி இதனால் ஆதாயம் ஒன்னுமில்லை.//

100% உண்மை.

இங்கயும் வால் பிரச்சனை வந்து விட்டதா?

வாழ்க வளமுடன்

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//அந்த பெரிய கொரங்கு மற்றும் அந்த சின்ன கொரங்கு - இது என்ன, சிம்பாலிக்காக யார் யாரை காட்டுவதாக கொள்ளலாம் ஜெயிலா? //

ஹா..ஹா.. எப்பவும் சந்தேகம் எனக்குதான் வரும் இப்ப உங்களுக்கா...!!! .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லா எழுதியிருக்கீங்க ஜெய்.. உண்மையாயிருக்கு..

ஜெய்லானி said...

@@@ஜில்தண்ணி - யோகேஷ்--//ஆஹா !! எல்லாரையும் கிளப்பு விடாத வரைக்கும் சந்தோசம்
ஹா ஹா :) //

இந்த சந்தோஷத்தை ஆஃப் பண்ண வேண்டாமுன்னுதான் கூப்பிடல ஜில்...!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--// /ம்ஹூஹூம் நான் தான் 3rd. ரமேஷ் நீங்க தப்பா சொல்லிட்டீங்க.//
@@@ kavisiva நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கேங்கன்னு யாரும் கேக்கல, எத்தனாவது ஆளா வந்தீங்கன்னு சொல்லணும். அய்யோ அய்யோ..//

ஹா..ஹா...சபாஷ் சரியான போட்டி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Karthick Chidambaram said...

//குறைஞ்சது 200 பேரையாவது கூப்பிடனும் . வீடு வீடா போய் கூப்பிட நான் ரெடி ஆனா பயந்து போய் வீட்டை பூட்டிகிட்டு நீங்க ஓடிடக்கூடாது பாருங்க அதுக்குதான்// தலைவா எல்லோரும் எஸ்கேப் ஆகிகுங்க .. :-)

Thenammai Lakshmanan said...

வழக்கமான குறும்பு ஜெய்.. அதிலும் குரங்கும் குட்டியும் சூப்பர்..

pinkyrose said...

ஆமா டிஸ்கின்னா யாரு?
அப்ப நானும் இதுக்கு பதில் சொல்லலாம?
பதில் தெரியலன்ன யாராச்சும் சொல்லி தருவாங்களா?

செல்வா said...

அந்த குரங்கு படம் அருமை அண்ணா ..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///புதுசாக ஒன்றும் இல்லை .நான் கற்றது தூசியளவு கல்லாதது. சிகரம் அளவு. ///
என்ன ஒரு தன்னடக்கம்...என்ன ஒரு தன்னடக்கம்.... :D :D

///அதனால் திரும்பவும் சொல்வது நாம் எழுதும் எழுத்துக்கள் அடுத்தவர்களை மனசு புண்படுத்துவதாக இல்லாமல் அது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் நல்லது ///

இந்த விசயத்தில் நம் தங்கத் தலைவர் ஜெய்லானி...சொல்வதை. ஆமோதிக்கிறேன்.. ஆமோதிக்கிறேன்.. ஆமோதிக்கிறேன்..!!

சப்பாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...... ஒரு சோடா குடுங்கப்பா..!!
(அவ்வவ்வ்வ்வ்....ஒரு சோடாவுக்காக என்னெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு... :D :D )

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//thenammailakshmanan said...

வழக்கமான குறும்பு ஜெய்.. அதிலும் குரங்கும் குட்டியும் சூப்பர்///

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

திவ்யாஹரி said...

குரங்கு வாலை பிடிச்சிட்டிங்களா? என்ன சொல்லுது இந்த படம் ஜெய்லானி..?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super Q&A... எல்லாம் சரி ...அந்த படம் என்ன? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் (நீங்க தான் சந்தேகம் கேப்பீங்களா... ? நாங்களும் கேப்போம்ல...ஹா ஹா அஹ )

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//அருமையான தெளிவான,எந்த வித கேலியோ கிண்டலோ இல்லாத பதில்கள்!! நிதானமானவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள் பாஸ். இதற்க்கு மேல் நானென்ன சொல்ல..! //

என்ன ஆஃபாயிட்டீங்க .. இதுக்குதான் படம் போட்டது ,நா எப்பவும் இப்பிடிதான் . இப்பவும் அப்படிதான் .நோ சீரியஸ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அக்பர்--//பதில்கள் அனைத்தும் யதார்த்தம் + உண்மை.எங்கே இருக்குற பாலோயரை எல்லாம் எழுத சொல்லப்போறீங்களோன்னு பயந்துட்டேன். :) //

இதனாலதான் கூப்பிடல . பயப்படாதீங்க.. ஹா..ஹ..

//நான் தொடரலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க நீங்க.//

தாளாரமா. கேள்வியே வேன்டாம் உடனே போடுங்க நாங்களும் ஆவலா காத்திருக்கிரோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஆங்.... இன்று நான் லேட்டாயிட்டனே..:(((, அது வேறொன்றுமில்லை, மரத்தால இறங்குவது கொஞ்சம் சிரமமாப்போச்சு:)), இன்னும் எதையும் படிக்கவில்லை, படித்ததும் தொடரும் பதில்.//

ஹி..ஹி..மரம் பத்திரம் உடைஞ்சிடப்போகுது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha6--//interview???...ok ok proceed...//

ஆமாங்க ஆமாம் .ஒரு சின்ன புள்ளய புடிச்சி என்ன கேள்விகேக்கறாங்க பாருங்க.அவ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@adirai voice--//கலைஞர் போல சுயமாக கேள்வி கேட்டு பதிலும் சொல்லி உள்ளீர்கள் வருங்காலத்தில் முதல்வர் ஆகும் எண்ணம்? //

சுய கேள்வி இல்லைங்க . இது ஸ்டார்ஜனின் கேள்வி.. அப்புரம் முதல்வர் ஆசை இல்லை. மக்களுக்கு இலவசமுன்னு சொல்ல ஒன்னுமே இல்லை கைவசம் ஐடியா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ப‌த்து கேள்விக்கும் ப‌தில் சொல்லிட்டீங்க‌ளா?... நீங்க‌ நிறையா ப‌டிச்சிருக்கீங்க‌ போல‌... //

ஆமாங்க எல் கே ஜி ல ஃபெயிலு . எப்படி சரியா சொல்லி இருக்கேனா பாருங்க ஹி..ஹி..

//ந‌ம்ம‌ எல்லாம் எப்ப‌டியும் இர‌ண்டு மூணாவ‌து சாய்ஸில் விட்டுருவோம்..ஹி..ஹி..//

விடலாமான்னு தான் பார்தேன் ஆனா ஏதோ தூக்ககலக்கத்தில அதுவா வந்துடுச்சி . படத்தை பாக்கலையா .ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) said...

vanathy said...
ஜெய்,
படம் சூப்பர். அந்த 2 குரங்குகளும் யார் யார்?? பூனை படம் போட்டிருந்தால் இப்படி கேள்வி கேட்கமாட்டோம் அல்லவா?!!!
//// karrrrrrr * karrrrrrrrrrrrrr
ஜெய்..லானி, அந்த வாலில் இழுக்கும் இரு ஃபிரெண்ஸின் பெயரையும் சொல்லிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆருடைய ஃபிரெண்ட்ஸ்ஸ் எண்டெல்லாம் ஆரும் குறுக்குக் கேள்வி கேட்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

//ஹைஷ்126 said...
இங்கயும் வால் பிரச்சனை வந்து விட்டதா?

வாழ்க வளமுடன்//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது வேஏஏஏஏஏற வாஆஆஆஆஆஆஆஆஅல் அது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏற வாஆஆஆஆல்...:)).

ரோஸ்விக் said...

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :-))

ஹரீகா said...

உங்கள் பணியில் சொல்ல போனா அடித்து ஆடாமல் நின்று ஆடி இருக்கிறீர்கள் அப்படி தானே சார்///
ரெண்டு பேரும் சேர்ந்து கிட்டு ரகளையா பண்றீங்க.. (நான் போட்டோவே சொன்னேன்.) அண்ணனிடம் கேட்டா தம்பி கோச்சுக்குவாரோன்னு வேறு பயம்மா இருக்குப்பா..,,, நான் வந்துட்டு போனது யாருக்கும் தெரிய வேணாம் உஷ்.

இமா க்றிஸ் said...

ஒரு வித்தியாசத்துக்கு... சந்தேகம் எதுவும் இல்லாமல் சீரியஸாக ஒரு பதிவா? நன்றாக இருக்கின்றன பதில்கள்.

அந்தப் படம்... ;)))

அன்புடன் மலிக்கா said...

pathilkal asaththal.

mika arumaiyaana viLaththudan pathilakal mikka wanri sakoo.

sory tamil not wrking.

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
kurangku athu yaaruniingkalum mangkumaa??????????????????

vinu said...

வீடு வீடா போய் கூப்பிட நான் ரெடி ஆனா பயந்து போய் வீட்டை பூட்டிகிட்டு நீங்க ஓடிடக்கூடாது பாருங்க அதுக்குதான்

yes right i agreeeeeeeeeeeeed

Anonymous said...

//அதன் பின் தமிழ்மணம், தமிழ் 10 , மற்றும் உலவு திரட்டிகளுக்கும் என் நன்றிகள்//

:))

Chitra said...

அடேங்கப்பா..... கலக்கல் பேட்டி...... உங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருமையான ஒரு பேட்டி..... ஜெய்லானி சார், அசத்திட்டார்! இப்படி ஒரு பேட்டியை வாசிக்கும் போது, பதிவுலக ஜாம்பவான்களின் தன்னடக்கம் மிளிர்கிறது. சூப்பர்!
(எம்மா..... அந்த சோடாவை இந்த பக்கம், பாஸ் பண்ணுங்க.... கொடுத்த காசுக்கு மேல கூவிட்டேன்.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...)

Philosophy Prabhakaran said...

சிறப்பாக இருந்தது... உங்களது பழைய பதிவுகள் சிலவற்றையும் இன்றுதான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது... அத்தனையும் அருமை... நானும் இந்தப் பதிவை தொடரலாமென்று நினைக்கிறேன்... தொடரலாமா....?

Unknown said...

பதில்கள் அசத்தல்..மற்றும் எனக்கு விருது அளித்ததுக்கும் நன்றிங்க..

ஜெய்லானி said...

@@@Riyas--//ஆஹா வட போச்சே.. வட சுட்ட ஆயாவையும் கானலல..//

நல்லா பாருங்க ரியாஸ் அப்புரம் பிங்கி பிச்சி பீஸாக்கிட போராங்க..

பதில்கள் சூப்பர்..
//விளையாட்டுதனமா எழுத ஆரம்பிச்சது .நிறைய சொந்த பந்தங்கள். போல நண்பர்கள் இருப்பதால் விட்டு போக மனசு வரவில்லை. மற்றபடி இதனால் ஆதாயம் ஒன்னுமில்லை.நேரம் தான் அதிகம் விரயம் ஆகிறது //

சரியாகச்சொன்னிங்க வந்துசேர்ந்த நண்பர்களை விட்டுப்பிரிய மன்மில்லை " நாங்கவொன்னும் கவலப்படமாட்டோம்" யாரோ சொல்றது கேட்குதுப்பா... இதுக்கு மேல இங்க நின்றா மரியாதயில்ல வரேன்..//
ஓ இப்பிடி வேற நடக்குதா...மெதுவா யாருன்னு காதுல மட்டும் சொல்லுங்க ... .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--// கேள்வியும் நீங்களே
பதிலும் நீங்களே
அப்ப நாங்க
கேள்வி பதில்கள் நல்லாருக்கு ஜெய்லானி //

வாங்க சரவணன். கேள்வி நம்ம ஸ்டாஜன். பதில மட்டுமே நான் .கினடலடிக்கவேனாமேன்னு விட்டுட்டேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//super //

வாங்க சசி ..சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//அசத்திட்டீங்க ஜெய்லானி.. பதில்கள் சொன்னவிதம் அருமை. படிக்க ரொம்ப சுவாரசியமாக இருந்தது.//

சீரியஸான கேள்வியா கேட்டுட்டீங்க ..கிண்டலா பதில சொல்ல முடியல அதான் படம் மட்டுமே கொஞ்சம் திரிலா போட்டது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//யதார்த்தமான பதில்கள்..ஆமா இந்த பதிவுக்கும் அந்த குரங்கு படத்துக்கும் என்ன சம்பந்தம்??? நானும் யோசித்து மண்டைக்காயுது....//

ஹா..ஹ.. பாத்தீங்கலா உங்களையும் யோசிக்க வைத்து விட்டேன் வெற்றி...வெற்றி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║--//

// இந்த தொடரை தொடர நான் அழைக்க ஆரம்பித்தால் ஒரு வாரத்துக்கு வேறு புது விதமான இடுகையே வராது .//

நீங்க ரொம்ப நல்லவருங்க! :)))//

ஆமாங்க நா ஒரு அப்பாவி இன்னுமா தெரியல..ஹி..ஹி..ஆனா நீங்க வயசு ,சைசு எல்லாம் இல்ல சொல்லி பயங்காட்டிடீங்க .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஜெய்..லானி, கணக்கில எங்கேயோ இடிக்குதே... ஒன்றும் ஒன்றும் மூன்றோ???????:)).//


கிக்..க்கி...இந்த தடவை பூஸார் கொஞ்சம் கனக்கில வீக்...வீக்..வீக்

///7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இப்போது உள்ளது ,மற்றது பேக்கப்காக ஒன்று சோதனையில , ஆக மொத்தம் மூன்று./////

ஆமா இப்ப இருப்பது அதவது நீங்க படிப்பது , இன்னொன்னு பேக்கப் , மூனாவது டெஸ்டிங்கில் இருக்கு பின்னால் வரும் ஒரு நாள் ஆக மூனுதானே அதிஸ் பாட்டி..ஹி..ஹி...

//எதுக்கு, மங்கிப் படம் போட்டு வாலை எல்லாம் இழுக்க வைக்கிறீங்க? ஒன்றுமில்லை சும்மாதான் கேட்டேன்.//

என் கதை அது மாதிரிதான் இருக்கு ஹ..ஹ. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@VELU.G--// நல்ல பதிவுதங்களைப்பற்றி கொஞ்சம் கொஞ்சம் அறிந்து கொண்டேன் //

வாங்க வேலு..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சி. கருணாகரசு--//தங்களை அறிய உதவிய பகிர்வுக்கு நன்றிங்க.//


வாங்க சார் .!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாஞ்சில் பிரதாப்--//@ kavisiva நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கேங்கன்னு யாரும் கேக்கல, எத்தனாவது ஆளா வந்தீங்கன்னு சொல்லணும்.///

ஹஹஹ நல்லாசிரிச்சேன்...//

ஹா.ஹ.. ஆள் ஃபுல் ஃபார்மில இருக்காங்க ஜாக்கிரதயாதான் இருக்கனும்

//ஜெய்லானி அந்த போட்டோவை ஏன் போட்டீங்க... ரொம்ப தெரிஞ்சவங்களா??? :)) //

என்ன பஸ் இப்பிடி கேட்டுடீங்க பழைய தூரத்து சொந்தங்கள்.. அடையாளம் தெரியுதா..ஹா..ஹ..

//நல்லவேளை யாரையும் கூப்பிடாமா விட்டீங்க.... முடில...//

எல்லாரையும் ஓட விட்டு அடிக்க ஆசையில்லை அதான் விட்டுட்டேன்..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வித்யா-// :)) //

வாங்க ..!! வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@செ.சரவணக்குமார்--//நல்ல பகிர்வு நண்பரே.//

வாங்க ஃபிரண்ட்..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar--// எதார்த்தமாக இருக்கு.//

வாங்க ..!! அதான் நான் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Priya--//யதார்த்தமான‌ எளிமையான பதில்கள்...//

வாங்க ..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சீமான்கனி--//ரத்தினச்சுருக்கமா அழகா உங்கள் எண்ணங்களை பகிர்ந்து விடீங்க அருமை வாழ்த்துகள் ஜெய்லானி ..,.//

வாங்க கனி..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//படத்துக்கும் பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா :-)))//

பாத்தீங்கலா சாரல் ..இப்பிடி கேக்குரீங்களே அதான் சம்பந்தம் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--//“ நாம் எழுதும் எழுத்துக்கள் அடுத்தவர்களை மனசு புண்படுத்துவதாக இல்லாமல் அது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் நல்லது ”
அருமையான கருத்து!
தெளிவான யதார்த்தமான பதில்கள்!!//

வாங்க..!!! வாங்க..!!உன்மைதானே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஜெய்....ரொம்ப நல்லபிள்ளையா
அழகா பதில் சொல்லிட்டீங்க.//

அடுத்த பதிவ பாருங்க ..அப்ப தெரியும் ஹி...ஹி.

//ஆனா வால் வச்சவங்க படம் எதுக்கு?ஓ...முன்னோர்களை மதிச்சு நம்ம
வாழ்க்கையை பதிவுகளத் தொடரும்ன்னா !//

ஹேமா இது என்னா அநியாயம் நீங்க மட்டு முகப்புல இரு குடும்பத்தையே போட்டு வச்சிருப்பீங்க ஆனா நா ஒன்னு போட்டா கேள்வி கேக்குறீங்களே...அவ்வ்வ்வ்வ்

// உங்களுக்கு வாற சந்தேகம் எங்களுக்கும் வரும்ல ! //

கண்டிப்பா வரனும் அதான் நல்லது ..ஹ்..ஹா.. ஆனா அந்த கேள்வியை என் கிட்ட கேக்க கூடாது..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@தாராபுரத்தான்--//ஓ..நீங்க இப்படிப்பட்டவரா?//

ஆமாங்க ஓரே டெரரா தெரியுதா..ஹா..ஹா..
நீங்க படத்தை கேக்கலைதானே...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--ஜெய், //நேரம் தான் அதிக விரயம் ஆகிறது.//

உண்மைதான். எனக்கு நேரமே கிடைப்பதில்லை. அதனால் நிறைய வலைப்பூ பக்கம் நான் போவதே குறைவு. போனாலும் கமன்ட் போட நேரம் வருவதில்லை.//

ஆமா என்ன செய்ய 24 மனி நேரம் கம்மியா இருக்கு

//படம் சூப்பர். அந்த 2 குரங்குகளும் யார் யார்?? பூனை படம் போட்டிருந்தால் இப்படி கேள்வி கேட்கமாட்டோம் அல்லவா?!!! //

எல்லாம் சொந்தம் பந்தங்கள்தான் நல்லா முகத்தை பாருங்க கண்டு பிடிக்க முடியுதான்னு..ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//உங்களின் இயல்பான பதில்கள் நன்று.//

வாங்க ..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--//புரிஞ்சி போச் :) //

மக்கா வெளிய சொல்லிடாதீங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காஞ்சி முரளி said...

Sorry...!

கொஞ்சம் லேட்டு....

நல்ல பதிவு நண்பரே....!

நட்புடன்..
காஞ்சி முரளி...

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//நிறைய சொந்த பந்தங்கள். போல நண்பர்கள் இருப்பதால் விட்டு போக மனசு வரவில்லை. மற்றபடி இதனால் ஆதாயம் ஒன்னுமில்லை.//

100% உண்மை.

இங்கயும் வால் பிரச்சனை வந்து விட்டதா?

வாழ்க வளமுடன் //


ஆமா பாஸ் சரியா சொன்னீங்க..!!வால் பெரிய வாலா இருக்கு அதான் கொஞ்சம்ம்ம்ம்ம் கஷ்டம் வேர ஒன்னுமில்லை..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//நல்லா எழுதியிருக்கீங்க ஜெய்.. உண்மையாயிருக்கு..//

யப்பா ...எல் போர்ட்டுகிட்ட நல்ல பேரு ..இதை ஜாக்கிரதையா கண்டினுயூ பன்னனுமே..!! சரி அடுத்த பதில பாக்கலாம் கிடைக்குதான்னு.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Karthick Chidambaram--//குறைஞ்சது 200 பேரையாவது கூப்பிடனும் . வீடு வீடா போய் கூப்பிட நான் ரெடி ஆனா பயந்து போய் வீட்டை பூட்டிகிட்டு நீங்க ஓடிடக்கூடாது பாருங்க அதுக்குதான்// தலைவா எல்லோரும் எஸ்கேப் ஆகிகுங்க .. :-) //

என்னது கூப்பிட மட்டேன்னுதானே சொல்லிட்டேன் வாங்க வெளியே..பயப்படாதீங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//வழக்கமான குறும்பு ஜெய்.. அதிலும் குரங்கும் குட்டியும் சூப்பர்..//

வாங்க தேனக்கா ....அதுவும் நம்ம சொந்தம்தானே..ஹி..ஹி....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@pinkyrose--//ஆமா டிஸ்கின்னா யாரு? //

ஓஹ் அதுவா பிங்கி..டிஸ்கிவெளியே போயிருக்கார் வந்ததும் அவர்கிட்டயே கேட்டு சொல்ரேன்.
//அப்ப நானும் இதுக்கு பதில் சொல்லலாம?
பதில் தெரியலன்ன யாராச்சும் சொல்லி தருவாங்களா?//

ம் தாராளமா தொடருங்கோ தெரியாட்டி 10ம் சாய்ஸ்ல விட்டுடுங்கோ..சரியா...அவ்வ்வ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப.செல்வக்குமார்--//அந்த குரங்கு படம் அருமை அண்ணா ..!! //

ரெண்டுல எதுங்க ...இழுக்கிறதா..இல்ல இழுபடுறதா...ஹி..ஹி... ஆனாலும் நிங்க ரொம்ப மோசம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Ananthi --///புதுசாக ஒன்றும் இல்லை .நான் கற்றது தூசியளவு கல்லாதது. சிகரம் அளவு. ///

என்ன ஒரு தன்னடக்கம்...என்ன ஒரு தன்னடக்கம்.... :D :D //

பாராட்டுறீங்களா..இல்ல வஞ்சப்புகழ்ச்சியா...ஓன்னும் புரியலையே...

///அதனால் திரும்பவும் சொல்வது நாம் எழுதும் எழுத்துக்கள் அடுத்தவர்களை மனசு புண்படுத்துவதாக இல்லாமல் அது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் நல்லது ///

/ இந்த விசயத்தில் நம் தங்கத் தலைவர் ஜெய்லானி...சொல்வதை. ஆமோதிக்கிறேன்.. ஆமோதிக்கிறேன்.. ஆமோதிக்கிறேன்..!!/

சப்பாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...... ஒரு சோடா குடுங்கப்பா..!!
(அவ்வவ்வ்வ்வ்....ஒரு சோடாவுக்காக என்னெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு..//


சோடா எதுக்கு , என் கையால நானே செஞ்ச லெமன் ஜுஸு இருக்கு வேனுமா.. அப்புறம் குடிச்சிட்டு மயக்கம் போட்டு விழுந்திடக்கூடாது பாருங்க அவ்வளவு வாசமா இருக்கும் ஹி..ஹி..

////thenammailakshmanan--//

வழக்கமான குறும்பு ஜெய்.. அதிலும் குரங்கும் குட்டியும் சூப்பர்///

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு //

ப.செல்வக்குமார்க்கு மேல போட்ட பதில படிக்கவும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@திவ்யாஹரி--//குரங்கு வாலை பிடிச்சிட்டிங்களா? என்ன சொல்லுது இந்த படம் ஜெய்லானி..? //

கிட்டதட்ட நெருங்கிட்டீங்க .இன்னும் கொஞ்சம் இருக்கு டிரை பன்னுங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி--///Super Q&A... எல்லாம் சரி ...அந்த படம் என்ன? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் (நீங்க தான் சந்தேகம் கேப்பீங்களா... ? நாங்களும் கேப்போம்ல...ஹா ஹா அஹ )//

எனக்கு சந்தேகம் கேட்டுதானே பழக்கம் இட்லி மாமி...க்கி..க்கி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira
@@vanathy said...
ஜெய்,
படம் சூப்பர். அந்த 2 குரங்குகளும் யார் யார்?? பூனை படம் போட்டிருந்தால் இப்படி கேள்வி கேட்கமாட்டோம் அல்லவா?!!!
//// karrrrrrr * karrrrrrrrrrrrrr
ஜெய்..லானி, அந்த வாலில் இழுக்கும் இரு ஃபிரெண்ஸின் பெயரையும் சொல்லிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆருடைய ஃபிரெண்ட்ஸ்ஸ் எண்டெல்லாம் ஆரும் குறுக்குக் கேள்வி கேட்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

இப்பதானே ஒருத்தர் வெளியே வந்திருக்கார் இன்னொருவரும் வரட்டுமே..க்கி..க்கி...

//ஹைஷ்126 said...
இங்கயும் வால் பிரச்சனை வந்து விட்டதா?

வாழ்க வளமுடன்//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது வேஏஏஏஏஏற வாஆஆஆஆஆஆஆஆஅல் அது வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏற வாஆஆஆஆல்...:)).//


ஹா..ஹ...ஆமா மாஆஆஆஆஆ இது வேறஏஏ அது வேறஏஏஏ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரோஸ்விக்--//உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :-)) //

அடப்பாவிங்களா அப்ப பின்னால என்ன சிரிப்பு வில்லதனமா..அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹரீகா--//உங்கள் பணியில் சொல்ல போனா அடித்து ஆடாமல் நின்று ஆடி இருக்கிறீர்கள் அப்படி தானே சார்///
ரெண்டு பேரும் சேர்ந்து கிட்டு ரகளையா பண்றீங்க.. (நான் போட்டோவே சொன்னேன்.) அண்ணனிடம் கேட்டா தம்பி கோச்சுக்குவாரோன்னு வேறு பயம்மா இருக்குப்பா..,,, நான் வந்துட்டு போனது யாருக்கும் தெரிய வேணாம் உஷ்.//

அதான் அண்ணனை தினமும் பாக்குறீங்களே அதெல்லாம் கோவிச்சிக மாட்டார் பயப்படாதீங்க ..ஹி..ஹி...நா அவர சொன்னேன்னு சொல்லிடாதீங்க ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//ஒரு வித்தியாசத்துக்கு... சந்தேகம் எதுவும் இல்லாமல் சீரியஸாக ஒரு பதிவா? நன்றாக இருக்கின்றன பதில்கள்.//

இப்பிடி நீங்க கேப்பீங்கன்னு தெரியும். அதனால தான் இந்த போட்டோவை போட்டேன் .இதுவும் பாதி சந்தேகமாதிரிதான்

அந்தப் படம்... ;))) //

ஹி..ஹி..க்கி..க்கி..ஈஈஈஈஈ. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--// pathilkal asaththal.
mika arumaiyaana viLaththudan pathilakal mikka wanri sakoo.
sory tamil not wrking.
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr //

மலிகாக்காவ் நீங்க வந்தாலோ போதும்..எதுக்கு சாரி..பூரீன்னுகிட்டு...

//kurangku athu yaaruniingkalum mangkumaa?????????????????? //

ஹா..ஹா.....ஹி..ஹி..க்கி..க்கி..ஈஈஈஈஈ. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vinu--//வீடு வீடா போய் கூப்பிட நான் ரெடி ஆனா பயந்து போய் வீட்டை பூட்டிகிட்டு நீங்க ஓடிடக்கூடாது பாருங்க அதுக்குதான்

yes right i agreeeeeeeeeeeeed //

ஆமா வேற வழி இல்லையே...ஒத்துகிட்டுதான் ஆகனும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கோவை குமரன்--//அதன் பின் தமிழ்மணம், தமிழ் 10 , மற்றும் உலவு திரட்டிகளுக்கும் என் நன்றிகள்//

:)) //

ஆமாங்க அது வழியா ஓட்டு போடறவங்களை மறக்கக்கூடாது இல்லையா அப்ப ஓட்டு பூத்துக்கும் நன்றி சொல்லனுமில்லையா..அதான் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--//அடேங்கப்பா..... கலக்கல் பேட்டி...... உங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருமையான ஒரு பேட்டி..... ஜெய்லானி சார், அசத்திட்டார்! இப்படி ஒரு பேட்டியை வாசிக்கும் போது, பதிவுலக ஜாம்பவான்களின் தன்னடக்கம் மிளிர்கிறது. சூப்பர்! //

ம்...சரி..ஓக்கே...

// (எம்மா..... அந்த சோடாவை இந்த பக்கம், பாஸ் பண்ணுங்க.... கொடுத்த காசுக்கு மேல கூவிட்டேன்.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...) //

நாங்க ஒருத்தரு புகழ ஆராம்பிச்சா உஷாரா ஆயிடுஒமில்ல.. எல்லாம் ஒரு சேஃப்டிதான் தலைகீழா மலையிலிருந்து உருட்டி விட்டுட கூடாது பாருங்க ..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@philosophy prabhakaran--//சிறப்பாக இருந்தது... உங்களது பழைய பதிவுகள் சிலவற்றையும் இன்றுதான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது... அத்தனையும் அருமை... நானும் இந்தப் பதிவை தொடரலாமென்று நினைக்கிறேன்... தொடரலாமா....? //

அட என்னங்க இது கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு உடனே ஆரம்பிங்க ..வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மின்னல்--//பதில்கள் அசத்தல்..மற்றும் எனக்கு விருது அளித்ததுக்கும் நன்றிங்க..//

வாங்க மின்னல்..சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//Sorry...!கொஞ்சம் லேட்டு....
நல்ல பதிவு நண்பரே....!
நட்புடன்..
காஞ்சி முரளி... //

அட இதுக்கு ஏங்க சாரி...வந்ததே சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Meerapriyan said...

jailani annanaip padri konjam arinthu konden-kelvi pathil arumai-meerapriyan.blogspot.com

Athiban said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

ஜெய்லானி said...

@@@Meerapriyan--//jailani annanaip padri konjam arinthu konden-kelvi pathil arumai-meerapriyan.blogspot.com //

வாங்க சார் ..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@தமிழ் மகன்--//பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html //

வாங்க தமிழ்..!! பார்த்தேன் அருமையாக இருக்கு .தொடர்கிறேன் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))